அகநக நேசமே டீசர்
Aga

அகநக நேசமே!!
டீசர் 1
நாளை இரவு ஏழு மணி முதல் சைட்டில் வரும்
ஏன் ரகுடேடி செள்தரி வீட்டு கிச்சனில் சமையல் செய்து கொண்டு நின்றாள் வர்ணா.. மொழியை பிடிக்கும் ஆனால் வர்ணாவை ரொம்ப பிடிக்கும் பெண் இல்லாத குறை தீர்க்க வந்தவள் போல ரகுடேடி என்று அவரோடு வம்பு பண்ணி கொண்டே சுற்றுவாள்...
சொல்லும்மா
ஒரு நாள் நீங்க நைட் சினிமா போயிருந்தா இப்படி ஒரு வெறுவாக்கெட்டவன் பிள்ளையா பிறந்திருக்க மாட்டான்ல
எங்கம்மா அவ கேட்டா , இப்ப நான்தான் அனுபவிக்கிறேன்..
டிங் டாங் என்று ஹாலிங் பெல் விடாது அடிக்க அதிலேயே புயல் வந்து விட்டது என புரிந்து போனது
நீ சமை நான் போய் கதவை திறக்கிறேன்..
ம்ம்
ரகுரான் கதவை திறக்க செளத்ரி அருகே அவன் வருங்கால மனைவி யாமினி ரிச் லுக்கில் நின்றாள்
வாம்மா யாமினி அப்பா நல்லா இருக்காரா
யா குட் , இதுதான் வீடா செளத்ரி உள்ளே வந்தவள் முகத்தை சுருக்கி மூன்று அறை அப்பார்ட்மெண்ட்டை பார்க்க
ஆமா நான் லோன் போட்டு வாங்கினது என்று பெருமையாக செளத்ரி காலரை தூக்கிட..
ஓஓஓஓ பீச் ஹவுஸ் ஒன்னு காட்டினேன்ல அதை வாங்கிடலாமா என்று செளத்ரி கையோடு அவள் கை நுழைக்க ஆளு சரண்டர்...
ஓஓஓ வாங்கிட்டா போச்சு அடுத்த லோன் போட்டுக்கலாம்...
எனக்கு வீடு ரொம்ப சுத்தமா இருக்கணும் யாருமே யூஸ் பண்ணினதா இருந்தா எனக்கு அருவருப்பா பீல் ஆகும் அதான் புது வீடு கேட்டேன்.. தப்பா நினைக்கலையே
ச்சே சே தப்பா நினைக்கல யாமி, உனக்கு செய்யாம யாருக்கு செய்ய போறேன் வாங்கிட்டா போச்சு ....
ஹா தூதூ என்று உள்ளிருந்து வந்த சத்தத்தில் செளத்ரி பல்லை கடித்து
எலும்புக்கூடு
எஸ் சார் என்று வந்து நின்றாள்.
சாப்பாடு ரெடியா ?
எல்லாம் ரெடி எடுத்து வச்சாச்சி மேடமை சாப்பிட வர சொல்லுங்க ...
யாமி வா சாப்பிடு என்றதும் அவள் ஏழு முறை கை கழுவி வந்து உட்கார்ந்தவள்
ஓஓஓ நோ பிரியாணியா ? என்று முகத்தை கோண
என்ன ஆச்சு யாமி
அச்சோ அது ஆயில்
அப்போ மீன் சாப்பிடு
நோ நோ அந்த ஸ்மெல் பிடிக்காது
சாம்பார் ஊத்தவா?
ஓஓஓ காட் ,அது கேஸ் இருவர் குணட்டலை வர்ணாவும் ரகுவும் முடியலயே என்றது போல பார்த்து கொண்டிருக்க...
எனக்கு ஓட்ஸ் மட்டும் தர சொல்லுங்க
எலும்புகூடு
இதோ சார் என்று அவள் சொன்னதை கொண்டு வந்து கொடுக்க ...
மட்டன் பிரியாணி ஒரு பிடி பிடிச்சிட வேண்டியதுதான் என்று செளதிரி சாப்பாட்டு உள்ளே கை வைக்க போக அவன் கையை யாமினி பிடித்து நிறுத்தி
நோ செளதிரி நீங்களும் லைட் புட் சாப்பிடுங்க அப்போ தான் பேட் தொப்பை எல்லாம் வராம இருக்கும் ..ரிசப்ஷன் அப்போ பெர்பெக்ட் மேட்ச்சா இருக்கும் சோ எனக்காக " பிரியாணியை பாவமாக பார்த்து கொண்டே நகட்டி வைத்தவன் ஊமையாக சிரித்து கொண்டு நின்ற வர்ணாவை முறைத்தபடி...
அந்த ரசத்தை ஊத்துடி என்று இவளிடம் ஏகிற முடியாது அவளிடம் எகிற
ரசமா, அது வந்து என்று வர்ணா எதோ சொல்ல வாயெடுக்க...
போய் ஊத்து என்று ரகுராம் அனுப்ப அவன் கைகாட்டிய பாத்திரத்தில் இருந்ததை ஊத்திட
இனிமே மேடம் என்ன சொல்றாங்களோ அதையே எனக்கு மூணு நேரமும் பண்ணிடு
மேடம் சொல்றபடி செஞ்சா மூணே நாள்ல உங்களுக்கு பால் ஊத்திடலாம்
என்ன ?
இல்லை செஞ்சுட்டா போச்சுன்னு சொன்னேன் அப்பறம் இந்த மாசம் சம்பளம் தந்தா என்று வர்ணா சம்பளத்துக்கு கை நீட்ட...
பத்து ரூபாய் மேஜை மேல இருக்கு எடுத்துக்க.. திங்கிறது தூங்கிறது ஓசியில , இதுல சம்பளம் ஒரு கேடு...
சார் ....
ஒரு நயா பைசா தர மாட்டேன் , ஆறு மாசம் இங்க நான் சொல்ற படி தான் இருக்கணும் .... அந்த ரசத்தை ஊத்து என்று உள்ங்கையை செளத்ரி நீட்ட
ப்ச் , நான் உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்திடுச்சு சார்
என்ன உண்மை ரசத்தை உறிஞ்சு குடித்து கொண்டே கேட்க
இவ்வளவு நேரம் நல்லா இருக்குன்னு குடிச்சது ரசம் இல்லை.. உங்க மேடம் சாப்பிடும் முன்ன கை கழுவி வச்ச தண்ணீ என்று அவன் அருகே குனிந்து கூற
வாட் உவாக் உவாக்
சாரி சார் சாப்பிடும் போது பேசாதன்னு நேத்து திட்டுனீங்கல்ல அதான் சொல்லலை ... ஆனாலும் அவங்க கை பட்ட தண்ணீ கூட உங்களுக்கு அமிர்தமா இருக்கே இது அல்லவா காவிய காதல் சார் சார் ரசம் உள்ள சூடா இருக்கு எடுத்துட்டு வந்து ஊத்தவா என்ற வர்ணாவை முறைத்து கொண்டே செளத்ரி வாயை பொத்தி கொண்டு ஓட போக அவன் கையை இழுத்த யாமினி ..
என்னாச்சு செளதிரி உட்காருங்க , நான் சாப்பிட்டு முடிக்கும் வரை யாராவது டைனிங் டேபிள் விட்டு எந்திரிச்சு போனா எனக்கு பிடிக்காது சீட்அவுன் என்று அமர வைக்க தொண்டையில் இருந்ததை துப்பவும் முடியாது விழுங்கவும் முடியாது முழித்தான்....
எதிர்பார்ப்புகள் அதிகமாகும் போது டங்குவார் கிழியத்தான் செய்யும் ..