முற்று பெறாத முதல் நீ

Mu

முற்று பெறாத முதல் நீ

முற்று பெறாத முதல் நீ !!

என்ன மாறும்   என் கோணலான வாழ்க்கை மாறுமா என் இழ‌ந்து போன நிம்மதி வருமா , என் ஜீவன் மறுபடியும் துடிக்குமா என்ன விட்டு போன அத்தனையும் மறுபடியும் வருமா 

மாறுமாம் மாறும்  எதுவும் மாறாது மாறாது மாற போறதும் இல்லே என்று கதவில் சாய்ந்து நின்ற மணிமாறனுக்கு இறந்த கால வலியில் இன்னும் உடல் இரும்பாக

அப்பா அப்பா மகள் சத்தம் கேட்டு முகத்தை அழுந்த துடைத்தவன் கதவை திறக்க 

அப்பா உன் போன் ரொம்ப நேரமா அடிக்குது என்னன்னு பாரு என்று தகப்பன் கையில் போனை கொடுத்து விட்டு மகள் ஓட போனில் வந்த வெளிநாட்டு அழைப்பை பெருமூச்சு விட்டு பார்த்த மாறன் 

மிஸ்டர் மாறன்

ம்ம் இருக்கேன் ... வர்றேன் என்று முடித்து விட்டான்...

அப்பா நாம சென்னையிலேயே இருக்கலாம் அந்த மல்லிகை தோடடம், வாத்து முயல்ன்னு எவ்வளவு அழகா இருக்கு ,இங்க எனக்கு எதுவுமே பிடிக்கல என்று அமெரிக்கா ஏர்போர்ட் வந்து இறங்கிய தகப்பன் கையை பிடித்து கொண்டு மகள் உதட்டை சுருக்க...

கொஞ்ச நாள் இருக்கலாம் குட்டி அப்புறம் நிரந்தரமா சென்னைதான் என்ற தகப்பன் முன்னே தோரணையாக நடந்து போய் படகு போன்ற காரில் ஏறி அமர ...

மல்டி மில்லியனர் மருத்துவமனை முன்னே வந்து மாறன் கார் நின்றது ..அவன் மகளை  ஹேர்டேக்கர் வந்து அழைத்து கொள்ள 

அப்பா நானும் வரவா இங்க மட்டும் என்ன ஏன் கூட்டிட்டு போக மாட்டைக்கிற...என்ற மகள் முன்னே முட்டிக்கால் போட்டு உட்கார்ந்த மணிமாறன் 

எனக்கு வலிக்குது உனக்கு வலிச்சிட கூடாது அதான் 

ஒன்னும் புரியல 

நீ வீட்டுக்கு போய் ஆச்சிகூட விளையாடு அப்பா வர்றேன் 

சரிப்பா என்று எல்லாவற்றிலும் பக்குவமாய் இருக்கும் மகளை மறையும் வரை பார்த்து விட்டு மாறன் விறுவிறுவென  நடக்க ஆரம்பிக்க... அந்த அறை முன்னே போய் அதற்கு மேல் கால் அசைய மறுக்க...

மிஸ்டர் மாறன்...கம் இன் சைட்  என்ற மருத்துவர் குரலுக்கு மறுப்பாக அவன் தலையசைக்க.... 

உள்ள வந்தாதான் மத்தது பண்ண முடியும் என்றதும் பெருமூச்சு விட்ட மாறன் நடுங்கிய காலை திடப்படுத்தி உள்ளே நுழைய அந்த இருட்டு கண்ணாடி அறையின்  கதவு திறக்கப்பட்டது ..கண்ணை மூடி கொண்டான் மாறன் .... அவன் பலகீனம் இதுதானே!!மூச்சு அடைத்து செத்து விடுவேன் நிலையில் நின்றவன் தோளில் மருத்துவர் கை வைக்க அந்த கண்ணாடி அறைக்குள் போக அவனுக்கு ஆடை அணிவிக்க பட கலங்கிய கண்களை சட்டென துடைத்து கொள்ள ..

வாங்க மிஸ்டர் மாறன் என்றதும் தடுமாறி அந்த கண்ணாடி அறை உள்ளே போனவன் கண்கள் இருட்டுக்கு பழக .. 

லைட்டை போட்டு விடுங்க என்ற மருத்துவர் குரலுக்கு 

நோ..நோ நோ ஓஓஓஓஓ என்று தவித்தது அவன் உதடுகள்...விளக்கு அந்த அறையை வெளிச்சமாக்க,  படுக்கை மீது எலும்பும் தோலுமாக உடல் முழுக்க வயர்கள் சொருகி,  வாய் வழியே குழாய் மூச்சுக்கு ஒரு குழாய் என்று  கோமா நிலையில்  வெறும் எலும்பு கூடாக கிடந்தாள் திருமதி அர்ச்சனா மணிமாறன்!!! 

முற்று பெறாத முதல் அவள்  !!