சா வென்ற ஐ அவன் டீசர்

Saa

சா வென்ற ஐ அவன் டீசர்

நாளை இரவு ஏழு மணி முதல் வரும் 

டீசர் 

சா வென்ற ஐ அவன் !!

சா _ இறப்பு ,சாவு

ஐ_ தலைவன் 

பத்து வருடங்களுக்கு முன் டிவி நியூஸ் பேப்பர் எங்கு காணினும் அவன் முகமே 

ஒலிம்பிக்கில் தங்கம் வெள்ளி வெண்கலம் என்று வெவ்வேறு பதக்கங்களை ஒவ்வொரு நாடும் வாங்கி குவித்து கொண்டிருக்க தமிழ்நாட்டின் பெயரை எட்டுதிக்கும் ஒலிக்கச் செய்த வீரன் அவன் ..

உலகத்தையே கூர்ந்து பார்க்க வைத்த ஒருவன் ஒலிம்பிக்கில் இந்த விளையாட்டு உண்டா ? என்று கேள்வியாக பார்க்க வைத்த ஒருவன்... அவன் அந்த மட்டையைப் பிடித்து சுழட்டி காட்டி வெற்றிக்குறியை காட்டும் போது 

ஆஹா!! அழகன்டா நீ !! திறமை இருக்கும் இடத்தில் திமிர் இருக்குமே , அவன் உதட்டை பிதுக்கி நடக்கும் அந்த நடை ராஜ நடை நெடுநெடுவென உயர உடல் ஃபிட்டான இன் பண்ணிய லைட் கலர் சர்ட் , இங்க் ப்ளு நிற பேண்ட் , வெள்ளை நிற ஷூ போட்டு அரங்கம் உள்ளே நடந்து வந்தாலே கரகோஷம் அள்ளும் ஆளுமை நிறைந்தவன் .. 

ஹீரோ எல்லாம் இவன் முன்னாடி மண்டி போடணும்டா என்ன அழகு ஸ்டைல் என்று தன் தனித்துவமான செயல்பாடுகள் நடை உடை பாவனை ரசிகர்களை கவர் விதம் விளையாட்டுத் திறன் ஓடும் அழகு நடக்கும் விதம் என்று ஒவ்வொன்றிலும் அத்தனை பேர் கவனத்தையும் ஈர்த்த ஒருவன் ..

கோல்பில் பல வருடம் கழித்து ஒலிம்பிக்கில் தங்கம் வென்று.. தன் தங்கப் பதக்கத்தை கையில் வைத்து நின்ற அவனின் புகைப்படமே தொலைக்காட்சி, மேகசின் , பேப்பர் எங்கும் ...

 22 வயது இளம் வீரன் , கொடைக்கானலை பூர்வீகமாக கொண்டு பல எஸ்டேட்டுக்களுக்கு வாரிசான

ரவீந்தர் உதித் !! 

என இளம் வயது புகைப்படம் அட்டை படங்களை அழகாக்கி கொண்டிருக்க... அவன் கர்வம் கொண்ட முகமும் உதட்டை பிரிக்காத சிரிப்பும் என்று நின்றான் உதித்!!!

இன்று 2024 ஆம் ஆண்டு 

அதே போல அட்டை படங்களில் மறுபடியும் உதித் ஆனால் இன்முறை கம்பீரமாக அல்லவே , உதித் படுக்கை படுக்கையாக 

பத்து வருடத்துக்கு முன் ஒலிம்பிக்கில் தங்கம் வாங்கி விட்டு இந்தியா வந்த ப்ளைட் நடுவானில் வெடித்து சிதறி கடலில் விழ ..

அதில் இவன் மட்டுமே தப்பித்தான்..  

தப்பித்து என்ன பயன் ? உடல் முழுக்க காயம் பட்டு உயிர் மட்டுமே மிச்சமாகி, தூக்கி கொண்டு வந்து போட்டிருக்கின்றனர் .. 

உயிர் உண்டு, உணர்வு உண்டு, ஆனால் படுக்கை விட்டு எழும்ப இயலாத ஒருவனாக,இன்று நாலு சுற்றுக்குள் ... சாவை வென்ற அவனால் விளையாட்டை வென்ற அவனால், வாழ்கையை வெல்ல முடியாது , விதியை வெல்ல இயலாது இருட்டு அறை மட்டுமே சொந்தமாகி போன ஒருவன் ...

இருட்டு அறை கதவு திறக்கப்பட்டது ... 

டமார் டம் டொம் என்று கண்ணாடி கோப்பைகள் உடைந்து விழ வேலைக்கார பெண் அலறி அடித்து வெளியே ஓடி வந்தது..

அவன் தாயின் சகோதரி பார்வதி எப்பவும் 

என்னாச்சி ? 

அம்மா அய்யாவுக்கு சாப்பாடு கொடுக்க போனேன் எல்லாத்தையும் எப்பவும் போல தூக்கி போட்டு உடைச்சிட்டார்ங்க..

ப்ச் செத்து தொலைய மாட்டைக்கிறான், சரியாகியும் தொலைக்க மாட்டைக்கிறான் இருக்கிற அத்தனை பேர் உயிரையும் எடுக்கிறான் என்று வந்த தன் கணவனை பார்த்த பார்வதி 

ப்ச் , வாயை மூடுய்யா, அமைதியா பேசுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் சொத்து எல்லாம் அவன் பேர்ல இருக்கு அவன் செத்தா சொத்து அத்தனையும் ஆசிரமம் போயிடும் தெரியும் தான ? 

அதுக்கு இவன் சிடுசிடுப்பு எல்லாம் கேட்கணுமா.. யாரையும் உள்ள விடுறதும் இல்லை உள்ள போற சுப்பைய்யாவும் செத்து தொலைச்சிட்டார்.. கார்டியன்னு அந்தஸ்துல நாம இருக்கோம் , அடுத்த வாரம் கம்பெனி லாயர் வேற வர்றான், இவன் நிலமையை பாத்துட்டு நம்மள வெளியே போக சொன்னா என்ன செய்றது பாரு? .. 

ப்ச் அதான்யா யோசிச்சிட்டு இருக்கேன் , ஒரு வேலைக்காரி செட் ஆக மாட்டைக்குதே என்று பார்வதி யோசித்து கொண்டு நிற்க 

யக்கா என்ற குரலில் இருவரும் திரும்பி பார்க்க வாசலில் வயதான பெண்ணும் அவன் பின்னே ஒரு தலையும் தெரிய ...  

இவ எங்க இங்க வந்தா என முனகிய பார்வதி 

அடேடே !! சகுந்தலா இங்க என்ன பண்ற ..பார்வதி களை புடுங்க போகும் போது , கூட வரும் கோ பாட்ன்ர் சகுந்தலா நிற்க.. அவர் பின்னே வெளிறிய சுடிதாரில். அவள் நின்றாள் .. 

கொற்றவை!! வயது 22 இருக்கலாம் நெளிந்த, மெலிந்த உடல் வாகு நல்ல உயரம் நார்மல் நிறம் என்று அக்கம் பக்கத்து பெண் போல உருவம் ..

பார்வதி அக்கா எனக்கு ஒரு உதவி பண்ணேன் இவளுக்கு எதாவது ஒரு வேலை வாங்கி கொடேன், புருஷன் கள்ளச்சாராயம் குடிச்சிட்டு செத்து தொலைச்சிட்டான் .. பத்து லட்சத்தையும் பிச்சு பிச்சு நாலு லட்சம் தான் தந்தானுவ , அதையும் கடன் அது இதுன்னு போயிடுச்சு பொழைப்புக்கு வழி இல்லை .

ப்ச் இங்க எந்த வேலையும் இல்லை சகு , இடத்தை காலி பண்ணு .. ஒருத்தி வசதியா இருந்தா ஆகாதே உடனே பஸ் ஏறி வந்து உதவின்னு வந்திட வேண்டியது .. 

யக்கா என்ன வேலைன்னாலும் செய்வாக்கா இவ்வளவு பெரிய வீட்டுல கூட்டி பெருக்கி போட வச்சிக்கோயேன்... அதற்குள் மேல் அறையில் உதித் கத்தும் சத்தம் கேட்டது 

கெட் அவுட்ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ என்ற சததம் செவிப்பறை கிழிய செய்ய பார்வதி யோசனையாக கொற்றவையை பார்த்தாள்.. 

என்னடி பாரு அப்படி பார்க்கிற..கணவன் காதை கடிக்க 

சோத்துக்கு வழியில்லாத ஒருத்தி என்ன செய்வாய்யா??  

தெரியல நீயே சொல்லு ... 

பொறுத்து இருந்து பார் ..

சரி சகுந்தலா நீ இவ்வளவு கெஞ்சி கேட்கிறதுனால வேலை தர்றேன் ... ஆனா வேலையை விட்டு இடையில போனா போலீஸ் ஸ்டேசன்தான் போக வேண்டி இருக்கும் , அக்கிரிமேண்ட் போட்டு தான் இங்க வேலையில சேர்ப்பாங்க... 

சரிக்கா சரிக்கா கெளரவமா நாலு காசு சம்பாதிச்சா போதும், உன்கிட்டன்னா பாதுக்காப்பாவும் இருக்குல்ல..

இந்தா பொண்ணு இதுல கையெழுத்து போடு உனக்கு இங்க வேலை பார்க்க சம்மதம் தான?? கொற்றவை தாயை பார்த்தாள் , மகளை பாவமாக தாய் பார்க்க..

சம்..ம...த...ம் !!என்று மலர் வாய் திறந்து அரக்கன் குகைக்குள் வாழ சம்மதம் கூற... அவள் விரல்கள் கொற்றவை என்று ஒரு வருட அக்கிரிமெண்டில் கையெழுத்து போட்டு கொடுக்க ..

பெட்டியோடு கொற்றவை அந்த மாட மாளிகை உள்ளே வலதுகால் எடுத்து வைக்க போக, தாயின் குரலில் பின்னால் பார்த்து தாயிக்கு கையசைத்து விட்டு இடது காலை மாளிகை உள்ளே வைத்து உள்ளே வந்தாள் ஐ யின் கொற்றவை !!

அன்று கர்வம் கொண்டு இறுகி போன பாறை அவன் 

இன்று இயாலமையில் இறுகி போன கரும்பாறை ...  

வாழ்வை வெல்வானா?

இல்லை அவளை கொல்வானா???