வன்முறை செய் தப்பில்லை 3
Van3
3 வன்முறை செய் தப்பில்லை !!
"இப்போ எதுக்கு புதுசா சமஞ்ச புள்ள மாதிரி கன்னத்துல கை வச்சு , நடு வீட்டுல உட்கார்ந்து இருக்கீங்க ?
மயங்கி விழுந்து கிடந்தவனுக்கு இரண்டு ட்ரிப்ஸ் ஏத்தி மறுபடியும் தூக்கிக்கொண்டு போட்டு இருக்கிறாள் .. எழும்பிய நேரத்தில் இருந்து முந்திரிக்கொட்டை போன கப்பல் கவிழ்ந்தது போலவே ஜீவா உட்கார்ந்து இருக்க ... இன்பா அவன் முன்னால் கையை பின்னால் கட்டிக் கொண்டு தன் தகப்பன் முன்னே குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருக்கிறான்.. வந்த தகப்பனை விடும் ஐடியா இல்லை, இருந்தா எங்க கூட இரு, செத்தா எங்க கூடவே சாவு என்பதுதான் அம்மா , மகன் இருவரின் கொள்கையும் ...
"ஏங்க , என் கன்னத்துல கை வைக்க கூட எனக்கு உரிமை இல்லையா?
"அதுதான் பிரச்சனையே, உங்க கைய உங்க கன்னத்திலேயே வச்சுக்கிட்டு இருந்தா எவளுக்குத்தான் கடுப்பாகாது... இப்ப என்ன தான் பண்ணணும்னு இப்படி உண்ணாவிரதம் இருக்கீங்க? "
"எப்போய் அம்மா கேட்குதுல்ல வாயில கொழுக்கைட்டையா வச்சிருக்க, பேசிதான் தொலையேன்" இன்பா தன் தலையில் அடித்தான் ...
இதுதாண்டா உன் மாமா என்று ஒரே ஒரு நாள் மூர்த்தி புல்லட்டில் போகும்போது காட்டி கொடுத்து விட்டாள்
அன்றிருந்து மூர்த்தி நடை, மூர்த்தி மீசையை முறுக்குவது வேட்டியை மடித்து கட்டிக் கொண்டு கெட்ட வார்த்தை வாய்க்குள் முனங்குவது என்று தாயை ரசிப்பது போலவே தாய்மாமனையும் ரசித்து விட .... இவன் நடை உடை பாவனை அத்தனையிலும் சற்று மாமன் தூக்கலாகவே பிரதிபலிப்பான்.. மாமாவை போல எனக்கும் கழுத்துல இம்மாந்தண்டி செயின் போட்டு விடு என்று மணி வரை டாலர் தொங்க போட்டுக்கொண்டு சுற்றுவான் .... இவன் இரத்த கோலபிரேசன் அப்படி .. மாமன் நக்கல், தாய் பேச்சு என்று ரெண்டும் அவனிடம் உண்டு ...
"ஊர் உலகத்துல ஏகப்பட்ட அப்பா வச்சிருக்கிறவன் எல்லாம் நல்லா இருக்கான், ஒத்த அப்பாவை வச்சிக்கிட்டு நான் படுற பாடு, ப்ச் எம்மோய் பேசி கரெக்ட் பண்ணி வையி.. மாமன்காரன் கோவிலுக்கு பிகரோட வருவார், போய் ஒரு எட்டு பார்த்துட்டு என் அப்பா வந்திருக்குன்னு சொல்லி ஒரு பஞ்சாயத்தை பண்ணிட்டு வர்றேன் .... தெருவில் போற போக்கில் இன்பா கத்தி கொண்டே போக
"பார்த்துடா சட்டையை இழுத்து போட்டுக்க, நாய் கவ்விடாம..."
"அதெல்லாம் உன் புருசன் போல நான் என்ன சூதானம் இல்லாதவனா, பார்த்துக்கிறேன் பார்த்துக்கிறேன் ? என் ஆளை பார்க்க போறேன்" என்ற பாடலோடு ஆள் மறைந்து விட்டது ...
மகன் தலை மறைந்ததும் ஜீவா முன்னால் வந்து கையை கட்டிக் கொண்டு நின்ற பாரிஜாதம்..
"உனக்கும் எனக்கும் சம்பவம் நடந்தது உண்மை, அந்த சம்பவத்துல குட்டி சம்பவம் வந்ததும் உண்மை எப்படி நடந்துச்சு என்ன நடந்துச்சு இதையெல்லாம் விளக்கினா மட்டும் உனக்கு புரிஞ்சுடவா போகுது ... இப்ப நான் புளி போட்டு விளக்கினா மட்டும் என்ன தெரியுமா சொல்லுவ .... என்னைய ஏமாத்தி கெடுத்துட்டீங்கன்னு பச்ச பிள்ளை மாதிரி உட்கார்ந்து ஒப்பாரி வைப்ப ... போதும் ராசா உன் டக்குல, என் மூளை பிதுங்கி போனது .... உன்ன ஏன்னு கண்டுக்கவே செய்யாத ஒருத்தி கஷ்டப்பட்டா அழுதா, அதனால அவளை நான் கல்யாணம் கட்டி ராணி மாதிரி வச்சுக்க போறேன், அவ கடைசி வரைக்கும் கண்கலங்காம இருக்கணும்னு அவளோட கஷ்டத்தை பார்த்தியே.... ஒவ்வொரு நாளும், நீ அந்த மூர்த்தி கூட வேலைக்கு போகும்போது பத்திரமா திரும்பி வந்துடனும் உனக்காக நீ வர்ற வர ராத்திரி இந்த வீட்டு வாசல்லையே நின்ன என்ன பாக்கலல்ல.... நீ சாப்பிட்டு வந்திருக்க மாட்டேங்குறதுக்காக சமையலே செய்யத் தெரியாத நான்.. இந்த சமையல் கட்டுல, என் கையை சுட்டு ,கால சுட்டு உனக்காக சமைச்சு சுடச்சுட தினமும் கொடுத்தேனே அதுல கூட உனக்கு என் மேல அக்கறையோ அப்போ இம்மி அளவு வரலைல்ல .. அன்னைக்கு ராத்திரி சுயநிலவே இல்லாம என் உடம்புக்கு பொண்ணு உடம்பு தேவைன்னு என் மேல நீ கை வைக்கும் போது.. இந்த உலகம் என்னை என்ன சொல்லும், இதெல்லாம் நான் எப்படி எதிர்கொள்வேன்னு அத்தனை கேள்வி இருந்தப்ப கூட , நீ விரும்பின காரணத்துக்காக, ராத்திரி முழுக்க உனக்கு என்னையே படையல் போட்டேன் பாரு ,,, அதெல்லாம் உனக்கு தெரியாது.... நான் கத்தி கத்தி சொன்னாலும் அது எல்லாம் உனக்கு புரியப்போறதும் கிடையாது... ஏன்னா அமைதியா அழகா இருக்கிற பொண்ணுங்க நல்லவங்க .. பேசுற பொண்ணுங்க திமிரு புடிச்சவங்க, தப்பானவங்கன்னு உன் மூளைக்குள்ள யாரோ திணிச்சு வச்சுட்டாங்க.. நான் சொல்லி நீ மாத்திக்க மாட்ட.. நீயா திருந்துனா தான் உண்டு ... இங்க பாரு என்கிட்ட இருந்து உனக்கு விடுதலை வேண்டுமா?? என்றதும் ஜீவா வேகமாக ஆம் என்று தலையாட்ட சலிப்பாக பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட பாரிஜாதம்...
"ஒரு மாசம் டைம் தரேன் அதுக்குள்ள வேற எவளையாவது கல்யாணம் கட்டி செட்டில் ஆயிடு இல்ல உன் தலைவிதி நான்தான்... கடைசி வரைக்கும் எங்க கூட தான் வாழ்ந்தாகணும்..."
"என்னங்க ஆனா ஊனான்னா கல்யாணம் கட்டுன்னு டேடி ஒரு பக்கம் சொல்றாரு, நீங்க ஒரு பக்கம் சொல்றீங்க... அப்படி அந்த கல்யாணத்துல என்ன எழவுதான் இருக்கு.... நீங்க மெரட்டுறதுக்காக எல்லாம் ,உங்க சொல் படி ஆட முடியாதுங்க.. என் கீ , பாஸ்போர்ட் எல்லாத்தையும் கொடுங்க .. இல்ல நடக்கிறதே வேற என்று கையை நீட்டி அவன் எச்சரிக்க ... புதிதாக முளைத்த அவன் ஆண்மை கொம்பில் தாவணியை சுழற்றிக் கொண்டே பார்த்தவள்
"இல்லன்னா என்ன பண்ணுவீங்க?
"என்ன பண்ணுவேனா நேரா போலீஸ் ஸ்டேஷன் போய், இந்த பொண்ணு என்ன கடத்தி வச்சி டார்ச்சர் பண்ணுதுன்னு கம்ப்ளைன்ட் கொடுப்பேன்
"அடடே!! சாருக்கு வீரம் வந்துடுச்சே, நான் கொடுக்கவா கம்ப்ளைன்ட்.. ஆள் மாறாட்டம் பண்ணி என் அண்ணன் கிட்ட டிரைவர் வேலை பார்த்து , என்ன கண்டம் பண்ணிட்டான், அவனால எனக்கு இப்போ ஒரு பிள்ளை இருக்கு, எனக்கு நியாயம் செய்யுங்கன்னு ஆதாரத்தோட நான் கொடுத்தேன்னு வை நீதான் தம்பி உள்ளார உல்லாசமா கிடக்கணும் , என்ன நான் கொடுக்கவா??" என்று பாரிஜாதம் விசில் அடிக்க ..ஜீவா ஜெர்க்கானான்... அவனை போலவே இருக்கும் இன்பா சற்று யோசிக்க வைத்தான் ...
என்ன கொடுக்கவான்னு கேட்டேன்
"ஏங்க எதுக்கு கோவப்படுறீங்க ,இப்ப என்ன ஆச்சு ... ஒரு மாசம் டைம் கொடுங்க .. அதுக்குள்ள நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி செட்டில் ஆகிட்டா என்ன விட்டிருவீங்க தான ?
"ஊரை போலவே பாரிஜாதம் சிந்தாமணி மகளாக , வஞ்சக மூர்த்தி தங்கையாகத்தான் அவனுக்கும் தெரிந்தாள் ... வெளியே உள்ள முரட்டு உருவம் கொண்டே எடை தராசில் அவளை வைக்க உள்ளே அவன் காதலுக்கு ஏங்கிய மெல்லிய இதயம் அறியாதே போனது ...
"ம்ம்
சத்தியம் பண்ணுங்க ... உங்களை நம்ப முடியாது.. இப்ப ஒன்னை சொல்லிட்டு, அப்ப வேற ஒன்னு சொல்வீங்க என்று அவன் வெள்ளை நிற கையை நீட்ட ... ஏங்க கடைசி வரை உங்களை கைவிட மாட்டேன்ங்க, இது சத்தியம் என்று அவள் கையில் சத்தியம் அடித்து அன்று அவள் இளமை உள்ளே புகுந்த நியாபகத்தில் சத்தமாக சிரித்தவள்...
நான் சத்தியம் பண்றது இருக்கட்டும்... ஆனா நீங்க எனக்கு சத்தியம் பண்ணணுமே.."
எதுக்கு??
"உங்களை நம்பி எப்படி நான் சுதந்திரமா அலைய விடுறது, சொல்லாம கொள்ளாம ஓடிப்போயிட்டா என் மகனுக்கு யார் பதில் சொல்றது? என் சந்தோஷத்தை விட இப்ப என் மகன் சந்தோசம்தான் முக்கியம் .. அவனுக்கு அப்பா வேணும், அதுக்காக எவ்வளவு வேணாலும் போராடுவேன் உங்க கிட்ட கூட தோக்க மாட்டேன்.... இந்த ஒரு மாசத்துல நீங்க வேற பொண்ணு கூட உங்க வாழ்க்கைய ஆரம்பிச்சிட்டீங்கன்னா நான் ஒதுங்கிக்கிறேன்...
ஆரம்பிக்க முடியலன்னா நீங்க தோல்வியை ஒத்துக்கணும் ஆனா இந்த ஒரு மாதமும் நீங்க எங்க கூட தான் இருக்கணும் ... அவன் யோசனையாக கண்ணை உருட்ட
ஹலோ உங்கள ரேப் பண்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை, அன்னைக்கு உங்களுக்கு சொல்லிக் கொடுத்ததிலேயே எனக்கு நாக்கு தள்ளி போச்சு... ஏன்யா ஒரு லிப் கிஸ் கூடவாய்யா பண்ண தெரியாது ...ஸ்ப்பா நாக்கை கடிச்சு குதறி சொன்னா வெட்கக்கேடு என்று தலையில் அடித்தவள்
எப்படியோ 35 மார்க் பாஸ் மார்க்குல முந்திரிக்கொட்டை மாதிரி மகன் பொறந்துட்டான்... முழு டெடிகேசன், டீ டிகாசன் என்னோடது.. மறுபடியும் எல்லாம் ரிஸ்க் எடுக்கிற ஐடியா எனக்கு இல்லை ... அவன் ஹான் என்று பார்த்து வைக்க
இங்க இருக்கிறதுக்கு தங்க, திங்குறதுக்கு எல்லாம் ஒத்த பைசா விடாம காசு தந்துடனும்... காசுன்னு வந்துட்டா பாரிஜாதம் கறாரா இருப்பேன்., வேலைக்கு என்ன பண்ணப் போறோம், எங்க வேலை கிடைக்கும்னு அதுக்கெல்லாம் கவலையே படவேண்டாம், அதுக்கும் ரெடிமேடா என்கிட்ட பதில் இருக்கு நான் வட்டி வாங்கும்போது எனக்கும் என் மகனுக்கும் பாடி கார்டா? இல்லை இல்லை சும்மா எங்க கூட வந்தா போதும் டெய்லி ஆயிரம் ரூபாய் ...
இல்லை கல்லு உடைக்க போறேன் , மண்ணு அள்ள போறேன்னு சட்டையை மடக்கி விட்டுட்டு போனாலும் சரிதான்... "
"எல்லாத்துக்கும் ஓகே தான்ங்க, ஆனா இந்த வீட்ல என்னால இருக்க முடியாது... உங்க ரெண்டு பேரையும் பார்த்தாவே எனக்கு பிடிக்கல... நான் டிரைவரா இருக்கும் போது தங்குன வீட்டுல தங்கிக்கிறேன்... அந்த வீட்டு சாவியை கொடுங்க என்றவன் கையில் பல்லை நரநரவென கடித்து கொண்டே சாவியை திணிக்க...இப்போதைக்கு இதுவே விடுதலை போல தோன்றி ஜீவா தன் பெட்டியை உருட்டி கொண்டு வெளியே வர..
எபபோய் பெட்டியோட எங்க கிளம்பிட்ட ? இன்பா பெட்டியோட நின்ற தகப்பனை புரியாது பார்க்க
உன் அப்பா தனிக்குடித்தனம் போறார்டா... விடு விடு எங்க போயிட போறார்... அடைய கூண்டுக்கு வந்து தான ஆகணும் ...
ஏங்க ? என்று மெலிதான குரலில் ஜீவா பாரிஜாதத்தை அழைக்க
என்ன ? "
அப்பறம் ஒரு குட்டி கண்டிசன் ... சும்மா சும்மா அவனை அப்பான்னு கூப்பிட சொல்லாதீங்க... ஒரு கிளாரிட்டி வர்ற வரை ... என்று ஜீவா இழுக்க...
மாமான்னு கூப்பிடுடா போதுமா? உன் மகனாச்சு நீ ஆச்சு.... அதுக்கு எல்லாம் நான் பஞ்சாயத்து பண்ண முடியாது , சட்டதிடடம் எல்லாம் உனக்கும் எனக்கும் தான்.. நான் கோட்டுக்கு இங்க நிக்கிறேன், நீ அங்க நில்லு... அதுக்கு மட்டும் தான் சத்தியம் பண்ணி தர முடியும்... என் மகன் அவன் அப்பாகிட்ட எப்படி இருக்கணும்னு எல்லாம் என்னால ரூல் போட முடியாது.டர நைட்டுக்கு சாப்பாடு செஞ்சு அவன்கிடட அனுப்பி விடுறேன், கடையில தின்னு வயித்தை கெடுக்காதய்யா" என்று விட்டு தாவணியை உதறி இடையில் சொருகி கொண்டு பாரிஜாதம் விடலை கோழி பின்னே ஓடியவள், அதை கபார் என்று அமுக்கி பிடித்து தலையை ஒரே திருகில் திருகி கொல்ல... ஜீவா எச்சில் விழுங்கி அவள் செய்கையை பார்த்து கொண்டு நின்றான்...
பல கரடான பார்வை, பேச்சுக்கு பின்னே உள்ளே அழகான அன்பும் காதலும் பல பேருக்கு தெரிவதேயில்லை!!