அநாயகா-36

அநாயகா-36

அநாயகா-36

ஜெயச்சந்திரன் ஏற்கனவே ஒருதடவை கண்ணு முழித்துப் பார்த்ததால், அவரை ஒருவாரம் ஹாஸ்பிட்டல்லயே வைச்சு செக் பண்ணிட்டு இனி அவரை வீட்டில் வைத்துப் பார்த்துக்கலாம். இதுக்குமேல ஹாஸ்பிட்டல்ல வைக்கிறதுனால எந்த பயணும் இல்லை. வீட்டுக்குகொண்டுபோனால் உங்களுக்கு ஹாஸ்பிட்டல் செலவாவது குறையும்” என்று டாக்டர்கள் சொல்லிவிட்டார்கள். 

ஏற்கனவே இளந்தீரனும் மாமாவை எப்படியாவது வீட்டிக்கு கொண்டு வந்துடணும்னு ஆதிராவிடம் பேசியிருந்தான். அவளுக்குமே அவன் சொல்லுறது சரியென்று தோன்றவும் மகேஷ்வரி சங்கவியோடு இதைப்பத்தி சொல்லியிருந்தாள்.

“உன் வீட்டுக்காரன் சொல்லுறதெல்லாம் சரியாத்தான் இருக்கு. ஆனாலும் அதையெல்லாம் நம்பி அப்பாவை இங்கக்கொண்டுவந்தால் வேற ஏதாவது ஆகிட்டுன்னா என்ன பண்றது? அப்பாதானே நமக்கு முக்கியம்?”என்று வழக்கம்போலவே சங்கவி சந்தேகத்தோடு பேசினாள்.

“உன் சந்தேகம் எப்பவுமே உன்னைவிட்டுப்போகாதா சங்கவி?உனக்கு அப்பா மட்டும் முக்கியம். எனக்கு என் புருஷனும் முக்கியம் அப்பாவும் முக்கியம்”

“அதுசரி நீ இப்படி அவனுக்காக பேசலைன்னாதான் ஆச்சர்யம். எப்படியோ போங்க. அப்புறம் பிரச்சனையாகிட்டுன்னு புலம்பிட்டிருக்கக்கூடாது”

“அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம். நீ அமைதியா இரு அதுவே எங்களுக்கு பேருதவி”என்று ரவி சொன்னதும் உங்க தம்பின்னதும் நடந்ததை எல்லாம் மறந்து ராசியிட்டீங்க அப்படித்தானே, நடத்துங்க நடத்துங்க என்று எழுந்துப்போய்விட்டாள்.

அவா அப்படித்தான்னு எல்லோருக்கும் தெரியுமே! அதனால் ஜெயசந்திரனை வீட்டுக்குக் கொண்டுவர முடிவுசெய்து அடுத்த இரண்டு நாளில் அவரை வீடடுக்கு கூட்டிட்டுவர எல்லாம் ஏற்பாடும் செய்து, டாக்டரிடமும் டிஸ்சார்ஜ் சீட்டு வாங்கிட்டு வெளியே வந்தார்கள்.

டாக்டர்கள் மகேஷ்வரியை கூப்பிட்டு “ஐயா மறுபடியும் கண்ணு முழிச்சு பார்த்தாங்கன்னா உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டு வாங்க .எல்லாம் நார்மலா இருக்கான்னு திரும்பவும் செக் பண்ணிட்டா அவரோட ஹெல்த்துக்கு நல்லது” என சொல்லிதான் அனுப்பிவைத்தார்கள்.

அதனால் மகேஸ்வரி இப்போது பயம் இல்லாமல் ஜெயச்சந்திரனை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தார். அவருக்காக தனிப்பட்ட ரூம் என்று எல்லாம் செய்து வைத்தார்கள். 

அவரைப் பார்ப்பதற்காக இரண்டு ஆண் நர்ஸ்களை அப்பாயிண்ட் பண்ணிருந்தாங்க. டூயூட்டி மாத்தி டூயூட்டி அவர்கள் வந்து போவார்கள். ஏற்கனவே ஜெயச்சந்திரன் வாய் வழியாக ட்யூப் மூலமாக 

தன் உணவு போய்க் கொண்டிருந்தது. அதையே இப்பொழுதும் தொடரலாம் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அவரை வீட்டில் வைத்து பார்ப்பதற்கு எந்த விதமான பிரச்சினையுமில்லை.

இப்பொழுது மகேஸ்வரி ஜெயச்சந்திரனை வீட்டில் வைத்து பார்த்துக்கொள்ள சம்மதித்திருந்தார். அவருக்கு ஜெயச்சந்திரன் எழுந்து வந்தாலும் வராட்டாலும் நம்மகூடவே இருந்தால் போதும் என்கிற எண்ணம் வந்திருந்தது. அதனால் அவரை வீட்டுக்கு கூட்டிட்டு வர சம்மதித்திருந்தார்.

அடுத்த நாளே அதற்குரிய பிராசஸ் எல்லாம் முடிஞ்சு ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு வந்து, பாதுகாப்பாக வைத்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

தினமும் ஆதிராவும் இளந்தீரனும் தனித்தனியாக அவர் பக்கத்துல போய் உட்கார்ந்திருந்திட்டுத்தான் வெளியே வருவார்கள். 

எப்போதும்போல மகேஸ்வரி இப்பவும் ஜெயசந்திரன்கூடவே இருந்தார்.

மகேஸ்வரி வீட்டில் நடந்தது, இப்போ நடந்துக்கொண்டிருக்கிறது என்று எல்லாத்தையும் தினமும் ஜெயசந்திரனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

இங்கு நடக்கக்கூடிய விசயம் எல்லாத்தையும் அவர் கேட்கிறாரா? கேட்கவில்லையா? என்று எதுவும் தெரியாது, அவரது கையைப்பிடித்துச்சொல்லிக் கொண்டேயிருந்தார்.

மகேஸ்வரிக்கு அது பிடித்த விஷயமாக இருந்தது. தனது கணவரோடு தினமும் பேசுகிறோம் என்பதே அவரது மனதிற்கு ஒரு நிம்மதி கொடுத்தது. 

இளந்தீரன் தன் பக்கத்தில் படுத்திருந்த ஆதிராவின்‌ கைகளை இறுக்கி பிடித்து இருந்தான்.

அவனது உணர்வுகளை புரிந்துக்கொண்ட ஆதிரா எழுந்து உட்கார்ந்தாள்.

“ஏன் அத்தான் இப்படி இருக்கீங்க நீங்க பழைய அத்தானகவே இருங்க. அந்த முரட்டுத்தனமான பேச்சும் செயலும்தான் இப்போ இந்த அரசியலுக்கு தேவை. சிவானந்தன்கூட இருக்கும்போது அந்த கட்சிக்காக எவ்வளவு தீயா பறந்து பறந்து வேலைப் பார்த்தீங்க. அதேமாதிரி இப்போ அதே பிரச்சாரத்தை நமக்காக செய்யுங்கத்தான். இதுல நம்ம ஜெயிக்கிறோம் தோற்கிறோம் அப்படிங்கிறதைத் தாண்டி, நம்ம இதுல நம்மளுக்காக போட்டிப்போடணும். அப்பாவுக்காக, உங்களுக்காக, எனக்காக நின்னு போட்டிப்போடணும். நான் எதுக்காக இதைக் சொல்லுறேன்னு உங்களுக்குப் புரியுதா என்ன?”என்று வாஞ்சையாக அவனது தோளில் சாய்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

“ப்ச்ச் நீ சொல்லுறதெல்லாம் எனக்கு புரியுதுடி. இப்போ நீ எலக்ஷ்சன்ல நின்னுருந்தன்னு வையேன் நான் தைரியமா இறங்கி வேலை பார்த்திருப்பேன். இப்போ நிக்கிறது நானாச்சே. அதுதான் குழப்பத்திலேயே உட்கார்ந்திருக்கிறேன். இதை நான் எதிர்பார்க்கலடி” 

"க்கும் இதெல்லாம் நல்ல பேசுங்கத்தான்.இந்த ஆதிரா கழுத்தில் தாலிகட்டுறோம்னு எதிர்பார்த்தீங்களா என்ன? இல்லல்ல. அதே மாதிரிதான் வாழ்க்கையிலும் நிறைய எதிர்பாக்காத விஷயங்கள் நமக்கு முன்னாடி வந்து நிக்கும். அதிலிருந்து மீண்டு வர்றதுதான் நம்மளோட முக்கியமான வேலையா இருக்கணும்" என்று சொல்லியவாறே அவள் அவனது மீசையை பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவன் அவளைப் பார்த்து “என்னடி குழப்பம் இல்லாமல் தெளிவா இருக்க? எப்பவும் என் பக்கத்துல இருக்கும்போது குழப்பத்துலதானே இருப்ப. இன்னைக்கு இவ்வளவு தெளிவா பேசுற" என்று சந்தேகமாக கேட்டான். 

இப்போ வரைக்கும் தெளிவாகதான் இருக்கேன். நீங்க குழப்பிவிடாமல் இருந்தா சரிதான் என்று சொல்லி வாயை மூடவில்லை அவளது வாயை அவன் வாயால் மூடியிருந்தாள்.

அதன்பிறகு எங்க இரண்டுபேரும் தேர்தல் பிராச்சாரம் பத்தி பேச, காதல் சமாச்சாரம் பத்தித்தான் பேசிக்கொண்டிருந்தார்கள்.

தேர்தல் நெருங்க நெருங்க இளந்தீரனும் ஆதிராவும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். 

ஆதிரா இளந்தீரனுக்காக பேசினாள். இதுவரைக்கும் அப்பாக்கூட கட்சி மீட்டிங்கூட போகாதவள் தனது அத்தானுக்காக, மேடையேறி மைக் பிடித்து இளந்தீரனுக்காக ஓட்டுக்கேட்டாள்.

எல்லாமே நல்லாதன் போயிட்டிருந்தது. ஆனாலும் எதிர்கட்சி இவர்களைவிட்ட இந்ததடவை அதிகமா ஓட்டுவாங்கும் என்கிறளவுக்கு வந்திருந்தது. மதுமதிக்காக அவர்கள் இறங்கி வேலை செய்தார்கள்.

சிவானந்தனின் வியூகமும், ரகுவரனின் குறுக்கு புத்தியம் சேர்ந்து மதுமதிக்கு ஆதரவாக பிரச்சார வியூகத்தை வகுத்து வைத்திருந்தது

அதனால் இளந்தீரனைவிடவும் சிவானந்தனின் மகளுக்கு அதிக ஆதரவு கிடைத்தது. 

எங்கு சென்றாலும் மதுமதியை பார்க்கவே கூட்டம் அலைமோதியது, இளந்தீரனுக்காக கூட்டம் கொஞ்சம் குறைவாகத்தான் வந்தது. 

ஆனாலும் ஆதிரா இளந்தீரனுக்காக பயங்கரமாக போராடி பிரச்சாரம் செய்தாள்.

இளந்தீரனுக்கு இப்போதுமே அவன் தேர்தலில் நிற்பதில் விருப்பமே இல்லை என்பதை தினம் தினம் ஆதிராவிடம் வந்து நிறைய புலம்புவான்.

இங்க பாரு பத்து பன்னிரண்டு வருஷமா நான் ஒரு கட்சியில் இருந்து அந்த கட்சிக்காகவே வளர்ந்து, அதுக்காக பிரச்சாரம் பண்ணி ஓடி ஓடி உழைச்சேன். அப்படி உழைச்சவன் இப்போ புதுசா உங்க கட்சில வந்து சேர்ந்து நான் எனக்கு ஓட்டு போடணும்னு சொன்னா உங்க கட்சியில் உங்களை அதை ஆதரிக்க மாட்டாங்க. ஏதோ மாமா முகத்துக்காக எனக்கு சீட்டு தந்திருக்காங்க உனக்கு தந்த சீட்டை எனக்கு மாத்தி கொடுத்துட்டு இப்போ இழந்து நிக்க போறீங்க. எனக்கு வருத்தமா இருக்கு இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. நான் வாபஸ் வாங்கிடுறேன் என்று நெகட்டிவாக பேசினான். இதுவரைக்கும் இளந்தீரன் இப்படி பேசினதேயில்லை, அவன் எதற்கும் அஞ்சாதவன், இப்போ இப்படி பேசுறான் என்றால் அதற்கும் காரணமும் இருக்கும் என்று ஆதிராவுக்குமே தெரியும் எந்த சூழ்நிலையிலும் தைரியமாக நின்று போராடிய தீராத்தான் இப்படி புலம்புகிறாங்களே என்று அவளுக்குத்தான் வருத்தமாக இருந்தது. 

ஆனாலும் அவனுக்கு நம்பிக்கை கொடுத்துக் கொண்டுதான் இருந்தாள்.

சிவானந்தன் ராகுவரனை விடவும் மதுமதி தெளிவாகும், புத்தியவுடன் பிரச்சாரம் செய்தாள். அவளது ஒவ்வொரு பேச்சும் கணீர் கணீரென்று இளந்தீரனுக்கு எதிராகவே இருந்தது.

மதுமதி மேடையில் பேசியதை இப்போது வீடியோவில் போட்டு இளந்தீரன் பார்த்துக்கொண்டிருந்தான்.

“இளந்தீரன்தான் ஜெயச்சந்திரனின் மண்டைய உடைத்து, அவரை கோமாவில் வைத்திருக்கிறான். அப்படிப்பட்ட ஒருத்தனுக்கு அந்த கட்சியும் சீட்டு கொடுத்து தேர்தலில் நிற்க வைத்திருக்கிறார்கள் என்றால் அது எப்படிப்பட்ட கட்சியாக இருக்கும் என்று சிந்தித்து வ்க்களியுங்கள்! அதுவும் ஜெயச்சந்திரனின் இளைய மகள் ஆதிராவே இளந்தீரனுடன் சேர்ந்து அவரை கொல்லுறதுக்கு ப்ளான் போட்டுத்தான் இந்த நாடகத்தையே நடத்தினார்கள். ஒரு எம்.எல்.ஏவை கல்லால அடிச்சு, தலையை உடைச்சவனுக்கு சீட்டு குடுத்திருக்காங்க. அவனையே ஜெயசந்திரன் மகள் ஆதிரா கல்யாணம் பண்ணி இருக்கிறாள். இது ஏதோ எல்லாரும் சேர்ந்து கூட்டுச்சதியாக இருக்குன்னு நீங்க யாரும் யோசிக்கலையா?அந்த இளந்தீரன் ஒரு சதிகாரன் அவன் எங்க கட்சிக்குள்ளயே பிரச்சனை செய்ததுனாலதான் அவனைக் கட்சியில் இருந்து தூக்கி வெளியப்போட்டுட்டோம். அப்படிப்பட்ட ஒருத்தனை ஜெயில்ல இருந்து வெளியே எடுத்திருக்காள்னா அந்த ஆதிரா எப்படிப்பட்ட பொண்ணுன்னு தெரிஞ்சிக்கங்க. அதைவிடவும் அவளே அந்த இளந்தீரனைக் கல்யாணம் பண்ணிட்டு அவங்கப்பாவுக்கு நம்பிக்கைதுரோகம் பண்ணிருக்காள்.எனக்கு மட்டுமில்லை இங்க இருக்க எல்லோருக்கும்கூட ஆதிரா மேலயும் அந்த இளந்தீரன் மேலயும் சந்தேகம் இருக்குத்தான். இவங்க இரண்டுபேரும் சேர்ந்துதான் ஜெயச்சந்திரன் அடித்து போட்டிருப்பாங்களோன்னு தோணுது. இதுக்கு அரசு ஒரு விசாரனை வைத்து இரண்டுபேரையும் கைதுபண்ணி விசாரிக்கணும்னு நான் கோரிக்கை வைக்கிறேன். ஒரு எதிர்கட்சியா இந்த உண்மையை வெளிக்கொண்டுவர நாங்க உதவி செய்யணும். எங்களைப் பொறுத்தவரைக்கும் ஜெயசந்திரன் ஒரு நல்ல அரசியல் தலைவர். கண்ணியமான எதிர்கட்சித் தலைவர். அவர் இடத்துல இந்த இளந்தீரனா யோசிங்க மக்களே. சிந்தித்து ஓட்டுப்போடுங்க. நாங்க ஜெயிச்சா கண்டிப்பா அவரைவிட அதிகமாக நம்ம சொகுதிக்கு செய்வோம்” என்று புதுவிதமான ஒரு சந்தேகத்தையும் கிளப்பி விட்டுவிட்டு பிரச்சாரம் செய்தாள்.

ரகுவரனும் அதையேதான் பேசினான். ஆதிராவும் இளந்தீரனும் பலவருஷமா காதலிக்கிறாங்க. அவன் கேரக்டர் சரியில்லைன்னு அவங்களுடைய காதலுக்கு ஜெயச்சந்திரன் எதிர்ப்பு தெரிவித்ததால்தான் எங்க கட்சியிலயே அந்த துரோகி வந்து சேர்ந்தான்.

அதனால்தான் இரண்டுபேரும் சேர்ந்து ஜெயச்சந்திரன் திட்டம் போட்டு மறைமுகமாக தாக்கி கோமாவுல படுக்கவைச்சிட்டு, அதை எதிர்க்கட்சிக்காரன் நாங்கதான் செய்தோம்னு பொய் பிரச்சாரம் பண்றாங்க. ஆனால் அது அப்படியில்ல ஆதிராவுக்கும் இளந்தீரனுக்கும் உள்ள காதல் அவங்க குடும்பத்தில் யாருக்கும் பிடிக்காது. அதனால்தானஅவனை விரட்டி விட்டுட்டாங்க. அந்த கோபத்தில்தான் அவன் ஜெயச்சந்திரனைக் கல்லால் அடிச்சி கொல்லப்பார்த்தான். அதுக்கு ஆதிரவும் ஆதரவாக இருந்தாள்.அதனாலதான் இளந்தீரனை அந்த கேஸ்ல இருந்து வெளியே கொண்டு வந்தா. அப்படி வெளியே கொண்டு வந்ததும் இல்லாமல் ஜெயச்சந்திரன் தொகுதியிலேயே தான் புருஷனை நினைக்கவைச்சிருக்கா.அவன் எம்.எல்.ஏவாகிட்ட என் நாளைக்கு இந்த கேஸ் அதுஇதுன்னு பிரச்சரை வராதுல அதுதான் கிரிமினல் ப்ளான் போட்டிருக்காங்க. அவன் பின்னாடி இருந்துஸ்ரீதூண்டுறது எல்லாமே ஆதிராதான். அவனுக்கு ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைச்சிடாதிங்க. தயவு செய்து எங்களுக்கு ஓட்டுப்போடாதிங்க”என்றும் மேடையில் பேசினான்.

மேடையில் பேசியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நல்லபெருமாள் ஏற்கனவே இளந்தீரனை எப்படி பாழிவாங்கலாமென்று காத்திருக்க, இப்போ நல்ல வாய்ப்பு கிடைச்சதும் அவனை எப்படி அரஸ்ட் பண்ணலாம்னு யோசித்துக்கொண்டிருந்தார்.

இப்போது மதுமதி பேசியதைக் பார்த்துக்கொண்டிருந்த இளந்தீரன் சத்தமாகச் சிரித்தான். அவனது சிரிப்பின் அர்த்தத்தைப் புரிந்துக்கொண்ட ஆதிரா அவனது தலையைப் பிடித்து ஆதுரமாகத் தடவிக்கொடுத்தாள். அவளது கையைப்பிடித்து தனது உள்ளங்கைக்குள் வைத்தவன் அப்படியே அமைதியாகிவிட்டானு.

இளந்தீரனை பழிவாங்க இதுதான் சரியான நேரம் என்று நல்லபெருமாள் அவனை எப்படி அரஸ்ட் பண்ணலாம் என்று யோசித்து, அதுக்கான திட்டம்போட்டு அதை செயல்படுத்தவும் உடனே நடவடிக்கை எடுத்துவிட்டார்.

நல்லபெருமாள் ஆதிரா மீதும் இள்ந்தீரன் மீதும் கொலை முயற்சி வழக்குப்போட்டு, எஸ்பியிடம் பேசி, கமிஷனரிடம் தகவல் சொல்லி என்று ஒருவழியாக அவர்களை அரஸ்ட் பண்ண அரஸ்ட் வாரண்ட்டை ரெடிபண்ணிவிட்டார்.

அவர்கள் இருவரையும் அரெஸ்ட் பண்ணுவதற்காக கமிஷனரிடம் பெர்மிஷன் வாங்கியிருக்கிறார் என்கின்ற தகவல் இளந்தீரனுக்கு வந்து சேர்ந்தது.

அவன் அதைக்கேட்டு சிரித்துவிட்டு ஆதிராவை இழுத்துக்கொண்டு ஜெயசந்திரனின் ரூமுக்குள்விட்டவன் இங்க என்ன நடந்தாலும் நீ வெளிய வரக்கூடாது. என்னை அவனுங்க அரஸ்ட் பண்ணட்டும். நீ இங்கத் தேவை. நீ ஒரு ஆளா இருந்தா போதும் சமாளிச்சிடுவா. அவனுக்கு எண்ணமெல்லாம் அரஸ்ட் பண்ணி கேவலப்படுத்தணும்னுதான். அது நடக்காது. நான் சொல்லுறதை நீ கேளு. அப்புறம் நீ இங்க இருக்கிறதே அவனுக்கு தெரியக்கூடாது. எது நடந்தாலும் பொறுமையா இரு. அடுத்து என்ன செய்யணும்னு நான் சொல்லுறேன் என்று பேசியவன் ரவியைக்கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.

ரவியோ தங்களது குடும்ப லாயரையும், கட்சி லாயரையும் போன் பண்ணி வரச்சொல்லிவிட்டு எதுவந்தாலும் பார்த்துக்கலாம்டா தம்பி என்று சொல்லிட்டு இருக்கும்போதே நல்லபெருமாள் அதிரடியாக போலீஸ் படைகளுடன் ஜெயச்சந்திரனின் வீட்டுக்குள் நுழைந்தார். 

அதைப்பார்த்த ரவியும் இளந்தீரனும் “என்னாச்சு சார்?எதுக்கு சார் இத்தனை போலீஸ்காரங்களோடு எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க?”என்று வழியை மறைத்து நின்று கேட்டாங்க. அவங்களுக்கு முதலிலே நம்ம வர்றது தெரிஞ்சிருக்குப்போலயே என்று சந்தோகத்தோடு பார்த்தவர்

“ஹான் உன் தம்பியை அரஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கோம். உன் தம்பியையும் ஜெயசந்திரனோட இளைய மகளையும் அவங்கப்பாவை கொலைப் பண்ண பார்த்ததுக்காக அரஸ்ட் பண்ணி விசாரிக்க வந்திருக்கோம். இதுக்குமேல எதுன்னாலும் தெரிஞ்சிக்கணுமா எஸ்.பிக்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க”என்றவர் உடனே இளந்தீரனின் கையைப் பிடித்து விலங்குப்போட முயன்றார்.

அதைத் தடுத்த ரவியைத் தள்ளிவிட்டுவிட்டார். ஏதோ சத்தம் கேட்குதே என்று மகேஷ்வரியும் சங்கவியும் ஓடிவந்துப்பார்த்தார்கள். ரவி கீழ விழுந்திருப்பதையும் நல்லபெருமாள் இளந்தீரனின் கையை இழுத்து விலங்கைப்போடுவதையும் பார்த்த மகேஷ்வரிக்கு அவ்வளவு கோபம் வந்துவிட்டது.

இளந்தீரனோ “என்ன சார் வாங்குன அடிக்கு பதில் தர வந்திருக்கீங்களா?அப்போ இருந்த இளந்தீரன் வேற. இப்போ இருக்கிற இளந்தீரன் வேற. நீங்க செய்யிறதுக்கு கண்டிப்பா திரும்ப கிடைக்கும். திரும்ப நான் தருவேன்”என்று நக்கலாகவே சொல்லிவிட்டுச் சிரித்தான்.

அதற்குள் மகேஷ்வரி சத்தம்போட்டார் “இன்ஸ்பெக்டர் சார் என்ன செய்யிறீங்கன்னு தெரிஞ்சுதான் செய்றீங்களா? என் மருமகனை எப்படி நீங்க அரஸ்ட் பண்ணலாம். என் மருமகன் என்ன தப்புசெய்திருந்தாலும் அதை நாங்க எங்க குடும்பத்துக்குள்ள பார்த்துக்கிறோம். நாங்கதான் கேஸை வாபஸ் வாங்கிட்டோமே. அப்புறம் எதுக்கு இளந்தீரனை அரஸ்ட் பண்றீஙக. உங்களுக்கு என்ன பிரச்சனை?எதுக்காக அரஸ்ட் பண்றீங்க. இருங்க எங்க வக்கீல்வரட்டும்”என்று வழியை மறித்து நின்று அவர்களைப் போகவிடாது தடுத்தார்.

“மேடம் இங்கப்பாருங்க ஜெயசந்திரன் ஐய்யாவோட மனைவிங்கிறதுனாலதான் உங்கக்கிட்ட நின்னு பேசிட்டிருக்கேன். இல்லைன்னா நடக்கிறதே வேற. உங்க மகள் ஆதிராவை எங்க?அவளையும் அரஸ்ட் பண்ணத்தான் வந்திருக்கோம். மதுமதி அவங்க இரண்டுபேரையும் பத்தி மேடையிலயே பேசிருக்காங்க. உங்க மகளும் மருமகனும் சேர்ந்துதான் உங்க வீட்டுக்காரர் அதாவது முன்னாள் எம்.எல்.ஏ ஜெயசந்திரனை கொலைப் பண்ண பார்த்திருக்காங்க.அதுக்காகத்தான் அரஸ்ட் பண்ணி விசாரிக்க வந்திருக்கோம்”

“என்னது முன்னாள் எம்.எல்.ஏவையா?யாரைப்பார்த்து முன்னாள் எம்.எல.ஏன்னு சொல்லுறீங்க. இப்போவரைக்கும் அவர்தான் எம்.எல்.ஏ அதுக்கு அடுத்து என் சின்ன மருமகன் எம்.எல்.ஏ ஆகிடுவான். அதுக்காகத்தான் பொறாமைப்பட்டு மேடையில பேசுறாங்க. மேடையில யாரு என்ன பேசினாலும் நீங்க அரஸ்ட் பண்ண இப்படித்தான் கும்பலா போவீஙகளா?அப்போ உண்மை என்னென்னு நாளைக்கு என் மகள் மேடையில பேசுவா. அதை வைச்சு அந்த சிவானந்தன் குடும்பத்தை அரஸ்ட் பண்ணுவீங்களா?”என்று கேட்டார்.

“அப்படி போடு. இப்படித்தான் தைரியமா கேள்விக்கேட்கணும் மகேஷ்வரி. இல்லைன்னா நல்லபெருமாள் மாதிரி ஆட்களை தட்டிவைக்கமுடியாது”என்று சத்தமாகப் பேசிய குரல் வந்த திசையில் எல்லோரும் அதிர்ச்சியில் பார்த்தனர்.

அவர்குரலா? என்று மகேஷ்வரியும் சந்தோசத்திலும், ஐய்யோ இது அவர் குரலாஆஆஆஆ?என்று நல்லபெருமாளும் அதிர்ச்சியிலும் திரும்பிப் பார்த்தனர்.

 அந்த குரலுக்கு சொந்தக்காரர் யார்?