ரணம்1
Ra1

1 ரண ரணமாய்!!
வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே கதையின் ரெண்டாம் பாகம்
சென்னை புறநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது... பலவிதமான நோயாளிகளின் சத்தமும் ஸ்ட்ரக்சர் இழுபடும் ஓசையும் மருந்தின் வாடையும் , குருதியின் நாற்றமும் குழந்தைகளின் அழுகுரலும் என்று யாரையும் யாரும் கவனிக்க முடியாத நிலையில் அந்த மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்க ..
வரவேற்பு அறையில் ஏகப்பட்ட புறநோயாளிகள் உட்கார்ந்து இருந்தனர்.. அந்தந்த ஸ்பெஷலிஸ்ட் மருத்துவர்களை பார்ப்பதற்காக காலையிலேயே துண்டு போட்டு அமர்ந்தாயிற்று ..
அதன் இறுதி இருக்கையில் ஒரு பெண் முகத்திற்கு சேலை முந்தானையை போட்டு மூடிக்கொண்டு இருக்கையில் அமர்ந்தபடியே தூங்கிக் கொண்டிருந்தாள்...
மருத்துவர்கள் ஒவ்வொருவராக உள்ளே வந்து அவர்கள் அவர்கள் அறைக்கு போக, புற நோயாளிகளும் தங்கள் நோய்களுக்கான மருத்துவரை பார்க்க ஒவ்வொருவராக செல்ல ஆரம்பித்தனர்..
மாருதி அல்டோ கார் ஒன்று மருத்துவமனை வாசலில் வந்தது நின்றது....
எல்லோ ஹீரோக்களும் போல ஆடி , அமாவாசை கார்களில் தான் ஹீரோ அறிமுகம் ஆக வேண்டுமா என்ன? மாருதி காரில் வந்தா அவன் ஹீரோ இல்லையா, சட்டதிட்டத்தை மாற்றி அமைக்கும் வகையில் நாயகன் அவன், மாருதி காரில் வந்து மருத்துவமனை வாசலில் காரை நிப்பாட்டினான்..
"சார் எத்தனையோ தடவை சொல்லிட்டேன் , இந்த காரை மாத்துங்கன்னு, வழக்கம்போல இன்னைக்கும் கார் இடைவெளியில நின்னுடுச்சா என்று கம்பவுண்டர் சிரிக்க....
"ஹாஹா ம்ம் என்று அழகான தெத்து பல் தெரிய சிரித்தான் அவன் ...
சிடுசிடு மருத்துவர் அவர் , டாக்டர்பா அவர் .. நாம கம்பவுண்டர் பக்கத்துல போக முடியுமா என்ற சமநிலை இல்லாத மருத்துவமனையில் .... இந்த சார் எல்லாரையும் ஒன்று போலதான் பாப்பார் அவர்கிட்ட தைரியமா பேசலாம் என்று ஒருவன் உண்டங்கில் அது இதோ இவன்தான்...
மாதவன் !! வயது முன் முப்பது
(வேள்வி தீயில் வெந்து தணியும் காதலே செகண்ட் ஹீரோ)
மனிதனை மனிதனாக பார்க்கக்கூடிய மருத்துவர்.. மனிதநேயத்தை மட்டுமே தன் கழுத்தில் அணிந்திருக்கும் மருத்துவர்... ரத்தத்திற்கு மதிப்பு கொடுக்கும் வெள்ளை ஆடைக்கு சொந்தக்காரன் மனிதர்களின் வேதனையை புரிந்து கொள்ளக்கூடிய ஒருவன்.... கடவுளுக்கு அடுத்தபடியாக மருத்துவரை வைக்கிறார்கள் என்றால் இவனை கண்டிப்பாக அந்த இடத்தில் வைக்க தகுதியானவன்தான்..
மருத்துவனாக மனிதனாக அத்தனை பேர் மனதிலும் முழு இடம் பிடித்த ஒரு மருத்துவன் அவன்...
என்ன மாதவன் சார் எதைக் கேட்டாலும் அழகா சிரிக்க மட்டும் செய்யுங்க .. என்ன சார் வண்டி பஞ்சரா ?"
"இன்னைக்கு பஞ்சர் இல்ல , ஸ்டீயரீங் இடைவெளியிலேயே ஸ்ட்ரக் ஆகி நின்னுடுச்சு அதான் மெக்கானிக்க வரச்சொல்லி பாத்துட்டு வரதுக்கு லேட்டாயிடுச்சு .. கூட்டம் ஜாஸ்தியா இருக்கோ... "என்று மாதவன் , வெள்ளை கோர்ட் எடுத்து அணிந்து கொண்டே, ஸ்டெதஸ்கோப்பையும் கழுத்தில் மாட்டினான் ...
அவன் ஆஹா ஓஹோ சிக்ஸ் பேக் , செவன் பேக் என்று அடித்து விட விரும்ப வில்லை... கட்டுமஸ்தான உடல் இதெல்லாம் இல்லாத... நார்மலான ஒருவன் .... அந்த வயதிற்குரிய உடல்வாகு .. முகத்தில் எப்போதும் இருக்கும் அழகிய புன்னகை ...கோபமே வராத ஒருவன்.... மருத்துவத் தொழிலை விரும்பி செய்யவில்லை , தன் காதலியாக நேசித்து செய்கிறான்.. அவன் முதல் காதலி இறுதி காதலி எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்... இந்த உலகில் அவன் மிகவும் நேசிக்கும் ஒன்று இந்த மருத்துவத்தொழில் என்று சொன்னால் அவன் மண்டை மேலே போட்டு விடுவான்.. அவன் உயிர் என்று கூடசொல்லலாம் பிறருக்காக ஒரு வாழ்க்கை வாழும் பாக்கியத்தை இந்த மருத்துவ அவதாரம் அவனுக்கு கொடுத்து இருக்கிறது... அதில் முழு நிம்மதி!! அப்படியே வாழ்ந்து கொண்டிருக்கிறான்
நான்கு பேர் நம்மால் வாழ்கிறார்கள் என்றால் அதைவிட இந்த உலகத்தில் பெரிதாக எதை சாதித்த விட முடியும் என்ற எண்ணம் கொண்டவன்
" ஐயா "என்று ஒரு பெண்மணி அவனை பார்த்ததும் ஓடி வர
"என்ன அக்கா உங்க மாப்பிள்ளை நல்லா இருக்காரா... போன வாட்டி காலில் புண்ணுன்னு கூட்டிட்டு வந்து இருந்தீங்க
"ஆமா ஐயா, நல்லா தானே இருந்தார்.. எங்க போயி விழுந்தாரோ தெரியல .. மறுபடியும் புண்ணாகி போச்சு.. பெரிய மருத்துவமனைக்கு கூட்டிட்டு போனா விரலை எடுக்கணும்னு சொல்றாங்கய்யா அதான் உங்க ஞாபகம் வந்தது.. ஆயிரம் ரூபாய் ஆனாலும் பரவாயில்லைன்னு வண்டி புடிச்சு உங்ககிட்டயே கூட்டிட்டு வந்துட்டேன், கொஞ்சம் என்ன ஏதுன்னு பாருங்கய்யா... அவர் உழைச்சா தான் எங்களுக்கு சாப்பாடு , கால எதையாவது எடுத்து விட்டுட்டாங்கன்னா எங்க குடும்பமே நடுத்தெருவில நிக்கும்யா, இந்த காலத்துல எந்த டாக்டரையும் நம்பி போக கூஎ முடியல .. பணத்துக்காக உசுர கூட அவங்களே எடுத்துடுவாங்க போல இருக்கு" என்று புலம்பிக்கொண்டே அப்பெண் அவன் பின்னால் போக...
துரிதமாக உள்ளே போன மாதவன் அந்த நபரை முழுவதுமாக செக் செய்துவிட்டு
"சுகர்ல புண்ணு ஆறாம இருக்குது என்று யோசனையாக பார்த்தவன்..
"நீங்க மாதவன் சார் சொன்னாருன்னு வரவேற்பு அறையில ரூம் கேளுங்க, ரூம் தருவாங்க பத்து நாள் புண் ஆற வச்சு கூட்டிட்டு போங்க ... அப்படியும் ஆறலைன்னா அதுக்கு பிறகு பார்த்துக்கலாம்..
"சரிய்யா என்றவன் காலை அந்த பெண்மணி பிடித்துக்கொண்டார்...
"தெய்வமே எங்க நெஞ்சில பாலை வார்த்தீங்க
"ஐயோ என்னம்மா நான் சாதாரண டாக்டர் அப்படி சொல்லாதீங்க
"இப்போ மனிதநேயத்தோடு எத்தனை பேர் இருக்காங்க சொல்லுங்க , வந்தவனை விட கூடாதுன்னு கிட்னி மொதக்கொண்டு புடுங்கிட்டு விடத் தான் அலையறாங்க.. உங்கள போல ஒன்னு இரண்டு பேர் தான் மனிதாபிமானத்தை தூக்கி சுமக்குறீங்க.. ரொம்ப நன்றி ஐயா.. நான் நீங்க சொன்னதா ரூம் கேட்டு உள்ள தங்கிக்கிறேன்" என்று போக..
மாதவன் தன் இருக்கையில் போய் அமர்ந்தவன்... உள்ளே வரும் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் தன்னால் இயன்ற சேவையை மறுக்காமல் செய்தான்
முடியவில்லை என்றால் நாசுக்காக இது முடியாது உசுர காப்பாத்த முடியாது என்று பக்குவமாக சொல்லி அவர்களை தேற்றி விடுவான்...
முடியும் என்றால் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் சென்று காப்பாற்றி விடுவான்.. அதனால் இந்த மருத்துவமனையில் மாதவன் என்றால் மதிப்பு மரியாதை, அன்பு அத்தனையும் உண்டு
"நெக்ஸ்ட் :என்று மாதவன் பெல்லை அழுத்த இருக்கையில் கண் மூடி படுத்து இருந்த அப்பெண்ணை நர்ஸ் வந்து தட்டி எழுப்பி
"அக்கா சார் கூப்பிடுகிறார் உள்ள போங்க" என்றதும் முகத்தில் மூடி இருந்த சேலையை நகட்டினாள் ... பார்வையா அவை?! கலங்கிய ரதத கணகள் தூக்கத்தை தொலைத்து பல வருடம் இருக்கலாம்.... அவள் முக வசீகர அழகை காண அவள் முகத்தில் இடம் இல்லை ..
முகம் முழுவதும் காயங்கள், கழுத்து கை எல்லா இடமும் நகம் பிராண்டி வைத்த தடங்கள்,
"டாக்டர் சார் வந்துடாரா ?
"ஆமாக்கா போங்க
"ம்ம் என்று அழகாக புன்னகை செய்தவள்
"அப்படியே கண்ணை அசந்துட்டேன், ராத்திரி முழுக்க வேலை .. டாக்டர் சார் வர லேட் ஆகும்னு சொன்னாங்களா, அதான் சேர்லையே தலையை சாச்சுட்டேன் மது நெடி லைட்டாக அவள் மீது வந்தது நர்ஸ் முகத்தை சுளித்து கொண்டு
"சரி சரி உள்ள போங்க நீங்கதான் கடைசி ஆள்.. சார் அதுக்கு பிறகு ஆபரேஷன் தியேட்டர் போய்விடுவார்" என்றதும் சரி என்று தலையாட்டி அப்பெண் வேகமாக மாதவன் அறைக்கு வெளியே நின்று
டாக்டர் சார் வரட்டுங்களா? என்ற குரலில் முந்தைய பைலை செக் செய்து கொண்டிருந்த மாதவன் தலையை தூக்கி பார்த்து வாங்க என்னும் விதமாய் கையசைக்க.. அப்பெண் உள்ளே வந்தாள்..
"வணக்கம் டாக்டர் சார்
"வணக்கம் ம்மா இங்க வந்து உட்காருங்க," என்று மாதவன் தன் அருகே இருந்த இருக்கையை கை காட்ட
"இல்லை சார் நான் நிற்கிறேன்..
"நான் நின்னுகிட்டு இருக்க ஆள்கிட்ட எல்லாம் பேச மாட்டேன், உட்காருங்க என்றதும் மெல்லிய புன்னகையை அப்பெண் கொடுத்து விட்டு அவன் இருக்கை அருகே அமர்ந்திட
"என்ன முகம் எல்லாம் காயம் , எங்க விழுந்தீங்க? என்று அவள் முகம் கழுத்து எல்லா இடமும் இருந்த காயத்தை டார்ச் லைட் வைத்து அடித்து பார்த்துக் கொண்டே கேட்க
"ராத்திரி ஒரு சின்ன விபத்தாகி போச்சிய்யா"
"விபத்தா ??என்றான் நகக்கீரலை கண்களை சுருக்கி பார்த்துக் கொண்டே
"ஆமாய்யா வேலை செய்ற இடத்தில கொஞ்சம் சேதமாகி போச்சு
" என்ன வேலை செய்றீங்க?? என்றவன் இன்ஜெக்ஷனில் மருந்தை நிரப்பிக் கொண்டே கேட்க
"விபச்சாரம் "என்று அப்பெண் கூச்சமே இல்லாது கூற .. மருந்தை ஏற்றுக் கொண்டிருந்த மாதவன் கைகள் ஒரு நிமிடம் நின்று, மீண்டும் அதை ஏற்றுக் கொண்டே
"ஓ என்றான்..
"என்ன சார் நான் விபச்சாரம் பண்றேன்னு சொல்றேன்.. நீங்க எதுவுமே சொல்லாம உங்க வேலைய பாக்குறீங்க ..
"என்ன வேலைன்னு கேட்டேன், நீங்க உங்க வேலைய சொன்னீங்க அவ்வளவுதான் இதுல வேற என்ன கேட்க சொல்றீங்க ?
"இல்ல இந்த இடத்தில் வேற யாராவது இருந்திருந்தல் என்னை அருவருப்பா பார்த்திருப்பாங்க இல்ல வெளியே போன்னு சொல்லி இருப்பாங்க .. நீங்க எதுவுமே சொல்லலையே அதான் என்று அப்பெண் அவனை பார்க்க ..
"அது உங்களோட தனிப்பட்ட விஷயம் .. அத பேசுறதுக்கு நான் யாரு சொல்லுங்க...
சரி என்ன ஆச்சு பக்கத்துல நெருங்கி வாங்க, ஊசி போட்டுரலாம்.. பல்லு தடம் நகத்தடம் எல்லாம் இருக்கு செப்டிக் ஆயிடும்" என்று ஊசியை அவள் கையில் அழுத்திக் கொண்டே மாதவன் அவளிடம் பேச
எவனோ கஞ்சா குடிக்கி போல இருக்கு.. ஆயிரம் ரூபாய் தந்துட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு கசக்கி எடுத்துட்டு போயிட்டான் டாக்டர் சார் , வலிக்குதுன்னு கத்துனாலும் விடவா செய்றானுக போகும்போது நானும் ரெண்டு கடி கடிச்சு தான் விட்டேன் நாயி பயல.. நாய் மாதிரி நக்கிட்டு போயிட்டான் வலி உயிர் போகுது இன்னைக்கு ராத்திரி தொழிலுக்கு போக வேண்டாமா? வலி தெரியாம இருக்கு கட்டிங் போட்டேன் அப்படியும் வலிக்குது , இந்த வலியோட எங்கன தொழிலுக்கு போக, அதான் ரெண்டு ஊசி போட்டுட்டு போனா ,வலி குறையுமேன்னு வந்தேன் .. என்று வலித்த உடலை தடவி கொண்டே அவள் கூற ..
"ம்ம் ஊசி போட்டிருக்கேன், வலி இருக்காது ..
"ரொம்ப நன்றி டாக்டர் சார் , மாத்திரை ஏதாவது கொடுங்க... உள்ளெல்லாம் காய்ச்சல் வந்த மாதிரி வலிக்குது என்று உடலை நெளித்துக் கொண்டு எழும்பி நின்ற அப்பெண்ணை தலையை தூக்கிப் பார்த்தவன்
"பேர் என்ன? அவள் சற்று யோசிக்க
"உலக மேப்ல பங்களாதேஷ் கேட்ட மாதிரி முழிக்கிறீங்க உன் பேர் தானம்மா கேட்டேன்
"அதான் சார் யோசிக்கிறேன்,விபச்சாரி வேசி அவுசாரின்னு சொல்லியே பல வருசம் பழக்க படுத்திட்டாங்களா பேர் மறந்து போச்சு..
"நல்லா பேசுற ,பேரை சொல்லு
"காய்வா
"காவ்யா" என்றதும் பேரை எழுதப்போனவன் கை தடுமாறி மீண்டும் காவ்யா என்ற பெயரை எழுதியது ..
வயசு 23 டாக்டர் சார்..
என்ன பண்றீங்க இடத்துல என்ன போடட்டும்"
சும்மா விபச்சாரம்னே போடுங்க சார் அவள் சொன்னது போலவே செய்து கையெழுத்து போட்டு..
"இதை கொடுத்து மாத்திரைம் வாங்கிக்கோங்க வலி சரியாலேன்னா , நாளைக்கு ஒரு தடவை வந்து ஊசி போட்டுக்கோங்க..
ம்ம் இரண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா வலி போகும் ...ஆனா எங்க எடுக்க விடுவாங்க? இன்னைக்கும் எவனாவது வருவானே... வந்து என்னென்ன பாடுபடுத்த போறானோ என்று அந்த மருந்து சீட்டை தன் ஜாக்கெட்டுக்குள் திணித்துக் கொண்டு போனாள் காவ்யா..
காவ்யா என்ற பெயரே அவனை ஏதோ ரணம் செய்தது ...
பின்னே அவன் இறந்த மனைவி பெயரும் காவ்யாதானே... அவளையும் முதல் முதலாக பார்த்தது தாய்லாந்து விபச்சார விடுதியில் தானே புண்ணியவதி வாழ முடியாது செத்தே போனாளே
ஏனோ, இப்பெண்ணை பார்த்த பொழுது அவன் மனைவி காவ்யா நியாபகம் வருவதை அவனால் தடை செயய முடியவில்லை ....
கோலமாக வரைய வேண்டிய பெண்ணின் வாழ்க்கை அலங்கோலமாக வரையப்பட்டது யார் செய்த குற்றமோ??
தோட்டத்தில் வண்ண வண்ண ரோஜாக்கள் வாசனையாய் பல பூத்திருக்க ..இவள் வாசமில்லா மலர் ... எல்லா பூக்களும் மலர் மாலையாக காத்திருக்க, இவள் மட்டும் கல்லறை மீது போடப்பட்ட கருகிய மாலையில் கோர்க்கப்பட்ட கருப்பு ரோஜா !!!
ரணம் ரணமாய் ஒருத்தி!!
நாளை இரவு இந்ந எபி எடுப்பன்