அகநக நேசமே4
Aga4

4 அகநக நேசமே!!
தேங்க்ஸ் செள்தரி நான் கூப்பிட்டதும் வந்ததுக்கு என்று யாமினி அவன் தோளோடு சாய்ந்து கொண்டாள்....
மெல்லிய ஆடை அங்கம் அத்தனையும் வெளிச்சம் போட்டு காட்டியது ... எதாவது இவன் சொன்னா தர்க்கம் பண்ணி நான் சரி , உன் கண்ணு தப்புன்னு முடிச்சிடுவா... எதுக்கு வம்பு அமைதியாக நின்றான்.. இவள் ஆடை சுதந்திரத்தில் தலையிட நான் யார் என்ற புரிதல் தெரிந்தவன்தான், காலை நைட்டி மீது ஷால் போடாது வெளியே காய்கறி வாங்கி கொண்டு நின்ற வர்ணா கையை கிள்ளி
"ஷாலை எங்கடி
"அவசரமா வந்ததுல மறந்துட்டேன்
"போய் போட்டுட்டு வா
"உள்ளே போய் போட்டுட்டு வர்றதுக்குள்ள காய்கறி கழிஞ்சிடும் சார் "
பெரிய பட்ஜெட் தாக்குதல் கொண்டா, நாலு தக்காளி, ஏழு மிளகாய்தான நான் வாங்கி வைக்கிறேன்,என்று கூடையை புடுங்கி யூனிபார்மில் நின்று காய்கறி பொறுக்கியவனை அத்தனை பேரும் வாயை பிளந்து பார்த்தனர்
புது தெரு இவர்கள் தம்பதிகள் என்றே நினைத்து விடும் அளவு இருவர் அந்நியோனியம் இருந்தது... அவள் ஷால் போட்டு குட்டி அழகை மறைத்த பிறகு தான் நிம்மதியாக நகர்ந்தான் ..
"என் ட்ரெஸ் நல்லா இருக்கா செளத்ரி இந்த பார்டிக்காக பேங்காங்ல இருந்து வர வச்சேன் யாமினி கண்ணை சிமிட்டிட
"ஓஓஓ நைஸ் எங்க வீட்டு இட்லி துணி கூட இதை விட பெருசா இருக்கும் "
"என்ன செளத்ரி சொன்னீங்க ?
"ஹிஹி அழகோ அழகுன்னு சொன்னேன் பார்க்க டால் மாதிரி டால் அடிக்கிற..
"ம்ம் பட், என்ன சர்ட் இது , சுமாரா இருக்கு எத்தனை தடவை சொன்னேன் ரிச்சா வாங்கன்னு ...
"அது
விடுங்க , நல்ல நேரத்துல சண்டை போடாதீங்க.. அப்புறம் கொஞ்சம் டீசண்டா பிஹேவ் பண்ணுங்க.. இங்க உள்ளவங்க எல்லாரும் ரொம்ப ரிச்சான பீப்பிள்ஸ்.. அதோ அவ ஜட்ஜ் பொண்ணு, அங்க நிக்கிறானே அவன் கவர்னரோட பையன்...
"கஞ்சா கேஸ்க மாதிரி இருக்கானுக இவனுக கூட இவளுக்கு என்ன பழக்கம் ஸ்ப்பா" என்று மண்டை காய்ந்தான்..
"ஏற்கனவே எப்படி உங்க அப்பா டிஎஸ்பிக்கு உன்னை கல்யாணம் கட்டிக் கொடுக்குறதுக்கு சம்மதிச்சாருன்னு கேட்டு கலாய்ச்சு ஓட்டுறாங்க... நான்தான் எனக்கு பிடிச்சு இருக்குன்னு சமாளிச்சு வச்சிருக்கேன்" என்று அவனை குத்தலாக பேசும் யாமியை தலையை கோதிக் கொண்டே சிரித்த மேனியாக பார்க்க செளதிரி பெரும்பாடு பட்டான்.
இதே இடத்தில் வேறு எவளாவது இருந்திருந்தா, கையாலேயே ஒவ்வொரு முடியாக பிய்த்து எடுத்து விடுவான்.. மாட்டி இருப்பது எலி கூண்டுக்குள் அவன் வாயை திறந்தால் வால் மட்டும் போகாது எல்லாம் சேர்ந்து போய்விடும் என்று தன்னுடைய வாயை பொத்திக்கொண்டு நிற்க வேண்டியதாய் இருந்தது
இதே வார்த்தைகளை தான் வர்ணாவை பேசி விட்டு வந்தான். இவனைப் பேசும் பொழுது மட்டும் பொத்துக் கொண்டு வந்தது
அவனை அத்தனை பேருக்கும் அறிமுகம் செய்துவிட்டு பார்ட்டி தொடங்கியது.. எதிலும் ஒட்ட முடியவில்லை .. அவன் ஆக்கத்துக்கு ஒரு நண்பன் சேர மாட்டான் எனவே எப்போதும் சோலோவாதான் சுத்துவான் அவனை சமாளிக்க ஒருத்தியால் முடியும் என்றால் அது வர்ணாதான்...
"வந்து ஜாயின் பண்ணுங்க சௌதிரி ,ஏன் அப்படியே உக்காந்துட்டீங்க.."
"இல்ல எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை இதுதான் ஃபர்ஸ்ட் டைம் "
"அதுக்காக இப்படியே ஒதுக்கி உட்காருவீங்களா ஜோவியலா இருக்க பழகுங்க செளத்ரி, பாருங்க எல்லாரும் உங்களை ஒரு மாதிரி பாக்குறாங்க கமான் "என்று அவனை இழுத்துக்கொண்டு போய் சிறிது நேரம் இருவரும் ஆட... இவனுக்கு இவர்கள் கொண்டாட்டம் எதுவும் லயிக்கவில்லை ..
"யாமி கொஞ்சம் தலை வலிக்கிற மாதிரி இருக்கு யூ கேரி ஆன்" என்று சொல்லிவிட்டு மேஜையில் வந்து அமர்ந்து விட்டான்...
அவள் தன் ஆண் நண்பர்களோடு சேர்ந்து ஆட இவனுக்கு தலையில் சுறுசுறுவென்று ஏதோ ஏறியது .. இதுக்கு மேல முடியாது வேகமாக எழும்பி வந்து யாமினியின் கையை நாசுக்காக இழுத்துக் கொண்டு தனியே வந்தவன்
"என்ன யாமினி ப்ரெண்டா இருந்தாலும் இப்படி கூட்டத்தில எல்லை மீதி சேர்ந்து ஆடுறது எல்லாம் நல்லாவா இருக்கு"
"ஓஓஓ ப்ரெண்ட் கூட ஒரே வீட்ல ஒன்னா இருந்தா தப்பில்லை உரிமையா அவ உங்க ரூம் உள்ள வர வர்றது தப்பு இல்லை "
அது
"அதுக்கு எல்லாம் நான் உங்களை எதுவும் சொல்லலையே செளத்ரி, நான் சொன்னா கூட நீங்க கேட்கிற மூட்ல இல்லையே.. பின்ன என்ன மட்டும் அதை செய்யாத, இத செய்யாதன்னு சொல்றதுக்கு நீங்க யாரு ? என்று அவள் போட்ட பந்தில் இவன் திணறிப் போய் நிற்க வேண்டியதாகி விட்டது ..
அப்பா உங்கள சொன்னதும் ஓகே சொன்னதுக்கு காரணம் என் இஷ்டம் போல நீங்க என்னை இருக்க விடுவீங்கிங்கிற காரணத்துக்காகதான் .. படிக்காதவர் மாதிரி பேசாதீங்க , அவங்க என்னோட பாய் பெஸ்டி, அது என்னோட பெஸ்ட் பிரெண்ட் அவங்க கூட டான்ஸ் ஆடுறது தப்புன்னு சொல்றீங்களா?
நான் எதுவுமே சொல்லல, போய் ஆடு போ என்றுவிட்டு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டான்
மணி ஆனது ஆனது ஆகிக்கொண்டே இருந்தது ஒத்தையில் உட்கார வைத்து விட்டு வந்த வர்ணா ஞாபகம் வேறு அடிக்கடி அவனை மண்டை வலி வர வைத்தது..
"எலும்புக்கூடை , தனியா உக்கார வச்சுட்டு வந்து இருக்கோமே யாராவது அவகிட்ட வம்பு இழுப்பாங்களோ, என்ன நடந்தாலும் சமாளிச்சுடுவா எதுக்கும் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துருவோமா?? என்று செவுத்ரி எழும்ப ... அவன் முன் சிறு சிறு கிளாஸ் வைக்க பட்டது வெளிநாட்டு மதுபானங்கள் அவை ...
இதுவும் பார்ட்டியா?? சற்று அதிர்ச்சியாக யாமினியை பார்க்க ...
"இப்போ இதுக்கும் சட்டம் பேசுவீங்களே, பொண்ணு குடிக்க கூடாதுன்னு
"யாமி நீ குடிப்பியா..
"போச்சுடா ஒன்னு ஒன்னுக்கும் உங்களுக்கும் விளக்கம் சொல்லி உங்க கூட குடும்பம் நடத்துறதுக்குள்ள நான் கெளவி ஆகிடுவேன் போலிருக்கு.... எப்பவாவது குடிப்பேன் அதுவும் லிமிட்டா அவ்வளவுதான், இது போதை எல்லாம் வராது என்று அவள் இலகுவாக ஒரு கிளாஸ் எடுத்துக்கொண்டு அவன் முன்னே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தாள
"நீங்களும் குடிங்க சௌத்திரி
"இல்ல எனக்கு இதெல்லாம் ஒத்துக்காது ..
"அது சரி 110 ரூபாய் பீர் பாட்டில் குடிச்சே பழக்கப்பட்டிருப்பீங்க ... இது எல்லாம் ஒத்துக்காதுதான் .. அப்பறம் சொல்ல மறந்துட்டேன் இன்னைக்கு பார்ட்டி செலவு நீங்க தான்.. நீங்க தான் பில் கட்ட போறீங்க.. சோ தாராளமா குடிங்க யாரும் கணக்கு கேட்க மாட்டாங்க "
"எது நான் பில் கட்டணுமா மனசுக்கு பதறினான்
"காசு வச்சிருக்கீங்களா??
"ம்ம் நாலாபுறமும் தலையாட்டி விட்டு ஒரு கிளாஸை எடுத்து மோர்ந்து பார்த்தான் வேண்டாம் என்று மேஜையில் வைக்கப் போக.. அதை யாமினி வைக்க விடாது தடுத்து அவன் கையில் உள்ள கிளாஸை பிடித்து தன வாயில் வைத்துக் கொண்டவள், தன்னுடைய கிளாஸை அவன் வாயில் வைத்து குடிங்க என்று சட்டம் போட
"இல்லை எனக்கு இந்த வாடை ப்டிக்கல , நீயே குடி ..அவள பார்வை அவனை அழுத்தமாகப் பார்க்க.. செளத்ரி வேறு வழி இல்லாமல் மடக் மடக் என்று குடித்து விட்டான்
பார்ட்டி முடிந்து பில் அவன் கைக்கு வந்தது ... ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பார்த்தவன் உயிரோடு இருந்திருப்பானா என்ன ?சூனாபானா மயங்கியே விட்டான் ..
என்னது ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயா? யாமி பில் ஏதோ மாறி வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்..
"நீங்க குடிச்சீங்களே அந்த ஒரு கிளாஸ் சரக்கோட விலை என்ன தெரியுமா செளத்ரி, பத்தாயிரம் ரூபாய் , இந்த மாதிரி சில்லி தனமா பேசாதீங்கன்னு உங்களுக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன்.. என் பிரெண்ட்ஸ் எல்லாம் இத கேட்டாங்கன்னா எனக்கு மானம் போயிடும் எதுக்கு எடுத்தாலும் கணக்கு பாக்குறது..
நான் எதுவும் சொல்லலை உட்கார் பில் கட்டிட்டு வர்றேன் "
"இது என் பேபி என்று அவள் உதட்டை குவித்து அவன் உதடு பக்கம் வர, சட்டென முகத்தை தள்ளி கொண்டவனை அவள் கேள்வியாக பார்க்க ...
"ப்ளீஸ் இன்னொரு நாள்"
"ப்ச் ஓகே ஐ லவ் யூ
"லவ் யூ என்று கடமையாக கூறி விட்டு விலகி வந்த செளதிரி
"புது ஜட்டி வாங்கினா காசு ஆகும்னு எலும்புகூடு வச்சி நாலு தடவை தைச்சி போட்டு ஒப்பேத்துவேன் இப்படி எவனோ குடிச்ச சரக்குக்கு காசு கொடுக்கிற நிலமை ஆகி போச்சே ,யாரோ கூடவே இருந்து சூனியம் சுடசுட வைக்கிற மாதிரியே பீல் ஆகுது என்று புலம்பி கொண்டே தன் ஏடிஎம் கார்டில் உள்ள பணத்தை பார்த்தான்.
"எப்படி பார்த்தாலும் இருபதாயிரம் ரூபாய் இடித்தது யோசனையாக நாடியை சொரிந்தவன் வேகமாக வர்ணா இருக்கும் இடம் நோக்கி வந்தான்..
அவனுக்கு காத்திருந்து காத்திருந்து சோர்ந்து போனவள் மேஜையில் தலைக்கவுந்து படுத்து தூங்கிக் கொண்டிருக்க ... அவள் கழுத்தில் கிடந்த செயினை யோசனையாக பார்த்தவன் , சட்டென்று அதில் கை வைக்க போக..
ஏய் எவன்டா அவன் என்று வர்ணா வேகமாக பதறி எழும்பியவள் அவனைப் பார்த்ததும்
"அப்பாடா நீங்களா சார் , சொல்லிட்டு தொடக்கூடாதா பயந்துட்டேன்...
"ப்ச் செயினை கழட்டி கொடு..
"என்னாச்சு சார்
"பில் ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் வந்து இருக்கு 20 ஆயிரம் ரூபா கம்மியா இருக்கு , இத கொடுத்து தான் சமாளிக்கணும்
"எது ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு பார்ட்டியா?நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா சார்
"ப்ச் , நானே கடுப்புல இருக்கேன் ஏதாவது பேசி வாங்கி கட்டிடாத செயினை கழட்டி கொடுடி..
"சார் இது உங்க அம்மாவோட செயின்.. எதுக்காகவும் இதை அடகு வைக்க மாட்டீங்களே...
"அந்த மயிர் எல்லாம் எனக்கு தெரியும் இப்போ வேற வழி இல்ல ..
"அம்மாவோட செயினை போய் எங்கேயோ வைக்க போறேன்னு நிக்கிறீங்களே இருங்க என்று வர்ணா தன் ஹேண்ட் பேக்கை திறந்து அவன் கொடுத்த சம்பளப் பணத்தை அப்படியே அவன் கையில் கொடுத்தவள் ...
"இந்தாங்க இது போதுமான்னு பாருங்க.. அதை உரிமையாக வாங்கி எண்ணி சரி செய்தவன் அவள் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டு
"தேங்க்ஸ்டி இதுக்கு தான் நீ வேணும்னு சொல்றது சீக்கிரம் பில் கட்டிட்டு வரேன் ஓடிடலாம்..
"ஏன் ஒரு மாதிரி தடுமாறுறீங்க
"அதை ஏன் கேட்குற , ஏதோ சரக்கு தந்தாங்க தலையெல்லாம் சுத்திக்கிட்டு ஒரு மாதிரி வருது
"அய்யய்யோ என்ன சார் குடிச்சீங்க , உங்களுக்கு பீர் தவிர வேற ஒன்னும் ஒத்துக்காதே
"சொன்னா யாரு கேக்குறா என்னத்த குடிச்சேன்னு தெரியல சீக்கிரம் வீடு போய் சேரனும் என்று தள்ளாடிக்கொண்டே ஓடியவன் விட்டால் போதுமடா சாமி என்று வீட்டில் வந்து குதங்கி போய் விழுந்தான்
குடித்தது ஒத்துக்கொள்ளாமல் குடம் குடமாக வாந்தி எடுத்து தள்ளினான்.. ரகுராம் மகனை முறைத்து பார்த்துக் கொண்டு நிற்க
"ரகுடேடி நீங்க போய் தூங்குங்க நான் சாரை பாத்துக்குறேன்
"செய்றது எல்லாம் அவன், பாடு எல்லாம் உனக்காக இனி ராத்திரி முழுக்க நீ முழிச்சு உட்கார்ந்து இவன பாக்கணும்னு உனக்கு தலையில எழுதி இருக்கா...
"வேற என்ன செய்ய சார் என்னத்த குடிச்சாரோ தெரியல என்ன நகர விட மாட்டார் அவள் கையை பிடித்து கொண்டு கிடந்தான்..
"ஒரு குடிகாரனை கட்டி இருந்தா கூட, நீ நிம்மதியா இருந்திருப்பம்மா, இவன் கூட வந்து குப்பை கொட்டடனும்னு.. உனக்கு என்ன அவசியம்.. சொன்னா நீயும் கேட்காத, அவன் உன்ன இப்படி எல்லாம் பயன்படுத்துவதற்கு காரணம் நீ தான்... நீ இடம் கொடுக்குற அவன் ஏறி மிதிக்கிறான் என்னவோ போங்க என்று ரகுராம் இருவரையும் திட்டி விட்டுப் போக ..
முடியலடி என்று செளத்ரி சோபாவில் உட்கார்ந்து இருந்த அவள் மடிக்குள் பூனை போல வந்து தலையை வைத்தான்...
ரகுராம் தலையை திருப்பி தன் மகனைப் பார்த்தார்
அவன் தாயின் மடியில் இப்படித்தான் உடல்நிலை சரியில்லை என்றால் சுருண்டு படுத்துக் கொண்டு தலையை கோதி விடு என்று தாயின் விரலை எடுத்து தலையில் கொடுத்து சொகுசாக படுத்துக் கொண்டு இருப்பான்... இன்றும் அதேபோல காட்சி தான்... அன்று தாய் இன்று இவள் !!
தாயின் அன்பை தாரத்திடம் தான் எதிர்பார்க்க முடியும் அப்படி என்றால் அவள் தாரமோ??