அகநக நேசமே3

Aga3

அகநக நேசமே3

3 அகநக நேசமே !! 

"ஐயோ பாத்திரம் கழுவவிடாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க சார்"

"சீக்கிரம் கிளம்பு" கிச்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டு நின்றவள் முதுகில் கை வைத்து தள்ளிக்கொண்டு ஹாலுக்குள் வந்தான் செவுத்ரி 

"சார் சிங் முழுதும் பாத்திரம் கிடக்கு இப்போ விளக்குனாதான் 11:00 மணிக்காவது தூங்க முடியும்.. ஏன் இப்படி உயிரை எடுக்குறீங்க?? 

"நான் உன் உயிரை எடுக்கிறேனா, நீ தாண்டி என் உயிரை எடுக்கிற ,ஒரு தடவை சொல்லி என்னைக்காவது கேட்டு இருக்கியா "

"ஏதாவது கேட்கிற மாதிரி ஒன்னு நீங்க சொல்லி இருக்கீங்களா? ராத்திரி பத்து ஆகுது வந்து பார்ட்டிக்கு போகணும் கிளம்புடின்னு கூப்பிட்டா என்ன அர்த்தம்..."

"நீ வரணும்னு அர்த்தம் "

"நீங்க பேச்சுலர் பார்ட்டிக்கு உங்க ஜோடியோட போக போறீங்க.. அங்க நான் வந்து என்ன பண்ணனும்னு சொல்றீங்க ... நீங்க குடிச்சிட்டு வெச்ச காப்பிய பாதி விலைக்கு விக்க சொல்றீங்களா 

"ஏதோ பண்ணு எனக்கு துணைக்கு ஆள் வேணும் கிளம்பு "

"டேய் அவதான் வரலைன்னு சொல்றால்ல விடு .. ஏன் அன்னைக்கு சாப்பாட்டுக்கு வந்த மகராணி அவளுக்கு முறை வாசல் செஞ்சுட்டு போனது போதாதா இன்னும் அத்தனை பேர் முன்னாடி வர்ணாவை ஏதாவது செய்யணுமா..ரகுராம் வந்து வர்ணாவுக்கு துணை நிற்க.. 

"அப்படி சொல்லுங்க ரகுடேடி யூ ஆர் சோ ஸ்வீட் என்று வர்ணா ரகுராம் வெள்ளை மீசையை முறுக்கி விளையாட அவள் கையில் ஒரு அடி போட்ட செளத்ரி ... 

"கிளம்பு நேரம் ஆகுது 

"இங்க பாருடா, அவ உனக்கு தான் வருங்கால பொண்டாட்டி என் மக மேல கை வைக்கிறது இல்ல அவளை அவமரியாதையா நடத்துறதெல்லாம் வச்சுக்கிட்டான்னு வை ,

"என்ன பண்ணுவீங்க?? என்று திமிராக தன் தகப்பனை பார்க்க

"நீ எனக்கு மகனே இல்லைன்னு உன்ன டைவர்ஸ் பண்ணிடுவேன் பாத்துக்கோ

"ஓ என்ன விட அப்போ உங்களுக்கு இவ தான் முக்கியமா??

"என்னடா கேள்வி இது உன்னை விட அவ தான் முக்கியம் ..

"இருக்கட்டும் , கல்யாணம் முடியட்டும் இந்த ஆள முதல்ல டைவர்ஸ் பண்ணிடுறேன் என்று முனங்கி கொண்டே 

"நீ என்னடி பாத்துட்டு இருக்க செட்டு சேர்றியா ஏற்கனவே ஒரு தடவை ஷேவிங் செட் மொழி கூட சேர்ந்து முதுகு தோல் பிய்ய பிய்ய அடி வாங்குனது உனக்கு நல்ல ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன், ஒழுங்கு மரியாதையா போய் நீட்டா கிளம்பி வா"

ம்ம் 

"அங்க வர்றவங்க எல்லாம் ஹை சொசைட்டி ஆட்களா இருப்பாங்க.. டீசண்டா ரெடியாகி வா"

விடமாட்டேங்கிறானே என்று வர்ணா நொந்து கொண்டு தன் அறைக்குள் போய் கதவை அடைக்க போக , காலை கொண்டு கதவை அடைக்க முடியாமல் தடுத்தவன்

"என் பாத்ரூம்ல தண்ணி வேகமா வரல... நான் இங்க குளிக்கிறேன் ...

"அப்ப நான் எப்படி சார் டிரஸ் மாத்த

"உன்ன எவண்டி பார்க்க போறான், நீ காட்டுனாலும் பாக்குறதுக்கு அங்க ஒன்னும் இல்ல .. அவள் பாத்ரூம் உள்ளே புகுந்து கொண்டவன் குளித்து விட்டு கண்ணாடி முன் நின்று தலையை பின்னி கொண்டிருந்த அவள் அருகே இடிக்காத குறையாக போய் நின்று அவள் சீப்பை புடுங்கி தலையை சீவ 

ப்ச் அது என் சீப்பு "

""பெயர் எழுதி வச்சிருக்கியா? மீசை முடியையும் சீவ ...

"என் சம்பளத்துல வாங்கினது அப்போ அது எனக்கு தான...

"ஓஓஓஓ இது என் ரூம் என் லோன்ல வாங்கினது 

"சீப்பு கூட உங்களுக்கு கொடுக்க மாட்டேனா சார்? நீங்களும் நானும் அப்டியா பழகி இருக்கோம் வச்சிக்கோங்க பத்து பைசா சீப்பு அதுக்காக நமக்கு இடையில பிரிவினை வரலாமா யூ கேரி ஆன்" 

"இப்ப உள்ளுக்குள்ள திருட்டி கம்னாட்டின்னு திட்டதான செய்ற "

"ம்ஹூம் மறுப்பாக மண்டையை ஆட்டினாள்

"பின்ன என்ன சொன்ன ? 

"அது , ஒரு சீப்பு கூட ஒழுங்கா வச்சி யூஸ் பண்ண தெரியாத கபோதின்னு சொன்னேன்" செளத்ரி அவளை முறைத்து கொண்டே திரும்ப ... அவன் தலையில் இருந்த ஈரம் வந்து அவள் முகத்தில் தெறித்தது... கிறங்க மயங்க கண்ணு சொருக ரெண்டுக்கும் இடையில இப்போதைக்கு ஒரு சுரணை கிடையாது அவன் கழட்டி போட்ட டவலை எடுத்து முகத்தை துடைத்து கொண்டு நின்றாள் .... 

அருவருப்பு இல்லாத அருகாமை தான் முதல் தாம்பத்தியம் அதை இருவரும் கடந்து பல வருடங்கள் ஆகிறது அதை அவர்கள் தான் அறியவில்லை 

வர்ணா கழுத்தில் ஒன்றும் இல்லாது மொட்டையாக நின்றாள் .. கருப்பு நிற சுடிதார் நீள பின்னல் கை காலில் எந்த ஆபரணமும் இல்லை... அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் கண்ணில் புகை வர

"என்ன நல்லா இல்லையா இதுதான் எங்கிட்ட இருக்கு சார் , போன தீபாவளிக்கு வாங்கின சுடிதார் நல்லா இல்லையா பாவமாக அவனை பார்க்க 

"ப்ச் ட்ரெஸ் ஓகே, செயினை எங்க? எதுக்கு இப்ப புருசன் செத்தவ போல நிக்கற அது அவன் கண்ணில் ஏன் பட்டதோ?? 

"இல்லாத புருசனுக்கு நான் எங்க போக ... இதுல அவன் சாக வேற செய்யணுமா, உங்க வாய்ல நல்லதாவே வராதா சார் .... நானே முப்பது வயசு ஆகும் முன்னவாவது கல்யாணம் முடிச்சிடணும்னு கனவோட இருக்கேன் 

"அப்போ அது கடைசி வரை கனவு தான் போ .... செயினை எங்க? 

"போன வாரம் அப்பாவுக்கு உடம்பு முடியலைன்னு காசு கேட்டாங்க "

"தாராள பிரபு செயினை கழட்டி அடகு வச்சி அனுப்பிட்ட  

"என் பேர்ல பேங்கல ஒரு கோடி ,சேர் மார்கெட்டுல பல கோடி இருக்கு பாருங்க, கேட்டதும் எடுத்து கொடுக்க இருந்த ஒத்த செயினதான் ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க வேண்டியது இருக்கு . 

"என்கிட்ட கேட்டு தொலைய வேண்டியதுதான  

"யாரு நீங்கதான பிச்சைக்காரன் தட்டுல இருந்தே ஆட்டையை போடுற ஆளாச்சே,என் சம்பளத்தையே பத்து தடவை பிச்சை எடுத்தா தான் தருவீங்க ... இப்ப செயின் போடுறது ரொம்ப அவசியமா சார் 

அவசியம் தான், ஏற்கனவே அவ உன்ன மதிக்க மாட்டா , இப்படி வந்தா இலை எடுக்க வைப்பா என்று செளத்ரி தன் கழுத்தில் கிடந்த செயினை கழட்டி அவள் கழுத்தில் போட ..

"தெரியுதுல்ல நான் அவமானம் படணும்னே கூட்டிட்டு போறீங்களா? என்று அவன் போட்டு விட்ட செயினை தூக்கி ஜாக்கெட் உள்ளே மறைத்து போட இருவர் செயலையும் வாசலில் நின்று பார்த்து கொண்டிருந்த ரகுராம்தான் புரியாது முழித்தார்... 

இருவருக்கும் இடையே நூல் அளவு கூட ஒளிவு மறைவு இருப்பது போலவே இல்லை நட்பு போலவும் இல்லை காதல் போலவும் இல்லை... 

இதுக முட்டாளா சுத்துதா இல்லை நம்மள முட்டாளா ஆக்குதுகளா?  

மொழி தெரியாது ஒரு நாள் அவன் அறைக்குள் போய் விட்டாள் தாம்தூம் என்று குதித்து விட்டான்..ஆனால் வர்ணா இந்த வீட்டில் எங்கே போனாலும் சத்தம் இருக்காது சிறுது நேரத்தில் பொம்மேரியன் நாய்குட்டி போல அவள் இருக்கும் இடம் தேடி போய் விடுவான் ...  

தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்க மாட்டான் போல அவளை யாருக்கும் கொடுக்காது தன்னோடவே வைத்து கொண்டு சேட்டை பண்ணினான் .. 

"சார் காரை எங்க ?அவன் புல்லட் மட்டும் தான் நின்றது .. 

"ஆமாடா கேட்கணும்னு நினைச்சேன் கார் செட்டுல இல்லை எங்க?? ரகுராம் யோசனையாக மகனை பார்க்க 

"ப்ச் வித்துட்டேன் 

"எது ஏன் 

"யாமி ஆடி கார் வேணும்னு சொன்னா அதான் காலையில போய் அட்வான்ஸ் போட்டு புக் பண்ணிட்டு வந்தேன் "

"ஏது ஆடி காரா டேய் என்ன நினைச்சுட்டு இதை எல்லாம் பண்ணிட்டு இருக்க .. புது அப்பார்ட்மெண்ட் வாங்க லோன் போடுவியா ,கார் வாங்க காசு சேர்ப்பியா அவ ஆசைப்பட்டா உன் நிலைமையில சொல்லி புரிய வைக்க மாட்டியா ??

"என்னத்த புரிய வைக்க சொல்ற .... இந்த ப்ரோமோசனுக்கு எத்தனை கோடி கொடுக்க தயரா இருக்காங்க தெரியுமா ??மாப்பிள்ளைன்னு ஒரே காரணத்துக்காக கமிஷனர் என்ன ரெக்கமெண்ட் பண்றார் அவர் பொண்ணுக்கு இது கூட செய்யலைன்னா தப்பா நினைப்பார்ல, அதான் யாருக்கு செய்றேன் எனக்கு வர போற பொண்டாட்டிக்கு தான செய்றேன் ..."

"எப்படியோ போய் தொலை நாளைக்கு வந்து கண்ணை கசக்கிட்டு நிக்காத ... 

" அப்போ பாரத்துக்கலாம் , நீ என்னடி வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற அந்த ஆளு என்னைக்கு நான் செய்றதை சரின்னு சொல்லி இருக்கான் 

"சரியா செஞ்சா சரின்னு சொல்வார் என்று வர்ணா முனங்கிட

"என்ன கேட்கல 

ஹிஹி புல்லட்ல பிடிக்க இடம் இல்லையே அதான் கேட்டேன் சார்

தோளை பிடிச்சு உட்கார்ந்து தொலை, காத்துல பறந்து தொலைச்சிடாத அவன் தோளை பிடித்து வர்ணா ஏறி அமர புல்லட் பார்ட்டி நடக்கும் இடம் நோக்கி பறந்தது .. 

இவ எதுக்கு வந்து இருக்கா? நட்சத்திர ஹோட்டல் வாசலில் அவனோடு வந்து இறங்கிய வர்ணாவை யாமினி முறைக்க 

"ஆன் ட்யூட்டி பெர்மிசன்ல தான் ரெண்டு பேரும் வந்திருக்கோம் என்று செளத்ரி சமாளிக்க.. நீயே என்னத்தையும் பண்ணு என்று வர்ணா ஒதுங்கி நின்று கொண்டாள்... 

"அதுக்கு இவ எதுக்கு செளத்ரி, நான் ஏற்கனவே சொன்னேன் இவ உங்க கூட அலைய கூடாதுன்னு ஐ ஹேட் தில் சில்லி கேர்ள் "

"ஒரே ஸ்டேசன்ல வேலை பார்ககிறோம் யாமி எப்படி அவாய்ட் பண்ண ,அதோட ரெண்டு பேருக்கும் பந்தவஸ்து ட்யூட்டி சேர்ந்து தான் போகணும் சோ சீக்கரம் பார்ட்டி முடிஞ்சா போயிடுவோம்..

"சார் நான் வெளியே நிக்கிறேன் "என்று வர்ணாவே நகர்ந்து போய் அவன் பைக் பக்கம் நின்று கொள்ள.. யாமியோடு பேசி கொண்டு நின்றவன் அவள் உள்ளே போகணும் வேகமா வர்ணா நோக்கி ஓடி வந்தவன்...

"வா என்று வர்ணா கையை பிடித்து இழுக்க

"இப்ப எங்க சார் ..

"நான் சாக போறேன் துணைக்கு ஆள் இல்லை வா நீ ஒரு பக்கம் தூக்குல தொங்கு , நான் ஒரு பக்கம் தொங்குறேன் ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடலாம் ..அவதான் உயிரை எடுத்து தொலையுறான்னா, நீ வேற கேள்வி கேட்டு உயிரை எடுக்காத.. 

"இதுக்கு தான் சொன்னேன் என்ன விட்டுட்டு வாங்கன்னு , பிரிக்கவே முடியாதது நீயும் நானும்னு என்னையும் தூக்கிட்டு வந்தா இப்படி தான் ஆகும் 

"மூடிட்டு வர்றியா 

"மூடிட்டேன் எங்க வரணும் 

"உள்ளே வெயிட்ங் ரூம்ல உட்கார்..  

"இல்லை இங்க இருக்கேன் .. 

"மயிறு எதாவது வாயில வந்திடும், பொறுக்கி பயல்க சுத்துற இடம் பாதுகாப்பு இல்லை வந்து உள்ள உட்கார்டி ...படுத்தாத 

"ம்ம் அவளை பத்திரமாக அமர வைத்தவன்,தன் பாக்கெட் தடவி காசை அவள் கையில் கொடுத்து 

யார் எது தந்தாலும் வாங்கி குடிக்காத எதாவது வேணும்னா அந்த கடையில வாங்கிக்க... பத்து நிமிஷத்துல வர்றேன் 

சார் நான் பாத்துக்கிறேன் நீங்க உங்க பியான்சே கூட என்ஜாய் பண்ணுங்க ...

ம்ம் என்று ஓடியவனை பெருமூச்சு வி்ட்டு பார்த்தாள் 

அகல கால் வைத்து கவுட்டை கிழிந்து கிடக்க போகிறான் என்று புரிந்தது.. அவனுக்காக பரிதாபம் தான் வந்தது .. 

எப்படி , சார் லைப் லாங்க் யாமினி கூட வாழ போறார்.. நமக்கு ஏன் வம்பு நாம சோவாருவோம் என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்...

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து 

அகநக நட்பது நட்பு 

முகம் பார்க்காமல் அகம் மட்டும் பார்த்து வருவது தான் உண்மையான நட்பு 

இது காதலுக்கும் பொருந்தும் 

முகநக காதலா ?

அகநக காதலா ? 

அவன் தான் தேர்வு செய்ய வேண்டும் ..

பின் குறிப்பு 

ரண ரணமாய் கதை நெறைய பேர் படிக்கலைன்னு கேட்டு இருந்தீங்க ஒவ்வொரு எபியா போட்டு விடுறேன் இன்று போட்ட எபிக்கள் நாளை காலை இருக்காது , போட போட வேகமா பழைய எபிக்கள் எடுத்துட்டே இருப்பேன் சோ பின்னாடி பாலோ பண்ணிக்கோஙக மறுபடி போட மாட்டேன்..