தீயவா நீ என் தூயவா 1

Thee1

தீயவா நீ என் தூயவா 1

1 தீயவா நீ என் தூயவா !! 

ஈசிஆர் பங்களாக்களின் மாளிகைகள்  அணிவகுப்பு பிரபல நடிகர்கள் அரசியல்வாதிகள் என பலர் கடலை பார்த்தது போல பளிங்கு  மாளிகைகளை கட்டி வைத்திருக்க,  அதில் ஒரு வீடு பிரபல இயக்குனர் இமையன் வீடு ..

தமிழ் சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ஆஸ்கார் நாயகன் இன்னும் பல பெயர்களை கொண்டவர் .... பிரம்மாண்டங்களுக்கு பேர் போனவர் , ஆயிரம் கோடி பட்ஜெட்டில் படம் எடுத்து கள்ளா கட்டும் மிகப்பெரிய இயக்குனரின் மாளிகை அது.. 

கதை எழுதுவதற்காகவே இந்த வீட்டினை கட்டியதாக சில நாட்களுக்கு முன்பு நாளிதழ்களில் 

வீட்டின் போட்டோவை போட்டு செய்தி  கூட வந்தது...  இந்த வீட்டில் தான் கதை எழுதுவது எழுதிய கதைகளுக்கு படங்கள் வரைவது,  அதை அனிமேஷன் செய்வது என்று எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருக்கும்..

பல பேர் அங்கே கொடுக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருக்க...  இயக்குனரின் கார் அந்த பங்களா உள்ளே  வந்தது..  இயக்குனர் ஒவ்வொரு வேலையாக பார்வையிட்டுக் கொண்டே வந்தவர்

 தியாகி என்று அவர் தன்  அசிஸ்டன்ட்டை அழைக்க 

"சார்

"ஒரு புது கதை ஒன்னு ரெடி பண்ணி வச்சிருக்கேன் அதுக்கு கொஞ்சம் ரெடி பண்ண வேண்டியது இருக்கு..."

"சரிங்க சார் 

"நான் மாடியில உட்கார்ந்திருக்கேன் சீக்கிரம் வா" என்ற சொல்லிவிட்டு கடற்கரை காற்று தன் மீது அடிக்க அந்த பால்கனியில் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து கடற்கரையை பார்த்துக் கொண்டிருந்தவர் ..அடுத்த படத்திற்கான கதையை மனதில் அலசிக்கொண்டிருந்தார் ...

"சார் என்று தியாகி உள்ளே வர

"சொல்லுங்க சார் எழுதிக்கிறேன்" என்று நோட் பேனாவோடு அசிஸ்டன்ட் அவர் அருகே உள்ள சேரில் உட்கார

"ஹீரோ பேரு தீயவன்!! வயசு 29

ஓகே சார் 

"ஹீரோயின் பெயர் துளசி 

"ம்ம் ,

"துளசியை போல மென்மையானவள் 

"அப்போ ஹீரோ ?

"அவன பத்தி தானே சொல்ல போறேன்,  இந்த உலகத்துல ஒரு அரக்கன் இருந்தா எப்படி இருக்குமோ அப்படி ஒரு மனித அரக்கனவன்....  தன்னுடைய சுயநலத்திற்காக தேவைக்காக, யாரையும் கொன்னு குவிக்க கூடிய நவீன அரக்கனவன்....  கதைய சொல்றேன் அப்படியே எழுதிக்கோ "

"ஓகே சார் 

"ஹீரோ தீயவனோட தகப்பன் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி  , அவருடைய சின்ன வீட்டுக்கு பிறந்தவன் தான் நம்ம ஹீரோ தீயவன்... 

"ஓஓஓ 

"சமுதாயத்தால புறக்கணிக்கப்பட்டவன்,  வப்பாட்டி மகன்னு அவப் பெயரோட அவமானத்தின் சின்னமாக வளர்க்கப்படுகிறான்....  ஒரு கட்டத்துல சேர்த்து வச்ச அவமானம் எல்லாம் அவனை அரக்கனா மாத்துது ... இதே  ஊர் மத்தியில தன்னை எல்லாரும் பார்த்து பயப்படுற வணங்கக்கூடிய இடத்துல இருக்கணும்னு ஆசைப்படுறான் ... அதுக்கு அவன் எடுக்கிற ஆயுதம்....

ரவுடிதொழிலா?

"ம்ஹூம் அரசியல்

"ஓஓஓ

"தன்னுடைய தகப்பனை மாதிரி அவனுக்கும் அரசியல் ஞானம் அதிகம் , அதனால இந்த அரசியல்ல நானும் அசைக்க முடியாத ஜாம்பவானா நிக்கணும்னு என்கிற வெறி , வளர வளர அவன மிருகமாகவே மாத்துது .... ஒரு கட்டத்துல எங்க போனாலும் இவன் அரசியல்வாதியின் வப்பாட்டி மகன் அப்படிங்கிற பெயர் தான் அவனுக்கு முன்னாடி வந்து நிற்கிறது....  புறக்கணிக்கப்படுகிறான் , புறக்கணிப்பு அவன உறங்க விடமாட்டேங்குது....  அப்பதான் அவன் வீட்டுக்கு ஒரு ஜோசியர் வர்றாரு...  சுவாரசியமாக கதை கேட்டுக் கொண்டிருந்த தியாகி ஆர்வமாக இயக்குனரின் முகத்தை பார்க்க 

என்ன சார் சொல்றாரு?"

"உன்ன பத்தி ஊர் உலகம் மிகப் பிரமாதமா சொல்லுது ஆனா எனக்கு உன் ஜோசியம்  மேல நம்பிக்கை இல்லை"  என்ற எஃகு குரலில் வந்தவர்  கூட பயந்து இருப்பார் 

"29 வயது  ஆண் ஆனால் அந்த துடுக்கு துள்ளல் இல்லை இறுகி போய் நாறபது வயதுக்கு உண்டான ஆளுமையோடு இருந்தான்.. அவன் கண்ணில் பல  வருடங்கள் ஓயாத நெருப்பு ஒன்று பற்றி எரிந்து கொண்டிருந்தது....  எத்தனை பேரை  வேண்டுமானாலும் கொன்று குவித்து,  அதன் மீது தன் சாம்ராஜ்யத்தை கட்டி விட மாட்டோமா என்ற பேய் ஆசை அவன் கண்ணில் கொட்டிக் கிடந்தது...

"அவனுடைய நாடியை பிடித்துப் பார்த்த ஜோசியர்

ஐயா உங்களுக்கு அரசியல் யோகம் பிறப்பிலேயே வந்தது" என்றதும் தன் மீசையை தடவினான் ஆக்ரோஷ கண்ணுக்குச் சொந்தக்காரன்..  

ஆனா

என்ன ஆனா ?"

"அதுக்காக நீங்க நிறைய பாவம் செய்யணுமே

"எனக்கு அரசியல்வாதியாகணும் ,  எல்லாரும் எனக்கு கீழ கைகட்டி நிக்கணும்,  அதுக்காக எவ்வளவு பாவத்தை வேணும்னாலும் நான் செய்ய தயார்... 

"என்ன பண்ணனும் ??

"அரசியல்ல உங்களுக்கு எதிரி உங்க தகப்பன்

"ம்ம் அவர கொன்னுடுறேன்

"அடுத்து??

"இது கஷ்டமான ஒன்னு தான்,  ஆனா இத நீங்க பண்ணிட்டீங்கன்னா உங்களை யாராலும் அசைக்க முடியாது

"என்ன 

"உங்களுக்கு மிருகத்தோட குணம் இருக்கு , இது உங்கள உச்சத்துக்கு கொண்டு போகாது, 

அதனால "

"தூய்மையான குணமுடைய ஒரு பெண்ணின் கழுத்துல அதுவும் 18 வயது பூர்த்தியாகாத ஒரு பெண்ணின் கழுத்துல உங்களுடைய தாலி ஏறும் போது , அந்தப் பெண்ணின் அதிர்ஷ்டம் உங்களை அரசியல்வாதியா மாத்தியே தீரும் 

"மைனர் கல்யாணமா??? 

"ம்ம் 

"29 வயதில் தனக்கு திருமணம் என்ற  ஒன்றை இதுவரை அவன் யோசித்ததே கிடையாது,  அவன் இலக்கு எல்லாம் ஒன்றே ஒன்று இந்த உலகம் பார்த்து அஞ்சும் அரசியல்வாதியாய் மாறியே தீர வேண்டும் என்பது மட்டும்தான்...

"18 வயது பூர்த்தியாகாத மைனர் பொண்ண தாலி கட்டுற சம்பிரதாயம் மட்டும் பண்ணுங்க போதும்...  அந்த பொண்ணு கழுத்துல நீங்க தாலி கட்டினாலே அவளோட புருஷன் தானே,  அந்த யோகம் உங்கள கண்டிப்பா அரசியல்வாதியா மாத்திடும்  அய்யா என்று கூற ....

"ஓஓஓ 

அவர் சொன்ன ராசிபலன் ஒரு பெண்ணை தேடி பிடித்தான் தீயவன்...

தமிழ்நாட்டின் மலைவாசிகள் வாழும் ஜவ்வாது மலை அடிவாரத்தில் உள்ள ஊரில் இவன் தேடிய ராசிபலன் கொண்ட  18 வயதிற்கு இன்னும் இரண்டே நாட்கள் இருக்கும் பருவ மங்கை கிடைத்தாள் ..

அவள் நாமம்  துளசி!!

காரில் வந்து தீயவன் இறங்க கை நிறைய பணக்கட்டை எடுத்து அந்தப் பெண்ணின் தகப்பன் கையில் கொடுத்தவன்... 

"சம்பிரதாயத்துக்கு மட்டும்தான் உங்க பொண்ணு கழுத்துல தாலி கட்ட போறேன்,  இதை வச்சுக்கிட்டு என்கிட்ட பேரம் பேசுற வேலை எல்லாம் வச்சுக்க கூடாது மீறினா   கொன்னுடுவேன்...  இந்தக் கல்யாணம் என் தேவைக்கு மட்டும்தான் ... அவ என்  மனைவியும் கிடையாது,  நான் அவ கணவனும் கிடையாது ஜஸ்ட் இது ஒரு பொம்மை கல்யாணம் புரியுதா

"சரி  ஐயா நல்லா புரியுது, 

"வாங்கின பணத்துக்கு உண்மையா இரு, 

"சரிங்க அய்யா ,எங்க முறைப்படி கல்யாணம் மட்டும் பண்ணிக்கோங்க ஐயா...  அதுக்கு பிறகு உங்க திசை பக்கமே  நாங்க திரும்பி பார்க்க மாட்டோம்

"ம்ம்  என்று தீயவன் அந்த ஆள் உயர சிலை முன்னால் போய் அமர,  அவன் கழுத்தில் ஏலக்காய் மாலை குறிஞ்சி மலர் கிரீடம் அணியப்பட்டது..

"அடியேய்  துளசி உன் மாப்பிள்ளை எப்படி இருக்கார் தெரியுமா,  பார்க்க மதுரை வீரன் போல இருக்கார். சும்மா  நெடு நெடுன்னு உயரமா அய்யனார் கணக்கா அழகோ அழகு,  எங்க கண்ணே பட்டுடும் போல இருக்கு என்று கூறியதும் வெட்கத்தில் சிவந்து போன மாநிறத்து அழகி...  தன் ரவுக்கை  இல்லாத சேலையில் அவர்கள் முன்னால் கூச்சத்தில் நெளிந்தாள் 

 ஜாக்கெட் அணியாத மேனியை,  ஒரு கச்சை துணி கொண்டு மறைத்திருக்க ,அதன் மீது சேலையை மூடி அவள் கழுத்தில் கருப்பு பாசியை அணிந்து காலில் தண்டையை மாட்டிவிட்டு,  மூக்கில் ஒரு புல்லாக்கு என்று மணமகளுக்கான அலங்காரத்தை முடித்து மணமகள் தோழிகளோடு புடைசூழ வெட்கத்தில் குனிந்து கொண்டே வந்து தீயவன் அருகில் துளசியை அமர வைக்க...

ஓரக்கண்ணால் தன் வருங்கால கணவனை ஒரு பார்வை பார்த்தாள் , அவனும் சட்டென திரும்பி அவளை பார்த்துவிட்டு ஏதோ ஞாபகத்தில் திரும்பி விட்டான்

அந்த ஒற்றை பார்வையில் அவனை ஆழ பதிந்து விட்டாள் பாவை , இனி இவன்தான் என்னுடையவன் என்று ரத்தத்தில் பெயர் எழுதி விட்டாள் நாயகி...  ஆனால் அவனோ , அவள் முகத்தைக் கூட மனதில் பதிய வைக்க வேண்டிய தேவை அவனுக்கு இல்லை,  அவன் நோக்கம் எல்லாம் ஒன்று அதில் மட்டுமே அவன் கவனம் , ஆசை,  சிந்தை அத்தனையும்...

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் பொட்டளவு தங்கத்தில் முகப்பு போட்டு தீயவன் கையில் கொடுக்க,  அதை அசால்டாக இடது கையில் வாங்கி தன் இடக்கையால் அருகே இருந்த துளசி கழுத்தில் கட்டிட தங்க முகப்பு அவள் நெஞ்சில் வந்து விழ....  அவள் தலையை நிமிர்த்தி தன் கணவனை பார்க்க விளைய அவனோ கட்டிய அடுத்த நொடி  காரை நோக்கி சென்று விட்டான் இவள் ஆசையாக அவனை எட்டி பார்க்க .... அந்தோ பாவம் கார் அந்த இடம் விட்டு போயே விட்டது ....

மூன்று வருடங்கள்  கழித்து இன்று !! 

"துளசி சொன்னா கேளு , அந்த கல்யாணம் தோஷத்துக்காக நடந்தது மட்டும் தான்,  அவர் ஏற்கனவே நம்ம கிட்ட தெளிவா சொல்லிட்டுதான் காசு கொடுத்தார்...  ஒரு தோஷத்திற்காக உங்க பொண்ண கல்யாணம் கட்டிக்கிறேன் , அதை தவிர எதுவும் எங்களுக்கு இடையில் கிடையாதுன்னு பணத்த கையில வாங்கிட்டு தானே துளசி உன்னை கொண்டு போய் அதுல உட்கார வைச்சோம்"...

"இப்போ உன் மாமன கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு  தலைகீழ நின்னா என்ன அர்த்தம் நாளைக்கு காலையில உனக்கும் மாமனுக்கும் கல்யாணம் , உன் கழுத்துல மூணு வருசத்துக்கு முன்ன அவர் கட்டுன தாலியையும் கழத்த மாட்டேன்,  இவரையும் கல்யாணம் கட்டிக்க மாட்டேன்னு சொன்னா எப்படி ,என் மாப்பிள்ளை அவர்தான்னு ஊர் பெயர் தெரியாத ஒருத்தருக்காக இப்படி மூணு வருடமாக எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே அந்த தாலியை கழட்டு "என்று தகப்பன் வந்து அந்த தாலியை கை வைக்க போக

"அப்பா என் தாலியில கை வைக்காதீங்க , என் கழுத்துல ஒரு தடவைதான் தாலி ஏறும் ... அது ஏறிடுச்சு என் உசுரு போகிற வரைக்கும் என் வீட்டுக்காரர் அவர்தான்....  நான் யாரையும் கல்யாணம் கட்டிக்க மாட்டேன் , அதான் தெளிவா சொல்லிட்டேன்ல மாமாகிட்ட உங்கள என்னால கல்யாணம் கட்டிக்க முடியாதுன்னு ...  எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு ..

"பைத்தியக்காரி மாதிரி பேசாதம்மா சொன்னா கேளு"

"மாட்டேன் என் புருஷன் அவர்தான் அதையும் மீறி என்ன கட்டாயப்படுத்தினீங்க 

என்னடி செய்வ கிளிப்புள்ளைக்கு சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்கோம், சொல் பேச்சு கேட்க மாட்டேங்கிற ... நாளைக்கு காலையில உனக்கும்  ரங்கனுக்கும் கல்யாணம்,  இதில ஏதாவது மாற்றம் நடந்தது தொலைத்துச்சிடுவேன் தொலைச்சு" என்ற தாயின் அரட்டலில் துளசி வாயை மூடிக்கொண்டு துளசி அமைதியாக போய் கட்டிலில் படுத்து கொண்டாள் 

ஊரே அடுத்த நாள் திருமணத்திற்காக களைகட்டி இருக்க .... துளசி தன் கட்டிலில் துணியை பரப்பி வைத்து ஆள் படுத்திருப்பது போல போர்வையை மூடிவிட்டு , மாற்று துணியை  மட்டும்  பொதியாக போர்வையில் சுருட்டிக் கொண்டு,  தன் ஜாக்கெட் அணியாத தோள்பட்டையை சேலையால் மூடி மறைத்துக் கொண்டு சத்தம் இல்லாமல் அந்த இருட்டு பாதையில் விறுவிறுவென்று வெளியே வந்தவள்...  கையில் கசங்கிய காகிதம் மட்டுமே இருந்தது...

அன்று தீயவன்  தாலி கட்டும் பொழுது அவன் கையில் இருந்து விழுந்த ஒரு காகிதத்தில்

தீயவன் எம்பிஏ,  சென்னை வேளச்சேரி என்ற பெயரோடு அவன் ஜாதகமும் உள்ள கவர் விழுந்திருக்க....  இது ஒன்றுதான் அவன் யார் என்பதை காட்டக்கூடிய ஒரே அத்தாட்சி .... அவன் எழும்பி போனதும் அதை கையில் எடுத்துப் பார்த்தவள் , என்ன ஏது என்று தெரியாமல் தன் பையோடு வைத்துக் கொண்டவளுக்கு.  இது ஒன்றுதான் அவனை தேடி போக ரூட் மேப்..

ரோட்டில் மூட்டையோடு நின்ற பெண்ணை கண்ட காய்கறி லாரி ஒன்று நின்றது 

எங்கம்மா போகணும் ?? என்றதும் அவள் கையில் உள்ள துருப்புச் சீட்டை கொடுக்க

சென்னையா அங்க தான் போகுது வர்றியா என்றதும் கண்களை விரித்து போகவா வேண்டாமா என்று துளசி யோசிக்க

"வீட்டை விட்டு ஓடி வந்துட்டியா,

"ம்ம் எனக்கு பிடிக்காத கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க அதான் என் புருஷனை தேடி டவுனுக்கு போறேன்..  என்ன பத்திரமா கூட்டிட்டு போக முடியுமா அண்ணா என்றதும் மனிதநேயம் கொண்ட அவர்

" வந்து ஏறும்மா தங்கச்சி கொண்டு போய் விடுறேன் என்றதும் துளசிக்கு வண்டியில் ஏற இடம் கொடுக்க 

சற்று பயம் இருந்தாலும் , மிரண்டாலும் கணவனை போய் சேரும் வரை தான் தனக்கு பயம் அதன் பின்பு அவன் பாதுகாப்பு கொடுப்பான் என்று நினைத்து வலது கால் வைத்து லாரியில் ஏறி இதோ சென்னையில் வந்து இறங்கினாள் தீயவனின் தூயவள் என்று இயக்குனர் சொல்லி முடிக்க 

சார் தீயவன்  ஹீரோயினை பார்த்திடுவானா

துளசியை சேத்துபாரா , 

"ஹாஹா அவன்  இப்போ சாதாரண தீயவன்  இல்ல வேளச்சேரியோட  எம்எல்ஏ தீயவன்..  அசைக்க முடியாத அரசியல்வாதி,  தன்னுடைய அரசியலுக்காக 100 கொல அசால்டா பண்ணினவன்... அரசியல்வாதி தீயவன்..  அதோட முதல் கொலை யார் தெரியுமா?  அவனோட அப்பா அதை பாத்த அவனோட சம்சாரம்,  எல்லாத்தையும் கொன்னுட்டு அந்த சமாதி மேலேயே தன்னுடைய கட்சி அலுவலகத்தை கட்டி கொடிகட்டி பறக்கிற அரசியல்வாதி,  அவனோட அடுத்த இலக்கு   முதல்வர் பதவி ..

ஓஓஓ"

"இந்த சாதாரண பொண்ண தன்னுடைய மனைவின்னு சொல்லிடுவானா என்ன? இல்லை அவளை வச்சி வாழ்ந்திடுவானா ....  முதல்வர்  மகளை கல்யாணம் கட்டினா ஸ்ட்ரைட்டா முதல்வர் ஆகிடலாம்னு அதுக்கு ஸ்கெட்ச் போட்டு வச்சிருக்கான் ,  செல்லாக்காசான இவளை எப்படி ஏத்துப்பான்?

"அய்யய்யோ துளசி  அவன நம்பி இங்க வந்துடுச்சே 

"வந்துடுச்சுல்ல  இனி உயிரோட போனா பாத்துக்க வேண்டியதுதான் 

"என்ன சார் இப்படி கதையும் முடிக்கிறீங்க ...

அதுக்கு பிறகு என்ன நடந்ததுன்னு சொல்லுங்க 

நாளைக்கு வந்து தொடர்றேன்...  நீ என்ன பண்ற நான் இதுவரைக்கும் சொன்ன கதைக்கு ஏஐ அனிமேஷன்ல பிக்சர் வீடியோ எல்லாம் ரெடி பண்ணி வை...

"ஓகேசார் 

"அந்த ஏஐ வீடியோ எல்லாம் பக்காவா இருக்கணும்,  அதை  பாத்துதான் படம் எப்படி வரும்னு நான் ஒரு யோசனைக்கு வர முடியும் 

"சரிங்க சார் செஞ்சு வச்சுடுறேன் என்று தியாகி இயக்குனர் சொன்னது போல கதைக்குத் தேவையான கேரக்டர்களை தேர்வு செய்து,  அதை ஏஐ அதாவது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்ற டெக்னாலஜி மூலமாக ஒவ்வொரு படத்திற்காக பிரத்தியேகமாக வடிவமைப்பு ,  வீடியோக்களை செய்து கொண்டிருக்க ....

தீடீரென  கடலில் இருந்து  நீர்கள் மேகத்தினால் உள்வாங்கப்பட்டது ,  அந்த காட்சியை பார்க்க அழகாக இருக்க ... வீடியோ ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க,  தியாகி பால்கனி கதவை திறந்து கொண்டு கடற்கரையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க ....

திடீரென்று  வானில் இருந்து  ஒரு மின்னல் பளிச் பளிச்சென்று அவன்  முகத்தில் அடிப்பது போல் உணர்வு, தியாகி  சட்டென விலகி நிற்க .. மின்னல் கதிர்கள் மொத்தமாய் வந்து அந்த திறந்திருந்த லேப்டாப் வீடியோவின் மீது அப்படியே விழ... நெருப்பு சக்தியால் தீயவன் உயிரோடு எழுந்தான்....

ஆம் , இவர்கள் கதையில்  உருவாக்கி வைத்திருந்த காட்சிகள் அத்தனையும் எங்கோ ஒரு இடத்தில் உயிர் பெற ஆரம்பித்தது , 

இதோ சென்னை வேளச்சேரியில் வந்து துளசி கால்கள் பதித்தாள்

நவீன கொடுங்கோலன் கோட்டைக்குள் தூயவள் நுழைந்தாள்  தூயவள்!! 

கற்பனையாய் உருவாக்கப்பட்ட காட்சிகள் அத்தனையும் இனி நிஜமாக இவ்வுலகில் நடக்கப் போகிறது...  நிழலாக வரையப்பட்ட கதாபாத்திரங்கள் எல்லாம் நிஜமாக உலா வரப்போகிறது,  தீயவன் படைக்கப்பட்டதே தூயவளை துவம்சம் செய்யவே ... 

தீயவா அவள் உன் தூயவள், துடிக்க வைக்காதே என்று காற்றும் மழையும் அவளுக்காக கண்ணீர் சிந்தியது !!