தீயவா 3
Thee3
3 தீயவா நீ என் தூயவா!!
போட்ட பிரேக்கில் வண்டி ஒரு குலுங்கு குலுங்கி நின்றது....
தன் கையில் இருந்து சிதறி விழுந்த போனை குனிந்து எடுத்து விட்டு நிமிர்ந்தான் தீயவன்...
என்னடா ஆச்சு ?
"தெரியல சார் எதிர்ல ஒரு ஆளு வந்து நிற்கவும் அவசரத்துக்கு பிரேக் போட்டுட்டேன் சாரி சார்
"இடியட் ஆளு வந்தா, ப்ரேக் போடுவியா என் காஸ்ட்லி போன் உடைஞ்சா , உன் அப்பனா தருவான்... ஆளு எதிர்ல வந்தா அடிச்சு தூக்கி போட்டுட்டு போக வேண்டியது தானே.... இந்த ராத்திரியில நம்ம வண்டிக்கு எதிர்ல இவனுக்கு என்ன வேலை?
"இவன் இல்ல சார் இவள் ,இவள் "என்று பல்ராம் தலையை சொரிய ... தீயவன் அப்போதுதான் அந்த தெருவிளக்கு வெளிச்சத்தில் நின்ற ஒரு உருவத்தை கண்களை சுருக்கி பார்த்தான் ...
கந்தல் கோலம் பிச்சைக்காரி போல மணலில் உருண்டு புரண்டு நின்ற துளசியை தலையை உலுக்கி பார்த்துவிட்டு
"ஏதோ பைத்தியக்காரி போல இருக்கு, ஒரு பத்து ரூபா நோட்டை போட்டுட்டு கிளம்பு என்று மீண்டும் ஃபோனை தீயவன் பார்க்க ஆரம்பித்தான்...
நல்ல மனநிலையில் இருந்தான்.. முதலமைச்சர் அவனை அழைத்து என் பொண்ணுக்கும் உன்ன ரொம்ப புடிச்சிருக்கு தீயவா, ஆனாலும் கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு...
"நீங்க தாராளமா யோசிங்க தலைவரே, கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர், அதுவும் நீங்க இவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்து உருவாக்கின பொண்ண ஒருத்தன் கையில கட்டி கொடுக்கும் போது ஆயிரம் இல்ல லட்சம் தடவை கூட யோசிக்கலாம்... "அரசியலுக்கு வருவதற்கு வாய்ஜாலம் அவசியம் ..அவனுக்கு அது தாராளமாய் கொட்டிக் கிடந்தது... யார் யாரிடம் எப்படி பேசி தனக்கு தேவையானதை கறக்க வேண்டும் என்று நன்றாக தெரிந்த அரசியல்வாதி அவன்...
ம்ம் ஆனா ??
"என்ன தலைவரே பிரச்சனை
"ஒன்னும் இல்ல தீயவா, உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு தான், உண்மையானவன் , ஹாட் வொர்க்ர் நம்ம கட்சிக்காக சாக கூட துணிஞ்சவன், உன் அப்பா தூக்கு போட்டு செத்த அன்னைக்கு கூட நான் கூப்பிட்டதும் அப்படியே ஓடி வந்து நின்ன.. அந்த நெருப்பு தான் உனக்கு எம்எல்ஏ சீட் கொடுக்க வச்சது, ஆனா கல்யாணம் குடும்பம்னு வரும் போது உன் பிறப்பு தான் இடிக்குது தீயவா? என்று முதலமைச்சர் தலையை தடவ
புரியல
"அதாவது அவர் சம்சாரத்துக்கு மகனா இருந்தா ஒரு மரியாதை இருக்கும், நீ வப்பாட்டி மகன்... அதான் நாளைக்கு என் மரியாதை குறைஞ்சுடக்கூடாதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்...
தீயவனுக்கு , தன் கையில் இருந்த கண்ணாடி குடுவையை அப்படியே எடுத்து அவர் தலையில் அடித்துக் கொன்று விடலாமா என்னும் வெறி ஏறினாலும்..
" பேசுடா பேசு தாலி கட்டிக்கிறேன், அதுக்கு பிறகு உனக்கு பால் ஊத்துறேன் ... என்று கோபத்தை தீயவன் தொண்டைக்குள் அடக்கிக் கொண்டான்...
"எங்க போய்ட போற நீ, ஒரு மாசம் யோசிச்சிட்டு பதில் சொல்றேன் என்று முதல்வர் கூறவும்...
இதுவே மிகப்பெரிய வெற்றி தான் அவனுக்கு, இத்தனை நாளாக வேண்டாம் என்று சொன்ன முதல்வர் இப்போது யோசிக்கிறேன் என்று கூற , ஓடிய சீக்கிரத்தில் சரி என்ற தலை ஆட்ட வைத்து விட வேண்டும் என்று அதற்காக ஸ்கெட்ச் போட்டுக் கொண்டிருந்த நல்ல மனநிலை.. அதனால் எதிரே வந்து வண்டியில் விழுந்த அவளை விட்டு விட சொன்னான் ....
இல்லை மண்டை காய்ந்து வந்திருந்தால் விட்டு ஏத்து நசுங்கி சாகட்டும் என்று இருப்பான், தீயவனைப் பொறுத்தவரை அவனுக்கு ஒன்று வேண்டும் என்றால் வைத்திருப்பான், வேண்டாம் என்றால் மொத்தமாக கதையை முடித்து விடுவான்..
கண்ணை மூடி கொண்டு நின்ற துளசி மேல் மூச்சு கீழ் மூச்சு வாக்கினாள்.. அவனை பார்த்தே ஆக வேண்டும் என்று வண்டி குறுக்கே மூளை இன்றி வந்து விழுந்து விட்டாள்
செத்தோம் என்று கண்ணை இறுக மூடி கொண்டாள்
"அம்மாடியோவ், நல்லவேளை கார் மேல ஏறி இருந்தா எலுமிச்சம் பழம் கணக்கா, நான் நசுங்கி இருப்பேன் , ஒரு ஆர்வத்துல ஓடி வந்து வண்டிக்கு குறுக்கால விழுந்துட்டேன், கடவுளே!! என்னை காப்பாத்துனதுக்கு நன்றி "என்று புலம்பிக்கொண்டே காரை நோக்கி ஓடி வந்தாள்
டிரைவர் சீட்டில் இருந்த பல்ராம் ஜன்னல் திறந்தான்
"யாரும்மா நீ?? இப்படி வண்டிக்கு எதிர்ல வந்து விழுறியே, அறிவு இல்ல , அவள் பார்வை அத்தனையும் ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த அவள் அயித்தான் மீதுதான்..
புருஷனை காதலிக்கணும் , புருஷனை நேசிக்கணும் புருஷன் கொன்னே போட்டாலும் செத்துடனும் என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் இவன்தான் புருஷன் என்று மூன்று வருடமாக ஒத்தை தாலியை பிடித்து வைத்திருப்பவள் அவனை நேசிக்காமல் இருப்பாளா?
மூடத்தனங்களின் தலைவி அவள் மூடத்தனமே அவளை முடமாக்க போவது தெரியாமல் நின்றாள்
"யம்மா உன் கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன், இந்தா பணம் இதுக்கு தான வந்து விழுந்த??" என்று 500 ரூபாய் நோட்டை எடுத்து பல்ராம் அவள் கையில் கொடுக்க...
"அய்யோ பணம் எல்லாம் வேணாம் சாமியோவ் , நான் அவரை பார்க்கதேன் வந்தேன்" என்று மெல்லிய இசை போல ஒரு குரல் வந்தது...
"ப்ச் மணி பன்னிரண்டு இப்ப எம்எல்ஏ பார்க்க வந்து இருக்கியா... போ போ காலையில வந்து எதுனாலும் பேசு என்று பலராம் அவளை விரட்ட பார்க்க .. அவளோ மறுப்பாக தலையசைத்து இன்னும் அதே இடத்தில் நிற்க...
"பல்ராம் செக்யூரிட்டிகளை அழைக்கவும் ஓடி வந்தவர்கள்..
"எம்மா இன்னும் கிளம்பலையா நீ, உன்ன காலையில் இருந்தே சொல்லிக்கிட்டு இருக்கேன் நான் அவரை பார்த்துட்டு தான் போவேன்னு இப்படி அடம் பிடிச்சா எப்படி போம்மா" என்று அவளை தள்ளாத குறையாக தள்ள...
"அய்யோ அயித்தான் அயித்தான் என்று அவள் கத்த
"என்ன ஆச்சு ??என்றான் தீயவன் போனில் இருந்த கண்ணை எடுக்காது
"ஏதோ பைத்தியம் போல சார்
"ஓஓஓ போ .... காருக்கு திறந்து விடப்பட்ட கேட் வழியாக உள்ளே நுழைய, அந்த கேப்பில் திறந்து கேட் வழியாக துளசியும் உள்ளே வண்டி பின்னால் ஓடி வந்து விட்டாள் .....
தீயவன் காரை வி்ட்டு இறங்க அவன் முன்னே மூச்சு முட்டி வந்து நின்றாள் அவன் தாலிக்கு சொந்தக்காரி..
அயித்தான் என்று தீயவனை மறைத்தபடி முன்னால் நின்ற அந்த பெண்ணை அப்போதுதான் தீயவன் கண்ணை சுருக்கி நேருக்கு நேர் பார்த்தான்....
ஒடிசலான மாநிற மேனி கொண்ட பெண் அவன் உயரத்துக்கு கால் வாசி கூட இல்லை .. அவள் அண்ணாந்து தான் அவனை பார்க்க வேண்டும், இவன் குனிந்து தான் இவளை பார்க்க வேணும், அவன் இறுக்கி பிடித்தால் நாலு துண்டாக உடைந்து போகும் அளவு ஒரு மேனி, தலை முதல் கால் வரை பிரத்தியேகமாக ஆடை அணிந்தவன் அவன், ஒரு சேலையை நாலாக கிழித்து உடுத்தி கொண்டு நின்றவள் அவள் ... கிழக்கும் மேற்கும் இணையுமா என்ன ?இணைத்தே தீருவேன் என்று அடம் பிடித்தாளே...
"எம்மா யேய் நில்லு, சார் கேட்டை திறந்த கேப்புல உள்ள ஓடி வந்திருச்சு பைத்தியம் போல" என்று செக்யூரிட்டிகள் அவளை இழுக்க வர
"அயித்தான் என்ன தெரிலையா?? என்று அவன் முகத்தை பாவமாக துளசி பார்த்தாள்
ப்ச் என்று முகத்தை சுளித்து விட்டு தீயவன் நகர போக
"அயித்தான் உங்கள தேடிதான் வந்திருக்கேன் அவன் அவளை சட்டை செய்யாது விலகி நடக்க ஆரம்பித்து விட்டான்...
"அயித்தான்இஇஇஇஇஇ என்று கத்திய துளசியை செக்யூரிட்டி இருவரும் குண்டுகட்டாக இழுத்து கொண்டு போக
"அயித்தான் அயித்தான் நான்தான் நீங்க தொட்டு தாலி கட்டுன உங்க பொஞ்சாதி இஇஇஇஇஇஇஇஇஇ" எங்கே அவன் போய்விடுவானோ என்று துளசி பயந்து கத்த... நடந்து கொண்டிருந்த தீயவன் சட்டென நடையை நிறுத்தி திரும்பி தூரத்தில் நின்ற துளசியை பார்க்க
"நான்தான் அயித்தான் உங்க பொண்டாட்டி துளசி" என்று அவனுக்கு நியாபகபடுத்த நினைத்தாள்
முகம் மறந்திருக்கும் சொன்னா தெரிஞ்சிடும்... என்று அவள் நினைப்பு ...தீயவன் பல்ராமை கேள்வியாக பார்க்க
"என்ன ஏதுன்னு விசாரிக்கிறேன் சார் என்று அவனுக்கே நடுங்கி போனது தீயவன் பார்த்த பார்வையில் ...
"அவளை கூட்டிட்டு வா
"இல்லை சார் , நீங்க போய் ரெஸ்ட் எடுங்க நான் என்ன ஏதுன்னு
"கூட்டிட்டு வான்னு சொன்னேன்
"ம்ம் என்று பல்ராம் அவளை நோக்கி வந்தவன்
"அந்த பொண்ணை விடுங்க, சார் என்ன ஏதுன்னு பார்த்துப்பார் என்றதும் அவளை விட்டு விட
"அப்பாடா என்ன அடையாளம் தெரிஞ்சிடுச்சு போல என நிம்மதி மூச்சு விட்டாள்
"வாங்க , சார் உங்கள கூப்பிடுறார்...
"ம்ம் என்று வீட்டு வாசலில் தூணில் சாய்ந்து நின்று தன் அருகே வந்து கொண்டிருந்த மலைவாசி பெண்ணை என்ன முயன்றும் அவனுக்கு அடையாளம் கண்டறிய முடியவில்லை ...
"அயித்தான் நல்லா இருக்கீங்களா ? என்று ஆசையாக அவன் முகத்தை பார்த்தாள் துளசி ..
"உங்களுக்காக ஊர்ல இருந்து இந்த பாசிமணி செஞ்சு கொண்டு வந்தேன் என்று பொட்டலத்தை திறந்து பாசி ஒன்றை எடுத்து அவன் அருகே நீட்ட போக ,
இடியட் இஇஇஇஇஇஇஇ என்று தீயவன் அதை இழுத்து தூக்கி வீச, எங்கோ ஒரு மூலையில் போய் அவள் பரிசு விழுந்தது.. அவன் கோவத்தில் எச்சில் விழுங்கிய துளசி
"அயித்தான்..
"அந்த வார்த்தை மறுபடி சொன்ன சமாதி கட்டிருவேன் ராஸ்கல் யார் நீ ?
"நான் து....ளசி நடுங்கி விட்டாள், கண்ணே மணியே என்று கொஞ்ச மாட்டான் தெரியும் ..ஆனால் கட்டிய தாலியை காட்டி வாழ்க்கை பிச்சை கேட்க வந்தவளுக்கு அவன் முரட்டு தனம் பயத்தை கொடுத்து விட்டது
கவர்னர் துளசியா சொன்னதும் தெரிய ஹான் ...எங்க உள்ள காட்டுவாசி நீன்னு கேட்டேன் ...புருசன், தாலி அது இதுன்னு இடியட் போல கத்திட்டு இருக்க ஹான்... "
"சார் சார் நான் என்னன்னு விசாரிக்கிறேன்.. என்று பல்ராம் குறுக்கிட... தீயவன் தோளை உலுக்கி கொண்டு வீட்டுக்கும் நுழைய போக
"ஜவ்வாது மலையில வச்சி நீங்க எனக்கு தாலி கட்டுனது மறந்துட்டீங்களா அயித்தான் ... நான்தான் அந்த துளசி உங்க பொண்டாட்டி , இந்தா பாருங்க நீங்க கட்டுன தாலி" என்றவள் பேச்சில் தீயவன் கண்கள் இடுங்க திரும்பினான்.... தாலியை கையில் ஏந்தி நியாயம் கேட்கும் கண்ணகியாக நின்றாள் துளசி... பல்ராம் அதிர்ந்து போய் தீயவனை பார்க்க ... அவன் கண்ணை சுருக்க
மூணு வருசம் முன்ன நீ தாலி கட்டிய அந்த பெண் பெயர் துளசிதான் என்பது போல பல்ராம் தலையாட்ட... தீயவன் சுற்றி முற்றி பார்த்தான் .... நடு இரவு யாரும் இல்லை இவள் பேசியது யாருக்கும் கேட்டிருக்க வாய்ப்பு இல்லை, இனி பேச அவள் இருக்க கூடாதே
"ம்க்கும் அவளை உள்ள வர சொல்லு
"சார் இஇஇ நான் வேணும்னா சொல்லி
"உள்ள அனுப்புன்னு சொன்னேன் இஇஇஇஇஇஇ ஆக்ரோச குரல் வேட்டையாட துடித்து வந்தது
ம்ம்
உள்ள போ
"நான்தான் நினைச்சேனே அடையாளம் தெரியாம தான அயித்தான் என்ன விரட்டி இருப்பார்னு இந்தா ஒரே வார்த்தையில உள்ள வர சொல்லிபுட்டார்ல வாழ போற வீடு வலது கால் வச்சி உள்ளார போவோம் "என்று துளசி அந்த வீட்டுக்குள் வலது காலை எடுத்து வைக்க போக,
பின்னே வந்த தீயவன் ஓங்கி தள்ளிய தள்ளில் முகம் குப்புற இடது கால் வைத்து தீயவன் கோட்டைக்கு உள்ளே போய் விழுந்தாள் அவன் துணையாள்...