தீயவா4
Thee4
4 தீயவா நீ என் தூயவா !!
கீழே விழுந்து கிடந்த துளசி வலியில் முகத்தை சுருக்கியபடி கை காலை உதறி கொண்டு அவன் முன்னால் எழும்பி நின்றவள்
"அயித்தான் என்று அவனை திரும்பிப் பார்க்க
"மூச் இன்னொருவாட்டி அந்த வார்த்தையை யூஸ் பண்ணின உடம்பு முழுக்க தேளை விட்டு கடிக்க விட்டுடுவேன் ராஸ்கல்..என்ன சொன்ன கல்யாணம் தாலி புருஷன் ப்ளா ப்ளாவா, வாட் நான்சென்ஸ் ஹான், என்ன பேசிட்டு இருக்க, நல்ல வேளை வெளியே யாரும் இல்லை, யாராவது இதெல்லாம் கேட்டு இருந்தா என்னோட பிரெஸ்டிஜ் என்ன ஆகியிருக்கும் ....
"அயித்தான் என்ன கோவமா இருந்தாலும் உட்கார்ந்து ஆறஅமர பேசிக்கலாம் , கோவப்படாதீங்க அயித்தான்...
"ப்ச் எங்க இருந்து வந்து தொலைச்சது அவனே ஒரு மாடல் காட்டான் வந்து மாட்டுதுகளே" என்று பதறி போன பல்ராம்
ஏம்மா நீ வெளியே போ , நேரம் காலம் தெரியாம வந்து பேசிகிட்டு" என்று அவள் அருகே வர
"பல்ராம் உன் டூயூட்டி முடிஞ்சிருச்சில்ல "
ம்ம்
"கிளம்பு
"தீயவா , உன்ன பத்தி தெரியாம வந்து நின்னுடுச்சு போல இருக்கு , நான் அந்த பொண்ணு கிட்ட பேசி புரிய வச்ச அனுப்பி விடுறேன்டா, எதுவும் குண்டக்க மண்டக்க பண்ணிடாத "நண்பன் தோளை தொட தீயாக அவனை முறைத்த தீயவன்
"தெரியாம பண்ணினாளா , ப்ளான் பண்ணி வந்திருக்காடா, பாரு அவ முகத்துல கொஞ்சம் கூட பயம் இல்லை... எப்படியாவது என் கூட ஒட்டிக்கிட்டு இந்த காசு பணம் பங்களா, எம்எல்ஏ பொண்டாட்டிங்கிற அந்தஸ்துல வாழனுங்கிற ஆசையில வந்திருக்கா புரியல .... ஒருத்தி முகத்தைப் பார்த்தாலே ஆ முதல் ஃக்கு வர அத்தனையும் எனக்கு தெரிஞ்சுடும்டா"
"சரிடா நான் ஏதாவது சொல்லி
"உனக்கு என்ன கரிசனை ,உன்ன வெளிய போன்னு சொல்லி பத்து நிமிஷம் ஆகுது , கெட் அவுட் என்று தீயவன் கத்த ,பல்ராம் பெருமூச்சு விட்டுவிட்டு ஃபைல் அனைத்தையும் மேஜையில் வைத்தவன்,பின்னால் இருக்கும் அவன் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டான்..
"ம்ம இப்ப சொல்லு ,உன் பிரச்சனை என்ன?? என்று சோபாவில் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான் தீயவன்
துளசி அவன் முன்னால் கையை பிசைந்தாலும் பயம் இருந்தாலும் அவனை எதிர்கொண்டு தான் தீருவேன் என்ற தைரியத்தோடு துளசி நிற்பதே பெரிதுதான் ...
"நான் துளசி, நீங்க பாட்டுக்கு தாலி கட்டி விட்டுட்டு வந்துட்டீங்க எங்க வீட்ல எனக்கு வேற கல்யாணத்துக்கு தயார்படுத்துனாங்க அயித்தான்... அதான் ராத்திரியோட ராத்திரியா கிளம்பி உங்கள தேடி ஓடி வந்துட்டேன்... இதோ அன்னைக்கு கல்யாணத்துக்கு வரும் போது இதை விட்டுட்டு வந்துட்டீங்க, இதை வச்சுதான் உங்களை தேடி வந்தேன்... எரிச்சலாக அவள் பேச்சை கேட்டான் ....
"சத்தியமா உங்க காசு பணம் பதவி இதுக்காக எல்லாம் வரலை அயிததான் நம்புங்க" என்று அவன் விட்டுவிட்டுப் வந்த அந்த காகிதத்தை நீட்ட ...
அதை தன் காலால் தட்டி விட்டவன்
அன்னைக்கே படிச்சு படிச்சு சொல்லிட்டு தான் வந்தேன் இந்த கல்யாணம் ஜஸ்ட் பொம்மை கல்யாணம், நீ எனக்கு லீகல் பொண்டாட்டி கிடையாதுன்னு பணத்தை வாங்கிட்டு எல்லாத்துக்கும் சரி சாமி , சரி சாமி போட்டு உன்னை என் பக்கத்துல உக்கார வச்சுட்டு , இப்போ பின்னாடியே அனுப்பிவிட்டு பிரளயத்தை உண்டாக்க பார்க்கிறானுகளா... உன் ஊரையே ஒன்னும் இல்லாம கொளுத்திடுவேன் ஜாக்கிரதை... ஒழுங்கு மரியாதையா நான் மூணு எண்ணுவேன் அதுக்குள்ள இந்த வீட்டை விட்டு வெளியே போயிடு இல்லன்னு வையி உன் பொணம் தான் இந்த வீட்டை விட்டு வெளியே போகும் புரியுதா? என்று தீயவன் கண்ணை மூடிக்கொண்டவன்...
"ஒன்று "
"ரெண்டு
"மூணு என்று முடித்து விட்டு கண்ணை திறக்க அவன் காலடியில் காலை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள் அவன் மனைவி ...
வாட் ஆர் யூ டூயிங்?? என்று அவன் அருவருப்பாக அவளை காலில் தள்ளிவிட்டான்..
"அயித்தான் , என் நிலமையை புரிஞ்சுக்கோங்க, நீங்க கட்டுன தாலியை புனிதமான நம்பி வாழ்ந்துகிட்டு இருக்கேன்.... நீங்க எதுக்காக அந்த தாலிய கட்டுனீங்களோ தெரியாது, உங்களுக்கு வேணும்னா அது பொம்மை கல்யாணமா இருக்கலாம், ஆனா என்ன பொறுத்த வரைக்கும் அது தான் என் கல்யாணம்... நீங்க தான் என் புருஷன் , உங்கள தவிர என் ஜென்மம் முழுக்க வேற யாரையும் என்னால புருஷனா பார்க்க முடியாது அயித்தான் , என்ற விரட்டாதீங்க... நானும் இங்குட்டு ஏதாவது ஒரு மூலையில் இருந்துக்கிறேன்.. நீங்க என்னை ஏத்துப்பீங்கன்னு நினைச்சு எல்லாரையும் விட்டுட்டு ராவோட ராவா ஓடி வந்துட்டேன், மறுபடி அங்க போக முடியாது போக முடிஞ்சாலும், நான் போக மாட்டேன் ... உங்க கூடத்தான் இருப்பேன்" என்று அழுது கொண்டே அவனை அண்ணாந்து பார்க்க... எட்டி அவளை மிதிக்க போன தீயவன் தரையில் ஓங்கி மிதித்துவிட்டு
"பச் பாரு என்ன கோவக்காரன் ஆக்காத, வீணா ஒரு கொலை பண்ண வைக்காத, ஏற்கனவே ஏகப்பட்ட கொலை பண்ணிட்டேன் , அதை மறைக்க ஏகப்பட்ட போர்ஜரியும் பண்ணி இருக்கேன், உன்னை கொல்றதோ இல்ல உன்ன கொன்னுட்டு மறைக்கிறதோ எனக்கு ஜூஜூபி மேட்டர் என்று சொடுக்கு போட்டவன்
"உன்ன போட்டு தள்ள ரெண்டு நிமிஷம் ஆகாது ஏதோ தெரியாத்தனமா வந்து இங்க மாட்டிக்கிட்டேன்னு நினைக்கிறேன்.. ஒழுங்கா இந்த தாலியை கழட்டி வச்சிட்டு கிளம்புற வழியை பாரு..
"ம்ஹூம் மாட்டேன்
"ப்ச், வாட் யூ வாண்ட் பணம் வேணுமா, இல்ல ப்ரோபெர்ட்டி ஏதாவது, இல்ல நகை எது வேணுமோ கேட்டு வாங்கிட்டு என் முகத்துல முழிக்காம திரும்பி பார்க்காம ஓடிரு.... ஐ திங்க் உனக்கு லக்கு இருக்குன்னு நினைக்கிறேன்... அதனால தான் என் முன்னாடி இப்படி எல்லாம் பேசின பிறகும், இன்னும் உயிரோட நின்னுகிட்டு இருக்க.. கிளம்பு கிளம்பு என்று தன் பாக்கெட்டை தடவி ஒரு கட்டு பணத்தை தூக்கி அவள் முகத்தில் வீசியவன் , போ என்னும் விதமாய் விரலை அசைக்க ...
"துளசியோ மீண்டும் பணத்தை எடுத்துட்டு டீப்பாயில் வைத்தவள்
"எனக்கு பணம் எல்லாம் வேண்டாம் , நீங்க தான் வேணும், எனக்கு சொத்து எல்லாம் வேண்டாம் உங்க பொண்டாட்டியா நான் இங்க இருக்கணும், எனக்கு நீங்க தர்ற நகைநட்டு எல்லாம் வேண்டாம் இந்த தாலி கடைசி வரைக்கும் என் கழுத்துல கிடக்கணும், நீங்க தான் என் புருஷன் உங்க கூடத்தான் வாழுவேன் என்ன ஏத்துக்கோங்க அயித்தான் , நான் எத்தனை நாள் ஆனாலும் இங்க தான் இருப்பேன் உங்க ஆசை தீர என அடிச்சு போட்டாலும் பரவாயில்லை.. நான் போக மாட்டேன்ஆஆஆஆஆஆஆஆஆஆஆ அவள் தலைமுடியை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு போய் வாசலில் போட்டவன்
"சத்தம் வராம எழும்பி ஓடிரு என்ன பிளாக்மெயில் பண்ணலாம்னு நினைச்சு வந்தியா, அதெல்லாம் இங்க நடக்காது, உனக்கும் எனக்கும் நடந்தது மைனர் கல்யாணம் ...,சட்டப்படி அது செல்லவும் செல்லாது.. உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்ததற்கு அத்தாச்சி கூட இல்ல... ரெஜிஸ்டர் பண்ணல, ஊர் உலகத்துக்கு தெரியாத அந்த கல்யாணம் கடைசி வரைக்கும் வெளிய தெரியாது , தெரிய விடவும் மாட்டேன் ... என்னோட எய்ம் எல்லாம் ரொம்ப பெருசு , தேவை இல்லாம மூக்க நுழைச்சு மூச்சை விட்டுட்டு போயிடாத, காலையில இந்த இடத்துல நீ இருக்கக் கூடாது லாஸ்ட் வார்னிங் கொடுக்கிறேன், நாளைக்கு இங்க இருந்த என்னோட அரக்கத்தனமான முகத்தை நீ பார்க்க வேண்டியது இருக்கும் புரியுதா ?கெட் அவுட் என்று விட்டு தீயவன் கதவை இழுத்து மூடிவிட்டு திரும்ப ...
வெள்ளை சேலையில் தன் அறைவாசலில் நின்று அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அவரின் தாய் தேவகி
உன்ன யார் வெளிய வர சொன்னது ? "
"இல்லை சத்தம் கேட்டு வந்தேன்" என்ற தன் தாயை எரிச்சலாக பார்த்தவன்
"உன் ஆசைக்கு ஆசைநாயகியாக, எவன் கூடையோ படுத்து கிடந்தல்ல அதோட போய் தொலைஞ்சு இருக்க வேண்டியதுதானே , உனக்கு எல்லாம் எதுக்கு புள்ள ? என்ன பெத்து எடுத்தியே, அவனுக்கு கௌரவத்தை, அந்தஸ்த்தை கொடுக்க உன்னால முடிஞ்சதா? வப்பாட்டி மகன்னு ஊரெல்லாம் என்ன கேவலமா பேசிட்டு இருக்காங்க... அவ்வளவு கஷ்டப்பட்டு நான் இந்த இடத்தில் வந்து இருக்கேன், இந்த இடத்தை விட்டு என்ன யாரும் கீழ இறக்க விட மாட்டேன்...என்ன பெத்ததுக்கு கூலியாதான் உன்ன இங்க கௌரவமா வச்சு சோறு போட்டுக்கிட்டு இருக்கேன்..என் முகத்தில் உன்ன முழிக்க கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இப்ப எதுக்கு அறைய விட்டு வெளியே வந்த ஹான்"
என்று கேட்ட தன் மகனை வலியோடு பார்த்து சிரித்த தேவகி... மீண்டும் பதில் சொல்லாமல் போய் அறைக்குள் பதுங்கிக் கொண்டார்..
அவன் முகத்தில் முழித்தால் இது எப்போதும் நடக்கும் காட்சி தான் மழுங்கி போனது மனது ... என் புள்ளையை பார்க்க ஒரு வாய்ப்பு என்று மறைந்து இருந்து மகனை பார்த்து பூரிக்கும் தான் தேவகியாக தான் இருக்கும்.. என்ன சாபமோ காதலித்தவன் திருமணம் ஆனதை மறைத்து இவரை வப்பாட்டி ஆக்கி விட்டான் , பெத்த மகன் அவளை மனுசியாகவே பார்ப்பது இல்லை ஊரார் வேசியாக பார்க்கின்றனர் கூனிகுருகி ஒரு வாழ்க்கை பெருமூச்சு விட்டார்..
எல்லாருக்கும் உலகத்தில தாய்னா தெய்வத்துக்கு சமானம் ..ஆனா எனக்கு மட்டும் உன்னை பார்க்கவே அருவருப்பா இருக்கு, ச்சை என்று மகன் பேசிய கூசும் வார்த்தைகளை கேட்டு தினம் தினம் கூசி போய் நின்றாள் தேவகி..
சிங்கத்துக்கு வேட்டையாட தான் தெரியும்
இந்த தீயவனுக்கு தீங்கு செய்ய மட்டுமே தெரியும் ...