பசப்புறு பருவல் 18

Pasa18

18 பசப்புறு பருவல்!!

ரித்விக்கோடு போனை பேசிவிட்டு வைத்தவளுக்கு சில வினாடி எதையுமே யோசிக்க முடியாத அளவிற்கு குழப்பம் .. 

"அவரா என்கிட்ட இவ்வளவு உரிமையா பேசுனது பெயர் சொல்லி எல்லாம் கூப்பிடுறார்... குடிச்சா தானே ஆளுக்கு மப்பு ஏறி ஒரு மாதிரி பேசி வைப்பார் , நிதானமா தான் பேசுன மாதிரி இருக்கு .. ஒருவேளை வெளிநாட்டு சரக்கா இருக்குமோ?? அதனால உளராம பேசுறாரோ, எதுக்கும் அவரை நேர்ல பார்த்தா தான் தெளிவா இருக்காரா இல்லையான்னு கண்டுபிடிக்க முடியும்..அவர் வர்ற வரைக்கும் எந்த முடிவுக்கு வரக்கூடாது என்று நினைத்த வைசுவுக்கு முள் வேலி போட்டு இறுக்கி வலித்த இதயம் அவன் பெயர் சொல்லி அழைத்ததிலேயே இறுக்கம் தளர்ந்தது போல இருந்தது மெய் .. மெல்ல படுக்கையில் தூங்கும் மகள் அருகே போய் அமர்ந்தாள் ..

தூங்கும் மகளும் அவனும் வேறு வேறு இல்லை எப்படி குழந்தையின் உணர்வுகளை ஊனோடு உயிராக பிள்ளையோடு பழகினால் மட்டுமே தாயால் புரிந்து கொள்ள முடியுமோ? அப்படியே அவனோடும் அருகே இருந்து பழகினால் தான் அவனுக்கு என்ன வேண்டும் எப்படி தன் அன்பை கொடுக்க வேண்டும் என்று இவளுக்கு தெரியும்... குறுகிய கால வாழ்கையில் இருவரும் இணைந்து இருந்த நிமிடங்கள் சொற்பமே அதில் புரிதல் தட்டுபாடே அதிகம் ... 

புரிதல் இல்லாதவனை பிடித்து வைத்து புரிந்து கொள் புரிந்து கொள் என்று மண்டையில் கொட்டினால், கணித வகுப்பில் வாய்ப்பாடு தெரியாது முழிக்கும் பிள்ளை போல் தான் முழித்து வைப்பான்.. தவறு பாதிக்கு பாதி இவள் பக்கத்திலேயும் இருக்கிறதே. அவன் சொன்னதற்கு எல்லாம் ஆமாம் என்று மண்டையை ஆட்டினால்

"ஓ நாம சொல்றத அப்போ ஆமோதிக்கிறாங்க என்றுதான் நினைப்பான் ...இல்லடா லூசு நாய , உன்ன விட்டு போக எனக்கு மனசு இல்ல, உங்க கூட தான் வாழ்வேன் என்று இன்று பேசியதை அன்று பேசி இருந்தால் அப்பவே மூன்றாவது புள்ள தாண்டி நாலாவது பிள்ளைக்கு ரூட் போட்டு போய் இருக்கலாம் பேத்த குட்டிகளுக்கு நீந்த தெரியவில்லை என்ன செய்ய??  

"வைசு இல்லையா அத்தை" என்று கீழே கேட்ட கணவன் குரலில் வைசு போகவா வேண்டாமா என்று யோசனையில் நிற்க 

"வைசு வைசு வைசு அவன் கத்தி அழைக்க 

"ஹான் இருக்கேன் வர்றேன்" என்று பதில் மேலிருந்து கொடுத்தவள் 

" என்னதான் நடக்குன்னு பார்ப்போம் "என்று மேலிருந்தே அவனை உத்து பார்க்க 

"ஒரு காப்பி "என்று கண்ணை சுருக்கி கேட்ட ரித்விக்கை வைசு ஆளை யாரும் மாத்தி அனுப்பிட்டாங்களா என்பது போல பார்த்து வைக்க..

"வெளிய வேலை இருக்கு ஒரு காப்பி எடுத்துட்டு வா பிறகு உன் புருஷனை நின்னு நிதானமா பாரு என்ற அவன் தடால் பேச்ச்சில் வைசு பே என்று பார்த்து வைக்க ... 

ஹலோ உங்ககிட்ட தான் மேடம் காப்பி கிடைக்குமா இல்லையா 

ஹான் கிடைக்கும் டவுட்டே இல்லை யாரோ என் மாப்பிள்ளைக்கு வேப்பிலை அடிச்சிட்டாங்க ஐந்து வருட காலமாக புருசனை இப்படி பார்க்கவே செய்யாத வைசு கண்ணை உருட்டினாள் அவன் அருகே சுற்றி சுற்றி மூக்கை உறிஞ்ச...

என்ன ?

குடிச்சிருக்கீங்களா சத்தம் இல்லாது குனிந்து அவனுக்கு மட்டும் கேட்க 

ஊஊஊஊ குடிச்ச மாதிரியா இருக்கு காற்றை நிரப்பி அவள் முகத்தில் ரித்விக் ஊத .. அவன் பிரத்தியேக மணம் தான் வந்தது .. இருவர் கிசுகிசுப்பு பேச்சை வைசு தாய் தகப்பன் கண்டு ஊமையாக சிரித்து கொண்டே நகர ... 

போதை தான் ஆனா மது போல இல்லை மனைவி போதை இப்படி சொன்னா உனக்கு புரியாது காப்பி கொண்டுட்டு வா விளக்கமா சொல்றேன் 

ம்ம் என்று மண்டையை ஆட்டுவது அவள் முறை ஆகி போனது ... இவன் கைகள் காப்பியை கலக்க கலக்க ஹாலில் தகப்பனோடு பேசும் அவன் மாற்றத்தை தான் வித்யாசமாக ஓரக்கண்ணால் பார்த்தாள் 

ஏற்கனவே அவளுக்கு மெண்டல் ப்ரஷர் , இதுல கம்பெனியை போட்டு பார்த்தா உடம்பு என்னத்துக்கு ஆகும் நான் டேக் ஓவர் பண்ணிக்கிறேன் மாமா வாட் யூ திங்க் ? 

அட்ரா அட்ரா இதுதான மருமகனே எதிர்பார்த்தேன் பையன் இல்லாத வீட்டுல மருமகனே பையனா வந்தா ஆகாத என்ன ? அவக்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க "

"வைசு 

"ஆங் "

"நீ என்ன நினைக்கிற, உனக்கு வரணும்னு தோணும் போது வா ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்துக்கலாம்... "ரெண்டு பேரும் சேர்ந்து என்ற வார்த்தையே போதை தான் போல தானாக தலையாட்டி சம்மதம் சொன்னாள்.... 

அப்பா அம்மா வேணும் என்று தூங்கி முழித்து வந்த லேகா ரித்விக் மடியில் உட்கார்ந்து அழ கண்ணை கசக்க 

"இதோ வைசு அம்மா இருக்காங்கல்ல "

"நங்கை அம்மா வேணும்" என்று குழந்தை உதட்டை பிதுக்கிட காப்பியை கொண்டு வந்த வைசு முகம் வாடி போக நின்றிருந்த வைசு கையை இழுத்து தன் அருகே உட்கார வைத்தவன் 

"இது யாரு என்று மகளிடம் கேட்க

"வைசும்மா 

"அது யாரு 

"நங்கை அம்மா 

"அப்போ உனக்கு எத்தனை அம்மா ?

"தெரில 

"ரெண்டு அம்மா ஒன்னு பெருசா ரெண்டு பெருசா ?

"ரெண்டு தான் 

"எல்லாருக்கும் ஒரு அம்மா, பட் உனக்கு ரெண்டு அம்மா யூ ஆர் ஸ்பெஷல் இல்ல 

"ம்ம் 

"இங்க வந்தா வைசு அம்மா , அங்க போனா நங்கை அம்மா ரெண்டு பேரும் உன்ன பார்த்துப்பாங்க உனக்கு என்ன வேணுமோ ரெண்டு அம்மா கிட்டேயும் கேட்கலாம் டபுள் டமக்கால்ல.. இங்க ஒரு பொம்மை அங்க ஒன்னு அப்படிதான வைசு ... 

"அப்படியா வைசு அம்மா, எனக்கு ரெண்டு அம்மாவா ரெண்டு பேரும் எனக்கு எல்லாம் வாங்கி தருவீங்களா என்று குழந்தை வைசுவை பார்க்க 

ம்ம் ரெண்டு பேரும் உனக்கு அம்மா தான் இங்க இருக்கும் போது என் பேபி, அங்க இருக்கும் போது நங்கை பேபி டபுள் பெனிபிட் டபுள் மம்மி நல்லா இருக்குல்ல என்று வைசு கண்ணை சிமிட்ட 

"ஓஓஓ அப்போ நங்கை அம்மாக்கிட்ட எப்போ போறது என்று மறுபடியும் நங்கையை தேடி குழந்தை இழுத்தது... பெத்தது இவள் ஆனால் தாய் அன்பை கொட்டி கொடுத்தது அவள் ஆயிற்றே , வைசுவுக்கு புரிந்தாலும் துக்கத்தை தொண்டையில் அடக்குவது தவிர வேறு வழி இல்லையே 

"பழகிடுவா விடு யோசிக்காத" என்று வைசு கையை அழுத்தி கொடுத்தான்... பழகுவாளோ இல்லையோ ஆனால் அவன் தந்த அழுத்தம் சமாதானம் செய்ய வைத்தது மெய் ... 

போனில் நங்கையோடு பேசி கொண்டிருந்த ரித்விக் விரல்கள் மனைவி விரலை வருடி தன் கைக்குள் பிடித்து வைத்திருக்க இருக்கவா போகவா என்பது போல புதுபெண்ணாக வைசு நெளிந்து கொண்டு அவன் அருகிலேயே இருக்க ... 

"ஓஓஓ சரி நங்கை அப்போ கல்யாணத்துக்கு ஒரு நாள் முன்ன வந்திடு ..

"அவளுக்கு வேலை இருக்காம் கல்யாணத்துக்கு வர்றேன்னு சொல்றா அதான் நீ இருக்கியே ரெண்டு பேரும் வேலையை சேர்ந்து பாத்துக்கலாம் என்று தலையை திரும்பிய ரித்விக் தாடி வைசு கன்னத்தில் உரசி உடல் சிலிர்த்து போனவள் 

சரி ரித்விக், நான் பாப்பாவுக்கு சாப்பாடு ரெடி பண்றேன் என்று மெல்ல நழுவி கிச்சன் உள்ளே ஓட போக ரித்விக் அவள் கையை பிடித்து இழுத்தவன் இழுப்பில் வந்து வைசு ரித்விக் மடியிலேயே அமர சுற்றி முற்றி பார்த்தவன் ஆள் இல்லை என்பதை பார்த்து விட்டு 

அது என்னடி ரித்விக், மாமா சொன்னா குறைஞ்சு போவியா ? ஸ்லோவா போனா ஒரே ஸ்லோ வேகம் எடுத்தா ஜெட் வேகம் என நிற்கும் புருசன் போக்குக்கு போக முடியாது வைசுதான் தடுமாறி நின்றாள்.. 

"என்ன திடீர்னு இப்படி எல்லாம் பேசுறீங்க, நீங்க இப்படி எல்லாம் பேசுற ஆள் இல்லையே ... அவன் மடியில் பூச்சி போல நெளிய... அவனோ இடையோடு கை போட்டு அவளை விடாது பிடித்தவன் அவள் பின்னலை தூக்கி முன்னால் போட்டு விட்டு முதுகில் முகத்தை பதித்து தாடி வைத்து அவள் முதுகை கூச வைத்து கொண்டே 

"மனசுக்குள்ள இப்படி எல்லாம் பேச தோணும் பட் உனக்கு விருப்பம் இல்லையோ என்ன பிடிக்காம கல்யாணம் பண்ணிக்கிட்டியோ , உனக்கு என்ன ஏத்துக்க முடியலையோன்னு பல கேள்வி எதுக்கும் அப்போ தெளிவா விடை இல்லை ... நானா விட நானா ஒரு வினாவுக்கு விடை எழுதி அவுட் ஆப் சிலபஸ் ஆகி போச்சு , நீயாவது சொல்லி இருக்கலாம்ல வைசு ...

"வேண்டாம்னு சொல்ற உங்கிட்ட என்ன பேசன்னு தெரில 

"அன்னைக்கு போட்ட அடியை அப்பவே போட்டு நீதான்டா லூசு கம்மனாட்டி வேணும்னு சொல்லி இருந்தா 

"சொல்லி இருந்தா 

"லேகா பாப்பாவுக்கு தம்பி வந்திருக்குமே ...

"விடுங்க சமையல் வேலை இருக்கு அவன் தீடீர் ரொமான்ஸ் பேச்சில் இவளுக்கு வியர்த்து விட்டது ..

"நமக்குள்ள என்ன வெட்கம் வேண்டி கிடக்குன்னு இப்பதான் தெளிவாகி இருக்கேன் .... எனக்கும் லவ் ரொமான்ஸ் எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வரும்ங்க... ஆளு இல்லையேன்னு தான் சோலோவா சுத்தி வந்தேன்.. இப்பதான் தெளிவாகிடுச்சு இல்ல .. 

என்ன தெளிவு 

உன் மனசுல நான்தான் இருக்கேன்னு ... இருக்கேனா?? என்று கேள்வியாக அவளை குனிந்து பார்க்க ..

தெரியல 

மனசுல இருக்கிறதால தான மடியில இருக்க .... 

"ஓஓஓ "அந்த அளவுக்கு தெளிவு வந்துடுச்சா நம்ம ஆளுக்கு யார் மந்திரிச்சு விட்டான்னு தெரிலேயே இவருக்கு தானா எல்லாம் செல்ப் எடுக்காதே அட்வைஸ் ராணி நாலு அட்வைஸை கொடுத்து அனுப்பி விட்டுட்டாளா ?ஏதோ ஒன்னு இப்பவாவது பல்ப் எறிஞ்சதே... என்று அவள் சத்தமில்லாது முனக 

பல்ப் எரிய தான் லேட் ஆகும் எரிஞ்சா அணைக்க முடியாது என்றவன் பதிலில் அவள் தலையை குனிந்து கொள்ள 

"இனிமே அப்படியே கொஞ்சம் கொஞ்சமா புடிச்சு வந்துருவேன் நம்புங்கங்க என்று கண்ணை சிமிட்ட..

நம்புறேன் நம்புறேன் முதல்ல உங்க பிள்ளையை சரிகட்டி கொடுங்க, அதுக்கு பிறகு உங்க லவ் ரொமான்ஸ் எல்லாம் எப்படின்னு பார்க்கிறேன் என்று வைசு அவன் நெஞ்சில் முழங்கை வைத்து இடித்து விட்டு ஓடிவிட அவள் முகத்திலும் வெட்க புன்னகை ... இவன் முகத்திலும் அப்பாடா எப்படியாவது தேறிடணும் என்ற காதல் புன்னகை.. 

ராயன் வீட்டில் தம்பதியாக போய் திருமணம் பேசி தேதி குறித்து விட்டு இருவருமாக காரில் ஏறினர் என்ன பேச எப்படி பேச என்று தெரியாதவள் போல அவள் பார்க்க அவனோ அவள் கையை தன் கையோடு கோர்த்தே வைத்து கொண்டான்... 

படுக்கையில் மகள் நடுவே அவனும் அவளும் ஓரத்தில் படுத்து கிடந்தனர்.. காமம் தேடும் ஆசை எல்லாம் இருவருக்கும் இல்லை .. விட்ட காதலை பிடிக்க வேண்டுமே .. தலையை திருப்பி ரித்விக் அவளை பார்க்க அவளும் சரியாக அவனை நோக்கி திரும்பி படுக்க நான்கு கண்களும் தன்னை மறந்து முதலில் காதல் செய்ய கற்று கொள்ளஆரம்பித்தது..

கண்ணுக்கு காதல் நோய் வந்து விட்டாலே பசலை நோயிக்கு மருந்து கண்டுபிடித்து விடலாமே.. 

காதல் நோயியை இருவரும் விரும்பியே வாங்கி கொண்டனரோ ?

எப்படித்தான் லவ் பண்றான்னு பார்ப்போம் என்று அவள் கண்ணில் கேலி தெரிய 

இந்த கண்ணுல ஒரு நாள் என் காதலை போல சிறந்தது இல்லைன்னு பூரணமான பார்வை வர வைக்கிறேன் என்று அவன் கண்கள் நம்பிக்கையாக அவளை பார்த்தது ... 

ம்க்கும், இனி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன ? 

வைசு கண்களைமூடப் போக மெல்ல அவள் அருகே அசைவு தெரிந்து பட்டென கண்ணை திறக்க அவள் கணவன் தான் பச்சக் என்று முதல் முத்தம் அவள் இதழில் கொடுத்தான் 

ஹக் அவள் பதறி கண்ணை விரிக்க அவளை அலேக்காக தூக்கி தன் மீது படுக்கையில் போட்டு கொண்டவன்...

லவ் பண்ணலாமா என்று புருவம் உயர்த்திட..

இப்பவா 

எப்ப வேணும்னாலும் பண்ணலாம் உனக்கு ஓகேவா அவள் குழந்தையை திரும்பி பார்க்க .. 

இப்போ எப்படி ..

இப்படி என்றவன் கைகள் அவள் தலையை தடவி கொடுத்து உச்சி முத்தம் கொடுத்தபடி 

உன்னை முழுசா அறியும் முன்ன உன் மனசுல உள்ள பாரத்தை முடிஞ்ச அளவு குறைக்க பார்கிறேன் .. நிதானமா காதலிக்கிறவன் எல்லாம் காதலிக்க தெரியாதவன் இல்லை நம்ம காதல் கூட இணையை வலிக்க வச்சிட கூடாதுன்னு நினைக்கிற ஆளா கூட இருக்கலாம் எத்தனை நாள் தூங்காம இருந்தியோ தூங்கு என்று அவள் முதுகை வருடி தன்னையே படுக்கையாக கொடுக்க 

கீழே படுக்கிறேனே.. கிசுகிசுக்க இருவருக்கும் காமம் தரும் போதையை விட இஃது போதையாக தெரிந்தது ...

மீமிகு காதல் காமம் வேறொன்றும் இல்லை விரசம் இல்லாத இறுகிய அணைப்பும், தேடலும் மட்டுமே !!