பசப்புறு பருவல் 14
Pasa14

14 பசப்புறு பருவல் !!
ராயன் பயணிகள் ஏறும் சிறிய நேரத்திற்குள் டீ ஒன்றை குடித்துக்கொண்டு நிற்க ..அவன் போன் அலறியது...
காதல் பிசாசே காதல் பிசாசே என்ற பாட்டில் தலையை உதறி காதில் வைக்க ... அவன் காரசாரமான காதலி அவன் ஓய்வு எடுக்கும் நேரம் எப்படித்தான் அறிவாளோ டான் என்று போன் வரும் ...
ம்ம் சொல்லு
"வேலை முடிஞ்சிருச்சா ?
"இன்னும் ஒரு மணி நேரம் இருக்கு
ஓஓஓ
"என்னடி
"வேலை முடிஞ்சு வரும்போது பிரியாணி வாங்கி கொடுத்துட்டு போங்க" போனை வைத்து விட்டாள் பல்லை கடித்துக் கொண்டு மறுபடியும் போன் போட அந்தப் பக்கம் போன் எடுக்கப்படவில்லை...
"கொண்டு போய் கிளாஸ்ல விடுங்க , கூட்டிட்டு போங்க அது வேணும் இது வேணும் ரித்துவிடம் இருந்து அதிகாரமாக போன் வரும், வாங்கி கொடுக்கவில்லை அடுத்த நாள் முழுவதும் அவனுக்கு சாடை போச்சு தான் பதிலாக வரும்...இல்லை வேண்டுமென வேற பஸ்ஸில் போவாள் .. வாரக்கணக்காக தரிசனம் தராது காய வைப்பாள் அவன் போனை புடுங்கி தன் நம்பரை பதியும் போது ஜில்லென உணர்ந்தான் வொர்க் ஆவுது இப்படியே அலைவரிசை புடுச்சு போயிடு என மகிழச்சி அடைந்து பத்து நிமிடம் கூட ஆக வில்லை ... போன் போட்டாள்
என் வீடு தெரியுமா
சர்ச் பக்கம் தான
ம்ம் , ஜெராக்ஸ் எடுக்க கொடுத்தேன் உங்க வீட்டு பக்கம் தான் கடை இருக்கு வேலை முடிஞ்சு போகும் போது வாங்கி என்கிட்ட தந்துட்டு போக ...
ஏய் ஏய் ஏய் அவ்வளவு தான் சம்பளம் இல்லாது அடிமை வேலைக்கு அப்பாயிண்ட் ஆகி விட்டான் ...
லோன் எதுவும் போட முடியுமா ?
ஏன்
பைக் வேணும்
என்னடி கூச்சமே இல்லாம கேட்கிற
வாங்கி கொடு அவ்வளவுதான் முடிச்சாச்சு
ரெண்டு வருடம் போகட்டும் வாங்கி தர்றேன்
ம்ம் என்று போனவள் எந்த கணக்கில் தன்னோடு பழகுகிறார் புரியவில்லை ராய் ராய் என்று தோளில் வந்து சாயும் அந்த ரித்து இல்லை என்பது மட்டும் புரிந்தது...
நான் லவ் பண்றேன்னு நல்லாவே தெரியும் வேணும்னே சுத்தல்ல விடுறா, என் சம்பளத்துல பாதிய ஆட்டைய போட்டுடுடா என்று சலித்தாலும் அவள் கேட்டதை வாங்கிக் கொடுத்து விடுவான்..
"என்ன ராயா பொண்டாட்டி கிட்ட இருந்து இன்னிக்கும் போன் வந்துடுச்சு போல
பிரியாணியா இல்ல லெக் பீசா
"வழக்கம் போல பிரியாணி தான் , ஓசில தின்னு தின்னு ஊதி போய் கிடக்கிறா,
"புருஷன் சம்பாதிக்கிறது பொண்டாட்டிக்கு தானப்ப்பா..
"அதனால தான் நானும் அமைதியா இருக்க வேண்டியது இருக்கு "அவள் சொன்னதை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டான்... மலர் வேறு காலை
"டேய் உன் தங்கச்சிக்கு அடுத்த வாரம் வளைகாப்பு இருக்கு உன் பொண்டாட்டியை கூட்டிட்டு வாட
"அம்மா இன்னும் கல்யாணமே முடியல அதுக்குள்ள பொண்டாட்டியாவே ஆக்கிட்டீங்க
"ஏன் அவளை விட்டுட்டு வேற எவளையும் கட்ட போறியா என்ன
"இல்ல , ஆனா அவ முழிக்கிற முழியை பாத்தா பயமா இருக்கேம்மா,
"அதெல்லாம் அவளுக்கும் உன் மேல பிரியம் இருக்குடா அதனாலதான் உரிமையா உன்கிட்ட சண்டை போடுறா.. நான் சொன்னேன்னு சொல்லு கண்டிப்பா வருவா
நீயே சொல்லிடு என்று போனை போட்டு தாயின் கையில் கொடுக்க
"தங்கம்
தங்கம்
"என்ன?? எரிந்து விழுந்தாள்
"உன் நாத்தியா இருக்காளே, அவளுக்கு அடுத்த வாரம் சீமந்தம் வந்திடு
"அதுக்கு நான் ஏன் வரணும், வர முடியாது
"பட்டு சேலை எடுத்துட்டேன், சட்டைக்கு அளவு கொடுத்துட்டேன்னா சட்டையும் தைச்சிடுவேன் தங்கம் "
"ப்ச் எங்கிட்ட சேலை எல்லாம் கிடையாது ஜாக்கெட்டுக்கு அளவு தான் எடுக்கணும் "என்ற மருமகள் மாமியார் பேச்சை ஆ என ராயன் பார்த்துக் கொண்டு நின்றான்..
"சாயங்காலம் கடை தெருவுக்கு போயிட்டு வந்துருவோமா தங்கம் "
"சாயங்காலம் எனக்கு வேலை இருக்கு சண்டே வேணும்னா உங்க மகன் கூட போய் கொடுத்துட்டு வர்றேன் ... .
சரி தங்கம் சரி தங்கம் , சேலை புடிக்கலைன்னா நீயே உனக்கு பிடிச்சது மாத்திக்கிறியா ...
எனக்கு சேலையை பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது அதையே கட்டிக்கிறேன்.. என்ற மருமகளுக்கு அந்த வீட்டில் முதலுரிமை வழங்கப்பட்டது...
"ஏம்மா நீ இப்படி அவ என்ன சொன்னாலும் தலையாட்டுனா என்ன மரியாதை கொடுப்பா?
"அவ இந்த வீட்டுக்கு உரிமக்காரிடா.. என் மருமகளுக்கு சகல உரிமையும் உண்டுடா அவ அதட்டாம யார் இங்க அதட்ட போறா.. அவ ராஜ்ஜியம் பண்ணாம யார் ராஜ்ஜியம் பண்ண போறா... என் மருமகளுக்கும் எனக்கும் இடையில நீ யாருடா போ தள்ளி , ஞாயிற்றுக்கிழமை அவளை கூட்டிட்டு போய் ஜாக்கெட்டுக்கு அளவெடுத்து தைச்சு வாங்கிட்டு வந்துரு என்ன வேணும் ஏது வேணும்னு பாத்து வாங்கி கொடுத்து கூட்டிட்டு வா.
"ம்க்கும் , ஏற்கனவே அவளுக்கு என் பர்ஸ் மேல ஒரு கண்ணு கூட்டிட்டு போனேன் மொத்த காசையும் மொட்டை அடிச்சு விட்ருவா..
"அதுக்கு தானடா சம்பாதிக்கிற இத்தனை நாள் எல்லாருக்காகவும் சம்பாதிச்ச , இனி உன் பொண்டாட்டிக்காக சம்பாதி என்று மருமகளுக்கு இப்போதே ஜால்ரா போடும் தன் தாயைப் பார்த்து தலையில் அடிப்பதைத் தவிர வேறு வழி இல்லை..
"டொக் டொக்" ரித்து வீட்டு கதவை மெலிதாக தட்டினான் .... கதவை திறந்து கொண்டு வெளியே வந்த அவளை தடுமாறி போன கண்ணோடு பார்த்தான் முட்டி வரை பாவாடை , மேலே ஆண்கள் அணியும் சட்டை முடியை கேட்ச் கிளிப் போட்டு அடக்கி முகம் முழுக்க எதையோ தடவி தழுக்மொழுக் என்று வந்து நின்ற ரித்துவை ஒரு பார்வை பார்த்தவன் ....
"சாப்பாடு ..
"ம்ம் சூடா இருக்கா ??
"ஹான் அடுப்போட தான் வாங்கிட்டு வரணும் ட்யூட்டி போன இடத்துல வாங்கிட்டு வந்தேன் சூடு இருக்காது சுட வச்சிக்க
ப்ச் ம்ம் சலித்து கொண்டவள்
"உள்ள முட்டை இருக்குல்ல "
"டைனோசர் முட்டையே இருக்கு
"உள்ள பாத்ரூம் லைட் எரியல மாட்டி தந்துட்டு போங்க
"அடிங்க, நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனாடி
"வீட்டுக்கு வேலைக்காரன் வைக்கிற அளவுக்கு வசதி பத்தாது அதான் உன்ன போட சொல்றேன்
"மரியாதை இல்லாம பேசுறதுக்கு ஒரு நாள் வாயை கிழிக்க போறேன் என்று ராயன் வீட்டிற்குள் நுழைய அவள் கழட்டி போட்ட ஆடை ஒரு பக்கம் குப்பை ஒரு பக்கம், சமையல் என்ற பெயரில் கருக்கி போட்ட பாத்திரங்கள் பக்கம் என்று வீடே அலங்கோலகமாக கிடக்க
என்னடி வீடு இது ..
ஒரு வீட்ல வாழ போறவ இப்படியாடி இருப்ப...
"வேணும்னா அரை நாள் லீவு போட்டு எல்லாத்தையும் கிளீன் பண்ணி கொடுத்துட்டு போறியா?? என்ற இடையில் கை வைத்துக் கொண்டு நின்ற ரித்துவை முறைத்துபடி குளியலறை உள்ளே போக... வீடே இப்படி கிடந்தால் குளியல் அறை எப்படி கிடக்கும் அவள் உள்ளாடை தோரணம் மொத்தமும் என்னை பார் என் அழகை பார் என்று அவன் முகத்தில் வந்து விழுந்தது ... செல்வ சீமாட்டியாக வளர்ந்து விட்டாள் ... தனியாக எப்படி வாழ்வது என்பதே அவளுக்கு பிடிபட பல வருடம் ஆகி போனது கையில் தூசி படாத அவளே சமையல் என்ற பேரில் எதையோ விழுங்கி உடல்நிலை சரியில்லை என்றாலும் தன் வேலையை செய்து சுருண்டு படுத்து கொள்ளுகிறாள்...
வெளியே கிடந்த தூசி தும்புக்கெல்லாம் கோபம் கொண்டவன் தன் முகத்தில் வந்து விழுந்த தும்பை துணியில் கோபம் கொள்வதற்கு பதில் மோகம் கொண்டு திரும்பி அவளைப் பார்க்க ... வேகமாக ஓடி வந்து அவன் கையில் இருந்து அதை பிடுங்கி கட்டிலில் போட்டவள்
அதை ஏன் எடுக்கிறீங்க , வந்த வேலையை பாருங்க
"இதையும் எடுத்துட்டு போ" என்று முகத்தில் விழுந்த இடை அழகை மறைக்கும் ஆடையை தூக்கி அவளை பார்த்து கொண்டே ஒரு முத்தமிட்டு கொடுக்க வெடுக்கென்று வாங்கிய ரித்து போய் கட்டிலில் அமர ...
ம்ம் சந்தன சோப்பாடி..
ப்ச் அவள் உதட்டை பிதுக்க
"எப்படியும் நான்தான்டி அங்க முகத்தை புரட்டி உன்ன இம்சை பண்ண போறது உதட்டை உதட்டை பிதுக்கு அதுக்கு தண்டனை எல்லாம் வேற விதமா தர்றேன் .. அந்த ஸ்பனர் எடு ...அன்று தள்ளி நின்ற காதலன் இன்று பேசுவது எல்லாம் சென்சார் தான் இவள் பேசாதே என்றெல்லாம் சொல்ல மாட்டாள் உதட்டை சுளித்து கொண்டு போயவிடுவாள் அதுவே அவனை ராஜ போதையில் போட்டு விடுகிறது,.
எது இதுவா? இதுவா
தேராக திடுதிடு என்று திமில் ஆட வந்து அவன் நின்று ஸ்டூல் அடியில் நின்றாள்... அவன் மேலிருந்து கீழே குனிய ரெட்டை மலை பளிச்சென்று மறைப்பு இன்றி மலர் நடுவே கருப்பு வண்டு மொய்க்க அவனை மின்சாரம் பாய வைக்க ராயன் சட்டென தலையை திருப்பி கொண்டான்
பாதகத்தி!! கண்டதையும் காட்டி கொன்னுடுவா போலவே ஏன்டி இத்தனை வச்சிருக்கியே ஒன்னு போட்டு தொலைய கூடாது
அழுத்தும் வீட்டுல இருக்கும் போது ப்ரீயா தான் இருப்பேன் ...
"அப்போ நான் பார்த்தது தெரியும்
"மேல நின்னா தெரியத்தான் செய்யும்னு தெரியாத முட்டாளா
"அய்யோகியப்பய தங்கச்சி இல்ல குசும்பு கொஞ்சம் கூடத்தான் இருக்கும்
"என்ன சொன்னீங்க?
"ம்ம் கொஞ்சம் ஓவர்தான்னு சொன்னேன்.. நீ பிடிக்கவே வேண்டாம் போய் அங்கேயே உட்கார் தாலி ஏறும் முன்ன உண்டாகிட்டா என் மானம் சந்தி சிரிச்சுடும் ..
ப்ச் என்று தரை அதிர ரித்து நடக்க அவள் மத்தள அழகு தடுக்தடுக் என்று ஆடி அவன் கண்ணை அங்கும் இங்கும் நகட்ட விடவில்லை...
கிளம்பி வர்றியா கடைக்கு கூட்டிட்டு போறேன் முகத்தை கழுவிய ராயன் அவள் தூக்கி போட்ட டவலால் முகத்தை துடைத்து கொண்டு வெளியே வர ஜெர்க்காகி நின்றான்.. ரித்து பின்னால் பட்டையை மாட்டி கொண்டு கண்ணாடி முன்னால் நின்றாள் ..
ஏன்டி உள்ள போய் மாத்தி தொலைய கூடாதா என்று முதுகு காட்டி நின்று கொள்ள
"வந்துட்டீங்களா கை எட்டல வந்து மாட்டி விடுங்க
"விளையாடுறியா நீ ... நான் இல்லைன்னா யார் மாட்டுவா
"நான்தான், இப்பதான் நீங்க இருக்கீங்களே மாட்டி விடுங்க ப்ச் மாட்டுங்க...
ஸ்ஊஊஊஊஊ இவ ரவுண்ட் கட்டி தாக்குறது பார்த்தா சேதாரம் எனக்கு பெருசா இருக்கும்னு மட்டும் தெரியுது.. என்று அடி மேல் அடி வைத்து அவள் அருகே போன ராயன் கண்ணாடியில் தெரிந்த அவள் முன் தும்பிக்கை அழகை எச்சில் கூட்டி ரசித்தவன்..
"இப்படி காட்டுறியே தப்பு தண்டா ஆனா என்ன பண்ணுவ
"எட்டி மிதிச்சா தப்பு தண்டாவுக்கு வழியே இருக்காது அந்த தைரியம் இல்லாதவ கிடையாது...
"அப்ப எதுக்குடி காட்டி மூட் ஆக்குற
"படியில இருந்து விழுந்தா மண்டை உடையுமா ??
"சான்ஸ் இல்ல
"உச்சி மலையில இருந்து விழுந்தா மண்டை சிதறுமா
"சிதறிடும்
"ம்ம் எப்படியும் உங்கள டார்ச்சர் பண்ண போறது உறுதி என் ஆசைக்கு உச்சியில இருந்து தள்ள போறேன்
மனசாட்சி கெட்டவளே உன்ன பாடா படுத்த போறேன்னு சொல்லிட்டு செய்றியா
எதுலும் நேர்மை தான் எனக்கு பிடிக்கும் ..உங்களை போல நடிச்சு ஏமாத்த மாட்டேன் மண்டை சீக்கிரமாக உடைய போறது உறுதி ஆஆன்னு பார்த்துட்டு நிக்காம இழுத்து மாட்டி விடுங்க ... என்றவன் கரம் வண்மையாக அவளை முன் தேகத்தை இழுத்து தூக்கி அடைக்க... உதட்டை கடித்து முகத்தை திருப்ப போனவள் கழுத்தில் இச் வைத்தவன்
காதல்ல சேதாரம் ரெண்டு பக்கமும் தான் என்ன சேதாரம் ஆனாலும் பரவாயில்லைடி சேர்ந்தே உச்சியில இருந்து குதிப்போம் என்றவன் கைகள் அவள் மெழுகு நீள் வடிவத்தை கையில் எடை பார்க்க.. அவனை வெடுக்கென்று தள்ளி விட்ட ரித்து .. ஆடையை மாட்டி கொள்ள
ப்ச் ஏன்டி ஆசையில் ராயன் அவளை தான அணைக்க போக
போதை உச்சியில போய் கிறுக்கு பிடிச்சு சாவு ..உன்ன காட்டுவேன் உரசுவேன் டெம்ட் பண்ணுவேன் ஆனா பக்கத்துல விட மாட்டேன் என்று போனவள் தந்த தண்டனையில் தொண்டை வரண்டு போய் நின்றான் ....
ஒன்றை காட்டி ஏமாற்றுவது எவ்வளவு பெரிய தவறு ... ஏமாற்றத்தில் பெரிய ஏமாற்றம் சிறிய ஏமாற்றம் என்று இருக்கிறதா ஏமாற்றம் என்றாலே வலிக்க தானே செய்யும் அன்று அவளுக்கு கொடுப்பது போல கொடுத்து ஏமாற்றினான் இன்று இவள் கொடுப்பது போல கொடுத்து ஏமாற்ற ஆரம்பித்தாள்...