பசப்புறு பருவல்13

Pasa13

பசப்புறு பருவல்13

13 பசப்புறு பருவல் 

குழந்தையை தத்தெடுக்க நடுராத்திரி வந்து ரித்விக் ஏற்காட்டில் இறங்க, அந்த நடு காட்டில் ஒரு பெண் உருவம் ஓடி வந்து அவன் மீது மயங்கி சரிந்தது... பின்னால் பல ஆண்கள் கையில் ஆயுதங்களோடு துரத்தி வருவது தெரிந்ததும் விபரீதம் எனப் புரிந்தவன் அப்பெண்ணை அப்படியே அலெக்காக தூக்கிக் கொண்டு ஆள் கண்ணில் படாத மாதிரி ஒரு புதர் மறைவில் ஒளித்து போட்டு விட்டான்

"இங்க ஒருத்தி ஓடி வந்தாளா?

நான் பாக்கல என்று விட அவர்களை வேறு பக்கம் திசை திருப்பி விட்டுவிட்டு மயங்கி கிடக்கும் பெண்ணை வந்து நீர் தெளித்து அமர வைத்தவன்..

"யாரும்மா நீ ??என்று கேட்டதும் அந்தப் பெண் கண்களை விரித்து அவனைப் ஆச்சர்யமாக பார்த்தவள் 

மாமா என்க அவனுக்கு சத்தியமாக இது யார் என்று அடையாளம் தெரியவில்லை.. 

"மாமா என்ன அடையாளம் தெரியலையா வெட்டிய மின்னல் வெளிச்சத்தில் அப்பெண்ணை பார்த்து அதிர்ந்து போனான்  

டேய் மச்சான் நீயா, என்னடா இது கோலம்?? என்று அதிர்ந்து போய் தன் குட்டி நண்பனை பார்க்க அவள் நடந்ததை எல்லாம் கூறி அழ..

"எனக்கு யாருமே இல்ல மாமா, எப்படியாவது என்ன கொண்டு போய் பாம்பே பக்கம் விட்டுறேன் 

"மெண்டல் அப்படி எல்லாம் போனா உன்ன எதாவது ப்ச் அது சரி வராது  

எனக்கு முழு பெண்ணா மாறினா போதும் அவர்களின் ஒரே ஒரு ஆசை பெண்ணாக மாற வேண்டும் என்பதுதான்..  

காசு இல்லை காசு கொடுத்தா கூட போதும் நான் போயிக்கிறேன் குருட்டு தைரியம் கொண்டு நின்ற அவளை பார்க்க பாவமாகத்தான் இருந்தது... 

எங்கே அவனும் தன்னை வெறுத்து ஒதுக்குவான் இல்லை அம்போ என விட்டு விட்டுப் போவான் என்று நினைத்திருக்க .. 

வா 

எ...ங்க மாமா? அவளை கையில் பிடித்துக் கொண்டு முதல் முதலில் அழைத்துப் போனது துணிக்கடைதான் 

போ, உனக்கு புடிச்ச மாதிரி எடுத்துக்கோ.. உனக்கு எப்படி இருக்கணுமோ அப்படி மாறிக்கோ... நான் உனக்கு இருக்கேன்...

மாமா

போடா ம்ஹூம் போடி உனக்கு நான் இருக்கேன் என்றவன் அவளை பெண்ணாக அங்கீகரிக்க, கட்டி அணைத்துக் கொண்டு கதறி அழுதாள் 

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கம் 

மாமா எனக்கு பயமா இருக்கு பெண்ணாகவும் மாற ஆசை இருக்கு ஆனா இந்த உலகத்தை பார்க்கவும் எனக்கு பயமா இருக்கு... என்ன விட்டுட மாட்டியே கடைசி வரைக்கும் ஒரு வேலைக்காரி போல உன்கூடவே இருந்துக்கிறேன்.. என்ன தனியா மட்டும் விட்றாத மாமா என்று அழுத அவள் தலையில் தன் கையை வைத்தவன்...

எனக்கும் யாரும் இல்ல உனக்கும் யாரும் இல்லை உனக்கு நான் எனக்கு நான்., இந்த ஜென்ம முடியும் வரை உனக்காக நான் இருப்பேன்... உனக்காக கடைசி வரைக்கும் இந்த ரித்திவிக் துணையா இருப்பான்.. உன் ஆசை விருப்பம் எல்லாத்துக்கும் துணையாக இருப்பேன் என்றவன் சாதாரண மனிதனாகவே தெரியவில்லை அவளுக்கு தெய்வம் போலத்தான் அந்த சமயத்தில் தெரிந்தான்

முழு பெண்ணாக வந்து நின்ற அவளை நெட்டி முறித்த ரித்விக்குக்கு ஏதோ பாரம் குறைந்தது போல உணர்வு ... தனக்காக யாரும் இல்லை என்று நினைத்தவனுக்கு இவள் வருகை புன்னகைக்க வைத்தது

அழகா இருக்கடி 

நல்லா இருக்கேனா ?

உலக அழகி தோத்து போவா, அக்கா பூ கொடுங்க என்று பூவை வாங்கி அவள் கையில் கொடுத்து 

வை புன்னகையோடு ஆசையாக வாங்கி வைத்து கொண்டு கண்ணாடியில் தன்னை முன்னும் பின்னும் திரும்பி பார்த்தாள் அத்தனை அழகு ... 

இன்னையில இருந்து உன் பெயர் நங்கை!! சேலை வளையல் என்று குலுக்கி குலுக்கி பார்த்து அவள் முகத்தில் இருந்த சந்தோஷத்தை தன் ஜீவன் இருக்கும் குறைய விடக்கூடாது என்று நினைத்தான்..

"ஏன் மாமா இதெல்லாம் எனக்கு பண்ற?? "

"நட்புக்கு ஆண் பெண் எதுவும் தெரியாது எனக்கு நீ அப்பவும் நண்பன் தான் இப்பவும் நண்பிதான்" என்றவன் தான் வந்த விஷயத்தை கூறி தன்னுடைய காதல் தோல்வியையும் சொன்னான் ... 

ஒரு குழந்தையை தத்தெடுக்க கேட்டிருந்தேன் குழந்தையும் ரெடியாகி இருக்கு, இப்போ வேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காது

ஏன் வேண்டாம்னு சொல்லணும்

"இப்பதான் எனக்காக நீ இருக்கியே...

"நமக்காக ஒரு குழந்தையும் இருக்கட்டுமே மாமா நம்ம கூட்டுல அதுவும் வளரட்டுமே மாமா 

சரி என்று குழந்தையை தத்தெடுக்க இருவருமாக போக ஒவ்வொரு குழந்தையாக ரித்விக் தொட்டிலில் பார்த்துக் கொண்டே வர... ஒரு குழந்தை அவன் விரலை பிடித்துக் கொண்டது குனிந்து பார்த்தான் பிஞ்சு குழந்தை பிறந்து ரெண்டு நாள் தான் ஆகியிருந்தது...

மனசாட்சியே இல்லாமல் கொண்டு வந்து போட்டுட்டு போயிட்டாங்க அந்த குழந்தையை தாண்டி அவனுக்கு கால்கள் போக மறுத்தது..

"இந்த குழந்தை எடுத்துக்கவா?

"சாரி சார் வேற எந்த குழந்தையும் வேணும்னாலும் எடுத்துக்கோங்க இந்த குழந்தை எடுக்குறதுக்கு ட்ரெஸ்ஸரி ஒத்துக்க மாட்டார் 

ஏன் எனக்கு இந்த குழந்தை தான் வேணும்

முடியாது சார் இந்த குழந்தையை ஏதோ அவருக்கு வேண்டப்பட்டவங்களுக்கு கொடுக்கணும்னு வந்த அன்னைக்கே சாரே நேரில வந்து ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டு போயிட்டார் ...

கொஞ்சம் கேட்டு பாருங்களேன்..என்னவோ தெரியல இந்த குழந்தையை விட்டு என் கால் நகர மாட்டைக்குது என்றதும் காப்பகத்தில் இருந்த நபர் யாருக்கோ போன் மூலம் அழைக்க ..

"சார் அவர்கிட்ட கேட்டுட்டேன் ... மனைவியோட வந்து குழந்தையை எடுத்துட்டு போக சொல்றார்... 

"மனைவியா அதுக்கு எங்க போறது?

"சாரி சார் பெண் துணை இல்லாம குழந்தையை உங்க கூட கொடுத்து அனுப்ப முடியாது... 

தம்பதியா வந்தா தான் குழந்தையை கொடுக்க முடியும் என்று அவர்கள் சட்ட திட்டம் பேச....

"ஓஓஓஓ சட்டென வாசலில் கையை பிசைந்து கொண்டு ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த நங்கையை இழுத்துக் கொண்டு வந்து..

"இவ தான் இந்த குழந்தைக்கு அம்மா.... லீகல் பாட்னரா எங்க ரெண்டு பேரையும் போட்டுக்கோங்க... இப்போ அந்த குழந்தையை கொடுப்பீங்களா என்று கேட்க நங்கை அதிர்ந்து போய் பார்க்க ...

இந்த குழந்தைக்கு தாயா இருக்கியா நங்க... உடனே சரி என்று தலையாட்ட... தாய் தகப்பன் இடத்தில் ரித்விக் நங்கை பெயர் பொறிக்கப்பட்டு அந்தக் குழந்தை அவர்கள் கைக்கு சட்டபூர்வமாக வந்தது...

பெண்ணா கூட அங்கிகாரம் கிடைக்காத எனக்கு "தாயா அங்கிகாரம் கொடுத்து அவர் மனைவின்னு அந்தஸ்த்தை கொடுத்து , தான் வியர்வை சிந்தி உழைச்ச அத்தனை காசையும் போட்டு எல்லா ஆப்பரேஷனும் என் ஆசைக்காக செய்ய வச்சி குழந்தை போல என்ன முகம் சுளிக்காம தாங்கி , இதோ இன்னைக்கு உங்க முன்ன முழுபெண்ணா நிற்கிறேன் அக்கா , அந்த மனுசனை விட்டுட்டு போயிடாத அக்கா நான் வேணும்னா என்று அழுத நங்கையை கண்ணீர் வடிய கட்டி கொண்டவள்

"உன்ன போன்னு சொல்ல நான் யாருடி ??

"தப்பு தான் அக்கா அவரை எனக்கும் பிடிக்கும் நானும் பொண்ணு தான நேசிக்க ஆரம்பிச்சுட்டேன் மாமா நான் இப்படி இருக்கிறதாலதான் என் லவ்வை ஏத்துக்க மாட்டிக்கிறியான்னு கேட்டேன் 

"அவர் என்ன சொன்னார் ?

"பைத்தியக்காரி நட்புன்னா ஜீவன் போற வரை அது நட்பாதான் இருக்கணும் நட்புல நஞ்சை விதைச்சா அது நட்பே இல்லைனு சொல்லிட்டார் 

அப்போ நீ நட்பா இரு நான் லவ் பண்றேன் மாமா

போடி லூசுன்னு போவாரே தவிர அவர் நட்புல இதுவரை பாசி படிஞ்சது இல்லை அக்கா... இது என் புள்ளை மேல சத்தியம் 

அக்கா என்னக்கா யோசிக்கிற".... அவரை விட்டுட்டு போயிடுவியா? பாவமாக நங்கை வைசுவை பார்த்தாள்... 

"நட்புக்கு அவர் எல்லாத்தையும் சரியா தான் பண்ணி இருக்கார் ... ஆனா என் காதலுக்கு அவர் எதையும் செஞ்சது இல்லை ... ஒரு பொறுப்பை தட்டி கழிக்கிறது எப்படி நியாயம்? கணவனா காதலனா இருக்கிறதை விட தன் இணைக்கு என்ன தேவை ஏன் எப்படின்னு யோசிக்கிறது தான் நல்ல இணைக்கு அழகு !! அவருக்கு அந்த தகுதி அப்பவும் இல்லை இப்பவும் இல்லை தன் கடமையை போட்டுட்டு ஓடி வந்தவர் ... தன்னோட பக்கத்தை மட்டுமே யோசிச்சவர் எ ன் நிலைமையை கொஞ்சம் கூட யோசிக்காத ஒரு மதிக்கெட்ட மனுசனை காதலிச்சு தொலைச்சிட்டேன் , இத்தனை வருடம் இத்தனை பிரளயம் தாண்டினாரே என்னைக்காவது நான் என்ன செய்றேன் எனக்கு என்ன ஆச்சுன்னு யோசிச்சாரா? 

அக்கா "

வருசம் வருசம் ஒரு போன் அது போதுமா எனக்கு ??

அது 

"நட்புக்காக இத்தனை செஞ்சார்னு நீ சொல்ற, என் காதலுக்காக அவர் என்ன செஞ்சார்னு நான் அவரை தூக்கி கொஞ்சணும் ஹான் ... உன் மேல பொறாமை இல்லை நங்கை உனக்காக பார்த்து பார்த்து செஞ்சதுல சந்தோசம் தான் .. ஆனா என்ன பொருட்டா கூட மதிக்கலையோன்னு தோண வச்சிட்டார் இவருக்காகவா நான் காத்து கிடந்தேன் இவரை நினைச்சா துடிச்சேன்னு யோசிக்க வச்சிட்டார்...   

"நான் செஞ்ச ஒரு தப்புக்கு தண்டனையாதான் இத்தனை வருச பிரிவையும் நினைச்சேன்.. ஆனா இப்பதான் புரியுது எனக்கு தண்டனையே இவரை காதலிச்சு தொலைஞ்சதுதான்னு .. காதலிக்கிறது பெரிசு இல்லை அவங்களோட இடத்துல இருந்து பார்க்க தெரியாத எவனும் காதலிக்க தகுதி இல்லாதவன் தான் ... உன் மாமனும் காதலிக்க தகுதியே இல்லாதவன்னு சொல்லிடு..நேசிச்ச ஒரு பெண்ணை அழ விடாம பார்த்துக்கிறது தான் நல்ல கணவனுக்கு காதலனுக்கு அழகு ... இவர் என்ன அழ மட்டும் தான் வச்சிருக்கார் ... இப்ப வரை என் உணர்வுகளை கொன்னு அவர் வாழ்ந்துட்டு இருக்கார் இதுதான் அவர் காதல்னா அப்பா சாமி இந்த காதலே வேண்டாம், நான் தனியா இருக்கிறது எவ்வளவோ மேல் என்ற வைசு யோசனை வந்தவளாக 

ஆமா அப்போ குழந்தை எப்படி ரித்விக் போல அச்சு அசல் இருக்கான் ... 

அன்று தொட்டிலில் கிடந்த குழந்தை இடையில் கிடந்த துணி காற்றில் விலக 

பொண்ணு சார் என்று ரித்விக் கையில் தூக்கி கொடுக்க ..

அப்புறம் முக்கியமான விஷயம் சார் குழந்தை உயிருக்கு ஆபத்து இருக்கு போல , குழந்தை பெண் குழந்தைன்னும் இங்க இருந்துதான் எடுத்துட்டு போறோம்னும் யார்கிட்டயும் சொல்ல கூடாது"...  

ஏன்?"

"தெரில சார் சொல்ல சொன்னாங்க சொல்லிட்டேன்... முடிஞ்ச வரை பெண் குழந்தையா பிள்ளையை காட்டிக்க வேண்டாம் 

ஓஓஓ "

ஏதோ பெரிய இடத்து பிள்ளை போல இருக்கு மாமா.. வில்லங்கம் போல தோணுது , நமக்கு ஏன் வம்பு வேற குழந்தை எடுப்போமா? 

ப்ச் வேண்டாம் எனக்கு இவ தான் வேணும் தன் சட்டையை பிடித்து கொண்டு கிடந்த மகளை விட தோன்றாது ரித்விக் தூக்கி கொண்டு நடந்தான்.. நங்கை சொல்லி முடிக்க தன் மீது பாரம் உணர்ந்து அதிர 

அக்கா அக்கா சடசடவென வைஷ்ணவி மயங்கி நங்கை மீதே சாய்ந்தாள் ..

அய்யோ என் பிள்ளை என்று தலையில் அடித்து கொண்டு அழுத அவள் அருகே விவரம் புரியுது நங்கை நிற்க 

அக்கா 

இது என் குழந்தை நங்கை!! நான் பெத்து பறிகொடுத்த என் பிள்ளை ...எதுவுமே எனக்கு கிடைக்க கூடாதுன்னு கடவுள் தெளிவா விளையாடி இருக்கார் என் பிள்ளை என்ன யாரோ போல எட்டி நின்னு பார்க்கிறதை விட ஒரு மரண தண்டனை எனக்கு யாரும் தந்துட முடியாது "என்று கதறும் வைசுவை அதிர்ந்து பார்த்த நங்கை பாவமாக தூங்கும் குழந்தையை பார்த்தாள் 

காதலை தூக்கி கொடுத்து விட்டாள் , ஆனால் தாய்மையை?? 

"நான் நான் அப்போ அம்மா இல்லையா , குழந்தை எனக்கு இல்லையா" என்று பரிதவிப்பாக பார்த்து கொண்டு நங்கை நின்றாள்,.. 

தன் தனிமை இழப்பு வலி அத்தனைக்கும் காரணம் இவன் புரிதல் இல்லாத தான்தோன்றித்தனமான முடிவுகள் தான் என்று உணர்ந்த வேலை அவன் மீது இருந்த காதல் மரித்துத்தான் போனது...

காதல் காதல் என்ற சொல்லி அந்த காதலையே இழப்பதற்கு பெயரா காதல் ??