பசப்புறு பருவல் 15
Pasa15

15 பசப்புறு பருவல் !!
டேய் அத்தான் டேய் அத்தான் படுக்கையில் குப்புற படுத்து கிடந்த உருவத்தின் மீது தன் கால் விரலால் சுரண்ட
"அப்படியே லெஃப்ட் பக்கம்" அவன் காலின் மீது தலை வைத்து படுத்து இருந்த அவள், மீண்டும் அவன் பிடரி முடியை கால் விரலால் பிடித்து இழுக்க
"ஸ்ஆஆஆ என்னடி என்று தலையை திருப்பினான் அயோக்கியா ?
"வைசு அக்கா துபாய் போயிருக்கு
"பழைய நியூஸ்
"எனக்கு போன் போட்டுச்சு
"புது நியூஸ்
"என்ன கேட்டுச்சு தெரியுமா
"ட்ரஸ்ட் உங்களுக்காகன்னு கேட்டிருக்கும் என் பிள்ளையா சந்துருன்னு அழுதுகிட்டே கேட்டிருப்பா
"எக்ஸட்லி அத்தான் நீங்க ஞானி ....
"என் குழந்தையை என்ன விட்டு பிரிச்சு வைக்கிற அளவுக்கு நான் உங்க ரெண்டு பேருக்கும் அப்படி என்ன பாவம் செஞ்சேன்னு , இப்படி ஒரு பெரிய பாவத்தை எனக்கு செஞ்சு இருக்கீங்க அந்த குழந்தை எனக்குத்தான்னு உங்களுக்கு தெரியும் தானே அதை அவர்கிட்ட கொண்டு போய் சேர்த்தது நீங்கதானே.. பெத்தவ எப்படி தவிச்சு போயிருப்பான்னு கொஞ்சம் கூட யோசிக்கல இல்ல... என்று வைசு அழுது கொண்டே ஆற்றாமையில் வெடித்து விட்டு வைத்து விட அயோக்கியா பல்லை கடித்தான்
எடு போனை "
"ஏன் அத்தான் எதுக்கு இப்ப உங்க கண்ணு சிவப்பா மாறுது
"கேம் விளையாடி நாளாகி போச்சு , தியாகி ஒருத்தன் சுத்துவானே அவனை சுத்தல்ல விடுவோம் என்று வைசுவுக்கு போனை போட்டவன்
"அவகிட்ட உனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு போன் போட்டு அவள திட்டி இருக்க, ஏதா இருந்தாலும் என்கிட்ட கேட்டு இருக்கணும் , அவக்கிட்ட எப்படி பேசலாம் ...
ஓஓ உங்க பொண்டாட்டியை பேசினா கோவம் வருதா.. உங்களால தான் இன்னைக்கி குழந்தையை பிரிஞ்சு யாரோ போல நிக்கிறேன் அதான் , நான் உங்களுக்கு செஞ்சதுக்கு பதிலுக்கு பதில் நிம்மதியா செஞ்சுட்டீங்க இல்ல .. இப்ப வரைக்கும் என் மேல உங்களுக்கு என் காழ்புணர்ச்சி ... ஒரு பச்சை குழந்தையை தாய்கிட்ட இருந்து பிரிச்சு எங்களை சேர விடாம பண்ணுறதுல உங்களுக்கு அப்படி என்ன லாபம் ?
"லாபம் தான் ஐஞ்சு வருசமா நேரம் போச்சுல்ல" என்ற அயோக்கியா பதிலில் வைசு பல்லை நரநரக்க...
"உன்ன வேற ஒருத்தன் வந்து பிரிச்சிட்டு போகணும்னு அவசியமே இல்ல, உன் கூடவே இருந்தானே உன் புருஷன் அவன் ஒருத்தன் போதும் உங்க வாழ்க்கைக்கு போதும் போதும் என்கிற அளவுக்கு சூனியம் வைக்கிறதுக்கு
"அத்தான் அத்தான் நான் சும்மாவே இருக்கேன்.. நான் கொஞ்ச நேரம் பேசுறேன் "போனை அவள் பக்கம் எறிந்து விட்டு அயோக்கியா மீண்டும் படுத்து கொள்ள அதிரா அவன் முதுகு மீது கால் மீது கால் போட்டு படுத்து கொண்டவள்
"இங்க பாரு வைசு அக்கா அத்தான் உன் பிள்ளையை காப்பாத்தி தான் விட்டிருக்கு
"யார்கிட்ட இருந்து ??
"அது உனக்கு தேவையில்லாத ஆணி, தகப்பன் கையில சேர்த்துடணும்னு படாத பாடு பட்டு அவர் ப்ரெண்டு மூலமா இங்க வர வச்சார் ... அந்த குழந்தையை வச்சி மறுபடியும் நீங்க சேருவீங்கன்னு பார்த்தா , உன் புருசன் மெண்டல் ... நங்கையை தள்ளிட்டு போயிட்டான் ...
"என்கிட்ட சொல்லி இருக்கலாமே
"நாங்க என்ன சேவையா செஞ்சுட்டு இருக்கோம் , வீடு வீடா போய் சேர்த்து வைக்க .. உன் புருசனுக்கு உன்னை பத்தின அக்கறை இல்லை ... எங்களுக்கு என்ன வந்துச்சு ?
"நீயா அதி இப்படி பேசுற ...
"எனக்கே உன் புருசன் மேல செம காண்டுக்கா, நாங்க ரூட் தான் போட்டு கொடுக்க முடியும், தூக்கி கொண்டு வந்தா உன்கிட்ட விட முடியும் ..
"முதல் நாள் இந்த டிரஸ்ட்க்கு வந்த போதே , இது யாரு டிரஸ்ட் யார் குழந்தை ஏன் அந்த குழந்தையை பெண் குழந்தையா வளர்க்க சொல்றாங்க எதுக்குன்னு நாலு கேள்வி கேட்க முடியாத வளர்ந்து கெட்டவனாக இருக்கான் உன் புருஷன்.. இந்த நாலு கேள்வியும் கேட்டு இருந்தா அப்பவே அது உன் குழந்தைடா ஒரு வருஷம் உன் கூட வச்சுக்கோ, அதுக்கு பிறகு இங்க கொண்டு வான்னு அத்தான் சொல்லி இருக்கும் ....
"இவ்வளவு செஞ்சவங்க என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல "ஃபோனை அதிராவிடமிருந்து புடிங்கிய அயோக்கியா
"ஏன் ஏன்னா அது எங்களுக்கு வந்த கடமையா? கல்யாணம் கட்டி புள்ள கொடுத்தான்ல ,.. அவன்ல பொண்டாட்டியையும் பிள்ளையையும் பாதுகாக்கணும் , அந்த கடமை கூட செய்யாம ஓடி ஒளிஞ்சவன் கிட்ட போய் கேளு.... வைசு அமைதியாக கேவ
"புள்ளைய தூக்கிட்டு போயி நரபலி கொடுக்கிறதுக்கு அந்த பொம்பளையும் ஆளும் அலையா அலைஞ்சாங்க... போன செல்வம் செல்வாக்கு எல்லாம் மகன் வயித்துல பிறந்த பெண் புள்ளையை பலி கொடுத்தா மறுபடியும் கிடைக்கும்னு எவனோ சொன்னதை நம்பி , உனக்கு பிறந்த பெண் புள்ளைய கொல்றதுக்கு சுத்தி சுத்தி வந்தாங்க.. அது உன் புருஷனுக்கு தெரியுமா? இல்ல உனக்கு தெரியுமா ?
ம்ஹூம்
பெருசா பேசுற அன்னைக்கு மட்டும் அந்த இடத்தில் குழந்தையை மாற்றி வைக்கலன்னு வை இன்னைக்கு உன் புள்ள ஒரேடியா போய் சேர்ந்திருக்கும்... கல்யாணம் பண்ணும் போது நாய்க்கு இனிச்சது... ஒரு வார்த்தை கேட்டானா இல்லை அந்த வாழ்க்கையை விட்டு போகும் போது யார்க்கிட்டேயாவது கேட்டானா... ஈசியா டைவர்ஸ் பண்ணிட்டு போறான் ... நீயும் மண்டையை ஆட்டுற... இதுக்கு தான் அந்த மயிராண்டி கல்யாணம் பண்ணினானோ ??? வைசு அமைதியாக இருக்க...
ஒரு தாய் தகப்பன் பிரிஞ்சா பிள்ளையோட கதி இதுதான் .. குடும்பம் சிதறினா நிம்மதி சிதறி போகும்னு நான் உட்கார வச்சி அட்வைஸ் பண்ணினா கேட்க போறீங்களா, அவன் கொடுத்தா எதுவேணும்னாலும் வாங்குவியா , சேர்றதும் பிரியறதும் உங்க ரெண்டு பேருக்கும் அவ்வளவு ஈசியா இருக்கு இல்ல ... கள்ள குடித்தனம் நடத்தினான் காம கொடுரனா இருக்கான் பணப்பேயா சித்ரவதை பண்றான் உடல் அளவில துன்படுத்திறான் என்னால வாழவே முடியாதுன்னு அந்த வாழ்க்கையை விட்டுட்டு ரெண்டு பேரும் போயிருந்தா நானே சபாஷ்னு பிரிச்சு விட்டிருப்பேன் .... நீங்க ரெண்டு பேரும் எதுக்கு விவாகரத்து வாங்குனீங்க
அது அது
பேச முடியலல்ல முடியாது முட்டாள் ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா இப்படித்தான் ...
அப்போ எல்லாத்தையும் அனுபவிச்சி தான் உணரணும்.. அனுபவ பாடம் தான் சரியான சூடு... ஐஞ்சு வருச அனுபவம் ரெண்டு பேருக்கும் போதுமா?? இல்லை இன்னும் வேணுமா ??
"குடிச்சிட்டு கண்ணு மண்ணு தெரியாம பொண்டாட்டி கூட வாழ்ந்ததையே ஞாபகம் இல்லாம அவளுக்கான பாதுகாப்பு குழந்தைக்கான கடமை இது எதையும் செய்யாம ஓடுன ஒருத்தன் கிட்ட சட்டைய புடிச்சு கேளு... ஆமாடா, நான் அண்ணனை காதலிச்சவ தான் உன் கூட தானே பிள்ளை பெத்தேன்.. அப்போ நீ தான் என்னை பார்க்கணும்னு நீ அவன் சட்டையை புடிச்சி நியாயம் கேட்டு இருக்கணும்... அதை விட்டுட்டு எங்ககிட்ட வந்து நியாயம் கேட்டுகிட்டு இருக்க ... அஞ்சு வருஷத்துல ஒரு நாளாவது உனக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு விசாரிச்சானா?
"ம்ஹூம்
"விசாரிச்சு இருந்தா இந்த ஐஞ்சு வருச கேப்பே வந்திருக்காது... அவன் செவுட்டை பேத்து வந்து கூட வாழுடான்னு சொல்ல தெரியாத கோழையா நீ?? அப்படி காதல் உன்ன கோழை ஆக்கி வச்சதுன்னா இப்படி தனியா கிடந்து சாவுறதுல தப்பே இல்லை.. அவனுக்கு தலை மேல இடம் கொடுத்த அவன் மிளகாய் அரைச்சிட்டு சுத்துறான் ... காதல் மண்ணாங்கட்டி காதல் .... கட்டுனவளை வச்சி காப்பாத்த தெரியல நாயி சென்டிமெண்ட் சீன் ஓட்டிட்டு திரியுது ... நீ கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் அவங்கிட்ட போய் கேளு எங்க கிட்ட இல்ல
டேய் அத்தான் நான் ரெண்டு அட்வைஸ் கொடுக்கவா
"வேண்டாம் நீ அத்தானுக்கு காலை அமுக்கி விடு
"பேசினா வாய்தான அத்தான் வலிக்கும்
"எனக்கு கால் தான் வலிக்கும் அமுக்கிடி "என்று அதிராவை இழுத்து தன் அருகே போட்ட அயோக்கியா போனை வைத்து விட்டான்...
கொண்டவன் சரியாக இருந்தால் ஏன் அடுத்தவனிடம் எல்லாம் பேச்சு வாங்க போகிறாள்.. ஏதோ ஒரு வகையில் அயோக்கியா அவளுக்கு நல்லதைத்தான் செய்திருந்தான்.. பிள்ளையை காப்பாற்றி தகப்பன் கையிலேயே கொடுத்திருக்கிறான்... இந்த கூறுகெட்ட குக்கரை நம்பி இருந்தால் எல்லாம் தலைகீழாக போயிருக்கும்....
எடுப்பார் கைப்புள்ள போல யார் என்ன சொன்னாலும் செய்தாலும் யோசிக்காதே மண்டையை ஆட்டினால் இப்படித்தான் இளிச்சவாய் ஆகி நிற்க வேண்டும்
யோசனையாக உட்கார்ந்து இருந்த ரித்விக் தீடீரென கண்ணை விரித்து போனை தன் நண்பனுக்கு தட்டினான்
சொல்லு மச்சான் "
"அந்த ட்ரெஸ்ட் அயோக்கியா அண்ணனுக்கா
"ஆமா
"அந்த குழந்தை என் பிள்ளையா ?
"ஆமா
"அந்த குழந்தையை என்கிட்ட சேர்த்தது அயோக்கியா அண்ணனா
"ஆமா மச்சான்
"ஏன்டா என்கிட்ட சொல்லவே இல்ல
"நீ கேட்கவே இல்லையே மச்சான், நீ கேட்காம சொல்ல கூடாதுன்னு அண்ணன் சொல்லிடுச்சுடா..
"ஓஓஓஓஓ காட் !!! அப்போ அவக்கிட்ட இருந்து பிள்ளையைப் பிரிச்சது நானா??
"யா அப்கோர்ஸ் !!
தயங்கி தயங்கி ரித்விக் வீட்டுக்கு உள்ளே வர தூங்கும் குழந்தை அருகே தலை வைத்து வைசு படுத்து கிடந்தாள் கண்ணீர் கொட்டி கொண்டே கிடந்தது....
அம்மா பசிக்குது என்று குழந்தை எழும்பி நங்கை தேடி போக... வாசலில் நின்ற ரித்விக் எச்சில் விழுங்க,, வைசு உதடு நடுங்க அவனை ஒரு பார்வை பார்த்தாள்.
ஏங்க என்றவனுக்கு தலைமேல் கும்பிடு போட்ட வைசு
உங்களை குறை சொல்ல எதுவும் இல்லை , நடந்ததை பேசி இனி எதையும் மாத்தவும் முடியாது ..
அதாங்க சொல்ல வந்தேன் தப்பு நடந்து போச்சுங்க சந்திரலேகாவை நீங்களே கொண்டுட்டு போங்க
சந்திரலேகா யார்?
நான்தான் பெரியம்மா... ஏன்ப்பா என்ன பெரியம்மா கூட போக சொல்ற அம்மாவும் கூட வருமா... அப்பா நீயும் வருவியா அம்மா வந்தாதான் நான் போவேன் என்று குழந்தை நங்கை காலை கட்டி கொள்ள
அவள் தாயாக ஜெயித்து.. இவள் தாயாக தோற்று நின்றாள் தகப்பன் இடையே திருதிருவென முழித்தான்...
ஒரு வாரம் டைம் தாங்க வைசு அக்கா , நான் பிள்ளைக்கிட்ட பக்குவமா பேசி பேசி என்ற நங்கைக்கு அதன் பிறகு பேச வலு இல்லாது அழுது கொண்டே சமையலறை உள்ளே ஓட ....
ஏன் அத்தனை பேரையும் இப்படி இக்கட்டுல நிற்க விட்டீங்க ரித்விக்..
எல்லாத்தையும் சரி பண்ணிடுறேன்ங்க... நம்புங்க என்று ரித்விக் கெஞ்சுதலாக வைசுவை பார்க்க
நான் உங்கள திட்ட போறதோ, பதிலுக்கு பதில் செய்யவோ போறது இல்லை... உங்களுக்கு வலிச்சா எனக்கு வலிக்கும், பாவி மனசுக்கு உங்கள எப்பவும் வெறுக்க தெரியாது ...
ஏங்க
ப்ளீஸ் எனக்கு ஒரு உபகாரம் செய்றீங்களா?
என்னங்க "
"தயவு செஞ்சு எதுவும் செய்யாம சும்மா இருங்க போதும் ... நீங்க சும்மா இருந்தாவே பாதி பிரச்சனை முடிஞ்சுடும்... ரித்விக் அடுத்து என்ன பேச செய்ய என்று தெரியாது திகைத்தபடி நிற்க..
இப்போது கூட அவளை அணைத்து கொண்டு ஆறுதல் சொல்ல தெரியவில்லை... உனக்கு நான் இருக்கேன்டி என்று உச்சி முத்தம் கொடுத்து அவள் பாரத்தை குறைக்க தெரியாது தெமென நின்றவனை தொய்ந்து போன முகத்தோடு வைசு பார்த்தாள்..
பாதி பசலை நோயிக்கு மருந்து இறுக்கி அணைத்து உனக்காக நான் இருக்கிறேன் என்ற மருந்து தான் ... பாதி இழப்புக்கு மருந்து இனி இழப்பு வராது உன்னோடு நான் இருப்பேன் என்ற வார்த்தைகள் தான்....
சொல்லி தெரிவது இல்லை மன்மத கலை மட்டுமல்ல..
காதல் கலையும் புரிந்து கொண்டு நோய் ஆற்றுவதுதான் காதல் ...
"அப்பாவும் உன் கூடயே வருவார்.. கொஞ்ச நாள் வைஷு பெரியம்மா கூட இருந்துட்டு மறுபடியும் அம்மாகிட்ட வந்துடு" என்று நாசுக்காக பிள்ளைக்கு நங்கை தொண்டை அடைக்க கூற
"ஏன் அம்மா நீ வரல.. நீயும் வா என்று குழந்தை அவள் கையை இழுத்தது
ஏர்போர்ட் வாசலில் வைஷு ரித்விக் இருவரும் நின்றனர்.. நங்கை குழந்தையை இறுக அணைத்து பிடித்துக் கொண்டு தன் தாய்மையை கொடுக்க மனம் இல்லாமல் தவித்து போய் விம்மி வெடித்து அழுகையை அடக்கிக் கொண்டு நின்றாள்
குழந்தை வைசுவோடு தனியாக போகமாட்டேன் என்று அடம் பிடிக்க ...
"மாமா கொஞ்ச நாள் கூட்டிட்டு போய் அங்க பழக்கம் காட்டு அப்புறம் பழகிடும் ... எனக்கும் இந்த தனிமை பழகிடும் இனி நீங்க தானே குடும்பம் என்ன பத்தி யோசிக்காதீங்க கூட்டிட்டு போங்க மாமா
"நீ என்ன பண்ணுவ நங்க, நீயும் கூடவே வாயேன்
"ம்ஹும் , எப்படி வைசு அக்காவுக்கு என்கூட நீ இருந்தத பாக்க முடியலையோ, அதே மாதிரி என்னாலையும் நீ இன்னொரு வாழ்க்கை வாழ்வதை பார்க்க முடியாது மாமா, எனக்குள்ளேயும் பெண்ணின் உணர்வுகள் தான் இருக்கு எனக்குள்ளேயும் அதே பொறாமை உணர்வுகள் உண்டு மாமா ... நான் தனியா இருக்கிறது தான் எல்லாருக்கும் நல்லது, நீ எனக்கு சொந்தம் இல்லன்னு தெரியும் அதுக்கு பழகிட்டேன்..என்ன விட்டுடு உன் குடும்பத்தை பாரு , என்னை தூக்கி சுமந்து உன் நிம்மதியை சந்தோஷத்தை இழந்துடாத... குட்டிக்கு கொஞ்ச நாள்ல தான் யாரு என்ன்னு உண்மை தெரிஞ்சிடும் , அதுக்கு பிறகு வாழ்க்கை ஓட்டத்தில் வாழப் பழகிருவா.. இப்போ சின்ன புள்ள இல்ல அதான் என்ன விட்டுட்டு போக மாட்டேங்குறா... அப்புறம் பழகிடும், எல்லாம் எல்லாருக்கும் கூட்டிட்டு போ என்று சொல்லிவிட்டாலும்... அவளுக்குள் இருந்த இதயம் அப்படியே சுக்கு நூறாகி போனது...
அவன் காதல் கிடைக்காது என்பது எப்போதோ தெரிந்ததுதான் ஆனால் இந்த பிள்ளை போதும் என்று நினைத்த அவள் ஆசையிலும் மண்ணள்ளி போட்டு விட்டார்களே? அவளுக்கு தனிமை அது ஒன்றும் கொடுமை இல்லை... ஆனால் தாய்மை போனதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை ஜீரணித்துக் கொள்வதை தவிர வேறு வழி இல்லையே
நங்க என்று வைசு நங்கையின் தோளில் கை வைக்க அழகாக புன்னகை செய்த நங்கை புன்னகையை பரிதாபமாக பார்த்த வைசு
"இந்த சிரிப்புக்கு பின்னாடி ஏகப்பட்ட வலி இருக்கே நங்க
"வலி எனக்கு பழகுனது அக்கா ,நீங்க எல்லாரும் சந்தோஷமா இருக்கிறத பார்த்தாலே எனக்கு வலி குறைஞ்சிடும் போயிட்டு வாங்க, ப்ளைட்டுக்கு டைம் ஆயிடுச்சு" என்று அவர்களை துரிதப்படுத்த..
குடும்பமாக ஏர்போர்ட் உள்ளே நுழையும் அவர்களை கண்கள் திரையிட நங்கை பார்த்துக் கொண்ட நின்றாள்... அவர்கள் மறையும் வரை கையை அசைத்தபடி போகும் மூவரையும் பார்த்து கையாட்டியவள்... அவர்கள் மூவர் தலையும் மறைந்ததுதான் மாத்திரம் .. அப்படியே முழுங்காலில் மடிந்து தரையில் அமர்ந்தவள் முகத்தை கையில் மறைத்துக்கொண்டு கேவி கேவி அழ ஆரம்பித்து விட்டாள் ...
"நான் அம்மா இல்லையா ?
எனக்கு என் பிள்ளை கிடையாதா??" என்றவள் கதறலுக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்..
ஏன் உன் வாய்ல எதாவது பிரச்சனையா ?
நான் பதில் சொன்னா குண்டக்க மண்டக்க இருக்கும் பரவாயில்லையா??