பசப்புறு பருவல் 7
Pasa7

7 பசப்புறு பருவல் !!
நங்க
சொல்லு மாமா
இந்த முடிவை அவங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடி என்கிட்ட கேட்டு பண்ணணும்னு இல்லையா. உள்ளே வந்த ரித்விக் முகம் எல்லாம் வியர்த்து கொட்டியது ... நங்கை சொன்ன விஷயத்தை கேட்டு..
வைஷ்ணவியை முகத்திற்கு நேராக பார்க்கும் தைரியம் இருந்திருந்தால் பாத்திருக்க மாட்டானா? போன் வழியாக பேசவே மரண அவஸ்தையாக இருக்கும் .. நேருக்கு நேராக அதுவும் இந்த வீட்டிற்குள் அவளை வைத்துக் கொண்டு நினைத்துப் பார்க்கவே சங்கடமாக இருந்தது... எவ்வளவு பெரிய முடிவை எடுத்துவிட்டு அதுக்கும் எனக்கும் சம்பந்தமே இல்ல என்பது போல அடுப்பில் சாப்பாட்டை கிளறிக் கொண்டிருந்த நங்கை தோள்பட்டையை பிடித்து இழுத்து தன் பக்கம் திருப்பிய ரித்விக்
உன்கிட்டதான் நான் கேட்டுகிட்டு இருக்கேன்
"ம்ம் இந்த வீட்டுல நான்தானே இருக்கேன் அப்பெ என்கிட்ட த்ன பேசுவ பேசுறது கேட்குது மாமா
"என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்னு உனக்கு தோணலையா எப்படி அவங்கள இந்த வீட்ல தங்க வைக்கிறேன்னு நீயே ஒரு முடிவு எடுத்து சொன்ன"
"நீ என்ன சொன்ன மாமா???
இந்த வீட்ல எந்த முடிவை எடுக்கவும் என்கிட்ட கேட்க வேண்டாம்னு நீ சொல்லி இருக்க தானே ...
"ப்ச் அதுக்கு இவ்வளவு பெரிய முடிவை
"என்ன பெரிய முடிவு அவங்க வேற, நாம வேற நீ தெளிவா தான இருக்க ... நான் தெளிவா தான் இருக்கேன் .. ஏன் உனக்கு பயமா இருக்கா மாமா?
"எனக்கு என்ன பயம் ?
அவங்க இங்க வந்தா எங்க உன் மனசு அவங்க பக்கம் சாஞ்சுடுமோன்னு பயமா இருக்கா? உன் கண்ணு அங்க திரும்பிடுமோன்னு பயமா இருக்கா உன் புத்தி அங்க போயிடுமோன்னு உனக்கு உதறுதா... பிரச்சனையை கண்டு பயப்படுறீயா? தூக்கி போட வேண்டியது பிரச்சினையை இல்லை மாமா பிரச்சனைக்கு காரணமான விஷயத்தை... நீ பயந்து ஓடுற...
"ச்சை , பைத்தியக்காரி மாதிரி உளறாதடி சுமூகமா போயிட்டு இருக்கிற வாழ்க்கையில ரெண்டு பக்கமும் பூகம்பத்தை இழுத்து விடணும்னு நினைக்கிறியா..
என்ன பூகம்பம் வந்துடும்னு சொல்ற... எனக்கு புரியலையே மாமா என்ற நங்கைக்கு எப்படி விளக்கம் சொல்ல என்று தெரியவில்லை..
"சொல்லு மாமா சரி நான் செஞ்சது தப்பாவே இருக்கட்டும் ,வைசு அக்கா நம்பருக்கு போன் போட்டு நீங்க எங்க வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லிடவா?
"அதான் பண்றது எல்லாம் பண்ணிட்டியே, இப்போ இதை வேற பண்ணனுமா .. என்னைக்கு வரேன்னு சொன்னாங்க? பல வருடம் கழித்து அவன் கண்ணில் ஒரு ஆர்வம் அதை மறைக்க முடியாது தடுமாறினானோ??
"பத்து நாளைக்குள்ள வரேன்னு சொன்னாங்க டேட் எதுவும் நான் கேட்கலையே...
இந்த வீட்ல அவங்கள எப்படி தங்க வைக்கிறது கொஞ்சமாவது உனக்கு மூளை வேண்டாமா? பாரு கால நீட்டி கூட படுக்க முடியாது...
"அவங்களுக்கு
கஷ்டமா இருக்குன்னு நினைக்கிறியா? இல்ல உனக்கு கஷ்டமா இருக்கா...
"உன் கிட்ட மனுஷன் பேச முடியாது ஆனா இப்ப எல்லாம் நிறைய பதிலுக்கு பதில் பேச கத்துக்கிட்டடி நீ..
"நான் பேச கத்துக்கிட்டது இருக்கட்டும் நீ நிறைய மறைக்க கத்துக்கிட்ட
"என்ன மறைச்சேன் ??
"எல்லாம்" என்ற நங்கைக்கு பதில் சொல்லாது ரித்விக் குளியலறை உள்ளே புக ...கதவை டொம் டொம் என்று தட்டினாள்
"ஹலோ மாமா
"என்ன
நான் ஒன்னு கேட்கணும் ...
உன்ன பத்தி கேட்கணும்னா கேளு , என்ன பத்தி கேட்கணும்னா கேளு.. அவங்கள பத்தி கேட்காதே நான் பதில் சொல்ல மாட்டேன்
நான் அவங்களைப் பற்றி தான் கேட்பேன் நீ பதில் சொல்லித்தான் ஆகணும்...
ப்ச் நான் குளிக்கணும்
குளிக்கிறதுக்கும் பேசுறதுக்கும் என்ன சம்மந்தம் நீ குளிச்சிட்டே பேசு மாமா..
"என்னடி உன் பிரச்சனை?
"ஒரு வேளை அக்காவுக்கு உங்கூட டைவர்ஸ் ஆன பிறகு வேற கல்யாணமே நடக்காம இருந்திருந்தா?? தண்ணீர் விழுந்து கொண்டிருந்த சத்தம் சட்டென நின்றது...
"சொல்லு மாமா வைசு அக்கா வேற கல்யாணமே பண்ணாம இருந்தாங்கன்னா, என்ன பண்ணுவ??
"பட் எனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சு எனக்கு புள்ள இருக்கு நான் தெளிவா இருக்கேன்.. நீ குழப்பி விடாதே..
ஒருவேளை அவர்களுக்கு கல்யாணமே முடியலன்னா என்ன பண்ணுவ சொல்லு அழுத்தி கேட்க
என்ன பண்ணனும்னு நீயே சொல்லிடு ... ஏன்னா நான் ஒன்ன சொல்ல போய், நீ அதுக்கு வேற விதமா பதில் கொடுப்ப ... அதனால நீயே பதில் சொல்லிட்டா பிரச்சனை முடிஞ்சு ...
"நான் சொன்னா சொம்ப தூக்கி அடிக்க மாட்டியே
என்ன
"பேசாம என்ன வெட்டிவிடு மாமா" சட்டென கதவை திறந்து கொண்டு வெளியே வந்த ரித்விக்
"இன்னொரு வாட்டி இப்படி பேசாத நங்க" என்றவன் முகத்தில் கோபம் குடிகொண்டிருந்தது ..
"ஏன் மாமா பேச கூடாது பேசுவேன் ... காதல் அவங்க மேல, அன்பு என் மேலயா ? சுவாசம் அவங்க மேல நேசம் என் மேலயா ... ஏன் மாமா ரெட்டை வேஷம் போட்டு உன்னை நீயே ஏமாத்திக்கிற...
வேஷமாவே இருந்துட்டு போகட்டும்டி, கடவுள் போட்ட தீர்ப்பை மாத்த நினைக்காத... முடிஞ்சது முடிஞ்சதுதான்
கடவுள் போட்ட தீர்ப்பு தப்பா இருந்தா, கடவுள் கிட்ட சண்டை போட்டு நமக்கு தேவையானது வாங்கிறது தப்பு இல்லை மாமா "
புரியல
"ஒரு கடைக்கு போற உன் அளவு சட்டையை கேட்கிற அவன் மாத்தி தந்துட்டான்.. நீ ஒருநாள் அதை போட்டுட்ட அழுக்காகி போச்சுன்னு பத்தாத சட்டையை வச்சா முட்டாள் நீதான் மாமா , எனக்கு அளவை மாத்தி தந்துட்டேன்னு சட்டையை தூக்கி அவன்கிட்ட கொடுத்துட்டு உனக்கு தேவையானது வாங்குறது புத்திசாலித்தனம்
"சட்டைக்கும் வாழ்க்கைக்கும் ஆயிரம் வித்தியாசம் இருக்கு "
"மனசுல இடம் இல்லாத வாழ்க்கையும் சட்டையும் என்ன பொறுத்த வரை ஒன்னுதான் மாமா
"தெளிவா பேசுறோம்னு நினைப்பா
"குழம்பி இருக்கிற உன்ன தெளிய வைக்கணும்னு நினைப்பு .. உனக்கு அவங்களை பிடிக்கும் அவங்கள மட்டும் தான் பிடிக்கும் ...
"ஆனா அவங்களுக்கு என்ன பிடிக்காது முதல்ல அதை புரிஞ்சிக்கோ
சொன்னாங்களா ?? உன்ன எனக்கு பிடிக்கலன்னு
"ப்ச் இதை ஏன் இத்தனை வருடம் கழிச்சு பேசுற நங்கை
"பேச வேண்டிய அவசியம்
"என்ன அவசியம் ??
"அக்கா வர்றாங்க எதாவது நல்லது
"போதும் நங்கை விடு ரித்விக் கண்ணாடி முன்னால் நின்று தன் சட்டையை எடுக்கப் போக .. நங்கை அவன் சட்டையை எடுத்து நீட்டியவள்..
"நான் இத்தனை வருஷம் உன்கூட இருந்துட்டேன் மாமா போதும் அவங்க வந்ததும் உன் மனசுல இருக்குறத பேசி.."
"என் மனசுல என்ன இருக்கு , ஹான் எதுவும் இல்ல.. என் பிள்ளை நீ நல்லா இருக்கணும் அவ்வளவு தான் என் மனசுல இருக்கு ,
அப்போ நீ எப்போ நல்லா இருப்ப மாமா
"ப்ச் நீ கண்டதையும் பொலம்பாம போய் வேலையை பாரு , என் மனசுல ஒன்னும் இல்லை
"இருக்கு உங்க மனசுல நிறைய இருக்கு மாமா
என்ன இருக்கு ?
"ஏன் என்ன வைசு காதலிக்கல, எவனையோ ஒருத்தன கல்யாணம் கட்டிக்கிட்டதுக்கு, என்ன கட்டிக்கிட்டு இருந்திருக்கலாமே,, நான் அவளுக்கு காதல கொட்டி கொட்டி கொடுத்திருப்பேனே.. ஏன் என்ன விட்டுட்டு போனா.. ஏன் எங்களுக்குள்ள இந்த பிரிவு , நீ விட்டுட்டு போனதுனால தானடி இப்படி ஒரு வாழ்க்கைன்னு ஏகப்பட்ட கேள்வி உனக்குள்ள இருக்கு ... இதெல்லாம் நீ என்கிட்ட சொல்ல மாட்ட மாமா ... ஆனா உன் கண்ணப் பாத்து இதெல்லாம் உன் மனசுக்குள்ள இருக்குன்னு நான் கண்டுபிடிச்சிடுவேன் ...ஏன்னா , உன்ன பத்தி எனக்கு நல்லா தெரியும் .. என்ற நங்கையை பெருமூச்சு விட்டு பார்த்தவன்
" சரிடி உன் ஆசைப்படி அவங்க வந்ததும் அவங்களுக்கு ஓகேன்னா, அவங்க புருஷனுக்கு ஓகேன்னா நம்ம மூணு பேரும் சேர்ந்து வாழலாம் ஓகேவா???
"என்ன மாமா நீ என்னையும் எதுல எடுத்தாலும் கூட்டு சேக்குற..
"என் லைஃப்ல நீயும் எனக்கு வேணும்.. உன்ன எப்பவும் எதுக்காவும் யாருக்காகவும் விட்டு கொடுக்க முடியாது அது வைசுவுக்காகவே ஆனாலும் உன்ன என்னால விட முடியாது...
ஏன் மாமா?
"ஏன்னா உனக்கு இருக்கிற ஒரே சொந்தம் நான் மட்டும் தான்டி என்றவனை காஜல் கண்கள் கலங்க நங்கை தலையை சாய்த்து பார்க்க அவள் நாடியை பிடித்து கொஞ்சிய ரித்விக்
சோ இதுக்கு யார் சம்மதிக்கிறாங்களோ அவங்க என் கூட லைஃப் லாங் வாழ்றேன் போதுமா ? நீ நான் அவங்க எப்படி என் ஐடியா என்று கண்ணை சிமிட்ட அவன் கையை தட்டி விட்ட நங்கை
"அய்ய நீ தேற மாட்ட போ
செருப்பை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பிய ரித்விக் சட்டையை பிடித்து இழுத்த நங்கை
"இன்னும் ஒரே ஒரு கேள்வி
"என்னடி
"என்ன உனக்கு பிடிக்குமா மாமா
"ம்ம் ரொம்ப பிடிக்கும் போதுமா என்று அவள் கன்னத்தை பிடித்துக் கொஞ்ச..
இன்னொரு கேள்வி
ப்ச் இப்ப என்ன ?
"என்ன புடிக்குமா இல்ல வைசு அக்காவ ரொம்ப பிடிக்குமா.... அவன் நடக்க ஆரம்பித்து விட ..
"சொல்ல மாட்டியே இந்த கேள்விக்கு மட்டும் நீ பதிலே சொல்ல மாட்டியே? ஆனா எனக்கு உன்ன தான் மாமா ரொம்ப பிடிக்கும் உனக்காக என்ன வேணும்னாலும் செய்வேன்.... பார்த்துகிட்டே இரு... உன்மேல நான் எவ்வளவு பிரியம் வச்சிருக்கேன்னு நீ பாக்கத்தானே போற" என்று கத்தியவள் குரல் தேய்ந்து போனது ...
கதவில் சாய்ந்து நின்ற நங்கை தூரத்தில் நடந்து போய்க் கொண்டிருந்த ரித்விக்கை மெலிதான புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்...
"பூக்குற பூ எல்லாம் செடிக்கு சொந்தம் இல்ல மாமா.. வானம் விட்டு தரையில் விழுகிற மழைத்துளி எல்லாம் வானத்துக்கு சொந்தம் இல்ல மாமா... உடம்பை விட்டு வெளியேறும் மூச்சுக்காத்து நுரையீரலுக்கு சொந்தம் இல்ல மாமா... அதுபோல நான் நேசிக்கிற நீ எனக்கு சொந்தமில்லைன்னு தெரியாத முட்டாள் நான் இல்ல மாமா ... என்றவள் கண்ணிலும் கண்ணீர் அவள் கொண்ட காதலை கூறியது ...
பல ஆண்டுகள் கழித்து வைசு கடைத்தெரு பக்கம் போனாள்... சந்துருவுக்கு நங்கைக்கு என நகைகள் துணிமணிகள் என பார்த்து பார்த்து வாங்கி கொண்டவள் எச்சில் விழுங்கினாள்
அவருக்கு வாங்கிட்டு போனா தப்பாகிடுமோ?? வாங்கிட்டு போகலேன்னா அதுவும் தப்பு தானே" என்றவள் யோசனையாக நகைக்கடையை சுற்றி வந்தவள் கண்ணில் புதிதாக எதோ ஒன்று தட்டப்பட
இது என்ன சிஸ் புதுசா இருக்கு...
ஆண்கள் போடுற தங்க மெட்டி மேடம் ...
ஆம்பளைங்க போடுறதா? கிரேசி "
"இப்ப உள்ள பெண்கள் எல்லாம் தினுசா தான் இருக்காங்க நான் போடுறேன் நீயும் போடுன்னு மாட்டி விட்டுடுறாங்க , அதோட ஒரு லாபமும் கூட இவர் வேற பொண்ணுக்கு சொந்தம்னு மெட்டியை பார்த்தும் தெரிஞ்சுரும்ல
ஹாஹா கையில் வைத்து உருட்டி பார்த்த வைசு என்ன நினைத்தாளோ
"இதையும் பேக் பண்ணிடுங்க என்று வாங்கி கொண்டவள் ரித்விக்குக்கு பரிசை தேட
"மேடம் ப்ளைட்டுக்கு லேட் ஆகி போச்சு என்று பிஏ வர
அய்யோய்யோ !! அவருக்கு எதுவும் வாங்கலையே என்று மணியை பார்க்க நேரம் இல்லை .இனி நிற்க முடியாது என்று ப்ளைட்டை பிடிக்க கிளம்பி விட்டாள்...
மாமா இப்படி சொன்னா எப்படி ?ரெண்டு மணிக்கு அக்கா வந்திடும்னு சொல்லத்தான செஞ்சேன் வேலை இருக்கு நீ போங்கிற "
"என்னால வர முடியாது நங்கை ..நீயும் சந்துருவும் போங்க ...போனில் அப்பக்கம் அவன் காட்ட குரல் வந்தது
"நீ வேணும்னு பண்ற மாமா
"அப்படியே வச்சிக்க...நான் வரல உன் விருந்தாளி தான நீயே போய் கூப்பிட்டு வா ...
"ப்ச் போ உன்கூட பேச மாட்டேன், உன்கூட நான் சண்டை
"பேச வேண்டாம் நானும் உன்கூட சண்டை..
"வர மாட்டேன்னு சொல்லிட்டு எங்கேயாவது நின்னு உன் பழைய ஆள சைட் அடிச்ச
"அதெல்லாம் வர மாட்டேன்...
"பார்க்கிறேன் என்று போனை வைத்து விட்டு நங்கை சந்துருவோடு ஏர்போர்ட் வாசலில் போய் காத்திருக்க
தொலைவில் நின்ற ஒரு காருக்கு பின்னே ஒளிந்திருந்து ஏர்போர்ட் வாசலையே பார்த்து கொண்டிருந்தது இரண்டை கண்கள் .. அத்தனை தேடல் அக்கண்ணில்...
காலநிலை தாமதமாக தமிழ்நாட்டில் இருந்து வரும் ஏர்____ விமானம் அரை மணி நேரம் தாமதமாக வரும் என்ற அறிவிப்பில் காத்திருப்பு மரணத்தை விட கொடுமை என்பதை அவன் கலங்கிய கண்கள் கூறியது ...
காத்திருக்கும் கொடுமை அவன் கண்ணில்
விரும்பியவனை தூக்கி கொடுக்க போகும் வலி நங்கை கண்ணில்
காதலனை அடுத்தவள் கணவனாக வேறு குடும்பமாக எப்படி பார்க்க போகிறேன் என்ற வேதனை வைஷ்ணவி கண்ணில்...
இவ கையில மாட்டிக்கிட்டு படாத பாடு படுறோமே இதுக்கு மாற்றுவழியே இல்லையா என்ற வலி மச்சீஸ் கண்ணில் அதான ??
அதான்!! மட்டும் வேகமா போடுங்க லைக் கேட்டா மட்டும் ஓடி ஒளிஞ்சிக்கோங்க...