பசப்புறு பருவல் 5
Pasa5

5 பசப்புறு பருவல்!!
"என் பொண்ணு மாசம் அம்பதாயிரம் ரூபாய் கவர்மெண்ட் சம்பளம் வாங்குறா ... அவளுக்கு போட்டி போட்டு வரன் வருது.. ஆனாலும் உங்களை எங்களுக்கு பிடிச்சு போச்சு , அதனாலதான் கூப்பிட்டு விட்டோம்... மாப்பிள்ளைக்கு சம்பளம் எவ்வளவு
"35 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கிட்டு இருக்கான் இப்பதானே வேலையில் சேர்ந்து இருக்கான் என்று சாமுராய் தாய் மலர் கூற ... தன் தாயின் அருகே உட்கார்ந்திருந்த சாமுராயை அத்தனை பேரும் குறுகுறு என்று பார்த்தனர்...
ஆண் பிள்ளையை பெற்று விட்டேன் அதை தா இதைத் தா என்று சொல்லும் காலம் போய் பெண் பிள்ளையை பெற்று விட்டேன் இதுயெல்லாம் உங்களிடம் இருக்கிறதா , அப்படின்னா பொண்ணு என்ற காலம் வந்து விட்டதே
"சொந்த வீடு இருக்கா ?
"இல்ல இனிதான் கட்டணும்
"நிலம் வாங்கி போட்டிருக்கீங்களோ ?
"ம்ஹும் இனிதான்
கடன் எதுவும் இருக்கா ?
"இளையவ கல்யாணத்துக்கு வாங்கினது கொஞ்சம் இருக்கு
ஓஓஓஓஓ
"கல்யாணம் முடிஞ்சதும் தனிக்குடித்தனம் ப்ளான் எதுவும் இருக்கா ?
"அவனுக்கு பிடிச்சா செஞ்சிக்க வேண்டியதுதான்
"ம்மா நான் பேசணும் என்று பெண் மெலிதாக குரல் கொடுக்க
"தம்பி போய் பேசிட்டு வா" என்று மலர் மகன் தோளை தட்ட
ம்ம் என்று எழும்பி சட்டையை நீவி விட்டு கொண்ட சாமுராய் அப்பெண் பாதம் பார்த்தே மாடி ஏறினான்...
ஒவ்வொரு படியாக ஏற ஏற அவனுக்கு தோன்றியது ஒன்றே ஒன்றுதான்..
பத்துக்கு பத்து வீடு வைத்திருக்கும் இவர்களே இவ்வளவு எதிர்பார்ப்புகள் வைத்திருக்கிறார்கள், சொற்பமான சம்பளம் வாங்கும் இவர்களுக்கே இவ்வளவு மேன்மையான பேச்சும் பார்வையும் இருக்கும்பொழுது.... கோடிகளில் பிறந்த ஒருத்தி, நின்றால் பணம் நடந்தால் பணம் என்று கொட்டி குவியும் பணங்களுக்கு நடுவே வளர்ந்த ஒருத்தி அந்த செருக்கோடு வாழ்ந்தது வளர்ந்தது பேசியது இப்போது பார்க்கும் பொழுது சரியாகத்தான் தெரிந்தது .... இவர்களுக்கே இவ்வளவு இருக்கும்பொழுது அவளுக்கு இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே... இதெல்லாம் தவறு என்று சொல்லிக் கொடுத்திருந்தால் அவளும் அதை பகுத்தறிந்து இருந்திருப்பாள் போல..
இதோ எளிமையாக வாழ கற்றுக் கொண்டு விட்டாள் இவர்களுக்கு அவள் எவ்வளவோ தேவையில்லை என்ற யோசனையை சிறிது வினாடி இவர்களோடு நடந்த சம்பாஷணையில் புரிந்து கொண்டான்...
என் பேரு வித்யா.. அப்போதுதான் அந்தப் பெண்ணை தலையை தூக்கிப் பார்த்தான்... திண்டில் கையைக் கட்டி சாய்ந்து நின்றான் .. ... எப்படியும் பேச விடப் போவதில்லை, நீயே பேசும்மா நான் கேட்கிறேன் என் ரீதியில் நின்றான்...
"எனக்கு காலையில 8 மணிக்கு வேலைக்கு போகணும் என்னால சமையல் எல்லாம் செய்ய முடியாது .... சனி ஞாயிறு மட்டும் தான் லீவு அப்பவும் வேலையெல்லாம் இழுத்து போட்டு செஞ்சு, என் உடம்பை கெடுத்துக்க முடியாது... என்ன அதை செய் இதே செய் சொல்ல கூடாது .. பத்து மணிக்கு வீட்டுக்கு வந்திடணும், பதினொரு மணிக்கு எல்லாம் தூங்கிடணும் .. எனக்கு நான்வேஜ் பிடிக்காது சோ நீங்க அதை அவாய்ட் பண்ணிக்கோங்க....
"அப்புறம் லோன் வாங்குறது அக்கா தங்கச்சிக்கு செய்யறது இதெல்லாம் எனக்கு சுத்தமா பிடிக்காது.. ரெண்டு பேரும் சேர்ந்து சம்பாதிச்சாதான் சொத்து பத்துன்னு வாங்க முடியும் ... நான் வாங்குற சம்பளத்தில் பத்தாயிரம் ரூபாய எங்க அம்மாவுக்கு கொடுத்துடுவேன் ஏன்னா என் சம்பளத்தை நம்பி தான் அவங்களும் இருக்காங்க ... அவங்க சாப்பிடணும் இல்ல...."
"உங்க அம்மாவுக்கு மூணு வேளை சாப்பாடு வருஷத்துல ஒரு சேலை போதுமில்ல....
என்னடா வெடுக்குன்னு பேசுறான்னு நினைக்காதீங்க ,முன்னமே எல்லாத்தையும் பேசிட்டா நாளைக்கு நமக்குள்ள பிரச்சனை வராதுல்ல அதான்... நானும் உங்களுக்கு சரிசமமா சம்பாதிக்கிறேன் அதனால எங்கேயும் எப்போதும் மரியாதை குறைய கூடாது, வாரத்துல ரெண்டு நாள் கண்டிப்பா அம்மா வீட்டுக்கு வந்துருவேன்.. " என்று போனது போனது போய்க்கொண்டே இருந்தது ... இவனும் காலை மாற்றி மாற்றி நின்று அவள் பேசுவதை கேட்டவன் மனதில் தோன்றியது ஆக அவளுக்கு இருப்பது குடும்பம் எனக்கு இருப்பது வேண்டாம் வெறுப்பான ஒரு குடும்பம் அதை ஒதுக்கி வைத்து விடு என்று நாசுக்காக முடித்துவிட்டாள..
அதில் தவறு ஒன்றும் இல்லை பெண்ணுக்கு எதிர்பார்ப்புகள் இருக்க வேண்டியதுதான் ஆனால் இது ஏகப்பட்ட எதிர்பார்ப்பாக இருந்தது ... அவனை நம்பி தான் அவன் குடும்பமும் இருக்கிறது... விதவைத் தாய், இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கும் தங்கைகள் வாழ்க்கை எல்லாவற்றையும் எப்படி வெட்டி விட
"எனக்கு உங்கள பிடிச்சிருக்கு உங்களுக்கு எதாவது பேசணுமா?? என்று எப்படியோ கடைசியாக அப்பெண் அவனை பார்க்க..
"அது வந்துங்க என்று இவன் வாயை எடுக்கும் முன்
"யாரும்மா நீ திடுதுப்புன்னு உள்ள வந்துகிட்டு இருக்க... மாப்பிள்ளை வீடா பொண்ணு வீடா ஏம்மா உன் கிட்ட தான் கேட்டுகிட்டு இருக்கேன் என்று கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட....
"டேய் போர்ஜரி வெளிய வாடா "என்ற குரலில் ராயன் கண்ணை சுருக்கினான் .. மேலே நின்ற இருவரும் கீழே இறங்கி வர ... நடுஹாலில் கண்களை உருட்டி ஒவ்வொருவரையாக பார்த்துக் கொண்டு நின்றாள் ரிதன்யா.... மாடி படியிலிருந்து அந்த பெண்ணின் பின்னால் இறங்கி வந்த ராயனை கண்டதும் மேல் மூச்சு கீழ் மூச்சு விட்டவள் ...
மாப்பிள்ளை வீடும் கிடையாது, பொண்ணு வீடும் கிடையாது இந்த மாப்பிள்ளையோட எக்ஸ் லவ்வர் என்றதும் கூட்டத்தில் சலசலப்பு வந்து போக.... ரித்து நேரே அவன் பக்கத்தில் வந்து நின்று சாமுராய் சட்டையை கொத்தாக பிடித்து இழுத்தவள்
"நான் யாருன்னு கேக்குறாங்க , சொல்லு , நான் தான் உன்னோட எக்ஸ்ன்னு...ம்ஹூம் , காதலிக்கிற மாதிரி ஏமாத்தி இடையில விட்டுட்டு போனவன்னு நீ சொல்றியா இல்ல வேற மாதிரி நான் சொல்லவா??" என்று நீலி போல கண்ணை உருட்டினாள்....
"ப்ச் அவள் கையை தட்டி விட்டவன்
"இல்லைனு நான் எப்ப சொன்னேன்.... ஆமா ஏமாத்தினேன், போதுமா போ .. அம்மா வாங்க அத்தனை பேரும் வாயை பிளந்து கொண்டிருக்க ராயன் வெளியே வந்துவிட...
என்ன உடனே ஒத்துக்கிட்டான்? எப்படியோ கெடுத்து விட்டாச்சு வந்த வேலை முடிஞ்சது என வெளியே வந்த ரிதன்யாவை கையைக் கட்டிக் கொண்டு பார்த்த ராயன்..
"தேங்க்ஸ், எப்படிடா இந்த கல்யாணம் வேண்டாம், பெண்ணே பிடிக்கலேன்னு சொல்லலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்... நீயே வந்து குழப்பி விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்... உன் சமூக சேவையை பாராட்டுறேன் ... கொடுக்கிறதுக்கு ஒன்னும் இல்ல சோ இந்தா கரெக்ட் டைமுக்கு கஷ்டப்பட்டு பஸ் பிடிச்சு வந்து சேர்ந்ததுக்கு என்னோட டிப்ஸ் என்று அவள் கையில் பத்து ரூபாயை கொடுத்துவிட்டு
"அடுத்த வாரம் மருதமலை பக்கம் ஒரு பொண்ணு பாக்க போறேன் முடிஞ்சா அங்கேயும் வந்து இதே சேவையை பண்ணிட்டு போ" என்று ஊமையாக சிரித்துவிட்டு
"வாம்மா வந்து வண்டியில ஏறு என்று தன் தாயை பைக்கில் ஏற்றிக்கொண்டு ராயன் போக
"ஹலோ போர்ஜரி, என்னை ஏமாத்திட்டு நீ மட்டும் சௌக்கியமா வாழ்ந்துடலாம்னு நினைக்காத.... எங்க போனாலும் உன்னை வாழவே விடமாட்டேன் கல்யாணம் கட்டி ஜெகஜோதியா வாழலாம்னு கனவு கோட்டை கட்டிக்கிட்டு இருக்கியா ... உன் மானத்தை ஊர் ஊரா வந்து சந்தி சிரிக்க வச்சு உன்ன ஒத்தக்கட்டையா நிக்க விடல , என் பேரு ரிதன்யா இல்ல" என்று நடுரோட்டில் நின்று ரிதன்யா கத்த தலையை திருப்பி அவளை பார்த்த ராயன்..
"முடிஞ்சத செய் போடி என்று விட்டு மறைந்து விட்டான் ...
"ராயா
""என்னம்மா
"என்னடா, இதுதான் நீ சொன்ன பொண்ணா?
"ம்ம் இப்படி கண்டதையும் வந்து பேசி கல்யாணத்தை குழப்பி விட்டுடுச்சே" என்று மலர் மகன் தோளில் கை வைக்க...
"நானே அந்த பொண்ணுக்கிட்ட வேண்டாம்னு சொல்ல தான் நினைச்சேன்
"ஏன்டா
"இவள மறுபடியும் பார்த்ததுல இருந்து சங்கடமா இருக்கும்மா "
"புரியல
"நான் அவளை காதலிக்கல, ஆனா அவ என்ன காதலிச்சாளே அவ லைப் செட்டில் ஆகாம நான் என் வாழ்க்கையை பார்க்கிறது தப்புன்னு ஏற்கனவே உறுத்திட்டே இருந்துச்சு ... நீ வேற திடீர்னு பொண்ணு பார்க்க கூட்டிட்டு வந்திட்டியா, அதான் எதையாவது சொல்லி தட்டி விட நினைச்சேன் அவளே வந்து ஆடிட்டு போயிட்டா ...
உனக்கு ஒரு நல்லது நடக்க விட மாட்டா போலேயேடா...
ம்ம் , சும்மா கண்ட இடத்துலயும் பொண்ணு பாத்துட்டு இருக்காதம்மா... இப்போ உள்ள பொண்ணுங்களுக்கு எல்லாம் எதிர்பார்ப்பு அதிகம் அவங்க எதிர்பார்ப்பை எல்லாம் நாம பூர்த்தி செய்ய முடியாதும்மா...
அதுக்கு ஏற்கனவே 30 வயசுக்கு மேல ஆகி போச்சு அவங்க கூட குறைய கேட்கத்தான் செய்வாங்க, கல்யாணம் பண்ணாம கிடக்க போறியா?
"அப்படி எப்போ சொன்னேன் ?பொண்ணு பார்க்காதன்னு தான் சொன்னேன் ...
"அப்போ கல்யாணம் ?
"அதான் ஜங்கு ஜங்குன்னு ஒரு பிசாசு ஆடிச்சே, அந்த பொண்ணு உனக்கு ஓகேவா?
"எது அந்த பொண்ணா ??!
"ஏன் பிடிக்கலையா ?
"உனக்கு மனசுல அந்த பொண்ணு மேல ஆசை இருக்கா ராயா "
"இதுவரைக்கும் இல்ல ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இருந்து இவ மேல தப்பு இல்லன்னு யோசிக்க வச்சிட்டா ... இனி ஆசை வரலாம், வரலாம் என்ன வரும், அந்த அடங்காப்பிடாரி கூட மல்லுக்கட்ட உன்னால முடியுமா சொல்லு?
"எனக்கு என்ன ராயா உனக்கு புடிச்சா சரிதான்.. நீ சந்தோஷமா இருக்கிறத பார்த்தா போதும்....
"நிறைய சண்டை போடவா பதிலுக்கு பதில் பேசுவா ஆனா மனசுல எதுவும் வைக்க மாட்டா,
"அவள கல்யாணம் பண்ண போறியா?
"இல்ல லவ் பண்ண போறேன் என்று கண்சிமிட்டினான்...
"ஒத்துப்பாளா ??
"சொன்னா ஓட விட்டு அடிப்பா , சொல்லாம டாவ் அடிக்க வேண்டியதுதான்... கலகலத்து சிரித்த மகன் அவனுக்காக இன்று தான் யோசிக்கிறான் , பேயோ பிசாசோ அவனுக்கு பிடிச்சா சரிதான் என்று மலர் பச்சை கொடி ஆட்டி விட்டார்...
"பிளடி _ச் கல்யாணம் பண்றியா கல்யாணம்... என்ன தவிர ஒருத்தி பக்கத்துல கூட நீ போக முடியாது ...கடைசி வர கட்ட பிரம்மச்சாரி தான் நீ என்று ரித்து பல்லை நரநரத்தாள்...
தீராத கோவம் தான் அவன் மீது , அதை தீர்த்து வைக்கவும் அவன்தான் வேணும்..
விட்டுகொடுப்பது காதல் என்றாள் ஒருத்தி!
விட்டுட்டு போன உன்ன விடாம தொல்லை செய்வேன் என்றாள் ஒருத்தி !
இரண்டுமே காதல்தான் !!