பசப்புறு பருவல் 1
Pasa1

1 பசப்புறு பருவரல்!!
வேஷம் போடும் வேடா கதையின் ரெண்டாம் பாகம் !!
பசலை நோயில் வாடும் காதலர்களை பற்றிய திருக்குறளின் அதிகாரமே பசப்புறு பருவல் என்பது
தீரா பசலை நோயிக்கு மருந்து என்னவோ??
"ஹேஏஏஏஏஏஏஏஏ குழந்தை அழுகுரல்
சென்னை ஏ கிளாஸ் மருத்துவமனை பிரசவ அறையை நிரப்பியது ...
"பரவாயில்லை வைசு சத்தமே இல்லாம குழந்தையை பெத்து எடுத்துட்டியே"... என்று மருத்துவர் அவளை பார்க்க வலி நிறைந்த புன்னகையை கொடுத்தாள் வைஷ்ணவி.. ரித்விக்கின் முன்னாள் மனைவி...
"இது எல்லாம் என்ன வலி மேடம், நான் அனுபவிச்ச வலி முன்ன இதெல்லாம் சர்வ சாதாரணம் ... என்ன குழந்தை .??
"பெண் குழந்தை வைசு "என்று தங்க திருமேனி கொண்டு பிறந்த மகளை மருத்துவர் காட்ட ...
"இது ஒன்று போதும்" என்று மகள் கன்னத்தில் அவள் முத்தம் பதிக்கும் முன், குழந்தை தலை தளர்ந்து விழ ..
"அய்யோ என்னாச்சு... என்று வைசு பதற
"இரும்மா என்னன்னு பார்க்கறேன்" என்று பிள்ளையை தூக்கி கொண்டு அங்கும் இங்குமாக ஆட்கள் ஓட ... அவள் எச்சில் கூட விழுங்காது பிள்ளைக்காக காத்திருக்க , வெள்ளை துணியில் அன்றோ அவள் துயர் துடைக்க வந்த தேவதை உயிரற்ற வந்து இன்னும் நீங்கா துயரில் ஆழ்த்தி போனாள் ..
அய்யய்யோ என் பிள்ளை!! என்று கதறிய வைசு அழுகை மார்பில் பால் சுரக்கா தாயை கூட கலங்க வைத்து போகும் ...
தன் இருட்டு அறையில் முடங்கி கிடந்தாள் வைஷ்ணவி தகப்பன் , தாய் முகம் பார்த்து பேசி பல வருடம் ஆகிறது
"வைசு"
"வைசு அவள் தாய் செண்பகம் மெல்ல அவள் அருகே உட்கார்ந்தார்
"இந்தா பிரசாதம்...
"ப்ச்
"இன்னைக்கு உன் பிறந்தநாள் வைசும்மா இன்னைக்காவது வெளியே எங்கேயாவது போயிட்டு வரலாமே " வருடங்கள் பல முடிந்து போனது உலகை காண விரும்பவில்லை உணவு உண்ண விரும்பவில்லை, உறவுகளை காண விரும்பவில்லை இவ்விருட்டு போதும் இவ்வறை போதும் என்று மொத்தமாக முடிங்கி போன மகளை என்ன செய்தும் மீட்டு எடுக்க முடியவில்லை...
இன்னைக்கு உன் பிறந்த நாள் வைசும்மா சட்டென அவள் ஜீவன் போன கண்ணில் மின்னல் தோன்ற ..
"என்ன எனக்கு பிறந்த நாளா?!! வேகமாக கட்டிலை வி்ட்டு எழும்பி ஓடி வந்து காலண்டரை திறக்க... அவள் பிறந்த நாள் முகத்தில் அன்று மட்டுமே வரும் புன்னகை.... அவள் வீட்டு போன் மணி அதிர்ந்தது .... தன் தாய் தந்தை அங்கே நின்ற யாரையும் பார்க்காது நாலு கால் ஓட்டமாக ஓடி வந்து அந்த போனை எடுத்து காதில் வைத்தாள் வைஷ்ணவி...
"ஏங்க" என்ற அவன் குரலில் ஓஓஓ என்று கதற தோன்ற சேலை முந்தானை வைத்து வாயை மூடி கொண்டாள் கணவன் என்று சொல்ல உரிமை இல்லை ஆனால் சாகும் வரை அவள் காதலன் அவனே
ரித்விக் குரல் அஃது
"இருக்கேங்க..."
"பிறந்த நாள் வாழ்த்துகள்ங்க " கம்பீரமாக வந்த அவன் குரலை ஆசையாக
"ம்ம் நன்றிங்க
"நல்லா இருக்கீங்களாங்க ???
"ம்ம் பைன் ரொம்ப நல்லா இருக்கேங்க நீங்க ?
"நல்லா இருக்கேன்
"ஓஓஓ உங்க மனைவி பிள்ளை எல்லாம் நல்லா இருக்கா?? என்று வைஷ்ணவி கேட்டு முடிக்கும் முன் ஆயிரம் முறை உயிரோடு செத்துவிட்டாள்... அன்று உரிமையானவன் இன்று யாருக்கோ உரிமையாய் உயிராய் மாறி ஒரு உயிரையும் கொடுத்து குடும்பமாய் வெளிநாட்டில் வாழும் தன் முன்னாள் கணவனை காதலிப்பது சரியா தவறா என்று கூட தெரியாது பேதலித்து நிற்கும் பேதை அவள் ..ஆனால் இதுதான் நிதர்சனம் பழகி கொண்டு ம்ஹூம் சகித்து கொண்டாள் அவ்வளவே
சந்துரும்மா வைசு ஆண்டி பேசுறாங்க பேசுறியா...ரித்விக் தன் மகனுக்கு குரல் கொடுக்க
"மாதாஜி ஆன்டி கூட பேசவா ??என்று மழலை குரல் போன் மூலம் வர செத்து போன முகத்தில் பிணமாய் ஒரு சிரிப்பு வைஷ்ணவிக்கு...
"சீக்கரம் பேசிட்டு வா, ஸ்கூலுக்கு போகணும்ல என்ற பெண்ணின் குரல் மென்மையாக வந்தது ....
"தேங்க்ஸ் மாதாஜி "என்று ஓடி வந்த ஆண் குழந்தை அச்சு அசல் ரித்விக்கை உரித்து வைத்திருந்தான்
"ஹாய் ஆன்டி நான் சந்துரு
"ம்ம் தெரியுமே... எப்படி இருக்கீங்க
"பைன் ஆன்டி நீங்க
"ம்ம் நல்லா இருக்கேன்
"எப்போ ஆன்டி எங்களை எல்லாம் பார்க்க வருவீங்க உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கி கொண்ட வைசு
"கூடிய சீக்கரம் வர ட்ரை பண்றேன்
"பேட்டா, ஸ்கூல் வேன் வந்திடுச்சு ஓடிவா என்ற தாயின் குரலுக்கு
"இதோ வர்றேன் மாதாஜி ,ஃஓகே வைசு ஆன்டி பிறகு பேசுறேன்
"பாய் டேடி பாய் மம்மி" என்று கத்தி கொண்டே தேய்ந்து போன பிஞ்சு குரலை கண்ணில் வடிந்த கண்ணீரை கூட துடைக்க முடியாது கேட்டு கொண்டு நின்றாள் வைஷ்ணவி
"ஏங்க
"ஹான் சொல்லுங்க ரித்விக்..
"நீங்க நல்லா இருக்கீங்க தான
"ரொம்ப ரொம்ப நல்லா இருக்கேன் ரித்விக் ....
"அது போதுங்க பிறந்த நாள் வாழ்த்துகள்ங்க
"ம்ம்
"ஒரு நிமிசம்ங்க என் வொய்ப் பேசணுமாம்?
அப்போ நான் யார்?? என்று கேட்க முடியாது நின்றாள் ..
"ம்ம் கொடுங்க ரித்விக்
"அக்கா நல்லா இருக்கீங்களா???" அன்பாய் வந்த அக்குரல்
"நீ எப்படிம்மா இருக்க??
"சூப்பரா இருக்கேன் அக்கா மாமா என்ன ஒரு குறையும் வராம பார்த்துக்கிறார்"
"ம்ம் ரொம்ப சந்தோசம்ம்மா...
"அவருக்கு வேலைக்கு லேட் ஆச்சுக்கா, டிபன் பண்ணணும் நீங்க அவர்கிட்ட வேணும்னா பேசுங்க
இல்லேம்மா எனக்கும் வேலை வந்திடுச்சு வைக்கிறேன்..
சரிங்க அக்கா என்று போனை துண்டிக்க
துண்டித்த உறவில் இனி இணைவு இல்லை என்று என்றோ தெரிந்தது தான் ஆனாலும் ஏற்க மறுத்தது மனது ... வருடம் வருடம் அவள் பிறந்த நாளைக்கு வரும் அவன் வாழ்த்துக்காக மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கும் அவள் !!!
தன் மகள் அழுகையின் சிவந்த கண்களை தாய் செண்பகமும் தகப்பன் பெருமாளும் கையறு நிலையில் பார்த்து கொண்டு நின்றனர்... அவர்கள் முகத்தில் இருந்த சோகத்தை கண்டு வைஷ்ணவிக்கு பத்தி கொண்டு வந்தது ...
இப்போ உங்க ரெண்டு பேருக்கும் சந்தோஷமா இருக்குமே, கண்குளுர என்ன பாருங்க , பெத்த வயிறு குளிர்ந்து போகும் ..ம்ம் நல்லா பாருங்க என்று அவர்கள் முன்னால் தன்னை சுற்றி காட்டினாள்
தேவதை போல சுற்றி வந்த பெண், ஒரு காதல் படுத்திய பாடு பசலை நோயில் வாடி வதங்கி சூரிய ஒளி இல்லாத மரமாய், நீரில்லாத கொடியாக துவண்டு காய்ந்து, கருகி வாழ்க்கை என்னும் போராட்டத்தில் இனி எனக்கு ஓட தெம்பே இல்லை விட்டு விடுங்கள் என்ற நிலையில் தன்னை ஒப்பனை செய்து கொள்ள மறந்து, தன் அழகை கண்ணாடியில் கூட பார்க்க பிடிக்காது , சதா வெறித்துப் பார்த்த கண்ணும் ஜீவன் இழந்த முகமும்.... ஏனோ நானும் வாழ்கிறேன் தற்கொலை செய்து கொண்டால் எங்கே அந்த ஜீவன் அய்யோ என்னால் தான் அவள் உயிரிழந்து விட்டாளோ?? என நினைத்து அவன் வருந்தி விடுவானோ என்ற ஒரு காரணத்தினால் மட்டுமே இந்த ஒற்றை ஜீவனை போனால் போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறாள்....
ஆனால் இவர்களையெல்லாம் பார்க்கும் பொழுது ஐந்து வருட வழி இன்னும் குத்தி கிழிக்கிறது இவர்கள் சுயநலத்திற்காக இழந்தது அவள் வாழ்க்கை , அவள் குழந்தை , அவள் ரித்விக் மொத்தத்தையும் இழந்து விட்டு நிற்கும் மகளை பரிதாபமாக பார்க்கும் பொழுது அவர்களை கொன்று போடும் ஆத்திரம் வந்தது ..
"உங்க மூழ்கி போல பிசினஸ தூக்கி நிறுத்துவதற்காக , கடனுக்காக என்ன காதலிக்க சொன்னீங்க ... உங்க பிசினஸை வளர்க்கறதுக்காக அவர கல்யாணம் கட்டி வச்சீங்க ... என்னைக்காவது என் மனசை யோசிச்சிங்களா ??
"அம்மாடி "
"ச்சை , எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்ப்பா என்னைக்காவது இதையெல்லாம் மறந்துட்டு இன்னொரு வாழ்க்கை எனக்குன்னு நான் ஏற்படுத்திப்பேன்னு நீங்கள் கனவுக் கோட்டை கட்டிக்கிட்டு இருக்கீங்க... ஹாஹா ஒன்னு சொல்றேன் நீங்க நினைக்கிறது எனனைக்குமே நடக்காது....
ஐயம் ஆல்வேஸ் மிஸஸ் ரித்விக் தான் ..
இந்த வீட்டுக்குள்ள நான் நடைபிணமா வாழ்றத நீங்க அத்தனை பேரும் பார்த்து , தினம் தினம் சாகறதுக்காக மட்டும்தான் நான் உயிரோட இருக்கேன்.... எனக்குன்னு ஒரு வாழ்க்கை அது இனி கிடையவே கிடையாது... நீங்க என்ன செஞ்சாலும் , என் முடிவுல இருந்து மாற மாட்டேன்... அவர் எனக்கானவரா இல்லாம போயிருக்கலாம் ஆனா, என் மனசு முழுக்க நிறைஞ்சுதான் இருக்கார் ... என் வாழ்க்கையை விட்டு, எங்க திருமண பந்தத்தை விட்டுட்டு அவர் வெளியே போய் இருக்கலாம் பட் என் மனசுக்குள்ள இருக்கிற ரித்விக்கை எவனாலும் , ஏன் அவரே நினைச்சா கூட தூக்கி வெளியே போட முடியாது .... நான் வாழாம ஒவ்வொரு நாளும் உங்க கண்ணு முன்னாடி செத்து போய் அலையுறதை கண்குளிர பாத்து ரசிங்க .... அயோக்கியாவை மறந்து இவனை ஏற்று கொள்ள சில தினங்கள் கூட அவளுக்கு தேவைப்படவில்லை ஆனால் இவனை மறக்க பல யுகம் வேண்டும் போல அபப்டியெனில் இவன் மீது வந்தது தான் உயிர்க்காதலோ?? ஆம் , இவ்விடை இனி அறிந்து என்ன பயன் ? எல்லாம் கையை விட்டு போச்சே !!
அம்மாடி நம்ம நல்லதுக்காக தானே என்று பெருமாள் வாயை திறக்க
"எது நல்லது என்ன கூட்டி கொடுத்து இருக்கீங்க"
"அம்மாடி
" அதுதான் டேடி உண்மை .... உங்க தேவைக்காக என்னை கூட்டி கொடுக்க ட்ரை பண்ணி இருக்கீங்க நானும் அப்பா நமக்கு நல்லது தான் பண்ணுவார்னு நினைச்சு ச்சை , நான் பண்ணின தப்புதான் என் குழந்தையையும் என்ன விட்டு அந்த கடவுள் பிடுங்கிட்டார் , நான் செஞ்ச பாவத்துக்கு அதையும் தண்டனையா ஏத்துக்கிட்டாலும்....
வலிக்குதே எனக்கு வலிக்குதே அய்யோ !!எனக்கு வலிக்குதே, இந்த வலி தீராதா இந்த வலி போகாதா?? இந்த வலியை யாராவது குறைக்க மாட்டாங்களா.... அம்மான்னு கூப்பிட வேண்டிய பிள்ளை இல்லை , நான் இருக்கேன்டி சொல்ல வேண்டிய புருசன் இல்லை, அரவணைப்புக்கு தாய் தகப்பன் இல்லை ... ஏன் எனக்கு மட்டும் இப்படி?? அய்யோ எத்தனை வருடம் தான் இந்த வலியை நான் தாங்குவேன் என்று தலையில் அடித்து அழுத மகளை கண்ணீர் வடிய பெருமாளும் செண்பகமும் பார்த்தனர் ...
தைரியசாலி தான் ஆனால் காதல் பல முறை அவளை உடைய வைத்து விட்டது...
"நான் வேணும்னா ரித்விக் தம்பி கிட்ட பேசவாம்மா என்று கண்ணீரை துடைத்துக் கொண்டு வந்த தன் தாயை எரிச்சலாக பார்த்த வைஷ்ணவி
"என்ன பேச போறீங்க?? உங்க பொண்டாட்டியை தள்ளி வச்சிட்டு என் பொண்ண சேத்துக்கோங்க, அவளும் கொஞ்ச நாள் உங்க கூட வாழட்டும்ன்னு சொல்ல போறீங்களா....
அது நீயும் அவர் பொண்டாட்டி தானம்மா
"ச்சை இன்னும் உங்க சுயநலம் முடியவே இல்லல்ல, உங்க பொண்ணுக்காக ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க எவ்வளவு ஈசியா பேசுறீங்க.. அந்த பொண்ணும் பாவம்னு யோசிக்க தோண மாட்டைக்குதுல்ல
"நீ அவரை நினைச்சுட்டு தான் இருக்கேன்னு தெரிஞ்சா
"தெரிஞ்சா தெரிஞ்சா சொல்லுங்க அவர் நிம்மதி போகும் அதான ,, இது அதிலும் அசிங்கம் அவராவது சந்தோஷமா வாழட்டும், அவராவது நிம்மதியாய் இருக்கட்டும் உங்க திருவாயை பொத்திக்கிட்டு சும்மா இருங்க "என்று வைசு கத்திவிட்டு அறைக்குள் போய் கதவை அடைத்து கொண்டாள் ...
அவள் பசலை நோயிக்கு மருந்து மரணம் மட்டுமே என்று விதிக்கப்பட்டது...
ஏன் வேற மருந்து இல்லையா ??
ஸ்டாக் இல்ல!!