பசப்புறு பருவல் 17

Pasa17

பசப்புறு பருவல் 17

17 பசப்புறு பருவல் !!

உலகத்தில் மூன்றே வகையறாதா ஒன்று பிரச்சினையை உண்டாக்குகிறவன்.. இரண்டாவது பிரச்சனையை எதிருக்கு எதிரில் நின்று போராடி ஜெயித்து வெற்றியோ தோல்வியோ எதையும் நின்று போராடக் கூடியவன், மூன்றாவது பிரச்சனை வந்துவிட்டது என்றால் அந்தப் பிரச்சனையை அப்படியே போட்டுவிட்டு ஓடிவிடுவது, பிரச்சனை இருந்தால் தானே அதுக்கு சொல்யூஷன் கண்டுபிடிக்க வேண்டும் அந்த பிரச்சினையை டீலில் விட்டு விட்டால் என்ற கேட்டகிரி .. இந்த மூன்றாவது வகைறாதான் ரித்விக்.. 

வாழ்க்கை பிரச்சனை ஆகிப்போனது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் பிரச்சனைக்கு உரிய வைஷ்ணவியை விட்டுவிட்டு ஓடிவிட்டான்.. அதனால் அவன் கெட்டவன் என்று எல்லாம் இல்லை எல்லோருக்கும் உலகத்தை கையாளும் பக்குவம் திறமை இருப்பதில்லை அது காலம் நமக்கு கொடுக்கும் வலிகளில் வழியேத்தான் பழக்கப்படும்...

"அம்மாக்கிட்ட போறியா "ப்ளைட்டில் ரித்விக் மடியில் உட்கார்ந்திருந்த குழந்தை எதையோ தொலைத்தது போல அரண்டு தகப்பனை பார்த்தது..  

"அதான் அம்மா வரலையேப்பா "என்று உதட்டை பிதுக்க வைசு அடிப்பட்டு போய் ரித்விக்கை திரும்பி பார்த்தாள் 

"சா என அவன் வாயை திறக்க போக  

"உங்க சாரியே வேண்டாம் 

"நீங்க தான் அம்மான்னு சொல்லி கொடுக்குறேங்க... 

"எதுக்கு அவமானப்படவா ,அவளே உணர்ந்து சொன்னா போதும் ... 

"ம்ம் இந்தியா வந்து இறங்கினர் .... வைஷ்ணவி தாய் தகப்பன் காரோடு வாசலில் நிற்க ... இவர்கள் மீது சந்தேகம் இருந்தது ஆனால் அயோக்கியா பொய் சொல்ல மாட்டானே செத்தும் கெடுத்தான் என்று கிழடுகள் ரெண்டும் அத்தனையும் சிறப்பாக செய்து வி்ட்டு போய் தொலைந்து விட்டனரே... ஐஞ்சு வருடம் இந்த பிள்ளைக்காகதானே தன் பெற்றோர் முகத்தை பார்க்க பிடிக்காது அலைந்தாள் இப்போது குழந்தை தனக்கு என்றவுடன் தாய்க்கு நடந்ததை கூற வருத்தம் தான் ஆனால் இனி நல்லது நடக்கும் என்று மன நிம்மதி....  

"நான் ரித்துவுக்கு எடுத்து கொடுத்த வீட்டுல தங்கிக்கவாங்க.. 

"ஏன் என் பிள்ளையும் உங்களோடவே வரணும் .. நான் அவளை பார்க்க உங்க வீட்டு வாசல்ல பிச்சைக்காரி போல கிடக்கணும் ... பைத்தியக்காரி ஆக்கிட்டீங்க அடுத்து பிச்சைக்காரி ஆக்க போறீங்களா?? என்ன முயன்றும் அவனோடு இயல்பாக பேச பார்க்க முடியவில்லை 

"இல்லங்க நீங்க சொல்றபடி செய்றேன் 

"எங்க வீட்டுக்கு வாங்க தம்பி கொஞ்சம் பிள்ளை பழகிடுமே என்று வைசு தாய் செண்பகம் கூற அவன் உத்தரவுக்கு தன் வீட்டம்மாவை பார்க்க 

"நாம அப்பாகூட பின் சீட்டுல உட்காருவோமா லேகா..

அப்பா "

"அப்பா வருவார் 

"ம்ம் வைசு அருகே போய் குழந்தை அமர ரித்விக்கும் மகள் அருகே உட்கார்ந்து கொண்டான்...   

"நான் அப்பா கூடவே இருக்கேன் பெரியம்மா" தகப்பன் கையை விட மறுக்கும் குழந்தையை என்ன செய்ய இவள்தான் பரிதவித்து போய் யாரோ போல தள்ளி நிற்கும் பிள்ளை அருகே போக முடியாது தவித்தாள் 

"ஒரே ரூம்ல இருந்துக்கு முடியுமா ரித்விக் ஆட்சேபனை உண்டுன்னா தனியா இருந்துக்கிறேன் எனக்கு பிள்ளை வேணும் என்றதும் தலையை குனிந்து நின்ற ரித்விக் 

"எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லைங்க" காதல் போய் தாய்மை போராட்டம் ஆகி போனது , காதலே மறந்து போச்சு என்று கூட சொல்லணும் பிள்ளை தன்னை தாயாக அங்கீகரிக்காதா என்ற ஏக்கம் மட்டுமே அவளுக்கு .. பிள்ளையை இழந்து வாடின அவள் கையில் பிள்ளையை சேர்த்துடணும்.. அதன் பிறகு தான் வாழ்க்கை பற்றி யோசிக்க வேண்டு்ம் அவளுக்கு வேண்டும் என்றால் வாழவும் ஓகே வேண்டாம் நீதான் எல்லாத்துக்கும் காரணம் போ என்றாலும் ஓகே தான் ..அவள் கையிலேயே தீர்வு காண முடியாத வினாவை கொடுத்துவிட்டான்... 

பிரயாண களைப்பில் லேகா கண்ணை உருட்டிட 

"உன்ன தூங்க வைக்கவா?? வைசு அவளை தூக்க போக

ம்ஹூம் நங்கை அம்மாகூட பேசணும் என்றதும் வைசு ரித்விக்கை திரும்பி பார்க்க 

போக போக சரியாகிடுவாங்க 

"ம்ம் போனை போட்டு கொட்ங்க என்றதும் போனை போட்டு நங்கைக்கு கொடுக்க 

அம்மாஆஆஆஆ என்ற குழந்தை அழைப்பில் நெஞ்சை தடவி கொண்டு வைஷ்ணவி நின்றாள் ,,

என் பட்டு குஞ்சம் என் பிள்ளை , அம்மா சீக்கரம் வர்றேன் சரியா என்று நங்கை கொஞ்ச கொஞ்ச தூக்கத்துக்கு சொக்கி அவள் குரலில் தூங்க .... ஐந்து வருட தாய்மையை கொடுத்து நங்கை வென்று விட்டாள் என்பது புரிந்தது ... முள்ளில் பட்ட சேலை போல உறவு சிக்கல் ஆகி போனது, எப்படி எடுத்தாலும் காயப்பட போவது குழந்தையே... பொறுமையாகத்தான் ஹேண்டில் செய்ய வேண்டும் ....

என்ன மாமா மாமனார் வீடு செட் ஆகிடுச்சா பலே கவனிப்பு போல நங்கை கிண்டல் செய்ய 

"எங்கடி யாரை பாத்தாலும் என்ன தீவிரவாதி போல பார்த்து வைக்கிறாங்க , தங்கச்சிக்கு கல்யாணம் கூடி வந்திருக்கு ராயன் வீட்டுல இருந்து பேசினாங்க .... நகை நட்டு போடலைன்னாலும் கல்யாண செலவாவது பண்ணணுமே உன்கிட்ட எவ்வளவு தேறும் நங்க 

"இருக்கு மாமா பார்த்துக்கலாம் 

"நீயும் கிளம்பி வர்றியா 

"நானா ??

"ம்ம் கூட மாட உதவிக்கு நீ இருந்தா கல்யாண வேலையை செய்ய சரியா இருக்கும் ரித்து கூட தங்கிக்க... 

"இல்ல மாமா நான் வந்தா சரியா இருக்காது 

"வாயேன் 

"ப்ச் சரி வைசு அக்காகிட்ட கேட்டுட்டு சொல்றேன் ... ஜன்னல் அருகே நின்று நங்கையோட ரித்விக் பேசி கொண்டிருக்க...

அப்போதுதான் வைசுவுக்கு ஒன்று புரிந்தது அவன் மனம் திறந்து இது வரை அவளிடம் ஒருநாளும் பேசியது இல்லை... என்றாவது போதையில் மட்டும் தான் உள்ளே கிடப்பதை உளறி தள்ளுவான் மற்ற நேரத்தில் மரியாதை பேச்சோடு தள்ளி நிற்பவன் தன் மனதை அவளுக்கு மறைத்தே வைத்து மனமோசடியும் செய்து இருக்கிறான் என்று இப்போது புரிகிறது அவர்கள் உறவில் விழுந்த விரிசலே இதுதான் ... என் பிரச்சனை இது உன் பிரச்சனை என்ன என்று கேட்க தீர்வு காண இருவரும் நினைக்காது தள்ளி தள்ளியே பாழாய் போய் விட்டனர்... 

இப்போது கூட தங்கைக்கு திருமணம் என்பதை நங்கையிடம் பேசுவது வைத்து தான் அவளுக்கு தெரிய வருகிறது கசப்பாக ஒரு பார்வை பார்த்தாள்...

பிள்ளை பெக்க ,கூட வாழ மட்டும் மனைவி இவனுக்கு போதுமா அப்படித்தான் யோசிக்கிறானா?    

அயோக்கியா அண்ணனை போய் பார்த்துட்டு வர்றேங்க என்று ரித்விக் அவளுக்கு தகவல் சொல்லி விட்டு கதவை திறக்க 

அதை ஏன் என்கிட்ட கேட்கிறீங்க , நங்கை கிட்ட கேளுங்க .. அவன் திருதிருவென முழிக்க 

"உங்க நட்புகிட்ட கேளுங்க அவங்க ஓகே சொன்னா நீங்க போங்க இருங்க ;அது உங்க இஷ்டம் என்று வெடுக்கென சொல்லி விட்டு வைசு எழும்பி போக...தலையை சொரிந்து கொண்டே வெளியே போனான் நேரே போய் அயோக்கியா வீட்டின் முன்னே போய் நின்றான் ... 

அண்ணி அண்ணி 

"வர வர பிச்சைக்காரன் தொல்லை தாங்க முடியல என்று அதிரா வர 

நீ செஞ்ச சோத்தை கூட தின்னுட்டு மறுபடியும் வர்றானேன்னு சந்தோசபடுடி என்று வெளியே வந்த அயோக்கியா தம்பியை வீட்டு வாசலில் பார்த்து விட்டு 

"உன்ன எவன்டா வர சொன்னது? அதான் எதுவும் கிடையாதுன்னு வெட்டி விட்டுட்டேன்ல டேய் டேய் தன் தோளில் வந்து முகம் புதைத்த அவனை உடல் இறுக பிடிங்கி நகர்த்திய அயோக்கியா 

என்னடா?

எனக்கு என்ன பண்ணணும்னு தெரில அண்ணன் எல்லாத்தையும் இழந்துடுவேனோன்னு மட்டும் பயமா இருக்கு" என்று கண்ணீரோடு நின்ற அவனை தள்ள அயோக்கியா அரக்கன் இல்லையே அப்படி அரக்கனாக இருந்திருந்திருந்தால் இந்த ஐந்து வருடமும் அவர்கள் வாழ்க்கையில் நடப்பதை கண்காணிக்க தேவையே இல்லையே ....

ஓடும் வாத்துகளுக்கு தீனியை அயோக்கியா போட்டு கொண்டிருக்க புல்தரையில் புல்லை புடுங்கி கொண்டு ரித்விக் அமர்ந்திருக்க...

தங்கச்சிக்கு கல்யாணம்னு உன் பொண்டாட்டி கிட்ட சொன்னியா..

நங்கை கிட்ட பேசும் போது அவங்களுக்கு கேட்டிருக்கும் "

நங்கை பொண்டாட்டியா வைசு பொண்டாட்டியா ???

வைசு தான் 

ஒரு முடிவு எடுக்கும் முன்ன யார்கிட்ட முதல்ல கேட்கணும் ?

அது அவங்க கிட்ட பேச வர மாட்டைக்கு அண்ணன் 

"எடு செருப்ப நாய, பொண்டாட்டியை கட்டினா போதுமா அவளுக்கு என்னடா மரியாதை கொடுத்த ஏங்க ஏங்கன்னு மரியாதையா கூப்பிடுறது மட்டும் மரியாதை இல்லை ..அவ மனசை அறிந்து செய்யிறது தான் மரியாதை மொதல்ல அவளை பொண்டாட்டியா பார்த்து தொலை ... 

அதான் வர மாட்டைக்கு அண்ணன் , அவளை பார்த்தா குற்றவுணர்வுதான் வருது ....

குடிச்சா குற்றவுணர்வு போய் சல்சா உணர்வு வருதோ ?

அது என்று அவன் தலையை சொரிய 

"குடிச்சிட்டு பண்ற அலப்பறையை குடிக்காம பண்ணு அவளுக்கு தேவை அதுதான் 

"ஹான் மேட்டரா? 

"எருமை எருமை நீ உருப்படாம போறதே உன் வாயாலதான் அவளை உரிமை கொண்டாடு உரிமையா பேசு சண்டை போடு மனசுல உள்ளதை கொட்டு அடிச்சிக்க பிடிச்சிக்க, அணைச்சிக்க அவ்வளவு தான் காதல்ங்கிற கருமம் .... இதுக்கு மேல சொல்லணும்னா பச்சையாத்தான் சொல்லி தொலையணும்... 

இப்படி எல்லாம் செஞ்சா செட் ஆகிடுமா அண்ணன் .. ஐஞ்சு வருடம் உலகை கற்று கொள்ள நேரம் கொடுத்தும் பேந்த பேந்த முழிக்கும் தம்பியை பார்த்து இவனுக்கே நாலு அப்பு அப்ப தோன்றியது... 

உன் பொண்டாட்டி பாவம்தான் முதல்ல இந்த அப்பாவி பேஸை மாத்தி தொலைடா, ஏங்க ஏங்கன்னு ஏலம் போடாத , மனைவிக்கு மரியாதை நீ கொடுக்கிற அன்புல காட்டுனா போதும் .... பண்றது எல்லாம் வேண்டாத வேலை இதுல மரியாதை ஒரு கேடு ....  

ம்ம் ஏதோ புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டினான் .. 

இன்னைக்கு தான் இந்த அண்ணன் உன் நினைவுக்கு வந்திருக்கு இல்லை 

"நீதான அண்ணன் வராத சொன்ன ?

"வராத போன்னா போயிடுவியா ஹான் ரித்விக் தலையை தொங்க போட 

"இப்பவாவது வைசுவுக்கு புருசனா போக போறியா இல்லை இப்பவும் அங்க போய் பேய் முழி முழிக்க போறியா...

 

" என்ன நடந்தாலும் ஒரு கை பார்த்துடுறேன் அண்ணன்.. என்று ரித்விக் சற்று தெளிந்த முகத்தோடு போனை வைசுவுக்கு போட 

"ஹலோ வைசு குரல் நலிந்து வந்தது 

வைசுஊஊஊ என்ற அவன் அழைப்பில் வைஷ்ணவி கண்ணை அதிர விரிக்க 

கல்யாணத்தை பத்தி பேச ராயன் வீட்டுக்கு போகணும், கிளம்பி இருங்க ம்ஹூம் இரு என்றான் 

நான் எதுக்கு நீங்க போயிட்டு வாங்க "

"நீயும் நானும் தான புருசன் பொண்டாட்டி ரெண்டு பேரும் போனாதான் சரியா இருக்கும் கிளம்பி இரு ...

"என்ன குடிச்சிருக்கீங்களா? 

"ஏன் குடிச்சா தான் பொண்டாட்டியை கூப்பிடணுமா என்ற ரித்விக் மாறுபட்ட உரிமை பேச்சை கேட்டு அவள் தான் யோசனையாக கண்ணை விரித்தாள்... 

"மதியம் சாப்பிட வந்திடுறேன் மீன் வாங்கி சமைச்சு வைக்க சொல்லு... நம்ம ஊர் மீன் குழம்பு தின்ன ஆசையா இருக்கு ... 

"என்ன தீடீர்னு இப்படி எல்லாம் பேசுறீங்க? நம்ம ரெண்டு பேருக்கும் டைவர்ஸ் ஆகிடுச்சு நியாபகம் இருக்கா 

"வேண்டாம்னா நீ போடி, நான் ஏன் போகணும்? எனக்கு நீ வேணும் .... நடந்தது எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்டா உனக்கு போதுமா இல்லை, இனி அந்த தப்பு நடக்காம பார்த்துக்கிறது வேணுமா ..நான் வேணுமா வேண்டாமா அதை சொல்லு வீட்டுக்கு வரவா அப்படியே போகவா ? அவள் அமைதியாக இருக்க 

வைசு 

ம்ம் 

மன்னிச்சிடு உனக்கு என்ன தேவைன்னு நான்,யோசிச்சதே இல்லை... உனக்கு என்னோட உரிமையான அன்புதான் வேணும்னு எனக்கு தெரியாம போயிடுச்சு , இனி நீ கேட்கவே வேண்டாம் உன்கூட நான் இருப்பேன்... உன் அத்தனை வலியையும் கடக்க உன் கையை பிடிச்சு நான் வர்றேன் வைசு இருக்கியா ?? அவள் கேவும் சத்தம் வந்தது வாயை மூடி கொண்டு வைசு அழுதாள்...  

அவளுக்கு அவன்தான் வேண்டும் என்பதை எத்தனை போராட்டத்திற்கு பிறகு புரிந்திருக்கிறான்.. ஆனால் இன்னும் முழுதாக அவனை நம்ப முடியவில்லை 

வைசு 

ம்ம் இருக்கேன்

"டேய் அத்தான் இவனுக்கு ஸ்டார்ட்டீங் ட்ரிபிள் இருந்திருக்கு அது தெரியாம போட்டு பிள்ளையை சுத்தி சுத்தி பொங்கல் வச்சிட்டீங்களேடா?? யாராவது பின்னாடி இருந்து தள்ளி இருந்தா அப்பவே லைனை பிடிச்சு இருப்பானே என்று அதிரா வந்து அயோக்கியாவை இடித்து கொண்டு உட்கார 

இப்ப கூட இவனுக்கு ரூட் போட்டு கொடுத்தது நான்தான்னு வைசுவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்?

வைசு அக்காவுக்கு இங்க நடந்தது எப்படி தெரியு? ம் அவன் சிவந்த கண்ணோடு கண்ணடிக்க 

ஆஹா!! அப்போ கண்டம் முடியலன்னு சொல்லுங்க 

இப்போதைக்கு கொஞ்சம் லவ் பண்ணட்டும் நமக்கு நேரம் போகலைன்னா மறுபடி பழி வாங்குவோம் மனைவியை கரெக்ட் பண்ணிடுவேன் என்ற நம்பிக்கையில் போகும் ரித்விக்கை சிரித்து கொண்டே அயோக்கியா அதிரா பார்த்தனர் .... 

கொண்டவன் (ள்) துணை இருந்தால் எத்தனை அலைகள் உயர வந்து அச்சுறுத்தினாலும் வாழ்க்கை கப்பல் தரை தட்டாது கரை போய் சேர்ந்து விடும் ...