பசப்புறு பருவல் 19
Pasa19

19 பசப்புறு பருவல் !!
ரித்து ஜுவல்லரி போயி உனக்கு தேவையான நகை எல்லாம் எடுத்துக்க சொல்லி அயோக்கியா அண்ணன் , எனக்கு போன் போட்டு இருந்தார் .... நாளைக்கு போயிட்டு வருவோமா ? "
"எனக்கு செய்ய அவர் யாரு , அதான் தங்கச்சியே இல்ல போன்னு நாயை விரட்டுற மாதிரி துரத்தி விட்டார் இல்ல ..
"அப்போ நான் வாங்கி தர்றேன் ...
"நீ யாருடா ??
ஹான் வைசுவும் ரித்திவிக்கும் அதிர்ந்து பார்க்க
"ஐஞ்சு வருடம் தனியா விட்டுட்டு போனல்ல
என் நிலமை அப்படிடி
என்ன நிலைமை ஒன்னுக்கு ரெண்டு கட்டி வச்சிருக்கல்ல
"ப்ச் அவ ப்ரெண்ட்டி
"ஏதோ ஒன்னு ஊருக்கு ஊரு துணைக்கு ஆள் வச்சிருந்தல்ல.. ஆனா நான், ஒழுங்கா சாப்பிட முடியாம ராத்திரி யாரும் உள்ள ஏறி குதிச்சிடுவாங்களோன்னு தூங்காம தனியா கிடந்தேன் .. அப்போ இல்லாத அக்கறை இப்படி என்ன மயித்துக்குடா உங்களுக்கு எல்லாம் யாரும் வேண்டாம் போங்க ..வந்துட்டான்க பாசம், காதல் மயிரு மண்ணாக்கட்டின்னுட்டு , ஏன் உன் மாப்பிள்ளை நகை இல்லைன்னா என்ன வேண்டாம் போன்னு விரட்டிருவாரா, யாரும் எனக்கு போட வேண்டாம் ... என்ன கல்யாணம் பண்ணிக்கணும்னா அவரை போட்டு கட்டிட்டு போக சொல்லு.. இல்லை வேற எவளையாவது கட்டிட்டு போக சொல்லு ... என்றவள் குரலை கேட்டு கொண்டே வாசலில் பைக்கை நிறுத்தினான் ராயன் ...
தைரியமாக திமிராக தெரியும் பலரின் மறுபக்கம் மிக பலவீனமானது.. தாய் தகப்பன் கோர முகம்,காதல் தோல்வி , அயோக்கியாவின் கண்டுகொள்ளாத போக்கு, ரித்விக் அவன் சொந்த குடிமியில் இவளை ரெண்டாம் பட்சம் ஆக்கியது என்று தனிமையில் தேற்ற ஆள் இல்லாது ஐந்து வருடமாக கிடந்தவளுக்கு உள்ளே எரிமலை சீற்றம் நான் யாருக்கும் வேண்டாம்னா எனக்கும் ஒருத்தரும் வேண்டாம் இனி உடைபட என்னிடம் ஒன்றும் இல்லை என்பதைத்தான் கோவ முகத்தில் காட்டி விட்டு போனாள் ...
"வாங்க மச்சான் ... ராயனை வாசலில் கண்ட ரித்விக்
"என்ன ஆளு காலையிலேயே சாட்டை எடுத்து விளாசிட்டு போகுது
"நாங்க நாலு நாள் இருப்போம் போவோம் உங்க நிலைமை நினைச்சா தான் கொஞ்சம் இல்லே நிறைய பாவமா இருக்கு
"உங்களுக்கு அவளை சமாளிக்க தெரியல பத்தே நிமிசத்துல ஆளை கரெக்ட் பண்றேன் பாருங்க என்றவன் எப்போதும் போல ராயன் கையில் சுட சுட பிரியாணியை வாங்கிக் கொண்டு கிச்சன் உள்ளே நின்ற ரித்து நோக்கி உள்ளே போனவன்...
"ஏன்டி எல்லார்கிட்டயும் எகிறிகிட்டேதான் இருப்பியா..
"யாரையும் எனக்கு பிடிக்கல, நான் என்ன பண்றது நேற்று அண்ணன் வருவான் என வாசலிலேயே காத்திருக்க , ரித்விக் பொண்டாட்டி வீட்டில் போய் இறங்கியது சீறி விட்டது
இந்த நாயும் இப்படித்தான் என்று ரித்விக்குக்கும் மண்டகப்படி விழுந்தது ...
"பிரியாணி சூடா இருக்கா ?
"ஆமா அப்படியே சட்டியில இருந்து இறக்குன உடனே வாங்கிட்டு வந்துட்டேன் தின்னு நல்லா தின்னு நகர முடியாம ஆமை போல நகரு... திண்டில் ஏறி அமர்ந்த ராயனை முறைத்து கொண்டே தட்டில் சாப்பாட்டை போட்டு மொக்கும் அவளுக்கு குறைய குறைய சாப்பாட்டை வைக்க..
ஐஞ்சு வருடத்தில் எல்லாம் பழகியவளுக்கு இந்த சமையல் கலை மட்டும் வரவே செய்யாது ... எதையோ கருக்கி தின்று நாக்கு செத்து போனவளுக்கு ராயன் வந்து மாட்ட , தினமும் கறி விருந்து தின்று ஆளு புஸ்புஸ் பூனைக்குட்டி போல இருந்தாள் அத்தோடு மலர் வேறு கல்யாணமாக போற பொண்ணு திடமான இருக்கணும் என்று அவரே சாப்பாடு கட்டி இவளுக்கும் கொடுத்து அனுப்ப ரவுண்ட் கட்டி அடிக்கிறாள்... திருமணம் முடியும் வரை விரதம் காக்க அவன் படும் பாடு அவனுக்கு தான் தெரியும் ... எதையும் மறைப்பது இல்லை எதை பிடித்து இழுத்தாலும் பிடிச்சுக்க தின்னுக்க என்று நிற்கும் கொழுத்த பேபியை தின்ன ஆசையோ ஆசைதான்!! ஆனால் கழுத்தில் தாலி கட்டி அவளை மனைவியாக அணைக்கும் நேரத்துக்காக அவள் காத்திருக்கிறாளோ என்னவோ அவன் காத்து கிடக்கிறான்... திருமணத்துக்காக பார்த்து பார்த்து தயார் செய்கிறான்... அவளிடம் எந்த பரபரப்பும் இல்லை அதையும் ராயன் கவனிக்க தான் செய்கிறான்..
ஆமா யாரையும் பிடிக்கலைன்னு சொன்னியே நானும் அதுல உண்டா ? "
"நீங்க தான் முதல்ல முட்டை இல்லையா? "
"உன்ன என்று அவள் முடியை இழுத்து தன் கால் நடுவே நிறுத்தியவன்..
"உண்மையாவே கல்யாணத்துக்கு ஓகேதானா இல்லை ஓடி போற ப்ளான் எதுவும் இருக்கா ??
"ஓடி போனா என்ன பண்ணுவீங்க
"போய் தொலை சனியனேன்னு விட்டுட்டு கூட்டத்துல இருக்கிற மாமா பொண்ணு அத்தை பொண்ணை இன்ஸ்டெண்டா மணப்பொண்ணா ஆக்கி தாலியை கட்டி அப்படியே வாழ வேண்டியதுதான் உனக்காக காத்து கிட்பபேன் அய்யோ அம்மான்னு நெஞ்சுல அடிச்சுட்டு பின்னாடி வருவேன்னு எல்லாம் நினைக்காதடி... அவனை மேலும் கீழும் பார்த்த ரித்து ...
"என்கூட வாழலைன்னா உங்களுக்கு கல்யாண வாழ்க்கையே இல்லை ..
"என்ன பண்ணுவ??
"ம்ம் பஸ்ட் நைட் உள்ள வந்து ஒரே போடு போட்டு தள்ளிட்டு போயிட்டே இருப்பேன்...
"யாருக்குமே என்ன விட்டுக்கொடுக்க முடியாத அளவுக்கு என்ன உனக்கு பிடிக்குமாடி ?? நான் உனக்கு தந்த அந்த ஏமாற்றத்தையும் மறந்துட்டு என்ன காதலிக்கிற அளவு உனக்கு என்ன பிடிக்குமா நீ நெனச்சிருந்தா என்ன வெறுத்து இருக்கலாம், நீ நினைச்சிருந்தா என்ன பழி வாங்கி இருக்கலாம் நீ நெனச்சிருந்தா என்ன பக்கத்திலேயே சேர்க்காம இருந்திருக்கலாம்... இன்னைக்கு நான் உன் பக்கத்துல நிற்கிறதுக்கு காரணம் நான் உன்ன லவ் பண்றதுனால இல்ல.. நீ இன்னும் என்னை மறக்காம நேசிக்கிறதுனால தான் எனக்கு இன்னொரு மறு வாய்ப்பு தந்திருக்க, இது புரியாம இல்ல.. உன்ன அன்னைக்கு புரிஞ்சுக்க தவறிட்டேன் இன்னைக்கு உன்னை அணு அணுவா புரிஞ்சு வச்சிருக்கேன்...அவனையே ரித்து பார்த்து கொண்டு நிற்க அவள் உச்சி மீது முகத்தை வைத்தவனை தள்ளி விட்டவளை வம்படியாக காலிடையில் நிறுத்தி அவள் இடையில் காலை போட்டு கிடுக்குபிடி போட்டான்
"அப்படி என்ன தெரியும் என்ன பத்தி ..என்று அவள் அவனை அண்ணாந்து பார்க்க
உன்னால என்ன வெறுக்கவே முடியாதுன்னு தெரியும்
மக்கும் நினைப்பு தான் பெரிய ஆப்பா வைக்க நேரம் பார்த்து இருக்கேன்னு கூட சொல்லலாம்
"ஆப்பு வைக்க நினைக்கிறவ எதுக்குடி உன் போன் முழுக்க என் போட்டோவை வச்சிருக்க ..
என் போனை எங்க அதை ஏன் எடுத்தீங்க கொடுங்க என்று அவள் சினத்தில் மூக்கு சிவக்க
அத்தனையும் பார்த்துட்டேனே.. என்று அவள் போனை ஆட்டி காட்டினான் ...
எ...ன்...ன ?
"ம்ம் என்ன விட என் பொண்டாட்டிக்கு ஆசை ஜாஸ்தின்னு பார்த்துட்டேன் ... அவள் கண்கள் கள்ளத்தனமாக உருள..
"என்னென்னு கேளுடி
"ஒன்னும் தேவையில்லை என்று நழுவி ஓடியவள் பின்னே அவன் குரல் வந்தது
"மொத்ததமா பார்த்துட்டேன்டி அவ்வளவு தான் ஆசையா இல்லை இன்னும் இருக்கா ? அவள் அங்கிருந்து அவனை பார்க்க..
"என்ன வச்சி கதற விட்டிருக்க , டெக்னாலஜி செத்து போச்சு போ உன் ஆசையில, போனே சூடாகி போய் திரியுது நான் சூடாக மாட்டேனா என்ன ,ராத்திரி முழுக்க அதை எல்லாம் பார்த்துட்டு பச்சை புள்ளைக்கு காய்ச்சல் வந்திடுச்சு தெரியுமா
"ஸ்ஊஊஊ சும்மா இருங்க என்று உதட்டை பிதுக்கினாள் ...
சமையலில் அறையில் நீ சமைக்க, உன் முதுகோடு நான் ஆடையின்றி ஒட்டிக்கொள்ள... ஏன்டி அப்போ சமையல் கத்துக்கவே மாட்டியா ? ம்ம் பின்னாடி இருந்து படம் வரைஞ்சி இருக்க பெருசா எதுவும் தெரிலேயே போட்டோவை ஜூம் பண்ணி அவள் அங்க அழகை தடவ
"ச்சை கருமம் கத்தி தொலையாத என்று ஓடி வந்து அவன் உதட்டை பொத்த அவள் விரலில் முத்தமிட்டு மெல்ல கடிக்க
ஆவ் ஊஊஊஊ
நீ என்னை வாரி அணைத்து தூக்கி திண்டில் அமர வைத்து ... ஆஹா ஆஹா ஒவ்வொன்னுக்கும் பிக்சர் கண் கொள்ளா காட்சி இங்கேயும் இடுப்பு வரை தான் தெரியுது குறை படித்து அவள் இடையை அவன் பார்க்க
"ப்ச் சும்மா இரு அதான் பார்த்துட்டல்ல அதை ஏன் சொல்ற "காதலன் மீது காதல் வரும் போது தோன்றும் காட்சிகளை அவள் போனில் காட்சியாக வரைந்து வைத்திருக்க... அத்தனையும் பச்சை பச்சை காட்சி.. எத்தனை ஆசை அவை இப்போது உள்ளது கிடையாது அத்தனையும் அவன் தனக்கு இல்லை என்று ஏமாந்த பின்னும் அவனையே உருகி உருகி நேசித்து அவனோடு கற்பனையாகவே வாழ்ந்த அவளுக்கு எத்தனை வலிக்கும் இதை எல்லாம் பார்க்கும் போது அவனுக்கே வருத்தமும் அவள் அளவு காதலிக்க முடியமா என்ற தயக்கமும் வந்தது கடினமாக சுற்றும் அவளுக்குள் அவன் மீது உள்ள அசையாத காதலை என்ன என்று சொல்ல ....
நீ என்னை தாண்டி போய் விட்டாய் உன்னை தாண்டி போக முடியாது உன்னையே சுற்றுகிறேன் இதுதான் காதல் மரணமா? தினம் தினம் உன்னால் மரிக்கிறேன் இனி மரணம் வந்தால் என்ன வராது போனால் என்ன ? என்று அவன் போட்டோ கீழே எழுதி வைத்திருக்க அதில் அத்தனை ஏக்கம் வலி இருந்தது ...
ரித்து
ரித்து
ம்ம்
உன்ன ஏமாத்தல ஒருவேளை அப்போ உன் வசதிக்காக நான் கல்யாணம் கட்டி இருந்தா என்றவன் முன் கை நீட்டி தடுத்த ரித்து
"உன் காரணம் எனக்கு தேவை இல்லை ... ஒருவேளை காதல் தோல்வியில நான் செத்து இருந்தா
"ஏய் இஇஇஇ
"சொல்லு செத்து இருந்தா என்ன பண்ணி இருப்ப....
நீ சாக மாட்டேன்னு தெரியும் ...
"நான் செத்து ஐஞ்சு வருடம் ஆகுது ஏமாத்திட்டியே என்றவளை பெருமூச்சு விட்டு பார்த்தவன்..
"அப்போ ஏன்டி என்ன இப்படி மொழுக்கட்டையா போட்டு கண்ட மேனிக்கு வரைஞ்சு வச்சிருக்க
அது என் ராய் நீ இல்லை ...
"இது என்னடா புதுசா இருக்கு
"நான் வாழ்றது வாழ்ந்தது என் ராய் கூட அவரை எப்படி வேணும்னாலும் வரைவேன் .. அது என் இஷ்டம்
அப்போ நான் யார் ?
போர்ஜரி அவனை லவ் பண்ணுவேன், உன்ன ஹேட் பண்ணுவேன்..
"மண்டை கழண்டவளே, எப்படியோ என்கூட வாழ்ந்தா சரிதான் .. ஆனா உன் படத்தில் குறை உண்டு மன்னா ?
"என்ன
ம்ம் எல்லாம் ஓகே இது சரி இல்லை என்று தன் அழகிய படத்தில் அணிகலன் அழகை அவன் விரல் சுட்டி காட்டி
"இப்படி இருக்காதே...
ச்சீ போடா என்று அவன் கையில் இருந்து போனை பிடிங்கி கொண்டு ரித்து ஓடி விட
எனக்கு ஒன்னும் ஆட்சேபணை இல்லடி காட்டவா... நீ லவ் பண்ணினாலும் ஓகே ஹேட் பண்ணினாலும் ஓகே நான் உன்ன லவ் யூடி சண்டைக்கோழி , வதவதன்னு உன் ஆசைக்கு பத்து என் ஆசைக்கு பத்துன்னு பெத்துக்கலாமா என்று கத்தியவன் அதன் பின்னே ஹாலில் உட்கார்ந்து இருந்த வைசு ரித்விக் கண்டு ராயன் நாக்கை கடிக்க ...
மானத்தை வாங்கிட்டான் என்று ரித்து தலையில் அடிக்க
தங்கை திருமணம் முடியட்டும் அது வரை கண்ணால் காதலை வளர்ப்போம் என்று நினைத்த ரித்விக்குக்கு ஆசை வர வைத்து விட்டான் ராயன் ...
எனக்கும் பத்து வேணுமே என்று ரித்விக் வைசு காதில் கிசுகிசுக்க
அவன்தான் லூசு மாதிரி கேட்கிறான்னா ட்ரை பண்ணி பார்த்து செத்துடாத என்று ரித்து அண்ணனை திட்டி வி்ட்டு போக
ம்க்கும் அப்படி உன் அண்ணன் கிழிச்சிட்டாலும் என்று வைசு உதட்டை பிதுக்கி தள்ளி படுக்க வைக்கும் புருசனை ஊடல் பார்வை பார்த்து வைத்தாள்...
தங்கை திருமணம் முடிஞ்ச அன்னைக்கு அவளுக்கு பஸ்ட் நைட் நடக்கோ இல்லையோ, நமக்கு நடந்தே தீரும் என்று ரித்விக் மோகமாக மனைவியை பார்க்க ...
தங்கையோ திருமணத்துக்கு முன்தினம் பெட்டி படுக்கையோடு கம்பியை நீட்டி விட்டாள்.. இவனுக்கு ரொமான்ஸ் கட்டத்தை யாரோ நடராஜ் ரப்பர் வச்சி அழிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்..
ஐந்து வருடம் உறவுகளை தேடி அவள் அலைந்தாள் இனி அவர்கள் தேடட்டும் என்று எல்லாருக்கும் தண்டனையை கொடுத்து விட்டு போய் விட்டாள்..