பசப்புறு பருவல் 12
Pasa12

12 பசப்புறு பருவல் !!
ரித்விக்
காரை ஓட்டி கொண்டிருந்த ரித்விக் பதிலே சொல்லவில்லை
இறங்குங்க
நீங்க ?
எனக்கு வேலை இருக்கு" என்று போய்விட்டான்.. வாசலில் காத்து நின்ற நங்கை, சந்துருவை பார்த்ததும் இவளுக்கு அய்யோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்து விட்டோம் என்று ஆகி போனது..
என்ன அக்கா அவசரமா கிளம்பிகிட்டு இருக்கீங்க ரெண்டு நாள் இங்க இருப்பேன், எங்க கூட எல்லாம் வெளிய சுற்றி பார்க்க வருவேன்னு நேத்து சொன்னீங்க .. இன்னைக்கு ராத்திரிக்கே பிளைட் இருக்கு போய்தான் தீரணும்னு வேக வேகமா கிளம்புற .. வெளியே போன ரித்விக் வீட்டுக்குள் வருமுன் இடத்தை காலி பண்ணி விட வேண்டும்....
அக்கா உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்" என்று அவள் அடுக்கி வைத்த துணியை பிடுங்கி நங்கை வெளியே போட ...
அங்க ஊர்ல எனக்கு வேலை வந்துடுச்சு, வந்த வேலை முடிஞ்சிடுச்சு சோ நான் கிளம்புறதுதான் நல்லது "
கிளம்புறது யாருக்கு நல்லது ??
எல்லாருக்கும்"
"புரியிற மாதிரி பேசுக்கா
"உனக்கு நான் பேசுறது புரியல
"ம்ம் எனக்கு நல்லா தெரியும்.. எனக்கு நீ பேசறது நல்லா புரியுது, ஆனா நீயே வாயை திறந்து சொல்லிடு அக்கா , அப்பதான் எல்லாருக்கும் நல்லது என்ற நங்கை கையை கட்டிக் கொண்டு பார்த்த வைஷ்ணவி
ஜில்லுனு ஒரு காதல் படம் பார்த்தியோ
அது பாத்திருக்கேன் ஒரு ஆயிரம் தடவை அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்??
நீ ஒன்னும் குந்தவையும் இல்ல, நான் ஒன்னும் ஐஸ்வர்யாவும் இல்லை ... புருஷனை தூக்கி தானம் பண்றதுக்கு நீ குந்தவை இல்லை , அந்த புருஷனை குந்தவை கூட சேர்த்து வச்சிட்டு போற ஐஸ்வர்யாவும் நான் இல்ல.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா, உன் வாழ்க்கை பாழாப் போயிடும்... உனக்குன்னு ஒரு பிள்ளை இருக்கு உனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு, நீங்க வாழுங்க நான் உங்க கூட இருக்கிறது நெருப்புக்கு சமானம் பத்தி எறிஞ்சது.. உங்க குடும்பம் மொத்தமா எரிஞ்சு சாம்பல் ஆகிடும்னு சொல்றேன்..
ஓஓஓஓ
உனக்கு புரியுது ஏன் வீணான வேலை பார்த்துட்டு இருக்க நங்கை,
அது
போதும் நிறுத்து, இத்தனை வருஷம் வாழ்ந்திட்டல்ல, இனியும் வாழ்ந்துட்டு போயிடு... என் கண்ணுல படாம நல்லா வாழ்ந்துட்டு போங்க என்று அழுகையை தடுக்க முடியாமல் அழுது கொண்டே வைஷ்ணவி திரும்பி நின்று கொண்டு
விட்டுக் கொடுக்கிற நினைக்கிறவ , என்ன செஞ்சு இருக்கணும் .. அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி விட்டுக்கொடுத்து இருக்கலாம், நான் தான் வேணும் நினைக்கிறவன் என்ன செஞ்சு இருக்கணும் , என்ன விட்டுட்டு வந்திருக்காம இருக்கணும்.. குழந்தை குட்டி குடும்பம்னு இருக்கும்போது ஏன் என் மனசுல எல்லாரும் சஞ்சலத்தை விதைக்கிறீங்க, சபலத்தை வர வைக்கிறீங்க நான் அவ்வளவு மட்டமான ஆளான்னு என்னையே காறி துப்ப வைக்கிறதுல உங்களுக்கு என்ன சந்தோசம் நங்கை ...
அக்கா ஆஆ
யா அப்கோர்ஸ் அவரை லவ் பண்றேன்... சாகுற வரை லவ் பண்ணுவேன்,. ஆனா நான் காதலிக்கிறது எனக்கானவர்.. இப்போ இருக்கிற ரித்விக் உன்னோட ரித்திக் ... உன் குழந்தையோட அப்பா இவரை காதலிச்சா, என் மனசாட்சியே என்னை காறி துப்பும் ... என் மனசுல இருக்கிற அந்த ரித்விக்க காதலிச்சிட்டு, நான் சந்தோஷமா வாழ்றேனோ இல்ல அவர் நினைவுகளோட வாழ்றேனோ ஆனால் வாழ்ந்துடுவேன்.. தயவுசெஞ்சு ஒரு குடும்பத்தை கெடுத்துட்டேன்கிற பாவத்தையும் பழியையும் என் மேல போட்டுடாதீங்க உங்களுக்கு புண்ணியமா போகும் "என்று வைசு தலைமை கும்பிட போட்டவள்..
அவர் கூட வாழ ஒரு நாள் வாய்ப்பு கிடைக்காதுன்னு தேடி அலைஞ்சவளுக்கு பக்கத்துல அவரை கொண்டு வந்து நிப்பாட்டும் போது, மனசு அலைபாயுது.. இதுக்கு மேல உன்கிட்ட எப்படி நான் சொல்லி புரிய வைப்பேன்னு எனக்கு தெரியல நங்கை என்று கிடுகிடுத்த உடலோடு அவள் கையைப் பிடித்துக் கொண்டவள்
என்ன என்னாலேயே கண்ட்ரோல் பண்ண முடியல, எங்க பெரிய பாவத்தை சுமந்துடுவேன்னு பயமா இருக்கு என்ன விட்டுடு நான் போயிடுறேன் "என்று அவள் காலில் விழப்போக சட்டென அவளை விட்டு விலகி நின்று நங்கை..
எப்படி உங்களுக்கு நங்கையோட ரித்விக் வேண்டாமோ? அதேபோல எனக்கு வைஷ்ணவியோட ரித்விக் வேண்டாம் அக்கா .... அவர மாதிரி ஒருத்தர் கிடைக்கிறது எல்லாம் வரம் ஆனால் அந்த வரம் எனக்கு கிடைக்கல அக்கா" என்று நங்கை உடைந்து போன குரலில் தலையை திருப்பி வைஷ்ணவிக்கு முதுகு காட்டி நின்றவள்
உங்க ரித்விக் இன்னைக்கு வரைக்கும் இந்த நிமிஷம் வரைக்கும் உங்களோட ரித்விகாத்தான் இருக்காருன்னு சொன்னா நம்புவீங்களா அக்கா??
நங்க நீ என்ன சொல்ல வர்ற? தூங்கும் குழந்தையை அவள் யோசனையாக பார்த்தாள் சந்துருவின் அருகில் உட்கார்ந்து தலையை தடவி கொடுத்த நங்கை..
காதல்னா என்னன்னு உங்களுக்கு தெரியும், ஆனா நட்புன்னா என்னென்னு உங்களுக்கு தெரியுமா அக்கா... நட்புன்னா அவர் என் மேல வச்சிருக்கார் பாருங்க அதுக்கு பேருதான் நட்பு... ஒரு நண்பனுக்காக ஒரு நட்புக்காக எல்லாத்தையும் இழப்பாரா காதலை கூட இழந்துட்டு நிற்கிறார் அக்கா என்று கன்னம் தாண்டிய கண்ணீரோடு திரும்பிப் பார்த்த நங்கை கண்ணீர் பொய் சொல்லவில்லை. அவன் மெய்நட்பை பறைசாற்றியது.... தலையை குனிந்து கொண்ட நங்கை
நான் நான் நான் என்றவள் எப்படி விளக்க என புரியாது ஓடிப்போய் ரித்விக் பெட்டியை புரட்டி போட்டு ஒரு பழைய போட்டோவை தூக்கிக் கொண்டு ஓடி வந்து வைஷ்ணவி கையில் கொடுத்தவள் .... அதில் ஆண்கள் பட்டாளமாக இருந்த நண்பர் கூட்டத்தை காட்டி ரித்விக்கின் தோள் மீது தொங்கிக் கொண்டிருந்த ஒரு அழகிய ஆடவனை சுட்டிக்காட்டியவள்...
இவன் பெயர் நந்தகோபால் நந்து... இதுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்னு பார்க்கிறியா அக்கா
ம்ம்
அந்த நந்துதான் இந்த நங்கைன்னு சொன்னா என்ன தப்பா நினைப்பீயா அக்கா ??என்ற வெடவெடத்து போய் நங்கை வைஷ்ணவி பார்க்க...
ம்ம் நான் ஒரு என்றவள் உதட்டை மூடிய வைஷ்ணவி
நீ இப்ப ஒரு பெண் எனக்கு புரியுது சொல்லு"..
நான் ஆணா தான் பொறந்தேன் ... பெரிய குடும்பத்தோட கடைசி வாரிசு வளர வளர தான் தெரிஞ்சது எனக்குள்ள பெண்மைக்கான உணர்வுகள் தான்அதிகமா இருக்குன்னு , என்னால ஆணைப்போல நடிக்க முடியல அக்கா.. தப்பு எதுவும் பண்ணல அக்கா இயற்கை என்ன ஆணா இருக்க விடல ... கொஞ்சம் கொஞ்சமா எனக்குள்ள பெண்ணை தேட ஆரம்பிச்சேன்.. பெண்ணாகிடனும்னு ஆசை எவ்வளவோ கஷ்டப்பட்டு வீட்டுக்காக நான் காலேஜ் வரைக்கும் சேர்ந்துட்டேன்.. ஆனா அதுக்கு பிறகு என்னால நடிக்க முடியல அக்கா அங்க கிடைச்சது தான் மாமாவோட நட்பு....எங்க சீனியர் நான் முதல் வருடம் சேரும் போது மாமா நாலாவது வருசம்..
எல்லாரும் என்னோட நட பேச்சு நடத்த பார்த்து தயங்கி தள்ளி நிற்கும்போது , அவர் மட்டும் அப்பவும் மச்சான் விடுடா விடுடா நான் இருக்கேன் அப்படின்னு சொன்னவர், இன்னைக்கு வரைக்கும் என்ன விடலை அக்கா" என்று குமுறி அழுத நங்கை தோளில் தட்டிக் கொடுத்தாள் வைஷ்ணவி ..
ஒரு வருஷத்திலேயே நான் படிப்ப விட்டுட்டு போயிட்டேன் வீட்ல என் நடத்தை மாத்தம் தெரிஞ்சு போச்சு, எல்லாருக்கும் தெரியாம ரூமுக்குள்ள சேலை நகை பொட்டுன்னு பெண்களுக்கான பொருட்கள் வச்சிருக்கறத பார்த்து, அடி பின்னி எடுத்துட்டாங்க வீட்டுக்குள்ளேயே சிறைவாசம்னு சொல்லலாம்... நான் வெளியே போனா மரியாதை போயிடும்னு நெனச்சவங்க உள்ள அடச்சே போட்டு வச்சிருந்தாங்க....
நான் என்னக்கா செய்வேன், கடவுள் எனக்கு இப்படி ஒரு மாற்றத்தை கொடுத்ததற்கு நான் என்ன செய்ய முடியும்... தோள் கொடுக்கிற குடும்பமே என்னை அசிங்கமா பேசினாங்க , வீட்டுக்கு வேலைக்கு வர வேலைக்காரங்க என்னை அசிங்கமா உரசினாங்க புரியல அக்கா இந்த உலகத்துல யாருக்கு தான் மரியாதை இருக்கு, பொண்ணுக்கு மரியாதை இல்லை, ஆணுக்கும் மரியாதை இல்லை.. பச்ச குழந்தையா பச்ச குழந்தைக்கும் பாதுகாப்பு இல்லை ... இதோ எனக்கு மட்டும் பாதுகாப்பு இருக்குமா என்ன? அடைஞ்சு கிடந்த எனக்கு சந்தோஷம் எப்போ தெரியுமா? இந்த கையில மருதாணி வைக்கும் போது பொட்டு வைக்கும்போது அந்த சேலையை தூக்கி தோள் மேல போட்டு இருக்கும்போது எல்லாம் என்ன காதல் , அந்த புடவை என்ன தழுவும் போது வரும் பாருங்க ஒரு போதை , ஆசை... முழுசா பொண்ணா மாறிட ஆசை எல்லா ஆபரேஷனும் பண்ணி பொண்ணா மாறிடனும்னு பேராசை மட்டும் தான் எனக்கு இருந்துச்சு ...
கடவுள் எங்களை இப்படி படைக்க நாங்கள் என்னக்கா பாவம் செஞ்சோம், என் அப்பா என்ன கொல்ல ஆட்களை ரெடி பண்ணின பிறகு தான் தெரிஞ்சது.... என்னை விட பெத்த புள்ளைய விட அவங்களுக்கு மரியாதையும் பேரும் தான் முக்கியம்னு... தப்பி பிழைத்து ஓடி வந்தேன், ஆனா விடல ராத்திரியோடு ராத்திரியா என்னை கொல்றதுக்காக பின்னாடியே ஆட்கள் வந்தாங்க என்றவள் மூச்சுக்கு ஏங்கினாள்..
குடும்பமே அங்கீகரிக்காத ஒரு மனித குலம் உண்டென்றால் அது இவர்கள்தானே ... அவர்கள் விரும்பி பெண்ணாகவோ ஆணாகவோ மாறுவது இல்லை அவர்களின் உடலில் ஏற்படும் மாற்றத்திற்கு அவர்கள் என்ன செய்து விட முடியும் பாவத்தையும் பழியையும் அவர்கள் மீது போடுவது எவ்வளவு பெரிய குற்றம் ....
விலங்குகளுக்கு கொடுக்கும் மரியாதையை கூட அவர்களுக்கு கொடுக்க தயங்குகிறோமே அவர்கள் அப்படி என்ன பாவம் செய்துவிட்டார்கள் என்று ஒரு நிமிடம் கூட நின்று யோசிக்க நமக்கு மதி இல்லையோ
எப்படி காதல் ஒரு உணர்வு பிறழ்வோ அப்படியே இது உடல் பிறழ்வு ஏற்று கொள்ள முடியவில்லையா அவர்களை அவர்கள் வழியே விட்டு விடுவது சாலச்சிறந்தது..
கார் மீது படுத்து கிடந்த ரித்விக் கண்ணீர் இரண்டு பக்கமும் சிதறி ஓடியது...
தவறு செய்தது அவன் தண்டனை யார் யாரோ அனுபவிக்கிறார்கள் காதலுக்காக நான்தான் பசலை நோயில் கிடக்கிறேன் என்று நினைத்தவனுக்கு மார்பில் எட்டி உதைத்து உன் காதலால் தான் நான் வாழ்க்கையை இழந்து விட்டேன் என்று ஒருத்தி குற்றம் சாட்டினாளே, ஒன்றும் அறியாத ஒரு குழந்தையை இல்லாமல் ஆக இவனும் ஒரு காரணம் தானே,, இவன் தெளிவாக முடிவெடுத்திருந்தால்.. அன்று பிரிவு ஏற்பட்டிருக்காது.. பிரிவு ஏற்படாமல் இருந்திருந்தால், இருவரும் சேர்ந்து இருந்திருப்பார்கள்... சேர்ந்து இருந்திருந்தால் குழந்தையை கண்ணும் கருத்துமாக அவனும் பாதுகாத்து இருப்பானே இன்று அவள் குழந்தை இல்லாமல் அவள் தவித்து நிற்க மாட்டாளே...அய்யோ மார்பில் முட்டி மோதியது ரணம் ...
தனித்து நிற்கும் அவள் ஒரு பக்கம் , தன் அருகே தனக்கு அடைக்கலமாக காலமெல்லாம் இருப்பான் என்று காத்திருக்கும் குழந்தையும், நங்கையும் ஒரு பக்கம் தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ..
வைசுவை விவாகரத்து செய்துவிட்டு வெளிநாட்டிற்கு வந்து, இங்கே வேலையில் சேர்ந்து விட்டான் ஆனால் தனிமை சில மாதத்திற்கு கூட அவனை அங்கே நிம்மதியாக இருக்க விடவில்லை மீண்டும் மீண்டும் இழந்ததை எல்லாம் யோசித்து உயிர் போகும் வலி தாங்க முடியவில்லை.. என்ன செய்வது என்று யோசிக்கும் பொழுதுதான் அவன் நண்பன்
இப்படியே வாழ போறியா ஒரு குழந்தையை தத்தெடுத்துகோ, உனக்கென்று ஒரு குழந்தை கடமை என்று வந்துவிட்டால் ஒருவேளை காதல் தோல்வி மறக்கும் என்று கூற
சரியா வருமா ?
அப்போ வைசுக்கிட்ட போய் சேர்ந்து வாழலாம்னு கேளு "
"ச்சீ சே அவங்களை கட்டாயப்படுத்த கூடாது ...
"பேசிதான் பாரேன் ரித்விக்"
"எல்லாம் முடிஞ்ச பிறகு என்ன பேச, பேசி தானே முடிவு எடுத்தோம்
"அவங்க கிட்ட தெளிவா உட்கார்ந்து பேசினியா
""பேசினேனே
"நீ பேசின அவங்க பேசினாங்களா அவங்க மனசுல உள்ளத சொன்னாங்களா
"நான் கொடுத்த டைவர்ஸை ஆட்சேபனை இல்லாம வாங்கினாங்க அப்போ நான் அவங்க மனுசன இல்லைன்னு தான அர்த்தம் அவங்களும் என்ன விட்டு போகத்தான ஆசைப் பட்டு இருக்காங்க ...
ப்ச் நீயா முடிவு எடுக்காத ரித்விக் போய் பேசி
இனி பேசி எதுக்கு முடிஞ்சது முடிஞ்சதாவே இருக்கட்டும்..
உன்ன அயோக்கியா சார் ஓட ஓட விரட்டியது தப்பே இல்லை
ஏன் ?
ஆளுதான்டா வளர்த்து இருக்க, இன்னும் பக்குவம் வரல ...
ஏன் வரல ? நான்,லவ் பண்ணினாலும் அவங்களுக்கு பிடிக்கலைன்னு ஒரே காரணத்துக்காக அந்த காதலையே விட்டுட்டு அவங்களை சுதந்திரமா விட்டுட்டு வந்திருக்கேன் இந்த பக்குவம் போதாதா??
ஆமாடா நீ பெரிய தியாகி தான், உனக்கு நீயே சிலை வச்சிக்க.. இப்ப என்ன பண்ண போற ?
குழந்தை எடுத்து வளர்கிற ப்ளான் நல்லா இருக்கு அதான் யோசிக்கிறேன்
சரி நீ கிளம்பி வா ரெடி பண்ணி வைக்கிறேன் என்று நண்பன் கூறவும் ரித்விக் மறுபடியும் இந்தியா கிளம்பினான்...
நாய்க்கும் பூனைக்கும் கூட காதல் வரும் , மனிதனுக்கு வராதா என்ன ?காதலிப்பது பெரிது அல்ல , அந்த காதலை காலம் முழுக்க தூக்கி கொண்டு போக பக்குவம் வேண்டும் ... நான் எனது என் முடிவு என்று எப்போது ஒருவன் சுய முடிவை எடுக்க நிற்கிறானோ அங்கே காதல் சிதைந்து போகும் என்பதற்கு அவனே சாட்சி!!