பசப்புறு பருவல் 11
Pasa11

11 பசப்புறு பருவல் !!
வேலை செய்து கொண்டிருந்த ரித்விக்க்கு கவனம் வேலை மீது திரும்புமா என்ன.. முழு ஞாபகமும் வீட்டில் இருக்கும் காதலி மீது... கண்முன்னே அவள் இருந்தும் கண்ணார கண்டு கையால் அணைத்து இதழால் முத்தமிட்டு உடலால் உணர்வை அடக்க முடியவில்லை
"இனிமே கல்யாண வாழ்க்கையே வேண்டாம் கடைசி வரைக்கும் ஒத்தையாவே இருந்துடலாம்னு இருக்கேன் என்று வைசு நங்கையிடம் சொன்னதாக தகவல்
"ப்ச் அவசர பட்டு விட்டுட்டு வந்துட்டேனோ? மனம் குழம்பி தவித்தது... மண்டையை பிடித்து கொண்டு அவன் முழித்த முழியில் ..
"ரித்விக் லீவ் எடுத்துக்க ஏதோ போல இருக்கியே என்று அனுப்பி வைத்து விட .... வீடு வரை வந்து விட்டான் ஆனால் கதவை தட்ட முடியாது கதவு அருகே போவதும் வருவதுமாக சர்க்கஸ் செய்து கொண்டு நின்றான்..
"யக்கா இந்த துணியையையும் அப்படியே காய போட்டிரு" என்று நங்கை சொன்னது நியாபகம் வந்து படுக்கையில் பசலை நோயில் கிடந்த வைசு எழும்பி துணிகளை எடுத்து கொண்டு கதவை திறக்க ... பே என்று கதவை தட்டவா வேண்டாமா என்று நின்ற ரித்விக்கை கண்டு அவளுக்கு சிரிப்பு வந்து விட்டது ... போன மச்சான் திரும்பி வந்தார் கோவணத்தோடு என்பது போல போன வேகத்தில் ஆளு வந்திருக்க...இப்படி திடுதிப்பென திறப்பாள் என நினைக்காத ரித்விக் வழிந்து கொண்டே..
"அது வந்துங்க போனேனா உடம்பு முடியல அதான் அதான் நிஜமாவே உடம்பு முடியலைங்க அதான் வந்துட்டேன்
"நான் எதுவுமே கேட்கலங்க , உள்ள போங்க
"ம்ம் நிலைப்படியில் தட்டி மண்டை வலித்து ஸ்ஆஆஆ என்று தடவி கொண்டே உள்ளே போனவனை என்ன முயன்றும் சிரிக்காது கடக்க முடியவில்லை ... கட்டிலில் உட்கார்ந்த ரித்விக் அங்கிருந்து துணியை உதறி காயப்போடும் வைசுவை பார்த்தபடியே தலையை உதறி நங்கைக்கு போன் போட , இவன் தொல்லை தொடரும் என நினைத்து , அவள் போனை சுவிட்ச் ஆப் பண்ணி விட்டாள் போல ...
"எதாவது செஞ்சு தரவா" நங்கை விழுந்து விழுந்து அவனை சுற்றி வருவதை பார்த்து இவளுக்கு ஒரு நாள் பொண்டாட்டி வேலை பார்க்க ஆசையோ ஆசை , இந்த நினைவுகளையும் சுமந்து கொண்டு போனால் அங்கே இன்னும் கொஞ்ச நாள் வாழலாம் என்ற பேராசை தான் .. அசிங்கம் தான் ஆனால் காதலித்த இதயத்துக்கு காதல் மட்டும் தான் தெரிகிறது என்ன செய்ய??
நான் என்ன படுக்கையிலா அவரோடு கட்டி அணைத்து கூட போகிறேன் .. மனைவி போல அவருக்கு செய்ய ஒரு வாய்ப்பு , அதுக்கு கூட எனக்கு தகுதி இல்லையா?? என்று ஆசை மனம் கேள்வி கேட்டது... சின்ன ஆசை தானே பெரிய ஆசைக்கு மூலதனம்..
மக்கும் ஒரு காப்பி போட்டு தர இயலுமாங்க "
ம்ம் போட்டு தர்றேன் காப்பி தூள் எங்க வச்சிருப்பா என்று உருட்டிய வைசு பின் பக்கம் நாயகன் ஸ்வாசக்காற்று ...
ஸ்ஆஆஆஆ
வைசு
ம்ம்
"தடிச்சி சீமப்பசு அழகி, என் அழகி எப்படி இருக்க தெரியுமா என்று ரித்விக் அவளை இடையில் கை கொடுத்து தூக்கி
"இப்ப காப்பி தூள் எடு என்று அவள் தொப்புள் குழி உள்ளே தன் தாடி அடர்ந்த முகத்தை வைத்து தேய்ந்தவன்..
"உனக்கு தாடி மீசை ரொம்ப பிடிக்கும்லடி
"ம்ம்
ஏன் ?
ம்ஹூம்
"சொல்லு இல்ல கடிப்பேன்
"தாடி குத்தி கிழிச்சு காலையில அதோட தடம் வேணும் நீங்க தள்ளி போன பிறகு கூட உங்க வன்முறையே அது சொல்லணும்
ஓஓஓஓ என்றவன் தாடி இப்போதே வன்முறைக்கு அவளை அழைக்க
ஸ்ஸாஆஆஆஆ என்று அவனை குனிந்து பார்த்த வைசு அவளுக்கு உதட்டை காட்டிய அவன் உதட்டை தின்ன குனிய
"ம்மா "திண்டு தலையில் அடித்து வலியில் சிணுங்கி கண்ணை திறக்க ... கற்பனை காதல் சதியில் உதட்டை கடித்து காற்றில் அவள் கையை அலைய அந்தோ பரிதாபம் அவன் உருவம் காற்றில் துகளாக உடைந்து போனது ...அவனோ கட்டலில் அமர்ந்து ஏதோ யோசனையில் தலையை தேய்த்து கொண்டிருந்தான்
சீசீ என்ன நினைப்பு இது ? என்று தலையில் அடித்தாள்.. எத்தனை இரவுகள் அவன் தந்த ஒற்றை கூடல் நியாபகத்தில் நோய் முற்றி திரிந்தாள் அவனை கண் எதிரே பார்த்த பின்பு நோயின் வீரியம் கூடி போனது மெய் ...
ஏங்க
ஏங்க
ஹான் எஸ் ரித்விக் ..
"மேல ரெண்டாவது ரேக்குல பொடி இருக்கும்ங்க
ஓஓஓஓ பார்த்துட்டேன் என்று போட்டு கொண்டு வந்து அவன் முன்னே நீட்டி விட்டு ...
முட்டை பொறிக்கவா சாப்பிடுறீங்களா?
"ஆமாங்க வெளிய போகணும்னு சொன்னீங்கல்ல நீங்க சொன்ன இடம் கொஞ்சம் சிட்டி உள்ள போகணும் இப்ப போனாதான் வேலை முடிச்சு நைட்டுக்குள்ள வர முடியும்ங்க ...
"ம்ம் மனைவியாகவே மாறி போன தருணம் அவை, இடையில் புடவையை சொருகி கொண்டு குனிந்து உட்கார்ந்து வெங்காயம் அரிந்து பக்குவமாக அவனுக்கு முட்டையை பொறித்து அருகேயே அமர்ந்து சாப்பாடு பரிமாறிய அவள் அருகாமையில் இவன்தான் தேள் மீது உட்கார்ந்தது போல துடித்தான் .. அவள் தன் காதலி என்பதை விட இப்போது யாரோ ஒருத்தி ..நான் யாரோ ஒருவன் அந்த நினைப்பே அவளை ரசிக்கவும் விட வில்லை அவள் தரும் சுகந்தத்தை ருசிக்கவும் விட வில்லை தின்றும் திங்காது எழும்பி ஓடிய அவனை கேள்வியாக பார்த்த வைசு
சாப்பாடு நல்லா இல்லையா ரித்விக் ?
"சாரிங்க நங்கை கையால தின்னே பழகிடுச்சு என்று அவளை வேற்று ஆளாக நிறுத்த ஆயிரம் விஷநாகம் ஒன்றாக கடித்தது போல துடித்து போன வைசுவுக்கு ச்சை என்று ஆகி போனது
அவனுக்கு இருந்த தன்னடக்கம் எனக்கு இல்லையா உரிமை இல்லாத இடத்தில் உரிமை காட்டி அவமானம் அடைந்தது போல இருக்க ...
"நங்கை போல நல்ல மனைவி கிடைக்கிறது எல்லாம் நீங்க செஞ்ச புண்ணியம் தான்
"இல்லையா பின்ன , யாருங்க இது எல்லாத்துக்கும் அனுமதிப்பா என் மேல அவ்வளவு நம்பிக்கை அவளுக்கு ... அந்த நம்பிக்கையை காப்பாத்த வேண்டியது என் கடமை என்றவனை கண்ணை சுருக்கி பார்த்த வைசு
"என் புருஷனுக்கும் மத்தவனுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியும்ங்க, வெடுக்கென்று கூறிவிட்டு குளியலறை உள்ளே போய் விட
"தப்பா எதுவும் பேசிட்டேனாங்க
"நீங்க எப்பவும் சரிதான்ங்க பேசுவீங்க முடிஞ்சா வெளியே போங்க சேலை மாத்திட்டு கிளம்பி வர்றேன் மீண்டும் வெடுக் குரல் ....
"அறிவு இல்லாம அவனை ஒட்டி உரசினா இப்படிதான் பேசுவான்.. பெரிய நங்கையாம் அப்போ நான் யாராம் இவனுக்கு?? தாலி கட்டி மெட்டி போட்டு நீதான் எல்லாம்னு ஒரு நாள் தெவிட்ட தெவிட்ட வாழ்ந்து அம்போன்னு விட்டுட்டு வந்தவனை தேடி போவியா, மானம் கெட்டு போவியா என்று அவளே அவள் கன்னத்தில் அடித்து கொண்டாள்...
"உன் மனசு புரியாம விட்டுட்டு வந்தவன் பின்னாடி உன் மானங்கெட்ட மனசு மேய போகுமா போகுமா என்று சொல்லி சொல்லி நல்புத்தி சொல்லி கொண்டு குளித்து வேறு புடவையில் வெளியே வர கார் புக் பண்ணி இருந்தான்...
"நாமளே ஓன் ட்ரைவ், காலையில கார் கொடுத்தா போதும்ங்க பதிலே இல்லை வைசு போய்ஃபின் இருக்கையில் அமர்ந்து கொண்டாள் கண்ணை சிக்கென மூடி சீட்டில் தலையை சாய்த்து படுத்து விட்டாள் அவனை பார்த்தால் சுரணை இல்லாத காதல் அவன் பின்னால் போகும்.. தேவையா இந்த வெட்ககேடு ..
தவறே செய்யாமல் சில புரிதலற்ற உறவுகளால் வலியோடவே வாழ வேண்டியது இருக்கிறது காதலும் நமக்கே தண்டனையும் நமக்கே வலியும் நமக்கே...
"நீங்க வெயிட் பண்ணுங்க ரித்திக் நான் அவரை போய் பார்த்துட்டு வரேன்..
"நான் வேணும்னா கூட வரவா?
"வேண்டாம் என்று போய் விட, சிறுது நேரத்தில் சேலை கிழிந்து அலங்கோலமாக வைசு ஓடி வந்தாள்
"ரித்விக் ரித்விக் என்று அவிழ்ந்த புடவையை கட்ட கூட நடுங்கி ஓடி வந்து நின்ற அவளை அனைவரும் ஏனென்று பார்க்க சட்டென்று ரித்விக் அவளை அணைத்து தன் நெஞ்சோடு புதைத்து கொண்டது தான் மாத்திரம் ஓஓஓஓஓஓ என்று அழுது அவனை இறுக்கி கொண்டவள்
"உள்ள உள்ள என்கிட்ட என்கிட்ட என்கிட்ட என்று அவனை அழுது கொண்டே பார்க்க ... பல்லை கடித்தான் அவள் என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய அவசியம் இல்லேயே
இங்கே உட்கார் நான் போய் அந்த நாயை பார்த்துட்டு வர்றேன்
அய்யோ வேண்டாம் அவன் போதையில என்றவள் பேச்சை கேட்காது அங்கே அழகுக்காக வைத்திருந்த பூச்ஜாடியை தூக்கி கொண்டு ரித்விக் போய் கதவை எட்டி மிதிக்க , படுக்கையில் போதையில் உட்கார்ந்து இருந்த ஆசாமியை தூக்கி போட்டு பிளக்க ஆரம்பித்து விட்டான் ..
"எச்ச இப்ப வைடா என் வைசு மேல கையை, வைடா அவ மேல கையை" என்று அவன் கை மீது ஏறி நின்று உடைக்க ...
"ரித்விக் பிரச்சனை ஆகிட போகுது, இது ஒன்னும் நம் நாடு இல்லை உங்களுக்கு தான் ப்ராப்ளம் என்று வைசு அவனை பிடித்து இழுக்க
"என்ன ஆகிட போகுது, தூக்கி உள்ள போடுவானுகளா எவ மேலையோ கை வைச்சாலே விட மாட்டேன்.. உன் மேல, என் வைசு மேல போய் , நாய் முகரையை உடைக்கிறேன் என்று மிதித்து போட ..
"சார் பிரச்சனை பண்ணாதீங்க நாங்க பார்த்துக்கிறோம் "தவறு இவர்கள் பக்கம் இல்லை என்றதும் இவனை எப்படியோ நகர்த்தி வெளியே விட .. சட்டை கிழிந்து, சண்டையில் உதடு கிழிந்து ரத்தம் சொட்ட காரில் சாய்ந்து நின்றவன் எடுத்து கொடுத்த வேறு சேலையை கட்டி கொண்டு வைசு வந்து அவன் முன் நிற்க
"வைசு அது ?
பளார் என அவன் கன்னம் தீப்பற்றி எரிந்தது..
"வைசுஊஊஊ
"இது எல்லாத்துக்கும் காரணம் யார் தெரியுமா?? நீ மட்டும் தான்... நான் அப்படி என்னடா தப்பு பண்ணினேன்னு எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்துட்டு எதுவுமே நடக்காதது போல நிற்கிறேன் என்று அவன் கிழிந்த சட்டையை பிடித்து இழுத்தாள்
"ஏங்க
"ஏங்க ஏங்கன்னு ஏங்க வச்சிட்டியே... அவனோ அவள் அடித்ததை நம்ப முடியாமல், அப்படியே பேய் அடித்து நின்றது போல நிற்க ..
"நான் என்னங்க செஞ்சேன்
"என்ன செக்சியா, எல்லாமே சிறப்பா செஞ்சது நீ பெரிய யோக்கியன் போல நிக்கிறியா ..
ஏங்க
"வாய் மேலேயே மிதிச்சிடுவேன் இன்னொரு வாட்டி ஏங்க ஓங்கன்னா... என்ன வேசின்னு நினைச்சியா மாத்தி மாத்தி ஆள் பிடிக்க ... உன்ன பிடிச்சி கல்யாணம் கட்டினேனோ இல்லையோ.. இன்ன வரை நீதான் புருசன் என்று கழுத்தில் கிடந்த தாலியை தூக்கி மார் மீது போட்டாள்
நேரத்துக்கு ஒருத்தன பிடிக்கிறவன்னு நினைச்சியா .. ஒருநாள் கூட நீ யோசிக்கவே இல்லல்ல.. இவளுக்கும் மனசு இருக்கும்னு , உனக்கு எனக்கும் இடையில யாருடா அந்த அயோக்கியா .. நீ தாலி கட்டுன பிறகு உன் பொண்டாட்டி தானடா நான் .. என்ன பெரிய தியாகி சீன் போடுற, உனக்கு ஊர் மேய ஆசை , விட்டுட்டு வந்துட்ட.. உன் இயலாமைக்கு என்ன கொடுமை படுத்துற... அவன் பிரம்மை பிடித்தவன் போல அவள் அவதாரத்தில் அதிர்ந்து போய் நின்றான் ...
"உன் முகம் பார்த்து தானடா என் ஒவ்வொரு நாளும் விடிஞ்சது உன் முகத்தை பார்த்து தானடா என் ஒவ்வொரு நாளும் முடிஞ்சது ... காதல்னா என்னன்னு உன் கூட தான் உணர்ந்தேன் ... உன் மனசுல நான் இருக்கேனான்னு ஒரு நாளாவது என்கிட்ட கேட்கணும்னு தோணலல்ல... நீயா ஒரு முடிவெடுப்ப நீயா அதை நிறைவேத்துவ , கடைசில என்ன அம்போன்னு விட்டுட்டு வந்துட்டல்ல ... உன் கூட இருந்த ஒவ்வொரு நாளையும் யோசிச்சு யோசிச்சு செத்தது நீ இல்லடா, நாலு வருஷமா உன் கூட வாழ்ந்த அந்த ஒரு நாள் வாழ்க்கையை யோசிச்சு யோசிச்சு செத்து, பெத்த பிள்ளையையும் தூக்கி கொஞ்ச முடியாத பாவத்தை சுமந்துகிட்டு நிற்கிறேன்..
குழந்தை இஇஇஇயா??
குடிச்சா தான் உனக்கு ஒரு மண்ணும் தெரியாதே என் பிள்ளைக்கு தகப்பன் நீதாங்குற உண்மையும் உன்கிட்ட சொல்ல முடியாம அஞ்சு வருஷமா பட்ட பாடு எனக்கு தான்டா தெரியும் ... அவன் கண்கள் அகல அவளை பார்க்க ... மீண்டும் ஒரு அறை விழுந்தது...
குடிச்சுட்டு வந்து என்கூட படித்தது மட்டுமா உனக்கு ஞாபகம் இருக்க போகுது , ஏங்க ஏங்க சாரிங்கன்னு சொல்லிட்டு போயிடுவ... ஆனா , உன்னால நான் இழந்தது என்ன தெரியுமா? என் சந்தோஷம் சிரிப்பு வாழ்க்கை குழந்தை, இதோ இப்போ உன்னையையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கிறேன்.. ஆனா நீ , நான் இருக்க வேண்டிய இடத்துல இன்னொருத்திக்கு இடம் கொடுத்து ச்சை எப்படிடா உன்னால வாழ முடியுது "என்று அப்படியே அவன் காலடியில் அமர்ந்து அழுத அவளை எச்சில் விழுங்கி நம்ப முடியாது பார்த்துக்கொண்டிருந்தான்.. தலையில் அடித்து கொண்டு எழும்பிய வைசு
"ச்சை நங்கை சந்துருவை எப்படி மறந்தேன் இப்படி அவசரப்பட்டு வாயை விட்டுட்டேன் "என்று பதறியவள் இன்னும் அதிர்ந்து நின்ற ரித்விக் அருகே போய்
"சாரி சாரி அது வந்து கொஞ்சம் டிப்ரசன்ல கண்டபடி பேசிட்டேன் ... பேசினது எதுவும் உண்மை இல்லை தப்பா...தப்பா நினைச்சுக்காதீங்க சாரி ரித்விக் எனக்கு கொஞ்சம் மன பிறழ்வு இருக்கு, இப்படிதான் சம்மந்தம் இல்லாம கண்டதையும் பேசிடுவேன்.... வியர்த்த முகத்தை துடைத்து கொண்ட ரித்விக்
வந்து வண்டியில ஏறுங்க என்றான் இடியை இறக்கி விட்டாளே...
"தப்பா நினைக்கலேயே உணர்ச்சி என்றாவது வெடிக்கும் தெரியும் ஆனால் இவ்வளவு சீக்கிரமாக தன் வாயாலேயே அனைத்தையும் கொட்டி தீர்ப்போம் என்று கொஞ்சமேனும் நினைக்கவில்லை
"நிறைய தப்பா பண்ணிட்டேன்னு மட்டும் புரியுது ...
"ரித்விக் .... நகர்ந்து போய் காரை எடுத்து விட்டான் ...
தப்பு பண்ணமாலேயே ஆளு நிறைய யோசிக்கும் அத்தனை தப்பும் அய்யாரு பக்கம், இனி இந்த மூளை கெட்ட பய எப்படி எல்லாம் யோசிப்பானோ??
ஆனா ஒன்னு நமக்கு கிடைக்கிற ஹீரோ எல்லாம் மூளையை கழட்டி காய வச்சிட்டுதான் நமக்கு கமிட்டே ஆகுறாங்க...