பசப்புறு 10

Pasa10

பசப்புறு 10

10 பசப்புறு பருவல் !!

என்ன ராயா ஆளே இல்லாத பஸ் ஸ்டாப்ல ரொம்ப நேரமா வண்டிய போட வச்சிருக்கியே..  டபுள் விசில் எப்பப்பா கொடுப்ப என்று டிரைவர் சிரிக்க ... பின் படிக்கட்டில் கையை மேலே பிடித்தபடி கீழே குனிந்து பாதையை பார்த்தபடி நின்று கொண்டிருந்த ராயன்..

"இருங்கண்ணே அஞ்சு நிமிஷம் நின்னா குடியா முழுகப்  போகப்போகுது , இல்ல கரெக்ட் டைம்ல போயி  வண்டியை விட்டா..  நமக்கு கிரீடமாக கொடுக்கப் போறாங்க..  ஒரு ரெண்டு நிமிஷம் லேட்டா போகலாமே...

"நேத்து வரைக்கும் சரியான நேரத்துக்கு போயிடனும்னு சொல்லுவ..  இன்னைக்கு அப்படியே மாத்தி பேசுறியேப்பா 

"அது நேத்து இது இன்னிக்கு

"புரியுது புரியுது 10 மணி புயல் வர்றதுக்காக காத்திருக்க போல இருக்கு" என்றதும் ராயன்  டிரைவரை  தலையை திருப்பி பார்க்க 

"எத்தனை வருட அனுபவம், இந்த பஸ் எத்தனை காதல் ஜோடிகளைப் பார்த்திருக்கு உன்ன கணிக்க மாட்டேனா என்ன ?? 

"ஹிஹி சும்மா அண்ணன் 

"பார்துப்பா,  நேத்துதான் ஒருத்தன் சப்புன்னு அவ கையால அறை வாங்கினான் 

"எதுக்கு ??

"எதுக்கா பக்கத்துல உரசி கிட்டே நின்னு இருக்கான் இந்த பொண்ணும் தள்ளி தள்ளி போய் நின்னு இருக்கு அவன் தொல்லை தாங்க முடியல விட்டா பாரு ஒரு அறை  வெடவெடத்துப் போச்சு..  பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்னு ஒத்த அடியில காட்டிட்டா .. பாத்துப்பா பல்லு எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கா

என்ன நக்கல் பண்றீங்களா அதெல்லாம் என்ன ஒன்னும் பண்ண மாட்டா... 

9 மணி பஸ்சுக்கே  போயிடுமே

9 மணி பஸ் மிஸ் பண்ணி இருப்பா "

"எப்படி கரெக்ட்டா சொல்ற

"போன  கண்டக்டருக்கு போன் போட்டு கேட்டேன் என்ற ராயனை டிரைவர் வாயை பிளந்து பார்த்தார்..

"ஓஹோ தொலைநோக்கு பார்வையில லவ் பண்றியா.."

"பின்ன இவளை எல்லாம் ஸ்கெட்ச் போட்டு தூக்கினாதான் உண்டு ,  ஒன்பது மணி கண்டக்டர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்..  முன்ன கூட்டியே வண்டிய கிளப்பிட்டு போயிடுங்கன்னு.

"அடப்பாவி 

"அப்படின்னா தானே நம்ம வண்டியில  என் ஆளு வரும் இந்தா  வந்துடுச்சு வந்துருச்சு என்று ஆர்வமாக கீழே அவன் குனிந்து பார்க்க ...

மணியை பார்த்துக் கொண்டே வெள்ளை நிற சுடிதாரில் ஓடி வந்த அவன் புதிய காதலியை விசில் அடித்துக் கொண்டு ராயன் பார்த்தான்..

காற்றின் ஓட்டத்தில் தன் சிகை பறக்க,  அதை விரல் கொண்டு கோதி காதிற்கு பின்னால் சொருகிக் கொண்டே பறக்கும் ஷாலையும் இன்னொரு கையில் பிடித்தபடி ஓடி வந்தவள்..  இந்த பஸ்ஸை கண்டதும் ஜர்க் அடித்தது போல அப்படியே நின்று கொண்டவள் .. பின்னால் வாசலில் நின்ற  ராயனை கண்டதும் கண்ணைச் சுருக்கி யோசனையாக பார்த்தபடி நகத்தைக் கடிக்க..

"அம்மாடி ஒன்பது மணி பஸ் பஞ்சர் போல டிப்போவுக்கு போயிடுச்சு வரியா இல்லையா?? என்ற டிரைவர் குரல் கொடுக்க

"அய்யய்யோ இன்னைக்கு வேற எக்ஸாம் இருக்கே..

"அடுத்த பஸ்சும்  வர்றதுக்கு வாய்ப்பில்லை என்றான்  ராயன் டபுள்  விசில் அடித்துக் கொண்டே... 

"எது அடுத்து பஸ்ஸூம் வராதா?? கொஞ்சம் கொஞ்சமாக  வண்டி  வேகம் எடுக்க ஆரம்பிக்க ரித்து யோசனையின் மத்தியில் நின்றவள் .. ஓடி வந்து பின் வழியாக ஏற போக.)  ராயன் தன் கையை அவளுக்கு நீட்ட,  அதை தட்டி விட்டவள் ஓடும் பேருந்தில் ஏறி மூச்சு திணறியவள்..

"வேணுண்ணே  டபுள் விசில் கொடுத்திருக்கீங்க... என் உயிர் போனா நீங்களா வாங்கி கொடுப்பீங்க கொஞ்ச நேரம் நின்னு விசில் அடிச்சா ஆகாதா? என்று திட்டி கொண்டே  உள்ளே பார்க்க மொத்த கூட்டமும் வாசல் வரை நின்றது ... 

"அல்டாப்பு சுந்தரி வருவான்னு காத்து நின்னு விசில் அடிக்க முடியாது , நேரத்துக்கு வந்து வண்டியை பிடிக்கணும்..   சும்மா வாயை மட்டும் கிழிக்க வேண்டியது..  இந்தா டிக்கெட் வாசல்ல நின்னு செத்து கிடக்காத உள்ள போ" என்று அவள் கையில் டிக்கெட்டை திணித்துக் கொடுக்க..

"இந்தா பைசா" என்று அவளும் பைசாவை அவன் கையில் திணித்துவிட்டு 

"இடம் இருந்தா போக மாட்டாங்களா??  பெருசா வாயை கிழிப்பான்"  என்று வாசலிலேயே அவள் நிற்க அவள் விழுந்து விடாதபடி ராயன் ஒற்றை கையை நீட்டி பிடித்து வைத்திருக்க . அவளும் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு கம்பியோடு கம்பியாக ஒட்டிக்கொண்டு நின்றாள் சிறுது கூட்டம் குறைந்து அவள் சேப்பாக நிற்கவும் நகர்ந்தான்.. 

டிக்கெட் டிக்கெட் என்று அங்கும் இங்கும் ராயன் சுத்திக்கொண்டிருக்க எல்லோரையும் சட்டை கூட உரசாமல் ஒதுங்கி போகும் யோக்கியன்,  இவள் அருகே வரும் பொழுது மட்டும் வேண்டும் என்று ஒரு இடி உரசு கொடுத்து விட்டேன் நகர.... பல்லை கடித்தாள்...  

"அண்ணன் சும்மா தெறிக்க விடுற மாதிரி காதல் பாட்டை போட்டு விடுங்க நரம்பு அத்து போனவளுக்கு கூட லவ் பிச்சிக்கிட்டு வரணும்" சீட்டில் அமர்ந்திருந்த ரித்து அருகே கம்பியில் அவளை உரசி கொண்டு சாய்ந்து நின்ற ராயன் டிரைவருக்கு குரல் கொடுக்க 

உன் ஆளுக்கு பிடிச்ச பாட்டை நீயே சொல்லுப்பா அதையே போட்டுடுறேன் 

"ராஜா ஹிட்ஸ் போட்டு விடுங்க... 

"கொஞ்சம் ஓவராத்தான் ராயா போற, எங்க போய் மாட்ட போறியோ தெரில" என்று அவர் சிரித்து கொண்டு காதல் ததும்பும் பாடலை போட்டு விட அத்தனை பேரும் ரசிக்க அவன் அல்டாப்பு சுந்தரி மட்டும் காதில் ஹெட் போனை சொருகி கொண்டாள்... 

எறும்பு ஊற கல்லும் தேயும் உரசி உரசியே உன்ன தேய வச்சிடுவேன் என்றவன் தினமும் காதல் பாட்டு போட்டு அவளை அசைக்க பார்க்க..  ம்ஹும் நீ யாருடா என்னை அசைக்க  என்பது  போல ஒரு பார்வை பார்த்து விட்டு ரித்து இறங்கி போய் விடுவாள்... 

இவ என்ன நினைக்கிறான்னே புரியலையே என்று ராயன் தான் தலையை சொரிய வேண்டியதுதாகி போனது 

அப்போது உள்ள  ரித்துவுக்கு கெளரவம் பணம் அந்தஸ்தோடு ஒன்றி போகும் காதலன் தேவப்பட்டான்..  இப்போது உள்ள ரித்துவுக்கு அனுசரனை அன்பு அரவணைப்போடு கொண்ட காதலன் தேவை பணம் பகட்டு பறந்து போகும் .. எந்த நிலையிலும் தோள் கொடுக்கும் நேசன் வேண்டும் வெறும் நேசம் போதும் கொடுக்க அவன் தயாரா?? 

என்ன ராயா இன்னைக்கு லீவா  ? 

ஆமா அண்ணன் அம்மாவை நார்மல் செக்கப் பண்ண ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் , அதே பேருந்தில் தான் தாயை அழைத்து கொண்டு வந்திருந்தான்... 

என்னடா ராயா என் மருமகள காணோம்? 

வருவாம்மா கடைசி ஆளா ஆடி அசைஞ்சுதான் வருவா , அவளுக்கே தெரியும் 10:00 மணிக்கு வண்டி வரும்னு இவன் தானே கண்டக்டரா  வருவான் எப்படியும் வண்டியை நிறுத்தி வைப்பான்னு அவளுக்கு அசால்ட் முன்னமே  வந்தா மழை வந்துடும் .. டெய்லி கடைசில வந்து என்னை முட்டிக்கிட்டு ஏறுனா தான் அவளுக்கு நிம்மதியா இருக்கும்...  என்று முடிக்கும் முன் அவன் புயல் மையம் கொண்டது .. 

ஏன் அண்ணன் கடைசி படியில ஏறும் போதே விசில் அடிப்பியா... விழுந்து செத்தா நீயா என் குடும்பத்தை பார்த்துப்ப என்று கன்டெக்டருக்கு திட்டு விழ..

"அய்யோ பாவமேன்னு உனக்காக ரெண்டு நிமிசம் நின்னு ஏத்தினா சேட்டையா பாப்பா உனக்கு 

"உன்ன எவன் நிக்க சொன்னான்,  இந்த வண்டி போனா சேர் ஆட்டோ பிடிச்சு போவேன் என்னவோ இந்த வண்டிக்கே ஓனர் போல நீயும் உன் கூட இன்னொன்னு வருமே அதுவும் பண்றீங்க..  ஓ

என்னைக்கு அந்த பெருசாளியை நசுக்கிப்போட போறேனோ தெரியல..  சும்மா சும்மா உரசிட்டு போறான் , எனக்கு கோவம் வந்துச்சு "என்று இடித்து புடுத்து கம்பியை வந்து பிடித்தவளை ராயன் முறைத்தபடி பார்க்க ... 

இங்க தான் இருக்கானா?? என்று முகத்தை கோணி கொண்டு இடம் இல்லாது அவன் சீட் அருகே நிற்க 

"என்னடா இவ உன்ன இப்படி கழுவி ஊத்துறா 

"விடும்மா காதலன் காதலிக்குள்ள இதெல்லாம் சகஜம்

ஹஹஹஹ தூதூ  மானம்கெட்டவனே....என்று தாயின் திட்டை பல்லை இளித்து வாங்கி கொண்டான் நின்று கொண்டே ரித்து ஏதோ பேப்பரை புரட்டி புரட்டி படித்து கொண்டு நின்றாள் இன்று பரீட்சை என்று கேள்விப்பட்டான்.. 

ஸ்ஸ்ஸ்  இஸ்  அவளுக்கு குரல் கொடுத்தான்,  அவள் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பி கொள்ள

ஆவ்ஊஊஊ இடையில் ஒரு கிள்ளு போட்டவனை அவள் தீயாக முறைத்தாள்.... காதலனாக நடிக்கும் போது கூட அவளை அத்துமீறி தொடவோ பார்க்கவோ மாட்டான்..  அப்போதெல்லாம் அவன் பார்வைக்கும் தொடுகைக்கும் கன்னி மனம் ஏங்கும் இப்போது எரிச்சல் வர அவன் காலில் ஓங்கி ஒரு மிதி 

ஆவ்ஊஊஊஊ பாதகத்தி உசுர் போச்சு என்று பல்லை கடித்தவன் அவள் அருகே எழும்பி நின்றவன் ரித்து காதருகே 

நாயை மிதிக்கவா செய்ற முதல் ராத்திரியிலேயே முழுகாமை ஆக்குறேன்டி அவள் தீயாக அவனை திரும்பி முறைக்க...

"அப்படியே தலையை பிடிச்சு உதட்டை கடிச்சிடுவேன் சீட்ல உட்காருடி"

"உன் சீட் ஒன்னும் எனக்கு வேண்டாம் 

"என் சீட்டை தர தயார்தான்  இப்போதைக்கு இதுல உட்கார்" என்று அவளை இழுத்து சீட்டில் அமர வைத்தவன் அவள் அருகே நின்று கொள்ள 

"நல்லா இருக்கியாம்மா?? மலர் தெரியாது வாயை விட்டு விட

"ஏன் நான் நல்லா இல்லைன்னா உங்க மகனை பலி கொடுக்க போறீங்களா ??

"ஏய் அம்மாடி என்று அவன் குனிந்து கடிய 

"தெரியும்டா உன் அம்மான்னு தான் பேசுறேன்,

"பெரியவங்களுக்கு மரியாதை கொடுடி 

"எதுக்கு கொடுக்கணும் உன் அம்மாவுக்கு நான் ஏன் கொடுக்கணும் ஹான்  

"டேய் சும்மா இருடா அவளே வச்சி வாங்குறா நீவேற மரியாதை கொடு மல்கோவா கொடுன்னு என்று மலர் தலையில் அடித்து கொண்டு அவள் கையை இறுக பிடித்தபடி 

"மன்னிசிக்க தாயி 

"மன்னிக்க முடியாது என்று கையை தட்டிவிட்டுவிட்டு புக்கை புரட்ட ஆரம்பித்து விட்டாள் ராயன் மலரை கெஞ்சுதலாக பார்க்க 

"என் பொண்ணுடா என் பிள்ளை அடிச்சா உதைச்சா கோபப்படுவேனா என்ன ? பரவாயில்லை ரெண்டு அடி கூட அடிச்சிக்கட்டும் என்ற மலரை ஓரக்கண்ணால் ரித்து பார்க்க.. 

டொம் என்று பஸ் டயர் வெடிக்க

அய்யய்யோ பஞ்சரா  11 மணிக்கு எக்ஸாம் இருக்கு  அண்ணன்,  எப்போ வண்டி ரெடியாகும்?

"வேற பஸ் மாத்தி விடுறோம் இல்லை உனக்கு அவசரம்னா வர்ற வண்டியில ஏறி போம்மா,   ரித்து நகத்தை கடித்து கொண்டு  

"ப்ச் ஆடி கார்ல போனவ எவன் கண்ணுல பட்டேனோ என் நிலைமை இப்படி ஆகி போச்சு?  என்று அவள் அருகே இறங்கி நின்ற ராயனுக்கு கேட்கவே திட்டி கொண்டு , அங்கும் இங்கும் படபடக்க ஓடினாள்..  இந்த பரீட்சையை தவர விட்டால் இனி ஆறு மாதம் காத்திருக்க வேண்டும் .... ஆட்டோ கூட அந்த அத்துவான காட்டில் கிடைக்காது ஒரு டீக்கடை தவிர ஒன்றும் இல்ல.. அழுகை வர பார்த்தது.. 

ஏன் எனக்கு மட்டும் இப்படியே குண்டக்க மண்டக்க எல்லாம்  ஆகுது என்று தலையில் கைவைத்து எல்லைக்கல் மீது அமர்ந்து விட ..ராயன் வேகமாக டீக்கடை நோக்கி போனான் ... அவரோடு ஏதோ பேசினான் பைக் சாவியை அவர் நீட்ட அவள் முன் வந்து பைக்கை நிப்பாட்டிய ராயன் 

ம்மா உன் மருமகளை கொண்டு போய் விட்டுட்டு கூட்டிட்டு வர்றேன் , நீ பஸ் ரெடியானதும் போயிடுவியா இல்லை "

"நான்,போயிக்கிறேன் ராயா ,நீ நம்ம  புள்ளையை கூட்டிட்டு போ நேரத்துக்கு போய் விட்டிருய்யா... 

"வா வந்து வண்டியில ஏறு .. என்று அவன் கூறும் முன்னே வண்டி பின்னால் ஏறி இருபக்கமும் கால் போட்டு சப்பென்று அமர்ந்து கொண்டவள்

"உடனே உருகி உன்ன லவ் பண்ண மாட்டேன்

உன்னால தான் பஸ் ரிப்பேர் ஆகி போச்சு ... உன் முகரையை பார்த்து தான் கெட்ட சகுனம் ஆகி

போச்சு அப்போ நீதான் பிராயச்சித்தம் பண்ணணும் பெரிய உதவி பண்ற மாதிரி நெனைப்பு இதுதான் அட்ரெஸ் போங்க .. என்றவளை திரும்பி முறைத்தான் 

"எப்படியோ போன்னு விட்டிருக்கணும்டி..

"ப்ச் குண்டு குழியில வண்டி விழ கூடாது, என் உடம்பு மேல உன் உடம்பு டச் ஆக ஆஆஆஆஆஆ நச் நச் என்று அவன் முதுகில் போய் மோதினாள்

குண்டு குழியில வண்டி விழத்தான் செய்யும்,  நீ என் இடுப்பை புடுச்சி உட்கார் .. இல்லை மரணகிணறுல வண்டி ஓட்டுற மாதிரிதான் ஓட்டுவேன் என்றவன் இடையை அவள் கைகள் வலிக்க பிடிக்க அந்த வலி கூட சுகமாகி போனது ... 

போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனா இவளுக்கு முத்து உதிர்ந்திடுமா என்ன என்று ஹால் உள்ளே போகும் ரித்துவை பார்த்தபடி மரத்து நிழலில் பைக்கை விட்டுவிட்டு ராயன் அதன் மீது சாய்ந்து அமர பரீட்சை ஹாலில் எழுதி கொண்டே ஜன்னல் வழியாக கீழே நின்ற ராயனை எட்டி பார்த்தாள்... அவளுக்காக காத்து நின்றான் 

அவளை எளிதாக தூக்கி போட்டு விட்டான் ஏமாற்றத்தின் வலி உண்மையாக நேசித்த ஒருத்திக்கு தான் தெரியும் 

காதலி காதலி அப்போதான ஏமாத்தம் எப்படி வலிக்கும்னு தெரியும் என்று பல்லை கடித்தாள் அயோக்கியா தங்கை ...  

அயோக்கியா தங்கைக்கு பழி வாங்க கற்று கொடுக்க வேண்டுமா  என்ன ?