பசப்புறு பருவல் 9
Pasa9

9 பசப்புறு பருவல் !!
அக்கா கதவை திறந்துட்டீங்களா? உள்ளிருந்து நங்கை குரல் வர
ஹான் ஆமா ஆமா ஆமா என்று ரித்விக்கை பாரத்து கொண்டே நின்ற வைசு பதறி கண்ணை சிமிட்டி வழியை விட்டு அவன் உள்ளே நுழைய இடம் கொடுக்க
"வாங்க ரித்விக்" என்றதும் அவனும் தடுமாறி நிலையாக நின்றவன்
"நல்லா இருக்கீங்களா?
ம்ம்
"தூக்கத்தை கெடுத்துட்டேனோ சங்கடமா அவளை பார்த்தான்
"இல்லை தூங்காம தான் இருந்தேன் புது எடம்ல தூக்கம் வரல" உன்ன பார்க்காம தூக்கம் வருமா என்று சொல்ல முடியுமா ??
"ஓஓஓஓ நீங்க தூங்குங்க காலையில பேசலாம்
ம்ம் அவளை உரசாது உள்ளே நுழைய அவன் முதுகை ஆசையாக அவள் கண்கள் வருடியது... அப்போதே அவன் மீது தீராத மயக்கம் உண்டு கட்டழகன் போல இருப்பான் இப்போது அவளுக்கு பிடித்தது போல தாடி மீசை என்று அச்சோ அவன் ஆண்மையில் சொக்கினாள் சொப்பணசுந்தரி..
"மாமா ஏன் இவ்வளவு லேட் என்று அவன் கையில் இருந்த தின்பண்டங்களை நங்கை வாங்கிவிட்டு போக
"சம்பளம் போடுற நாள்ல நங்கை நின்னு வாங்கிட்டு வர லேட்டாகி போச்சு "
"ஓஓஓ ஆமால்ல தங்கச்சிக்கு காசு அனுப்பிட்டீங்களா?
"ம்ம் அனுப்பிட்டேன் பைக் கேட்டுட்டே இருக்கு ,
"போன மாசமே கேட்டுச்சுல்ல மாமா என் சம்பளமும் வந்திடட்டும் சேர்த்து போட்டு வாங்கி கொடுத்துவோம் "
"வேண்டா நங்கை கொஞ்சம் கஷ்ட நட்டம் பார்க்கட்டும் அடுத்த வீட்டுல வாழ போற புள்ளை கேட்டதும் வாங்கி கொடுத்து கெடுக்க கூடாது" கணவன் மனைவி கலந்துரையாடலை யாரோ போல வைசு கேட்டு கொண்டு நின்றாள்..
"அதுவும் சரிதான் மாமா ..
"இந்தா சம்பளம் என்று நங்கை கையில் கொடுக்க அவர்கள் இருவரையும் என்ன முயன்றும் வைசுவால் ஏக்கமாக பார்ப்பதை தடுக்க முடியவில்லை ..
நங்கை இடத்தில் அவளை வைத்து பார்க்க துடித்த மனதை குத்தி கிழித்து இது துரோகம் என்று சொல்லி சொல்லி அடக்கினாள்...
ஏது துரோகம் உன் புருசன் அது ... உன் பிள்ளைக்கு தகப்பன் அவன் ...இன்னைக்கு எதுவும் இல்லைன்னா அவன் உனக்கு இல்லேன்னு ஆகிடுமா??உனக்கு தான் முதல் உரிமை காதல்லையும் சரி மனைவி அந்தஸ்திலும் சரி என்று சுயநலமாக ஆசையில் கூவும் மனதை கடிந்தவள் .
"எப்போ இருந்து இப்படி சுயநலவாதி ஆன ??
"ஐஞ்சு வருசம் இவன் இல்லாம கெடந்து செத்தியே அப்போ இருந்து, அயோக்கியாவை விட்டு கொடுக்க முடிஞ்ச உன்னால அவன் இல்லாம இவனை ஏத்து கொண்ட முடிஞ்ச உன்னால, இவனை தவிர வேற ஒருத்தனை உன்னால ஏன் ஏத்துக்க முடியல...
"தெரியல
"அதுதான் காதல் இதுதான் காதல் ... காதல்ல சரி தப்பு இல்லை வைசு .. மறுபடியும் இவனை இழந்து வெறுங்கையா போக போறியா ?சொல்லு! சொல்லு! சொல்லு என்ற மனதின் பேச்சை காதை பொத்தி அடைக்க பார்த்தாள் ..
அக்கா
அக்கா
ஹான் நங்கை
"நீங்க போய் கட்டல்ல படுத்துக்கோங்க அக்கா, மாமா சொல்லுங்க
"ஆமாங்க நீங்க மேல படுத்துக்கோங்க நாங்க தூங்க லேட்டாகும் என்ற ரித்விக்குக்கு மெல்லிய புன்னைகையை கொடுத்துவிட்டு... அந்த குட்டி விளக்கு எறிந்த அறையில் வைஷ்ணவி போய் கட்டில் மீது படுக்க ..
மாமா குளிச்சிட்டு வா சாப்பாடு சூடு பண்ணி வைக்கிறேன் "
ம்ம் என்று குளியலறை போன ரித்விக் பின்னே டவல் லுங்கியை தூக்கி கொண்டு வாலாக போகும் நங்கை, குளித்து விட்டு வந்த அவன் தலையை துவட்டும் நங்கை ... மொத்தத்தில் இந்த இடம் எனக்கானது என்று வைசுவுக்கு கத்தி அழ பேராசை வந்தது ....
கதை அளந்து கொண்டே அவனுக்கு பரிமாறும் நங்கையையும் இருட்டில் தூங்குவது போல கிடந்தவள் குறைக்கண்ணால் பார்த்தபடி படுக்கையில் கிடந்தாள்
அவங்க சாப்பிட்டாங்களா நங்கை ?
"ம்ம் ஆச்சு ...
"நீ ?
"நமக்கு தான் சோத்தை பொங்கினதும் பசிக்குமே மாமா ...
"என்ன மாமா பால்கோவா, ஜாங்கிரி எல்லாம் வந்திருக்கு, நம்ம வீட்ல யாரும் திங்க மாட்டோமே என்றதும் சாப்பிட்டு கொண்டிருந்த ரித்விக்குக்கு குறப்பு எடுக்க..
அய்யோ பார்த்து என்று சத்தமில்லாது வைசு உதட்டை அசைக்க
"ஆடு போல விழுங்க வேண்டியது , பார்த்து தின்னு மாமா என்று அவன் முதுகில் நாலு தட்டு நங்கை போட ...
"புதுசா வந்து இறங்கிச்சு அதான் வாங்கிட்டு வந்தேன் நங்கை
"சமாளிக்காத உன் ஆளுக்கு பிடிச்சதுதான" என்று கிசுகிசுப்பாக அவன் காதில் கேட்க
"சும்மா இருடி வில்லங்கத்தை இழுத்து விட்டிராத பிறகு அவுக போற வரை, நான் இந்த பக்கமே வர மாட்டேன் பார்த்துக்க .."
"சரி சரி பேசல நீ தின்னு .... ஆனாலும் ஓவர் லவ்வுதான்....
"ப்ச் திங்கவா எழும்பி போகவா ?
"பேசல பேசல தின்னு குட்டி வீட்டில் அவர்கள் கிசுகிசுக்கும் சப்தம் கேட்காது இருக்குமா என்ன??
சந்துரு நடுவே இரண்டு பக்கமும் நங்கையும் ரித்விக்கும் படுக்க ... வைசு நங்கை பக்கம் கிடந்த ஒற்றை மடக்கு கட்டலில் ... நங்கை குறட்டை சத்தம் கேட்க... மெல்ல ரித்விக் வைசுவை நோக்கி திரும்பி படுத்தான் ... அதே சமயம் வைசுவும் அவனை நோக்கி திரும்பி படுக்க , இருட்டில் அவர்கள் கண்கள் மட்டும் பளிச்சென மின்னியது...
அவ எதாவது பேசி இருந்தா மன்னிச்சுகோங்க ... என்ன தவிர என் நங்கைக்கு யாருமே இல்லைங்க... என்று சத்தமில்லாமல் ரித்விக் கூற
ரெண்டு நாள்ல போயிடுவேன் ரித்விக், அவளுக்கும் உங்களுக்கும் இடையில எனக்கு வேலை இல்லையே .... ஐ ஹைவ் பேமிலி சோ உங்க பேமிலி உள்ள எனக்கு என்ன வேலை ? வெடுக்கென்று அழுத்தமாக சொன்னாள்...
தப்பா எதுவும் பேசலேயேங்க
"நீங்க எப்பவும் தெளிவா பேசி முடிவு எடுக்கிறவர்தானங்க, உங்க தெளிவு முடிவு எல்லாம் அபாரமா இருக்குமேங்க "என்று பல்லை கடித்தாள் சிறுது சிந்தித்து இருந்தால் இந்த அவஸ்தை இருவருக்கும் வந்திருக்கவே செய்யாதே , அவள் மனதில் என்ன இருக்கிறது என்று பார்க்கவே இல்லேயே எடுத்தோம் கவிழ்த்தோம் என்று தப்பும் தவறுமாக முடிவை எடுத்து இப்படி அழ வைத்து விட்டானே என்று விக்கு விக்கென்று வந்தது ...
"சரிங்க குட் நைட்ங்க ...
"ம்ம் என்றாலும் இருவரும் தூங்க வில்லை... நங்கை தலையணை அவள் மூடிய கண்ணில் இருந்து வந்த கண்ணீரால் நனைந்தது...
உன் நங்கைன்னு சொன்னியே அது போதும் மாமா எனக்கு... நீ வாழு அது போதும் எனக்கு என்று உதடு நடுங்க சிரித்தாள்.. வைசுவும் நங்கையைத்தான் யோசித்தாள்
"ச்சே அந்த பொண்ணு புரியாம பேசுது நானும் தப்பா யோசிக்க கூடாது
என் மாமா என் மாமா என்று சொல்லும் அவள், அந்த மாமனையே தூக்கி கொடுக்க தயாராக இருப்பது ஆச்சரியமாக இருந்தது ...
நல்லப்பெண் !!அவளை காயப் படுத்துவது போல எதையும் செய்ய கூடாது கடவுளே ரித்விக்கை பார்த்தால் தடுமாறும் மனசை அடக்க சக்தி கொடு அவரை கண்டதும் சுயநலமாக யோசிக்கும் இதயத்தை சுத்தப்படுத்து, இந்த பொண்ணு முன்னே நான் குற்றவாளி ஆகிட கூடாது.. எப்படி உள்ளே வந்தேனோ அப்டியே வெளியே போயிடணும் என்று வேண்டாத தெய்வம் இல்லை ...
அடுத்த நொடி கண்ணை மூடிட தலையணையில் தலைவன் மணம் குப்பென அவளை தடுமாற செய்ய
அய்யகோ!!! உதடு கடித்தாள்.. சிறுது நேரம் படுத்து விட்டு போன வைசு நறுமணம் அவன் போர்த்தி இருந்த போர்வையில் இவன் தொண்டை ஏறி இறங்கியது ...
காலை வெயில் சுள்ளென்று அடிக்க வைசு கண்களை திறக்க நன்றாக விடிந்து இருந்தது
அய்யய்யோ தூங்கிட்டேனா?? என்று கண்ணை அலைய விட ரித்விக் இடியாப்பம் பிழிந்து கொண்டிருக்க, சந்துரு பள்ளிக்கு கிளம்பி நிற்க நங்கை ஏதோ பேசி கொண்டே அவன் அருகே உட்கார்ந்து நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள்
இது இது எல்லாம் அக்கா வாங்கிட்டு வந்துச்சு மாமா என்று சேலை கிளிப் வளையல் நகை என அனைத்தையும் காட்ட
ஓஓஓ நல்லா இருக்கு நங்கை
தம்பிக்கும் நெறைய பெரியம்மா வாங்கிட்டு வந்திருக்கு அப்பா, நான் வந்து காட்டுறேன் சந்துரு கூற
ம்ம் சரிடா ...
உனக்கு மட்டும் ஒன்னும் வாங்கிட்டு வரல ஏன்னு கேளு மாமா என்று ரித்விக் தோளில் நங்கை இடிக்க
"ப்ச் சும்மா இருடி அவங்களுக்கு கேட்டுட போகுது
"ஹாய் அக்கா எப்போ முழிச்சீங்க என்றதும் ரித்விக் திரும்பி பார்த்தவன் மூச்சு முட்டினான்... நைட்டியில் கலைந்த முடியை கேட்ச் கிளிப்பில் அடக்கி மூக்குகண்ணாடியை நைட்டியில் துடைத்து கண்ணில் சொருகிய அவள் அழகை ரசிக்கலாமா வேண்டாமா என்ற உரிமைதடுமாற்றம் , குனிந்து கொண்டான்..
ம்ம் இப்பதான் நல்ல தூக்கம் ரொம்ப நாளைக்கு பிறகு நல்லா தூங்கினேன் நங்கை .. குட் மார்னிங் ரித்விக்
குட்மார்னிங்க என்று குனிந்து கொண்டே தன்னை தாண்டி குளியலறை போகும் அவள் பாதத்தை பார்த்தான் ... மெட்டி முத்து சத்தம் கிளிக் கிளிக் என்றது ...
நானும் இதே போல மெட்டிதானே மாட்டி விட்டேன் , அவங்க புருசன் போட்ட மெட்டியா இருக்கும் கழுத்துல தாலி இல்லையே ... நான் கட்டின தாலியைவே குப்பையில போட்டிருப்பாங்க மெட்டியா வச்சிருப்பாங்க ம்ம் பெருமூச்சு விட்டான்
மாமா
சொல்லு நங்கை
"அவுக மாப்பிள்ளை விட்டுட்டு போயிட்டார் போல தகவல் சொல்ல அதிர்ந்து போனான்
"என்ன சொல்ற நங்கை ??
"ம்ம் பிள்ளை பிறந்து இ....றந்து போச்சு போல
"அய்யய்யோ
"ம்ம் அதுல எதோ இரண்டு பேருக்கும் சண்டையாம் விட்டுட்டு போயிட்டாராம் அக்கா தான் நேத்து சொல்லிச்சு பாவமா இருந்துச்சு, எல்லாத்தையும் மறக்கதான் ஆபிஸ் நிர்வாகத்தை கையில எடுத்தாங்க போல.. இப்போ அதிலும் பிரச்சனையாம் காசு கொடுத்தவன் சாவியை இங்க வந்து வாங்கிக்க சொல்லிட்டான் போல, லொங்கு லொங்குன்னு இங்க ஓடி வந்திருக்கு.. கடவுளுக்கு கருணையே இல்லை இல்ல மாமா ?? நங்கை உச்சி கொட்டினாள்
கடவுளே!! அவங்களுக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்குது நங்கை ..
பேசாம போய் அவக்க புருசன் கால்ல கையில விழுந்து சேர்த்து வச்சிடு மாமா
"சரியா வருமா நங்கை ??
"எட்டி நாலு மிதி போட போறேன் உன்ன , இதுதான் சாக்குன்னு உள்ளார போய் உன் லவ்வை காட்டி ஆளை தூக்குப் போ
"ப்ச் சும்மா லூசு போல உளறாத நங்கை ,
"நீ இப்படியே தள்ளி இருந்து வேடிக்கை பார்க்க தான் ஆவ போ ,நானே உனக்கு அனுமதி தர்றேன் வேற என்ன வேணும் ?
"எனக்கு யாரோட வைசுவும் வேண்டாம்.. உன்னையும் என்னால விட்டு கொடுக்க முடியாது மூடிட்டு போய் அடுப்பை பார் போ
"மாமா
"என்ன கோவப்படுத்தாத நங்கை போஓஓஓ என்றவன் கோவக்குரலில் நங்கை எழும்பி போய் விட
அதான் அவங்க முகத்துல களை இல்லாம இருக்கா ... எவ்வளவு நல்ல பெண், குழந்தை போன துக்கத்துல கிடந்த மனைவியை விட்டுட்டு போனவன் மனுசனா ?? அணைத்து ஆதரவு கொடுத்து அவளை தேற்ற வேண்டாம் ... பிள்ளை கொடுத்தா மட்டும் போதுமா ?எவன் அவன் கையில கிடைச்சான் நாலு குத்து முகத்திலேயே குத்திடுவேன், இந்த மாதிரி பொண்டாட்டி கிடைக்கிறது எல்லாம் அபூர்வம்டான்னு பல்லை தட்டணும் ச்சை .. நான் அவங்கள விட்டுட்டு வந்திருக்க கூடாதோ??
அப்பா
அப்பா
மாமா மாமா
ஹான் அப்பா என்ற மகனின் அழைப்பும், மாமா என்ற நங்கை அழைப்பும் தான் யார் என்பதை உச்சந்தலையில் அடித்து உரக்க சொல்ல ... தலையை உதறி கொண்ட அவன் முகத்தில் வந்து விழுந்தது குளித்து வி்ட்டு வெளியே வந்து முடியை உதறிய வைசுவின் தலையில் இருந்து வந்த நீர்...
ஸ்ஆஆஆஆ மீரா சீயக்காய் வாசம் எப்போதும் அவள் போடும் அந்த நறுமணம் அவனை அன்று போல இன்றும் கவர்ந்து காந்தம் போல இழுக்க தலையை திருப்பினான் ... மஞ்சள் நிற நைட்டியில் மேல் அழகை மூடி டவல் போட்டிருந்தவள் நங்கையோடு பேசி கொண்டே காப்பியை உறிஞ்சி கொண்டு நிற்க ....
மாமா
சொல்லு நங்கை என்று என்ன முயன்றும் காதலி பக்கம் போகும் தலையை திருப்ப முடியவில்லை பட்டிக்காட்டான் மிட்டாயை பார்ப்பது போல ஆவென்று வைசுவை பார்த்தபடி இருந்தான் .. அவளும் ஓரக்கண்ணால் அவனைதான் பார்த்தாள் ...
மாமா ஏதோ ஹோட்டல்ல அந்த மனுசன் இருக்கான் போல அக்கா தனியா போக பயப்புடுது
மூணு பேரும் போயிட்டு வந்திடுவோம் நங்கை ... நங்கையை கூடவே வச்சிக்கணும் சாமி , அப்போ தான் கண்ணும் புத்தியும் தடுமாறாது இவங்க கூட தனியா ஒரு நெமிசம் கூட இருக்க கூடாது என்று அவன் கணிப்பு
ஹான் நான்,வந்தா வேலையை எவன் பார்க்க .... நேத்து லீல் போட்டாச்சு மாமா இன்னைக்கு போட முடியாது நீயே கூட்டிட்டு போயிட்டு வா
ஏதே நானா
"என்ன ஓணா நம்ம வீட்டுக்கு நம்மள நம்பி வந்திருக்காங்க கூட்டிட்டு போ அவ்வளவு தான் அக்கா மாமா உங்கள கூட்டிட்டு போகும் ... காலையில பேட்ஜ் வேலை முடிச்சுட்டு மதியம் சாப்பிட வீட்டுக்கு வரும் அப்போ உங்களை கூட்டிட்டு போகும் நீங்க கிளம்பி இருங்க
அது வந்து
அய்யய்ய தனிதனியாக என்னால ரெண்டு பேருக்கும் கிளாஸ் எடுக்க முடியாது அக்கா .. அவரை கூட்டிட்டு போங்க அவ்வளதான்.... இப்ப ரெண்டு பேரும் சாப்பிட வாங்க என்று நங்கை வெடுக்கென்று பேசி முடித்து விட்டாள் ..
மதியம் ஒரு மணிக்கு வர்றேன் கூட்டிட்டு போக என்று போகும் போது ரித்விக் கூற...
ம்ம் ...
அக்கா மதியம் கொஞ்சம் மாமாவுக்கு ரெண்டு ஆம்லெட் போட்டு கொடுத்துடுங்க
ஏய் சும்மா இருடி என்று ரித்விகா நங்கை காலில் மிதிக்க
அட நம்ம அக்கா தான நமக்குள்ள என்ன இருக்கு அப்படிதான அக்கா ?
செஞ்சி கொடுத்துடுறேன் நங்கை ... போகும் இருவரையும் மறையும் வரை வைஷ்ணவி பார்த்தபடி நின்றாள் ... அவன் கழட்டி போட்ட சட்டையை கை நடுங்க எடுத்த வைஷ்ணவி அதை தன் முகத்தோடு புதைத்து கொண்டு
என்னால முடியல ரித்விக் எனக்கும் உங்க கூட வாழணும் பணம் பதவி அந்தஸ்து ஆஸ்தி அம்மா அப்பா எதுவும் வேண்டாம் , நீங்க மட்டும் போதும் இப்படி குட்டி வீட்டுல உங்க பின்னாடியே சுத்தி வரணும் உங்கள நான் மொத்தமா சொலைச்சுட்டேனா ரித்விக், இனி நீங்க எனக்கு இல்லையா உங்க கூட என்னால வாழ முடியாதா? என்று விம்மி வெடித்த இதயத்தோடு அவன் சட்டையைக் கட்டி கொண்டு கட்டிலில் படுத்தாள்
அருகே வந்தும் பசலை நோயிக்கு மருந்து கிட்டாது போனது ...அவன் ஒற்றை அணைப்பு தான் அவள் பசலை பிணிக்கு மருந்து அஃது கிட்டுமா??