நினைத்தாலே இனிக்கும் அழகியே-23

நினைத்தாலே இனிக்கும் அழகியே-23

அத்தியாயம்-23

  

அடுத்தநாள் வெண்பாவினை இரண்டு எஸ்டேட் தள்ளி ஒரு எஸ்டேட்டிற்கு ருத்ரன் அழைத்து சென்றிருந்தான்.

அது அவனுக்கு தெரிந்தவர் எஸ்டேட்தான். அக்கவுண்டன்ட் தேவையென சொல்லிருந்தார்..எதுக்கு வேற யாரையோ அங்க அனுப்பனும் வெண்பா பி.காம்தான முடிச்சிருக்கா அவக்கிட்ட கேட்டுப்பார்ப்போம் என்று அவளிடம் கேட்டதும்...சந்தோஷமாக சரியென்று தலையாட்டியவள் அவனோடு கிளம்பினாள்.

அங்கே சென்றதும் எஸ்டேட் ஓனர் வெண்பாவை பார்த்ததுவிட்டு இவங்க கே.என்னோட மனைவிதான ருத்ரா.

அவங்களுக்கு எப்படி நான் வேலைபோட்டு தரமுடியும்,அவருக்கு தெரிஞ்சா என் எஸ்டேட்டையே ஆட்டைய போட்றுவாரு,மன்னிச்சுடுங்க என்னால உங்க தங்கைக்கு வேலை தரமுடியாது,தயவு செய்து நீங்க கிளம்புங்க" என்று வெளியே தள்ளாத குறையாக அனுப்பிவிட்டார்.

வெண்பாவிற்கு கோபமும் ஆத்திரமுமாக வந்தது.எங்கப்போனாலும் கே.என் சுத்தி சுத்தி வர்றானே என்று ருத்ரனுக்கு ஆயாசமாக வந்தது.

வெண்பாவிற்கு இப்போ கிரீஷின் மீது கோபம் வந்துவிட்டது,வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஏதோ விரக்தியாக வாழ்க்கையை ஓட்டலாம் என்றால் அதுக்கும் வழிகிடைக்காமல் தடையாக வருது என்று நொந்தேபோனாள்.

வீட்டிற்கு இருவரும் வரும்போது வெண்பா தன் அண்ணனிடம் உனக்கு நான் பாராமாக இருக்கேனா என்று கேட்கவும்...அவளை திரும்பி முறைத்து பார்த்தவன்.

"அண்ணனுக்கு தங்கச்சி என்னைக்காவது பாரமாக இருப்பாங்களா நான் அப்படி நினைக்கலை.

அப்பா இருந்திருந்தா நீ இப்படி கேட்பியா இல்லைதான,அப்புறம் என்கிட்ட கேட்குற,நான் இப்போ அவர் ஸ்தானத்துல இருக்கேன் உனக்கு.அப்படியெல்லாம் உன்னை நான் நினைக்கலை"

இல்லை ஜிபியோட பேச்சை கேட்காமல் இருந்திருந்தா உனக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்காது தான.நான் செய்த முட்டாள்தனம் உன்னோட வாழ்க்கைய தொலைக்கவச்சிடுச்சி என் வருத்தப்பட்டவன்.

"எனக்கு என்னமோ டவுட்டு இருக்கு இந்த ஜிபிகிட்ட ஏதோ தப்பு இருக்குமோனு தோணுது. சிந்தியாகிட்ட மெல்ல அவனைப் பத்தி கேட்கணும், இப்போ அவ இருக்கான்ல வீடு, பிரண்டு வீடுன்னு சொன்னான்.அந்த பிரண்டை பத்தி ஏற்கனவே தப்பான விஷயங்களை நிறைய கேள்விபட்டிருக்கேன் அவன் பெயர் ரஞ்சன்,கஞ்சா,ட்ரக் அடிக்ட் ஏதோ பெரிய தப்புல மாட்டிக்கிட்டு அப்படியே எங்கயோ போயிட்டானு விசாரிச்சதுல சொன்னாங்க"

வெண்பா"என்ன அண்ணா சொல்ற உனக்குத் தெரியாம ஜிபிக்கு வேற பிரண்டா"

"ஆமாடா அவன் விஷயத்துல ஏதோ இருக்குடா அதனால்தான் கே.என் கிட்ட ரொம்ப மோதுறான்.கே.என் இவனை துவம்சம் பண்ண காத்திருக்கான்,இது தெரியாமல் நாம தலையிட்டு மாட்டிக்கிட்டோம்"

வெண்பா மனதிற்குள்" நீ கே.என்.விஷயத்துல தலையிடலைனாலும் கண்டிப்பா அவன் என்னை தூக்கிட்டுப்போயிருப்பான்,

என்ன அப்போ எங்களோட வாழ்க்கை காதல்ல முடிஞ்சிருக்கும்,இப்படி பழிவாங்கணு என்ன கடத்திருக்க மாட்டாரு,என்கூட வாழ்றதுக்காகவே கடத்திருப்பாரு.அது இப்போ தலைகீழா மாறிட்டுது என்று நினைத்து பெருமூச்சுவிட்டாள்.அவனோடு வாழ்ந்த அந்த தித்திப்பான இரண்டுமாத காலமும் திரும்ப கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

எவ்வளவு காதல் கண்ணுல தேக்கி வைத்துப் பார்த்துக் கொண்டான்.அதற்கு எதிர்மறையாக எப்படி அவனால் என்கிட்ட கடுமையாக நடக்கமுடிந்தது.

அதைத்தான் அவளால் தாங்கிக்க முடியவில்லை.

அப்படியே ஜீப்பின் ஓரத்தில் தலைசாய்த்து கிரீஷை நினைத்து உருகினாள்.

மலபாரில் தனியாக இருக்கும்போது அவன் வேட்டையாடிக்கொண்டு வந்ததை சமைக்க வெட்டும்போது கையில் தெரியாமல் கத்தி பட்டுவிட,அப்படித்தான் பார்த்துக்கொண்டான். இரண்டுநாள் அவனே சமைத்தான் அவனே ஊட்டிவிட்டான்..ஹப்பா என்ன ஒரு மயக்கத்தையும் கிறக்கத்தையும் அந்த ப்ரவுன் கண்ணுல பார்த்தாள்,

அதெல்லாம் பொய்யாக நடித்தது என்று அவனே சொன்னாலும் நம்பயிலாது.

முதல்நாள் தவிர்த்து மற்ற நாட்களில் அவனோடான அந்த கலவி. அதை அவன் ரசித்து ரசித்து அவளது கண்களில் விழுந்து எழுவான்.

முத்தங்கூட எப்படி கொடுக்க வேண்டும்,எங்கே கொடுக்கவேண்டும் என்று புது புத்தகமே போட்டுவிடுவான் அவ்வளவு நுண்ணியகலையாக அவளோடு கூடுவான்.

அவளிடம் நெருங்கி அவளது காதுமடல்களை தொடுவதாகட்டும்,நெற்றி முடியை ஒதுக்கிவிடுவதாகட்டும் என்று முற்றும் வித்தியாசமான கிரிஷை கண்டாள்.

அவளுக்கு இருட்டு பயம் என்பதால் எப்போதும் வீட்டில் முக்கியமான இடங்களில் விளக்கெரிந்துக்கொண்டே இருக்கும்.

மழைநேர இடிமுழக்கமும் மின்னலுக்கு பயந்து நடுங்குபவளை தன் நெஞ்சில்போட்டு அழகாக தட்டிக்கொடுக்கும் தாயாக மாறினானே...ஏன் என்னை விட்டு சென்றான்,ஏன் அவனது காதல் பொய்யாகிப்போனது?

கண்ளின் ஓரம் ஈரம் கசிந்து கன்னங்களில் இறங்கியது,அதை ருத்ரன் பார்த்து கலங்கினான்.

பருந்திடம் மாட்டிக்கொண்ட கோழிகுஞ்சாக வெடவெடத்து தவிக்கின்றாளே என்று வருந்தினான்.

வீட்டிற்கு வந்தும் அவளால் அவனது நியாபகங்களை தாங்கிக்க இயலாது அப்படியே கட்டிலில் கவிழ்ந்து படுத்தவளுக்கு கிரீஷின் நெஞ்சின் கதகதப்பு வேண்டும்போல இருந்தது

எதுவும் சாப்பிடாது அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள்.

பக்கத்து அறையில் தன் மனைவியின் அருகில் படுத்திருந்த ருத்ரன் அமைதியாக யோசித்துக்கொண்டிருக்க சிந்தியா அவனது தோளில் தலைவைத்து படுத்ததும், தன் மனதிற்கு இப்போது அமைதி தேவை என்பதால் மனைவியின் அருகாமையை நாடினான்.

மெல்ல மெல்ல அவளது கழுத்தில் தன் முகத்தை வைத்து தேய்க்க, எதற்கு அடிபோடுகின்றான் என்று தெரியாதா அவளுக்கு,மெல்ல மெல்ல அவனோடு ஒன்றினாள் ருத்ரனுக்கோ தந்தை இறந்து,அதன்பின் வந்த பிரச்சனைகளால் அவளிடமிருந்து ஒதுங்கியே இருந்தான் இப்போதுதான் கொஞ்சம் மனது வைத்து அவளுடன் நெருங்கினான்.

எப்பவுமே ருத்ரனுக்கு சிந்தியான்னா உயிர்தான் அதுக்காக தங்கை அம்மாவை விட்டுக்குடுக்க முடியாதே…

அவளோடு இணைந்து கூடி களைத்து படுத்திருந்தவன் மெல்ல ரஞ்சனுக்கும் ஜிபிக்கும் எப்படி நட்பு வந்தது ரஞ்சன் எங்கேயிருக்கான் என்று கேட்டான்.

"ரஞ்சனின் குடும்பம் இங்கதான் இருந்தாங்க,அவங்க அப்பா இங்க ஏதோ எஸ்டேட்ல சூப்பர்வைசராக இருந்தாங்க,ரஞ்சனுக்கு ஒரு அக்கா உண்டு,நான் சின்ன வயசுல இருக்கும்போது பேய்மழைபெய்து நிலச்சரிவுல அவங்க மொத்த குடும்பமும் மண்ணுக்குள்ள போயிட்டாங்களாம்,ரஞ்சன் ஹாஸ்டல்ல படிச்சிட்டிருந்ததுனால தப்பிச்சிட்டாங்கனு அண்ணன் சொன்னான்,அப்புறம் அவர் படிச்சு முடிச்சிட்டு. இங்கதான் எங்கயோ வேலை பார்த்ததாக சொன்னாங்க.

கொஞ்சநாள் ரஞ்சனை காணவில்லைனு அம்மாதான் அண்ணாகிட்ட கேட்டாங்க.

"ரஞ்சன் எங்கடாபோனான் ஆளையே காணலைனு"

 அண்ணன்தான்திடீரென வெளியூர் போயிட்டதா சொன்னான்,வேற எதுவும் எனக்குத் தெரியாது" என்றாள்.

"ஓஓ"என்று தலையாட்டியவன் அமைதியாகிவிட.

சிந்தியாதான் "எதுக்கு இப்போ ரஞ்சன் பத்தியெல்லாம் கேட்கறீங்க"

ஒண்ணுமில்ல கேட்டேன் என்று திரும்பி படுத்தவனின், முதுகில் குத்தியவள் வேலை முடிஞ்சுட்டு, தேவையும் முடிஞ்சுட்டு, இனி என்கிட்ட வாங்க என்று கோபத்தில் திரும்பி படுத்தவளின் இடையில் கைப்போட்டு தன்னோடு சேர்த்து இழுத்து படுத்துக்கொண்டான்.

நள்ளிரவில் ஏதோ உள்ளுணர்வு தோன்றவும் எப்போதும் போல கிரீஷ் வந்திருப்பானோ என்று ஜன்னல் வழியாக பார்த்தாள். சரியாக அவன் அங்கேதான் தன் ஜீப்பினை நிறுத்தி அதில் சாய்ந்துக்கொண்டு அவளையே பார்த்திருந்தான்.

மெல்ல எழுந்தவள் யாருமறியாது முன் கதவை திறந்துக்கொண்டு லைட்டை போட்டு கேட்டின் முன்பக்க சுவற்றில் சாய்ந்துக்கொண்டு, அவளும் அவனையே விழியெடுக்காது பார்த்துக்கொண்டிருத்தாள்.

"சட்டென்று வா" என்று தன் இரு கைகளையும் அவன் நீட்ட... அவள் செல்லாது தன் தலையை இடம்வலம் ஆட்டி வரமாட்டேன் என்றவள். உடனே உள்ளே ஓடிவந்து தன் கட்டிலில் விழுந்து ஓவென்று கத்தி சத்தமாக அழுதாள். பின் தன் வாயை பொத்திக்கொண்டு யாருக்கும் கேட்காதவறு அழுதாள்.

அவள் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்துகொண்டிருக்க,ஆனால் அவள் வெளியே எழுந்து செல்லும்பொழுதே ரத்னா கவனித்துவிட்டார்.ருத்ரனும் ஏதோ சத்தம் கேட்டு எழுந்து வெளியே எட்டிப்பார்த்தவன் தன் தங்கையை கண்டு ஜன்னல்வழியாக எட்டிப்பார்க்க அங்க கிரீஷ் நின்றிருந்தான்.

ருத்ரன் இப்போது உண்மையிலயே குழும்பிப்போனான்,பழிவாங்கன்னு சொன்னான்,இப்போ வெண்பாவை தேடித்தேடி வர்றான் உண்மையிலயே இரண்டுபேரும் காதலிச்சிருப்பாங்களோ என்று தலையைப் பிய்த்துக்கொண்டான்.

ஆமா எஸ்.பி ஆபிஸ்ல வைத்தே தைரியமா "என் மனைவியை அழைச்சிட்டு போகலாமான்னுதான்" கேட்டான்.

இவ்வளவு நடந்த பிறகும் வெண்பா அவனை வெறுக்கலையே...தள்ளிதான வைச்சிருக்கா என்று பலவித யோசனையிலிருந்தவன் முன்னிலையில் சிந்தியா சிரித்து"எங்கண்ணனை வேண்டாம்னு போனவதான,அவளுக்கு இப்படித்தான் வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்லி முடியறதுக்குள் ருத்ரன் அவளை அடித்திருந்தான்.யாரைப் பத்தி யாருக்கிட்ட சொல்ற பிச்சிருவேன் பிச்சி. அண்ணனோட புத்திதான தங்கைக்கும் இருக்கும். ச்ச்சீ என்றவன் தள்ளிப்படுத்துக் கொண்டான்.

அவன் அடிப்பான் என்று சிந்தியா எதிர்பார்க்கவில்லை, அப்படியே அழுதுகொண்டே அமைதியாக படுத்துவிட்டாள்.

வெண்பா காலையில் எழுந்தவள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு தன் அன்னையின் அருகில் சென்று சமையலுக்கு உதவி கொண்டிருந்தாள்.

அந்த நேரத்தில் அவளது தோழி அனு வந்தாள்"ரத்னா அத்தை"என்று அழைத்துக்கொண்டே உள்ளே வர குரலைக்கேட்டதும் வெண்பா வெளிவந்தாள்

அனு வெண்பாவின் கைகளை பிடித்துக்கொண்டு"சாரி வெண்பா,உண்மை தெரியாம உன்னை தப்பா நினைச்சுட்டு அம்மா இங்க என்னை வரவிடலை"

வெண்பா அமைதியாக"பரவாயில்லை அவங்க அவங்களுக்கு அவங்களோட பிரச்சனை இதுல நான் தப்பா நினைக்க என்னயிருக்கு"

அனு"ஊட்டியில் ஒரு ரப்பர் கம்பேனியில அக்கவுண்டன்ட் இரண்டுபேரு தேவையிருக்காம், நான் போறேன் அதான் நீ வர்றியானு கேட்கவந்தேன்"

"ஓஓஓ"

அனு"என்ன வரபிடிக்கலையா"

அப்படியில்லை அவ்வளவுதூரம் போகணுமானுதான் யோசனை சரி நான் வர்றேன்"என்று சம்மதித்தவள்.

அன்றே அனுவோடு சென்று அந்த வேலையில் சேர்ந்துவிட்டாள்.வீட்டில் இருந்தால் கிரீஷின் நியாபகங்கள், தன் வாழ்க்கை இதைப்பற்றியே சிந்தித்து சிந்தித்து பைத்தியம் பிடிக்காத குறையாகிவிடும். அதற்கு வேலைக்கு செல்வது எவ்வளவோ மேல் என்றுதான் சென்றாள்.

அவள் வேலைக்கு சேர்ந்த தகவல் மின்னலென கிரீஷிற்கு சென்றுவிட்டது.

பேக்ட்டரியில் இருந்தவனுக்கு இந்த தகவல் வரவும் உடனே கிளம்பி ஊட்டி செல்ல எத்தனிக்க, அதற்குள் பேக்ட்டரியில் எக்ஸ்போர்ட் ஆர்டருக்கான மீட்டிங்கில் இருக்கவேண்டிய சூழ்நிலை உடனே கிளம்பி சென்றுவிட்டான்.

போனிலயே யாரிடமோ பேசியவன் மனைவியை பிறகு பார்த்துக் கொள்ளலாமென்று விட்டான்..அந்தோ பரிதாபம் அவன் பார்க்கமுடியாமல் தவிக்கப்போவதை அறிந்திருக்க வாய்ப்பில்லையே.

அடுத்தநாளே வேலையில் சேரவேண்டியிருந்ததால் அனுவுடன் கூடவே பஸ்ஸில் சென்றாள்.

அங்கு சென்றவளுக்கு ஏமாற்றமாகியது...அந்த கம்பெனியின் ஓனர் அனுவிற்கு வேலை கொடுத்தவர்.வெண்பாவிடம் மந்திரி நாராயணன் மருமகள்,கே.என் மனைவியை என் கம்பெனியில வேலைக்கு எடுக்குறளவுக்கு நாங்க இல்லைம்மா.அவர் பயந்ததிலிருந்தே புரிந்தது,எப்படியும் நான் வேலைக்கு வர்றது தெரிஞ்சே மிரட்டிருப்பாங்க என்று வந்த கோபத்தில் அங்கிருந்து நடந்து பஸ்ஸ்டாப்பிற்கு வந்தவளின் அருகே ஜீப் ஒன்று நிற்கவும்,ஏறிட்டு பார்க்க"ஹாய் என்ன வெண்பா இங்க என்ன பண்ற"என்று அழகாக சிரித்துக்கொண்டே ஜிபி கேட்டான்.

தன் கோபத்தையும் பெருமூச்சையும் அடக்கியவள் அப்படியே லேசாக புன்னகைத்து சும்மா வந்தேன்,இப்போ வீட்டுக்குப் போகறதுக்காக்க நிற்கிறேன்"என்றவளிடம் "வாங்க நான் வீட்டிற்குத்தான போறேன் உங்களை வீட்ல விடுறேன்" என்று கேட்கவும் கிரீஷ் மேல இருந்த கோபத்தில்,இவன்கூட போன என்ன செய்வான் என்று மூளையை மழுங்கடித்து ஏறிக்கொண்டாள்.

அவளின் நிழல்கூட எங்கே செல்கின்றது என்று அறிந்துக்கொள்வான்,ஜிபியின் ஜீப்பிலேறியதா கிரீஷிற்கு தெரியாமலிருக்கும்.

கிரீஷ் இப்பொழுது கண்கள் இடுங்க வெண்பாவின் கழுத்தை நெறிக்கும் கோபத்திலிருந்தான்.

சாயங்காலம் அனு மட்டும் வீடு வர,ரத்னா வெண்பா எங்கே என்று கேட்டதும்தான் அனு "அவள் காலையிலயே திரும்பிட்டாளே" என்று நடந்ததை சொன்னாள்.

ஐயோ!ரத்னா பதறி என்ன சொல்ற அனு?வெண்பா இன்னும் வீடுவரலையே,இவ்வளவு நேரமாகிட்டே என்று ருத்ரனுக்கு அழை.த்து வெண்பாவை காணவில்லை என்றதும், பயந்து விசாரிக்க அவள் எங்கே சென்றாளென்றே தெரியாது.

ருத்ரன் ராஜேஷிடம் மெல்ல விசாரிக்க அவனுக்கும் ஒன்றுந்தெரியாது...அவன் நேரிடையாக கிரீஷிற்கு அழைத்து வெண்பாவை காணவில்லை என்று மட்டுந்தான் சொன்னான், அதை கேட்டதும்...ஒரு நிமிடம் அப்படியே அதிர்ந்து நின்றவன்...உடனே தன் துப்பாக்கியை எடுத்து வைத்துக்கொண்டு,தனது ரகசிய வேலைக்காரர்களுக்கு கட்டளையிட்டான் "இன்னும் பத்தே நிமிஷத்துல என் மனைவி எங்க இருக்கின்றாள் என்ற தகவல் வந்திருக்கணும்" என்றவன் போனை தன் பாக்கெட்டில் போட்டான்.

ஜீப்பை அதிவேகமாக ஓட்டிக்கொண்டு வெண்பாவின் வீட்டிற்கு முன்வந்து நின்றவன் ஹார்னை தொடர்ந்து அடிக்க…வெளியே வந்த ருத்ரனைப் பார்த்து உறுமினான் "உன் தங்கச்சிதான அவ எங்கபோறா வர்றானு பார்க்கமாட்டியா?இராத்திரி தேடுற...காலையில போனவளை" என்று கர்ஜித்தவனின் கோபமுகம் அவனையே ஒரு நிமிடம் நடுங்க வைத்தது.வண்டியில ஏறு என்றதும் சத்தமில்லாது ஏறி அவனருகில் அமர்ந்தான்.

அதற்குள்ளாக அவனுக்கு போனில் அழைப்பு வந்ததும் எடுத்துப்பேசியவன் சரி நீங்க அந்த இடத்தை சுற்றி வளைங்க என்று கட்டைளையிட்டவன்,தன் ஜீப்பினை அதிவேகமாக கிளப்பினான்.