யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா 1

Yugam

யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா 1

1 யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா?? 

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த வஜ்ரன் ஆர்த்தியை சிறை எடுத்து போய் அவளோடு காதலாக வாழ ஆரம்பிக்கிறான்,  புலவன் ஆர்த்தி கொண்ட நட்புக்காக,  அவள் மீதுள்ள காதலோடு தன் உயிரையும் தியாகம் செய்கிறான்...அவன் மறுபிறவி எடுத்து வந்து தன் காதலை அடைந்தானா?? 

பி.குறிப்பு 

(தைரியமா இந்த கதையை  படிக்கலாம்..ஆர்த்தி வஜ்ரனை மறந்துட்டு ,  மிலா புலவனை பிக்ஸ் பண்ணியே படிங்க அம்புட்டு தான் சொல்வேன் .. 

2024 ஆம் ஆண்டு இன்று 

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ என்ற அலறல் சப்தம் அந்த நடுநிசி இரவை கிழித்து கொண்டு கேட்டது .. 

சென்னையின் மிகப்பெரிய அடுக்குமாடி கண்ணாடி அரண்மனை ...வீட்டில் முதல் மாடியில் இருக்கும் அறையில் இருந்து வந்த பெண்ணின் சப்தம் அது ... 

மறுபடியும் , ஆ என்ற இளம் பெண்ணின் அலரும் சத்தம் தொடர்ந்து கேட்ட  அடுத்த நிமிடமே,  அந்த மாட மாளிகை முழுவதும் மின்விளக்குகள் எறியப்பட... 

அங்கும் இங்கும் ஆட்கள் அந்த அறையை நோக்கி ஓடி சென்றனர் ....  கதவை தட்டி பார்த்தார்கள்..   கதவு திறக்கப்பட வில்லை என்றதும், அடுத்த நொடி வெள்ளை முண்டா பனியனில் புலிநகம் மினுங்க மாமிச மலை போல நின்ற ஒருவன் கதவை ஓங்கி தள்ளி கதவு திறக்க ...

ஆஆஆஆ அம்மா அம்மா என்று  ஒரு பெண்  படுக்கையில் கண்ணை மூடிக்கொண்டு இன்னும் விடாமல்  பயந்து அலறிக் கொண்டிருந்தது.. 

அந்த வீட்டின் இளவரசி அவள் , செல்வ சீமாட்டி அவள் .. 

மிலானி மித்ரன்,  வயது 22 ... 

"மிலாம்மா மிலா" என்று அவள் சகோதரர்கள் இருவரும் அவளை உலுக்க ..

என்னடி பார்த்துட்டு நிற்கிற போய் தண்ணீ எடுத்துட்டு வா "என்று  தன் மனைவியை பார்த்தான் மூத்தவன் 

"நீ தூணுக்கு துணையா நிற்காம அந்த ஃபேனை போடு" என்று மனைவியை முறைத்தான் இளையவன் ...

பெண்கள் பயந்து கணவன் சொன்னதை செய்ய ஓட 

மூத்தவன் தண்ணீரை எடுத்து படுக்கையில் சுருண்டு கிடந்த அந்த பெண்ணின் முகத்தில் நீரை தெளிக்க ...

ஆஆஆஆ வியர்த்து விறுவிறுக்க  உடல் நடுங்க  எழும்பி அமர்ந்தாள்  மிலானி மித்ரன்..  

முகம் நிறைய முத்து முத்து வியர்வையும் நீரும் கழந்தோடியது ...

வெளுத்த பால் நிறம் , கருமையான கயல்விழிகள்,  தேன் வடியும் இதழ்கள்  , காவியம் பேசும் கண்கள் சிவந்து பயத்தை காட்டி கொடுக்கும்  காது மடல்கள் என்று செல்வ செழிப்பில் மினுங்கும் அழகிதான் இந்த மிலானி,  கழுத்தில் குட்டி வைர பெண்டென்ட் செயின் காதில் ,  வைர தோடு, கையில் வைர வளையல் என தங்கம் கூட இரண்டாம் பட்சம் போன செல்வ குடும்பத்தின் சீம்ந்த  புத்திரி... மலங்க மலங்க தன்னை சுற்றி நின்ற குடும்பத்தை பார்த்தாள்... இரவு தூங்கும் போது ஏதோ புத்தகத்தை புரட்டியது நியாபகம் அப்படியே அதுவே கனவில் வந்து விட்டதோ... 

மிலாம்மா என்னடா ஆச்சு ...என்று மூத்தவன் எழில்மித்ரன் அவளை தன் தோளில் சாய்க்க  ..

கனவு எதுவும் கண்டியா மிலாம்மா?  என்று இளையவன் அனல் மித்ரன் அவள் காலை சூடு பரக்க தேய்க்க .. இன்னும் மலங்க முழித்தாள் மிலா..

"கனவாடா?

ம்ம் 

என்ன கனவும்மா

"தெரியலங்க அண்ணா,   ஏதோ குதிரை  அது இதுன்னு எதுவும் மனுசுல இல்ல அண்ணா "என்று சப்தம் அதிராது பேசிய தன் தங்கையை அண்ணன், தம்பி இருவரும் பெருமூச்சு விட்டு பார்த்தனர்  ... 

தாய் தகப்பன் இல்லை என்றாலும் அண்ணன் இருவரின் இளவரசி அவள் ...  

அன்பை கொட்டி கொட்டி கொடுக்கும் குடும்பம் உண்டு,  ஆனாலும் புழு கூட்டில் சுருங்குவது போல தாய் தகப்பன் இறப்புக்கு பின்  தங்கை சுருண்டு விட்டாள்.. எழிலும் அனலும் அவளுக்கு தனிமை அண்டாது பார்த்து கொள்ளவே திருமணம் செய்தனர்... ஆனால் என்ன பயன்? ,  வந்த ரெண்டும் எதுக்கு இங்க இருக்கு என்றே தெரியவில்லை...  மிலாவுக்கு அண்ணன் இருவரிடையே இடையே 15 வயது வித்யாசம்...  தன் மகளை போல பார்த்து கொள்ள நினைத்தாலும் மிலானி எல்லை கோட்டை போட்டு ஒடுங்கி விட்டாள் ... 

ஒன்னும் இல்லையே மிலாம்மா என்று எழில் அவள் கையை அழுத்த 

"இல்லைங்க அண்ணா "

"ம்ம் சரி நீ படுத்துக்கடா நாங்க ரெண்டு பேரும் இங்கேயே இருக்கோம் , பயம் இல்லாம தூங்கு என்று எழில் அவளுக்கு ஒரு புறம் அமர...  அனல் மறுபுறம் அமர..  மிலா கண்ட கனவு என்ன என்றே புரியாது படுக்கையில் சுருண்டு படுத்தாள்...   

"அனல் ரூம்ல ஏதாவது இருக்கான்னு பாரு  , எதை கண்டு பயந்தாளோ தெரியல "

"ம்ம்  என்ற அனல் மேஜை மீது திறந்து கிடந்த புத்தகம் ஒன்றை எடுத்து பார்த்தான் 

உகம் கடந்த அதிசயனே  என்ற புத்தகம் முத்திரை மோதிர படத்தின் முன் பக்கத்தோடு இருந்தது... 

இதுதான் இருக்கு எழில்  

ஓஓஓ , கண்ட புத்தகமும் படிச்சிட்டு பயந்து அலற வேண்டியது என்றதும் அனல் அதை தூக்கி எறிய, மேலே பரண் மீது போய்  கடந்த ஜென்மம் விழுந்தது ... 

சின்ன பொண்ணு நேரம் போகாம படிச்சிருப்பா எதுவும் பேய் கதையா இருக்கும் , பயந்திருப்பா என்று தூங்கும் மிலானியை பார்த்து  கொண்டே எழும்பிய  எழில் எதிரே கிடந்த தன் தங்கை போட்டோ சரிந்து கிடக்க அதை,  சரியாக தூக்கி மாட்ட , அதில் அவள் முழுபெயர் அழகாக சிரித்தது 

ஆர்த்தி என்ற மிலானி மித்ரன்!!!  

மித்ர குடும்பத்தின் இளைய வாரிசு அவள் !! 

உடல் மாறி,  குணம் மாறி , குடும்பம் மாறி , உருவம் மாறி , இதோ கலியுக ராணியாக பிறந்திருக்கிறாள் ... கடந்த காலம் கனவாக ஓடி முடிந்து இதோ,  புதிய கலியுக காலம் தொடங்கி விட்டது ..  

இரவை கிழித்து,  விடிவெள்ளியை சூரியன் விழுங்கி அமைதியை , வாகன மனித அரவம் ஆள காலை செங்கதிரோன் மெல்ல தலை காட்ட மிலானி தன் மெல்லிய இடையை நெளிய்து எழும்ப அவள் இரு புறமும் எழிலும் அனலும் படுக்கையில் தலை வைத்து தூங்கி கொண்டிருந்தனர்...  இதழ் பிரித்து மெல்லிய புன்னகை ஒன்றை கொடுத்தாள்..

விவரம் தெரியாத பத்து வயதிலேயே  பிணமாக மாலை இட்டு வைத்திருந்த தாய் தந்தை கண்டு உடைந்து போனாள்...  அவளை தன் கையில் பிடித்து கொண்ட அண்ணன் இருவரும் அவள் கைம்மாறு செய்ய முடியாத சொந்தம் ஆனார்கள்... 

அப்போது எழில் அனல் விடலை ஆண்மகன்கள்... தங்கையை விடாது இருவரும் தூக்கி வைத்து கொண்டு 

"எங்க மிலாம்மாவை எங்களுக்கு வளர்க்க தெரியும் என்று தூக்கி கொண்டு வளர்க்க முடியாது தடுமாறிய வேளை...  இது சரிபட்டு வராது என திருமணம் செய்து பொறுப்பை மனைவிகள் கையில் கொடுக்க பார்க்க ... 

அதுக்குள் மனைவிகள் ஆளுக்கு ஒன்றை பெத்து வைக்க மிலானி பக்குவப்பட்ட பெண்ணாக ..

"எனக்கு என்ன பயம் அண்ணன் நீங்க எல்லாரும் இருக்கீங்க,  என்ன நான் பார்த்துக்கிறேன் என்ற இளமை பருவத்து தங்கையை பார்க்க முடியாது எழிலும் அனலும் தலையை குனிந்தனர் ... ஆசைதான் அவளுக்காக மட்டும் ஒரு அன்பு அது வேண்டும் என ஆனால் உதிரி அன்புதான் இன்றுவரை கிடைக்கிறது .... தாய் இல்லாத பிள்ளையை தவிக்க விட்டுட்டான்க என்ற பேர் வந்து விட கூடாது என்றே அணலும் எழிலும் அவளை செல்லமாக வளர்க்க நினைக்கிறார்கள்... 

இன்று வரை அவளுக்கு ஒரு குறையும் வர விட்டது இல்லை அவர்களை பொறுத்தவரை...  அவளுக்கு என்ன வேணும் , தெரியாது என்ன பிடிக்கும் தெரியாது , மகிழ்ச்சியாக இருக்காளா தெரியாது ..தெரிந்து கொள்ள நினைத்ததும் இல்லை ... அன்பு தேடலில் அவள் ... 

மெல்ல அவர்கள் தூக்கம் கலையாது எழும்பிய மிலா தன் கடமைகளை முடித்து விட்டு ,  சாந்தமே உருவாக காலேஜ் கிளம்பி இறங்கி வந்தாள் ... 

 பச்சை நிற சுடிதார் சில்வர் பூப்போட்ட ஷால் ... பிரபல கல்லூரி ஒன்றில் பேஷன் டினைசினிங் மாணவி ... அவர்கள்  கார்மெண்ட் பிசினஸூக்கு ஏற்ற விதமாக எழில் அவளை இந்த படிப்பில் சேர சொன்னான், மறுக்க முடியாது என்பதை விட வன் பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது இந்த வீட்டில் எனவே , அவளும்  சேர்ந்து விட்டாள்... 

பகட்டு இல்லாத உருவம், அதிர்வு இல்லாத நடை , சாந்தமான அழகு , என அவளை பார்க்க பார்க்க தெவிட்டாது.. சாப்பிடும் மேஜையில் எழில் சாப்பிட்டு கொண்டிருக்க அவன் மனைவி மாதுரி தோசையை சுட்டு அவன் தட்டில் அடுக்கி கொண்டிருந்தாள் அவன் மகன் ஸகூலுக்கு கிளம்பி கொண்டு நின்றான் 

ஹாய் அத்தை ...என்று  ஐந்து வயது மதுரன் கையை காட்ட சிரிப்பை வெளியிட்டாள் மிலானி... 

" வந்துட்டியா மிலாம்மா ,  கார் ஓட்டிட்டு போயிடுவியா இல்லை அண்ணன் வரவாம்மா" என்று எழில் சாப்பிட்ட சாப்பட்டை இடையில் விட்டுவிட்டு  தங்கையிடம் ஓடி வர ..

"நான் கொண்டு போய் விடுறேன் மிலாம்மா" என்று சட்டையை மாட்டியும் மாட்டாது அனல் படியில் இறங்கி வர...  அவன் மனைவி சைந்தவி சிரித்த மேனியாக பின்னால் வந்தாலும் பல்லை கடித்து மிலாவை முகத்தை கோணி பார்த்தாள்....  

இந்த வீட்டில் பெண்கள் அதிர கூட பேச கூடாது,  அது எழுதப்படாத சட்டம் அத்தனை செளக்கியமும், செளகரியமும்  உண்டு... எத்தனை ஆடம்பரமாக வேண்டுமானாலும் இருக்கலாம் , ஆனால்,  ஆண்கள் முன் மூச்சு விட கூடாது..  

அமைதியாக அண்ணன் இருவரையும் மாறி மாறி  பார்த்த மிலா 

"வேணாம் அண்ணன் போயிடுவேன்..

"சரிம்மா பார்த்து போ என்றதும் தலையாட்டி மிலா வெளியேற... அவள் முன் விதவிதமாக கார்கள் நின்றது ... ஏக்கமாக கேட்டுக்கு வெளியே பார்த்தாள் கலகலத்து  கொண்டு நிற்கும் கல்லூரி பெண்கள் , பஸ்ஸில் தொங்கி கொண்டு போகும் மாணவர்கள் அரட்டை அடிக்கும் அவள் வயது பிள்ளைகள் பெருமூச்சு வந்தது .... 

"மேடம் எந்த கார் எடுத்துட்டு போறீங்க..

"எனிதிங்க் "என்று  சாவியை வாங்கி கொண்ட மிலா காரில் ஏறி அமர ... சென்னை சாலையில் ஜாக்வார் மிதமான வேகத்தில் கூட்டத்தோடு  கூட்டமாக கல‌ந்தது..

இரவில் தூங்காத களைப்பு,  தலைவலி அனைத்தும் சேர்ந்து காரை ஓட்டி கொண்டு வந்த மிலா .. கவனம் இல்லாது காரை கொண்டு போய் பாலத்தில் மோத ,  தூக்கி வீசப்பட்டது கார் ... அத்தோடு அவளும் ரத்தம் வடிய கிடந்தாள்... கண்கள் திறக்க மறுக்க ஆனால் உணர்வுகள் மட்டும் தெரிந்தது.. 

ல்வைங் என்ற சைரன் சத்தமும் ஆம்புலன்ஸ் சத்தமும் அந்த இடத்தில் கேட்க ...

"எப்பா பெரிய இடத்து இடர்வாடு போலீஸ் வரட்டும்', மேதாவி ஒருவன் குரல்  

"அச்சோ ரத்தம் நிறைய போகுது சாமிகளா யாராவது தூக்கிட்டு வாங்க பக்கத்தில தான் ஆஸ்பத்திரி இருக்கு "என கிழவி ஒன்றின் பரிதவிப்பு ...

"தம்பி வேண்டாத வேலை கை வைக்காத என்று மேதாவி அலர்ட் பண்ண..

 கார் கண்ணாடி உடைபடும் சத்தம் கேட்டது,  அத்தோடு  காரோடு நசுங்கி கிடந்த அவளை யாரோ பூவாக  இழுத்து வெளியே தூக்கி,  தன் 

முரட்டு கைகளால்  அவளை இடையோடு தூக்கி கொண்டு அந்த சாலையில் ஓடியது ...   அவன் வியர்வை சொட்டு சொட்டாக அவள் குருதியோடு முகத்தில் பட்டு தெறிக்க அவள் கைகள் அவன் காலரை பிடித்து விட்டுட்டு போகாதே என்பது போல அவனை தன்னோடு இழுத்து கொள்ள ..  

மருத்து வாடை மூக்கை துளைக்க,  மருத்துவமனை போல..மிலா கண்ணை திறந்து  அவன் யார் என பார்க்க நினைக்க ... இரத்த இழப்பு தெளிவாக அவளை பார்க்க விடவில்லை...  

எமர்ஜென்சி !! என்று  ஓடிக்கொண்டே கூறியது அந்த எஃகு குரல் .. 

எங்கோ இநத மங்கல் உருவம் பார்த்திருக்கிறனே..யார் இவன் ?என்று வலித்த மூளை நினைவுகளில் அவனை தேடியது ... அவளை  கிடத்திட அங்கே ஊசி போடுவதும் அவளுக்கு ஆக்ஸிஜன் கொடுக்க என துரித செயல்பாடு நடக்க .. 

"சார் ரத்தம் வேணும் .. ஏ பாஸிட்டிவ்..என்று நர்ஸ் குரலுக்கும் அதே எஃகு குரலில்  பதிலும்  வந்தது 

"என்னோடது அதுதான் எடுத்துக்கோங்க "என்ற குரல் ... எல்லாம் மந்த நிலையில் மிலா காதில் கேட்டு கொண்டே இருந்தது ...  பயம் இல்லை அந்த குரல் கேட்டு .. நான் சாக மாட்டேன் அவனை பார்க்கணும் ..அவன் பக்கத்துல இருந்தா என்ன பார்த்தப்பான் என்ற நம்பிக்கை அவன் அருகாமையில் விடாது அவன் கையை பிடித்தாள்.. 

"ஓகே சார் வந்து படுங்க ரத்தம் எடுக்கிறோம் என்றதும் அவள் அவனை  பிடித்திருந்த கையை விலக்கி விட்டு,  ஆறடி உருவம் அவளை  கடக்க தெளிவில்லாத ஒரு ஆண் முகம் கண்டாள்.... 

ம்மா வலியோடு அவள்  முனக...  

பளார் என அறை விழும் சப்தம் ... அறையில் கேட்டது ... 

"எங்க வீட்டு வேலைக்கார நாய் நீ,  உன் ரத்தம் கொடுத்து என் தங்கச்சி உயிர் பிழைக்கணுமா என்றான் எழில் மித்ரன்

"அப்படி சொல்லு எங்க வீட்டு  டிரைவர் நீ,  என் தங்கச்சியை தொட்டு தூக்குவியா "என்று பளார் என அடுத்த அடி அடித்தான் அனல் மித்ரன் .... மிலா தட்டுதடுமாறி  கண்களை கடினப்பட்டு திறக்க ....

கன்னத்தை தடவி கொண்டு பல்லை கடித்து தன் கோவம் காட்டாது நிற்க கனபாடு பட்டு  கொண்டு நின்றான் அவன் ...

அவன் புலவன் வேந்தன் !!  வயது 29 .. 

நல்ல உயரம் மாநிறம்..  எப்போதும் அவனோடு  ஒட்டியே இருக்கும் தாடி .. இவன் பேசுவானா பேசத் தெரியுமா என்று அவன் இன்று பேசிய ஒன்று இரண்டு வார்த்தைகளில் தான் மிலானிக்கே அவன் ஊமை இல்லை என்பது தெரிந்தது ..

5 வருடமாக இங்கே டிரைவராக வேலை செய்கிறான்..  ஒரு நாளும் யாரிடமும் பேசியது போல் இருக்காது ... வேலை விட்டால் அவர்கள் வீட்டிற்கு பின்னால் டிரைவர்களுக்காக கொடுக்கப்பட்ட அறையில் போய்  இருப்பான் காரில் அவனோடு போக நேர்ந்தாலும்,  கடிவாளம் கட்டிய குதிரை போல நேராக ரோட்டை மட்டும்தான் பார்த்துக் கொண்டே போவான்..  அதிகமாக ம், ம்ஹூம் என்ற ரெண்டே சொல்லில் அத்தனை பேச்சும் முடிந்து போகும்..  .. 

"என்னடா பாத்துக்கிட்டு நிக்கிற , இன்னொரு தடவை உன் தாராதாரம் எதுன்னு  தெரியாம இந்த மாதிரி நடந்துக்கிட்ட நடக்கிறதே வேற ...  எங்க வீட்டு மகாராணி அவ , உன் மூச்சு காற்று கூட அவ மேல பட கூடாது புரியுதா ? புலவன்  எழில் கத்துவதை காதில் கேட்ட மாதிரி இல்லை , தன் சட்டையில்அணணன் தம்பி பிடித்து உருட்டியதில்  கசங்கிய சுருக்கத்தை எடுத்து கொண்டு வாசல் நோக்கி திரும்பி நடந்தான் ..  அவள் பார்வை போகும் அவனை விடாது துரத்தியது...இத்தனை நேரம் இருந்த தைரியம் இப்போது அவனோடு போனது போலவே தோன்றி சோர்ந்து போனாள்... 

உனக்கு ஒன்னும் இல்லையே மிலா , எழிலும் அனலும் அவளிடம் விசாரித்துக் கொண்டிருக்க படுக்கையில் கிடந்த மிலானி கண்ணில் புலவன் முதுகு மட்டும்தான் தெரிந்தது  ... 

மிலானி சென்னையின் நம்பர் ஒன் பணக்காரர் மித்ரனின்  மகள்   , 

அந்த வீட்டில்  கடைநில வேலைக்காரன்  புலவன், 

புது ஒருத்தியாக அவள்

புது ஒருவனாக அவன் 

சமத்துவம் இல்லாத தொடக்கம்,  மறுபடியும் ஆரம்பம் ஆனது ..... 

யுகங்கள்  தாண்டி  இம்முறையேனும் புலவனுக்கு காதலிக்க வாய்ப்பு கிடைக்குமா?? 

கிடைத்தாலும் வாழ்வது கடினம் !!