யுகம்4

Yugam4

யுகம்4

4 யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா?? 

மிலானி , இரவு பகல் என காலங்கள் பாராது முழு நேரமும் ஜன்னல் அருகே நிலையாக நின்றாள்.. 

தான் பிறந்ததே இவனுக்காகத்தானோ? இவரை பார்ப்பதற்காகவே இந்த ஜென்மமோ?? பிறவி பயன் அடைந்து விட்டேன் என்று உடலும் , உள்ளமும் சொல்கிறதோ முழு நேரமும் அவனை கண் தேடியது மனம் நாடியது..அவள் அவளாக  இல்லை..இதயம் புலவன் புலவன் என துடித்தது....   அவனை எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டினான்... 

ஜன்னல் அருகேயே நின்று ஜன்னல் கம்பிகள் கூட அழுதுவிட்டது. காலையிலேயே புலவன் எந்த நிற சட்டை அணிந்து இருக்கிறான் என்று பார்த்துவிட்டு அதே நிற ஆடையில் தயாராகினாள்

எப்போதும் அவளுக்குள் தாம் தூம் துள்ளல் இருக்கவே இருக்காது அமைதியாக தன் மனதை மறைத்துக் கொண்டு அண்ணன்மார்களுக்காக சிரித்து அபூர்வ செந்தாமரை தான் அவள்....  ஆனால் , இந்த சிறிது நாட்களாக உண்மையாகவே மனமகிழ்ந்து காணப்படுகிறாள்

சிரிக்கிறாள் நாணுகிறாள் .. வெட்கம்,  அச்சம் மடம் அத்தனையும் வந்து அவளை பாடாய்ப்படுத்தியது...  காதல் வந்தால் தூக்கம் போய் விடுமே..  தூக்கம் இல்லாது கண்கள் வலித்தாலும் ஒரு தடவை புலவன் முகம் பார்த்து விட்டால் போதும் , அத்தனை உற்சாகம் வந்து அவளை குடிகொண்டு விடும்...

இன்னைக்கு,  என்ன காரணம் சொல்லி கந்தப்பன் அண்ணன வெளிய அனுப்புறது , ஏதாவது காலையில் ஒரு காரணம் சொல்லி கந்தப்பனை அனுப்பிவிட்டு புலவனை தன் காருக்கு டிரைவராக மாற்றிவிட்டு அந்த குறுகிய தொலைவை அவனைப் பார்த்துக் கொண்டே என்பதைவிட, பார்வையில் விழுங்கிக் கொண்டே பிரயாணத்தை ரசிப்பாள் 

'என்ன பொய் சொல்லலாம்,  நேத்து பிரெண்டு வீட்டில் போயி என்னோட புக்கை வாங்கிட்டு வாங்கன்னு அனுப்பி விட்டாச்சு இன்னைக்கு எங்க அனுப்பி விடலாம் நகத்தைக் கடித்துக் கொண்டே படியில் ஏறி வர இறங்கி வர ..

அனல் கார் சாவியை கையில் வைத்துக்கொண்டு தலையில் அடித்துக் கொண்டு நின்றான். 

"தீடீர்னு வேலை வேண்டாம்னு சாவிய மேஜை மேல வச்சிட்டு போயிட்டான் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்டா அதுக்கும் பதில் இல்ல ... இந்த மாதிரி ஆட்களை எல்லாம் வேலைக்கு வைக்காதன்னு சொன்னா கேக்குறியா எழில்"" என்று எழிலிடம் அனல் குதிக்க ..

"ப்ச் டேய் இவங்கள மாதிரி நம்பிக்கை உள்ளவங்க வீட்டுக்குள்ள இருக்கறதுனால தான்,  நாம ஒழுங்கா தொழில் பண்ண முடியுது ... அவன் எதுல எப்படி இருந்தாலும் நம்பிக்கைக்கு பாத்திரமானவன்டா..  அதனாலதான் இந்த 5 வருஷமா நம்ம வீட்ல வேலை பாத்துட்டு இருக்கான் ..

"சரி நீ அவனுக்கு கிரீடமே வை , ஆனா இப்ப வேலை வேண்டாம்னு  சொல்லிட்டு போறானே , இனிமே எவன நம்பி நம்ம வீட்டுக்குள்ள விட முடியும்..

"ப்ச் ,  அதான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் அனல் ...  எதுக்கு திடீர்னு வேலை வேண்டான்னு சொல்லிட்டு போறான்..  சம்பளம் கூட்டி கொடுக்கிறேன்னு சொன்னாலும் அதுக்கும் தலையாட்ட மாட்டேங்குறான் என்ன பிரச்சனையா இருக்கும் 

"என்கிட்ட கேட்டா எனக்கு எப்படி தெரியும்..

"அண்ணன் இருவரும்  யாரை பேசுகிறார்கள் என்று இறங்கி வந்த மிலானிக்கு புரியவில்லை என்றாலும் டிரைவர் என்றதும் திக்கென இருந்தது 

ஒருவேளை புலவனோ? என்று மிலா  யோசிக்க ஆம் புலவன் தான் என்று கீழே பேசிக்கொண்டிருந்தவர்கள் பேசியது கேட்டு விடை அறிய 

காலடியில்  பூமி மட்டுமா நழுவியது,  காதலும் அல்லவா நழுவியது ... உடல் பதறி , விறு விறுவென்று வந்தது

"ஏன் ஏன் ஏன்? போகணும் என்னாச்சு குழப்பம் பயம் சூழ்ந்து கொண்டது .. 

புலவன் ஏன் திடீரென்று வேலையை விட்டு போகிறார் சில நாட்கள் என்றாலும் கற்பாறையின் மீது செதுக்கப்பட்ட சித்திரம் போல அவளுடைய காதலும் .. அவர்கள் இருவருக்கும் இடையிலான வாழ்க்கையும் எதிர்காலமும் குறித்து வைத்து விட்டாளே ...  படுக்கையில் கூடல்  மட்டுமா யோசித்தாள்,  எதிர்காலம் முழுதையும் அல்லவா யோசித்தாள் ..

அவனும்  நானும் மட்டும் போதும் ... நான் நானா அவர்கிட்ட இருக்கணும் , அவர் அவரா என்னிடம் இருக்கணும் அப்படி ஒரு காதல்..  பேசவே செய்யாத அவர் என்கிட்ட பேசணும் , பேசவே செய்யாத நான் அவர்கிட்ட மட்டும் பேசணும்...  அப்படி ஒரு அன்னோன்யமான காதலை ஒவ்வொரு நொடியும் யோசித்தவளுக்கு தன்  காதலை நழுவ விட்டு விடுவோமோ என்ற பயம் ..

"வாம்மா மிலா அந்த புலவன் பையன் வேலையை விட்டு போயிட்டான் கந்தப்பன் வேற ஏதோ தங்கச்சிக்கு சீமந்தம்னு போய்ட்டான்..  உன்னை நானே கொண்டு போய் விடுறேன்"  என்று எழில் வர ...இன்னும் புலவன் கேட் தாண்ட வில்லை என அறிந்தாள்... எப்படியாவது அவனை பார்த்து பேசி நிறுத்தி விட மனம் துணிய 

"அது  இல்ல அண்ணா எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை...  நான் காலேஜுக்கு  இன்னைக்கு போகல ..

"ஏன் என்ன ஆச்சு ??

"தெரியல அண்ணா நைட் கண் முழிச்சு படிச்சேன் அதுல தலை வலி ..

"ஓஓ , 

"ஏண்டி ரெண்டு பேரும் தின்னுட்டு தின்னுட்டு தூங்க தானே செய்றீங்க என் தங்கச்சிக்கு என்ன ஏது . உடம்புக்கு என்ன பண்ணுதுன்னு பார்க்க மாட்டீங்களா?? என்று அனல் தன் மனைவியை முறைக்க

"ம்க்கும் வந்துட்டான் குறை பேசுறதுக்கு...  நேத்து முழுக்க எனக்கு வயித்து வலி , என்னவோ இவன் குப்புற கிடந்து எனக்கு சேவை செஞ்ச மாதிரி பேச்ச பாத்தீங்களா அக்கா , 

"சும்மா இருடி 

'அவர் தங்கச்சிக்கு ஒன்னுன்ன உடனே பதறுது நமக்கு இங்கு உயிரே போனாலும் தவிச்ச வாய்க்கு தண்ணி எடுத்து தர மாட்டார்.. நாம செத்து நடு வீட்டுல கிடந்தா கூட ஏய் இந்தாட்டி எழும்பி எனக்கு சட்டையை அயர்ன் பண்ணி தான்னு கேட்கக்கூடிய கோஷ்டிதான் இந்த அண்ணன் தம்பி கோஷ்டி மூஞ்ச பாருங்க.... 

"சத்தம் போடாதடி 

"நல்ல குடும்பம் நல்ல பசங்க உங்களை நல்ல பாத்துப்பாங்கன்னு சொன்னத நம்பி தெரியாத்தனமா இவனுக்கு கொண்டு வந்து கழுத்தை நீட்டிட்டேன்...  இப்போ மெல்லவும் முடியல முழுங்கவும் முடியல "என்று சைந்தவி முணுமுணுக்க மாதுரிக்கும் அதே நிலைமைதான்..  என்ன வெளியே சொல்லவில்லை ..இவள் புருஷனாவது ஒரு நேரம் அமைதியாக போய்விடுவான்...  அவள் புருஷன் வாயைத் திறந்து பேசினாலே டைவர்ஸ் பண்ணிவிட்டு தான் மற்ற வேலை பார்ப்பான எனவே அமைதியாக நடப்பதை பார்க்க..

"அய்யோ !! அண்ணிய  ஒன்னும் சொல்லாதீங்க நான் சொன்னாதானே அவங்களுக்கு தெரியும்...  நேத்து நைட்டு தான் லைட்டா வலிச்ச மாதிரி இருந்தது , காலைல காலேஜுக்கு போகலாம்னு தான் கிளம்பி வந்தேன் .... ஆனா இன்னும் வலி கேட்கல அண்ணா ... "

"ப்ச் என்ன பொண்ணு நீ .. சரி  நாளைக்கு காலேஜ் போ

"சரி அண்ணா....  நீங்க உங்க வேலைய போய் பாருங்க"

"ம்ம் , சைந்து  சும்மா இருக்காம  என் தங்கச்சிக்கு என்ன வேணும் ஏது வேணும்னு அடிக்கடி போய் ரூம்ல பாத்துக்கோங்க...

"ஆமா அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை பால் கலக்கி பாட்டுல்ல வெச்சி கொடுத்துடுகிறோம் என்று சைந்தவி முணுமுணுக்க

"என்னடி ஏதோ சொன்ன மாதிரி இருந்தது என்ற அனலில் குரலில்

"ஒன்னும் இல்லங்க ஒழுங்கா பாத்துக்கிறோம்னு சொன்னோம்...  நீங்க போயிட்டு வாங்க என பவ்யமாக பதுங்கிக் கொண்டாள் 

"அண்ணன்மார் வெளியே போகவும் மிலா விறுவிறுவென்று தன் அறைக்கு போய் கதவை பூட்டியவள் !! ஜன்னல் வழியாக புலவன் அறையைப் பார்க்க அவன் பெட்டி படுக்கைகளை தூக்கி வெளியே வைத்துக் கொண்டு இருந்தான்..

இதற்கு மேல் யோசிக்க சிந்திக்க , அவளுக்கு எதுவும் இல்லை..

புலவனோடு பேசியே ஆக வேண்டும் அவனை நிறுத்தி ஆக வேண்டும் .. அவன் இந்த வீட்டை விட்டுப் போனால் ,  அண்ணன்மார் வளர்க்கும் இந்த தங்க குருவியால் அவன் திருமுகத்தை பார்க்கக்கூட இனிமேல் முடியாது என்ற உண்மை சுட..

இந்த வீட்டில் இருக்கும் வரை தான் தன்  காதல் வளரும்,  இந்த வீட்டை அவன் தாண்டினால் ஒருதலைக்காதல் கூட ஒன்றுமில்லாமல் கருகிப் போகும் என்று அறிந்தவள் ... 

சைந்தவியும் மாதுரியும் ஹாலில் அமர்ந்து புருஷன்மார்களை வழக்கும் போல குறை சொல்லிக் கொண்டிருக்க ... சத்தம் இல்லாது தன் கொலுசை கழற்றி தன் அறையில் வைத்தவள் மெதுவாக அடி எடுத்து பின்பக்கம் வழியாக டிரைவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அறை நோக்கி ஓடினாள்..

இந்த நேரத்தில் வேறு வேலை ஆட்களோ , அல்லது அண்ணன்மார்கள் அண்ணி மார்களோ இந்த பக்கம் வருவதே கிடையாது....  வேலைக்காரர்களுக்காகவே வீட்டில் இருந்து சிறிது தூரம் தாண்டி அமைக்கப்பட்டிருக்கும் வீடு மேலிருந்து பார்த்தாலும் தெரியாது...  அவள் அறையில் இருந்து பார்த்தால் மட்டும்தான் புலவன் அறை தெரியும்படியாக அமைக்கப்பட்டிருக்கும்  எனவே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு புலவன் இருக்கும் இடம் நோக்கியே ஓடி வந்து விட்டாள் 

கதவை பூட்டி விட்டு திரும்பிய புலவன்,  தன் வீட்டு வாசலில் மிலா மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க  வியர்த்து போய் நிற்க ... அவளை கண்டு கொள்ளாது  புலவன் தன் பெட்டியை தூக்கி கொண்டு நடக்க,  ஓடி போய் அவன் குறுக்கே கை நீட்டி நின்ற மிலா ..

" ஏங்க ஒரு நிமிஷம்"  இவ நில்லுன்னு சொன்னதும் அவன் நிற்பானா என்ன?  அவன் நடந்து கொண்டே இருக்க இவளும் ,  அவன் பின்னால்

ஓடிக்கொண்டே..

"நீங்க வேலையை விட்டு நின்னுட்டதா அண்ணன் சொன்னார் ஏன் என்ன ஆச்சு? ..மிலானி தவித்தாள்... 

"ஆட்டோ" என்று புலவன் கைதட்டி அழைக்க 

"உங்க கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன் புலவன்,  ஏன் என்னாச்சு,  எங்க போறீங்க ? பரிதவிப்போடு பார்த்தாள்  இளம் காதலி ... 

"எங்க  தம்பி போகணும் ஆட்டோகாரர் ஆட்டோவோடு வந்து நிற்க 

"கோயம்பேடு" என்றான் திமிரும் ஆண் குரலில் அந்த  சத்தத்திற்கே பெண் மான் குட்டி ஈன்று விடும் போலும்...

"ப்ளீஸ் அண்ணா அவர் எங்கேயும் போகல நீங்க போங்க" என்றதும் ஆட்டோ டிரைவர் புலவனை பார்க்க ... 

" ப்ளீஸ் ,  பத்து செகண்ட் பேச டைம் தாங்க , ப்ளீஸ் ப்ளீஸ் என்று மிலா கெஞ்ச .. என்றதும் அவன் பெட்டியை கீழே வைக்க ... பெருமூச்சு விட்ட மிலா 

"ஏன் போறீங்க??  என்றதும் அவன் அமைதியாக அவள் அறையை அண்ணாந்து பார்க்க .. அவன் பேச வேண்டும் என்றே அவசியம் இல்லை..  உணர்வை படித்து விடும் காதலியாக மிலா ,  ஆரம்பமே டாப் கியர் போட்டாள்..

"நான் உங்கள  நேத்து அங்கு இருந்து பார்த்தது தப்புதான்...  என்றதும் அவளை கண் இடுங்கி புலவன் ஆழ்ந்து பார்க்க...  அவனை பார்க்காமல் தலையை குனிந்து கொண்டவள்

"சாரி டெய்லி உங்கள பார்க்கிறது தப்புதான் ..

"ம்க்கும் அவன் தொண்டையை செரும...  

"அது அன்னைக்கு என்ன காப்பாத்துனதுல இருந்து உங்க மேல எனக்கு ஒரு இதாகி போச்சு... அதான் ரூம்ல இருந்து உங்களை பார்த்தேன் ...  புலவன் பெட்டியை மறுபடி தூக்க போக,  சட்டென்று அதை பிடித்து தடுக்க புலவன் அவளை தலையை தூக்கி பார்க்க 

"சாரி சாரி , இனிமே உங்கள பாக்க மாட்டேன் இதுதான் நீங்க வேலையை விட்டுட்டு போக காரணம்னா ...மறந்து  கூட நீங்க இருக்கிற பக்கம் திரும்பி பார்க்க மாட்டேன்,  ப்ளீஸ்...  வேலையை விட்டுவிட்டு போயிடாதீங்களேன்....  இந்த பத்து நாளா தான் நான் நானா இருக்கேன்...  நான் செஞ்சது,  உங்கள பார்த்தது தப்புதான் ஐ அம் சாரி ப்ளீஸ் போயிடாதீங்க ....நீங்க போயிட்டீங்கன்னா வேலையை விட்டுட்டு போக நான்தான் காரணம்ன்னு கடைசி வரை எனக்கு உறுத்தும்  ப்ளீஸ்" என்று அவள் கெஞ்ச...

புலவன் பெட்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் தன் அறை நோக்கி நடக்க ஆரம்பிக்க 

"அப்பா பேசாமலேயே கொல்றாரே மனுசன்!!  என்று  பெருமூச்சு விட்டு கேட்டில் சாய்ந்தாள் மிலானி..

இதுதான் பிரச்சனை என்று அவன் வாய் திறக்கவே இல்லை...  ஆனால் அவன்  என்ன நினைத்தானோ அத்தனைக்கும் பதில்  அவன் கண்ணை பார்த்து கேள்வி அறிந்து விடை கொடுத்தாள்..

ஆனால் இனிமேல் தன்னை  அவள் பார்க்க மாட்டாள்,  மனதில் சுமக்க மாட்டாள் இத்தோடு ஒதுங்கிக் கொள்வாள் என்று புலவன்  நினைத்து மீண்டும் அதே டிரைவர் வேலையில் தொடர..

அன்று  இரவே மிலா ,  எப்போதும் போல அவனுக்கு தெரியாது ஜன்னல் வழியாக அவன் அறையை பார்த்துக் கொண்டு நின்றாள்

அவ்வளவு சீக்கிரத்தில் பெண்ணின் மனதில் உண்டான காதல் அழிந்து போகுமா என்ன ?

அழியாத காதலை சுவடாக  பதிய வைக்காமல் இந்த காதல் அழிவது இல்லை .. 

இவள் புலவனின்  காவியத்தலைவி !! 

காதல் சரித்திரம் எழுத வந்த சித்திரப்பாவை காதல் சித்திரம்  அழுத்தக்காரன் நெஞ்சில் வரையாது ஓய மாட்டாள் ...