நளதம் 25,26

Nal24

நளதம் 25,26

25 நளதம் கமழும் தேவசுரா!!

அவர்கள் வாழ்ந்த அழகிய மர வீடு முன் சூர்யா சாய்ந்து நின்றான் நிலா அவன் கரத்தை பிடிக்க அவளே அணைத்து கொண்டு அழுது விட்டான்..

"அவன் காதல பார்த்து பொறாமையா இருக்குடி என்ன விட்டுட்டு மொத்தமா ,"

"ப்ளீஸ் சூர்யா அழுதா மத்த காரியத்தை யாரு பார்ப்பா ..

"சூர்யா குழி தோண்டியாச்சுடா கண்களை துடைத்து கொண்டு காரின் பின் இருக்கையில் ஜீவன் இல்லாது கிடந்த தம்பியை மதனும் அவனும் சேர்ந்து இறக்கினர் மோனாவும்,  நிலாவும் சத்தமில்லாது அழுதனர்.. 

ஆறடி குழி இந்த அசுரதேவனுக்கு போதுமா ?போதும் என்று நினைத்து விட்டான் போலும் சூர்யா இறுதியாக அவனை கட்டி கொண்டு அழுதவன் ...

"திரும்பி வர மாட்டேன்னு தெரியும் தேவா,  இருந்தாலும் ஒரே ஒரு தடவை உன் குழந்தைங்கள யோசிச்சு பாருடா அப்பா எங்கேன்னு தேடும்டா, 

"சூர்யா அவன் இல்லடா மனதை தைரியப்படுத்து வா என்று கூறவும் முகத்தை அழுத்தி துடைத்த சூர்யா முதல் மணலை எடுத்து அவன் மீது போட அவன் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மணலில் மூட ஆரம்பிக்க,  தன் தம்பியின் முகத்தை கடைசியாக பார்த்து கொண்டே அவன் முகத்தில் மணலை போட,தேவா நாசியில் பட்ட மணல்துகள் சட்டென்று காற்றில் பறக்க,  தம்பியை பார்த்து கொண்டிருந்த சூர்யா அதிர்ந்தான்...

"மதன் தேவ்வா மூச்சு விடுறான்டா , டேய் தூக்குடா தூக்குடா என் தம்பி மூச்சு விடுறான்..

"டேய் அவன் செத்துட்டான்..

நோ அவன் மூச்சு விட்டான் நான் பார்த்தேன் , யாருடா கடைசியா அவன் செத்தது உறுதி பண்ணினது ..

நீதான்..

"ஓ ஷேட் , எடு எனக்கு நம்பிக்கை இருக்கு அவன் உயிரோட இருக்கான்..

"டேய் அல்மோஸ்ட் மூடியாச்சு.."

______ சொல்லிட்டு இருக்கேன் தூக்குடா" என்று கத்த .. அவன் நம்பிக்கையை ஏன் கெடுப்பானேன் என்று  மணலை அகற்ற ஆரம்பித்து தேவா உடலை எடுக்க அவனை சமதளமாக படுக்க போட்ட சூர்யா, நெஞ்சில் அழுத்தி பிடித்து தன் காதை வைத்து கூர்மையாக கவனிக்க..

எல்லார் இதயமும் லப் டப் என்று துடிக்கும் அசுரதேவன் இதயம் மட்டும் அம்மு அம்மு என்று துடித்தது...

"தேவா இஸ் அலைவ் "என்று கத்த, அனைவருக்கும் ஆச்சரியம் தான் ..

"இல்லையேடா உடம்புல உயிர் இல்லாமதான்டா தூக்கினோம்" .. என மதன் உட்கார்ந்து நாடித்துடிப்பு பார்க்க துடித்தது எப்படி எப்படி என புரியவில்லை ..

அவன் கொண்ட  காதலுக்காக அந்த  கடவுள் இறங்கினானோ?இன்னும் அசுரதேவன் உயிர் ஊஞ்சல் ஆடியது,  அவன் காதலியை விட்டு போக முடியாது உலகத்தை சுற்ற..

"ஆனா பாய்சன் பரவிடுச்சே சூர்யா..

"எனக்கு நம்பிக்கை இருக்குடா, இதோ கடைசி நிமிசம் உயிர் இருக்கிறதை காட்டுதுன்னா, கண்டிப்பா இவன் சாக மாட்டான், என் தம்பி வருவான்டா ", சூர்யா பழைய மிடுக்கோட போனை எடுத்து வரிசையாக போட்டவன்..

"தனி ப்ளைட் ரெடி பண்ணி இருக்கேன், லண்டன் போறோம் நிலா நீ.."

"நானும் வருவேன் குழந்தைங்கள ஜோதாம்மா பார்த்துப்பாங்க.. "சூர்யா கண்களை சுருக்க..

"எனக்கு தேவாவை பிடிக்காதுதான் ஆனா அவன வெறுக்க காரணம் இல்லை , அதோட அவன் வாழ்ந்தா சந்தோஷம் உங்களுக்கு உறுதுணையாக நிற்கிறது விட , எனக்கு எதுவும் இப்ப முக்கியம் இல்ல வருவேன் அவ்வளவு தான்" என்று அடமாக நின்ற மனைவிதான் அவன் பலம் இங்கே என்ன நடக்கிறது நடந்தது என்று கூட தெரியாது , அத்தனை பேரும் லண்டன் தேவாவை தூக்கி கொண்டு ஓடினார்கள்,  இன்னும் மருத்துவத்தில் சில புதிய முறைகள் நம் நாட்டை வந்து சேரவில்லையே , அதை தேடி அவர்கள் பயணம் போனது .. பத்து சதவிகிதம் வாய்ப்பு இருக்கு கொண்டு வாங்க என்ற பிறகு நிற்க தோணவில்லை..  

கெட்டிமேளம் கெட்டிமேளம்! என்ற சத்தம் மண்டபத்தை நிறைக்க தன் நெஞ்சில் தாலி விழவும் ,,எதிரில் அசுரதேவன் ஜாடையில் முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்த குழந்தைகளை பார்த்த வஞ்சிக்கொடியாக கண்ணில் பொங்கி கண்ணீர் பெருக்கெடுக்க..அந்த தாலியை கழுத்தில் ஏற விடாது தடுத்த வஞ்சியை சேனா யோசனையாக பார்க்க 

அவனை திரும்பி பார்த்தவள் ,கண் சொன்னது அவள் அசுரனை தவிர இன்னொருவனை நேசிப்பது கூடாத காரியம் என்று , அவள் கண்கள் கலங்கி அந்த தாலியை பிடித்து கொணடவள் 

"அந்த முத்துமணி மாலை தந்த சந்தோஷமும்,  பூரிப்பும் இந்த மஞ்சள் தாலி தராது சேனா.. அவர் என்ன அசிங்கப்படுத்தி அனுப்பி விட்டிருக்கலாம் ஆனா என்னால இன்னொரு வாழ்க்கை முடியாது , அவன வெறுக்கிறேன்  ,ஆனா அதே இடத்தில இன்னொருத்தனை வைக்கிற அளவுக்கு என் காதல் ஒன்னும் மாறிடல சேனா.. ப்ளீஸ் உங்கள ஹேட் பண்ணினதுக்கு , நானும் மாறலாம்னு ஒரு வேகத்தில சம்மதம் சொல்லிட்டேன்,  ஆனா இந்த தாலி என் கழுத்தை தொடும் போது எனக்கு பதறுது ஏதையோ இழக்க போறேன்னு தோணுது .. அவன் தப்பாவே இருந்துட்டு போகட்டும்,  மிருகமாவே இருக்கட்டும்,  ஆனா இந்த வஞ்சிக்கொடிக்கு அசுரன் ,அரசன் அந்த அசுரதேவன் மட்டும்தான் சேர்ந்து வாழ்ந்தாதான் காதல்னு இல்லை சேனா, அவன் போனாலும் வந்தாலும் , ஏன் செத்தாலும் அந்த காதல் மாறாம அவனுக்காக மட்டும் இந்த இதயம் துடிக்கிறதுதான் காதல்,  அவன் காதல் பொய்யா போகலாம் என் காதல் மெய் அந்த அசுரதேவன் யாருன்னே தெரியாம என்ன கொடுக்க வச்ச அந்த காதல் மெய்,  அது சாகும் வரை என் கூட இருக்கும் அது போதும்.. எனக்கு பலமா,  துணையா என் பிள்ளைகளுக்கு  தகப்பன்னா,  அது தேவா மட்டும்தான் , அவன் இடத்தில நீங்க இல்ல  யாருக்கும் இடம் கொடுக்க என்னவா முடியாது மன்னிச்சிடுங்க" என கையெடுத்து கும்பிட்ட வஞ்சிக்கொடி .. மேடையை விட்டு எழும்ப... 

அம்மா!! என இரண்டு குழந்தைகளும் ஓடி வந்து கட்டி கொள்ள தன் பிள்ளைகளை கைக்கு ஒன்றாக பிடித்து கொண்டு ..கண்டதை பேசும் சபை முன்பு நிமிர்வாக நின்ற வஞ்சிக்கொடி 

"உண்மையாவே இவளுக்கு புருஷன் இருக்கானா இல்லை , எங்கேயோ புள்ள உண்டாகிட்டு வந்து பொய் சொல்றாளா என அவள் காது பட பேச.. 

"அதான நல்லவளுக்கு பிறந்திருந்தா கல்யாணம்,, புருஷனுக்கு முக்கியத்துவம் தெரியும்,  சுகத்துக்கு போனவ பெத்த மகதான நினைச்சதும் கல்யாணம், பிடிக்கலைன்னா அடுத்த கல்யாணம்னு போறா ..என்று இன்னொருவன் கூற ,அவள் உதடு கேலியாக சிரித்தது ..

"இதை விட கேவலமா பேசினாலும் எனக்கு வலிக்காது , ஏன்னா நான் யாருன்னு எனக்கு தெரியும்,  உங்களுக்கு உட்கார்ந்து விளக்க தேவையில்ல ,என் இஷ்டத்துக்கு கல்யாண பண்றேன் கருமாதி பண்றேன்,  அது என் இஷ்டம் வந்தாமோ , சாப்பிட்டோமா,  போனோமான்னு போங்க . எனக்கு கேரக்டர் ஜட்ஜ்மெண்ட் நீங்க தர வேண்டாம் .. அப்புறம் என் புருஷன் யாருன்னு தெரியாம நீங்க வருத்த பட வேண்டாம் ..எனக்கு புருஷன் இருக்கான் , தாலி கட்டி மூணு முடிச்சு போடல , ஆனா இந்த இயற்கை சாட்சியா எனக்கும் கல்யாணம் முடிஞ்சது,  நான் தரங்கெட்டவன்னு  சொல்ற யாருக்கும் நான் பதில் சொல்ல அவசியம் இல்லை,  அவன் உயிரோட இருக்கிற வரை அவர்தான் இந்த வஞ்சிக்கொடியோட அரசன்,  என் பிள்ளைகளுக்கு தகப்பன் ..  நான் அவனின் பாதியா இல்லாம இருக்கலாம் , ஆனா நான்தான் அவன் திருமதி , அதை அவரும் மறுக்க மாட்டார்,  நானும் மறக்க மாட்டேன் .. சாரி உங்க டைம் வேஸ்ட் பண்ணினதுக்கு,  ஆத்திரத்தில புத்தி இழந்துட்டேன் இப்ப தெளிவாகிட்டேன், இனி என் வழியை பாத்துக்க தெரியும் , நான் மன்னிப்பு கேட்க வேண்டியது  சேனாகிட்ட மட்டும் தான் சாரி சேனா..

"ச்சை சே இருக்கட்டும் வஞ்சி,  நீ நல்லா இருந்தா சரி...வந்தவங்க சாப்பிட்டு போகட்டும்.. 

"சும்மா சாப்டுட்டு போக வேண்டாம் சேனா..என் பிள்ளைங்களுக்கு பேர் வச்சிடலாம்னு இருக்கேன்..  என்றவள் .. 

"இது இளவேனிற் அசுரதேவன்,  இது இளவஞ்சி அசுரதேவன்..  நான் திருமதி அசுரதேவன் போயிட்டு வாங்க என கும்பிடு போட்டவள், 

தலை நிமிர்ந்து பிள்ளைகளை அழைத்து கொண்டு நடந்தாள் ..அசுரன்தான் தன் கணவன் என பிரகடனப்படுத்தி விட்டு போய்விட்டான்..

அவள் காதல் எதுவென்று யாரிடமும் கூற வேண்டிய அவசியம் இல்ல , அசுரதேவனுக்கும் உட்பட.. அவன் காதல் மெய்யோ பொய்யோ? அவள் காதல் மெய் ,மெய்காதல் தன்னை வாழ வைக்கும் என்ற தெளிவு வர , அசரதேவனின் வஞ்சிக்கொடியாவே வாழ ஆரம்பித்தாள் , 

ஆறு மாதங்கள் கழித்து  ..

"வஞ்சிகொடி மருத்துவமனையில் படுத்திருக்க, பெண் மருத்துவர் அவளை ஸ்கேன் செய்துவிட்டு,  

"அடுத்து டுவின் பேபி வஞ்சி!! "என்று பெண் மருத்துவர் அவள் கையை குலுக்க, 

தேங்க்ஸ் டாக்ட்டர்... பேபீஸ் எப்படி இருக்கு?" 

"உங்கள போல திடமா இருக்கு .. 

"ம்ம் ..

"கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க.."

"என்னோட ஓட்டம் மட்டும்தான் என்ன வாழ வைக்குது , குழந்தைகளுக்காக வாழணும்ல, செத்துட்டா தோத்துட்டேன்னு அர்த்தம்,  அவன் முன்னாடி வாழ்ந்து காட்டணும் என்று சிரித்து கொண்டு எழும்பி போனாள்.. போனை எடுத்த பெண் மருத்துவர்.

"சார் பேபீஸ் நார்மல் என்றதும் .

ம்ம் என்றான் அந்த பக்கம் சூர்ய பிரகாஷ், 

உயிர் காக்கும் கருவியில் ஆறு மாதமாக உயிரை கையில் பிடித்து வைத்திருக்கும் தன் தம்பி தேவாவை பார்த்து கொண்டே ... 

"சூர்யா என மருத்துவர் உள்ளே வர..

தம்பியின் முகத்தை துடைத்து கொண்டிருந்த சூர்யா திரும்பினான்.. ஆறு மாதமாக தன் தம்பிக்கு தகப்பன் ஆகி போனான் .. 

"உறுதி இல்ல ஆனா பிழைக்கலாம் சூர்யா 

"டிரை பண்ணலாம்" என நகராது உடும்பு பிடியாக தன் தம்பியை பிடித்து வைத்திருக்கிறான்..ரத்தம் முழுவதும் மாற்றப்பட்டு விஷம் முழுவதும் நீக்கப்பட்டாலும் , அதன் வீரியம் அவனை பாதி உயிராக மாற்றி விட்டது ... என்றாவது ஒரு நாள் தன் தம்பி திரும்பி வருவான் என அவனுக்காக காத்திருந்தான் சூர்யா... வஞ்சிக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறியது நிம்மதி, தன் தம்பி எழும்பும் போது அவனிடம் உன் காதல் தோற்கலடா ஜெயிக்க வச்சிருக்கான்னு  ,  அடுத்த இரட்டை குழந்தையை காட்டணும் என்ற ஆவல் இருந்தது 

இன்று வஞ்சிக்கு குழந்தை பிறப்பு ... லேபர் வார்டில் வயிற்று வலியில்  வஞ்சி பல்லை கடிக்க...

ம்மாஆஆஆஅ வலி அதிகரிக்க அதிகரிக்க...

ஆஆஆஆஆஆ என்று அழ வலி இன்னும் கூட..

 தே...வாஆஆஆஆஆஆஊஊஊ ஆஆஆஆ என்று தன்னவன் பெயரில் தனக்கு பலம் தேட..

ஹேஏஏஏஏஏஏஏஏஏ என ஒன்றை ஒன்று உதைத்து கொண்டு இரட்டை ஆண் குழந்தைகள் , அதே பழுப்பு விழியில் உலகம் பார்க்க .. 

"தேவாஆஆஅஆஆஅஅஅ என்று துடித்து அலறிட..அவள் ஆருயிர் மனைவியின் வலியை உணர்ந்ததுவோ அவன் இதயம்,  டப் டப் என வேகமாக துடித்து,  கைகள் அசைந்தது,  சூர்யா போனில் வஞ்சி நிலையை அறிந்து  கொண்டிருந்தவன், தேவாவின் உயிர்க்கருவியில் சத்தம் கேட்டு திரும்பி பார்க்க,  அவன் காலும் துடித்தது.. தன்னை காக்க தன் மகன் வந்தது போல, அவனை காக்க அவன் மகவுகளால் முடியும் என்று நம்பிய சூர்யா.. 

"தேவா உனக்கு ஆண் குழந்தைங்க பிறந்து இருக்குடா இதோ உன் குழந்தைங்க " என வேண்டுமென்றே பிள்ளைகள் அழும் சத்தமும் அதன் பின்னே தேவா என வஞ்சி அலறும் சத்தமும் ,அவன் காதில் கேட்க... பல மாதம் அவள் நினைவில் மூடி கிடந்த விழிகள் தன் உயிரானவள் குரலில் நீள் தூக்கத்திலிருந்து  மெல்ல திறந்தது.. 

இதோ வந்துவிட்டான் மறுபடி மணம் வீசுவான்.. 

26 நளதம் கமழும் தேவசுரா!!

ஆறுமாதங்கள் கழித்து!!

"ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு அடம் பிடிச்சிங்க அடி விழும் ஆமா" என்று வஞ்சி இரட்டை கொண்டையில் உதட்டை பிதுக்கி கொண்டு நின்ற இளவேனிற்,  இளவஞ்சியை பார்த்து முறைத்தாள்... ஸ்கூலில் சேர்த்து நாலு மாசம் ஆகிறது ,பத்து நாள் கூட  இரண்டும் பள்ளி பக்கம் போயிருக்காது ... வஞ்சி தலை நகரவும் யாராவது வந்து அழைத்து கொண்டு போய்விடுவார்கள் ..

"உங்கிட்டதாண்டி பேசிட்டு இருக்கேன் ,டீச்சர் ஸ்கூலுக்கு லோ அட்டனென்ஸ்னு சொல்றாங்க , நான் உங்கள டெய்லி ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டுதான் என் வேலைக்கு போறேன் , இடையில உங்களை வந்து யாரு கூட்டிட்டு போறான்னு சொல்ல போறீங்களா இல்லையாடி," என்று இரண்டு பேரின் காதையும் பிடித்து திருக , காதை பிடித்துக் கொண்டு குழந்தைகள் அலறியது..  குணா வந்து பிள்ளைகளை தூக்கிக் கொண்டவன்..

"பாரு ஸ்கூல் பேக் சைஸ்ல கூட இல்லை , இந்த பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பிவிட்டா,  அது பாவம் இல்ல,  எங்கள தான் இருக்க விடாம அதைப் படி இதைப் படின்னு காலேஜ் காலேஜா சுத்த விடுறன்னா இதுக பாவம் இன்னும் பால்குடி கூட மறக்கல அதையும் கொண்டு போய் ஸ்கூல்ல விடுற , அதனாலதான் யாராவது போய் கூட்டிட்டு வந்துருவோம் , "தம்பியை முறைத்த வஞ்சி..

"நீங்களும் உருப்படாதீங்க குழந்தைகளையும் உருப்பட விடாதீங்க,  இனிமே யாராவது ஸ்கூல்ல போய் கூட்டிட்டு வந்தீங்க ஒருத்தருக்கும் வீட்ல சோறு கிடையாது,, எல்லாரும் வெளியே தான் நிக்கணும் ",உள் அறையில் அடுத்த இரட்டை சத்தம் கொடுக்க,

"சப்பா ஒனனு மாத்தி ஒன்னு சத்தம் போட்டுக்கிட்டே இருக்கு ராத்திரி பகல்ன்னு எப்ப தான் தூங்குமுன்னே தெரியல,"புலம்பி கொண்டே உள்ளே போனாள்...

தேவா வேண்டாம் என்று ஒதுங்கினாலும்,  பிள்ளைகள் அவனை உரித்து வைத்து பிறந்திருக்க அதை ,ஒதுக்கி வைக்க முடியாமல் போனது,  நாலில் ஒன்று கூட இவளுடைய ஜாடையும் இல்லை குணாதிசயங்களும் இல்லை அதுவும் இப்போது பிறந்திருக்கும் இரட்டை மகன்கள் அப்படியே தேவா தான் வளவன், நளதன்..

"இன்னைக்கு பசங்களுக்கு தடுப்பூசி போடணும்னு சொன்னியே தங்கம் , டாக்டர் ப்ரீயான்னு பார்த்துட்டு போயிட்டு வந்திடு..ராசு மகளுக்கு நியாபகம் பண்ண,

"அச்சோ!! ஆமாப்பா மறந்தே போயாச்சு, தொகுதியில கொஞ்சம் பிரச்னை ,அதுல எல்லாம் மறந்தாச்சு ஆபிஸ் போயிட்டு வந்து கூட்டிட்டு போறேன் ப்பா.."

"சரி தங்கம் அப்புறம் இந்த குணா பய சேனா தம்பி அக்கா பொண்ணு கூட பேச்சுவார்த்தை வச்சிருக்கிறதா கேள்வி பட்டேன் ...உடனே அந்நியன் மோடுக்கு மாறிய வஞ்சி 

"குணாஆஆஆஆஆ ..

அக்கா! என பிய்த்து வைத்த தோசையோடு  வந்து நிற்க 

"சேனா அக்கா பொண்ணு கூட என்ன பேச்சு .."குணா  ராசுவை பார்த்து போட்டு கொடுத்திட்டியே பரட்டை !! என முறைக்க..

"அங்க என்ன நாய ,முறைப்பு,  உன்கிட்ட கேட்டுட்டு இருக்கேன் பதில் சொல்லு .."

"இல்ல அக்கா ஒரே காலேஜ் சும்மா பிரெண்ட்லியா தான் பேசினேன் அதை அப்பா தப்பா உன்கிட்ட சொல்லி கொடுத்துட்டாரு "

"உன் போன் எடு, " குணா தயங்கி போனை எடுத்து வஞ்சி கையில் கொடுத்துவிட்டு தலையை சொரிந்தான் , அதில் அத்தனையும் பார்த்துவிட்டு பளார என்று குணாவின் கன்னத்தில் ஒரு ஆறை விட்டவள் ..

"சொந்த கால்ல நிக்க இன்னும் துப்பில்லை , உனக்கு காதல் தேவையா ? ஒரு காதல்னால நான் பட்ட பாடு உனக்கு தெரியாதா? இல்ல உங்க அக்கா பட்ட அசிங்கமும் அவமானமும் மறந்து போச்சா? இந்த வீட்ல எவனாவது காதல் கீதல்னு தூக்கிக்கிட்டு வந்தீங்க , எனக்கு தம்பியே இல்லன்னு விரட்டி விட்டுருவேன் பாத்துக்கோங்க .. நான் வேணுமா வேண்டாமான்னு முடிவு பண்ணிட்டு காதல் பண்ணுங்க , இல்ல நீ யாரோன்னு நினைச்சா எப்படியும் போங்க.."

" சாரிக்கா அந்த பொண்ணு தான் லவ் பண்ணுது , நான் இன்னும் முடிவு சொல்லல..  உன் கிட்ட கேட்டுட்டு தான் சொல்லணும்னு பதில் சொல்லாம வந்துட்டேன் .."

"காதல் செஞ்சு கேவலப்பட்டு நிக்காதீங்கடா, இங்க எவனும் எவளும் காதலுக்கு உண்மையா இல்ல , தான் தேவை முடிஞ்ச உடனே கடந்து போறது,  இல்ல அசிங்கப்படுத்தி நம்மளுடைய கேரக்டரையே மோசமாக்கிட்டு போறது ,எதுக்குடா நாமளே நம்மள அழிச்சிக்கணும்,  போய் உருப்படுற வழியை பார்" என தம்பியை அனுப்பி வைத்தவளுக்கு ,

"என்னையும் அந்த வயதில் யாராவது ஒருத்தர் கவனமா இரு காதலிக்கிறவனை முழுவதாக நம்பாதே என்று சொல்லி இருந்தால் இத்தனை இன்னல் வந்திருக்காது" என்று நினைக்காது இல்லை... 

இரண்டு இளாக்களையும் கொண்டு போய்  ஸ்கூலில் விட்ட வஞ்சி 

"மாமா வந்தான் , தாத்தா வந்தார்னு வீட்டுக்கு போனீீங்க கால்ல சூடு வச்சி விட்டிருவேன் புரியுதா??" வேனிற் வேகமாக தலையாட்ட,  இளவஞ்சி அங்கும் இங்கும் பார்த்து கொண்டே தலையாட்ட 

"என்னடி இப்படி போனதும் ஓடிறலாம்னு எண்ணமா.."

"நீ போம்மா நான் பாத்துக்குறேன்" என இளவேனில் கூற..

"அவள கூட நம்புவேன் உன்னதான் நம்ப முடியாது , ஈவினிங் வந்து நான்தான் கூப்பிடுவேன் .. புரியுதா இரண்டும் திருட்டு முழி முழித்தது... 

"என்ன திருட்டு வேலை பார்க்கிறீங்க "

"ஒன்னும் இல்லைம்மா தொகுதிக்கு போய் சேவை செய்ங்க, நாங்க ஒழுங்கா இருக்கோம், ஆமா தான இளவஞ்சி.."

" ஆமா ஆமா" என்று தலையாட்ட இரண்டையும் புருவம் சுருக்கி பார்த்த வஞ்சி 

"வர வர ரெண்டு பேரும் நிறைய கள்ளத்தனம் பண்றீங்க கண்டுபிடிக்கும் போது இருக்கு ,  ம்ம் போங்க சாப்பாடு மிச்சம் வர கூடாது"

"சரிம்மா.கோரஸ் பாடியது

"ஒழுங்கா படிக்கணும்

"சரிம்மா 

"நல்லா திருட்டு வேலை பார்க்கணும் "

"சரிம்மா !!"என்று விட்டு நாக்கை கடிக்க ,அழகு!! அழகு !!அத்தனையும் அசுரதேவன் போல அழகு ... 

"அடிங்க ஓடுங்கடி "என்று விரட்டி விட்ட வஞ்சி இரண்டு அடி நடந்து விட்டு மூக்கை சுருக்கினாள்.... மறுபடியும் இரண்டு அடி நடந்து விட்டு அதே போல சுருக்கி யோசனையாக நாடியை தடவி கொண்டு திரும்பி சுற்று முற்றும் பார்த்தாள்..

"மேடம் கட்சி ஆபிஸ்ல சேனா சார் வந்து காத்திருக்கார் போன் வந்திருக்கு "என பிஏ வந்து சொல்லவும் 

"ஓஓ ஷேட் ,அவர வர சொன்னதையே மறந்துட்டேன் புது மாப்பிள்ளை வேற  ஏகபட்ட வேலை இருக்கும்,  இதுல நாம வேற ஆயிரம் வேலை கொடுக்கிறோம்," முதல்வரின் மகளுக்கும் அவனுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது,  வண்டியில் ஏறி அமர்ந்த வஞ்சி , கண்ணில் கிடந்த கண்ணாடியை எடுத்து தலைமேல் வைத்து விட்டு மறுபடியும் தலையை வெளியே விட்டு பார்த்தாள் ,

"என்ன மேடம்..

"நத்திங் என்றுவிட்டு சீட்டில் தலைசாய்ந்து அமர்ந்து கொண்டாள்.. அவள் தலை மறையவும்... 

"அப்பாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ" என்று கத்தி கொண்டு இரண்டு பிள்ளைகளையும் ஓடி வர,  மரத்துக்கு பின்னாலிருந்து அசுரதேவன் தோன்றினான்.. 

இரட்டை கையை விரித்து பிள்ளைகளை அழைக்க ஓடி வந்து தாவி அவன் மீது ஏறி கொண்டது..கண்களா அவை?!! அன்பின் அடையாள அவயம் ,அவளை  மறைந்திருந்து பார்த்த  பொழுது அதில் சொட்டு சொட்டாக காதல் கமழ்ந்தது  , தன் குழந்தைகளை பார்க்கும் போது அன்பு உற்றெடுத்து , அதை அப்படியே பிரதிபலித்தது..

"ப்பா இன்னைக்கு எங்க போறோம்??" என இளவேனிற் தகப்பன் முகத்தை திருப்பி கேட்க..

"எங்க போகணும் என் அம்முக்களுக்கு, குரலில் கூட பாசம் வழிந்தோடியது  ,

"இன்னைக்கு அம்மா ரொம்ப திட்டி விட்டுட்டா அப்பா என்று இன்னொன்னு அவன் கன்னத்தை திருப்பியது..

"என்ன சொன்னா ?என இரண்டையும் காரில் அமர வைக்க,  குணா நின்றான்..

"அத்தான் அக்காவுக்கு சந்தேகம் வந்துடுச்சி கவனம் 

"ம்ம் சாயங்காலம் அவ வர்றதுக்கு முன்ன கொண்டு வந்து விட்டிடுறேன்.."

"சரி அத்தான் எத்தனை நாள் இப்படி மறைஞ்சி இருந்து பொண்டாட்டியை லவ் பண்ண போறீங்க..

"காலம் முழுக்க" என்றவன்

 ராசு வரவும் .."அய்யய்யோ அப்பா பார்த்தா போச்சு நான் போறேன் என குணா ஓடி விட , மறைந்து மறைந்த வந்த ராசு..

"மாப்பிள்ளை குட்டிகளுக்கு தடுப்பூசி போட தங்கம் மதியம் ஆஸ்பத்திரி போவா.."

"ஓஓ சரி மாமா போயிடுறேன்..

"சரி மாப்பிள்ளை கொஞ்சம் கவனம் அவ கெடுபிடி உங்களுக்கு தெரியுமே.."

"ம்ம் 

"கண்டுபிடிச்சா எங்களையும் சேர்த்து உப்பு கண்டம் போட்டிருவா.."

"ம்ம்" என்றவன் நாலு மாதமாக தனக்கு உதவும் அவள் குடும்பத்தை நன்றியோடு பார்த்தான்... கண்களை முழித்த தேவா தன் அண்ணனிடம் கேட்டது ..

"ஏன் என்ன காப்பதின,  அவ இன்னொருத்தன் கூட வாழ்றத பார்த்து பார்த்து சாகவா? "

"ப்ச்  அடுத்தவன் கூட வாழ, நீ பெத்துபோட்ட நாலு விடணுமே..

"நாலா?

"ஆமா அடுத்த ரெட்டை,  இந்தா பாரு உன் பசங்க என்று காட்ட..

"அப்போ அம்முவுக்கு,?..

"கல்யாணம் நடக்கலை நீதான் புருஷன்.. நீ இருந்தாலும் செத்தாலும் உன் பொண்டாட்டின்னு சொல்லிட்டு எழும்பி போயிட்டா .. என்றதும் இன்னும் குற்றவுணர்வு தாங்க முடியவில்லை 

அவ வாழ்க்கையை கெடுத்துட்டேன் சூர்யா , 

"ஏன் அப்படி நினைக்கிற நீ இல்லாம அவளும் அவ இல்லாம நீயும் வாழ முடியாது,  அந்த கடவுளே மறு வாய்ப்பு தந்திருக்கான்..எப்படியும் உன்ன தாண்டி அவ யாரையும் ஏத்துக்க போறது இல்ல..

"ப்ச் நான்தான் அடிக்கடி மிருகமாகிடுறேனே..

"அதை ஒன்னும் செய்ய முடியாது உனக்கு ஏற்ப அவளும் மிருகமாகி கடிச்சி வச்சி தான் வாழ்க்கை ஓட்டணும் போல.."

"அய்யோ வேண்டாம் இனி ஒரு தடவை  என் அம்மு பக்கம் போக மாட்டேன்.. "

"சரி சும்மா ரூமுக்குள்ள அடைஞ்சு கிடக்காத போய் குழந்தைகளை பாரு , உன்ன தேடி தினமும் எனக்கு போன் போடுதுக,  அப்பா எங்க சூர்யாஅப்பா பத்து நாள்ல வருவார் சொன்னீங்கன்னு என்னையே சின்னது மிரட்டுது..அதுகள போய் பாரு குறிப்பா உன் பொண்டாட்டி கண்ணுல பட்டிருறாத ..வந்தா உயிரை எடுத்திடுவா ?"அம்மு நியாபகத்தில் இதழ் விரிந்தது,  நான் ஒரு முள் என்றும் நேசித்து தனக்காக வாழ்க்கையை தியாகம் பண்ணி நிற்கும் அவளை நேசித்து நேசித்தே சாக நினைத்தான்..

"உங்களை சுத்தியே என் சுவாசம் இருக்கு அம்மு,  அந்த சுவாசத்தை தினமும் தேடுவேன்,  உங்க நிழலா தொடர்ந்து வந்துட்டே இருப்பேன்,  என காதலில் கனிந்து நின்ற அசுரதேவன் உடனே கிளப்பி வந்துவிட்டான்,  ஏற்கனவே சூர்யா மூலம் ராசு உண்மை அறிய , மொத்த குடும்பமும் களவாணித்தனம் பண்ணி கொண்டிருக்கிறது  ..

"அக்கா கிட்ட உண்மை சொல்லலாம்ல அத்தான்..

"மறுபடி வாழணும்னு வருவா.. திரும்பி நான் காயம் ஆக்கிட கூடாது, என் வாழ்க்கையே அவங்கள பார்த்துட்டே கழிச்சிடுறேன், அது போதும் .. அவன் காதல் போல ஒரு காதல் வேண்டும் என்று ஆச்சர்ய பட வைத்தான் .. இதோ நாலு மாசம் காலை அவன் பிள்ளைகளை  பள்ளியில் போய் பார்ப்பான்,  வஞ்சி ஊரில் இல்லை என்றால் வீட்டில் போய் மகன்களை பார்த்து விட்டு என அவன் உலகம் அவள் அறியாது அவளை சுற்றி ,அழகாக சுழண்டு கொண்டிருந்தது.. 

"ப்பா ..அம்மா ஸ்கூலுக்கு ஒழுங்கா போகலேன்னு காதை பிடிச்சு திருகினா?சிவந்த காதை மகள் காட்ட.. 

"நாம தப்பு பண்ணினா அடிக்கத்தான் செய்வா ,அம்மாதான அம்மு  .."

"எப்பவும் திட்டுறா, உன் அப்பன் போல பிராடுன்னு அடிக்கிறா" என்று இளவேனிற் உதட்டை பிதுக்க..

"ஹாஹா அப்படியா சொன்னா, சரி விடு வகையா மாட்டும் போது வச்சி செய்யலாம் சரியா?? என்று சிரித்தான் .. அவன் அறியவில்லை தன் பிள்ளைகள் காயம் கண்ட பின் தனக்குள் எந்த மாற்றமும் வரவில்லை ,அவள் மீது கோவம் கொள்ளாது சிரிக்கிறோம் , அதை எளிதாக கடக்கிறோம்  என்று உணராது மகள்களை தூக்கி கொண்டு கடைகளை சுற்றினான்.. 

அவன் உடலில் முழுவதும் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டிருக்க அரக்கியின் பாவத்தில் உண்டான உடல் தன் மிருகத்தனத்தை இழந்திருந்ததது , ..அத்தோடு கெட்டதில் நல்லது போல் அவன் ஆறுமாதமாக தின்ன காட்டு கொடியில்  கிடைக்கும் பூவின் விஷம் உடலில் உண்டான மிருக குணத்துக்கு வேலி போட்டிருந்தது.. அசுரன் மாண்டு, தேவன் மட்டும் உயிர் பெற்றிருந்தான்..

மாலை பிள்ளைகளை வீட்டில் கொண்டு விட்டவன் அவசரமாக மருத்துவமனை நோக்கி ஓடினான்..

"வந்துட்டாளா..

"ஆமா தேவா ..இந்தா கோட் டாக்டர் கோட்டை அவன் கையில் கொடுக்க,  வேகமாக அணிந்து கொண்டவன்.. ஸடெத்தஸ்கோப் எடுத்து மாட்டி கொண்டு 

"இப்படி தான மோனா என தன் நெஞ்சில் வைத்து காட்ட..

"அப்படிதான் என்னைக்கு மாட்ட போறியோ தெரியல,  சூர்யாவுக்கு தெரிஞ்சது என் வேலை கோவிந்தா..

"விடு பார்த்துக்கலாம் , எனக்கு ஒரு பத்து லட்சம் வேணும் சூர்யா எப்ப வெளிய போறான்னு பார்த்துட்டு கூப்பிடு ,வந்து எடுத்திக்கிறேன்.." சொத்தை வஞ்சி , குழந்தைகள் பேரில் எழுதி வைத்தவன்,  அதில் இருந்து ஒன்றையும் எடுப்பது இல்லை எல்லாம் சூர்யா கஜானாதான்,  நாமம் போட்டு வைத்துவி்ட்டு போய் விடுகிறான்..

"பேசாம கொன்னிருக்கலாமோ "என சூர்யாவை பல்லை கடிக்க வைத்து விடுகிறான்..

"கேட்டுட்டு எடுடா , 

"ப்ச் அப்படி எடுக்க பிடிக்கல" என்று உதட்டை பத்துக்கும் தம்பியை தலையில் அடித்து பார்ப்பான்..

டாக்டர் கோட்டில் மனதில் ஆங்கில வார்த்தைகளை மனப்பாடம் பண்ணி கொண்டே வந்தான். 

"இவன் ஒழுங்கா தமிழ்ல பேசி தொலைச்சா என்ன, வாய்ல நுழைய மாட்டைக்குது" என முணுமுணுத்து கொண்டு உள்ளே வர , குழந்தைகளை மடியில் வைத்து கொண்டு வஞ்சிக்கொடி அமர்ந்திருந்தாள்... 

"குழந்தைங்க எப்படி இருக்கு வஞ்சி ?"கண்ணாடி கண்ணை மளைத்திருக்க நாலு மாசமா இப்படித் தானே மனைவியை அருகில் பார்கிறான் , சூர்யா போல உருவத்தில் இருப்பது அவன் காதலுக்கு வாசி!! நல்லா பக்கத்தில உட்கார்ந்து சைட் அடிக்கிறான்.. 

"ம்ம் நல்லா இருக்கு , நிலா அக்கா எப்படி இருக்காங்க ??

"யாருக்கு தெரியும் ??என்றவன் சட்டென்று நாக்கை கடித்து கொண்டு ..

"யா ஓகே ஓகே...குழந்தையை படுக்க வை  அம், வஞ்சி செக் பண்ணணும் ".. கிராஸ் கேள்வி கேட்டிருவாளோ என,தேவாவுக்கு எப்போதும் திக்திக் நிமிடங்கள் தான் 

ம்ம்  குழந்தைகளை வஞ்சி படுக்க வைக்க.. எத்தனை மருத்துவர் இருந்தாலும் சூர்யாதான் அவள் குழந்தைகளுக்கு மருத்துவம் பார்ப்பான் எனவே துணிந்து சூர்யா உருவத்தில் தேவா உலாத்தினான்..

"ஹாட் பீட் எப்படி இருக்கு ?

"ம்ம் பைன் என்றான்.. எது கேட்டாலும் பைன் சொல்லு தேவா என மோனா சொல்லி கொடுத்திருக்க ,அழகாக சொன்னதை சொல்லியது ஆண் கிளி.. 

ஓஓஓஓ 

அங்கே காதில் ஸடெதஸ்கோப் முனையை பொருத்தவே இல்லை , போலி டாக்டர் அதை மறந்திருக்க,  கையை கட்டி கொண்டு குனிந்து மகன்கள் கையை பிடித்து விளையாடி கொண்டிருந்த தேவாவை வஞ்சி முறைத்து பார்த்து கொண்டிருந்தாள்.. 

"எங்க டாக்டர் படிச்சீங்க  சூர்யா அத்தான்..

"ஹான்" அவுட் ஆப் கொஸ்டீன் திணறியது  காட்டுபுள்ள.. 

"எங்க எம்பிபிஎஸ் படிச்சீங்கன்னு கேட்டேன் 

" ம்க்கும் பள்ளிகூடத்தில..

"ஓஓஓ இப்ப பள்ளிகூடத்தையே  டாக்டர் படிக்க முடியுதோ?தேவா கண்ணாடி வழியே அவளை பார்த்தான்... செமையா இருந்தாள்,  ஜொள்ளியது மனம் , குழந்தை பெற்ற தாய்மை மணம் மாறாது கொழுத்த வெள்ளாடு போல , முன்னே பின்னே லோடு ஏறி , குப்பென்று வியர்க்க வைத்தாள்,   ஒரே ஒரே முத்தம் கூட போதும்டா,  முடியலையே முடியாதே, ஏங்கியது அவன் தங்க நிற மீசை, தூக்கு மரத்தில் துடிக்கும் மரக்கொத்தி பறவைக்கு பெண் மீன் கூட வேண்டாம் , அவள் ஒரு முத்தம் நுனியில் கிடைத்தால் போதும் .. தன் அவஸ்தைக்கு  சாவே மேல் ,,அருகே அவள் இருக்க , ஆசை பாய்விரிக்க, பருவம் தேன் வடிக்க,   இளமை இன்பம் சுரக்க அய்யோ!! மரண அவஸ்தையடி பெண்ணே!! உன்னை தந்துவிடு!! இல்லை உன் கையால் கொன்று எனக்கு விமோச்சனம் கொடு ,என்ற கதற வைத்தாள் அவன் பைங்கிளி... 

"பள்ளிகூடத்தில படிச்சு அப்பறம் ஹான் லண்டன் போய் படிச்சேன்.. ம்ம்" இங்கி பிங்கி பாங்கி போட்டு ஆண் டாங்கி பதில் சொல்லி விட்டது..

"ஓஓஓ அங்க இப்படிதான் ஸ்டெத்தஸ்கோப் மாட்ட சொல்லி தந்தாங்களா, " காதில் மாட்டாத இரு முனைகளை வஞ்சி விரல் சுட்டி காட்ட..

"என்ன நீ, ஐயம் டாக்டர் சூர்ய பிரகாஷ்.. கார்டியாலஜிஸ்ட் , எனக்கு  எப்படி மாட்டணும்னு தெரியாதா.."

"சரிதான்" என்றவள் அவன் டாக்டர் கோட்டை கூர்ந்து பார்க்க .தேவா  அதை எடுத்து சரி செய்து போட்டான்...

"செக் பண்ணி முடிஞ்சா, குழ‌ந்தைக‌ளை எடுத்துட்டு போகவா.."

"போ போ" என்று கெத்தாக பதில் சொல்லி வி்ட்டு தேவா இருக்கையில் போய் அமர்ந்தான்... 

வாசல் வரை போனவளை நிறுத்திய தேவா..

குழந்தைங்க பேர் என்ன சொன்ன மறந்து போச்சு 

"ஓஓஓ வளவதேவன், நளததேவன்"..  அவன் கண்கள் ஆச்சரியமாக விரிய 

"புரியுது அவன்தான் உன்ன அசிங்கப்படுத்திட்டு போனானே எதுக்கு அவன் பெயரை வச்சிருக்கேன்னு தானே கேட்கிறீங்க?"... தேவா எச்சில் விழுங்க 

"போராடி பிள்ளை கொடுத்தது அவர்ல, நாலு முறையும் வியர்க்க விறுவிறுக்க , டிரை பண்ணினது உங்க தம்பில்ல ,  அப்போ அவருக்குதான கிரெடிட் எல்லாம் , என்ன நான் சொல்றது,  அதான் அவர் செஞ்ச கடின வேலைக்கு பேருக்கு பின்ன தேவன் போட்டாச்சு , என்ன குறை சொல்ல முடியாது பாருங்க ... அப்பறம் உங்க தம்பி எப்படி இருக்காப்ல..கல்யாணம் ஆகிடுச்சா?..

"யா இரட்டை குழந்தை இப்பதான் பிறந்திருக்கு லண்டன்ல செட்டில் ஆயிட்டான்.."

"ஓஓ அங்கேயும் கடின உழைப்புதான் போல , அதான் இரட்டை இரட்டையா ரீலிஸ் பண்றார் , நல்ல சேவை பண்ணட்டும் .பண்ணட்டும் , அப்ப போயிட்டு வர்றேன்" என்று நக்கலாக அவனை பார்த்து சிரித்து கொண்டே வெளியேற ..

"கண்டுபிடிச்சிட்டாளோ? தலையை சொரிந்தான்... 

"ஹான் நூறு சதவிகிதம் கண்டுபிடிச்சிருப்பா" என்று உள்ளே வந்த சூர்யா,

"என் கோட்டுக்கு பதிலா  மோனா கோட்டை போட்டுட்டு வந்திருக்கடா.."

"அச்சோ பெயரை பார்க்கலேயே" என்று தலையில் அடிக்க..

"பார்த்தா மட்டும் தெரிஞ்சிடும் ..

"அதெல்லாம் உன் பேர் மனப்பாடம் , நேத்து கூட பத்து லட்சம் எடுத்தேன் , இந்தா"  என அவன் ஸடெதஸ்கோப்பை தூக்கி சூர்யா மீது போட்டு வி்ட்டு , மேஜையை தாண்டி குதித்து மனைவி போகும் திசையில் தேவா ஓட ஆரம்பித்தான்..

"எங்கடா போற ,உன் பொண்டாட்டி ஆள் வச்சி கொல்ல போறா பாரு "என்று சூர்யா கத்த...

"அவ கையால சாக கூட தயார்" என கத்தி கொண்டே ஓடினான்... 

மாலை பொதுக்கூட்டம் முடிந்து வஞ்சி கீழே இறங்கி வந்தவள், கார் கதவை திறக்க  போனவள், மூக்கை சுருக்க,  இன்னொரு காருக்கு பின்னால் நின்று அவளை பார்த்து கொண்டிருந்த தேவா ,சட்டென்று மறைந்து கொள்ள .வஞ்சி காரில் ஏறி போய்விட்டாள்..

"ப்ச்  உடனே போயிட்டாளே,  சரி நாளை வரை காத்திருப்போம் "என்று முனங்கி கொண்டு திரும்ப வஞ்சி மீது இடித்து நின்றான்..  அவனை வெட்டி கூறு போடும் கோவத்தில் வஞ்சி நின்றாள்..

இனி இந்த அசுரதேவன் எப்போதும்   காதல்தேவன் !!