யுகம் 5

Yu5

யுகம் 5

5 யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா?

அறைக்கு வந்த மிலானிக்கு தானா  புலவன் முன் நின்று பயம் இல்லாது பேசினோம் நம்பவே முடியவில்லை... 

மொத்தத்தில் தன் மனதில் இருந்தது அத்தனையும் கொட்டி விட்டாள் ...  இவ்வளவு கேவலமாக லவ் ப்ரொபோஸ் செய்தது இந்த உலகத்திலேயே அவளாகத்தான் இருக்கும் ... தலையிலேயே அடித்துக் கொண்டாள்.. அந்த பதட்டத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அத்தனையும் பேசி தொலைத்து விட்டு  வந்தவளுக்கு முகத்தை கொண்டு போய் எங்கு வைக்க என்று தெரியவில்லை ...

ச்சை என்று தலையில் கொட்டி கொண்டாள்.. 

எப்படியோ அவர் வந்தார் அது போதும் .. மீண்டும் அவன் பெட்டியோடு அறைக்கு போனதே அப்பாடா நல்லவேளை எங்கேயும் போகல என்ற உணர்வை கொடுத்தது..

'இனிமே அவர் இருக்கிற பக்கமே போகக்கூடாது" என்று அரை மணி நேரம்தான் அவளால்  கடிவாளம் போட்டு இருக்க முடிந்தது...  மீண்டும் புலவன் கதவு திறக்கும் சத்தம் கேட்கவும்...  கால்கள் தானாக அவன் இருக்கும் திசை நோக்கி நகர்ந்தது..

"அச்சோ!!  இது என்ன நோயின்னு தெரியலேயே... அவருக்கு தெரிஞ்சா தானே தப்பு, இனிமே அவருக்குத் தெரியாமல் நின்னு அவரை பார்க்கலாம்..  நல்லவேளை நாம சொன்ன எதுக்கும் அடி விழாம தப்பிச்சதே பெரிய விஷயம்... ஆனா எப்படியோ மனசுல இருந்தத சொல்லிட்டேன்  என்றவளுக்கு இன்னும் காதலில் குளிக்கத்தான் ஆசை வந்தது....அவனை  விட்டு விலகும் எண்ணமே அவளுக்கு வரவில்லை... 

அவனுக்கே தெரிஞ்சு போச்சு எதுவும் சொல்லல தைரியம் ஏராளமாக வந்துவிட்டது..

அடுத்த நாள் காலையில் புலவன் எழில் காரை எடுக்கப் போக...  அவன் காருக்குள் பின் இருக்கையில் மிலானி மஞ்சள் நிற சுடிதாரில் கமகம மணத்தோடு அமர்ந்திருந்தாள்..  அவளை கூர்ந்து பார்த்து விட்டு புலவன் அமர 

"புலவா , அவ  காலேஜ்ல யாரோ ரெண்டு பொறுக்கி பசங்க மிலானி கிட்ட சேட்ட பண்றாங்க போல இருக்கு...  நீ என்ன பண்ற டெய்லி நீயே அவளை பிக்கப் பண்ணி கொண்டு வந்து விட்டுடு... அதோட காலேஜ்ல யாரும் மிலாம்பாகிட்ட போகாம பாத்துக்கோ...  யாராவது அவகிட்ட ராங்கா பிகேவ் பண்ணுனா என்ன ஏதுன்னு கேட்காம அடிச்சிட்டு வா கேஸ் ஏதாவது வந்ததுன்னா நான் பாத்துக்குறேன் ஓகேவா??" என்று எழில் முன்  கார் சீட்டில் அமர்ந்திருந்த புலவனை பார்க்க ... அவனோ கண்ணாடியில் அவனையே பார்த்து கொண்டிருந்த   மிலானியை கண்களை சுருக்கி பார்த்தான் ..

இது உன் வேலை தானா??  என்பது போல் அந்த கேள்வி அவளை சுட...மிலா,  சட்டென தலையை தாழ்த்திக் கொண்டவள்..

"அண்ணா அப்படியெல்லாம் ஒன்னும் வேண்டாம் இன்னும் ஒரு மாசம் தானே காலேஜ் இருக்கு அவர் எனக்கு துணைக்கு வந்தா மட்டும் போதும்..

"ஓஓ ,  அவ்வளவு பெரிய ஆளாகிட்டியா, என்ன பண்ணனும் ஏது பண்ணனும்னு எனக்கு தெரியும் படிப்பை மட்டும் பாரு புரியுதா?? என்று எழில் தங்கையையும் மிரட்ட..

"சரி அண்ணா" தன் அண்ணனிடம் இவ்வளவு தைரியமாக ஒரு பொய்யை சொல்லி இருக்கிறாள். காலையில் எப்படியும் புலவன் தன் காருக்கு வரமாட்டான் என்று தெரிந்தது ... ஆனால் அவன் திருமுகம் பார்த்தே தீர வேண்டும் என்ற ஆசை வேகமாக அண்ணனிடம் போய்..  இருவர் தன்னிடம் வம்பு வளர்ப்பதாக அவளே பொய் வழக்கை போட்டாச்சு..., எனக்கு யாராவது பாதுகாப்புக்கு அனுப்பி விடுங்க அண்ணா எப்படியும் எழிலுக்கும் அனலுக்கும் இவள் பக்கம் திரும்பவே நேரம் இருக்காது என்று அவளுக்கு தெரியாதா என்ன?  இடம் பார்த்து அடித்தாள் ... எங்கிருந்து இந்த புத்திசாலித்தனம் எல்லாம் வந்தது என்று தெரியவில்லை,  காதலில் வெகு புத்திசாலியாக ஓடினாள்..

என்ன கம்பெனியில இறக்கி விட்டுட்டு அவளை டிராப் பண்ணு புலவா "என்றதும் மித்ரன் என தங்க நிற போர்ட் போட்ட  ஐந்து மாடி கம்பெனி முன் காரை நிறுத்தினான் ... எழில் இறங்கி உள்ளே போக..

ஏன் இப்படி பண்ற ? என்று துரை வாயை திறந்து முத்தை சிதற விட...

ஏங்க எங்கிட்டையா பேசுனீங்க...அவன்  கோவம் கொள்கிறான் என்பது புலவன் கழுத்து எலும்பு ஏறி இறங்குவதில் தெரிய ...

"காரை எடுக்குறீங்களா , இல்ல  இங்கேயே பேசணுமா?? என்றதும் ஸ்டயரீங் வீலை அழுத்தி பிடித்த புலவன்.. காரை நகர்த்தி ஆள்  இல்லாத ரோட்டில் நிறுத்த அது வரை அவனை பார்த்து கொண்டே தான் வந்தாள்..

கருப்பு நிற சட்டைதான் அதிகம் அணிகிறான்,  க்ரீம் நிற பேண்ட் , கழுத்தில் கருப்பு கயிறில் ஒரு தாயத்து,  கையில் இரும்பு காப்பு , முடி சீவியே பழக்கம் இல்லாத சிகை ... அவ்வப்போது அதை கையால் கோதும் போதும் அந்த அழகு அவளை சொக்க வைக்கும்...   அவன் கடந்து போகும் போது நிஜாம் பாக்கு மணம் போல ஏதோ ஒன்று அடிக்கும்..  சிகரெட் அடிப்பானோ??  என அவன் கருத்த உதடு பார்த்த பிறகு பெரிய நீட் எக்ஸாம் கேள்வி போல உதிக்க.. இருக்குமோ?? இல்லை இருக்காது என மீண்டும் அந்த கருத்த உதட்டை பார்த்த வேளை கார் பிரேக் போட்டு நிறுத்த பட 

ஆவ்ச் !!என்று மிலா தன் தலையை தடவி கொண்டே அவனை பார்க்க...  சட்டென்று இறங்கி போன புலவன் அங்கே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் சிகரெட் என்பது போல கை காட்ட ... இவள் உதட்டை பிதுக்கி அவனை பார்த்துக் கொண்டே கீழே இறங்க ... சிகரெட்டை புகைத்து கொண்டு காரில் வந்து சாய்ந்து நின்றான் புலவன் ...

"சிகரெட் அடிப்பிங்களா?  அவள்  தொண்டை செருமி பேச்சை ஆரம்பிக்க 

"என்ன பேசணும் ?

"அது 

 அது 

அது..

"ஐ வவ் யூ ஆஆஆஆஆஆஆஆஅஆ என முடிக்கும் முன் கார் பேண்ட்டில் ஒரு தட்டு தட்டினான்... இவள் பயந்து அலறி விட ... 

"என்ன சொன்ன கேட்கல...

"அது அது ஒன்னும் இல்லை ...

"போய் கார்ல ஏறு என்று சுற்றி அவன் நடக்க 

"ஐ லவ் யூன்னு சொன்னேன் என்றதும் புலவன் கால்கள் நிற்க ...

"ஐ லவ் யுன்னா லவ் யூதான்... நீங்க முறைச்சு பார்த்தாலும் எதுவும்  மாறாது  ... நான் உங்களை லவ் பண்றது உண்மை. நீங்களும் லவ் பண்ணுங்கன்னு உங்களை நான் கேட்கவே இல்லை... கேட்டா தான் கோவப்படணும் .... இது என்னோட தனிப்பட்ட உரிமை ...  நான் லவ் பண்றேன் அவ்வளவுதான் டாட் ... சொல்லணும்னு தோணுச்சு சொல்லிட்டேன்...  அதுக்கு பிறகு உங்க இஷ்டம்....  சும்மா சின்ன பசங்க மாதிரி வேலையை விட்டு நின்னுடுவேன்..  காணாம போயிடுவேன்னு பயம் எல்லாம் காட்டாதீங்க .. நீங்க  வீட்டை விட்டு போனீங்கன்னா அடுத்த நிமிஷம் மிலானி செத்துப்போவா...  அவ்வளவு தான்,  சொல்லிட்டேன் இது சுத்தி வளைச்ச மிரட்டல் எல்லாம் இல்ல ..  நேரடியாவே மிரட்டுறேன் .. எங்கேயாவது போகணும்னு நினைச்சீங்க நான் செத்துருவேன் ஜாக்கிரதை" என்றவளை  புலவன் தலையை திருப்பி பார்த்தவன் மேம்பாலத்தையும் அவளையும் மாறி மாறி பார்க்க ... அவன் கேட்காத கேள்விக்கு எப்போதும் அவளிடம் விடை உண்டே...  மிலானி , ஒரு நொடி தாமதிக்கவில்லையே சட்டென்று போய் மேம்பாலத்தில் இருந்து கீழே ஓடும் ஆற்றில் குதித்து விட்டாள் ... 

அவன் இருக்க என்ன பயம் ?காப்பாத்துவான்  என்ற நம்பிக்கையை கொடுத்தது காதலா?? 

சிறிது வினாடிகள் கழித்து நீரில் நனைந்த கோழியாக மிலானி கரையில் அமர்ந்து இருக்க,  அவள் அருகே கார் சாவி மட்டும் இருந்தது...  புலவனை காணவில்லை.. 

அவளை தொட்டு தூக்கியது அவனை அன்றி வேறு யாராக இருக்க முடியும் ... 

நானா இது , அவர்கிட்ட இப்படி எல்லாம் பேசி மெரட்டினது விட்டுட்டு போயிருப்பாரோ? ப்ச் ,  அப்படி போறவரா இருந்தா,  காப்பாத்திட்டு போய் இருக்க மாட்டாரே,செத்துப்போன்னு விட்டுட்டு இல்ல போயிருப்பார் காப்பாத்திட்டு போயிருக்காருன்னா கண்டிப்பா மறுபடி வருவார்... ரொம்ப அடாவடியா நிக்க கூடாது...  கொஞ்சம் அவருக்கும் யோசிக்க ஸ்பேஸ் கொடுக்கணும்ல என்று தனக்குள்ளாக யோசித்தவள் நின்ற காரை எடுத்துக்கொண்டு வந்து வீடு சேர ... 

ரெண்டு நாளாக புலவன்  வீட்டுக்கு வரவே இல்லை .. வேலையை விட்டு போனது போலவும் பேச்சு இல்லை...  கந்தப்பன் காரை துடைத்து கொண்டு நிற்க...  மிலானி உள்ளே எட்டி பார்த்தாள் எழில்  பேப்பர் வாசித்து கொண்டு இருந்தான் அவன்,மனைவி மாதுரி அவனுக்கு காலை அமுக்கி விட்டபடி அருகே இருந்தாள்.... அனலை தேடினாள்  அனல் டிவி பார்த்து கொண்டு இருந்தான் சைந்தவி அருகே தெமென ஏதோ புளுபுளுவென பேசி கொண்டு இருந்தாள்... 

"கந்தா அண்ணா ..என்னங்க சின்னம்மா..

அது அது அவர் ரெண்டு நாளா வரலையே என்ன  "ஆச்சு அண்ணா..

"அதுவாம்மா  அவருக்கு இன்னைக்கு கல்யாணம் 

"வாட்ஊஊஊஊ கல்யாணமா??? அதிர்ந்து போய் மிலானி வடியும் கண்ணீரை துடைக்க மறந்து நிற்க கந்தப்பனுக்கு பாவமாகத்தான் இருந்தது 

"என்ன அண்ணா சொல்றீங்க என்ன திடிர்னு...

"என்னன்னு தெரியலைம்மா நேத்து ஊருக்கு போயிட்டு வந்த என்ன வந்து பார்த்தான்..

"எனக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணனும்,  ஏதாவது பொண்ணு கிடைக்குமான்னு கேட்டான் ..யாரா இருந்தாலும் பரவாயில்லைன்னு  சொன்னான்...  பேப்பர்ல 100 ஜோடிகளுக்கு இலவச திருமணம்னு இன்னைக்கு விளம்பரம் வந்ததில்ல ... அது அவன் கண்ணுல பட்டுடுச்சு .... எங்க போய் பொண்ணு புடிச்சானோ தெரியல , அந்த 100 இலவச ஜோடியில இன்னைக்கு அவனும் ஒருத்தன்..  எதுக்கு இந்த அவசர திருமணம்னு தெரியல .. காலைல 10 மணிக்கு மீனாட்சி அம்மன் கோவில்ல கல்யாணம் இப்போ மணி 9 . 20 இன்னும் கொஞ்ச நேரத்துல கல்யாணம் முடிஞ்சுடும் ,  என்னமா ஏதாவது விஷயமா... அங்கே எங்கு மிலா நின்றாள் .... 

வெறும் காலோடு மீனாட்சி அம்மன் கோவிலை நோக்கி ஓட ஆரம்பித்தாள  மிலானி... 

மீனாட்சி அம்மன் கோவிலில் மூச்சு முட்ட வந்து நின்றாள்  மிலானி..  மணி பத்து ஆகிவிட்டது வரவேண்டிய மினிஸ்டர் இன்னும் வராததால் ஜோடிகள் மாலையும் கழுத்துமாக சலசலத்துக் கொண்டு நின்றனர் ..

அந்த நூறு ஜோடிகளில் புலவனை மிலானி தேடி ஓய்ந்து போனவள்.. மினிஸ்டர் வந்துவிட்டார் என்ற சத்தமும்

எல்லாரும் வரிசையா நில்லுங்க..  இடம் மாறாமல் அந்தந்த வரிசையில் நில்லுங்க என்றதும் நூறு ஜோடிகளும் தங்கள் இணைகளோடு வந்து ஒன்றன்பின் ஒன்றாக வரிசையில் நிற்க...  நூறாவது ஆளாக புலவன் வந்து நின்றான்.. அருகே ஒரு பெண் காசு கொடுத்து வாங்கிட்டு வந்த மாதிரியே  இருந்தது...  அவனுக்கு திருமணம் முடிந்தால் பரவாயில்லை என்ற நிலை போல...  எங்கிருந்து ஆளை தூக்கிட்டு வந்தானோ தெரியவில்லை அவன் தோரணைக்கும் திணவெடுத்த மார் அழகுக்கும் சம்பந்தமே இல்லாத ஒரு பெண் நின்றாள்

மினிஸ்டர்  ஒவ்வொருவருக்காக தாலியை எடுத்துக் கொடுத்து கொண்டே இருக்க....  இவள் பார்வை மொத்தமும் வரிசையில் மெல்ல நகர்ந்து கொண்டிருந்த புலவன் மீதுதான்...  அவன் இன்னும் அவளை பார்க்க வில்லை... மிலா ,  ஒவ்வொரு அடியாக அவனை நோக்கி எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.சரியாக 99 ஆவது ஜோடி முடிந்து நூறாவது ஜோடியாக புலவனும் அந்தப் பெண்ணும் போய் நிற்க...  மினிஸ்டர் தாலியை எடுத்து அவன் கையில் கொடுக்க...  புலவன் தாலியை எடுத்து தன் அருகே நின்ற பெண்ணின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சு போட்டுவிட்டு நிமிர .. எதற்கும் அதிரா அவன் பார்வை ஒரு நிமிடம் அதிர்ந்து எதிரே நின்றவளை பார்த்தது ... 

ஆம் , அவன் கட்டிய அவசர தாலி தொங்க , தலை மூடிய முக்காட்டோடு வியர்க்க விறுவிறுருக்க நின்றாள் மிலானி புலவவேந்தன்!! 

விட்டு கொடுக்கவா இந்த ஜென்மம் ? விட்டு விலகாது இருக்கத்தானே அத்தனை  ஜனனமும்...  போராடி,  உரிமையாகி  விட்டாள் .... 

யுகங்கள் கடந்து வந்து , அவன் விருப்பம் நிறைவேற்றி விட்டாள்...