நளதம் 23,24

Nal23

நளதம் 23,24

23 நளதம் கமழும் தேவசுரா!

சக மனிதன் துடிக்கும் போது துடித்தால்தான் அவன் மனிதன் , பிறர் துன்பத்தை பார்த்து ரசிக்கும் எவனும் மனிதனாக இருக்க முடியாதே?  அசுரதேவனும் அதே நிலையில்தான் இந்த நிமிடம் இருந்தான்..

"உன்னையும் தீ வச்சி எரிக்க போறேன் என்று அசுரன் கொல்ல தேவையான கத்தி கடப்பாறை என அதற்கான பொருளை எடுத்து கொண்டு கீழிறங்கி வர ..

"ஆஆஆஆஆஆஆஆஆ வஞ்சி இல்லை .. 

அவள் கிடந்த இடத்தில் ரத்தம் மட்டும் சிதறி கிடக்க வஞ்சி இருந்த தடயம் இல்லாது மூக்கை உறிஞ்சி அவள் கிடந்த இடத்தை சுற்றி சுற்றி பார்த்தவன் ....

"சூர்யாஆஆஆஆஆஆஆஆஆஆஆ உன்னையும் கொல்வேன், அவள காப்பாத்திட்டே இருக்க என்று அலற...

ரத்த வெள்ளத்தில்  மயங்கி கிடந்த வஞ்சியை மதனும் , சூர்யாவும் தூக்கி கொண்டு ஆம்புலன்சில் ஏற்றிட..

"மோனா என்னன்னு பாரு ... உயிர் இருக்கா?.

"ஆமா சூர்யா,  ஆனா போய் சேர்ற வரை தெரியல , குழந்தைங்க எங்க? ... "

"அந்த  நாய் இங்கதான் சுத்துது,  கண்டுபிடிக்க சொல்லி ஆள அனுப்பி இருக்கேன்,  நல்லவேளை சொன்ன மோனா , இல்லை இவள காப்பாத்தி இருக்க முடியாது" தலையை தடவினான் , மோனாவை காஷ்மீர் அனுப்ப காரணமே தன் தம்பியை வேவு பார்க்கத்தான் , நேற்று தேவா வஞ்சி மர வீடு போனதும்,  சூர்யாவுக்கு சொல்லிய மோனா, அதோட ஐசு அடியாளுங்க கூட பேசிட்டு இருந்ததா அங்க வேலை பார்க்கிற , நம்ம ஆள் தகவல் சொன்னாங்க" என்றதும் சூர்யாவுக்கு தவறாக பட உடனே கிளம்பி விட்டான்.. பூரணியின் இடது கை ஐசு, அவள் மட்டும் எப்படி இருப்பாள் .. 

"ஏய் உன்ன கொல்லாம விட மாட்டேன்" என கத்தி கொண்டே கையில் கடப்பாறையை தூக்கி கொண்டு வஞ்சியை தேடி அலையும் அசுர தேவனை கண்ட சூர்யா.. 

"நீ இவள கொண்டுட்டு நான் சொன்ன தனி இடத்துக்கு போ ... சீக்கிரம் மதன் நீயும் போ,துரிதப்படுத்த.. 

"உன்ன மட்டும் தனியா விட்டுட்டு எப்படி சூர்யா..

"ப்ச் போன்னு சொன்னேன், பேசிட்டு இருக்க நேரம் இல்ல , கோ , "வண்டி வேகமாக புகையை பரப்பி கிளம்பிட, தேவா அதை தொடர்ந்து பிடிக்க ஓட..  சூர்யா போய் அவனை பின்னோடு கட்டிகொண்டு.

"விலகிடு, அவளே காப்பாத்த பார்த்தா உன்னையும் கொல்லுவேன்" என சூர்யாவை குத்த போக, சூர்யா சட்டென்று கைவிட்டு கூர்முனையை பிடித்து கொள்ள அவன் உள்ளங்கையில் கடப்பாறை குத்தி கிழிக்க..

"கண்ணை திறந்து பாரு தேவா, உன் வாழ்கையை மறுபடி மறுபடி புதைகுழி ஆக்காத... அந்த பொம்பள செத்து போச்சுடா, "

 "இல்ல , என் பிள்ளைங்கள கொல்ல வந்துட்டா ..என் பிள்ளைங்க, செத்து போச்சு , அவ எரிச்சிட்டா" என்று அழ..அவனை தாவி அணைத்து கொண்ட சூர்யா ..

"உன் பிள்ளைங்க இருக்கிற இடத்துக்கு நான் கூட்டிட்டு போறேன் வா காப்பாத்திடலாம் , "

"முடியாது பொய் சொல்ற ,நான் அவள கொல்லணும் விடு.. "

"நம்பு தேவா .. என்கூட வா, 

"அவள கொல்லணும் சூர்யா , எனக்கு அம்மு கூட வாழ ஆசையா இருக்குடா "என்று ஆறடி மாமிச மலை என நின்ற தம்பி அழுவதை பார்த்து சூர்ய பிரகாஷ் கண்ணிலும் அருவி கொட்டியது , இதற்கு வழியே இல்லையா? 

உலகமே வியக்கும் மருத்துவன் ,தன் தம்பிக்கு உண்டான நோயை குணப்படுத்த முடியாது நின்றான் ... பல இதயம் கண்டவன்,  அவன் இதய வலிக்கு மருந்து போட தெரியாது தடுமாறி அணைத்து கொண்டான்... அவன் திமிர திமிர அழைத்து கொண்டு வந்த சூர்யா 

"அதோ அந்த பொண்ணுதான் பாப்பாவை கடத்தினது ,நீ கொல்லுவியோ, இல்ல குறை உயிரா போடுவியோ, பண்ணு,  உன் வெறி அடங்கும் வரை அவளை கொல்லு போ "என்று கையில் சாட்டையை கொடுத்து அனுப்ப .. தேவாவுக்கு எதுவும் பிரித்தறிய,முடியாத நிலை ஆத்திரத்தில் மதி இழந்து நிற்க... 

ஒரு கெஸ்ட் ஹவுஸ் வாசலில் கொண்டு வந்து தேவாவை நிறுத்தினான் .. ஐசு முதுகு காட்டி நின்று அடியாட்களிடம்  பேசி கொண்டிருந்தாள்.. 

"மேடம் நீங்க சொன்ன மாதிரி வஞ்சி குளோஸ் அத்தனை அடி மரத்திலிருந்து தள்ளி விட்டுட்டான் சூர்யா வந்துட்டான் ..

"ப்ச் அவனுக்கு வேற வேலையே கிடையாதா? 

"ஆனா விழுந்த வாட்டத்தை பார்த்தா, பிழைக்க வாய்ப்பு ரொம்ப கம்மி , போற வழியிலேயே போய் சேர்ந்திடும் ,

"ஓஓஓ குட் நியூஸ் 

"குழந்தைகளை என்ன பண்ண மேடம் "..

"இது இருக்கும் வரை தேவா என்ன திரும்பி பார்க்க மாட்டான் "

"அதனால?" 

 இதுகளையும் முடிச்சிடலாம்" என்று கூறி முடிக்கும் முன்பு தேவா சாட்டையை அவள் முதுகில் பளார் என்று வீச...

ஆஆஆஆஆஆ துள்ளி துடித்த ஐசுவை கருணையே இல்லாது வஞ்சி மீது வந்த கோவத்துக்கும் சேர்த்து விளாசி தள்ளிட , சூர்யா மற்றவர்களை பந்தாடினான்.. தன் ஆட்கள் மூலம் இவளை கண்டு பிடிக்க  ஒன்னும் சிரமம் இல்லை .. ஆனால் தன் தம்பியை கட்டுப்படுத்ததான் கடினமாகி போனது .. இரத்தம் சொட்ட ஐசு வலியில் துடிக்க,  அவள் பக்கம் குத்த வைத்து உட்கார்ந்த அசுரதேவன் அவள் வலியில் அலறுவதை ரசனையாக பார்த்து கொண்டே 

"வலியே இல்லாம அனுப்பி வைக்கவா??" என்று தலையை சாய்த்து கேட்க ஐசு இல்லை என்று தலையாட்ட 

ஆமாவா?? வா உன்ன வலிக்காம கொல்லுறேன்" என அவள் காலை பிடித்து தரதரவென இழுத்து கொண்டே போய் கூறு போட,  சூர்யாவுக்கே அதை கண் கொண்டு பார்க்க முடியவில்லை .. இரத்தம் முகத்தில் சிதறி,  முடி முன்னால் விழுந்து உயிரில்லா உடலை  இன்னும்  குத்தி கொண்டிருந்த அசுரன் பூரணியை கொன்ற  அன்று எப்படி தெரிந்தானோ? அப்படியே இன்றும் தெரிய ... ஏன் வாழ பயந்து ஓடுகிறான் என புரிந்தது.. 

தேவா என,தம்பி தோளில் கை வைக்க... முடி அதிர அவனை அண்ணாந்து பார்க்க ... சூர்யாவுக்கே திடுக்கிட்டு போனது...

"செத்துட்டா..."

"இல்லை கொல்லணும் அவளையும் அவளையும் இதேப்போல கொல்லணும் சூர்யா..

ஒருவன் நல்லவன் ஆவதும்,  தீயவன் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே,  ஒருவன் மனிதன் ஆவதும் , மிருகம் ஆவதும் அதே அன்னை வளர்ப்பில்தான் , நல்ல விதை விழுந்தால் இனிப்பான கனியை அறுவடை செய்யலாம்,  விஷ விதையை விதைத்தால் விஷக்கனியைதான் அறுவடை செய்ய இயலும் என்பதற்கு வாழும் அசுரதேவனும்,  சூர்யாவுமே சாட்சி.. பூரணி தன் பாவத்தை சுமந்து கொண்டு போய் சேர்ந்து விட்டாள் ஆனால் அந்த பாவத்தின் வேர் இன்னும் அழியாது ஒருவன் வாழ்க்கையை சீர்குலைய வைத்து , அடுத்தவன் வாழ்க்கையை வாழவே விடாது தொடர்ந்து வந்து பிடிக்க,  சூர்யாவுக்கே மறுபடியும் பூரணி மண்டையை உடைக்க வேண்டும் போல தோணியது... 

"சூர்யா அப்பா "என குழந்தைகள் ஓடி வர, தன் தகப்பன்  நிலை கண்டு  பிள்ளைகள் பயந்துவிட கூடாது என நினைத்து , துள்ளிய தேவாவை அணைத்து பிடித்து மயக்க ஊசியை செலுத்த, அவன் கண் சொருகி சூர்யா தோளில் விழ குழந்தைகள் வரும் முன் தூக்கி காரில் போட்டவன்..சட்டென்று ஒரு சாக்கை எடுத்து ஐசு உடல் மீது போட்டவன்  சகஜமாக முகத்தை வைத்து கொண்டு 

"அடடே!! என் பொம்மை குட்டிங்க இங்க இருக்கா" என கையை விரித்து இருவரையும் தூக்கி கொள்ள..

"என்ன சூர்யா அப்பா ரத்தம்" ..அவன் கை காயத்தில் வடிந்த ரத்தத்தை காட்ட 

"அது ஒரு மிருகம் உங்கள வேட்டையாட வந்துச்சா?? 

"ம்ம்

"அதை உங்க அப்பா அடிச்சே கொன்னுட்டான்..

"பார்த்தியா அப்பா ரொம்ப நல்லவர் சொன்னேன் தான "என்று இளையது  சொல்ல மயக்ததில் அம்மு அம்மு என உளறிய தேவாவை பார்த்து பெருமூச்சு விட்ட சூர்யா...

"ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போ, குழந்தைங்கள நிலா கிட்ட கொடுத்துட்டு வர்றேன் .... 

"சரிங்க சார் 

"பாடியை டிஸ்போஸ் பண்ண சொல்லுங்க.. முகம் கூட அடையாளம் தெரியாது கிடந்தாள்... நாலு அடி போட்டு அனுப்ப வேண்டும் என்றுதான் நினைத்தான் .. ஆனால் குழந்தைகளை கொல்ல துணிந்தவள் பெண்ணே இல்லையே ,அவளுக்கு இரக்கம் பார்ப்பது , நமக்கு நாமே அடுத்த வினையை வைத்து கொள்வது..  போய் தொலை என்று அனுப்பி வைத்து விட்டான்.. 

 நாம நிலா அம்மா கிட்ட போகலாமா..

இளவஞ்சி தகப்பன் தேடி அங்கும் இங்கும்  முழிக்க..

"உன் அம்மா அப்பா சீக்கிரம் வந்திடுவாங்க, அங்க அண்ணன் அக்கா எல்லாரும் இருக்காங்க போகலாம் சரியா??" என்று நைஸ் பண்ணிதான் அழைத்து போக வேண்டியது இருந்தது..  வஞ்சி நிலை தெரியாது , தேவா நிலை சரியாக பத்து நாள் ஆகும் அதுவரை பிள்ளைகள் பாவமே.. 

"தம்பியை பார்க்க அமர்நாத்தை வர வைத்திருக்க.. 

"மயக்கம் தெளிஞ்சதும் குழந்தைகளை கொண்டு வந்து தேவா கிட்ட காட்டுங்க ,பிள்ளைங்க நல்லா இருக்குன்னு தெரிஞ்சா கொஞ்சம் கொஞ்சமா நார்மல் ஆகிடுவார்..

"இதுக்கு வேற என்னதான் வழி... உலகத்தையே அலசி பார்த்தாயிச்சு  விடை தான் கிடைக்க வில்லை...

"அவர் அந்த பொண்ண விட்டு விலகி இருக்கிறதுதான் சூர்யா .. எப்ப எப்படி மாறுவார்னு தெரியாதவர் கூட அந்த பொண்ணு வாழணுமா?

"அப்ப குழந்தைகள மட்டும் எதுவும் பண்ண மாட்டீக்கிறான் "

"அவர் கோவம் தாய் மேல மட்டுமே ,குழந்தைங்க மேல இல்ல சூர்யா ..

"ம்ம் தூங்கும் தம்பியை அருகே உட்கார்ந்து பார்த்து கொண்டிருந்தான்..  அவன் அசையும் போதே குழந்தைகள் அவன் பக்கத்தில் ஆளுக்கு ஒன்றாக உட்கார்ந்து ஆரஞ்சு பழம் உடைத்து கொடுத்து நெஞ்சை தடவி கொடுத்து  தகப்பனை தன் பிஞ்சு கையால் பலப்படுத்த , அவன் ரத்தம் ஏறிய கண்கள் மெல்ல மெல்ல அமைதியாக..நிதானம் ஆனதும் நடந்தது உணர்ந்து உடல் குலுங்க

"அம்முஊஊஊ பதறினான் ... 

"சூர்யா அம்மு அம்மு , நான் நான்"தன் கையை பார்த்தான் அவளை தள்ளியது அத்தனையும் நியாபகம் வர தலையில் அடித்து கதற..

"கொன்னுட்டேன் சூர்யா, என் அம்முவை என் கையால அய்யோ ஆஆஆஆ..

"உயிரோட இருக்காடா அழாத.. பத்து நாள் ஆகட்டும் கூட்டிட்டு போறேன்..

"வேண்டாம் வேண்டாம் அவ நல்லா இருக்காளா..

"இருக்கா..ஆனா நல்லா இருக்கான்னு சொல்ல முடியாது "

"அப்டின்னா ரொம்ப கஷ்டப்படுறாளா சூர்யா வலிக்குமே என் அம்முவுக்கு , எவ்வளவு உயரம் அது, அவள பார்க்கணும் சூர்யா ... 

"இன்னும் கண்ணு முழிக்கல தேவா, முழிக்கட்டும்.. 

"முடியாது கூட்டிட்டு போடா ...

"உன்ன நம்பி எப்படிடா கூட்டிட்டு போக சொல்ற 

"அதுவும் சரிதான் இப்படி ஒரு பைத்தியக்காரனை நம்பி அவ பட்டது போதாதா ? நல்லா இருந்தா சரிடா" என்று கண்களை மூடி பெட்டில் சாய , அவன் இரண்டு கண் ஓரமும் கண்ணீர் கொட்டியது அவன் மனதின் வலி தாங்க முடியாது... தன்னையும் மீறி செயல்பட்டு விடுகிறான் அந்த ஆத்திரம் அடக்க முடியவில்லை .. 

"நீ ரெஸ்ட் எடு குழந்தைங்க என் கூட இருக்கட்டும் 

இல்ல..

"ப்ச் பத்திரமா  பார்த்துக்கிறேன்.. மனமே இல்லாது தலையசைத்தான் தேவா .. யார் முகமும் பார்க்க விருப்பம் இல்லை ,மனைவி முகம் தூரம் இருந்து ஒரு முறை காட்டினால் கூட போதும் தன்னையே அடித்து கொண்டு அழுதான் .. 

இதுக்கா மறுபடி உன்ன பார்தேன்,  அந்த ஒரு இரவு அத்தனை வண்ணம் தீட்டினாயே,  எல்லாம் வெயில் கண்ட பனி போல உருகி போயிடுச்சே..

இரண்டு பக்கமும் கட்டுக்கு அடங்காத காதல் உண்டு , ஆனால் என்ன பயன்? தவித்தான் , துடித்தான், அவள் கண் முழிக்கும் வரை பல்லில் தண்ணீர் படாது கிடந்தான்

"தேவா வஞ்சி முழிச்சிட்டாளாம் சூர்யா போன் போட்டார்,  இப்ப எப்படி இருக்க ?என அமர்நாத் உள்ளே வர.. 

ம்ம் என்று சுவற்றை பார்த்தபடி பதில் வர...

"கவலைபடாத  தேவா ஏதாவது பண்ணலாம்..

"எப்ப ??என் அம்மு செத்து அடக்கம் பண்ணின பிறகா?இதையே தான் பல நாளா சொல்றீங்க போங்க,  இனி எனக்கு எந்த வைத்தியமும் தேவையில்லை" என்று இழுத்து போட்டு அத்தனை பொருளையும் உடைத்தான் .. 

தலையில் கை காலில் என வஞ்சிக்கு பல இடத்தில் காயம் , பத்து நாள் கழித்து இன்றுதான் சுய நிலைக்கு வருகிறாள் , தலையில் பட்ட காயம் நல்லவேளையாக உள்ளே எதுவும் பாதிக்க வில்லை .. இல்லை காப்பாற்ற கஷ்டமாகி போயிருக்கும் ... கண்களை திறந்த வஞ்சி சுற்றி முற்றி அவள்  இதயமானவனைத்தான் தேடினாள்..

"தேவா "என்று முணுமுணுக்க..

என்ன ஒரு காதல்??!!

கொல்ல நினைத்த அவனை மறுபடியும் அருகே பார்க்க விரும்புகிறாள் என்று சூர்யாவை பிரமிக்க வைத்தது இருவர் காதலும்..

என்ன வஞ்சி ?

"தேவா ..பார்க்கணும்..அவர் எப்படி இருக்கார்,  என் குழந்தைங்க மூச்சு திணறியது..

"ஸ்டெயின் பண்ணிக்காத குழந்தைங்க நிலா கூட இருக்கு ..

"தேவா "பதறினாள் அவளும்..

"ட்ரீட்மெண்ட்ல இருக்கான் வஞ்சி..

"அவரை பார்க்கணும் இப்பவே 

"விளையாடுறியா எழும்பி உட்காரவே ஒரு மாசம் ஆகும் அவன போய் பார்க்கணும்ங்கிற.. 

"ப்ளீஸ் பார்க்கணும் உதவி செய்ங்க "என்று கண்ணீர் வடிக்க.. 

"ப்பூஊஊஊஉ தலையை கோதினான் சூர்யா .. காதல் பையித்தியங்களை  வைத்து சமாளிக்க முடியல அவனுக்கே.. 

"அவன வர சொல்றேன் ..

"ம்ஹூம் வர மாட்டார் எங்கேயாவது போயிடுவார்..அவருக்கு நான் போறது தெரிய கூடாது ப்ளீஸ் ..."

"ப்ச் பிடிச்ச பிடியில நில்லுங்க" என்று கத்தியவன் அவளுக்கு தனி வாகனம் மூலம் தேவா இருக்கும் இடத்திற்கு அழைத்து போக ஏற்பாடு பண்ணினான்.. 

கத்தியால் காயத்தால் அவள் காதலை சாகடிக்க முடியாத அசுரதேவன் ,வார்த்தையால் அவள் காதலை சாகடிப்பான்..

24 நளதம் கமழும் தேவசுரா!!

அறையில் கண் மூடி படுத்திருந்த தேவா அறைக்கதவு திறக்கப் மூக்கில் அவன் அம்முவின் நளதம் கமழும் நறுமணம், கண்களை பட்டென்று திறக்க தலையில் கட்டு போட்டு கைகால் உடைந்து தொட்டில் கட்டி வீல்சேரில் மோனாவும் மதனும் தள்ளி கொண்டு வந்திருக்க ,சூர்யா சுவற்றில் கையை கட்டி கொண்டு சாய்ந்து நின்றான்.. உள்ளம் இரண்டும் பேச தெரியாது கதறியது ..

வஞ்சி அவன் நலன் சோதிக்க..

தேவா அவள் நலன் சோதிக்க கண்கள் நான்கும் ஒன்றை ஒன்று விழுங்கி கொள்ள, பேசாத உதடுகள் ஊமையாக அழ , கண்கள் சிவந்து தங்கள் காதல் உணர்த்த தொண்டை அடைத்தது, இருவரும் சேர்ந்து செத்து விடுவோம் என்றது அவள் ஊமை விழிகள்..

நீ வாழ வேண்டியவள் சகியே!! நான் போகிறேன் என்றது அவன் விழிகள்... வஞ்சி திரும்பி மற்றவர்களை பார்க்க..சூர்யா மக்கும் என கனைத்து..

"நாம வெளியே நிற்கலாம் வஞ்சி பேசிட்டு சத்தம் கொடு "என்றதும் சரி என்று தலையசைக்க,  மோனா மதன் வெளியேற சூர்யாவும் நகர போக 

"சூர்யா நீ நில்லு "என்ற தேவா குரலில் ஏதோ வேண்டாத முடிவு எடுத்து விட்டான் என புரிந்து சூர்யா திரும்ப... நிலா ஏன் எனும் விதமாக பார்க்க...

"இன்னும் நீ சாகலையா? "என்றவன் குரலில் வெறுப்பை தக்க வைத்து பேசினான் .. 

தேவா..

"பக்கத்தில வந்த இதை வச்சி உன் சங்கை அறுத்துடுவேன் தள்ளி போ" என்று சீற 

"அய்யோ!! ஏன் தேவா .. ப்ளீஸ் பதற வைக்காதீங்க 

ஒழுங்கா போயிடு என்ன நிமதியாக வாழ விட மாட்டியா , 

"இல்ல மாட்டேன் , நீங்க ஏதோ தப்பா முடிவு எடுக்க போறீங்க "

"ப்ச் தப்பான முடிவு தான்,  ஏற்கனவே எடுத்துட்டேனே என்னைக்கு உன்ன தொட்டேனோ? அன்னைக்கே என் நிம்மதி,  அமைதி போச்சு என்று கத்த... வஞ்சி திடுக்கிட்டு சூர்யாவை திரும்பி பார்க்க அவன் ஒன்னும் இல்ல என்று கண்ணசைத்தான்..

"எனக்கு நீ வேண்டாம்னு சொல்றேன்,  உனக்கு மண்டையில ஏறலையா ? சூர்யா மெல்ல நழுவி வெளியேறி விட்டான்,  அவர்கள் முடிவில் அவனுக்கு என்ன வேலை ..

என்ன தேவா நீங்க,  அருகே அவள் நகர முற்பட..

"பக்கத்தி வந்த ஏதையாவது தூக்கி போட்டு குறை மண்டையை உடைச்சிடுவேன்,  நீ வேண்டாம்னுதானடி இங்க வந்து கிடந்தேன் , பெரிய இவ மாதிரி பின்னாடி வந்து நிற்கிற.."

"தேவா.. நாம புருஷன் பொண்டாட்டி ..

_யிறு பாசி மணி கட்டினா புருஷன் பொண்டாட்டியா?  

"குழந்தை இருக்கு தேவா.. என்ன பேச்சு பேசுறீங்க 

"பத்து நேரம் பண்ணினா குழந்தை வரத்தான் செய்யும்,  பிள்ளை பெத்து வச்சா உனக்கு நான் உரிமையா? ஹான்,  பாரு நல்ல மாட்டுக்கு ஒரு சூடு இது நீ சொல்லி கொடுத்த பழமொழி, உன் உடம்பு பசிக்கு என்ன சுத்தி வராத, "என்றதும் வஞ்சி காதை பொத்தி கொண்டு 

"தேவாஆஆஆஆஆஆஆஆ... என்ன பேசுற ..

"ஆமாடி எனக்கும் தேவைப்பட்டது,  உனக்கும் தேவைப்பட்டது,  படுத்தோம், பிள்ளை பெத்தோம் அதோட உனக்கும் எனக்குமான எல்லாம் முடிஞ்சு போச்சி , என் வாழ்கையில பொண்ணுக்கு இடம் இல்ல,  தேவையும் இல்லை, எல்லாரும் அந்த பேய் போலத்தான் இருப்பீங்க ,   போயிடு உனக்கு குழந்தைங்க வேணும்னா,  தாராளமா கொண்டுட்டு போ இல்லை வேண்டாம்னா தந்துட்டு போ.. எனக்கு ஆட்சேபனை இல்ல ஆனா இனி ஒரு முறை என் கண்ணு முன்னாடி வந்து நிற்காத 

நீங்க என்ன அனுப்ப கண்டதையும் பேசுறீங்க தேவா ..

"உன் மேல காதல் அன்பு இருந்தா, ஏன்டி கொல்ல போறேன் ஒன்னு சொல்லவா? நீ எனக்கு பொண்டாட்டி போலவே தோணல,  காசுக்கு படுக்க வர்ற ஒரு ___ நீயும் ஒன்னுதான்,  அதான் உன் மேல பாசம் வரல , இப்ப கூட உன் உடம்பை பார்க்கத்தான் மனசு தேடுது,  காதல் அதுவாடி? என்று கொச்சையாக இருவர் காதல் வாழ்கையை பேச, வஞ்சி தேவா வாயிலிருந்து வரும் வார்த்தையை சீரணிக்க முடியாது பார்க்க..

"உன் உடம்பு பசிக்கு என்ன தவிர தீனி போட முடியாது , அதான் என்ன தேடுறீயோ ..

"போதும் தேவா விடுங்க வலிக்குது..

"வலிக்கட்டும் , அதுதான் உண்மை , என் அளவுக்கு இந்த உலகத்தில உனக்கு சுகம் தர ஆம்பள இல்லை என்ன விடாம பிடிக்கிற.

"ப்ளீஸ் தேவா பேசாதீங்க "அவள் கண்கலங்கி நீர் வரத்து அதிகமானது..

"பேசுவேன் அப்படி உத்தமியா இருந்தா , ஏன்டி என் கூட காட்டுக்கு குடும்பம் நடத்த வந்த , ஏன்டி ஒரு பாசிக்கு பல்லை இளிச்சி படுத்த,  சும்மா நடிப்பு , நல்லவ வேஷம் போட்டா நம்பிடுவேனா?" தன்னை விலக்கி வைக்க பேசுகிறானோ என அவள் இன்னும் அவன் பேசுவதை நம்பாது பாக்க..

"ஒரு வருஷத்தில ஏம்ஏல்ஏ ஆவாளாம் கேட்டா திறமையாம் , எத்தனை பேருக்குடி ______  ஆன ,உன் வண்டவாளம் எல்லாம் தெரியாதுன்னு நினைச்சியா எனக்கு முன்னாடி எத்தனை பேர் எனக்கு பின்னாடி எத்தனை பேர்னு கணக்கு சொல்லவா? 

தேவாஆஆஆஆ என்று வலித்த காலோடு எழும்பி அவன் முடியை பிடித்து கொண்டு பளார் பளார் என தேவா கன்னத்தில் அறைந்த வஞ்சிக்கொடி..

"தூஉஊஉஉஉ  உன்ன போய் உயிரா நினைச்சேன் பாரு , என்ன சொல்லணும் ,கொன்னா கூட பரவாயில்லைன்னு வந்து நிற்கிறேன் பாரு , என் காதல் உனக்கு உடம்புக்கு அலைஞ்ச காதலா தெரிஞ்சிருக்கு இல்ல ..

"தள்ளி போடி உண்மையை சொன்னதும் உத்தமி போல பேசி நடிக்கிறியா? என அவளை பிடித்து தள்ளியவன்...

"உண்மையை மறைக்க அழுது நாடகம் போடுறியோ,  இதெல்லாம் சொல்ல கூடாதுன்னுதான் வாயை மூடிட்டு இருந்தேன் மறுபடியும் பத்தினி போல,  என் முன்னாடி வந்து நடிச்சா கோவம் வரும்ல..சரி பழைய ஆசையில நானும் கொஞ்சம் தடுமாறிட்டேன் , அதுக்கு என்ன வேணுமோ அதை வாங்கிட்டு போ , அத்தோட முடிச்சிக்கலாம்.. "முடியை கோதி கொண்டான் .. வந்த போது அவன் முகத்தில் இருந்த இளக்கம் இப்போது அறவே இல்லை அவளே வெறுப்பும் கோவமும் கொண்டு அற்ப பிராணியை போல பார்த்தான், அவள் தன்மானம் சீண்டிவிட்டு கொண்டிருந்தான்..அவளை எங்கே அடித்தால் விழுவாள் என இப்போதுதான் புரிந்தது..  

"அப்படி நான் எத்தனை பேர் கூட போனதை நீ பார்த்த ?பத்ரகாளி போல முறைததாள்..  இதை விட பெண்ணுக்கு என்ன அசிங்கம் வந்து விட கூடும்..

"ஏன் பட்டியல் காட்டணுமா..  உன் கட்சி எம்பி சேனாபதிக்கும் உனக்கும் காதல்னு ஊரே சொல்லுது,  இந்தா இது நீங்க போட்ட ஆட்டம் என போட்டோவை தூக்கி அவள் மீது வீசினான்.. இருவரும் அருகே அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்..

சேனாபதி சுகாதாரத்துறை அமைச்சர் , திருமணம் மீது பற்று இல்லாது அரசியல் நாடு என ஓடும் இளம் எம்பி..  அவனை போலவே அரசியலில் தனி ஒரு பெண்ணாக நிமிர்ந்து நிற்கும் வஞ்சியிடம் ஒரு ஈர்ப்பு உண்டு ,கணவனோடு பிரிந்து வாழ்வதாக அறிந்து , ஏன் அவளை திருமணம் செய்து கொளள கூடாது அரசியலில் ஒருவருக்கு ஒருவர் பலமாக , வாழ்க்கையில் துணையாக இருக்கலாமே என எண்ணம் கொண்டு ராசுவிடம் கேட்டு அனுப்ப மகள் கருத்தே என் கருத்து என்று விட வஞ்சி அதன் பிறகு சேனாதிபதி பக்கமே போக மாட்டாள் .. சேனாவும் எதையும் காட்டி கொள்ள மாட்டான்,  ஆனால் தேவா கண்ணுக்கு தப்பவில்லை.. 

பேசினா தப்பு பண்ணினேன்னு,  அர்த்தமா ?

"ஏன் கூடவும் பேச மட்டும்தான் செஞ்ச , இப்ப ரெண்டு பிள்ளை பெக்கல.."

"அப்போ முடிவே கட்டிட்ட, அப்படிதான தேவா..

"இல்ல ஊர் சொன்னதை உண்மைன்னு சொல்றேன்.."

"ஓஓஓஓ .. 

"நீ இப்படி பின்னாடி அலைஞ்சா , எவன் எனக்கு பொண்ணு கொடுப்பான்.. அவள் விரக்தியாக சிரிக்க ..

"உன்ன பார்த்தா மட்டும்தான் எனக்கு கொல்லணும் போல இருக்கு, அதனால போயிடு,  நான் யாரையாவது கல்யாணம் கட்டிட்டு லண்டன் போகலாம்னு இருக்கேன் ..   

"அப்ப என் கதி...

"அது உன் விருப்பம் , யாரையும்  ___ சரிதான் கட்டிகிட்டாலும் சரிதான் , கட்டாத தாலிக்கு ஜீவனாம்சம் கூட தர்றேன்,  என்ன விடு,

"இது என் சொத்து, இந்தா வச்சிக்க 

"தேவையில்லை, இதை வாங்கினா, நீ சொன்னது போல காசுக்கு உன்கூட பிள்ளை பெத்ததா ஆகிப்போகும்..  "

"இது உனக்கு தரல என் குழநதைங்களுக்கு..

"பரவாயில்லையே,  அதை உன் குழந்தைன்னு ஒத்துக்கிறீயே, அவன் பழுப்பு விழி தடுமாறி நின்றது..

"உன்ன நினைச்சி வாழ்ந்த எனக்கு,  இந்த செருப்படி தேவைதான்.. வலிக்கலைன்னு சொல்ல மாட்டேன் வலிக்குது உன்ன நம்மி ஏமாந்த வலி , எதுவும் இல்லாம இருந்த உன்ன நம்பி , உன் கூட வந்தேன் பாரு , எனக்கு இந்த பேர் தேவைதான்..  நல்லா கேட்டுக்க  , உனக்காக வாழாம கிடந்து சாவேன்னு மட்டும் நினைக்காத , என்ன இழந்தது நீதான்,  இழப்பு உனக்குதான்,  எனக்கு இல்லை.. என்ன பேசுன பேச்சுக்கு கொன்னு போட்டிருப்பேன்,  ஏன் தெரியுமா விட்டேன் ,  நான் காதலிச்சது  உண்மை போயிடு இனிமே நீ செத்தாகூட உன்ன பார்க்க வர மாட்டேன்,  தேவா இதழை வளைத்து..

"நல்லா இருப்ப செத்தா கூட வந்துடாத ,என்சாவாவது நிம்மதியா இருக்கட்டும்.. அப்பறம் நேற்று நான் இன்று எம்பி நாளை யாரு? என்று நக்கல் பண்ணி சிரிக்க..அவனை தீயாக முறைத்த வஞ்சி..

"அந்த தேவை எனக்கு இல்ல 

"ஓஓஓ அப்போ என்னை நினைச்சே வாழ போறேன்னு நாடகம் ஆடிய போறியா..

"ச்சை இனி உன்ன வெறுக்க கூட நினைக்க மாட்டேன் என் நினைவகளுக்கு நீ தகுதியானவன் கிடையாது இப்படி இருக்கும் போதே நீ இந்த வரத்து வர்றியே எல்லார போல இருந்து என்ன துள்ளு துள்ளுர,  அந்த பொம்பள வயித்துல பிறந்த நீயும் சாக்கடை தான .

"ஏய்இஇஇஇஇ

"சரிதான் நிறுத்து ,நீ என்ன தொட்டதை கழுவி போட்டுட்டு போயிட்டே இருப்பேன் ,அந்த தைரியம் எனக்கு உண்டு...

"அதையும் பார்க்கலாம் எத்தனை நாளைக்குன்னு என்று தேவா சிரிக்க 

வஞ்சி  போன் மணி அடிக்க.. அதை எடுத்து காதில் வைத்தாள் 

"அப்பா சொல்லுங்க , 

"உடம்பு எப்படி இருக்கு? 

"நல்லா இருக்கேன்,  என்ன விஷயம் .. 

"தங்கம் எம்பி சேனாதிபதி வீட்டுல இருந்து வந்திருக்காங்க..

"என்ன விஷயமாம்?

"அது உன்ன பொண்ணு கேட்டு... தடுமாறி பேச..தன்னை கேவலமாக பார்த்த தேவாவை ஒரு தரம் பார்த்தவள் இழுத்து மூச்சை விட்டு கொண்டு .. 

"என் குழந்தைங்க என் கூடதான் இருப்பாங்க அதுக்கு சம்மதம்னா கல்யாணத்தை , அடுத்த மாசம் வச்சிக்க சொல்லுங்க "என்றவள் விசிலடித்து கொண்டிருந்த தேவாவை பார்த்து கொண்டே ..

"முதல் பத்திரிகை என் மாஜி புருஷனுக்கு கொடுக்கணும்னு சொல்லுங்க.. தடபுடலாக கல்யாணம் வைக்க ரெடி பண்ணுங்க" என்று சொல்லி வைக்க..

"ஓஓ விஷயம் வெளிய தெரிஞ்சதும் அப்படியே கல்யாண நாடகமா ,ச்சை கேவலமான பொழப்பு ..

"இன்னொரு வார்த்தை பேசின அவ்வளவுதான்..  

உன் முன்னாடி வாழ்ந்து காட்டுறது விட கொடுமை ,தண்டனை உனக்கு வேற இல்லை .. காட்டு மிருகம் கூட வளர்ந்து,  விலங்கா மாறி போன உன் கூட வாழ போராடுறது விட, அந்த சேனாபதி எவ்வளவோ மேல் ... காத்திரு கல்யாண பத்திரிக்கையோடு  வர்றேன் . "என்றவள் காயத்தோடு நொண்டி நொண்டி நடந்து போக... 

"இன்னொரு வாழ்க்கை அமைச்சிக்கன்னு சொன்னா கேட்கவா போற அம்மு , பேசனது உனக்கு வலிச்சதோ இல்லையோ , எனக்கு வலிச்சது.. உன் காதல் பனியை போல வெண்மை .. ஆனா அதுக்கு நான் கொடுத்து வைக்கல அம்மு,  என்ன நேசிச்ச உன்னால இன்னொருத்தனை அவளளவு சீக்கரம் நேசிக்க முடியாது , என்ன வெறுத்தா ஒருவேளை சேனாவை  நேசிக்க வாய்ப்பு உண்டு,  வலிக்குது ஆனா அந்த வலியை தாங்கிக்கிறேன் அம்மு,  ஏன்னா நான் உனக்கு கொடுக்கிற வலியை விட இது குறைவுதான் "என போகும் வஞ்சியை மறையும் வரை பார்த்தான் தேவா ..

இதைத்தான் செய்ய வேண்டும் என அவள் மறுபடி வந்த அன்றே நினைத்து விட்டான், ஆனால் அவனும் மனிதன் தானே தடுமாறி போனான் அவள் காதலில் ... 

"தேவா அவ என்னவோ சொல்றா என்னடா அது என்று சூர்யா வந்து தேவாவிடம் கேட்க..

"அவ வாழட்டும் சூர்யா என்ன நினைச்சிட்டு இருந்தா வாழவே மாட்டா..

"தேவா 

"முடிஞ்சா அவ கல்யாணத்தை பார்க்க என்ன கூட்டிட்டு போறியா,  அவ பூவும் பொட்டுமா இருக்கிறதை பார்க்கணும் .... 

"ம்ம் சூர்யாவுக்கும் அவன் செய்தது சரி என்றுதான் தோணியது தீர்வு இல்லாத ஒன்றுக்கு தீர்வை யோசிப்பது விட வேறு தீர்வை உருவாக்கி விடுவது நல்லது தானே..

நாடு முழுவதும் அவள் திருமணம் நேர்மறை எதிர்மறை வதந்தியை கிளப்ப .. 

"வாழ போறது நான் யாருக்கு வலிக்குது "என்று சேனா முடித்து விட்டான்..

ஒரு மாதத்தில் வஞ்சி குணமாகி விட்டாள் அவள் மன தைரியம் தேவா மீது கொண்ட ஆத்திரம் எல்லாம் சேர்ந்து தன்னை  மறுபடியும் எஃகாக உருமாற்றி கொண்டாள்.. 

இதோ சென்னையில் திருமணம் எளிய முறையில்தான் சேனா ஏற்பாடு பண்ணி இருந்தான் , மணமகனாக சேனாதிபதி மேடையில் அமர்ந்திருக்க.. அவனை முறைத்து கொண்டிருந்த இளவஞ்சி, இளவேணிறை  பார்த்து கண் சிமிட்டி சிரித்தவன் வா என்று அழைக்க , குணா, தீனா மடியில் இருந்த குழந்தைகள் முகத்தை திருப்பி கொண்டது.. அவள் தன் தகப்பன் மீது காட்டும் வெறுப்பை பிள்ளைகளுக்கு காட்ட தெரியாதே.. 

நிமிர்ந்த நடையோடு பட்டுச்சேலையில் வந்து வஞ்சிகொடி சேனா அருகே உட்கார,  மந்திரம் ஒலிக்க ஆரம்பிக்க, எரியும் தீயில் தன்னவன் நினைவுகளை எரிக்க முயன்று கொண்டிருந்தாள்..

"போதும் நீ தந்த காதலும் காயமும், முழுதாக உன்ன வெறுத்து ஒதுக்கி விடுகிறேன்" என்று அதைதான் மந்திரமாக சொல்லி கொண்டிருந்தாள்..

மண்டப வாசலில் சூர்யா கார் வந்து நின்றது முன் இருக்கையில் தாடியும் கலைந்த சட்டையுமாக தேவா சாய்ந்து அமர்ந்து மேடையை பார்த்து கொண்டிருந்தான்... 

"தேவா..

"ம்ம் 

"போயிடுவோம்டா..

"கொஞ்ச நேரம் சூர்யா , இனி அவளை பார்க்க முடியாதுல்ல இனி அவ அசரதேவனின் வஞ்சிக்கொடி இல்லைல்ல  ..

"இப்ப கூட உண்மையை சொல்லிடலாம் தேவா ..

"ஆஹான் வேண்டாம் அவளை இதுக்கு சம்மதிக்க வைக்க வச்சது பெருசு..

"அவளுக்கும் இது கஷ்டம்டா, உன்ன நினைச்சிட்டு அவன் கூட வாழ முடியாது தேவா..

"அவன் என்ன விட நல்லவன்டா பார்த்துப்பான்,  நம்பிக்கை இருக்கு,  நான் கொடுத்த காயத்துக்கும் சேர்த்து மருந்து போடுவான் என் பசங்களை ?

"பார்த்துக்கிறேன்... 

"தேவா தாலி கட்ட போறான்டா ... தடுத்திடலாம்டா..

"ம்ஹூம் வண்டியை எடுத்துடு" ...வண்டி நகர சேனாபதி தாலியை அவள் கழுத்தில் கட்ட உயர்ததுவதை பார்த்து கொண்டே தேவா நகர..

"கெட்டிமேளம் !!கெட்டிமேளம்" என்று மேள தாளம் முழங்கிட அந்த சத்ததத்தை புன்னையோடு காதுகளில் வாங்கி கொண்ட தேவா தலை சரிந்து சூர்யா தோளில் விழ...

"தேவாஆஆஆ காரை நிறுத்தி அவனை தலையை தூக்கிட மூக்கு வழியே ரத்தம் கொட்டி கொண்டிருந்தது ..மருத்துவன் அறிவானே அவன் இதயத்துடிப்பு..மனைவி தன் வாழ்வை  கைமாறி போவது தாங்காது தன்னை மாய்த்து கொள்ள துணிந்து விட்டார் என புரிந்து கொண்ட சூர்யா..

"கோழையாடா தேவா.."

"என் அம்மு,  இன்னொருத்தன் கூட வாழ்...ற...தை .... பா....ர்க்கிற அளவுக்கு ...... நான் வீரன் இல்லை ... சூர்யா.... 

"தேவா" தம்பியை தூக்கி கொண்டு மருத்துவனைக்கு ஓடிட , அவனை நாலு மருத்துவர்கள் செக் செய்ய, சூர்யாவுக்கு மூளை வேலை செய்ய மறந்து நின்றது 

"சூர்யா , அவன் ஸ்லோ பாய்சன் ஆறு மாசத்துக்கு மேல எடுத்திருக்கான்டா இன்னைக்கு அளவுக்கு அதிகமா எடுத்திருக்கான்... "சூர்யா பொத்தென்று தம்பி அருகே அமர..

"என்ன மருந்து தின்னான்னே  தெரியல , தெரிஞ்சாதான் மருத்துவம் பார்க்க முடியும்,  பாய்சன் இரத்தத்தில கலந்திடுச்சு சூர்யா "மதன் வந்து நண்பன் தோளை தட்டி கொடுக்க..

"தேவா இந்த அண்ணன் கூட உனக்கு வேண்டாம்டா, வாயை திறந்து என்ன மருந்துன்னு சொல்லுடா உனக்கு வேணும்னா,  நான் வேண்டாமா இருக்கலாம் ., எனக்கு நீ வேணும்டா" .. என்று அவனை மடியில் போட்டு கொண்டு சூர்யா அழ.. அவன் சிவப்பு இதழ்கள் சிரித்தது...

"ப்ளீஸ் தேவா என்னடா தின்ன .. 

"சொல்ல ...மாட்டேன் என்றவன் உயிர் கருவி கொஞ்சம் கொஞ்சமாக குறைய..

"என்ன புதைக்கும் போது இதையும் சேர்த்து வச்சி புதைச்சுடு "என முத்துமணி பாசியை காட்டியவன்...

"சூர்யா ..

"ம்ம்

"எனக்கு ஒரு சத்தியம் பண்ணி கொடேன்.. 

சொல்லு 

"நான் செத்தது கடைசி வரை என் அம்முவுக்கு தெரிய கூடாது.. இந்த உலகத்துக்கே தெரியாம என்ன புதைச்சுடு சூர்யா ,அவகூட வாழ்ந்த அந்த அழகான மரவீட்டுல நான் இருக்க விரும்புறேன் என்ன அங்க அடக்கம்...பண்ணி.....டு சூ..ர்யா ... உன்ன எனக்கு ....பி...டி...க்கும்..டா யாருக்கும் வராதா  இந்த  கண்ணீர் எனக்காகவா சூர்யா? என்று கண்கள்  சொருகி மூக்கு வழியே ரத்தம் கொப்பளிக்க பேசும் தம்பியை காப்பாத்த முடியாது சூர்யா அழுதான்,  கத்தி அழ வைத்த பெருமை அவன் தம்பியைச்சாரும்

தேவா ..

அண்ணா ..

என்னடா ?

"என் அம்முவை காதலிக்கிறேன்னு கத்தி சொல்லணும்.. சொல்லி தாயேன்...

"ஐ லவ் யூன்னு சொல்லணும்..

"ஐ ...லவ்இஇஇஇஇ அ...ம்....முஊஊஊஊஊஊஊஊஊ கோடு நீள் கோடாக விழுந்து அவன் மரணத்தை உறுதிபடுத்த 

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ தேவாஆஆஆஆஆஆஆ" என்ற தமையன் சத்தம் கேளாது தொலைவு அசுரதேவன் போய்விட்டான்..

அவளோடு வாழத்தானே தடை,  அவள் நினைவுகளோடு சாவ என்ன தடை? தன் அம்முவின் அழகான நினைவுகளோடு  அசுரன் மண்ணை விட்டு மாய்ந்து போனான்..

யப்பா ஒரு ஹீரோவையாவது போட்டு தள்ளணும்னு நினைச்ச ஆசை இன்று தான் நிறைவேறியது பரம திருப்தி ஹிஹி..