யுகம் 9

Yu9

யுகம் 9

9 யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா??

மாலை மித்ரன் கண்ணாடி மாளிகை முழுக்க கோலாகலமாக மிலானி பிறந்தநாளுக்கு தயாராகிக் கொண்டிருந்தது ..

சென்னையின் மிகப்பெரிய பணக்காரர்கள் நடிகர் நடிகைகள் தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள் என்று கூட்டம் அலைமோதியது...  அண்ணனும் தம்பியும் சொத்தை குவிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்கள் தான்... சைந்தவியும் மாதிரியும் வைரத்தில் ஜொலிஜொலித்தனர்..

என்னடி சைந்தவி வாய் ஒரு பக்கம் கோணி இருக்கு கர்ச்சீப் கொண்டு வாயை மூடிக்கொண்டு சைந்தவி அலைய  மாதுரி அதை பிடுங்கி அவள் உப்பி இருந்த வாயை பார்த்துவிட்டு கேட்க

"அதுவா நேத்து ராத்திரி மூடு வந்து என் புருஷன் உதட்டை கடிச்சிட்டான்..

"பஸ்ட் நைட்ல கூட இப்படி கடிச்சு வச்ச மாதிரி ஞாபகம் இல்லையேடி

"அதான் கடிச்சுட்டாருன்னு சொல்றேன்ல அக்கா ,  நம்பி தொலையேன்..

"என்னமோ நடந்து இருக்கு உதட்டை பார்த்தா கடிச்ச மாதிரி இல்லையே அடிச்சு ரெண்டா பிளந்த மாதிரில இருக்கு...

" நானே வேதனையில இருக்கேன்,  நீ வேற வேதனையை கூட்டாத என்று  சைந்தவி மாதுரியை கட்டிக்கொண்டு நேற்று நடந்ததை கூற ..

"அச்சோ பாவமே ,  சிரிப்பும் வந்தது பாவமாகவும் இருந்தது

"ஏன்டி இதுக்குதான் சொன்னேன்,  சும்மா இருடின்னு கேட்டியா"

"ம்ம் ,  எல்லாம் நாத்தியால வந்தது...  என்ன மாட்டி விட்டுட்டா..  என்னைக்காவது ஒரு நாள் அவ மாட்டாமலா இருப்பா... 

"அத விடு ரொம்ப வலிக்குதா?

ம்ம் 

"மருந்து ஏதாவது போட்டு விடட்டா?

அதான் அடிக்கிறார்னு தெரியுதுல்ல ஓட வேண்டியது தானடி ... எதுக்கு நின்னு அடியை வாங்குன

"எங்கக்கா ஓட...  லைட் ஆஃப் பண்ணிட்டு கும்மாங்குத்து குத்திட்டான் படுபாவி... நமக்கு தான் லைட் ஆப் பண்ணுனா கண்ணு தெரியாதே..  எல்லாம் ஊமை குத்தா விழுந்தது...

'சோ , ஆமா அவ எதுக்கு நடு ராத்திரி வெளிய போனா"

அதான்  தெரியல கண்டிப்பா ஏதோ ஒன்னு இருக்கு எத்தனை நாளைக்கு தான் மறைச்சு ஒளிச்சு வைக்குறான்னு பாப்போம் .. 

போதும்டி ஏற்கனவே துப்பு துலக்குறேன்னு வாய் கிழிஞ்சு போய் திரியிற .? எதையாவது செஞ்சு மறுபடியும் மாட்டிக்காத...  போய் ஒரு ஓரமா உட்கார்ந்துக்குவோம்" என்று இருவரும் தங்கள் குடும்பங்களோடு போய் அமர்ந்து கொண்டனர்

பார்ட்டி ட்ரிங்கர் என்ற பெயரில் நாகரீக குடிகாரர்களுக்கான இடமும் அமைக்கப்பட்டிருந்தது... 

மிஸ்டர் எழில் பர்த்டே பேபியை வர சொல்லுங்க" என்று டாப் நடிகர் ஒருவன் ஆர்வமாக மிலானியை தேடினான் 

பின்ன , பூலோகத்து ரம்பை போல் ஒப்பனை இல்லாது சுற்றிவரும் எழில் தங்கையை யாருக்குத்தான் பிடிக்காது ... ஆனால் , எழில் தான் தங்கையை பொக்கிஷம் போல் வீட்டுக்குள்ளேயே வைத்து பாதுகாத்து விடுவான்...  அவனுக்கு தன் தங்கை கௌரவமாக வாழ வேண்டும்,  அதற்கு ஏற்ற மணமகன் இன்னும் இந்த உலகத்திலேயே இல்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவன் ... அவளுக்காக மணமகனை எங்கெல்லாமோ புரட்டி போட்டு தேடிக் கொண்டிருக்கிறான்..  இந்த குடும்பத்தில் கவுரவமே தன் தங்கையிடம் தான் இருக்கிறது என்று ஆணித்தரமாக நம்பும் அண்ணனும் தம்பியும் அவர்கள் ...  அந்த நடிகனின்,  பார்வை எரிச்சலை கொடுத்தாலும் ... பிசினஸிலும் அவன் சேர் இருப்பதால் பல்லை கடிக்கத்தான் வேண்டியது இருந்தது...ஏனென்றால் அவனும் பணக்காரன் ஆயிற்றே ... 

"அது நேத்துதான் புதுசா டைமண்ட் நெக்லஸ் வாங்கி கொடுத்தேன் ..அது அவ கழுத்துக்கு செட்டாகலேன்னு காலையில சொல்லிக்கிட்டு இருந்தா , புதுசா போய் வாங்கிக்க  சொன்னேன் சோ வாங்கிட்டு வர லேட் ஆயிடுச்சு ... இப்பதான் கிளம்பிகிட்டு இருக்கா...  இறங்கி வந்துடுவா..

ஓஓஓ வரட்டும் வரட்டும் வெயிட்ங் என்றதும் ஆரவாரமான விளக்கு ஒளிகள் , வயலின் இசை எல்லாம் ஆர்ப்பரிக்க மாடிப்படியில் எல்லோரின் ஆர்வத்தையும் தவிடு பொடியாக்கி சாதாரண காட்டன் சேலையில் கழுத்தில் எதுவும் இல்லாமல் வெற்று கழுத்தாக நடந்து வந்து கொண்டிருந்தாள் புலவனின் மனைவி மிலானி..

எல்லோரும் அவளை பார்க்க,  ஆனால் அவளைப் பார்க்க வேண்டிய ஒருவனோ சாப்பாடு வைக்கும் இடத்தில் இலையை கழுவிக் கொண்டு நின்றான்...  மாடிப்படியில் இருந்து இறங்கி வந்த மிலானியின் கண்கள் தன் கணவன் எங்கே நிற்கிறான் என்று அந்த கூட்டத்தில் தேடி,  இலைகளை தண்ணீர் தெளித்து வைத்துக் கொண்டு இருந்த புலவனை பார்த்து அப்படியே சுருங்கிப் போனது...

அதற்குள் அனல் தங்கையின் கையை அழுத்திப் பிடித்தவன்..

"நிலா என்ன இது வாங்கிட்டு வந்த பட்டு சேலை வைர நெக்லஸ் எதுவுமே போடாம இப்படி சாதாரணமா வந்து நிக்கிற" என்றதும் திடுக்கிட்டு தன் அண்ணனை பார்த்த மிலா

"அது வந்து அண்ணா ,வாங்கிட்டு வந்த சேலைக்கு ஜாக்கெட் பிட் ஆகல,  நெக்லஸ் ரொம்ப குத்துது போட முடியல,  அதான் இந்த சாரி கட்டிகிட்டேன்..

"பிச்சைகாரி மாதிரி இருக்கு,  போய் வேற  மாத்திட்டு வா" என்று அனல் பல்லை கடிக்க..

ப்ச் ,  சரி வந்தது வந்து தொலைச்சுட்டா இனி போனா எல்லாரும் ஏதாவது பேசுவாங்க , அனல் யாரும் அதை கண்டுக்கல விட்டுரு..  பார்ட்டி முடிஞ்ச பிறகு பாத்துக்கலாம் வா,  வந்து கேக் கட் பண்ணு என்று எழில் சிரித்த முகமாக தங்கையின் கையை இழுத்துக் கொண்டு போக ...

ஆடம்பர ஆளுயர கேக் முன்னால் மிலானி நிற்கவைக்கப்பட்டாள்...  பிறந்தநாள் வாழ்த்து பாடல் இசை முழக்கம் , வானவேடிக்கை,  பலூன்கள் வெடிப்பு , மத்தாப்பு கொளுத்தல் என்று எல்லாவற்றிற்கும் இடையில்  மிலானியின் கையை இரு  அண்ணன்களும் பிடித்துக் கொள்ள...  கேக் வெட்டப்பட்டது..

ஆனால் அவள் கவனம் இந்த கொண்டாட்டம் எதிலேயும் இல்லை..  தண்ணீர் கேனை தோளில் வைத்து சுமந்து கொண்டு சென்ற புலவனை பார்த்தது...  சுட சுட குழம்பினை வாளியில் ஊற்றிக் கொண்டிருந்த அவனின் கைகளை பார்த்தது...  அங்கும் எங்கும் நிற்க நேரமில்லாமல் தொண்டை வரண்டு,  அவள் பிறந்த நாளுக்கு வேலை செய்து கொண்டிருந்த புலவனை தான் பின்னால் துரத்திக் கொண்டே இருந்தது ..

ஒரே ஒரு முறை என்னை திரும்பி பாருடா, போதும்!!  அதுவே எனக்கு நீ கொடுக்கும் பிறந்தநாள் பரிசு என்று ஏக்கத்தில் பெருமூச்சு விட,  அந்தப் பிறந்தநாள் பரிசை கூட கொடுக்க அவனுக்கு மனமில்லை என்ற போது .. அவள் என்ன செய்ய முடியும்... 

எல்லாரும் சாப்பிட அமர

"மிலா அண்ணிங்க கிட்ட போய் உட்கார்ந்து சாப்பிடு என்று விட்டு அனலும்,  எழிலும் குடிகார மட்டைகள் பக்கமாக போய் விட்டார்கள் ..பார்ட்டி என்றால் வயிறு முட்ட குடிக்கும் ஆட்கள்தான் இருவரும் ... 

மாதுரியும் சைந்தவியும் ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒருமுறை பார்க்கும் தன் குடும்பத்தோடு சுற்ற ... இவளை கவனிக்க யாரும் இல்லை...  இதுதான் சமயம் என்று அறிந்த மிலா இருட்டில் பதுங்கி பதுங்கி புலவன் நிற்கும் இடம் நோக்கி ஓடினாள்...

சாப்பாடு பரிமாறி விட்டு குறைந்த சால்னாவை எடுக்க புலவன் பின் பக்கம் போக .... அவனை மறைத்த படி மிலானி நின்றாள்.... 

எதுவும் பேச வரல இந்தாங்க என்று தண்ணீர் பாட்டிலை அவன் முன் நீட்ட ...

அவனுக்கும் அது தேவை..  நாக்கு வரண்டு கிடந்தது மதியம் ஆரம்பித்த வேலை,  இப்போது வரை முடியவில்லை...  விடியல் வரை ஒதுங்க வைத்து முடித்து விட்டுதான் தூங்க முடியும் .. எங்கே அவன் வயிற்றை பார்க்க ... அதை வாங்கி கடகடவென சட்டையில் தெறிக்க  ஒரு பாட்டில் நீரையும்  குடித்து முடித்து காலி கேனை எறிய போக .. மிலா அதை வாங்கி அவன் வாய்  வைத்து குடித்த இடத்தில் தன் உதட்டை வைத்து மீதி இருந்த ரெண்டு சொட்டு நீரை குடித்த அவளை சலனமில்லாது புலவன் பார்க்க ...

பிறந்தநாளுக்கு முத்தம் தான் தர மாட்டீங்க அதான் நானே என்று வெட்கத்தில் சிவந்து போய் அவன் அருகே போன மிலா தன் சேலை முந்தானை எடுத்து அவன் சட்டை மீது வடிந்த நீரை துடைக்க போக அவன் நகர முற்பட ,  அருகே இருந்த மரத்தில் இடித்து நின்றான்... அவன் அருகே ஒட்டி நின்ற மிலா ...

கடவுள்..என் பக்கம் புருசரே,  பேசாம நீங்களும் என் பக்கம் வந்துடுங்க என்று  அவன் காதில் கிசுகிசுக்க.. சந்தன வாசம் அவன்,மூக்கு வழி மூளையை போய் அடைய .. இரண்டு நொடி தடுமாறிய வேலை  உதடுகள் ரெண்டும் நச் என்று இணைந்து கொண்டது..  அவள் கொடுக்க வேண்டும் என நினைக்கவில்லை.. தீடிரென அந்த பக்கம் விளக்கு மொத்தமும் அணைய ... அவன் கன்னத்தில் கொடுக்க நினைத்து  அவள் உதட்டை குவிக்க புலவன் முகத்தை திருப்ப,  உதடுகள் இணைந்து போக நுங்காக அவன் உதட்டை இழுத்து கொள்ள  தப்பும் தவறுமாக அவள் ஆழ் முத்தம் பழகிட... 

அவள் தவறை அவன் அனுபவித்தானோ??  இன்னும் இருட்டில் அவளோடு நகர மரத்தில் புலவன் சாய்ந்து நிற்க அவன் உயரத்துக்கு குதிகாலை தூக்கி மிலா கண்ணை மூடி ரசித்து அவன் பிடறி உள்ளே விரலை விட்டு அலைந்து,  கொண்டே  முத்தத்தை தொடர..  அமுக்கினி நன்றாக இதழை கொடுத்து தின்னுக்க என்பது போல நின்றான் ... அவன் மீசை முடியோடு அவள் கடித்து  இழுக்க இவன் மெல்ல அவள் கீழ் உதட்டை சப்ப போக...  விளக்கு ப்ளீச் என்று தூரத்தில் எறிய...  புலவன் அவளை பிடித்து தள்ள போக ...அவள் விடாது அவன் அருகே நின்று  கொண்டே ...

"நான் உங்க பொண்டாட்டி மறந்து போகாதீங்க,  இது சகஜம் தான் அவன் சட்டையிலிருந்து வந்த கற்றாழை வாசத்தை ஆழ்ந்து  உறிஞ்சு எடுத்தாள்....  

"உன் ஆசைக்கு நான் ஊறுகாய் இல்லை ஏதாவது தேவைன்னா,  உன் அண்ணன் கிட்ட சொல்லு கல்யாணம் பண்ணி வைப்பான்  என்று அவளை தள்ளிவிட சட்டென்று கண்ணீர் துளிர்த்து விட... 

"என்ன சொன்னீங்க நான் அதுக்கு அலையுறவ போல தெரியுதா?? என் கண்ணை பார்த்து சொல்லுங்க "

"பின்ன ஒரு  ஆம்பள பின்னாடி இப்படி அலைஞ்சா இதுக்கு பேர் என்ன ? "என்றான் அவள் சிவந்த உதட்டை வெளிச்சத்தில் பார்த்து கொண்டே

"வேற ஆம்பள பின்னாடி அலைஞ்சாதான் தப்பு , தாலி கட்டின புருஷன் பின்னாடி அலையுறது தப்பா தெரியலேயே..."

ப்ச் ..

"சரி என்ன பிடிக்கலைல்ல இந்தாங்க தாலி இதை அத்து போட்டுட்டு போங்க ... புலவன் கை தாலியை  நோக்கி போக தாலியை  கையில்  இறுக்கி பிடித்து கொண்ட மிலா 

"ஆனா நான் கொடுத்த பத்து முத்தத்தை திருப்பி கொடுங்க , அப்பதான் உங்க தாலியை திருப்பி தருவேன் அதோட இப்ப தந்த லிப் கிஸ்ஸையும் சேர்த்து "

ஏய்இஇஇஇஇஇஇ என்று புலவன் கை அவள் கன்னம் வரை சென்றிருக்க...  மிலா கண்களை மூடி பயத்தில்  நிற்க...  அவன் வாசம் இல்லாது கண்களை திறக்க புலவன் வேலையை பார்க்க போய்விட்டான்..

"ஸ்ப்பா , ரொம்ப கஷ்டம்பா" என்றவள் அருகே குமட்டும் வாடை அடித்து திரும்ப..  அந்த நடிகன் வழிந்து கொண்டு இருட்டில் நிற்க 

"எ....ன்...ன ??"என்று அவள் தடுமாற 

"லவ்லி உன் மேல எனக்கு ஒரு கண்ணுஊஊஊ ஐ லவ் யூ" என்று அவள் இடையை அவன் கண் பார்க்க போக..!  நடுவே வந்து புலவன் நின்றான் ...

நீ போ 

ம்ம் என்று  மிலானி கூட்டம் இருக்கும் பக்கமாக போய் விட..  நடிகன் மது போதையில் தவறி விழுந்து கைகால் உடைந்து விட்டதாக சிறிது நேரத்தில் நாலு பேர் தூக்கி கொண்டு ஓடினர்..

என் புருஷன் ஆற்றே விடுவாரா என்ன,  அவன் பைத்தியம் தீரவே கூடாது என்ற அளவு முத்தி போனாள்.. 

மிலானிக்கு புருஷனை விட்டு பார்வை அகற்ற முடியவில்லை கையை உதறி கொண்டே அவன் இவள் பக்கம் திரும்பிட மிலா உதட்டை குவித்து முத்தமிட  புலவன் சட்டென்று தலையை குனிந்து கொண்டான்.... 

விழா முடிந்து இடம் வெறிச்சோடி கிடந்தது..

புலவன் பந்தியில் கடைசி ஆளாக.. இலையை போட்டு அமர ...தன்  அண்ணன் இருவரும் மட்டை , அண்ணிகள் அறை போய் விட்டனர் ..

இவள்தான் புருஷன் அருகே போகவே காத்து கிடப்பாளே...  புலவன் இலையை விரிக்க .... இடையில் தூக்கி கட்டிய சேலேயோடு இஞ்சு இடை அவன் கண் முன் தெரிய ...

யாரென கூற வேண்டுமா?தலையை தூக்கிட

 மிலா சாம்பார் வாளியோடு நின்றாள்...  அவன்  எழும்ப போக ..அவன் கையை பிடித்து தடுத்து அமர வைத்தவள் .. 

"நான் வைக்கிறேன்,  என் பிறந்த நாள் அன்னைக்கு யாரும் பசியில இருக்க கூடாது ப்ளீஸ்" என்றதும் புலவன் அமர... 

உணவு வாளியில் முடிந்த உணவுகளை விக்கித்து பார்த்தவள் ... அடியில் கிடந்த நாலு இட்லியை தூக்கி கொண்டு வந்து அவன் இலையில் வைத்து கொஞ்சமா கிடந்த சாம்பார் சட்னியை ஊற்ற...  புலவன் பசியில் அதை வேகமாக தன் வாயில் வைக்க போக ... சட்டென்று அவன் கை பிடித்து தன் வாயில் வைத்தவள்..

"நானும் சாப்பிடல பசிக்குது" என்றவளை கண்கள் சுருங்க அவன் பார்க்க .. 

சாப்பாடு இவ்வளவு தான் இருக்கு நானும் இதுல சாப்பிடவா?? புலவன் ஒருபக்க உணவில் அலைய 

இலையில் இருவர் கையும் ஒருசேர இணைந்தது அவன் எச்சில் அவளுக்கு அமுதாக,  அவள் எச்சில் அவனுக்கு அமுதாகி உண்டு முடித்தனர்... 

"என்ன பரிசு தர போறீங்க??... கையை சட்டையில் துடைத்து கொண்டு புலவன் தூக்கத்துக்கு கொட்டாவி விட ... 

"ஏதாவது பேசுங்களேன்.. 

"என்ன பேசணும் ? 

"ப்ச் கிப்ட் கேட்டேனே..

"கேட்டா வாங்கி தரணும்னு அவசியம் இல்லை என்று போக போனவன் முதுகு பக்க சட்டையை இழுத்து பிடித்தவள் .... 

"வேணும் கொடுங்க 

"ப்ச் வாங்கல '

சரி மு....த்.......த அவன் திரும்பி பார்த்த பார்வையில்  நாக்கை கடித்து 

ஏதாவது தாங்க இல்லை  சட்டையை விட மாட்டேன்  ...  என்று அடம் பிடிக்க!..  புலவன் சட்டை பட்டனை கழட்டி சட்டையை அவள் கையில் கொடுத்து விட்டு ஆளை விடு என்பது போல  போய்விட..

ரொம்ப தான்!!  என்று காலை உதைத்த மிலா அவன் வியர்வை சட்டையை தூக்கி கொண்டு அறைக்குள் ஓடியவள்..  படுக்கையில் அவன் சட்டையை போட்டு அதன் மீது முகம் வைத்து படுக்க...  ஏதோ கழுத்தில் குத்த ,

ஆவ்ஊஊஊ என்ன குத்துது என்று அவன் சட்டையை எடுத்து அதன் பாக்கெட் உள்ளே கையை நுழைத்து பார்க்க... 

இதை விட அவன் காதலை கூற முடியுமா??

உள்ளே ஒற்றை  சிவப்புககல் மூக்குத்தி  இருந்தது 

மிலா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை குதித்து துள்ளி சத்தமில்லாது கத்தியவள்... ஓடிப்போய்  ஜன்னல் வழியாக  புலவனை பார்க்க....  அவனும்  அவளுக்காக காத்து கொண்டு இங்குதான் பார்த்து கொண்டு நின்றான்...

அவள் தலை தெரியவும்,  சட்டென்று புலவன் உள்ளே போய் மறைந்து  விட..  முகம் நிறைந்த புன்னகையோடு அந்த மூக்குத்தியை அணைத்து கொண்டாள் ...

சைந்தவியோ புதர் அருகே யாரோடோ மிலானி நெருக்கமாக நிற்க கண்டு , அவளை கூர்ந்து பார்க்க இருட்டில் அந்த ஆண் உருவம் அவளுக்கு தெரியவில்லை .. 

யாரா இருக்கும்?  உரிமை பட்டவ போல கட்டி புடிச்சு நிக்கிறா,  யாரை லவ் பண்றா ... யாருன்னு தெரியாம மண்டை வெடிக்குதே..  என்னு குடித்து மட்டையாகி கிடக்கும் புருஷனை பார்த்து தலையில் அடித்த  சைந்தவி .. 

"என் தங்கச்சி நல்லவ வல்லவன்னா சொல்லிட்டு திரியுற!.. பாருடா மொத்த குடும்ப மானத்தையும் அவதான் வாங்க போறா,  அப்ப தெரியும் பொண்டாட்டி அருமை ...அது நடக்கணும் நீங்க நாறணும் .. ஆனா அதுக்கு முன்ன அந்த எக்ஸ் யாருன்னு கண்டு பிடிச்சு ஆகணுமே "என்று புலம்பி கொண்டு நின்றாள் ... 

காதலில் சுகம் வானவில் போல,  சில நொடிகள் மட்டுமே என்பதை மிலானி அறியவில்லையோ??

உன் கதைக்கு வாக்கப்பட்டா சுகமே இல்லை என்பதை மறந்து போயிட்டா போல அதான??