யுகம்10

Yugam10

யுகம்10

10  யுகங்கள் தாண்டி உனை காதலிக்கவா?? 

கொஞ்சம் நில்லு  மிலா என்றதும் படியில் இறங்கி வந்த மிலா குறுக்கே நின்ற சைந்தவியை யோசனையாக பார்த்தவள்...  வேகமாக தாலி மறைந்து கிடக்கிறதா என செக் செய்ய ... அவள் பதட்டம் கள்ள முழியை நாடியை தடவி கொண்டே பார்த்த சைந்தவி 

"புதுசா உன் மூக்குல ஒரு மூக்குத்தி மின்னுது" ..

இரவு முழுவதும் மாயக்கண்ணன் தூங்க விடாது கனவிலும் நினைவிலும் தொல்லை செய்து காலையில் புலவனைப் பார்க்கப் போகும் ஆசையில் குளித்து அவன் வாங்கிக் கொடுத்த ஒற்றை மூக்குத்தியை தன் வீட்டிற்கு வரும் நகை கடைக்காரரை மேனேஜர் மூலம் அழைத்துவிட்டு மூக்கை குத்தி மூக்குத்தியை அணிந்து கொண்டவள்..  அவனுக்கு அதை காட்டும் ஆசையில் இறங்கி வர சகுனியாக சைந்தவி இடையில் வந்து விழுந்து விட்டாள் 

பொய் எதுவும் கையில் ஸ்டாக் இல்லாது திணறி மிலானி எச்சில் விழுங்க...  சைந்தவி போட்ட குரலில் எழிலும் அனலும் ஒரு சேர தங்கை மூக்கில் கிடந்த மூக்குத்தியை பார்க்க ... 

"அதுங்க அண்ணி அது "

"ம்ம் சொல்லு எங்க உள்ளது?? , 

அவள் திக்கித் திணறி வார்த்தைகளை கோர்த்துக் கொண்டிருக்க .

"ஏண்டி தோசை கேட்டு அரை மணி நேரம் ஆகுது இன்னும் தோசை வந்து சேரல.. அவ மூக்கு ல கிடக்குற மூக்குத்தி தான் உன் கண்ணுக்கு தெரியுதா??  வாய் சரியாகிடுச்சு போல,  எடு அந்த செங்கலை என்ற  அனலை பார்த்தது வாயை கை கொண்டு மூடி கொண்ட சைந்தவி...

"இல்லைங்க புதுசா தெரிஞ்சதே , அதான் யார் வாங்கி கொடுத்தான்னு கேட்டேன் ....நம்ம வீட்ல இப்படி ஒரு மூக்குத்தி கிடையாது ... அதோட உங்க தங்கச்சி வேற இப்ப எல்லாம் கொஞ்சம் புதுசு புதுசா பண்றா , எல்லாம் ஒரு அலர்ட் தான்... வாயை மூடி கொண்டே கூற 

"உன் அலர்ட்ட தூக்கி குப்பையில் போடு , நேத்து அவ பிரண்ட்ஸ் ரெண்டு பேர் வந்தாங்கல்ல,  அவங்க யாராவது வாங்கி கொடுத்து இருப்பாங்க அப்படி தான மிலா ?என்ற அண்ணன் இப்போதைக்கு அவளுக்கு சாமியாக தான் தெரிந்தான் 

புலவன் ஞாபகத்தில் பொய் சொல்ல கூட இப்போதெல்லாம் வரமாட்டேங்கிறது...

ஆமா அண்ணா என் பிரண்டு ஸ்வேதா வாங்கி கொடுத்தா"

"ஸ்வேதாவா??,  அவ நேத்து வரவே இல்லையே என்று சைந்தவி மீண்டும் கேள்வி எழுப்ப 

"நேத்து 10 ஆயிரம் ரூபா சரக்கு அடிக்க போகும்போது உன் கையில தந்துட்டு போனேன்ல்ல அதை எங்க ??அனல் கேள்வியில்  முழித்த சைந்தவி

"எது என்கிட்ட எப்ப தந்தீங்க,  தரல "என்று சைந்தவி பதற..

"உன் கையில தந்ததே உனக்கு ஞாபகம் இல்லை உன் ஆத்தா காரிய பார்த்ததும் அப்படியே பால் குடிக்கிற பிள்ளை மாதிரி பின்னாடி சுத்த ஆரம்பிச்சுட்ட , நீ அவ பிரெண்ட் வந்தாளா வரவில்லையானு பாத்தியா....  சும்மா மிலாம்மாவை குறை சொல்லிக்கிட்டு இருக்காத போய் வேலையை பாருடி, 

"எதுக்கெடுத்தாலும் என்னையே திட்டுடா காட்டுப் பன்னி,  உன் தங்கச்சி நேத்து அத்தனை பேருக்கும் டிமிக்கி கொடுத்துட்டு ஒருத்தன கட்டிகிட்டு நின்னா  அவன் கொடுத்த மூக்குத்தியாதான் இருக்கும் .. நான் எவ்வளவு பெரிய கில்லாடின்னு அந்த எக்ஸ்ஸை கண்டுபிடிச்சு உங்க முன்னாடி நிப்பாட்டி, ம்க்கும் நிப்பாட்டுனா மட்டும் என்னடா செய்யப் போறீங்க காட்டு பன்னிகளா,  என்னைய தான் திட்டுவ..  எனக்கு என்னமோ இவ போற போக்க பார்த்தா,  லோடு லாரியா தான் வந்து நிக்க போறான்னு தோணுது ... நமக்கு எதுக்கு வம்பு ஏதாவது இப்போ வாய தொறந்தா,  நேத்து கொடுத்த பத்தாயிரத்தை எங்கன்னு கேட்பான்...  நேத்து எப்போ பத்தாயிரம் ரூபாய் கொடுத்தான்??  .. ஒருவேளை நாம தான் யானைக்கண்ணை அதிகமாக யூஸ் பண்றோமோ??  என நாடியில் கை வைத்து தட்டிக் கொண்டு சைந்தவி நிற்க 

தோசை இன்னும் வரல என்ற அனல் குரலுக்கு 

"தோசைக்கு செத்தவனே வர்றேண்டா "என்று புருஷனை  திட்டிக்கொண்டே உள்ளே போய்விட்டாள்.. 

அப்பாடா !!! ஒவ்வொரு நாளும் சிலம்பம் அடிக்க வைக்கிறாங்க .. அண்ணிக்கு டவுட் வந்திடுச்சு போல ப்ச் புலவன் என்ன ஏத்துக்கிட்டா நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்...  உன் பொண்டாட்டியை நீ பார்த்துக்கன்னு சொல்லி பொறுப்பை புருசர் தலையில போட்டிரலாம்னு பார்த்தா...   அசைய மாட்டைக்கிறாரே..ச்சே புருசர குறை சொல்ல கூடாது எனக்காக எவ்வளவு அழகான மூக்குத்தி வாங்கிட்டு வந்து தந்திருக்கார் ... அது மட்டுமா நைட் அங்க நின்னு என்ன பார்த்தார்ல இதுவே மாற்றம்தான் கொஞ்சம் கொஞ்சமா மாறுவார் .. மாறுவாரா??  நம்புவோம் வேற வழி "என்றவள் தன  முன் வீட்டுக்குள் நடந்துவந்த புலவன்  தெரிந்தான்...

கார் சாவி எடுக்க வீட்டுக்குள் வந்து கொண்டிருந்தான்.... கரும்பச்சை நிற சட்டை மேல் பட்டன் ரெண்டு போடவில்லை, உள்ளே வந்த புலவன் படியில் நகத்தை கடித்து கொண்டு நின்ற மிலானியை ஒரு பார்வை பார்க்க ...

ப்ப்பா பார்வைக்கே எனக்கு என்னவோ பண்ணுதே புருசரே தள்ளாடி படிக்கட்டை பிடித்தவள் மூக்குத்தியை கைவைத்து காட்டிட ... அதையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு  தலையை திருப்பி விட்டான் .. 

புலவா நைட் துணி மூட்டை வந்திருக்கும், நீ குடோன் போய் பாரு .. நான் மிலாம்மாவை  கூட்டிட்டு போறேன் என்று எழில் வர ... மிலா முகம் சுண்டைக்காய் போல சுருங்கி போனது .... 

புலவன்  எழில் சொன்ன வேலையை பார்க்க போக...  போகும் அவன் முதுகை ஏக்கமாக பார்த்தாள்...

ரெண்டு நாள் கம்பெனி வேலை என புலவன் அங்கேயே வேலையில் இருக்க .. மிலாவுக்கு அவனை பார்க்காது உயிர் பாதி போன நிலை கழுத்தில் குத்தும் தாலியும் , மூக்கில் தேயும் ஒற்றை கல்லும்...  அவன் பால் காதலை ஊற்றெடுக்க வைத்து கொண்டே இருந்தது  ... அவன் கழட்டி தந்த சட்டையை எடுத்து படுக்கையில் போட்டு அதன் மீது படுத்த மிலாவுக்கு தற்போதைய காதல் மயக்க மருந்து இந்த சட்டையில் வரும் அவன் வாசம் தான் ...

ப்ப்பா என்ன எப்படி எல்லாம் மாத்திட்டீங்க,  இப்படி நினைச்சு நினைச்சே செத்து போவேன் போலையே,  ரெண்டு நாளா உங்கள பார்க்கல... என் ஆசை,  ஏககம் தேடல் உங்களுக்கு இல்லையே பொண்டாட்டிக்கு மூக்குத்தி வாங்கி தந்தா மட்டும் போதுமா புருஷர்...  அது மேல சூடு பறக்க அழுத்தி முத்தம் கொடுத்து,  அதுக்கு பதில் முத்தம் உதட்டுல கேட்டு ப்ச் இந்த எண்ணம் எல்லாம் எப்ப உங்களுக்கு வந்து.. நான் எப்போ உங்க பொண்டாட்டி ஆகுறது "என்று நினைத்தவளுக்கு  உதட்டை கடிக்க தோணியது.... 

இரண்டு நாள் கழித்து புலவன் எழில் அருகே நின்று ஏதோ கணக்கு வழக்கை ஒப்படைத்துக் கொண்டிருக்க .. கீழே இறங்கி வந்த மிலானிக்கு அப்பாடா வந்துவிட்டான்  என நிம்மதி மூச்சு விட்டாள் ... 

இரண்டு நாள் இரண்டு யுகம் போனது போல் இருந்தது ஒவ்வொரு நொடியும் அவனை மட்டுமே மனம் தேடியது அருகில் இருந்தால் கூட பார்த்துவிட்டு கடந்திருக்கலாம்...  ஆனால் அவனைப் பார்க்காமல் இருப்பதுதான் பெரிய சித்திரவதை போல் தெரிந்தது...

இந்த சித்திரவதை அவனுக்கு இருந்திருக்குமா , ம்க்கும் சான்சே இல்ல ,  என்ன பாக்குறத பாரு கல்லு  நால  தின்ன ஏப்பம் விட்ட மாதிரி...  புருஷருக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறையே இல்ல தாலி கட்டின பொண்டாட்டி ஒருத்தி இருக்காளே...  அவ ரெண்டு நாளா நம்மளை பார்க்காம ஏங்கி போய் கிடப்பாளேன்னு ஒரு போன் போட தோணுதா .... அது சரி !! யாருக்கு போன் போடுவார் அதுதான் நம்ம கிட்ட போனே இல்லையே..

அண்ணன்மார்கள் ஜகஜால கில்லாடிகள் தங்கையை தங்க கூட்டுக்குள் வைத்து அல்லவா வளர்க்கிறார்கள் ஒற்றை போன் போதாது அவள் கூட்டை விட்டு பறப்பதற்கு ...

"மக்கும்" மிலானி இருமி  அவன் கவனத்தை திசை திருப்ப , எழில் அருகே நின்ற புலவன் சட்டென திரும்பி ஒரு பார்வை மிலாவை பார்த்து விட்டு இமைக்கும் நொடியில் திரும்பிவிட...  இவளுக்கு நெஞ்சு முழுக்க லப்டப் லப்டப்  என துடித்தது... 

காதல் போதையில் சாக தோணியது..  ஆனால் ஒரு கை தட்டி காதல் ஓசை வராதே,  அவளுக்கு தாலி கட்டினவன் அவளுக்காக நாலு அடி எடுத்து வைக்கணுமே...  அவன் என்னதான் நினைக்கிறான் ஒன்றுமே புரியாத நிலை 

"மிலா

"மிலா" எழில் அழைப்பில் புலவனை மேய்த்து கொண்டிருந்த மிலா  திடுக்கிட்டு அண்ணன் பக்கம் திரும்பிட 

"அண்ணன் 

"இன்னைக்கு நைட் கிளம்பிடலாம் தான 

"எ...ங்க ??

"ப்ச் பாப்பாவுக்கு மொட்டை போட்டு காது குத்த தஞ்சாவூர் போகணும்னு இப்ப சொன்னதை கேட்டியா இல்லையா??, அவள்தான் உயிரையும் புலங்களையும் புருசனுக்கு பட்டா போட்டு கொடுத்து விட்டு நின்றாளே... 

"சொன்னது கேட்ட தானே ...

"அது 

"ப்ச் கவனம் எங்க இருந்தது மிலா ??வர வர உன் போக்கு சரி இல்ல.... மிலா தலையை குனிந்து கொள்ள..

"நாளைக்கு காலையில பத்து மணிக்கு பாப்பாவுக்கு மொட்டை அடிக்க நம்ம குலதெய்வம் கோயிலுக்கு கிளம்பனும் போயிட்டு நாளைக்கு நைட்தான் வரணும்..  சீக்கிரம் கிளம்பி வா ...

"ஐஐஐ அப்போ புலவன் வருவாரே "என்ற துள்ளல் அண்ணன் பேச்சில் போயே விட்டது 

"கந்தப்பா நீ காரை ரெடி பண்ணி வை ..புலவன் உடம்பு சரியில்லை போல  அவ்வளவு தூரம் ஓட்டிகக மாட்டேன்னு சொன்னான் "

"ஏது உடம்பு சரியில்லையா ??புலவனை உத்து மிலா பார்க்க கண் சிவந்து தூக்கம் இல்லாது களைப்பாக சோர்ந்து போய் தெரிந்தான்.. 

"அவன் இங்க உள்ள வேலையை பார்த்துக்கட்டும் கந்தப்பா,  நீ வண்டியை எடு என்று எழில் கூற..

இரண்டு நாள் கழித்து பார்த்த புலவனை உடல் சரியில்லாத நிலையில விட்டுவிட்டுப் போக மிலாவுக்கு மனமில்லை... 

குடும்பம் மொத்தமும் இந்த ஒரு நாள் வெளியே போய் விடுவார்கள்...  இந்த ஒரு நாளாவது பயமில்லாமல் புலவனோடு பேச ,  அருகே இருக்க ஆசை....அவனுக்கு அவள் அருகாமை தேவையோ இல்லையோ அவளுக்கு அவன் அருகே இருந்து பார்த்துக் கொள்ள அவா !!  

எப்படி குடும்பத்தை கழட்டி விட ?? யோசிக்க தோன்றாது சிறிது நேரம் நின்றவள் கண்கள் பளிச்சிட , வேகமாக போய் மாதுரி முன் நின்றாள்..

"அண்ணி எனக்கு அது வந்துடுச்சு ,என்னால கோவிலுக்கு வர முடியாது..  அண்ணன் கிட்ட எப்படி சொல்லன்னு  தெரியல என்று கிசு கிசுக்க 

"ஹான் , போன வரம் தானே வந்துச்சு "என்று எங்கேயோ நின்ற  சைந்தவி குடுகுடுவென ஓடிவர...

"இல்ல அண்ணி ,  இந்த வாரம் தான் 

"இல்லையே உனக்கு எப்பவும் 15ஆம் தேதி தான வரும் ...

"என்ன அங்க வட்டமேசை மாநாடு" என்று எழில் சத்தம் கொடுக்கவும்...  மாதுரி மெல்ல கணவன் காதில் விஷயத்தை கூற

"ப்ச் , இதெல்லாம் முன்னமே சொல்றது இல்லையா  நீ இல்லாம எப்படி பாப்பாவுக்கு காது குத்துறது அங்க எல்லாம் ரெடி பண்ணியாச்சு,, இப்போ கடைசி நேரத்தில் இப்படி சொன்னா எப்படி நிறுத்துறது

"இல்ல அண்ணா நான் வேணும்னா கார்லயே உட்காந்துக்கவா..

"போச்சு போ ,  அது சக்தி வாய்ந்த கோவில் அஜாக்கிரதை எல்லாம் இருக்க முடியாது ... என புருவத்தை தடவிய எழில் 

"பேசாம எல்லாரும் போயிட்டு வந்துடுங்க,  நான் அவளுக்கு துணைக்கு  இங்க  இருக்கேன் "என்று எழில் கூறவும் ... இதுவும் போச்சா உதட்டைப் பிதுக்கினாள் மிலா ..

"அது எப்படிடா உன்ன விட்டுட்டு நாங்க போறது நல்லாவா இருக்கும், போனா எல்லாரும் போகலாம் அனல் மறுக்க.. 

'அண்ணா நீ தெய்வம்,  எதாவது பண்ணு என்று மிலா அனலை ஆர்வமாக பார்க்க 

அதுக்கு வயசு பொண்ண ஒத்தையா விட்டுட்டு போகணும்னு சொல்றியா அனல்

"ஒத்தையா ஏன் விட்டுட்டு போகணும் சமையல் வேலைக்கு வர பொன்னம்மாவை  அவளுக்கு துணைக்கு இருக்க வச்சிட்டு போவோம் 

"இது சரி வருமா??

"வேற வழி இல்ல எழில் 

"இப்படி கடைசி நேரத்தில் வரமாட்டோம்னு சொன்னா எல்லாருக்கும் சங்கடம். அவளையும் கூட்டிட்டு போக முடியாது 

"ம்ம் அதுவும் சரிதான் "என்று அண்ணனும் தம்பியும் 

பொன்னம்மாவை அழைத்து அவளுக்கு பாதுகாப்பாக இருக்கும் படி கூறிவிட்டு,  குடும்பம் மொத்தமும் கையை ஆட்டிக்கொண்டே செல்ல மிலானி சிரித்த முகமாக அத்தனை பேருக்கும் டாட்டா காட்டிவிட்டாள்..

கார் மறையவும் பொன்னம்மா அழுது கொண்டே ஓடி வர.. இவங்கள எப்படி  சரி பண்ண என்று யோசனையில் மிலா  நிற்க... வழி  அதுவே தானாக அமைந்தது

"என்ன பொண்ணமாக்கா ? 

"என் புருஷன் குடிச்சிட்டு லாரி முன்னாடி போய் விழுந்துட்டான் போல இருக்கு..  கை கால் எல்லாம் அடிப்பட்டு  தர்மாஸ்பத்திரியில் கிடக்கிறான் என்னால ராவு  உங்களுக்கு துணைக்கு வர முடியாது சின்னம்மா "

"அப்படி போடு , மனம் குதூகலிக்க முகத்தை பாவமாக வைத்து கொண்ட மிலா 

ஓஓஓஓ , பாவம் 

"வேற யாரையாவது உங்களுக்கு துணைக்கு வர சொல்லவா

" ஐயையோ!!!  வேண்டாம் அக்கா ,  நீங்க அவர போய் பாருங்க,  என்ன நாய் நரியா அக்கா  தூக்கிட்டு போகப்போகுது,  நான் பத்திரமாக இருந்துக்குவேன்..."

"ஐயாவுக்கு தெரிஞ்சா கோபப்படுவாரே ம்மா 

"ஐயாவுக்கு தெரிஞ்சா தானே,  நான் நீங்க வந்ததா  சொல்லிடுறேன் .. நீங்களும் நான் இங்க  வந்து படுத்ததா  சொல்லிடுங்க,  முடிஞ்சு..

இல்லம்மா அது ?"

"அக்கா முடியாத கட்டத்தில் தானே நீங்க போறீங்க போயிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தவளுக்கு 

அப்பாடா !!! ஆல்  விக்கெட் அவுட்,  என்பது போல் சந்தோஷத்தில் மூச்சு அடைத்தது....

ஒரு நாள் எந்த தொல்லையும் இல்லாது புருஷன் அருகே  இருக்கப் போகிறாள் . என்ற  சந்தோஷம் அவள் உடலின் எல்லை எங்கிலும் பரவி நின்றது... மிலா ஓடி போய் புலவன் அறையை தட்ட ... இந்த விக்கெட் எதுக்கும் மசியாது என்று அரைமணிநேரம் கை வலிக்க கதவை தட்டிய பிறகுதான் புரிந்தது 

ஏங்க 

ஏங்க அவன் பதில் சத்தமே கொடுக்க வில்லை 

புருசரே கதவை திறங்க..  புலவன் அறையை திறந்தேனா பார்  என்று உள்ளேயே கிடந்தான் .. 

ஒரு காட்டை எரிக்க ஒற்றை தீக்குச்சி போதும் என்பது போல,  அவள் காதலுக்கு இந்த ஒற்றை இரவு போதாதா ??

நீ ஒரு இரவுதானம்மா கொடுப்ப , அடுத்த இரவே  கண்டம் தாண்டி ஜோடிகளை தூக்கி கிடாசிடுவியே அதான??