யுகம் 2

Yu2

யுகம் 2

2 யுகங்கள் தாண்டி  உனை காதலிக்கவா?? 

அடிபட்ட இடமெல்லாம் வலிக்கவில்லை இனித்தது ஏனென்றால் இத்தனை நாள் வெறுமையாக ஏன் வாழ்கிறோம் எதற்காக வாழ்கிறோம் யாரை தேடுகிறோம் எதற்காக இந்த தேடல் என்னதான் எனக்கு வேண்டும் என்று அனைவரையும் பக்கத்தில் வைத்துக் கொண்டே ஏதோ  வாழ்ந்து கொண்டிருந்தவளுக்கு ..

இன்று தான் அந்த வெறுமையின் நிழல் போனது போல் ஒரு முழுமை வந்தது...  அவன் தொட்டு தூக்கிய தன் உடலின் காயங்கள் எல்லாம் இவனை பார்ப்பதற்காக வாங்கிய நேச காயங்கள் போல் இருந்தது..இன்று இந்த ஆக்சிடென்ட் ஆகவில்லை என்றால் அவன் அருகாமை அவளுக்கு கிடைத்திருக்காது இத்தனை நாள் தன் கூடவே இருந்த ஒருவன் தான் தன் தேடலில் அதிபதி என்றே அவளுக்கு இப்போதுதான் புரிந்தது... 

அத்தனை பேர் கடந்து போன சாலையில் இவன் மட்டும் தன்னை திரும்பிப் பார்த்தது ஏன்?

அத்தனை பேர் வேண்டாம் என்று மறுத்த பொழுது அவன் மட்டும் தன்னை தூக்கிக் கொண்டு ஓடியது ஏன்?

அத்தனை பேரும் தான் தனது தன்னுடைய நலன் என்று ஒதுங்கி நிற்கும் பொழுது இவன் மட்டும் அவள் உயிரைக் காக்க ஓடியது ஏன்?

அந்த ஏன் கேள்வியில்தான் அழகிய காதல் ஆரம்பம் ஆனது...

அவன் அவளுக்காக செலவழித்த அந்த பத்து நிமிடங்கள் அவளுக்காக பதறிய அவன் குறுகிய என்னுடைய பதட்டம் இது போதுமே நேசங்கள் தொடங்க

"நிலா இதுக்கு தான் சொன்னேன்,  எப்போ கார் ஓட்டினாலும் பாதுகாப்பா ஓட்டு,  இல்ல டிரைவரை கூட்டிட்டு போன்னு ...  சரி தலைக்கு வந்தது தலைப்பாகையோட போச்சு என்று எழில் அவளுக்கு பல ஜூஸை கலக்கி கையில் கொடுக்க ..

"இல்ல அண்ணா  இப்போ எதுவும் வேண்டாம், 

" எதுவும் வேண்டாம்னா எப்படி...  நாலு மணி நேரம் ஆகுது மாத்திரை திங்க வேண்டாமா? குடி என்று எழில் அழுத்தமாக குடித்து தான் தீர வேண்டும் என்பது போல் நீட்ட .. மிலா அதை வாங்கி மனமே இல்லாமல் மடக்  மடக்கென்று குடிக்க..

"எழில் காலையில 10 மணிக்கு மீட்டிங் இருக்கு தெரியும்தானே என்று அனல் ஞாபகப்படுத்த..

"அட ஆமா மறந்தே போச்சு பெரிய கான்ட்ராக்ட் போகலேன்ன , ப்ராஜெக்ட் கையை விட்டுப் போயிடும்..  நீ என்ன பண்ற வீட்ல அவங்க ரெண்டு பேரும் தின்னுட்டு சும்மா தானே இருக்காங்க,  குழந்தைகளை ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுட்டு இங்க வந்து இருக்க சொல்லு..என்று தன் சட்டையை நீவினான் எழில் ..

மனைவி எதுக்கு என்றால் அண்ணனும் தம்பியும் ஒரே போல  பிள்ளை பெக்க, குடும்ப கெளரவத்துக்கு என்று உடனே சொல்லும் அண்ணன் தம்பிகள் ... குடி பெண்கள் எதுவும் கிடையாது , ஆனால் மனைவிகள் மயக்கம் கொடுக்க,அதை  தீர்க்க மட்டுமே ... அதுக்கு உனக்கு என்ன வேணும் நல்லா புடவை,  நகை நட்டுன்னு ராணியா இரு எங்கள கேள்வியே கேட்க கூடாது என்று கொள்கையோடு மனைவிகளை இருட்டுக்கு ராணிகளாக வைத்திருப்பதில் இருவருக்கும் ஏக பொருத்தம் உண்டு ... 

அதுவும் சரிதான் எழில் ,  நல்லா திங்க வேண்டியது காலையில் இருந்து ராத்திரி வரைக்கும் சினிமா பாக்க வேண்டியது , அதுக்கு பிறகு நாம வந்ததும் வேலை செய்யற மாதிரி குண்டான எடுத்து வைக்கிறதும் விளக்குறதும்னு,  சும்மா சீன் போட வேண்டியது அதுக்கு பிறகு வந்து குறட்டை விட வேண்டியது என்று அனல் தன் மனைவியை திட்டிக் கொண்டே போனை போட... தாலி கட்டிய பேய்களுக்கு பயந்தே இருவரும் கிளம்பி விட்டனர் 

எழில் மனைவி மாதுரியும் , அனல் மனைவி சைந்தவியும் உடனே வந்து விட்டனர் ..

ஒழுங்கா பார்த்துக்க என்ற புருஷன்களுக்கு பவ்யமாக தலையாட்டிவிட்டு , தன் கணவன் தலைகள் வெளியே மறைந்தது தான் மாத்திரம் மாதுரி கையில் கொண்டு வந்த ஃப்ளாஷ்கை டொங்கு என்று மேஜையில் வைத்தாள்

"காலையில விடிஞ்ச நேரத்துல இருந்து அடைஞ்ச நேரம் வரைக்கும் என் தங்கச்சி சாப்பிட்டாளா தூங்குனாளா வந்தாளா கொண்டாளான்னு கேக்குறதுக்குத்தான் நம்மள கல்யாணம் கட்டி கூட்டிக்கிட்டு வந்தாங்களா  இவங்க "என்று சைந்தவி சிடுசிடுக்க  ... மாதுரி அமைதியாக இரு என்பது போல் அடக்க ..

"நீங்க சும்மா இருங்க அக்கா,  எனக்கு அப்படி பத்திக்கிட்டு வருது காலைல என் மகளுக்கு காய்ச்சல் ,  அது அவருக்கு நல்லாவே தெரியும் ஆனா,   குழந்தையை விட்டுட்டு இப்பவே வான்னு  குதிக்கிறார்..  நாம ஏதாவது சொன்னா கேட்டுடுவாரா என்ன .. வேலை எல்லாம் அப்படி அப்படியே கிடக்குது ..மதியம் சோறு வேற கொடுத்து விட்டாதான் தின்பார் ..   ச்சை , மிலா இளைய அண்ணி பேச்சில் விக்கித்து போய் பார்க்க  அவளை திரும்பி பார்த்த சைந்தவி ... 

"ஏம்மா உனக்கு புண்ணியமா போகும் இனிமையாவது வண்டிய பார்த்து எடுத்து ஓட்டு..

"சாரி அண்ணி கவனம் இல்லாம..

"நீ ஈஸியா சாரி கேட்டுருவ, உன்னால படுறது நாங்கல்ல...  ஒரு நாள் கூட நிம்மதியா இருக்க முடியல" சைந்தவி புலம்பிக் கொண்டே இங்கே நடப்பதை சுடச்சுட தன் தாய்க்கு போனை போட்டு கூற,  தூக்கிக் கொண்டு வெளியே போய்விட்டாள் 

மாதுரி அவள் அருகே வந்து அமர்ந்து மிலா கையை அழுத்தி பிடித்து...

"அவ பேசுறதும் நியாயம் தான மிலா ...  எங்களுக்கு தொல்லை இல்லாம தான் நீ அந்த வீட்ல இருக்க.?  அது எனக்கு நல்லா தெரியும் ...ஆனா,  . தொல்லையாகிடாத...  எங்களுக்கும் குடும்பம்,  குட்டி எல்லாம் இருக்கு ...அது உங்க அண்ணமாருக்கு தான் புரியல உனக்காவது புரியுதா இல்லையா... " ஒருத்தி நேரடியாக சாடி விடுவாள்,  இன்னொருத்தி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல்...  நீ அந்த வீட்டில் வேறு ஒருத்தி என்று குத்தி குத்தி காட்டுவாள் ...  அண்ணன்மார் இருவரும் நான் உன்னை நன்றாக பார்த்துக் கொள்கிறேன் என சொல்லி சொல்லியே நோக வைத்து விடுவார்கள்... 

இப்படி ஒரு குடும்பத்தில் ராஜகுமாரி அவள்...

ம்ஹூம்,  தனித்து விடப்பட்ட வேடந்தாங்கல் பறவை அவள்  அதுதான் சரியான வார்த்தை..

அதற்கும் மெலிதான புன்னகையை கொடுத்தவள்

"இனி என்னால தொல்லை இருக்காது அண்ணி சாரி "என்ற தலையை குனிந்து கொண்டவளுக்கு கடகடவென கண்ணீர் சுரப்பி வேலை செய்து கண்ணீர் வந்தது... மாதுரிக்கு தெரியாது கண்ணை துடைத்து கொண்டாள்....  இல்லை , அதற்கும் நாங்க ஏதோ சொன்ன மாதிரி அழுற என்று குறை கண்டு பிடிப்பார்கள் இப்போதுதான்  காயம் வேறு வலித்தது....  ஏனோ வலியில் தன் தாயை  தேடுவதற்கு ..  பதிலாக மறுபடியும் தன்னை காத்த புலவனை தேடியது தான் காதல் விந்தையோ??  

இங்கு ,  யாரையும் குறை சொல்லவும் முடியாது அண்ணன்மார் இருவரும் பாசமாகத்தான் இருக்கின்றார்கள் .. அண்ணிமார் கொடுமைக்காரிகள் இல்லை..  பெருமூச்சு விட்டவள் அப்படியே சிறிது நேரம் கண்ணை மூட ...எந்த சம்மந்தமும் இல்லாத புலவன் அவளை தூக்கி கொண்டு ஓடியது மறுபடி மறுபடி மனக்கண்ணில் வர ... அப்படியே கண் மூடி தூங்கி விட்டாள்... 

மிலா , நான்கு நாளில்  மருத்துவமனையில் இருந்து  வீட்டிற்கு வந்து சகஜமான வாழ்க்கை தொடங்கி விட்டது ... ஆனால் வந்த நொடி முதல் தன் வீட்டு டிரைவரை தேடி அவள் கண்கள் அலை பாய்ந்தது 

குவிந்து கிடக்கும் பணம் , கார்கள் வசதி அதன் நடுவே பாசம் காணாமல் கரைந்து போனது..

அவளுக்கு நண்பர்கள் கிடையாது என்பதை விட நம்ம தகுதிக்கு ஏத்த பொண்ணுங்க கூட பழகு,  நம் வசதிக்கு ஏத்த காலேஜ்ல படி,  நாம யாருன்னு தெரியும்ல அரண்மனை குடும்பம்,  பிசினஸ் மேக்னட் அதுக்கு ஏத்தாப்ப இருந்து பழகு,  என கொட்டிக் கொட்டி சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்க அவை எதுவும் மிலானி மூளையில் ஏறவில்லை என்றாலும் அண்ணன்மார்களுக்கு பயந்தே யாரையும் தன் அருகில் அண்ட விட்டதே இல்லை..

"மிலாம்மா 

"அண்ணா

"இனிமே நீ தனியா ட்ரைவ் பண்ணிட்டு போக வேண்டாம்,  டேய் புலவா இங்க  வா , ஒரு நாள் அவளுக்கு டிரைவரா போ நாளையிலிருந்து கந்தப்பன் வருவான்" என்றதும் கார்களை கழுவிக் கொண்டு நின்ற புலவன் தலையை தூக்கி பார்க்க..  எழில் அருகே மிலானி நின்று கொண்டிருந்தாள்

"சாயங்காலம் சரியான டைம் போய் கூட்டிட்டு வந்துரு... புலவன் எதுவும் பதில் கொடுக்கவில்லை ஆனால் தலையை மட்டும் ஆட்டினான்...  அவன் கைப்படாது கார் சாவியை எழில் புலவன் கையில் வைக்க...  ஸ்விட்ச் போட்ட ரோபோ போல கார் சாவியை வாங்கிக் கொண்டு விறு விறுவென்று ஏறி காரில் அமர்ந்து விட்டான்

"தொழிலுக்கு கெட்டிக்காரன்,  கண்ட வேலை பார்க்க மாட்டான்னு  தான் இந்த ஊமையனை கூட வச்சிருக்க வேண்டியது இருக்கு ... இல்லன்னா பதில் சொல்லாம  போறதுக்கு இவன கண்டம் துண்டமாக வெட்டி போட்டுருவேன் "என்று எழில் மீசையை முறுக்கிக் கொண்டே,  தன் காரில் ஏறி அமர்ந்தான் ...

தன் அண்ணன் தலை மறைந்ததும்  மிலா வேகமாக காரை நோக்கி ஓடினாள்.... புலவன் கார் பின் இருக்கையை திறந்து விட ....  காரின் பின் இருக்கையில் ஏறி அமர்ந்தாள் ....  வண்டி மிதமான வேகத்தில் போய்க் கொண்டிருக்க... கையை பிசைந்து கொண்டே மிலா ரோட்டை பார்ப்பதும், அவனை பார்ப்பதுமாக இருந்தாள் ...

"ம்க்கும் கனைத்து அவன் கவனம் கலைக்க பார்க்க அருகே அணுகுண்டு விழுந்தாலும் அவன் திரும்பி பார்க்கும் ஆள் இல்லையே ..  

முன்னால் கார் ஓட்டிக்கொண்டிருந்த புலவனிடம் பேசுவதற்கு வாயை திறப்பதும்,  மூடுவதுமாக  மிலானி பல நிமிடங்கள் கடக்க ... காலேஜும் வந்துவிட்டது... இன்றுதான் புலவன் அவள் காருக்கு டிரைவராக வருகிறான்... இல்லையெனில் வயதான கந்தப்பன் தான் குடும்ப உறுப்பினர்கள் செல்லும் காருக்கு டிரைவராக நிறுத்தப்படுவார்கள்...  புலவன் வயது பையன் என்பதால் எப்போதும் ஒரு எட்டு தள்ளித்தான் அவனை நிறுத்தி வைத்திருப்பார்கள்...

காரை காலேஜ் வளாகத்தில் அவன் நிறுத்த...  இப்போது விட்டால் அவனை பிடிக்க முடியாது பேச முடியாது என அறிந்த மிதுலா..

ஏங்...க  என்று வெளியே வராத குரலில் அவன்  பெயரை கூற ம்ஹூம் நோ ரெஸ்பான்ஸ் மறுபடியும் சத்தம் கூட்டி

ஏங்க....  என அழுத்திக் கூற..  புலவன் அதை கேட்டாலும் கேட்காதது போல் காரை விட்டு இறங்கி நின்றுகொள்ள ...  

வெளியே வந்த மிலானி மீண்டும் தயங்கி...

ஏங்க புலவன் என்று சத்தமாக அழைக்க... 

தலையை மட்டும் உயர்த்தி அவளை என்னவென்று பார்த்தான் 

"அப்பா பார்வையா  அவை,"  இடுங்கிய தோரணையான பார்வை , கடின முகத்தில் அந்த பார்வை  ரெண்டும் எவரையும் மிரள வைக்கும் ஆற்றல் கொண்டது....  அவன் தான் பேசுவதை கேட்கிறான் என அறிந்த மிலா அவனோடு பேச நடுங்கிய குரலை சரி செய்து 

"அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆனபோது என்ன கூட்டிட்டு போய் காப்பாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ்... 

தட்டு  தடுமாறி புலவன் முகத்தை பார்த்து மனதில் நான்கு நாளாக கூற வேண்டும் என நினைத்த நன்றியை கூறிவிட்டாள்...  அவனோ  அவ்வளவுதான் முடிஞ்சு  என்பது போல் ஒரு பார்வையை அவளுக்கு அளித்து  விட்டு மீண்டும் காரில் ஏறி அமர..  ஓடி போய் அவன் அருகே நின்ற மிலா 

"அப்பறம் ஒரு சாரி அண்ணா ரெண்டு பேரும் உங்கள அடிச்சதுக்கு...  புலவன் மிரரில் ரிவர்ஸ் பார்க்க ஆரம்பிக்க காரை விட்டு விலகி நின்றாள்...

"அப்பா ,  நாலு வார்த்தை பேசறதுக்கு முன்னாடி எப்படி மூச்சு அடைக்குது,  ஏன் இவர் யார்கிட்டேயும் பேச மாட்டேங்கிறார் தேங்க்ஸ் சொன்னதுக்கு , ஓகே ஓகே இல்ல ஏதாவது ரெஸ்பான்ஸ் பண்ணலாமே அது சரி அண்ணமார் இவர் என்கிட்ட  பேசுறதை பார்த்தா தோலை உரிச்சிடுவாங்கன்னு பயம் இருக்கும்ல "என்று அவளே வினாவுக்கு விடை தேர்ந்தெடுத்து கூறிவிட்டு...  நடக்க ஆரம்பித்தவள் நடை மெல்ல தடைப்பட்டது...

மீண்டும் ஒரு முறை திரும்பி பார்த்தாள் ....  புலவன் காரை ஓட்டிக்கொண்டு வெளியே போவதை கால்கள் நகராது அவன் மறையும் வரை நின்று பார்த்தாள் ... 

முற்றுப்புள்ளி அருகே , தொடக்க புள்ளி வைத்தது காலமும்,  காதலும்  ......