யுகம்3

Yugam3

யுகம்3

3 யுகங்கள் தாண்டி  உனை காதலிக்கவா??

சாரிடா புலவா, என் மகளுக்கு உடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிட்டலுக்கு போக வேண்டியது ஆகிப்போச்சு இங்க நடந்ததை கேள்விப்பட்டேன்...  பெரியவரும் சின்னவரும் உன்ன அடிச்சிட்டதா சொன்னாங்க .. புலவன் அதை காது கொடுத்து கேட்டது போல் இல்லை 

"நீ என்ன கெட்டதா செஞ்ச ,அவங்க வீட்டு இளவரசியை காப்பாற்றி இருக்க , கை நீட்டி இருக்காங்க..  நீ எதுவுமே செய்யலையா "தட்டில் வைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தான் புலவன்...  அவன் அருகே கந்தப்பன் அமர்ந்து அவன் பதிலுக்கு காத்திருக்க அவனோ எந்த பதிலும் சொல்லாமல் சாப்பாட்டில் கவனமாக இருக்க

" ஏன்டா இப்படி இருக்க நீ என்னைக்கு தான் வாயை திறந்து பேச போற...  ஐஞ்சு  வருஷத்துக்கு முன்னாடி வேலை ஏதாவது கிடைக்குமான்னு வந்து கேட்ட..  அதுக்கு பிறகு இன்னைக்கு வரைக்கும் எதுவுமே நீ பேசினதை நான் பார்த்ததே இல்லை ...

"சாயங்காலம் அந்த பொண்ண கூப்பிடுறதுக்கு நீங்களே போயிட்டு வந்துடுங்க' என்று கனமான குரலில் புலவன் கூற..

"அப்பாடா பேசிட்டியா,  ஏண்டா நீயே போய் கூட்டிட்டு வந்துற வேண்டியதுதானே"

"எனக்கு சின்னவர போய் பிக்கப் பண்ண வேண்டிய வேலை இருக்கு... "

"அங்க நான் போறேன் , நீ ஜாலியா அப்படியே காலேஜ் பக்கம் போயிட்டு வா,  எத்தனை நாள் தான் இப்படி தனியா இருக்க போற...  ஏதாவது ஒரு பொண்ண பாத்து செட்டில் ஆயிடு "என்று புலவன் தோளில் கந்தப்பன் விளையாட்டாக அடிக்க...  சாப்பிட்டுவிட்டு  கையை கழுவியவன்..  தட்டை அதன் இடத்தில் வைத்துவிட்டு,

" நீங்களே போய் கூட்டிட்டு வந்துருங்க அவ்வளவுதான் 'என்பது போல் இன்னொரு காரை எடுத்துக் கொண்டு வெளியே போய் விட்டான்..

"என்ன மனுசன் இவன் , எந்த கெட்ட பழக்கமும் இல்லை ஏதாவது நல்ல பழக்கம் இருக்கான்னு தேடினா, அதுவும்  காட்டினா தானே தெரியும் எதுக்கு இந்த பையன் இப்படி அமுக்குனியா இருக்கான் என்னவோ நல்ல பையன்,  நல்லா இருந்தா சரி.  குடி தம்மு பொண்ணுங்கன்னு கெட்டு சீரழியுற  இந்த காலத்துல ,,இப்படி ஒரு பையன்..

"ஐந்து   வருடமாக புலவனை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார் வீண் பேச்சு நடத்தை எதுவும் இருக்காது வேலை முடித்தால் வீடு ... அப்படி அந்த நாலு சுவருக்குள் என்னதான் இருக்குமோ கதவை அடைத்து கொண்டு இருந்து கொள்வான்...

மிலாவுக்கு , மாலை எப்போதும் இல்லாத துள்ளல் இன்று வந்து ஒட்டி கொண்டது ... 

மிலா , வகுப்பு முடிந்ததும் வேகமாக ஓடி வந்து வெளியே நின்றாள்..தன் காரை பார்த்ததும் அவளையும் அறியாமல் சிறு புன்னகை...  ஆனால் உள்ளே கந்தப்பனை பார்த்ததும் அப்படியே அந்த சிறு புன்னகை கருகிப்போனது..

கண்டிப்பாக புலவன் வருவான் என்று எதிர்பார்த்து காத்து நின்றிருந்தாளோ,

ஏன் இந்த எதிர்பார்ப்பு,  ஏன் இந்த தேடல்,  ஏன் இந்த கவலை,  ஏன் அவனை  எதிர்பார்க்கிறாள்...அப்படி  என்றால்  புலவன் அவள் உணர்வை தொடுகிறான் என்று அர்த்தமோ ..

நான் அன்பு வச்சிருக்கேன் பாசம் வச்சிருக்கேன் என உருகி வழியும் தன் அண்ணன் இருவரின் பாச பெருங்கடல் சலித்து போனதோ ... இக்கட்டில் அவளை தூக்கி சுமந்த புலவன் நினைவில் வந்து  தொல்லை செய்தான் ... வண்டாக மூளையை குடைந்தான்... அவன் ஏனோ தானோ நடவடிக்கை மூலம் ஈர்த்தான்...நெருங்கி அவன் யார் என அறிய ஆர்வம் வந்தது...,

"வாங்கம்மா "என்று கந்தப்பன் கார் கதவை திறந்து விட..

ம்ம் ,  அண்ணா,  புலவன் வரலையா??"..

இல்லம்மா.."

"இல்ல  , அண்ணன் அவரை வர சொன்னார் அதான் கேட்டேன் 

"நீ போய் கூட்டிட்டு வான்னு சொன்னதுக்கு நான் சின்னவர பிக்கப் பண்ண போறேன்னு சொல்லிட்டு போயிட்டாரு ...

"ஓஓ 

"என்னம்மா ஏதாவது சொல்லனுமா..

"அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல அண்ணா போகலாம் "என்று தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு காரில் ஏறி அமர...  மனம் ஏமாந்து போனது .. அவர்கள்  வீட்டிற்குள் கார் போனது...  அங்கேயும் சுற்றி முற்றி கார்கள் பக்கம் புலவனை தான் அவள் கண்கள் தேடியது..

கந்தப்பன் அவள் தேடலை உடனே அறிந்து கொண்டவராக..

"புலவன் வேலை முடிஞ்சு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வருவாம்மா,  ஏதாவது சொல்லனுமா?

"இல்ல அண்ணா சும்மா தான் தேடினேன் உடனே பயத்தில் உதறிவிட்டாள்

கந்தப்பன் எத்தனை இளையதுகளை பார்த்து கடந்து வந்திருப்பார்...  மிலானியின்  தேடல் அறியாதவரா...

ஆத்தே!!!  பொண்ணு கண்ணு அவனை சுத்துதே  இவ அண்ணன்களுக்கு தெரிஞ்சா புலவன் நிலைமை .. அவன்கிட்ட சொல்லி அலர்ட் பண்ணிடலாம் "எழில் அனல் நினைத்து சற்று பயமாகத்தான் இருந்தது..   ஆணவ படுகொலை செய்யவும் தயங்காத அண்ணன் தம்பியே.. 

மிலானி தன் அறையில் ஜன்னல் அருகே நகத்தை கடித்துக் கொண்டு அந்த ஒற்றை  அறையை பார்த்துக் கொண்டே நின்றாள்... கால் கடுக்க 4 மணி நேரமாக இங்கேயேதான் நிற்கிறாள் 

ஏழு மணி போல அந்த ஒற்றை அறை கதவு பூட்டு திறக்கப்பட..  நின்றபடியே கண் அசந்து போன மிலானி சட்டென்று கண்களை திறக்க...  புலவன் தான் அறை கதவை திறந்து  கொண்டு நின்றான்.... 

எப்பா எவ்வளவு நேரம் காக்க வச்சிட்டார்?   அவனை பார்த்த நிம்மதியோடு சற்று வெட்கமும் சேர்ந்தே வந்தது .. பின்ன??  காதல் இதுதான் என்று கால் வலிக்க காத்து நின்றதில் அறிந்து கொண்டாளே ..., ஆசையாக அவனை உற்று பார்க்க...  புலவன் ஏதோ யோசனையாக தலையை தூக்கி அவள் அறையை பார்க்க ...

"அப்பாடி  பார்த்துட்டாரா? "என்று பயநது  ஜன்னல் அருகே மறைந்து கொண்டாள்....   மீண்டும் மெல்ல எட்டி அவனை பார்க்க ..புலவன்  பேரல் நீரில் தண்ணீர் எடுத்து  குளித்து கொண்டு நின்றான் இடையில்   துண்டு கட்டி முகத்தில் சோப்பை போட்டு அவன் குளித்து கொண்டு நிற்க ...

"அய்ய சீசீ "என்று சிணுங்கி பத்து விரலால் முகத்தை மூடி கொண்ட மிலானி , மெல்ல ஒவ்வொரு விரலாக விரித்து  அவனை பார்க்க உடல் எங்கும் கூசி சிலிர்த்து அடங்கினாள்...  ஆனாலும் அவனை ரசிக்க மறக்கவில்லை ... தலையை அவன் உதறி கொண்டே வீட்டுக்குள் போய் கதவை அடைக்க 

"ச்சை பத்து நிமிடம் கூட தரிசனம் தரலையே  இனியே தரிசனம் கிடைக்க  நாளைக்கு நைட் வரை காத்திருக்கணுமா??" என்று வாய்விட்டே புலம்பிய மிலா படுக்கையில் போய் குப்புற விழ .. தன்னை  நினைத்து அவளுக்கே வெட்கம் பிடுங்கி தின்றது .... 

"நானா லவ் பண்றேன்?? நம்பவே முடியவில்லை  கண்ணை மூடி தூங்க முடியவில்லை .. தூரத்தில் பார்த்த புலவன் முகமும் அவன் கண்களை இடுங்கும் தோரணையும்,  தூங்க விடாது தொல்லை செய்தது...

"நாளைக்கு எப்படியாவது தன் காருக்கு டிரைவரா அவர் வரணும்" என்று  மிலா வேண்டாத கடவுள் இல்லை 

கடவுள் அவள் கேட்டது எல்லாம் இம்முறை அள்ளி அள்ளி கொடுப்பார்... 

ஆரம்ப காதல் எப்போதும் பயம் அறியாதே... அவளும் சுற்றம்,  தன் செல்வ நிலை அண்ணன்மார்கள் எல்லாம் மறந்து போய் புலவனை நெஞ்சில் காதலனாக தூக்கி வைத்தாள் ....

படுக்கை பாரமாக இருந்தது .. தூக்கம் தொலை தூரம் போனது...  இரவை ஜன்னலுக்கும் படுக்கைக்கும் நடந்தே கழித்தாள்..

"பொண்ணுங்க தோத்து போவாங்க பூட்டுன கதவை  திறக்கவே மாட்டைக்கிறார் ... சலித்து வந்து படுக்கையில் விழ, காலை சேவல் கூவியே விட்டது ..

"இது  நல்லா இருக்குமா இது, இது ஆடைகளை கலைத்து போட்டு மிலா ஆடையை தேர்ந்தெடுத்து கொண்டு நின்றாள்...  கீழே அந்த அறை கதவு திறக்கப்பட..  காதை இரண்டையும் தான்  அங்கே கடன் கொடுத்து விட்டாளே..

மிலா வேகமாக ஓடிப்போய் புலவன் வீட்டை பார்க்க  ... கருப்பு நிற சட்டை வெள்ளை நிற பேண்ட் போட்டு கையை மடக்கி விட்டு கொண்டு நின்றான் புலவன் 

இவளுக்கு காதல் மயக்கமே வந்துவிடும் போல இருந்ததது அவனை காற்றில் கிள்ளி முத்தமிட்டவளுக்கு...  உலகமே புதிதாக பிறந்தது போல இருந்தது.. மனம் எங்கும் துள்ளல் பரவசம் காதல் தந்த போதையில் தள்ளாடி , மார்பில் குளித்து விட்டு வந்த டவலோடு நின்று அவனை கண் வெட்டாது பார்த்தாள்..  சட்டையை மடக்கி முடித்தவன் தன் அடர்ந்த சிகையை கையால் பரபரவென அழுத்தி தடவ...

அச்சோ!!  எது பண்ணினாலும் அழகா இருக்கே வெட்க புன்னகை வந்தது...  புலவன் ஒவ்வொரு அசைவையும் பார்த்து ரசித்து,  அவன் நகரவும் அவன் அணிந்த அதே கலரில் ஆடையை தேடி போட்டு கொண்டவள்

"அவர் அளவு இல்லைன்னாலும் ஓகே ,"என்று  தன்னை நிறுத்தி நிதானமாக ரசித்து கிளம்பினாள் ...

நீ காதலிச்சா போதுமா , அவர் காதலிக்க வேண்டாமா...  இல்லை  நீ காதலை சொல்ல வேண்டாமா..

அய்யய்யோ!!  நானா ..இதை எதையுமே நான் யோசிக்கலையே ... ப்ச் தொடங்கும் போதே தடங்கலா?? என்று வருத்தம் வந்தாலும் 

மிலாம்மா என்ற எழில் குரலில் திடுக்கிட்டு 

"அண்ணா 

"நேரம் ஆகிடுச்சு என்ன பண்ற ??

"இதோ வர்றேன் அண்ணா என்று படியில் தடதடவென இறங்கி ஓடி வர 

"கந்தப்பா சின்னம்மாவை கொண்டு போய் விட்டுட்டு என்னை பிக்கப் பண்ண வா" ...  என்ற அணணன் கட்டளை கேட்டு காற்று போன பலூன் போல மிலா முகம் சுருங்கி போனது ...  வாசலில் தான் கார் அருகே புலவன் நின்றான்...

"சரிங்க அய்யா 

"எழில் எனக்கு அர்ஜெண்டா போகணும் நான் கந்தப்பனை கூட்டிட்டு போறேன் புலவன் எண்பது தாண்ட மாட்டான்...  அவசரம்...

"ம்ம்  சரி,  புலவா நீ  மிலாவை கூட்டிட்டு போயிட்டு வந்து என்ன பிக்கப் பண்ணிக்க என்றதும் வாசலில் கார் அருகே நின்றவன்...

ம்ம் என்று தலையை எப்போதும் போல ஆட்டினான் மிலா அடைந்த மகிழ்ச்சிக்கு தனி வார்த்தை வேண்டுமா ?? 

யாஹூ!!  துள்ளி குதிக்க தோன்றிய துள்ளலை மறைத்து கொண்டு  எதிரே வந்த தன் அண்ணன் மகனை தூக்கி கொஞ்சிய தங்கையை அண்ணன் தம்பி இருவரும் கண்ணை சுருக்கி பார்த்தனர்... 

"என்ன மிலா ரொம்ப ஹேப்பியா இருந்தது போல இருக்கு என்று சைந்தவி கேட்டுவிட 

"ஏன் உன்ன போல மூக்கை சீந்திக்கிட்டே இருக்கணுமோ?? என்று உடனே அனல் மனைவியை முறைக்க 

"இவனுக்கு என்கிட்ட மட்டும் எடுத்திருமே,  அப்படி என்னடா கேட்டேன்னு மேல வந்து ஏறுற' என்று உள்ளே சாதமாக கொதித்தாலும் முகத்தை சாந்தமாக வைத்து கொண்டு 

"அப்படி இல்லைங்க வயசு பொண்ணு முகத்தில களை வந்தா ஒன்னு காதலா இருக்கும், இல்லை கல்யாணமா இருக்கும் .. எனக்கு தெரிஞ்ச வரை கல்யாணம் இல்ல, அப்போ காதல்தானே??..

ஏய்இஇஇஇஇஇஇஇஇ என்ற எழில் காட்டுமிராண்டி குரலில் அனைவரும் பதறி விட 

"அனல் உன் பொண்டாட்டி கிட்ட பார்த்து பேச சொல்லு அவ சின்ன குழந்தை அவளை போய் ..என்ன வார்த்தை பேசுறா"

"ம்க்கும் தூக்கி வச்சி பால் கொடுங்கடா,  ஒரு நாள் இல்ல ஒரு நாள் குழந்தையோடு வந்து நிக்க போறா என்று முகத்தை சுளிக்க...

"அமைதியா சொல்லுடி நீ பேசுறது எனக்கு கேட்குது என்று அருகே நின்ற  மாதுரி கிசுகிசுக்க 

"ஆத்தாடி!!!  மைண்ட் வாய்சுன்னு கத்தி சொல்லிட்டேன் அக்கா,  ரெண்டு சீமை எருமைக்கும் கேட்டிச்சு நாம செத்தோம். 

"நீதான்டி சொன்ன நான் ஏன் சாகணும்?  

"நீங்க தான் பேச ப்ளான் பண்ணி கொடுத்ததுன்னு மாட்டி விட்டுருவேன்ல 'என்று சைந்தவி சிரிக்க .. 

"உன் பேரு சைந்தவி இல்லடி சகுனி என்று இருவரும் பேசி சிரிக்க... 

"இன்னொரு வாட்டி இப்படி பேசுற வேலையை வச்சிக்காத சைந்து. புருஷன் கட்டளை பறக்க 

"ம்ம் சரிங்க ..

'அவளுக்கு தெரியும் நம்ம கெளரவமும் எங்க குணமும்...,  சரியா இருப்பா அப்படிதான மிலா?என்று எழில் மிலாவை பார்க்க..  எச்சில் விழுங்கிய மிலா 

ஆம் என்றவளுக்கு கொண்ட கள்ளத்தனத்தில் கால் கை நடுங்கி விட்டது ..பயம் எல்லாம் வீட்டை தாண்டும் வரை தான்...

காரில் ஏறி அமரவும்,   காரை ஒற்றை கையில் ஓட்டும் புலவன் பக்கம் மனம் ஓட அதை இழுத்து பிடித்து குடும்ப கெளரவம் காக்க பார்க்க ... அவன் அடித்த  ஒற்றை பிரேக்கில்..

ஆஆஆஆஆ பார்த்துங்க என்று அலறிய மிலா கைகள் புலவன் தோளை பிடித்திருக்க... புலவன் கண்ணாடி வழியாக அவளை பார்க்க .. தன் கை இருந்த இரும்பு ரதம் கண்டு பதறி போனவள்  ... 

"சாரிங்க , அது திடிர்னு பிரேக் போடவும்   சட்டென்று தன் கையை எடுத்து கொண்ட மிலா தானாக உதட்டை கடித்தாள்... அவன் வித்யாசமான மணம் அவள் கையில் பட்டது போலவே இருக்க..  அதை ஆழ்ந்து நுகர நுகர நுரையீரல் எங்கும் காதல் சத்தமில்லாது அத்தனை இடத்தையும் நிரப்பி கொள்ள .. கள்ளத்தனமா புலவனை ரசிக்க ஆரம்பித்து விட்டாள்.. கடமையே கண்ணாக புலவன் கார் ஓட்டுவதில் கவனமாக இருக்க..  அவள் அவன் மீது கவனம் முழுவதையும் வைத்திருக்க கார் நின்றது கூட அறியாது அவனை பார்த்து கொண்டிருக்க...

"காலேஜ் வந்திடுச்சு "என்று அதிசய பொம்மை வாயை திறக்க 

"ஓஓ சாரி எதோ கவனத்துல இருந்துட்டேன் என்று இறங்க போனவள்..

புலவன் ...அவன் அவளை திரும்பி பார்க்க 

"ஈவினிங் நீங்களே வர்றீங்களா? என்றவளை புலவன் கண்களை இடுங்க பார்க்க ..

"இல்ல அது .... அவள் ஏதோ பேச நினைக்கும் முன் ஆள் காரோடு போயே போயாச்சு 

"அப்பா இவரோட ரொம்ப கஷ்டம் என்று சிரித்தாலும் இந்த காதல் அவ்வளவு பிடித்தது.... பித்து பிடித்து சுற்ற வைத்தது , தனியாக சிரிக்க வைத்தது , புலவனை பற்றியே சிந்திக்க வைத்தது..    

சாலை விபத்தில் கூட உயிர் பிழைத்து விடலாம் 

காதல் விபத்தில் மாட்டி கொண்டால் சேதம் ரெண்டு பக்கமும் தான் ...