நாளை கதை நீக்கப்படும் மின்னல் 18,19,20

Min

நாளை கதை நீக்கப்படும் மின்னல் 18,19,20

18 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்!!

கேரளா 

"ம்மா சுவாதி நான்தான் உன் அம்மாடி "ஒரு மாத சிகிச்சை முடிந்து.. இதோ சுவாதிக்கு மூளை நரம்பில் இருந்த அடைப்பு எல்லாம் சரியாகி போனது .. யாரையும் நியாபகம் இல்லை ,மைதிலி நான்தான் உன் அம்மா என்றாலும் ஒட்ட முடியவில்லை.. மைதிலி கடவுள் சந்நிதி போய் சரணடைந்தது விட்டார்..அங்கேயே ஹாட் அட்டாக்கில் மரணம் வந்து அழைத்து கொள்ள, ஒரு மகளாக அத்தனையும் செய்து முடித்தவளிடம் ஸ்டீபன் வந்து ..

"இந்தாடா இது உன் சொத்துகள்" என்று சுவாதி கையில் கொடுக்க ..

"இல்லை எனக்கு வேண்டாம்" என்று மறுத்து விட்டவள்.. 

"இதை______ ஆசிரமத்துக்கு கொடுத்திடுங்க நாலு பேருக்கு உதவட்டும் "

"நீ என்னடா பண்ண போற??"

"தெரியல அங்கிள் பட் ஆந்திரா போகணும் போல மனுசு சொல்லுது அங்க போறேன் "

"அங்க யாருடா இருக்கா??"உதட்டை பிதுக்கி தோளை உலுக்கினாள்...

"தெரியல பட் அங்க நிம்மதி கிடைக்கும்னு தோணுது "

"யாரும் இல்லைன்னு நினைக்காத சுவாதிம்மா நான் இருக்கேன்.."

"தனிமை எனக்கு பிடிச்சு போச்சு அங்கிள் ,ஐயம் பெர்பெக்ட் !!"என்று சிரித்தவள் நாலு செட் ஆடை மட்டும் எடுத்து கொண்டு ஆந்திரா போகும் டிரைனில் ஏறினாள்..

"நல்ல மனம் கொண்டவர்களுக்கு கடவுள் நல்லதையே கொடுப்பார் ,என்று சொல்ல முடியாது ஆனால் கெட்டது நடந்தாலும் நிற்க திடம் கொடுப்பார்.."

அவளுக்கான தேடல் இன்னும் நிறையவே இருக்கிறது,அவள் பயணமும் இன்னும் அதிகம் உள்ளது .. அவள் அமைதியை, நிம்மதியை சதா காலமும் குலைக்க ஒருவன் இருப்பான்... அந்த ஒருவனை தேடி அவள் பயணம் நீளும்.... ( தனி முழு நீள கதையா அடுத்தது வரும் மச்சீஸ், இந்த கதைக்கும் அந்த கதைக்கும் தொடர்பு இருக்காது) 

ஐந்து வருடங்கள் கழித்து !!

புல்லட் சத்தம் மருதூர் கோட்டைக்குள் கேட்க.. 

"அப்பா வந்தாச்சு 

"ஹேஏஏஏஏஏஏஏ பெரியப்பா வந்தாச்சி "என விளையாடி கொண்டிருந்த நாலு வானரங்கள் ஒன்றை ஒன்றை அடித்து தள்ளி விட்டு புல்லட் நோக்கி ஓட..

"அடேய் ஓடாதீங்கடா மெதுவா போங்க" என மின்னல் சற்று தொலைவில் கேட்கும் தன் கணவன் விருமம் புல்லட் சத்தம் கேட்டு..

"வந்துட்டான் ம்க்கும்" என உதட்டை சுளித்து கொண்டு பிள்ளைகள் பின்னால் போக... மருதுதான் உள்ளே வந்தது

கண்ணுகளா!!" என்று வெண்கல குரலில் குழந்தைகளை கொஞ்சிக் கொண்டு, புல்லட் நிற்கும் முன் தாவி ஏறிய நாலு குழந்தைகளையும் ஒவ்வொருவராக தூக்கி பைக்கில் முன்னும் பின்னும் வைத்து கொண்டு அவர்கள் கோட்டையை சுற்றி வர.. தூணை பிடித்து கொண்டு மருதுவின் வஞ்சிக்கொடி முகத்தை உர்ரென வைத்து கொண்டு நின்றாள் ... மருது அவள் அருகே போகும் போது வேகமாக ஹாரன் அடித்து இன்னும் மனைவியை உசுப்பி விட்டான்..

"வர வர நீங்க சரியில்ல மாமா "

"ஏன்டி" மனைவி சண்டை போட வரும் போது தானாக மீசையை தடவி விடுவான் ... உலகத்துல ஒவ்வொருத்தனுக்கும் என்ன ஆசையெல்லாமோ வருது ..மருதுவுக்கு மட்டும் .. மனைவி தன் மண்டையை பிய்க்க வேண்டும் , சாடை போட வேண்டும் என்று வினோத ஆசைதான் 

"என்னடி" என்றான் மறுபடியும் அவளிடமே ரவுண்ட் அடித்து கொண்டு..

"ஏன்னு தெரியாதா??" என்று சிறுஉதடு சுருங்க.. 

"ஓஓஓஓ என் கண்ணுகள கூப்பிட்டதுல உனக்கு காந்திடுச்சா.."

"பின்ன என்ன மாமா எப்ப பார்த்தாலும் என் முன்னாடி வச்சி அவுகள கண்ணுன்னு கூப்பிட்டா எப்படி? நான்தான உங்க கண்ணு" என தூணைவிட்டு நகர மேலிட்ட வயிறு அவனை இன்னும் ஆசை கொள்ள வைத்தது.. இதுவும் இரட்டை தான் 

"லேய் இந்தாங்க சூடா ஏணிப்படி மிட்டாய் போட்டிருந்தான், வாங்கிட்டு வந்தேன் சித்தி வீட்டுல போய் சாப்பிடுங்க "என நால்வர் கையிலும் தின்பண்டங்களை கொடுத்து வீர் வீட்டுக்கு அனுப்பி வைத்தவன் , வேட்டியை காலால் ஏத்தி கட்டி கொண்டு படியில் ஏறி மனைவி அருகே வந்தான்...

"அதுக கண்ணுக ,நீ இப்ப இதயம்டி.."

"ம்க்கும் போங்க மாமா இதயம் அது உள்ளாற தான கிடக்கு .."

"இதயம் உன்ன மட்டும் பார்க்கும், கண்ணு எல்லாரையும் பார்க்கும் "

"ஏதாவது காரணம் சொல்லி என்ன யோசிக்க விடாம பண்ணி புடுதீக.."

"என் சிங்கக்குட்டிகள் என்ன பண்ணுது" என்று அவள் வயிற்றை தடவி கொடுத்தான்.. முதல் இரட்டையர்கள் பிறக்கும் போது..மருது தன் குட்டி மனைவிக்கு ஏழு மருத்துவர்கள் ஏற்பாடு பண்ணியிருக்க குழலியோ..

"எத்தனை பேர் இருந்தாலும் நீங்கதான் மாமா என் பலம் வாங்க" என்று அவனை அழைக்க.. அவள் வலியில், மருது விரல் முதல் முதலில் பயத்தில் ஆடியது ..

"ஒன்னும் இல்ல மாமா" என்று அவனுக்கு ஆறுதல் சொல்லி பல்லை கடித்து குழந்தைகளை பெற்று அவன் கையில் கொடுத்துவிட்டாள்..

"இரண்டு குழந்தை போதும்டி" என ஜரிகை தாளை வாங்கி கொண்டு வர..அத்தனையையும் பலூனாக இரவில் ஊதி விளையாண்டு விடுவாள்.. அவசரத்தில் மருது 

"அதை எங்கடி??" என தேடினான்..

"வாய்யா" என கழுத்தை பிடித்து இழுக்க , இதோ கட்டிலில் இரண்டு காலை ,கையை அடித்து கொண்டு கிடக்கிறது , வயிற்றில் இரண்டு வெளியே இரண்டு, என அத்தனையும் ஆண்மக்கள் ...

"போதும்டி... 

"இல்ல மாமா இன்னும் ஒரே ஒரு பொண்ணு பெக்கலாம் "என ஆசையில் இருவரும் காத்திருக்க. அதுவும் இரட்டை ஆண் பிள்ளைகள் என தெரிந்தால் முயற்சிகள் தொடரும் ....

ஊர் உலகம் வீரன் என்று போற்றினாலும், வீட்டில் அவன் மனைவி மக்களிடம் தோற்கவே விரும்புவான்.. 

"ப்பாஆஆஆஆஆஆஆ 

"என்னங்கடா மனைவிக்கு மல்லிகை பூவை வைத்து விட்டுக் கொண்டிருந்த மருது குழந்தைகள் சத்தத்தில் வெளியே வந்தான்..

"ப்பா 

"பெரியப்பா 

"ப்பா 

"என்னாச்சு கண்ணுகளா??"

"அங்க சித்தப்பாவுக்கும் சித்திக்கும் சண்டை"

"அதுக சண்டை போடாம இருந்தாதான் ஆச்சரியம் எடு அந்த உருட்டுகட்டையை, ஏழு கழுதை வயசாகுது இன்னும் சண்டை போட்டு உருண்டுகிட்டு இருக்கான்" என்று மருது உருட்டு கட்டையை எடுத்து கொண்டு உள்ளே போக ..

"ஏய் ஏய் வலிக்குதுடி ஆஆஆஆ ,அங்க அடிக்காத அடுத்த இரட்டை புள்ள கிடைக்காம போயிட போகுது , உன்னை நல்லா வச்சிக்கிறேன்னு சொன்னது இதுதானா.. நிதம் நிதம் வச்சி செய்றீயே "என வீர் அலறி கொண்டே வீடு முழுவதும் மின்னல் அடிக்கு தப்பித்து ஓடினான்..

"சித்தி சித்தப்பாவை பிடிச்சாச்சு வந்து அடிங்க" என நாலு குழந்தைகளும் அவனை பிடித்து கொள்ள..மருது வந்து தம்பியை காப்பாற்ற வேண்டியதாகி போனது..

"ஏம்மா எதுக்கு போட்டு இந்த அடி அடிக்கிற... 

"உங்க தம்பிகிட்ட கேளுங்க 

"என்னடா பண்ணின..

"பண்ணினேன் "என்றான் முணுமுணுப்பாக..

"என்னடா புரியல... 

"ம்ம்" அவன் காதில் ஏதோ சொல்லிவிட்டு..

"மின்னல் மழை வர்றது போல இருக்குடி, பிள்ளைகள தூங்க வச்சிடுறேன் "என்று கோபத்தில் இருந்த மனைவி பின்புறம் அடித்து வைக்க. 

"போடா எருமை!!" என்று அவன் முதுகில் சுளீர் என்று அடித்து வைத்தாள்.. 

"மாமா தம்பி என்ன சொன்னாங்க... 

"ம்ம் பலூன் தான் சர்வதேச பிரச்சனையா இருக்கும் போலடி... "

"ச்சீ என்னாச்சி 

"ஏற்கனவே இரட்டை குழந்தை ,போதும்னு அவ சொல்லி இருப்பா போல. இந்த தடிப்பய என்ன பண்ணினானோ அடுத்து உண்டாகி இருக்குதாம்...

"ஐஐஐஐ அப்போ அங்கேயும் இரட்டை புள்ள வந்தா சூப்பரா இருக்கும் மாமா... அதுக்கா என்ற தம்பியை இந்த வெளு வெளுக்குறா..."

"ம்ம் அவன் கொடுத்து வச்சவன், அடி வாங்குறான். நீ எப்போடி என்ன ஓட ஓட விரட்டி அடிப்ப.."

"போங்க மாமா உங்க ஆசையெல்லாம் ஒரு மாதிரிதான் இருக்கு "என்று அவனை இடித்து விட்டு மனைவி போக.. 

"அடியேய் டாக்டர் புள்ள ஒன்னு புதுசா வந்திருக்கு"..

"வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க மாமா ,ஏசி ரூம் தயார் பண்ணி வைக்கிறேன்..."

"சுதாரிச்சிட்டாளே!!" என்று சிரித்து கொண்டே அவள் பின்னால் போனான்..

மனைவி அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரமா தெரியாது.. நல்ல கணவன் அமைவது அந்த கடவுளே இறங்கி வந்து தருகிற வரம்தான் ... ஆணவம் இல்லாத அன்பை வழங்க,மருது இருக்க வாழ்கையில் வேறு என்ன வேணும் ... அவன் உள்ளங்கையில் இடம் பிடித்து தீரா காதல் தீவிரவாதி பட்டம் வென்று, அவனை காதல் கொண்டு கொண்டாடினாள் நித்தமும் ... 

வாசலில் உட்கார்ந்து மின்னல் புளுபுளுத்து கொண்டிருந்தாள்..

"ஒரு பேச்சுக்கு குடும்பம் தர்றேன்னு சொன்னேன் இப்படி முழு நேர வேலையா, குழந்தை தந்துட்டே இருக்கான்.. வரட்டும் போடுற போட்டுல, போட வேண்டியதை போடுவான்.. 

"எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என் பொண்டாட்டி போலவே இருப்பான்" என பாடி கொண்டே உள்ளே வந்த வீர் , நேரே மனைவி மடியில் போய் படுத்து கொள்ள..  

"போடா நான் கோவமா இருக்கேன்"..

"அப்படியா??" என்றான் பசுமாடாக சுரக்கும் சுரங்க அறையில் முகத்தை தட்டி கொண்டே..

"ச்சீ தள்ளி போ...

"இன்னும் ஒரு செட் பெத்து கொடுடி ..அண்ணன் போல ஆறா ஆகி போகும் ..."

"பூரி செட்டா , செட் செட்டா போட .. உங்க அண்ணன் நிறுத்திறது போல இல்லடா "

"அப்போ நானும் நிறுத்த மாட்டேன்."

"ஏதே?"..

"ஆமா, அவர நிறுத்த சொல்லு , நான் நிறுத்துறேன் அவர ஓடை பக்கம் போக சொல்லாத, நான் மழை வந்தா உன் பக்கம் வர மாட்டேன்... அவர மாற சொல்லு , நான் மாறுறேன்" என்றவனை கண்டு தலையில் அடித்து கொண்டவள் .. 

"ஆக, அண்ணனும் தம்பியும் மருதூர் புல்லா உங்க குழந்தைகளா நிறைக்க போறீய.."

"ஆமா, இதோ மழை துள்ளி போடுது , கட்டில் போட்டு வைக்கிறேன் வா "என்று புது மாப்பிள்ளை அவசரத்தில் ஓட..நிறைவாக புன்னகை செய்தாள் .. சலிக்காத மனைவி , காதலில் சலிப்பு கொடுக்காத கணவன் ... வெளியே கம்பீர ஆணாக அண்ணனுக்கு எப்போதும் தோள் கொடுக்கும் லட்சுமணன், வீட்டில் குழந்தைகளோடு ஒரு வளர்ந்த குழந்தை.. 

காலை விடியலில், தூங்கும் பிள்ளைகளை காரில் தூக்கி படுக்க வைத்து கொண்டு .. இரண்டு ஜோடிகளும் கிளம்பியாச்சி..

இன்னைக்கு பொன்னியின் செல்வன் படம் ரீலிஸ்.. முதல் நாள் , முதல் ஷோ பார்த்துவிட்டு, அப்படியே ஊரை சுற்றி விட்டு இரவு தான் வீடு வருவார்கள்..  

அன்பினால் கட்டுப்படும் உறவுகள், எந்த புயல், மழை காற்று வந்தாலும் உறுதியாக நிலைத்து நிற்கும் .. இந்த குடும்பத்திற்கு தூணாக துணையாக மருது பாண்டியன் இருக்கும் வரை எந்த ஒரு துன்பமும் மற்றவர்களை தீண்டாது .... 

குடும்பத்திற்கு சந்தோஷத்தை கொடுக்கிறோமோ இல்லையோ ?அதை கெடுக்காமல் இருந்தாலே போதும்..

நன்றி , 

வாழ்க வளமுடன் ,

வாழ்க தமிழ் !!

வளர்க தமிழ்நாடு !!

டீசர்

 பகலவனின் பனிமலர் அவளோ??

ஆந்திரா 

விஜயவாடா!!

___ சிபிஎஸ்இ பள்ளி வளாகம் , மாணவிகள் வெள்ளை நிற சீருடையில் வளையல் கலகலக்க பள்ளி பேருந்தில் வந்து ஏறினர்.. மெல்ல வண்டி குலுங்கி ஸ்டார்ட் ஆகியது ...

அண்ணா மேடம் வரல 

ஓஓஓஓ அந்த மேடம் இருந்தாலும் சத்தம் இருக்காது, இல்லைன்னாலும் சத்தம் இருக்காது சீக்கரம் வர சொல்லும்மா என்று டிரைவர் குரல் கொடுக்க 

மேடம் சீக்கரம் வாங்க என்று தொலைவில் அவசரமாக நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணை அழைக்க .. வியரத்த முகத்தை காட்டன் புடவையில் துடைத்து கொண்டு வந்து பேருந்தில் வேகமாக ஏறினாள் ...

சுவாதி ...

இருக்கையில் அமர்ந்து ஜன்னல் கம்பியில் சாய்ந்து அமர்ந்தாள்... ஆந்திராவின் பிரபல பள்ளியில் ஆங்கில ஆசிரியை, கண்களில் கனிவு , வேலை உண்டு , தான் உண்டு என எந்த பிரச்சனையும் இல்லாது இதோ இருபத்தி நான்கு வயது வரை கடந்துவிட்டது .. அவளுக்காக யார் இருக்கிறார்கள் என திரும்பி பார்த்தால், வெறுமை மட்டுமே சிரிக்கும் .. தோழிகள் கூட கிடையாது... அந்த தனிமையில் இனிமை காண துடிக்கிறாள்... நடந்திடுமா அவள் அமைதி தனிமை குலைக்கவே ஒருவன் பிறந்து வளர்ந்திருக்கிறானே .. 

தீடீரென பஸ் பிரேக் போட்டு நிறுத்தப்பட சுவாதி கம்பியில் தலைமுட்டி நிமிர... வெளியே டிரப்பிக், சலசலப்பு , 

யை வெளியே விட்டுப்பார்க்க போலீஸை அடித்து வெளுத்து கொண்டிருந்தான் ஒருவன் அவனின் பின்புறம் மட்டுமே தெரிந்தது ...

என்னாச்சி? அதிசயமாக வாயை திறந்து கேட்டுவிட்டாள் .. ஏதோ உயர் அதிகாரி போல என்று தான் நினைக்க வைத்தான் அவன்... ஆறடிக்கு மேல் உயரம் , அவ்வப்போது கையில் உள்ள காப்பை தூக்கி விட்டபடி காலை போலீஸ் கழுத்து வரை தூக்கி மிதிக்க ,ரெகுலர் உடற்பயிற்சி செய்பவன் என்பது அவன் காலை தூக்கி கிக் பண்ணுவதிலேயே தெரிந்தது .. 

மேடம் அவரத் தெரியாதா.. என்று அந்த பெண் கேட்கவும் 

அச்சோ தெரிந்து கொள்ளாத அளவு அவ்வளவு பெரிய அதிகாரியா என வெட்கம் கொண்டு .. 

ஐபிஎஸ்ஸா?

இல்ல மேடம் , 

 

கலெக்டரா அது லேடி இல்ல ...தனக்கு தெரிந்தவர்கள் பெயர் அனைத்தையும் கேட்டுவிட்டு..

ப்ச் யாருன்னு தெரியல யார் அது ?

அட என்ன மேடம் ஸ்ரீ அண்ணா தெரியாதா..

ஸ்ரீயா எங்கேயோ கேள்விப்பட்ட மாதிரி இருக்கு பட் தெளிவா நியாபகம் வரல என்று யோசித்து முடிக்கும் முன்பு காலை தூக்கி அடித்து கொண்டே சுவாதி நோக்கி திரும்பினான் ஸ்ரீ...

ஸ்ரீ ராம். 29 வயது , பிஇ மெக்கானிக்கல் இன்ஜியரிங் , பிறந்தது சென்னை , படித்தது ஆந்திரா .. தமிழ்நாட்டு வீரம் , ஆந்திரா கோவம், கேரளத்து நிறம் , பெங்களூர் லுக் , மகராஷ்டிரா ஸ்டைல் என ஆல் இந்தியா கலவை அவன்... 

ஸ்ரீ அண்ணா வந்தா மாஸ்தான்மேடம் .. இந்த போலீஸ் பொண்ணுங்க கிட்ட தப்பா நடந்திருக்கான் போல யாரோ ஸ்ரீ அண்ணாகிட்ட போட்டு விட்டுட்டாங்க, அதான் வந்து இறங்கிட்டார் .. இனிமே பொளந்து எடுத்துட்டுதான் மறுவேலை என ஆர்வமாக அந்த பெண் அடித்து கொண்டிருந்த ஸ்ரீயை பார்க்க..சுவாதி சலித்து கொண்டு திரும்பி அமர்ந்து கொண்டாள்... 

இவனுக்காக ஐபிஎஸ் அளவு எல்லாம் யோசித்தோம் ரவுடிப்பய போல, எங்கையோ இவன பார்த்திருக்கோமே என யோசித்து கொண்டே , தான் தங்கும் பெண்கள் விடுதி வந்து சேர்ந்தாள் ...

ஆந்திராவின் நடுத்தர வர்கத்து வீடு .. ஒரளவு பெரிய வீடுதான் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மகேந்திரன் வீடு அது...

தறுதலை எத்தனை லாரி , கார் , ரோட்டுல ஓடுது எதுலையாவது விழுந்து செத்து தொலைய கூடாதுன்னு வந்து சேர்ந்திருக்கியே.. உன்னால என நிம்மதி போகுது , போலீஸ் ஸ்டேஷன் போனவனை அப்படியே உள்ளேயே வச்சி கொல்ல வேண்டியதுதான.. உன்ன எல்லாம் யார்டா ஜாமீன் எடுத்து அழைச்சிட்டு வர்றது என மகேந்திரன் காட்டு கத்து கத்திக் கொண்டிருக்க.. தாய் சிவகாமி புடைவையில் வாயை பொத்தி கொண்டு அடி வாங்கி முகம் வீங்கி வந்த மகனை அழுது கொண்டு பார்க்க, தங்கை ராதிகா ஒருபுறம் அண்ணன் வாங்கும் திட்டை ரசித்து பார்க்க.. இத்தனை பேச்சுக்கு சொந்த்தக்காரன் ஸ்ரீயோ , 

குழம்பு சட்டியில் மீந்து கிடந்த குழம்பை, கரண்டி விட்டு மீனை தேடி கொண்டிருந்தான்..

என் இரத்தத்தில் சம்பாதிச்ச காசுல சோறு திங்குறீயே வெட்கமா இல்ல தூஊஊஊ என மனோகர் துப்ப.. 

சக்ஸஸ் !!! என்று மீனை எடுத்து தட்டில் போட்டு கொண்டவன், ரசித்து அதன் தலையை உறிஞ்சி தின்றுவிட்டு ஏப்பம் விட்டு கொண்டே மனோகர் காலை தாண்டி குதித்து எழும்பி போனவனை பார்த்து மூன்று பேருக்கும் ...

ஏன்டா இப்படி இருக்க?? என்றுதான் கேட்க தோணியது... 

சுருக்கமாக ஸ்ரீ யாருன்னு கேட்டா ...

வேண்டாத வேலையில் தலையை கொடுத்து அடுத்தவனுக்கு நல்லது பண்றேன்னு தன் வாழ்க்கையை இழந்து கொண்டிருக்கும் ரக்கட் பாய்ஸ் தலைவன் இவனே... 

வாய் பேச்சு எல்லாம் ஓல்ட் ஸ்டைல் , வச்சா குடுமி அடிச்சா மொட்டை ஸ்டைலில் எவனா இருந்தாலும் நெஞ்சில் ஏறி மிதிச்சிட்டு போயிட்டே இருப்பான்.. நேத்து வரை பிரபல கார் கம்பெனியில் ஏதோ ஒரு வேலையில் இருந்தான்.. பல வருடமா வேலை பார்க்கிறான் என நினைத்தால் தவறு .. வேலைக்கு சேர்ந்ததே அதுக்கு முந்திய நாள்தான் .. மேனேஜர் ஏதோ ஒரு பொண்ண தப்பா பேச , நம்ம சிங்கம் போய் மூக்கை உடைக்க கெட்டவுட் சொல்லி விரட்டியாச்சி.. இப்ப வேலையில்லா பட்டதாரி, பாக்கெட்டில் பணம் நஹி, இருந்த ஐநூறு ரூபாயையும் போலீஸ் அபேஸ் பண்ணிடுச்சி .. வீட்டுல சுரணை பார்த்தா சோத்துக்கு வழியில்ல அப்பன்காரன் பேசும் பேச்சுக்கு எரிச்சல் கூந்தல் வந்து, அவர்கிட்ட மல்லுக்கு நிற்பான்.. தேவையா இது தேவையா? அதான் வீட்டுக்குள்ள வரும் போதே கிலோ பஞ்சை காதில் அடைத்து வைத்துவிட்டு உள்ளே வந்தாச்சி.. எவனும் என்னமும் பேசு நமக்கு சோறுதான் முக்கியம் என தின்று முடித்து விட்டு மறுபடியும் வெளியே கிளம்பி விட்டான்....

என் வேலை உண்டு என இருக்கும் அவளும், எல்லார் வேலையிலும் மூக்கை நுழைக்கும் அவனும் ஒரே கயிற்றில் மாட்டபட்டால் நிலை என்னவோ?? 

அவன் பகலில் மலரும் பகலவன் .. இவள் குளிரில் மலரும் பனிமலர் பத்து பொருத்தமும் இடித்தது …