மின்னல் 13,14
Min13

13 சொல்லாலே தொட்டுச் சென்ற மின்னல்
"அய்யோ தம்பிஇஇஇஇஇ என மேலிட்ட வயிற்றை பிடித்து கொண்டு குழலி ஓடி வர பார்க்க.. மருது எட்டி பார்த்த பார்வையில் மெதுவாக நடந்து அவர்கள் அருகே வந்து..
"மாமா எதாவது பண்ணுங்க, இப்படி பார்துட்டே இருந்தா எப்படி ,என்ன பண்ண போறீங்க? ..
"புதைக்கலாமா? இல்ல நம்ம குல வழக்கப்படி எரிக்கலாமான்னு யோசிசிட்டு இருக்கேன் கண்ணு.. நீ பதறாத, காரியம் முடிஞ்ச பிறகு நாலு நாள் கொடைக்கானலை சுத்தி பார்த்துட்டு மறக்காம கோடாரி தைலம் வாங்கிட்டு போவோம் ,சரியா? என்று மனைவியிடம் நக்கல் பண்ணி கொண்டே மூவர் நாடித்துடிப்பை பார்த்தவன்..
"இது தேறாது" என்று சுவாதியை விட்டுவிட்டு விருமனை ஒரு தோளில், மின்னலை மறுதோளில் அசால்டாக தூக்கி போட்டவன்..
"கண்ணு பொறுமையா கீழ பார்த்து நடந்து வா சரியா..
"என்ன மாமா நீங்க பதட்டமே இல்லாம இருக்கீங்க வாங்க சீக்கிரம் ஆஸ்பத்திரி போவோம்..
"எதுக்கு ??
"அப்போ இப்ப நாம எங்க போறோம்..
"அதான் சொன்னேனே இதுகள மலைமேல இருந்து உருட்டி விட்டுட்டு, மத்த சோலியை போய் பார்ப்போம்" என்றதும் குழலி உதட்டை பிதுக்க..
"என் அழகு கண்ணு, வியர்க்குது பாரு போய் ஏசி ரூம் பார்த்து உட்கார், உன்ற மாமனுக்கு ஒருத்தியை வகுந்து எடுக்கிற வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு உன்ன கூட்டிட்டு போறேன்...
"ம்ம் சரி மாமா சீக்கிரம் வாங்க, புள்ளைங்க பாவம் எதுவும் ஆகிட போவுது.."
"எனக்கு கட்டளை போட என்ற பொஞ்சாதியால மட்டும்தேன் முடியும்.. நீ சொன்னா மாமா மறுபேச்சே இல்லாம செய்வேன்டி போ.."
"லேய் அண்ணிக்கு ஒரு சோடா உடைச்சி கொடுங்க" என்று குரல் கொடுத்து வி்ட்டு, மகளை மடியில் தூக்கி வைத்து கதறி கொண்டிருந்த மைதிலியை சொடுக்கிட்டு அழைத்த மருதுபாண்டியன்..
"சத்தம் வர கூடாது மூச்... "
"என் பொண்ணு" என்று காது வழியே ரத்தம் நிற்காது வடியும் மகளை தூக்கி மார்பில் வைத்து அணைத்து கொண்டு , உதடு துடிக்க சத்தம் வராது கண்ணீர் வடிக்க குழலி அவன் அருகே வந்து எதையோ கொடுத்து விட்டு போனாள் ..அதை பார்த்தவன்..
"உன்ற பொண்ணு இப்பத்தேன் கண்ணுக்கு தெரியுதோ?? ... என்ற அம்மை சிநேகிதி நீன்னு ஒரு மரிவாதை எப்பவும் உண்டு.. அதனாலதான் என்ற புள்ளைகள உன்ன நம்பி உன்ற வீட்டுக்கு அனுப்பினேன்.. ஆனா நீ என்ன காரியம் பண்ணி வச்சிருக்க.. இப்ப தானே உன்ற வண்டவாளம் தெரியுது... உன் பொண்ணு நல்லா இருக்கோணும்ங்கிறத்துக்காக இந்த பொண்ணோட வாழ்க்கையை புடுங்கி அவளுக்கு கொடுக்க நினைச்சிருக்க.. என் அம்ம கூட இருக்கும் வரைக்கும் புத்தி தடுமாறாமதானே இருந்த..."மைதிலி தலைகுனிய
"எப்போ உனக்கு பணத்து மேல ஆசை வந்ததோ அப்பவே உன்ற புள்ள, வீடு குட்டி எல்லாம் மறந்து போச்சி, அதுக்கு பின்னாடி ஓடிக்கிட்டு.. இப்ப என் பொண்ணுன்னு மடியில தூக்கி போட்டுக்கிட்டு அழுற... 24 மணி நேரத்துல ஒரு மணி நேரம் கூட உன் பிள்ளைகளோட இருக்க உனக்கு நேரம் இல்லாத அளவு அப்படி என்ன உனக்கு வேலை மேல பைத்தியம் .. ஆசை!! ஆசை !! எதுக்காக சம்பாதிக்கிற உன் பிள்ளைக்காகதானே.. பாரு அந்த பிள்ளைக்கு அந்த காசு உபயோகப்பட்டதான்னு...
"என்னைக்காவது ஒருநாள் தன் தாய் கையால சோறு திங்க மாட்டோமா, ஒரு நாள் தன்னோட தாய் கைய புடிச்சுகிட்டு ஊரை சுத்த மாட்டோமா..தான் அம்மா முகத்தை பார்த்து சிரிச்சு பேச மாட்டாளா, உனக்கு என்ன வேணும் ஏது வேணும்னு கேட்க மாட்டாளான்னு ஏங்கி ஏங்கி தன்னுடைய 20 வருஷத்தையும் வெறுமையா கழிச்சு , நோய்ல விழுந்து வாழ விருப்பம் இல்லாம, சாக துணிஞ்ச உன்ற புள்ளையை திருப்தியா பாரு ...இந்த புள்ள முகத்தை பார்த்துமா உனக்கு மத்தவங்களோட உணர்ச்சி புரியாம போச்சி.. எத்தனை குழந்தைகளை இந்த உலகத்துக்கு கொண்டு வந்திருப்ப.. ஒரு நாளாவது உன் குழந்தைக்கு என்ன தேவைன்னு உட்காரந்து யோசிச்சு இருப்பியா... நீ சம்பாதிச்சு கட்டி வச்சிருக்க இந்த வீட்டையும், சொத்துபத்தையும் உன்னை சுத்தி வச்சுக்கிட்டு உட்கார்ந்துரு.. அது ஒருநாளும் உன்கிட்ட நீ சாப்டியா, தூங்கினியான்னு கேட்காது நீ என்ன பண்ற கொண்டன்னு அதற்கு கவலை கிடையாது .. ஆனா உன்ற புள்ள அப்படி கிடையாது.. இப்ப கூட உன்ன விட்டு கொடுக்க முடியாமதேன் சாஞ்சு கிடக்குது... அது வளரும் போது உன்னோட வழிகாட்டுதல் இல்லை... வளர்ந்த பிறகு உன்னோட பாதுகாப்பு இல்லை ... காதலாவது தனக்கு துணையாய் இருக்குமான்னு.. வைக்கக்கூடாத இடத்துல காதல வச்சுட்டு , அந்த காதல் தனக்கானது இல்லன்னு எப்போ தெரிஞ்சுதுதோ அப்பவே அந்த பொண்ணு சமாதி ஆயிடுச்சு... இனிமேதான் அந்த பொண்ணு சாகணும்னு நீ நினைக்கிறியா... இதோ இதுதான் உன்ற பொண்ணு உனக்கு எழுதின கடைசி கடுதாசி பாரு" என மைதிலி முகத்தில் தூக்கி வீசினான்... சுவாதி அறையில் இருந்ததாக குழலிதான் எடுத்து கொண்டு வந்து கொடுத்தாள் ..
ஆம் !! மின்னலுக்கு சேலை மாற்ற சுவாதி கொடுத்துவிட.. அங்கேயே சேலை மாற்றிய மின்னல் ஏதோ நியாபகத்தில் தாலியை மறைக்க மறந்து போக..
"இது என்ன வித்யாசாமா இருக்கு? "என சுவாதி கூர்ந்து பார்க்க.. மின்னல் தாலியில் கணவர் பெயர் கிடக்கும்.. விருமன் என்ற பெயரை கண்டு ஷாக் அடித்தது போல சுவாதி பதறும் போதே , தலை வலி கண்களை சுழல வைக்க... மறுபடியும் கூர்ந்து பார்க்க விருமனேதான்.. அவள் கால்களை சட்டென்று குனிந்து பார்க்க.. மெட்டியும் அவள் விருமன் சொந்தம் என காட்ட தாலி, மெட்டி பத்தி தெரியாத தமிழ்நாட்டு பெண் உண்டா?என்ன ..
ஏன் எதற்கு?? இவள் கழுத்தில் கிடப்பது வீர் கட்டிய தாலி என்றால் ... எதற்காக தனக்கு அவனை விட்டு கொடுக்கிறாள், எங்கே தப்பு நடக்கிறது என்றவள் அவளிடம் பேச்சு கொடுத்து கொண்டே , தன் தாயின் பெட்டியை திறந்து பைல்களை பார்வையிட , தன் மெடிக்கல் ரிப்போர்டை கண்டவள் அதை எடுத்து பார்த்து சிரித்து கொண்டாள்...நேற்று இரவு மாடியில் நிற்கும் போது தன் தாயோடு மின்னல் நின்று பேசியதை பார்த்த சுவாதிக்கு காயை நகர்த்தியது தாய் என புரிந்து.. ஒரு பேப்பரை எடுத்து மின்னல் மனக்கவலை தாங்காது ஏதோ வேலை என்ற பேரில் செய்து கொண்டிருக்க, சுவாதி தன் இறுதி கடிதத்தை எழுதினாள்..
"நான் ஆசைப்பட்ட போது எனக்கு நீ துணையா இல்லையேம்மா.. இப்ப எனக்கு எதுவுமே துணையா வேண்டாம் மரணம் போதும் அதுவாவது எனக்கு நிம்மதியா இருக்கட்டும் ...நான் ஆசைப்பட்டது வீர்தானே தவிர , மின்னலோட விருமன் இல்ல... யாரோட வாழ்க்கையையும் பறிச்சி வாழுற அளவுக்கு நான் மோசமான பெண்ணும் இல்லை ... அப்படி எனக்கு ஆண் துணை தேவைன்னா,, தனியா இருந்த எத்தனையோ நாட்களில் பல பேரை நான் தேர்ந்தெடுத்து சந்தோஷமா வாழ்ந்திருப்பேன்.. நான் ஏங்கியது பாசத்துக்கு, காதலுக்கு, அன்புக்கு கடைசி வரை அது எனக்கு கிடைக்கல... அதுக்காக அவர மறந்தும் என்னால வாழ முடியுமான்னு தெரியல, ஏதோ ஒரு தெருநாய்க்கு சோறு வைக்கும் போது அவர பார்த்தேன் அந்த நாய்கூட பேசிட்டு தலையை தடவி கொடுதுட்டு போனார் ... ஒரு நாய்க்கு இவ்வளவு கரிசனை காட்டும் போது என்ன பார்த்துப்பார்னு ஆசைப்பட்டுதான் காதலிக்க ஆரம்பிச்சேன்.. என் உயிரோட கலந்தே போயிட்டார்... வீர் எப்பவும் என் காதலன் .. ஆனா விருமன் எப்பவும் மின்னலுக்கு சொந்தமானவன்... வீர சுமந்த மனசோட நான் நிம்மதியா செத்து போயிடுறேன்.. எனக்காக யாரும் எதையும், யாரையும் விட்டு கொடுக்க வேண்டாம் என் கல்லறையில வாழ ஆசைப்பட்டு ஆசைப்பட்டு தோற்று போன ஒரு துருபாக்கியவதின்னு எழுதுங்க.. ம்மா ஐ லவ் யூ ம்மா .. நீ தப்பே பண்ணினாலும் உன்ன வெறுக்கவே முடியல ஐ மிஸ் யூ... நான்தான் இந்த காதல் கதையின் இடைச்சொருகல்னா நான் இல்லாம போறதுதான் எல்லாருக்கும் நல்லது ... என்னோட இறுதி ஆசை என் அம்மாவுக்கு ஒரு மன்னிப்பு வழங்க முடியும்னா... அதை கொடுத்திருங்க ,நான் இல்லாம இந்த உலகத்தில அவங்க வாழ்றதே அவங்களுக்கு தண்டனைதான் ப்ளீஸ்" என்றவள் சொட்டு கண்ணீர் அந்த இடத்தை நிரப்பி இருந்தது ..
"இன்னொரு ஜென்மம் எடுத்து வர ஆசை!! அதுலயாவது என்ன பைத்தியமா காதலிக்க ஒருத்தன் வேணும் ..காதலிக்கப்படணும், அப்படி ஒரு காதலுக்காக இருட்டறையில் காத்திருக்கிறேன்... இப்படிக்கு சுவாதி" என்று முடித்தவள் ...
எது தனக்கு தூக்கம் தந்தது என்று நினைத்தாளோ அதே மாத்திரையை முழுதாக வாயில் போட்டு விழுங்கி கொண்டு மின்னலோடு மணமேடை வந்தாள்...
இந்த இரண்டு மெண்டல்களும் காதல் புனிதமானது என காட்ட, சாக்லெட் போல டபரா விஷத்தை குடித்து விட்டு குப்புற விழ... அடேய் சாகும் போது கூட பின்னாடியே வர்றீங்களேடா !! என சிரித்து கொண்டு மயங்கி விழுந்தாள்.. ஆனால் இனி அவள் இருவருக்கும் இடையில் போக போவது இல்லையே..
"உன்ற பொண்ணு அந்த சாமிக்கு சமம் .. அது இப்படி கிடக்க நீ ,நீ மட்டும்தேன் காரணம்..."
"ஆஆஆஆஆ சுவாதிஇஇஇஇஇஇ ம்மா எழும்பும்மா என்று மைதிலி கதற...
"லேய் கலெக்டர் எப்போ ஒரு உயிரோட மதிப்பு தெரியாம விளையாண்டாளோ, அப்பவே இந்த மருத்துவ தொழிலுக்கு ,அவ அருகதை இல்லாதவ லைசென்ஸ் கேன்சல் பண்ணு , உன்ற பொண்ணால நீ தப்பிச்ச ,"என்று திருமணத்துக்கு வந்திருந்த கலெக்டருக்கு கட்டளை போனது வாசல் வரை போனவன் திரும்பி..
"லேய் அந்த புள்ளையை நான் சொல்ற இடத்துக்கு தூக்கிட்டு போங்கலே பொழச்சா பூமிக்கு. இல்ல சாமிக்கு "என்று இடத்தை கூறிவிட்டு இங்கே தோளில் கிடந்த இரண்டு எருமைகளையும் சுமந்து கொண்டு மருத்துவமனை நோக்கி போனான்...
வீர் மின்னல் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட..
"கண்ணு"
"மாமா" குழலி உதடு துடித்தது அழுதாள் வாங்கி கட்டுவாள்
"என்னடி ஜூஸ் வாங்கி தரவா..
"மாமா கொஞ்சம் அழுதுக்கவா... ரொம்ப பாரமா இருக்கு.."
"அதுக செத்த பொறவு அழணும்ல, இப்ப அழுது கண்ணீரை வேஸ்ட் பண்ணாத..அவள் வயிற்றை தடவி கொண்டே
"டேய் சிங்கக்குட்டிகளா இன்னும் கொஞ்ச நேரத்தில உன்ற சித்தப்பனுக்கு காரியம் ஜெகஜோதியா பண்ண போறோம் ... நான் வீடியோ எடுத்து வைக்கிறேன் சரியா ... சந்தன கட்டையில வச்சுதான் எரிக்கணும் கண்ணு, இந்த மாதிரி சாவை இந்த உலகத்துல யாரும் கொண்டாடி இருக்கபுடாது அப்படி விமர்சையா பண்ணணும்.."
"ஏன் மாமா இப்படி பண்ணுதீக ..
"பின்ன என்னடி மணமேடையில வந்து உட்கார்னு சொன்னா அந்த கிழவி மண்டையில நாலு போடு போட்டு கொல்றதுக்கு வழி இல்லாம , விஷத்தை குடிச்சிட்டு பூச்சாண்டி காட்டிட்டு கிடக்குதுக , இதுகள வச்சி என்ன செய்ய சொல்லுத..
"என்ன செய்ய மாமா சந்தர்பம் சூழ்நிலை அப்படி ஆகி போச்சு போல..
"ஆமா சப்போர்ட் பண்ணு , எழும்பட்டும் நாய்களுக்கு இருக்கு.."
"அய்யோ ஒன்னும் பண்ணி புடாதீக .. அவன் திரும்பி தன் திருமதியை முறைக்க..
"மாமா
"ம்ம்" என்றான் மீசையை சுருட்டி விட்டு கொண்டே..
"மாமா...
"என்னடி...
"உங்களுக்கு எப்படி மாமா இவுக கல்யாணம் நடந்தது .. இப்ப சுவாதி கூட கல்யாணம் வரை வந்தது எல்லாம் தெரியும் , கேட்டா சொல்லவே மாட்டைக்கிறீகளே..." அவன் அமைதியாக கால் மேல் கால் போட்டு ஆட்டி கொண்டே....
"ம்ம் சொன்னா என்ன தருவ??..
"என்ன தரணும்...
"உனக்கு தெரியாதா மாமா ஆசை பத்தி.
"ம்க்கும் இப்பதான் பக்கத்தில வரவே மாட்டைக்கிறீங்களே .. நானா பிடிச்சு இழுத்தா கூட மேல்டாப்பா எதையோ பண்ணிபுட்டு ஓடுவீக..
"ஏன் நல்லா இல்லையாக்கும்..
"ஆமா.. அப்படியே நண்டு பிடி பிடிச்சு இடுப்பை கசக்கி வியர்வை வடிய வடிய அசையும் போது எப்படி இருக்கும் தெரியுமா?? இது உப்பு சப்பே இல்லாம இருக்கு "என்று சலித்த மனைவி மொழியில் கருஉதடு விரிய...
"பின்ன இரண்டு குழந்தை கிடக்கேடி..
"ஆமா வழுவி விழ போகுது பாருங்க, சும்மா சாக்கு சொல்லிகிட்டு.. அந்த டீச்சர் இளிச்சி இளிச்சி பேசுதாம்,இப்பவெல்லாம் சண்டைக்கு கூட லெக்கான் கோழி போக..
"யாரு சொன்னா?" மனைவி அருகே சரிந்து உட்கார்ந்து அவள் சண்டைக்கு வருவதை ஊக்கப்படுத்தினான் .. நேரம் போகவிலலை என்றால் இதுதான் வேலை ,. டீச்சர் பத்தி பேச்சு தொடங்கி மனைவியை உசுப்பிவிட்டு ஊமைக்கோட்டானை சண்டைக்கு இழுத்து அதில் இன்பம் கொள்வான்..
"யார் சொன்னா என்ன , நீங்க அங்கன எதுக்கு போறிய.."
"பாடம் படிக்கத்தேன் .. அவள் பொட்டு வியர்வை விரலில் சுண்டி விட்டு காற்றை ஊதி குளிர்வித்தான்..
"இனிமே போவாதீக எனக்கு பிடிக்கல..
"அப்போ நிதமும் போவேன்டி ..
"மாமமாஆஆஆஆ ..என்றவள் குரல் மோகத்தில் சந்தனமாக குளிர்ந்து வர ...
"கண்ணுஊஊஊ...
"போவியளா??" என்றவள் விரல் அவன் விரலை நெருக்கி ஏதோ கேட்க..
"உன்ற முந்திக்குள்ள சோவி தேடவே எனக்கு நேரம் பத்தல ,அங்க என்னடி எனக்கு சோலி" என்றவன் அவள் விரலை ஒவொன்றாக பல்லில் வைத்து கடிக்க...
"மாமாமாஆஆஆ ..
ம்ம்ம்ம் ஒரு வாரம் இங்கன தேனிலவு கொண்டாடிட்டு போவோமா..
"போகும் போதும் இன்னும் இரண்டு உள்ளாற வந்திடுமே கண்ணு.."
"எத்தனை வந்தாலும் வுடுறதா இல்லை , பெத்து போட்டுட்டு இருக்கேன்.. என் மாமன் ஆசை எவ்வளவு இருக்குன்னு பார்க்கணும்" என்று அவன் மீசையை பிடித்து இழுத்து பச்சக் என்று ஒன்று வைக்க .. அடிக்கடி அவள் செல்லம் கொஞ்சும் கரடி பொம்மை மருதுதான் அவன் மடங்கி போகும் இடமும் அவள் மடிதான்...
"சும்மா உசுப்பி விட்டுகிட்டே இருக்கடி, நான் அய்யோ பாவம் கண்ணுக்கு வலிக்கும்னு விலகி போனாலும் வந்து மேல விழுற.."
"உங்கள யாரு விலக சொன்னா, வலிச்ச இடத்துக்கும் பத்து போடுங்க, எல்லாம் சரியா போகும் "என்று இன்னும் அவனோடு ஓண்ட..
என்ன தெரியோணும்...
"இல்ல இங்கன நடந்தது எல்லாம் எப்படி தெரியும்
"என்ற உலகம் நீங்கதான்னு ஆன பொறவு ,கவனம் எங்கேயும் போகாதுடி, என்ன வி்ட்டு நிலாவுக்கு போனாலும் வடை சுடுற பாட்டிகிட்ட ஒரு இடம் போட்டு உட்கார்ந்து உங்களை காப்பாத்த வேண்டியது என்ற கடமை .. டாக்டர் ஸ்டீபன் சொன்னார் ... என்று அவளை அணைத்து பிடித்தான்..
"சார்இஇஇஇஇ கையெழுத்து போடுங்க" என்று டாக்டர் வர...
"போய் சேர்ந்துடுச்சா...
ஆமா சார் அவன் கேட்ட தோரணையில் டாக்டர் உதறி போனார்..
14 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்
போவாதே அவ்வளவு சீக்கிரமா போய் சேரந்துட்டானா என்ன...
"இல்லைங்க சார் பொழச்சிக்கிட்டாங்க...
"பொறவு எதுக்கு கையெழுத்து ..
" உள்ளாற போய் நீங்க அடிக்க கூடாதாம்.. அப்பதான் வெளியே வருவேன்னு ஆபரேஷன் தியேட்டர்குள்ள போய் விருமன் சார் பூட்டிக்கிட்டார்... நீங்க இதுல கையெழுத்து போட்டு ஒன்னும் பண்ண மாட்டேன்னு எழுதி கொடுங்க ,, அதை கொண்டு போய் கொடுத்தாதான் திறப்பார் ...
""ஓஓஓஓ நேக்கா தப்பிக்கிறானாமோ.. நீ போ, நான் பார்த்துக்கிறேன்" என்றவன் உருட்டு கட்டை ஒன்றை காலால் எத்தி கையில் பிடித்தவன்
"இந்தா வாரேன்லே விஷமா குடிச்சி விளையாடுதிய, இன்னைக்கு போடுற போட்டுல இனி விளையாட்டுக்கு கூட அந்த பக்கம் திரும்பி பார்க்க புடாது "என்று போக...குழலி அவன் கையை பிடித்து தடுத்து...
"மெதுவா அடிங்க மாமா "என்று கண்சிமிட்ட...
"இச் இச்" என்று அவள் உதட்டில் இரட்டை முத்தம் கொடுத்து விட்டு.. விஷத்தில் போகாத வீர் மீதி உயிரை மருது போக வைத்து விட்டான்..
"அண்ணன் அஅஅஅஅஉஉஆஆஆஅ வலி..க்குது...அடிக்காத..... அய்யோ அய்யோ அது மெயின் பார்ட், இன்னும் பிள்ளை கூட உண்டாகல அங்க போடாத.. ஆஆஆ ம்மா மதனிஇஇஇஇஇஇ காப்பாத்துங்க" என்று அலற அலற துவைப்பு நடந்தது...
"எங்க உன் பொஞ்சாதி??" ..
"ஆஆஆஆ அந்தா இருக்கா அவளுக்கு நாலு போடு அந்த காட்டு பன்னியாலதான் எல்லாம்" என கையை தடவி கொண்டு வீர் அடுத்த கட்டிலை காட்ட மின்னல் திருட்டி முழி முழித்து...
"நான் இல்லை மருது அண்ணன் அவன்தான் .".
"இல்ல அவதான் ..
"இல்ல அந்த நாய்தான்
"அந்த பேய்தான் காரணம்" என்று சண்டை போட..
"அட ச்சை நிறுத்தி தொலைங்க ..இது சரி பட்டு வராது மின்னல் நீ இவன விவாகரத்து பண்ணிடு.. ஒரு பொஞ்சாதியை ஒழுங்கா பார்த்துக்க தெரியாத அவனுக்கு கல்யாணம் என்ன அவசியம்..லேய் நீ பொட்டி படுக்கையை கட்டிகிட்டு பெங்களூர் கிளம்பு இனிமே உன்னை இங்கன பார்க்க புடாது... "
"அண்ணா
"மதனி இஇஇஇஇ"இ என்று பிழைத்த வந்த ஜோடியும் ஒருவரை ஒருவர் பரிதவித்து பார்க்க...
"சாவு தானா வரணும்ல ,நாம தேடி போவ புடாது
சாக துணிஞ்சி நிற்க தெரிஞ்ச உங்களுக்கு, வாழ ஒரு வழி கூடவாலே தெரியல.. இந்த அண்ணன்கிட்ட கூட சொல்ல தோணல என்னலே..."
"இல்ல அண்ணன் அன்னைக்கு சுவாதி கூட நிச்சயதார்த்தம்னு சொல்லும் போது திட்டிபுட்டியலா அதேன் என்ன தப்பா எடுத்துப்பியலோன்னு.."
"என் புள்ள தப்பு பண்ணினா கண்டிக்கதான்லே செய்வேன்... அதுக்கு புள்ள இல்லன்னு ஆகிபுடுமா எம்மா காதலுக்காக எதை வேணும்னாலும் விட்டு குடுக்கலாம், காதலை விட்டு கொடுக்கலாமா.. விஷயம் கேள்விப்பட்டு உன்ற கன்னத்துல நாலு போடுற அளவுக்கு கோவம் வந்தது ... உதவி எங்க செய்யணுமோ அங்க செய்யணும்.."
"நல்லா பேசி பழகுறவங்க நமக்கு நல்லதே செய்வாங்கன்னு நினைச்சுகிட்டு இருக்க கூடாது ,தேளோட கொடுக்கல விஷம் இருக்கிற மாதிரி தேனை உண்டாக்குற தேனீயோடு கொடுக்குலையும் விஷம் இருக்கு.. இதை நான் சொல்லல ..விவேகானந்தர் சொல்லி இருக்கார்.. கண்ண மூடிகிட்டு எல்லாரையும் நம்பவும் கூடாது.. ஏன் எதுக்குன்னு ஆராயாம உதவி செய்யவும் கூடாது .. நீ செய்ற உதவி ஒருத்தனுக்கு நல்லதா இருக்கணுமே தவிர .. அந்த உதவி உனக்கு கன்னியா வர்ற மாதிரி எப்பவும் இனிமே காரியத்தை செய்யாதே..
"ம்ம் சரி "என்று மின்னல் தலைகுனிய...
இருவரையும் காரில் அமர வைத்தவன் தன் மனைவி பெரிய வயிற்றை வைத்து கொண்டு காரில் ஏற தடுமாற.. சுற்றி வந்து அவள் காலை தூக்கி உள்ளே வைத்து ..
"இப்ப சரியா இருக்கா கண்ணு ....
"என் மாமன் பக்கத்தில இருந்தா எல்லாம் சரியாதேன் இருக்கும் ...என்றவளை குறையா காதலோடு பார்த்தான் ...
பின் இருக்கையில் வீரோ உர்ரென்று அமர்ந்திருந்தான் .. துணையோடு சண்டையாம்..
பயபுள்ள அடுத்த ஹாட் எபிக்கு அடி போடுது ..
நாம அதுக்கு அப்படி ஒரு வாய்பபு கொடுக்க போறது இல்ல என்ற உண்மை தெரிஞ்சா...
மருதுவுக்கு ஒரு ரொமான்ஸ் எபி கொடுக்கிறதா கால்ஷீட் பண்ணிதான், இழுத்துட்டு வந்திருக்கு அப்ப அவனுக்கு அதை கொடுக்கிறதுதான நியாயம்..
ஊர் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிறது..மருது வீட்டு அருகே மாளிகை போல ஒரு வீட்டை கட்டி தம்பிக்கு கொடுத்து..
"இது உனக்குதேன் இங்கன இருந்தாலும் சரி இல்ல மெட்ராஸ் போனாலும் சரி
"இனி உங்கள விட்டு எங்கேயும் போகல அண்ணன்
"உன் இஷ்டம் "தம்பி இன்னும் தெளியாமல் இருப்பதை பார்த்து ..
"என்னலே பொண்டாட்டி கூட சண்டை ஓயலையா..ம்ம்
"பின்ன என்ன அண்ணன் ஒரு வார்த்தை சொன்னாளா ? சாக போயிட்டா "
"நீயும் தான?"
"நான் அவள பயம் காட்ட சும்மா இரண்டு சொட்டு விஷம்தேன் குடிச்சேன்.."
"அவளும் உன்ன அலர்ட் பண்ண இரண்டு தூக்க மாத்திரை தான் போட்டா ...
"ஹான்..
"ம்ம்
"இருந்தாலும் ஏத்துக்க முடியல" ஒரு வாரமாக இருவரும் ஒருவர் முகம் பார்க்காது வீர் மருது பின்னாடியும்... மின்னல் குழலி பின்னாலேயே சுற்றுகின்றனர் .. வீர் தூங்க திண்ணையில் கட்டில் போட்டு படுத்து கொள்ள, அவளும் கண்டுகொள்ளாது கதவை அடைத்து கொண்டு தூங்க .. அதை பார்த்து கொண்டிருந்த மருது பாண்டியனுக்கு ஒரே ஆசை... பொண்டாட்டி இப்படி சண்டை போட்டா எப்படி இருக்கும் ... என அவளிடம் கூற..
"ச்சீ போங்க மாமா , எனக்கு அதெல்லாம் வராது" என்று அவன் ஆசையில் பெட்ரோல் ஊத்தி கொளுத்தி விட ..
"பிடி அந்த டீச்சரை , நாலு நாள் என்ற பொஞ்சாதி கண்ணுல படுற மாதிரி டீச்சர் கூட சிரிச்சு பேசி இந்த வாட்டி பெரிய சண்டை போட்டு உருளணும்" என தினமும் டீச்சரை அழைத்து வைத்து கதையளக்க... அவன் பொஞ்சாதி முதலில் பாத்திரத்தை உடைத்தாள் .. அடுத்து ஆடு மாடுகளை திட்டினாள்... இதோ இப்போதும் மருது திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ..
"என்ன டீச்சர் வியர்த்து போய் இருக்கீக.. இந்தாடி தண்ணீ கொண்டு வாடி "என்று இந்தா போட..
"இந்தாவா, இதோ வர்றேன்" என்று சேலையில் இடுப்பில் சொருகி கொண்டு சண்டைக்கு தயார் ஆகி போக, அடுத்த எபி எப்படியும் ரொமான்ஸ் தந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் சங்கமும், சங்க விழுதுளும்..
"டேய் விருமா .. திண்ணையில் படுத்து கிடந்து வானத்தில் இல்லாத நட்சத்திரத்தை எண்ணி கொண்டிருந்த விருமன் அருகே போய் மின்னல் அமர.. உடனே நகர்ந்து படுத்தான்...
"விருமா...
"தள்ளி போயிரு இனிமே என் கூட பேசாதடி
"கோவமா .."
"ஆமாடி..."
"ஓஓஓஓ சரி கோவமாவே இரு , நானும் கோவமா இருக்கேன் .. எப்போ பேச தோணுதோ அப்ப பேசு"" என்றவள் எழும்பி கதவை திறந்து வைத்து கொண்டே சேலையை கழட்டி நைட்டி மாட்டி ஜிப்பை அவன் காது கூச க்ரீச் சத்தம் போட்டு பூட்டினாள்...
அடுத்த ரொமான்ஸும் தயார் என அழுத்தம் திருத்தமாக சொல்லி கொள்கிறேன்..
எல்லாம் போவட்டும் ரைட்டரே சுவாதி என்ன ஆனா?
மறு ஜென்மம் கேட்டாள்ள கொடுத்தாச்சி....
"புரியலயே "
கேரளாவின் வர்மக்கலை வைத்தியச்சாலை
"ஐய்யா என் பொண்ணு" என்று மைதிலி கையை பிசைய...
"காப்பாத்தியாச்சு மோளே , மூளையில உள்ள நரம்பை தட்டி விட ஒரு மாசம் ஆகும். அதுவரை இவ்வட இருங்க.." ஆபரேஷன் பண்ணும் அளவு அவள் உடல் இல்ல என்று ஸ்டீபன் கையை விரித்து விட மருது சொன்ன கேரளா வைத்தியச்சாலை அழைத்து வந்தனர் அவரோ இது ஒன்னும் இல்லை ஒரு மாசம் அடைப்பு அளவை குறைச்சி நரம்பே தட்டி விட்டா சரியா போகும் என வயிற்றில் பால் வார்க்க அங்கேயே அவருக்கு மருத்துவம் தொடங்கியது..
"ரொம்ப நன்றிங்க "
"உங்க பொண்ண காப்பாத்த முடிஞ்ச ,எங்களால அவளோட நினைவுகளை காப்பாத்த முடியல...
"புரியலயே "
"தன்னோட கடந்த காலங்கள் மொத்தமும் அவளோட மூளையில ஏற்பட்ட அதிர்வுனால.. சுத்தமா அழிஞ்சு போச்சு..
"அய்யா
"ம்ம் இப்ப உங்கள பார்த்தா கூட யாருன்னு அடையாளம் தெரியாது
"மருத்துவம் பார்த்தா வருமா..
"அழிஞ்சு போனது அழிஞ்சு போனதுதான் மோளே அவளுக்கு இது புது பிறவிதான் மறுபடி எதுவும் நியாபகம் வர வாய்ப்பே இல்லை ...
"ஓஓஓஓ அப்போ என்ன அடையாளம் தெரியாதா
"ம்ஹூம் உங்கள தாயா ஏத்துக்கிட்டா, கூட இருங்க இல்லை தொல்லை கொடுக்காதீங்க..."
இதைவிட பெரிய தண்டனை யாரால் கொடுக்க முடியும் ...
அவள் கேட்ட மறுஜென்மன் கிடைத்து விட்டது , அவள் கேட்ட காதல் கிடைக்குமா?
கிடைக்கலாம் கிடைக்காமலும் போகலாம், ஆனால் இனி அவள் வாழ்வில் வீர் என்ற ஒருவன் இருந்த தடயமே இருக்காது