மின்னல் 3

Min3

மின்னல் 3

2 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல் !!

மின்னல் பார்வை தன் முன் ஜோடியாக நின்ற வீர் சுவாதியைத்தான் பார்த்தது ...

"ஐ லவ் யூ வீர் "என்று அத்தனை பேர் முன்னிலும் வீரை இடையோடு கட்டி கொண்டு காதல் சொன்ன சுவாதி உருவத்தையும் , தன் உருவத்தையும் ஒப்பிட்டு பார்த்தாள் மின்னல் .

தொடர் துக்கம், அவள் இளமை அழகை கசக்கி போட்டிருக்க , இருந்ததில் நல்ல தாவணி பாவடைதான் போட்டிருந்தாள்.. அதுவே இங்க நின்ற அனைவர் முன்பு மிக குறைவாகத்தான் தெரிந்தது.. பயணம் தந்த களைப்பு என கந்தல் கோலமாக நின்ற மின்னல்.. தங்கத்தில் மிதந்து வைரஆரம் ஜொலிக்க வீர் அருகில் நின்ற சுவாதியை வெகுநேரம் பார்த்தாள் .. வீர் மட்டும் குறைவாகவே இருந்தான், சுவாதிக்கு நிகர் அழகில் கோர்ட் சூட்டில் பக்கா நகரத்தான் போல் செம லுக்காக நின்றான் , அவர்கள் இருவருக்கும் பொருத்தம்தான் .. 

வாசலில் அப்படி ஒருத்தி நிற்பதை வீர் கண்டு கொள்ளவே இல்லை ..சோசியல் ட்ரீங் என்று காரமில்லா பானம் வழங்கப்பட ,வீர் அதை கையில் எடுத்து கொண்டு மாடிப்படியில் சாய்ந்து நின்று சுவாதியோடு பேசி கொண்டே சிப் பண்ண மின்னல் இதழில் எழுதப்படாத சோகக்கவிதை...

"யாரும்மா நீ??" என மைதிலி தன் வீட்டு வாசலில் நின்ற மின்னல் அருகே வர .. அப்போதுதான் சுயம் உணர்ந்து ...

"நான் ,அது மின்னல் மேடம் "என்று ஏதோ ஒரு கவரை எடுத்து கையில் கொடுத்தாள் அதை பிரித்து பார்த்தவர் 

"அடடே !!! மருது சொன்ன பொண்ணா , வாம்மா பிரயாணம் எப்படி இருந்தது , டேய் சுவாதிம்மா இங்க வா" ..என்றதும் சுவாதி ..

"ஒரு நிமிஷம் வீர் ,அம்மா கூப்பிடுறாங்க என்னன்னு பார்த்துட்டு வர்றேன்..

"இரு சுவாதி, நானும் வர்றேன்" அவ சொல்லும் கதையை கேட்ககணும் என்ற நோக்கில் வீரும் அவளோடு வந்தான்..  

"சுவாதி இது மின்னல், மருது இருக்கார்ல அவருக்கு வேண்டிய பொண்ணு.. நம்ம வீட்டுல மேனேஜர் வேலைக்காக வந்திருக்காங்க.."

"மருது ப்ரோ ஊரா , வீர் அப்ப உங்களுக்கும் தெரியும்தானே.. "கேள்வியாக வீரை பார்க்க, அவன் இதழ் கேலியாக வளைந்தது 

"ஊர்ல உள்ள பொண்ணுங்கள எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கணும்னு அவசியம் இல்லையே சுவாதி .."என்று அடுத்த மிடறு பானத்தை ரசித்து குடிக்க .. மின்னலுக்கு அவன் பேச்சில் இருந்த எள்ளல் கண்டு சுருக்கென்று வலித்தது ...

"ஓஓஓ சரி வீர் அதுவும் சரிதான், அந்த குணம்தான உங்கள சுத்தி வர வச்சது "என்று சுவாதி அவன் தோளில் சாய ,முகத்தை சாதாரணமா வைத்து கொண்டவன்... 

"நீ பேசிட்டு இரு சுவாதி எனக்கு ஒரு போன் பண்ண வேண்டியதிருக்கு.."

"வீர் கொஞ்ச நேரம் ,உங்கள விட்டா மறுபடி பிடிக்க முடியாது பேசிட்டு சேர்ந்தே போகலாம்" என அவன் கை சந்தோடு பிடித்து நிறுத்தி கொண்டவள்...

"வேற மின்னல் ஜெர்னி எப்படி போச்சு ??"இயல்பாக பேசும் சுவாதியை முறைக்கவா முடியும் ..உடையவனே மாற்றாள் போல திமிரெடுத்து நிற்க இவளிடம் எதை கூற..

"ஆமா மேடம்..

"ஏய் சும்மா சுவாதி சொல்லுடா, என் பொண்ணு சின்ன வயசுதான் இப்பதான் அப்ராட்ல யூஜி முடிச்சிட்டு வந்திருக்கா."

"ஓஓஓ.

"ஹாஹா உங்க ஊர் ஆட்கள் எல்லாம் ஓஓ மட்டும் தான் பேசுவீங்களா மின்னல் ?வீரும் என்ற கேட்டாலும் ம்ம் ஓஓதான் அதிகமா சொல்வார்" என சுவாதி சிரிக்க..

"ஏதே இந்த கரிச்சட்டி மண்டையன் கொஞ்சமா பேசுவானா?? நினைப்புதேன், வாயை திறக்க சொல்லுங்க, நாய் ஓலைப்பாயில சூச்சி போறது போல விடமா பொளப்பான் வாயை" என்று உதட்டை சுளிக்க அவள் உதட்டு சுளிப்பு அறியா விருமனா ..அவளை கண்கள் இடுங்க பார்த்தவன் 

"சுவாதி மேடமை கூட்டிட்டு சாப்பிட போ ..அவங்க நேரத்துக்கு சாப்பிடணும்ல.."

"யா, ம்மா வாங்க தேங்க்ஸ் வீர் "என்று செல்லமாக அவனை கன்னத்தில் தட்டிவிட்டு போக..அவள் தலை நகரவும் மின்னலை இழுத்து கொண்டு போய் தோட்டத்தில் விட்டவன் .. 

"என்னடி நான் நல்லா இருக்கேனா? இல்ல உன் ஞாபகத்துல அன்னம், தண்ணீ இல்லாம சுருண்டு கிடக்கிறேனான்னு பார்த்து எக்காளம் பண்ணிட்டு போகலாம்னு நினைச்சியா .. இல்ல வெட்டிகிட்ட சொந்தத்தை , அதையும் இதையும் சொல்லி ஒட்டிக்கலாம்னு வந்தியா... நானாடா ஒட்டிக்க வந்தவ? என்று அவள் பார்வை சொல்லாமல் சொல்ல உதட்டை வளைத்து தூரத்தில் நின்று அவனுக்கு கையாட்டிய சுவாதிக்கு சிறிதாக கையசைத்து காட்டிவிட்டு ..

"பார்த்ததானே ஐயாவோட பெர்சனாலிட்டிய, இப்போ வேட்டி சட்டை போட்ட மஞ்ச மாக்கான் விருமன் இல்லடி.. கோட் சூட்டு போட்டு கெத்தா இருக்கிற வீர்.. நான் சொடுக்கு போட்டா ஆயிரம் பேர் என்ன சார்னு ஓடி வருவாங்க பாக்கிறியா?" என்று இரும ..

"சார் வாட்டர் , ஜூஸ் என நால்வர் ஓடி வர..

"எப்புடி??? ,,நீ போடான்னு சொன்னா, எனக்கு ஆளே இல்லைன்னு நினைச்சிட்டியோ.. எனக்குதான் என்னோட தகுதி தெரியாம உன்ன போய் காதலிச்சு இருக்கேன் .. இப்பதான் சரியான ரூட்ல போறேன் எனக்கு சமம் இணையான ஜோடி சுவாதி .. நான் எது சொன்னாலும் திருப்பி பேசமாட்டா.. ஓகே வீர் நீங்க சொன்னா சரின்னு ,என் கன்னத்தை இதே போல ஒரு நாளைக்கு 100 தடவை கிள்ளுவா??"

"பாத்துடா கிள்ளி கிள்ளி கன்னத்துல கிணறு விழுந்திடாம" என்று மனதிற்கு சிரித்துக்கொண்டவள் ..

"என்னதான் கோட் சூட் போட்டு பழைய வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சாலும், உள்ள இருக்கிறது அதே இத்துப்போன பாடாதி விருமன்தான்"என்ற அவள் கையை முறுக்கி பிடித்த வீர் ..

"ஏய் இங்க நான் முதலாளி ..உன் நக்கலை வாசல்ல போட்டுட்டு வா, இல்லை இந்த ஊரை விட்டு போக கூட முடியாத அளவு ஆக்கிபுடுவேன்.. "

"நீங்க முதலாளியாவே இருந்துட்டு போங்க முதலாளி,நான் உங்கள பார்க்கவோ, இல்ல நீங்க சொன்ன மாதிரி உங்க பின்னாடி நாய் மாதிரி சுத்தி , என்னை கல்யாணம் பண்ணிக்கோ, நான் செஞ்சதெல்லாம் தப்புதான் மன்னிச்சிடு, மறந்துடுன்னு தோப்புக்கரணம் போடவோ வரல

"பின்ன எதுக்குடி நான் எங்க இருக்கேன்னு தேடி இங்க வந்த .. "

 "நீ எதுக்காக இங்க வந்தியோ, அதே மாதிரி நானும் வேலைக்காக மட்டும் தான் , நல்லா உன் ஓட்டை காதை தீட்டி கேளு வேலைக்காக மடடும்தான் வந்திருக்கேன்.." திமிர் குறையாது வீரை பார்த்தாள்.. காதல் கொண்டு பார்த்தால் காதலோடு பார்க்கலாம் , நாய் சண்டைக்கு நிற்க, இவளும் நாயாகவே வவ் வவ் என்று ஏட்டிக்கு போட்டி நின்றாள்..  

"உனக்கு ஒரு சுவரொட்டி கிடைச்ச மாதிரி, எனக்கும் ஒரு வத்தலோ தொத்தலோ கிடைக்காம போக மாட்டான்.. அதே மாதிரி காதல் தோல்வின்னு உட்கார்ந்து அழற அளவுக்கு நீ ஒன்னும் அவ்வளவு வொர்த்தும் இல்ல..விலகு வந்துட்டான்.. ஆன்டி ஹீரோன்னு டிஸ்கி போட்டு இறக்கினாலே நாலாவது எபியில தரையில கிடப்பானுவ இவனுக்கு ஓவர் சீன்தான்" என்று முணுமுணுத்து கொண்டு போக... 

"வந்த மாதிரியே உன்ன ஓட விடுறேன்டி..கொழுப்பு பிடிச்ச நாயே" 

"எனக்கு கொழுப்பு இல்ல ,உனக்குதான் நிறைய அடைச்சி இருக்கு, நீ ஓடு குறையும்" என்று அவளும் நக்கல் பார்வை பார்த்து கொண்டே உள்ளே போய்விட்டாள்.. 

தப்பு பண்ணிட்டேன் , தெரியாம பேசிட்டேன் மன்னிச்சுடு என்று தன் பக்கத்து நியாயத்தை சொல்லிவிட்டாள் .. அவன் கேட்பதாக இல்லை வீல்பூட்டாக நிற்கிறான்.. அவனிடம் மறுபடி மறுபடி காலில் தாழ விழுந்து மன்னிப்பு கேட்க அவளுக்கு மனதில்லை.. எவ்வளவு தன்னிடம் நேசமாக இருந்தவன் கணவன் மனைவி போல் இரண்டு பேரும் ஊடல் காதல் என இருந்துவிட்டு இப்போது இந்த பன்னி ஜோடியா நின்னு பல்லை இளிக்கிது.. நான் பண்ணியது தப்புன்னா, நீ பண்ணினது பேர் துரோகம் இல்லயா, தப்புக்கு மன்னிப்பு உண்டு துரோகத்துக்கு உண்டா ? அவன் பக்கம் அவ்வளவு பெரிய ஓட்டையை வைத்து கொண்டே இவ்வளவு பேசும் பொழுது ...அவள் என்ன .. இனாவானாவா ? தாய் இல்லாமல் நோயில் விழுந்த தகப்பனையும் பார்த்துக் கொண்டு தனியாக வளர்ந்து வாழ்ந்து உலகத்தை எதிர்த்து நின்று அவளுக்கு எவ்வளவு இருக்கும்..

" நீ ஒரு அடி பாஞ்சா நான் ஒன்பது அடி பாய்வேன் போடா " என்பது போல் நின்றாள்

இணையிடம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கும் ஒரு எல்லைதான் இருக்கிறது தன்மானத்தை இழந்து , தகுதி இழந்து போய் நின்றால் அங்கே நாம் தூசியாக தட்டிக் கழிக்கப்பட்டு விடுவோம் .. நம் இடம் என்ன என்பதை காட்டித்தான் ஆக வேண்டும் .. அவனை மணக்கோலத்தில் பார்க்கும்பொழுதே வெறுத்து போச்சு .. வந்தா மலை போனா டேஸ் ஒரு வாய்ப்பு உனக்கு தர்றேன் , தப்பு என் பக்கமும் உண்டு என்பதால் மட்டும் வாய்ப்பு.. அதை பிடிச்சா வாழ்க்கை, இல்லையா, போடா அடுத்த வேலையை பார்த்துட்டு போயிட்டே இருப்பேன் ..ஊர் உலகத்துல எவனுக்கும் காதல் தோல்வி வரலையா என்ன ... என்று நிமிர்வு வந்தது .. 

அடுத்தது என்ன செய்ய வேண்டும்? என்பதை அவள் துரித மனம் உடனே யோசித்து விட்டது .. மருந்துவுக்கு லட்சம் தடவை நன்றிகளை கூறியிருப்பாள், சரியான நேரத்தில் சரியாக அனுப்பி இருக்கிறார் அவளால் முடியும் என்று நம்பி அனுப்பி இருக்கிறான், அவனுக்காகவாவது ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றுதான் உள்ளே கால் வைத்தாள்.. 

மைதிலி வீட்டில் கிட்டத்தட்ட 10 பேருக்கு மேல் வேலை செய்கிறார்கள்.. இவர்கள் 10 பேரும் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுக் கொடுக்க ஒரு மேலாளர் தேவை.. அந்த வேலைக்கு தான் மின்னல் தேர்வு செய்யப்பட்டிருந்தாள்..வீட்டில் வேலை செய்பவர்களுக்கு தனியாக பக்கத்து தெருவில் குவாட்டர்ஸ் உண்டு ஊரே காம்பவுண்டிற்குள் இருபது வீடுகள் இருக்கும் அதில் ஒவ்வொரு வீட்டிலும் குடும்பமாக தங்கிக் கொள்வார்கள்.. மாலை வரை சாப்பாடு விருந்து என்று கோலாகலமாக வீர் ,சுவாதி நிச்சயதார்த்த விழா நடைபெற்றது ... வீர் விலகிப் போனாலும் சுவாதி அவனை கொஞ்சிக் கொண்டே பின்னால் திரிந்தாள்.. மின்னல் அவன் இருக்கும் பக்கமே கண்ணை திருப்பவில்லை வயிறு காந்தும் அது வேற செக்சன்ல.. அவளும் மனுஷிதானே ...

நேற்று வரை தனக்கு என்றவன் என்று இன்னொருத்தியோடு கைகோர்த்து அலையும் பொழுது புகையுமா இல்லையா.. அப்படியே ஒரு கட்டையை எடுத்து விருமன் மண்டையில் நங்கு நங்கு என்று அடிக்கும் அளவிற்கு கோபம் வரச் செய்தான் அவன்..

மின்னல் தன் வேலை எதுவோ அதை மட்டும் செய்துவிட்டு மாலை வெளியே செல்வதற்கு போகும்பொழுது , உள்ளே பேச்சு வார்த்தை அவளுக்கும் கேட்டது..

"வீர் நீதான் இந்த வீட்டுக்கு மருமகன் ஆகிப்போனீயே இன்னும் அந்த குவாட்டர்ஸ்லதான் தங்கனுமா??" என்று சுவாதி அவனைப் போக விடாமல் அழைக்க..

"அதெல்லாம் சரி வராது ,நான் அங்கே இருந்துக்கிறேன்.."

" ஏன் வீர் சுவாதி சொல்றது சரிதானே, கடல் போல வீடு இருக்கு, உனக்கு ஒரு ரூம் இருக்காதா? .. நீதான் சுவாதி மாப்பிள்ளைன்னு ஆகிப்போச்சு .. இன்னும் நீ யாரோ போல இருந்தா நல்லாவா இருக்கு."

"இல்ல மேடம் ஏற்கனவே என் அண்ணன் சொன்னதையும் கேட்காம மீறிதான் உங்க பொண்ண கல்யாணம் கட்டுறதுக்கு சம்மதிச்சிருக்கேன் .. எங்க ஊர்ல எல்லாம் கல்யாணம் அன்னைக்குதான் பெண்ணையே பாப்பாங்க ,இது எல்லாம் எனக்கு சரியாபடாது மேடம்.. நான் எப்பவும் போல தள்ளியே இருக்கேன் எது நடக்கணும்னு இருக்கோ அது நடக்கட்டும்.. இது நீங்க நிச்சயதார்த்தத்துக்கு கொடுத்துவிட்ட கோட்" என்று தான் அணிந்திருந்த உடைகளை மேஜையின் மீது வைத்தவன் ..

"நாளைலயிருந்து காலையில சரியா டிரைவரா வந்துடுறேன்" .. சுவாதி சலிப்பாக தலையில் அடித்துக் கொண்டு..

" நிச்சயதார்த்தம் ஆயிடுச்சு இன்னும் எதுக்கு நீங்க டிரைவர் வேலை பார்க்கணும் .."

"கல்யாணம் ஆகலல்ல சுவாதி ..அதோட எனக்கு உழைச்சு சாப்பிட்டுதான் பழக்கம் ..நீங்க வேலை தந்தா வேலை பார்க்கிறேன்.. இல்ல முடியாதுன்னா நான் வேற எங்கேயாவது வேலை தேடுறேன் என்று முடித்து விட.."

" சரி நாங்க எதுவுமே சொல்லல, உங்க இஷ்டம் என்னவோ அதை பண்ணுங்க.. ஆனா டெய்லி என்னை எங்கையாவது கூட்டிட்டு போகணும் சரியா??"

"ம்ம்" என தலையை ஆட்டிவிட்டு நடக்க ஆரம்பித்தான்..

இழந்ததை நினைத்து வருந்தினால் இருப்பதை இழந்து போவோம் என்ற சிம்பிள் லாஜிக் தெரியாது வீர் தெரிந்தே ஒரு சிக்கலுக்குள் காலை வைத்தான்...