மின்னல் 3
Min3

3 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல்
வீர் களைத்து போய் காம்பவுண்ட் உள்ளே வர ,மின்னலின் சிரிப்பு சத்தம்தான் அவனை வரவேற்றது. அப்படியே வயிற்றில் ஆசிட்டை உற்றியது போல் கபகப என்று எரிந்தது ...
இவள் முகத்தை பார்க்க கூடாது என்றுதான் இங்கே வந்தது.. இங்கேயும் பின்னால் தொடர்ந்து வேதாளம் போல வந்திருக்கும் அவளை கழுத்தை நெறுத்துக் கொன்றால் என்ன என்றுதான் அவனுக்கு வந்தது..
"பேசுறது எல்லாம் பேசிட்டு ஒரே வார்த்தையில் மன்னிப்பு கேட்டா பேசினது இல்லைன்னு ஆயிடுமா .. இவளத்தான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டுதானே இங்க வந்தேன் பின்னாடியே வந்து தொல்லை பண்றா ... பின்னாடி வந்தது தொல்லையா, இல்லை எதுவுமே நடக்காதது போல கேஷுவலாக அவள் கடந்து போவது தொல்லையா? என்று அவனுக்கு தெரியவில்லை.. ஆனால் மின்னலின் சிரிப்பு சத்தம் மட்டும் எரிச்சலை கொடுத்தது ..
"என்ன இங்க சத்தம் மணி 12க்கு மேல் ஆகுது" என்று வீரின் அதட்டும் சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.. யாரையும் கண்டு கொள்ளாமல் வேலையை பார்க்கும் ரகம்தான்.. ஆனாலும் சில சமயம் இப்படி வள்லென்று விழுந்து வைத்து விடுவான் .. முதலாளிக்கு நெருக்கமானவன் என்பதனால் யாரும் அவனை எதுவும் சொல்லவும் முடியாது இப்போது வேறு அவன் மைதிலியின் மருமகனாகி விட்டான் பேசவா முடியும்.. எல்லோரும் கலைந்து போக, மின்னல் தாவணியை கையில் வைத்து சுற்றிக் கொண்டே, அவன் அறைக்கு அடுத்ததாக இருந்த , அவள் வீட்டிகுள் போக நுழைய ..கையை நீட்டி தடுத்தவன்..
"எங்க போற ?ஒழுங்கா ராத்திரி பஸ்ஸை பிடிச்சு ஊருக்கு போய் சேரு"
"ஹான் நான் ஏன் போகணும்?? போக முடியாது, இங்க தான் இருப்பேன், நான் எங்க போகணும், போக கூடாதுன்னு சொல்றதுக்கு நீ யாரு?யாரு?யாரு? என அவன் கையை தட்டி விட்டவள்...
"ஏதோ சொந்த புருஷன் மாதிரி என்ன அதட்டி உருட்டி வைக்கலாம்னு நினைக்காத, அதெல்லாம் பழைய கதை இப்போ நீ சுவாதியோட என்ன சொல்லுவாங்க லவ்வரா, இல்ல இல்ல பியான்சே நாங்களும் கொஞ்சம் கொஞ்சம் இங்கிலீஷ் கத்துக்கிட்டோம் ராசா.. இல்லன்னா இந்த மாதிரி பெருச்சாளிகளை எல்லாம் கண்டுபிடிக்க முடியாது..
"யாரடி பெருச்சாளின்னு சொன்ன "என மின்னல் கழுத்தை நெரிப்பது போல் போக..
"உரிமை இல்லாத இடத்தில் கை வைக்கிறவன் ஆம்பளையே இல்லை, அதான் உனக்கும் எனக்கும் உரிமை இல்ல , ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டல்ல.. இங்க வேலை பார்க்கிற என் மேல கை வைக்க உனக்கு என்ன உரிமை இருக்கு "வீர் கையை தட்டி விட்டவள்.. போன் மணியடிக்க அதை எடுத்து காதில் வைத்தவள்..
"அலோ அக்கா வந்துட்டேன் இடம் ரொம்ப நல்லா இருக்கு , நல்ல சம்பளம் தங்குற இடம் , ஓசி சோறு வேறென்ன வேணும் மருது அண்ணன் வந்தா சொல்லிடுங்க... என்று போனில் பேசி கொண்டே கதவை அடைக்க வீர் வாசலில் கடுகடுத்து கொண்டு நின்றான்.. எப்போது வீருக்கு சுவாதியோடு நிச்சயதார்த்தம் என்று குழலி கேள்விபட்டாளோ ..
"நீங்க போறது சரியில்ல தம்பி , உங்க அண்ணன் நீங்க போன் போட்டா பேச கூடாதுன்னு சொல்லிபுட்டாக , அவுக சொல்ல மீறி பேச முடியாது என்னவோ நீங்க நல்லா இருந்தா சரிதேன் மாமா.. நீங்க சொன்னது போல சொல்லிட்டேன் வச்சிடவா...
மடியில் கிடந்த மருது தலையை கோதி விட..
"ம்ம் இனிமே சுரணை இருக்கிறவன் போன் போட மாட்டான் , என் சொல்லுக்கு மதிப்பு கொடுக்காதவனுக்கு இங்க என்ன பேச்சு" என்று மருது பேசுவது கேட்டு வீருக்கு முகம் தொங்கி போனது ... அவன் கேட்கிறான் தெரிந்தேதான் மருது நச்சென்று போட்டது ...
"என்கிட்ட பேச மாட்டாவ , ஆனா எல்லாத்துக்குமே காரணம் இவதான் ,இவகிட்ட மட்டும் பேசுறாக அவங்க கொடுக்கிற இடம்தேன் இவ தேடி வந்து ரவுசு பண்ண காரணம்.. உனக்கு இவ்வளவு இருந்தா எனக்கு எவ்வளவு இருக்கும்னு கூட இருந்து பாருடி , அண்ணன் மதனியையும் பிரிச்சிட்டா "என்று கூடுதல் பழியையும் சும்மா போன சுமோ மீது போட்டான்...மூடிய கதவை உதைத்தவன் ...
"சிலுப்பிகிட்டு அலையிற ,கொண்டையை அறுத்து விடுறேன் பாருடி , தெனாவெட்டா பேசுறியா எத்தனை நாளைக்குன்னு பார்கிறேன் "என வாய்விட்டே கத்த..
"எல்லாம் இங்க நீ பார்த்ததுதேன், நான்தான் அரைகுறையா பார்த்திருக்கேன்" என்று உள்ளிருந்து குரல் வர..
"இவ எதை சொல்றா ??"என வாய்விட்டே முனங்கி தலையை உலுக்கி கொண்டான்,, சொன்ன இடம் கலிஜி இடம்ல..
"நைட்ல கண்ணு தெரிஞ்சிருக்குமா என்ன, ஒரு நாள்தானே பாத்தா, "என்று மூளை ஆலமர நிழல் தேடி போக தோளை உலுக்கி ,போகும் கச்சாமூச்சா எண்ணத்தை பிடித்து நிறுத்த அதற்குள் சுவாதி போன்..
"சொல்லு சுவாதி என்று ஆன் பண்ணி வைக்க சிரித்து கொண்டு கதவில் சாய்ந்து நின்ற மின்னல் முகம் தண்ணிரை விட்டு எடுத்த தாமரை தண்டு போல வாடி போனது...
"என்ன இருந்தாலும் இது எல்லாம் அநியாயம்டா .. லவ் பெயிலியர் துக்க நாள் கூட நாற்பது நாள் கொண்டாாடி முடிச்சிருக்க மாட்டான் , அதுக்குள்ள அடுத்த சேனலுக்கு லைன் போடுறான் ... நான் வரலைன்னா எனக்கு தெரியாம கல்யாணம் முடிஞ்சு பிள்ளையோட வந்து நின்னிருப்பான்.. பிளடி பிக்கிள் என்று உதட்டை பிதுக்கி, கதவு ஓட்டை வழியே வீர் நிற்கும் இடத்தை நோட்டம் விட, கதவு அருகே நிழல் ஆடுவது கண்டு கொண்ட வீர்..
"என்னடி இப்பதான தந்துட்டு வந்தேன் அதுக்குள்ள என்ன ?"காதல் குரலில் குலைந்தான்.. அங்க வயர் பிஞ்சு அரை மணிநேரம் ஆவுது , சுவாதி போன் போட்டதும் ..
"தூக்கம் வருது சுவாதி ஆஆஆஆ "என கொட்டாவி விட்டு கத்தரித்தான், ஜகஜால கில்லாடி பய...
"என்ன வீர் எப்போ பார்த்தாலும் எதாவது காரணம் சொல்றீங்க. பேசவே மாட்டைக்கிறீங்க.."
"பேச என்ன இருக்கு ,ரொம்ப டயர்டா இருக்கு நாளைக்கு பார்க்கலாம்" வைத்தே விட்டான்...
"இச் இச் இச் போதுமா, நீ கொடு ,வீர்னு போதையா கூப்பிடுவியே அதே போல கூப்பிடு" ..
"நாயி என்கிட்ட முதலிரவு பாதியை கொண்டாடிட்டு ,மீதியை அங்க கொண்டாட பார்க்குது.. கத்தியை தீட்டி வைக்கிறேன், ஏதாவது நடக்கட்டும் அப்ப இந்த மின்னல் கொடி யாருன்னு தெரியும்" .. என்று மறுபடியும் காதை கதவில் வைத்து ஒட்டு கேட்க ஆரம்பித்து விட்டாள்..
"உதட்டுல கடிச்சிட்டடி ,இனிமே மெதுவா கொடு ....வெளியே போனா ஒரு மாதிரி இருக்கு"..
"எது நானும் கடிச்சேனா, நான் உள்ளதான கடிச்சேன் நீ பப்ளிக் பார்க்கிற ஏரியாவுல சேதம் பண்ணி வைக்கிற ..
"சேம் டையலாக் தூஊஊஊஊ, எங்கிட்ட உருட்டின அதே உருட்டு உருட்டலுக்கு பிறந்தபய" அவன் அப்படி கிடையாது என்று இருநூறு சதவிகிதம் மனம் அவனுக்கு சான்றிதழ் கொடுத்தது.. எத்தனை இரவுகள் இருந்திருக்கிறாள், ஆசையில் தள்ளுமுள்ளு பண்ணுவானே தவிர எல்லை கோடு தாண்ட மாட்டான் ... ஆசை வந்தாலும் எழும்பி போய்விடுவான்..சும்மா வெறுப்பேத்தி பார்க்குது பக்கி என நன்றாக தெரிந்தது
"எவ்வளவு துரம்தான் உருட்டிறான்னு பார்ப்போமே என்று தான் நினைத்தாள் இல்லை அவன் பேசுற பேச்சுக்கு போடா நான் ஊருக்கு போறேன் என்று கிளம்பி இருப்பாள் ...
எப்படியோ ஒரு வழியாக வீர் போனை வைத்தவன்..
"பெரிய அறிவாளி நாயின்னு நினைப்பு தாவணி கதவுல கொழுக்கி இருக்கிறது கூட தெரியாம ஓட்டு கேட்குது "என்று தன் அறை கதவை திறக்க போக..
"ம்க்கும் உனக்கு மேதாவின்னு நினைப்பு சுவிட்ச் ஆப் ஆன போன்ல கடலை வறுத்துக்கிட்டு" என்றதும்..
"இவளுக்கு எப்படி தெரியும்" என்று தாடியை தடவி கொண்டு உள்ளே போனான் .. சுவாதி போன் போட்டுருவான்னு பயந்து போன் ஆப் பண்ணி வைத்து விட்டானே... இவ்வளவு தில்லு முல்லு பண்ணும் வீர் ,போன் நம்பர் மாத்தல, இவன் கடலையை தொடங்கும் போதே வீர் நம்பருக்கு மின்னல் அடித்து பார்க்க ..அது ஸ்விட்ச் ஆப் என வர .. சிரிக்கத்தான் தோன்றியது...
"எங்கிட்ட சண்டை போடுறேன்னு , நீ எங்கேயோ போய் சிக்க போறடி , கோவணம் மிஞ்சாது சொன்னா கேட்கவா போற ., நல்லா பட்டு வா தம்பி" என்று நிம்மதி இல்லை என்றாலும் அவன் அருகே கிடைக்கும் ஒரு மன அமைதியில் மின்னல் கணணை மூடினாள்..
அருகே முன்னால் காதலி , இன்னொரு பக்கம் வருங்கால மனைவி ஒன்னு இருந்தாலே ஓஹோன்னு போகும் ... இவனுக்கு இரண்டு தூக்கம் எப்படி வரும் உருண்டு கொண்டிருந்தான்...
மன் அமைதி இல்லாத நேரம் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் தவறாக மட்டுமே இருக்கும் ... ஆற போட தெரியாது ஒன்றன் பின் ஒன்றாக முடிவுகளை தப்பாக எடுத்தான் ... அவனுக்கு முன் நின்று வியூகம் அமைத்து கொடுக்க மருது இல்லை .. அதுதான் மிகப்பெரிய இழப்பு வீருக்கு ..
"ஒரு பெண்ணுக்கு பாவத்தை பண்ணிட்டு இன்னொரு பொண்ண கை பிடிக்க போறேன்னு சொல்ற... இப்படி பட்ட தம்பி எனக்கு தேவை இல்லடா... அவ பண்ணினது தப்புன்னா நீ பண்றது என்னதுடா? எந்த சூழ்நிலை வந்தாலும் , அவள நீ விட்டு கொடுத்திருக்க கூடாது.. உனக்கு எது சரின்னு படுதோ அதையே செய், நீங்கதான் பெரியாள் ஆகிட்டீங்களே, உன் நிச்சயதார்த்தம் கல்யாணம் எதுக்கும் இங்கிருந்து ஒரு ஆள் வராது ..இந்த ஊரை மறந்திடு, மீறி உள்ள வந்தா உன்ற காலை நானே வெட்டுவேன் "என்று வைத்துவிட்டான் மருது..வீர் உதட்டை பிதுக்கி போனை பார்த்து கொண்டிருந்தான்...
"அவளை யாரும் எதுவும் சொல்ல மாட்டைக்கிறாங்க என்ன மட்டும் திட்டுறார்" எனக்கான முதலுரிமை அவளுக்கு போயிடுச்சோ என்று காண்பதெல்லாம் பூதமாக தெரிந்தது ...
காலையில் காரை துடைத்துகொண்டு விருமன் மைதிலி வீட்டு வாசலில் நிற்க..
"க்கா சுவாதிக்கு இட்லி, மைதிலி மேடமுக்கு சப்பாத்தி அப்பறம் வீர் அண்ணாவுக்கு இடியாப்பம் பண்ணிட சொல்லி மேடம் சொன்னாங்க" என மின்னல் வேண்டுமென கத்தி குக்கிடம் கூற..
"ஏதே வீர் அண்ணாவா??" என்று வீருக்கு முகம் அஷ்டகோணலாக போனது ..ஆனால் வேண்டுமென்றே செய்கிறாள் தெரியும்ல
"அண்ணா இடியாப்பம் ஓகே தானுங்க" என்று மின்னல் கேட்கவும்
"ஆமா தங்கச்சி, இரண்டு இடியாப்பம்" என்றான் அவளை போலவே தங்கச்சியை அழுத்தி கூற..
"வாவ் இந்த அண்ணன் தங்கச்சி பாசம் அழகா இருக்கே வீர் ... என குதித்து வந்து அவன் தோளில் குரங்காக சுவாதி தொங்க..
"பின்ன கட்டிக்கிற பொண்ணு தவிர அத்தனையும் தங்கச்சி தான.."
"ஸ்கோர் பண்றீங்க வீர் ..
"இருக்கட்டும் எங்க போகணும்..
"பிளாசால ஷாப்பிங் போகணும்..அப்படியே லஞ்ச் உங்ககூட.. "குரலில் அத்தனை தாபம்... வீருக்கு அது புரிந்ததா தெரியவில்லை ஆனால் மின்னலுக்கு புரிந்தது .. காதலினிடம் மட்டுமே துடிக்கும் சில உணர்வுகள் உண்டே, அது அவளுக்கும் இருந்திருக்கிறதே.. மின்னலிடம் அவ்வளவு காதல் மன்னனாக இருந்தவன் சுவாதியிடம் ஒட்ட முடியாது தடுமாறியது அவன் இடையை பிடிக்கும் சுவாதி கரத்தை நொடிக்கு நூறு முறை தள்ளி விடுவதை பார்த்தே மின்னலுக்கு அறிய முடிந்தது..
"ஓன் சைட் லவ் போல கல்யாணம் கட்டியே ஆகணும்னு கட்டாயம் பண்ணி இருப்பாளோ" என்று யோசிக்க வைத்தது அவன் விலகல் கொண்ட நடத்தை
உண்மையும் அதுதான்,பத்து நாளைக்கு முன் வேலை முடித்து போக நின்ற வீர் தீடிரென சுவாதி அறையில் கேட்ட அலறல் சத்தத்தில் உள்ளே போய் பார்க்க.. அவள் கைகள் வெட்டப்பட்டு கிடக்க... பதறி போனான்... யாரும் சாகட்டும் என போகும் கொடூர எண்ணம் இன்னும் வரவில்லையே.. அவன் மருது தம்பி ஆயிற்றே.. சுவாதியை எப்படியோ காப்பாற்றி விட்டான் ..அவளை காக்க தற்சமயம் திருமணத்துக்கு சம்மதம் சொல்லி வைக்க வேண்டிய சூழ்நிலையில் மாட்டி கொண்டான்...
நல்லது செய்தால் நல்லதே வரும் என்பது அந்த காலமோ. நல்லது செய்ய நினைப்பவன் டங்குவார்தான் முதலில் கிழிபடும் என்பதே இந்த காலம் ...
நார்நாரா கிழிபடுவான் ...
மின்னலை வெறுக்கிறான்.. ஆனால் அவளை விடுத்து இன்னொரு பெண்ணுக்கு இணையாக அவனால் முடியவில்லை ... அதேசமயம் தன்னை நம்பி என் பொண்ண காப்பாத்துப்பா என்று காலில் விழுந்த மைதிலி கோரிக்கையையும் தட்டிகழிக்க முடியாத நிலையில் நின்றான்..
ஒன்னும் நல்லவனா இருந்திடணும், இல்லை மகா கெட்டவனாக இருந்திடணும், நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் இடையே கிடந்து அல்லாடினால் அடி பலமாக விழத்தான் செய்யும் ...