மின்னல் 4

Min4

மின்னல் 4

4 சொல்லாலே தொட்டுச் செல்லும் மின்னல் 

உணர முடியாத சந்தோஷத்தை கொடுப்பதும் யூகிக்கவே முடியாத துக்கத்தை கொடுப்பதும் நாம் உயிரென நினைத்து பழகிய உறவுகள்தான்..

தன் முன்னாடியே இன்னொரு பெண்ணோடு கைகோர்த்து காரில் ஏறும் வீரை எந்தவித சலனமும் இல்லாமல்தான் மின்னலால் பார்க்க முடிந்தது , அவர்கள் கார் கேட்டை தாண்டி போகும் வரை அதே இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தவள்,  மைதிலியின் சத்தம் கேட்டு அவருக்கு தேவையானதை செய்வதற்கு மாடி ஏறி போய்விட்டாள்..

காரில் சுவாதி அவன் கையை பிடிப்பதற்கு போக நாசுக்காக தடுத்து விளக்கினான்

"என்ன வீர் , வீட்ல இருக்கும்போதுதான் பிடிச்சா சங்கோஜமா இருக்குன்னு சொன்னீங்க .. இப்போ நீங்களும் நானும்மட்டும் தானே தனியா இருக்கோம்  இப்ப கூட பிடிக்கக்கூடாதா? பட்டிக்காடா இருக்கலாம் அதுக்காக இவ்வளவு ஓவர் பட்டிக்காடா இருக்க கூடாது.."உதட்டை சுளித்தாள் .. எல்லாரப் போல விழுந்து விழுந்து லவ் பண்ண ஆசை வெளிநாட்டில் பட்டம் படித்தவள், கலாச்சாரம் நாகரீகம் அழகு என அனைத்திலும் சிறந்து விளங்குபவள்தான் எப்படி தன் வீட்டில் வேலை செய்யும் வீரை பிடித்தது என்று கேட்டால் பதில் இல்லை .. ஆனால் அவனுக்காக சாகும் அளவிற்கு போகத் துணிந்து விட்டாள்.. 

 யார் சொல்வதையும் காதில் கேட்காத அளவிற்கு எனக்கு வீர்தான் வேண்டும் , அவன் இல்லை என்றால் செத்து விடுவேன் என்று சொன்னதையே சொல்லிக் கொண்டு , தான் நினைத்ததை இதோ நிச்சயதார்த்தம் மூலமாக சாதித்து விட்டாள்..

 வீர் கூட பலவிதத்தில் சொல்லி தோற்றுத்தான் போனான் சொல்லி புரிய வைக்கலாம் என்று அவன் முயற்சி செய்யும் போதெல்லாம் அதை காதிலேயே வாங்காமல் ,எனக்கு நீங்க வேணும் என ஒரே வார்த்தைகள் முடிக்க..  நேரே மைதீலியிடம் போய் நின்றான்..  அவர் இவன் காலை பிடித்துக் கொண்டு என் மகளை எப்படியாவது காப்பாற்று , நீ கல்யாணம் கட்டிக் கொள்ளவில்லை என்றால் மறுபடியும் என் மகள் ஏதாவது தவறான முடிவு எடுத்து விடுவாள் என்று அழ,  அந்த தாயின் கண்ணீர் தன் பாதத்தை நனைக்க வேறு வழியில்லாமல் நிச்சயதார்த்தத்திற்கு சரி என்றவன், அந்த இடைப்பட்ட காலத்தில் இவள் மனதை எப்படியாவது எதையாவது சொல்லி மாற்றி விட வேண்டும் என்றுதான் அவன் முனைந்து கொண்டிருக்கிறான்..  

"பட்டிக்காட்டுக்கும் ஒழுக்கத்திற்கும் எந்த  சம்பந்தமும் கிடையாது சுவாதி .. முதல்ல அதை புரிஞ்சுக்கோ, பொண்ணுங்க இப்படித்தான் இருக்கணும்னு சில கட்டுப்பாடுகள் இருக்கு, அதேபோல ஆம்பள எங்க இருந்தாலும் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு ஒழுக்க முறை இருக்கு .. நான் மருது வளர்ப்பு இப்படித்தான் இருப்பேன், ஏற்கனவே உன்கிட்ட சொல்லிட்டேன் நீதான் கேட்க மாட்டேங்கிற .. "

"என்ன சொன்னீங்க ,என்ன புடிக்கல, உன்னை கல்யாணம் கட்டிக்க எனக்கு மனசு இல்ல இதைதான இரண்டு மாசமா சொல்லிக்கிட்டு இருக்கீங்க..  அப்படி என்கிட்ட என்ன குறை இருக்கு"

"காதலுக்கு நிறை மட்டும்தான் அவசியம்னு இல்லை, குறை கூட காதலில் அழகுதான் "என்று ரோட்டை பார்த்து கூறிவிட்டு காரை ஓட்ட ஆரம்பித்து விட்டான்..

"புரியல வீர், நீங்க ஏன் என்னை வேண்டாம்னு ஒதுக்குறீங்க.."

"ஒதுக்கல சுவாதி ,ஒதுங்கிறேன் ..நீ நல்ல பொண்ணு,  உனக்கு வந்திருக்கிறது என் மேல ஒரு இனக்கவர்ச்சிம்மா, நல்லா யோசிச்சு பாரு பாரின்ல படிச்ச நீ எங்க , நாலாப்பு கூட தேறாத நான் எங்க? காதலுக்கு வேணும்னா கண்ணு தெரியாம இருக்கலாம் , ஆனா கல்யாணம்னு வந்துட்டா ஏழு கண்ணு வரும் .. ஸ்டேட்டஸ் ,படிப்பு , அழகுன்னு எல்லா இடமும் முட்டும் .. "

"எனக்கு எப்படி இருந்தாலும் பரவாயில்லை நீங்கதான் வேணும் ..   உங்களை நான் எந்த அளவுக்கு காதலிக்கிறேன்னு  உங்களுக்கு தெரியலையா .. உங்களுக்காக உயிரை கூட விட துணிஞ்சிருக்கேன்..  என் அன்பு உங்களுக்கு புரிய மாட்டேங்குது.."

" உயிரை விடுறதுதான் காதல்னு நீ நெனச்சுக்கிட்டு இருக்க..  ஆனா உயிரை எடுக்கிறதுதான் சுவாதி காதல் .. சாகவும் தோணாது, வாழவும் தோணாது அந்த காதல் தோல்வி கூட மழை நின்ன பிறகு வர்ற மண் வாசனை மாதிரி அழகு..."என்று காதல் தோல்வியை கூட கொண்டாடினான் .. சுவரில்  சாய்ந்து நின்று தாங்கள் கிளம்புவதை பார்த்துக் கொண்டிருந்த மின்னல் ஞாபகம் வந்தது..  தகப்பன் இறப்பில் பாதியாக மாறியிருந்தாள்.. எப்படி அவளை அண்ணன் தனியாக அனுப்பினார் என்ற கேள்விக்கு என் தம்பி நீ இருக்கிறாய் பார்த்துக் கொள்வாய் என்று நம்பிக்கையில் அனுப்பி இருக்கிறேன் ,அவள் கவனம் என்ற மறைபொருளும் உள்ளே இருந்தது..

திரும்பி சுவாதியை பார்க்க அவள் இவன் முகத்தையே ரசனையாக பார்க்க... இந்த விளையாட்டு வினையாகி விடும் சிறு பெண் வாழ வேண்டியவள் தனக்கொரு காதல், காதலி இருந்தாள் என இறந்தகால உண்மையை கூறி திருமணத்தை நிறுத்தி விடுவோம் என்று துணிந்து...

"ஒரு வேளை நான் வேற ஒரு பொண்ண லவ் பண்ணி அவள கல்யாணம் கட்டி.."

"ஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ"  அலறி கொண்டு வண்டியை நிறுத்தினான் .. அவன் வேறு பெண்ணை லவ் பண்ணினான் என கேட்கும் முன் சுவாதி ஓடும் கார் கதவை திறந்து கொண்டு வெளியே குதித்து விட்டாள்... நல்லவேளை மெதுவாக கார் ஓட்டினான் இல்லே தலை சிதறி இருக்கும் ..  தரையில் கைகால் சீராய்த்து கிடந்த சுவாதியை வீர் எழுப்பி விட..

"இன்னொரு தடவை இப்படி விளையாடாதீங்க வீர், எனக்கு நீங்க வேணும்  கிடைக்கலைன்னா நான் செத்துடுவேன் இது உறுதி.."

"சுவாதி.."உடல் நடுங்க நின்றான் .. உள்ளம் பதறி போனது சிறு பெண் செய்யும் காரியமா இவை , நாய் பிடிச்சிருக்கு வாங்கி கொடு என்பது போல அவள் என்னை கேட்க,  அதையும் ஆமோதிக்கும் பெற்றோர் .. எப்படி இதிலிருந்து விடுபட புரியாது விழி பிதுங்கி நின்றான் ..

சுவாதிஇஇஇ..

"நான் விளையாடல வீர் நீங்களும் விளையாடாதீங்க..   ஏன் உங்க முகம் அப்டி இருக்கு அதான் எனக்கு ஒன்னும் ஆகலைல்ல ,சிரிங்க" என்று அவன் கன்னத்தை பிடித்து இழுக்க , வீர் எச்சில் விழுங்கினான்... 

எந்த நேரத்தில் எங்கே சாடுவாள் என்று தெரியவில்லை கொலைப்பலி ஆக போறது உறுதி என்று மட்டும் புரிந்தது .. இவளை நம்பி முன்னால் காதல்,  காதலியை காட்டி கொடுத்தால் மின்னல் தலையில் ஊஞ்சல் கட்டி ஆடி விடுவாள் என்பது மட்டும் தெள்ள தெளிவாக தெரிந்தது ..

"வீர்.."

"ஹாங் சொல்லு சுவாதி..

"போவோமா?? இனிமே இப்படி சின்ன புள்ள போல என்கிட்ட விளையாட கூடாது சரியா, வாங்க" என்று காரில் ஏற...

"யாரு நானா விளையாடுறேன்,  இவதான் செத்து செத்து விளையாடுறா  எப்படி இவளுக்கு உண்டானது காதல் இல்லை என்பதை புரிய வைக்க என்று புல்பாயில் போட்ட மூளையை உருட்டி ஆராய்ச்சி நடத்தினான் 

அது வேலை செஞ்சிருந்தாதான் மின்னல் செஞ்சது தப்பு இல்லை சூழ்நிலை காரணம் என் புரிந்திருக்குமே ... இங்க வந்து பொறியில் மாட்டி இருப்பானா?  

தான் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டிட்டு போறது போல ..

"வீர் அங்க வாங்க, இங்க வாங்க இதை போடுங்க என்று கழுத்தில் பெல்ட் மட்டும்தான் வீருக்கு மாட்டவில்லை..  பாவமாக அவள் பின்னால் போனான்..  இல்லை இங்கிருந்து குதிக்கவா?.. பஸ் முன்னாடி விழவா? என மிரட்டி மிரட்டி காரியம் சாதிக்க..ஒருகட்டத்தில் எரிச்சல்தான் வந்தது ... 

மாலை கால் வலிக்க சுவாதி வாங்கி கொடுத்த அத்தனை பொருளையும் அள்ளி கொண்டு .. உள்ளே வர சுவாதி எதிரில் வந்த மின்னலை கிள்ளி விட்டு 

"இன்னைக்கு உங்க அண்ணன் கூட செம ஜாலியா சுத்தினேன்..."

"ஓஓஓ அப்படியா,  நாளைக்கு பீச்சுக்கு போ ஸ்வேதா அங்கதான் லவ்வர் எல்லாம் போவாங்கன்னு கேள்வி பட்டிருக்கேன்.."

"ஆமா நான் கூட மறந்தே போயிட்டேன் , வீர் வா இப்பவே பீச் போகலாம்..அவனே கால் கழண்டு போற வலியில், முட்டிக்கு முட்டை பத்து போடும் நிலையில் நிற்க..  இந்த பேய் ,அந்த பேயிக்கு ஐடியா கொடுக்க..  சுவாதி ஒரு நாள்  முழுக்க படுத்திய பாட்டில் மின்னலை துவைத்து தொங்க போடும் ஆத்திரம் வந்தது ..  

" நாளைக்கு போகலாம் சுவாதி எனக்கு தலை வலிக்குது..."

"அச்சச்சோ வீர்!!!!' என்று அடுத்த அரை மணிநேரத்தில்... 

"எனக்கு தலை வலியே இல்லப்பா தள்ளி போ "என்று கத்த தோன்றியது ..

"ம்ம்மா வந்து ஊசி போடுங்க, கசாயம் வச்சு கொடு மின்னல்,   சூடுதண்ணீ என்று சுவாதி ஒரே கவனிப்பு மழை ... 

"மின்னல் கசாயம் ரெடியா? வீர் சாஞ்சிக்கோங்க அமுக்கி விடுறேன்,  சோபாவில் அமர்ந்திருந்த, சாரி சோபாவில் அமுக்கி உட்கார வைக்கப்பட்டிருந்த வீர் தலையை அமுக்கி விட, சுவாதி அவனை நெஞ்சில் சாய்க்க போக..

"ப்ளீஸ் சுவாதி வீட்டுக்கு போய் தூங்கினா சரியா போகும் விடு "என்றவன் அவள் பஞ்சாயத்தை தொடங்கும் முன் வாங்கி கொடுத்த பொருளை போட்டு விட்டு ஓட ஆரம்பித்து விட்டான்.. நின்னா கொழுக்கட்டை ஆகி போவானே..

"ஹாஹா என்னையா திட்டின நல்லா அனுபவிடா.." என்று ஓடும் வீரை பார்த்து மின்னல் சிரித்தாள்.. பாவமாகத்தான் இருந்தது..  அவன் போனதும் மைதிலி மாடிக்கு அழைத்து சில விஷயத்தை கூற விருமன் மீது போன பிடித்தம் மறுபடி வந்து ஒட்டி கொண்டது .. 

இன்னும் மாறல என்று கொஞ்சிக்கொண்டாள்..

தன் மகள் சுவாதி, சிறு வயதிலிருந்தே தனியாக வளர அவளுக்கு குறை தெரிய கூடாது என்று கேட்டது வாங்கி கொடுத்து,  அவள் இஷ்டம் போல வாழ அனுமதி கொடுத்திருக்க .. அதுவே ஒரு மனநோய் ஆகி போனது ... அவள் எதிர்பார்த்தது பொருள் இல்ல உறவுகள் ,  ஏற்கனவே தனிமை ... இதில் வேறு  ஃபாரின் போக விருப்பம் இல்லாத பெண்ணை கட்டாயப்படுத்தி ஃபாரின் அனுப்பி வைத்திருக்க..  வரும் போது கிட்டதட்ட சைக்கோ ரேஞ்சில் வந்து நின்றாள்.. தான் நினைத்தது நடந்தே ஆக வேண்டும் என்பதற்காக தன்னை காயப்படுத்தி சாதிக்க .. அது வந்து நின்ற இடம் ... வீர் ... வேலைக்காரன் போல இல்லாமல் மீசையை திருகிவிட்டு , சட்டையை மடக்கி நீளகால் போட்டு துள்ளி நடக்கும் வீர் அவளை கவர்ந்து விட்டான்..  வேணும் என்று அடம் பிடித்து வாங்க துடிக்கிறாள் என்று மைதிலி  மகள் நிலை சொல்லி அழ ..அய்யோ பாவமே என்றானது ... 

"இதுக்கு தீர்வு என்ன மேடம்..ஏதாவது டாக்டர் கிட்ட பார்க்கலாம் தானே..

"நானே டாக்ட்டர் தானம்மா ,எனக்கு தெரியாதா? ஊருக்கெல்லாம் வைத்தியம் பார்த்த என்னால என் மகளுக்கு ஒன்னும் செய்ய முடியாம போச்சு ம்மா.. சின்ன வயசுல இருந்தே  தனக்குள்ள ஏதோ ஒரு அழுத்தத்தில தனிமையில கிடந்திருக்கா அப்போ அவளுக்கு நான் துணையா இல்லைங்கிற கோவம் நிறைய இருக்கு,  எனக்காக யாரும் இல்லை நான் மட்டும் யாருக்காக என் ஆசைகளை விடணும்ன்னு முரண்டு பிடிச்சு வாங்கிக்கிறா..."

"ஓஓஓ ...அப்போ விருமனுக்கு ,சாரி வீருக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லயா மேடம்.."

"அய்யோ!!  அந்த புள்ள பாவம் சொல்லி பார்த்துடுச்சி , இவ சாக போய் காப்பாத்தி கொண்டு வந்து , நான் அவன் காலை பிடிச்சி,  கெஞ்சி பெரிய கதைம்மா என்று நடந்தவைகளை கூறினார்..

"வீர் சூழ்நிலை கைதி போல மாட்டி முழிக்கிறான்  மின்னல் இவளுக்கு எடுத்து சொன்னாலும் விளங்கல ..

"அதுக்காக அவருக்கு பிடிக்காம கல்யாணம் பண்ணி வச்சா சரியா வருமா மேடம் "கேட்டு விட்டு நாக்கை கடிக்க..

"புரியுதும்மா ஆனா சுவாதிக்கு புரியணுமே ஒருத்தரை கட்டாயப்படுத்தி காதலிக்க, வாழ வைக்க முடியாதுன்னு தெரியலையே ..என்று பெருமூச்சு விட..

"சரி மேடம் விடுங்க இன்னும் ஒரு மாசம் இருக்குல்ல ஏதாவது நல்லது நடக்கும் ... 

"அவனும் அதுதான் சொன்னான் நிச்சயதார்த்தம் அவளுக்காக நடத்துங்க , அதுக்கு பிறகு இது சரி வராதுன்னு புரிய வைப்போம்" என்று வீர் கூறியதை கூற..

"பய பரவாயில்லை நான் கூட காசை கண்டதும் மங்கி மயங்கிடுச்சோன்னு நினைச்சேன்,  ஆனாலும் உனக்குன்னு வந்து விதவிதமான வந்து மாட்டுது பாரு .. எங்கேயோ மச்சம் இருக்குடா மாமா" என்று சிரித்து கொண்டவளுக்கு அவன் தன்னை ஏமாற்ற நினைக்கவில்லை என்பதே நிம்மதி கொடுத்தது .

வேலையை முடித்து விட்டு, மின்னல் தன் வீட்டு கதவை திறக்க போகும் முன் , அவன் அறை கதவு சற்று திறந்து கிடக்க ..உள்ளே உற்று பார்க்க .. வீர் கட்டிலில் தலையை பிடித்து கொண்டு படுத்திருந்தான்... உண்மையாகவே தலை வலி வந்துடுச்சு...  எங்கே சுற்றினாலும் பாதை அமேசான் காட்டில் போய் முடிய ஆஆஆ வலிக்குதே என்ற நிலை ...

சுவாதி அழகி, பேரழகி ஆனால் அவனுக்கு ஆசை வர வைக்க முடியவில்லை .. மின்னல் தடுமாற வைப்பாள்..  உதட்டை சுளிக்கும் போது அப்படி ஒரு உணர்வு அடி வயிற்றை நிரப்பிக் கொல்லும்.. எண்ணெய் வடிந்து நின்றாலும் ,ஒருமாதிரி மயக்குவாள்..  அவளை போல இங்க பீஸ் இல்ல என்று சும்மா கூட அடுத்த பெண்களை தேடி கண்ணு போகாது .. 

க்ரீச் என்று கதவு திறக்கப்பட,  சுவாதியோ என்று அலறி வீர் கண்ணை திறக்க,  மின்னல் கையில் டம்ளரோடு நின்றாள்..

"இங்க என்னடி பண்ற , நான் என் சுவாதி கூட  சுத்திட்டு வந்து டயர்டா இருக்கேன்.. பேக் பஞ்சராகி ஒட்டு போட்டு வைக்கபட்டாலும் எகத்தாளம் மட்டும் குறைவில்லை .. 

"எத்தனை ஆட்டம் போச்சு "என்றாள் இதமாக காப்பியை ஆற்றி வீர் கையில் திணித்தபடி..

"ஏது?? ..

"அதான்டா அதுஊஊஊ ,நாம விளையாடுவோமே அந்த மாதிரி "என்று கண்ணடிக்க..

"அது பல தடவை போச்சு உங்கிட்ட ஏன் சொல்லணும் "

"சொல்லணும்ல அவ இன்னாள் காதலி, நான் முன்னால் காதலி ,எனக்கு கேட்க உரிமை இல்லையா .."

ஹே என பார்த்தான்.. 

"குடி என்ன பார்க்கிற" என்றுவிட்டு அழுக்காக கிடந்த அறையை பெருக்கி  துணியை துவைக்க போட..

"இதெல்லாம் எனக்கு செய்ய தெரியும் "..

"செய்ய தெரிஞ்ச நாய் இதெல்லாம் செஞ்சிருக்கணும்.. என்ன சமைக்க..

"ஒன்னும் வேண்டாம்..

"அப்படி ஒரு சாப்பாடா?

"நீ ஒன்னும் செய்ய வேண்டாம் தாயே, வெளியே போ...

"ஓஓஓஓ அவ கொடுத்தா இனிக்குது ,நான் கொடுத்தா கசக்குதா.. நானும் தருவேன் வாங்கு .. 

"ஏய் போடி வெளியே..

"போக முடியாதுடா, அவ அடம் பிடிச்சான்னு கல்யாணம் கட்ட போற , நானும் அடம் பிடிப்பேன் என்னையும் கல்யாணம் கட்டு .. எந்த உரிமையையும் இல்லாத அவளே தாலி கட்டுன்னு  ஒய்யாரமாக சட்டம் போடும் போது, உன்ற பிள்ளையை சுமக்கிற நான் போட கூடாதா? 

"ஏது பிள்ளையா???" என்று வீர் அலற..

"ம்ம் மூணு மாசம் "என்று நகத்தை கடித்தாள்..

"ஏதுவும் பண்ணவே இல்லடி.."

"அது உன் தப்பு .. ஆனா பண்ணின கொஞ்சோண்டுக்கு பிள்ளை வந்திருச்சே" என்றாள் புருவம் உயர்த்தி ..

"அங்க தொட்டா பிள்ளை வருமா என்ன? "குழம்பி போனவனை இன்னும் குழப்பி விட்டாள்..

"என்கிட்ட கேட்டா எனக்கென்ன தெரியும், நீ கேட்ட நான் தந்தேன் ,இப்போ வந்திடுச்சு,  அதனால என்ன பண்ற நாளைக்கு தெரு முக்குல இருக்கிற கோவில்ல வச்சி சிம்பிளா தாலி கட்டி பொண்டாட்டி ஆக்குற..  "அவன் பே என்று முழிக்க 

"சுவாதியை என்ன பண்ணன்னு பார்க்கிறியா?

"போனா போகுதுன்னு சுவாதிக்கும் ஒரு தாலியை கட்டிரு , உனக்குதான் வாழ்க்கை கொடுக்கிறது ஹாபில்ல..  பிள்ளைக்காக எனக்கு தாலி , உயிர் போயிட கூடாதுன்னு அவளுக்கு ஒரு தாலி... எப்படி .. "காப்பி டம்பளர் தூக்கி அவள் மீது வீசிய வீர்

"அடிங்க !! என்னடி ஓவரா பேசிட்டு இருக்க வெளிய போ,  எல்லாம் உன்னால வந்தது ..என்னைக்கு உன்ன பார்த்தேனோ, கிரகம் பிடிச்சு தலை மேல ஆடுது .. அது வரை நிம்மதியா இருந்தேன்டி,  உன்ன பார்த்த பிறகு எல்லாம் சனியாதான் இருக்கு .. ச்சை எல்லாம் என் மேலேயே வந்து விடியுது "என்று பல்லை கடிக்க மின்னல் அமைதியாக இடத்தை விட்டு நகர.. தலையை பிடித்து கொண்டு கட்டிலில் விழுந்தான்... 

அவன் பாதி இவள்..  அன்று இன்பத்தை தாங்குனல்ல இன்று என் துன்பத்தையும் தாங்கு என சுவாதி மீது காட்ட முடியாத கோவத்தை, உரிமை கொண்ட  மின்னல்  மீது காட்டினான் ..

சொல்ல  போனால் நேற்று வரை வீருக்கு ஒரு பயம் இருந்தது .. சூழ்நிலையை எப்படி தனியாக சமாளிக்க என்று பயந்தான்..  மின்னலை இங்கே பார்த்து பிறகு கோவம் இருந்தாலும் தனக்கு துணைக்கு ஒருத்தி இருக்காப்பா என்று தைரியம் கொண்டது மனது.. 

சுவாதி நகத்தை கடித்து துப்பிக் கொண்டிருந்தாள்...

வீர் ஒதுக்கம் அவளுக்கு பிடிக்கல தன்னை முழுதாக காதலில் குளிப்பாட்ட வேண்டும்.  கொஞ்சணும் ரசிக்கணும் காதல் பைத்தியம் வேர் விட்டு அவளை நார்மல் நிலை விட்டு தாண்ட ஆரம்பிக்க வைத்தது ...

வீர் எனக்கு நீங்க வேணும்!! வேணும் !!வேணும் வேணும்!!  என்று சொன்னதையே சொல்லி கொண்டு அறை எங்கும் கிடக்கும்,  அவன் போட்டோவை கண்கள் சிமிட்டாது ரசிக்க ஆரம்பித்தாள்... 

ஆற்றை எளிதாக கடக்கலாம் , கடலை எளிதாக கடக்க முடியாது..  சுவாதி ஆர்பரிக்கும் பெண் கடல் அவளை சாந்தப்படுத்த எவராலும் முடியாது..