மெய் பேசும் மித்தியமே-28

மெய் பேசும் மித்தியமே-28

மெய் பேசும் மித்தியமே-28

சூர்யா இந்தளவுக்குத்தான் ரியாக்ஷ்ன் பண்ணுவான்னு எதிர்பார்க்காதவள் அப்படியே அவனையேபார்த்துக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்ததும் மெதுவாக எழுந்தவன்”முதல்ல குழந்தைங்கிறது உன் இஷ்டத்துக்கு பெத்துக்கிறது இல்லை,அந்தக்குழந்தைக்கான ரெஸ்பான்சிபிலிட்டி எல்லாம் நம்ம முழுசா எடுக்கணும்.இப்படி எதையுமே யோசிக்காது நான் உன்கூட வாழ்ந்திடுவேன்னுதானே இதைச் செய்த.அப்போ இந்தியன் கப்பிள்ஸ்,ஐ.வி.எப்னு சொன்னதெல்லாம் பொய் அப்படித்தான?”என்று கோபத்தில் கத்தினான்.

“ஆமா.இத்தனை வருஷம் உனக்காக காத்திருந்து உன்கூட வாழ வந்திருக்கேன்.மறுபடியும் நீ என்கூட வாழமல் இருக்கியே?என்னையப் பத்தி உனக்கு எந்த நினைப்பும் இல்லையா?நானும் உயிருள்ள மனுஷிதானே.எனக்கும் உணர்வுகள் இருக்கும்னு ஒரு டாக்டரான உனக்குப் புரியலையா?அப்போ உன்கூட வாழ்றதுக்கு என்னென்ன வழி இருக்கோ அதையெல்லாம் பார்த்து செய்வேன்ல.இதுவும் அப்படித்தான்”என்று எந்தவித உறுத்தலும் இல்லாமல் சொன்னாள்.

அதைக்கேட்டவன் அவளையே தீர்க்கமாகப் பார்த்தான்.

“நீ மனுஷி உனக்கும் உணர்வு இருக்கும்னு தெரிஞ்சிதான் உன்னை பிரிஞ்சி இருந்தேன்.விவாகரத்து தர்றேன்னு சொன்னேன்.ஆனால் நீ பிடிவாதமா இருந்தா என்ன பண்ணுறது நிகிதா.எனக்கு உன்னைப் பார்த்தா எந்த உணர்வும் வரலை.உணர்வே வராம எப்படி உன்கூட வாழமுடியும்?இதுக்குத்தான் சொல்லுறேன்.இன்னும் நான் என்ன செய்யணும்னு நினைக்கிற?”

“நம்ம குழந்தைக்காக நாம வாழமுடியாதாத்தான்” 

“இது நீயா வேணும்னு உன் விருப்பத்துக்காக ஏற்படுத்தின கல்யாணம்.முதல் நாள்ல இது சரிவராது எனக்கு டைம்தான்னு கேட்டனே.

நீதான் உங்க அம்மா வச்சு பிரச்சனை பண்ணி இவ்வளவு தூரம் கொண்டு வந்துட்டா இப்ப நான் என்ன பண்ணனும் நினைக்கிற?நீயா ஏற்படுத்தின பிரச்சனை என்னை எதுக்குள்ளும் இழுக்காத”என்றவன் அன்றைக்கே இந்தியா வந்து தனது டாக்டர் வேலையில் ரீஜாயின் பண்ணிக்கொண்டான்.

அவ்வளவுதான் நிகிதா செய்து வைச்சிருக்க வேலைக்கு அவ மேல கோபம் கோபமா வந்துச்சு.இவன் கிளம்பி இங்கே வந்ததும் தனது கர்ப்பத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு நிகிதா அறிவித்தாள்.

ஆனால் அது எப்படி வந்தது,தனது மெடிக்கல் அறிவை தப்பா பயன்படுத்தி வந்தது என்பதையெல்லாம் அவள் சொல்லவில்லை.அது தெரிந்தால் கண்டிப்பாக பெரிய பூகம்பமாக பிரச்சனை வெடிக்கும், அது எதுக்கு அப்புறம் நம்ம மேல தப்புன்று ஆகிடும்.அத்தானை நம்ம பக்கம் இழுக்கமுடியாது என்று உண்மையை மறைத்து கர்ப்பம் என்பதை மட்டுமே சொல்லிவிட்டாள்.

அவ்வளவுதான் சௌந்தரிக்கு மகள் வாழ்ந்துவிட்டாள்.இனி சூர்யாவை இந்தப்பக்கமா இழுத்துட்டு வந்திடுவாள்.இனி அவன் எகிறமாட்டான் என்றெல்லாம் சந்தோசப்பட்டார்.

ஆனால் லலிதா இதை நம்பவும் முடியாது நம்பாமல் இருக்கவும் முடியாது தவித்தார்.மகன் இவ்வளவு நாளும் இவா வேண்டாம்னுதானே இருந்தான்.அப்புறம் எப்படி அவளோடு வாழத்தொடங்கினான்?என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு இருந்தார்.

ராஜசேகருக்குத்தான் லலிதா ஒரு பொருட்டே இல்லையே.அவருக்கு அக்கா குடும்பம்,மகள் மருமகன்னுதானே இருப்பார்.இப்போது மருமகள் வேறு கர்ப்பமாக இருக்கிறாள் என்றதும் சந்தோசத்தில் இருந்தார்.நம்ம பண்ணிவைச்சக் கல்யாணத்துல மகன் வாழத்தொடங்கிட்டான்.நம்ம ஜெயிச்சிட்டோம் என்ற இருமாப்பில் இருந்தவருக்கு மகன் அதிர்ச்சிக்கொடுத்தான்.

விவாகரத்து வேணும் என்று சூர்ய பிரகாஷ் ஆறுமதாம் கழித்து நிகிதாவிடம் பேசினான்.அதைக்கேட்டு உண்மையிலயே அவளுக்கு அதிர்ச்சிதான்.நம்ம ஒன்னு நினைச்சிட்டிருக்க இவன் ஒன்னு நடத்திவைக்கிறானே!நம்ம இந்தக்குழந்தையை வைச்சு அத்தானோடு வாழ்ந்திடலாம் என்று ஒரு கணக்குப்போட்டிருக்க,அது மொத்தத்தில் தவறாக போய்விட்டதே என்று மனம்குழம்பி உண்மையை எல்லாம் சௌந்தரியிடம் சொல்லிவிட்டாள்.

அவ்வளவுதான் சௌந்தரி வேற திட்டம்போட்டார்.அதெப்படி நமக்கு அடங்காம இவன் இப்படி செய்யலாம்.நம்ம தம்பி நம்ம சொன்னதைக் கேட்கிறான்.இந்த லலிதா மாதிரியே அவா மகனையும் மாத்தி வைச்சிருக்கா என்று ராஜசேகரிடம் போய் உன் மகன் என் மகளோட வாழ்க்கையை மொத்தமா அழிச்சிட்டான் என்று அழுதார்.

அவ்வளவுதான் ராஜசேகர் லலிதாவிடம் சண்டைப்போட்டு மகன்கிட்ட போய் பேசச்சொல்லி அனுப்பி வைத்துவிட்டார்.

ஆக அம்மாவும் மகனும் இப்போது சென்னையில் தனியாகத்தான் இருக்கிறார்கள்.அவருடைய வீட்டில் இருக்கக்கூடாது என்று மகனை விரட்டிவிட சூர்யா இதுதான் நல்லதென்று மொத்தமாக குடும்பத்தில் இருந்து தனியாக பிரிந்து வந்து தனக்கென்று ஒரு வீட்டை வாங்கிவிட்டான்.

எந்தநிலையிலும் நிகிதாவோடு வாழமாட்டேன் என்று தனியாக வாழுபவனுக்கு வேற கல்யாணம் செய்யணும் அப்படிங்கிற எண்ணமே வரவில்லை.

ஏனோ அவனுக்கு அதுவு தோன்றவேயில்லை.நடந்த ஒரு கல்யாணமே போதும்,அடுத்து எவளையும் கல்யாணம் பண்ணி மண்டைக்காயக்கூடாது என்ற உத்தம சத்தியத்தை எடுத்திருந்தவனுக்கு தங்களது குழந்தையின் படத்தை போனில் அனுப்பியிருந்தாள் நிகிதா!

“பெண் குழந்தை பிறந்திருக்கு.ஆனால் இந்தக் குழந்தை உனக்கு சொந்தமில்லை.எனக்கே எனக்குமட்டுமே சொந்தம் என்று கேப்ஷனோடு அனுப்பியிருந்தாள்.

அதைப்பார்த்தவனுக்கு ஒரு நொடி ஒன்றுமே ஓடவில்லை.அப்படியே போட்டோவையே பார்த்திருந்தான்.

அவனுக்கு ஏற்பட்ட அந்த நொடி உணர்வை என்னவென்று சொல்ல விவரிக்க முடியாது அப்படியே பார்த்திருந்தான்.நம்ம உயிர் நம்மக் குழந்தை என்ற உணர்வு வந்துவிட்டது.அதற்குப்பிறகு எதையும் யோசிக்காது மகளைப்பார்க்க ஓடோடி வந்து நின்றான்.

சௌந்தரி அவனையும் லலிதாவையும் உள்ளயேவிடாது”யாரைப்பார்க்க வந்தீங்க?எதுக்கு வந்தீங்க?”என்று கேட்டு சண்டையிட்டார்.

இப்போது சண்டைப்போடுறது சரியில்லை என்று அமைதி காத்த சூர்யா”எனக்கு நிகிதாவையும் குழத்தையும் பார்க்கணும்.உள்ளே விடுங்க.நான் நிகிதாக்கிட்டப்பேசணும்”

“அப்படி பேசி என்ன நடக்கப்போகுது.ஒன்னும் நடக்காது.ஏற்கனவே விவாகரத்து வேணும்னு நிக்கிற.இப்போ வந்து நிகிதாவ பார்க்கணும்னு குழந்தைப்பார்க்கணும்னு வந்து நிக்கிற? இதெல்லாம் சரிப்பட்டுவராது.யாரையும் பார்க்கவிடமாட்டேன்”

அவ்வளவுதான் சூர்யாவின் முழுக்குணமும் வெளியே வர அவரைத் தள்ளிவிட்டு உள்ளே போய் நிகிதாவின் அருகில் உட்கார்ந்தான்.

அவளுக்குத் தெரியும் எங்க அடிச்சா இந்த ஆம்பளைங்க விழுவாங்கன்னு தெரியும்.அதனால் குழந்தையை காண்பிக்காது அவனையே பார்த்திருந்தாள்.

“எனக்கு என் குழந்தையைப் பார்க்கணும்”

“ஏன்?”

“ஏம்னா அது என் குழந்தை”

அது என் மூலமா நான் உருவாக்கிய என் குழந்தை.டோனர் மட்டும்தான் நீங்க. டவுன் இருக்கும் குழந்தைக்கும் சம்பந்தமே கிடையாது இது உங்களுக்கு தெரியாதா சூர்யா அத்தான் என்று அந்த அத்தானை அழுத்திச் சொன்னாள்.

அவளை அழுத்தமாகப் பார்த்தவன் “என்ன நோக்கத்துக்காக இந்த குழந்தயை பெத்துக்கிட்டியோ நான் அதுக்கு இறங்கி வர்றேன்” என்றான்.

குழந்தைக்காக உண்மையிலயே நிகிதாவை மனைவியாக ஏற்றுக்கொள்கிறேன் என்று மறைமுககமாக சம்மதம் சொன்னான்.

அவ்வளவுதான் நிகிதா நக்கலாகச் சிரித்தாள்.அதுதானே அவளுக்கு வேணும்.எத்தனை வருஷமானாலும் உன்கூட நான்மட்டும்தான் வாழணும்.நீ என்கூடமட்டும்தான் வாழணும்.அதைத்தான்டி உன்னை எங்கேயும் விடமாட்டேன்.இதுதான் நிகிதாவின் முடிவாக இருந்தது.

அவள் கர்ப்பமாக இருக்கிறதை சொன்னதும் அவளோடு வாழ்வான் என்று நினைத்திருக்க அவன் விவாகரத்து வரைக்குச் செல்வான் என்று எதிர்பார்க்கவில்லை.

அந்த நிமிடம் அவள் எடுத்த உறுதிமொழி குழந்தையை வைத்து தன்னோடு இவனை இருக்கவைக்கணும்.அவனோடு நான் வாழ்ந்தலும் வாழாமல்போனாலும் அவனைமட்டும் விட்டுக்கொடுக்கமாட்டேன் என்ற ஈகோ தலைக்கேறியிருந்தது.வெறும் காதல்கூட வெற்றிப்பெரும் ஆனால் கதால்போய் தலைக்கணமும் ஒருத்தரை அடிமைப்படுத்தும் எண்ணமும் இருத்தால் அங்கே உறவின் சரிவுதான் உருவாகும்.

அதுதான் நிகிதா சூர்யபிரகாஷ் வாழ்விலும் உருவானது.

ஆறுமாதம் கழித்து நிகிதாவையும் குழந்தையையும் சென்னைக்கு அழைத்த வந்திருந்தான்.

நிகிதாவிடம் பேசுவான் குழந்தையைப் பத்திக் கேட்பான்,மகளை எடுத்துக் கொஞ்சுவான்.

மகள் பாசம் உள்ளுக்குள் ஊடுருவி தந்தையாக அவனை முழுதாக உருவெடுக்க வைத்திருந்தது.

அதைப்பார்த்த நிகிதாவுக்கு உள்ளுக்குள் ஆனந்தமாக இருந்தது.

ஒருவழியாக மூணு வருஷத்துக்கு மேலாகப்போராடி மகளை வைத்து சூர்யா அத்தானை மடக்கி நம்மக்கூட வழ்றதுக்கு வரவைச்சுட்டோம் என்று பெருமையாக நினைத்துக்கொண்டாள்.

அந்த எண்ணத்தில் வெந்நீரை மொத்தமா ஊற்றியிருந்தது சூர்யாவின் அந்தரங்கமான விலகல்!

நிகிதா தானாக கணவனிடம் நெருக்கத்தை உருவாக்க நினைத்து நெருங்க அவனும் நெருங்கத்தான் செய்தான்.

ஆனால் அந்த நெருக்கம் ஒற்றை முத்தத்தோடு நின்றுவிட்டது.நிகிதா என்னவென்று அவனது முகத்தைப் பாவமாகப் பார்த்தாள்.

இத்தனை செய்தும் ஏன் என் வாழ்க்கை வாழமுடியாமல் போகுது? என்ற வேதனை அவளது முகத்தில் தெரிந்தது.அதைப்பார்த்தவன் எழுந்து உட்கார்ந்தான்.

“சாரி நிகிதா எந்த சூழ்நிலையிலும் என்னால் உன்கூட வாழமுடியாது.நான் எவ்வளவோ போராடிட்டேன்.இந்த மூணு வருஷத்துல நானும் உன்கூட எவ்வளோ போராடிட்டேன்.சத்தியமா என்னால உன் அருகாமையில் ஒரு கணவனுக்குண்டான எதையுமே செய்யமுடியாது.அதுதான் உண்மையுங்கூட. அதுக்காக உன்னை வெறுக்கிறேன்னு இல்ல.சகமனுஷியாக மட்டும்தான் பார்க்க முடியும்.ஒரு மனைவியாக காதலோடு அட்லீஸ்ட் காமத்தோடுக்கூட பார்க்கமுடியல. நெருங்க முடியல.குழந்தைக்காக வந்தேன்.என் குழந்தைக்காகவாவது உன்னோடு வாழ்ந்திடணும்ன என்னை நானே மாத்திக்க முயன்றேன்.அது இந்த ஜென்மத்துல முடியாது.இதுக்குமேல உன்னை நான் எந்தவிதத்திலும் காயப்படுத்தவிரும்பல.தயவு செய்து ஏற்கனவே போட்ட விவாகரத்து பெட்டிஷனை அப்படியே தொடருவோம்.எனக்கு என் குழந்தையை பார்க்கவும் பேசவும் வாய்ப்புக்கொடு போதும்”என்று முடித்துவிட்டான்.

அவன் சொன்னதைக் கேட்ட நிகிதாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.நம்ம இவ்வளவுதூரம் இவனைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இவன் நம்மளை ஏத்துக்கமாட்டுக்கான்.ஒரு குழந்தையையும் பெத்து இவனை நம்மக்கூட வாழவைக்கலாம்னா அதுக்கும் முடியாதுன்னு விவாகரத்துலயே நிக்கிறான்.இதுக்குமேல இவன்கூட போராடி வாழ்றதெல்லாம் வாழ்க்கையே இல்லை.

ஆனால் என்னை இப்படியாக்கிட்டு இவன்மட்டும் சந்தோசமா வாழ்க்கூடாது.என் காதலை ஏத்துக்காத இவனுக்கு காதலும் வரக்கூடாது வேறொரு கல்யாணமும் நடக்கக்கூடாது.இதுக்கு ஒரே வழி மகளை இவன்கூட பழகிவிடுறதுதான் என்று முடிவு செய்துவிட்டாள்.

“ சரித்தான் இதுக்குமேலயும் என்னால உங்கக்கூட போராடி வாழ்ந்திடமுடியாதுன்னு தோணுது.நம்ம பிரிஞ்சிடலாம் என்று அவனிடம் கோபத்தைக் காண்பிக்காது அப்படியே நெஞ்சில் சேர்த்துவைத்துக்கொண்டு விவாகரத்துக்கு சம்மதித்தாள்.

இதை முதல்லயே செய்திருந்தாள் இத்தனை பிரச்சனை வந்திருக்காதே நிகிதா!

நிகிதா அவனுக்கு விவாகரத்து மியூட்சுவல் கன்சர்ன்ல குடுத்தாலும் அவளால் அதை ஏத்துக்கொள்ளமுடியாது அழத்தான் செய்தாள்.

அவளை கல்யாணம் பண்ணிக்க விருப்பமில்லாத ஒருத்தனை கட்டாயத்தால் தாலிகட்டவைச்சது பெரியவங்க தப்பு. அவன் வேண்டாம் என்று சொல்லியும் இந்தக் கல்யாணத்துக்கு சம்தமதித்தது நிகிதாவுடைய தப்பு.சூர்யாவுமே சூழ்நிலைக் கைதியாகி அவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டது முழு முட்டாள்தனம்.அந்த முட்டாள்தனத்துக்கான விலை அவர்களது வாழ்க்கை.

நிகிதாவின் காதலில் கருணையும் விட்டுக்கொடுத்தலும் இல்லாததால் மொத்தமாக சூர்யாவை இழந்துநிற்கிறாள்.

விவாகரத்து கிடைத்த இருவரும் மட்டுமல்ல இரு குடும்பமும் இப்போது பிரிந்துவிட்டனர்.

மகளைப் பார்க்க அனுமதி தருகிறேன் என்று சொன்ன நிகிதா கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக பூஜாவை சூர்யாவின் கண்ணில் காட்டவே இல்லை. இப்பொழுது அவளுக்கு வேறொரு வாழ்க்கை தேவைப்படுகிறது அதற்கான ஆயத்தத்தில் இருப்பதால் மகளை மெதுவாக தனது மாமா ராஜசேகர் மூலமாக சூர்யாவிடம் அனுப்பி இருந்தாள். 

அதனால் தான் சூர்யா மகளை தூக்கிக் கொண்டு யாருக்கும் தான் இருக்கும் இடம் தெரியக்கூடாது என்று கிராமத்திற்கு ட்ரான்ஸ்பர் கேட்டு கடிதம் எழுதி ரோஜாவின் ஊருக்கு வந்திருந்தான்.

எந்த ஒரு எதிர்காலமும் இல்லாது இந்த ஊருக்கு வந்தவன் தனது எதிர்காலமே இங்குதான் இருக்கிறது என்பதை கண்டு கொண்டான்.

அதற்குப்பின்தான் எல்லாவற்றிலும் துணிந்து இறங்கி திட்டம் போட்டு ரோஜாவை கல்யாணம் பண்ணிக் கொண்டான்.

சூர்யா ரோஜாவின் கல்யாணம் முடிந்து மூன்று மாதம் கழித்து ஊருக்கு சென்ற லலிதாதான் தனது மகள் இடம் சூர்யாவின் கல்யாண விஷயத்தை சொல்லிவிட்டார்.

நிகிதா உடனே திட்டம் போட்டு பறந்துவந்து மகளை தூக்கிக் கொண்டு போய்விட்டாள்.

ஏற்கனவே விவாகரத்து பண்ணும் பொழுதே மகளை பார்க்கவும் பேசவும் மட்டும்தான் உரிமையுண்டு என்று குறிப்பிட்டு இருந்தது. 

அவள் அதற்கும் சம்மதித்தாலும் மூன்று வருடம் சூர்யாவை பூஜாவை பார்க்கமுடியாதபடி வைத்திருந்தாள்.இப்போணு தனது எதிர்கால வாழ்க்கைக்காக மகளை சூர்யாவிடம் குடுத்திருந்தாள்.

ஆனால் சூர்யா காதலித்து ரோஜாவைக் கல்யாணம் பண்ணிக்கொண்டான் என்று லலிதா மூலம் தெரிந்ததும், மொத்தமாக கோபத்தில் வெடித்து சிதறியவள் மகளை வந்துத் தூக்கிட்டுப்போய்விட்டாள்.

பூஜாவிற்கு தாயின் மூலம் கிடைக்காத பேரன்பை ரோஜாதான் கொடுத்திருந்தாள்.கடமைக்காக பெத்து வளர்த்த நிகிதாவைவிடவும் உண்மையான அன்பை தந்த ரோஜாவிடம்தான் பூஜா அதிக அன்பு வைத்திருந்தாள்.

அந்த அன்பைப் பிரித்து பூஜாவை தன்னோடு நிகிதா இழுத்துச்சென்றிருக்க வேறு வழியில்லாது அவளை மீட்க சூர்யா இப்போது சென்னை நோக்கி தனியாக பிராயனப்பட்டான்!

பூஜா ரோஜாவிடம் திரும்பி வருவாளா?அப்படியே திரும்பி வந்தாலும் ரோஜாவுக்கு சொந்தக் குழந்தை வந்தால் பூஜாவை ஏற்றுக்கொள்ளுவாளா?

காலம்தான் பதில்சொல்லும்!