மெய் பேசும் மித்தியமே-8

மெய் பேசும் மித்தியமே-8

மெய் பேசும் மித்தியமே-8

சூர்யபிரகாஷின் மனதிற்குள் ஒருவித தயக்கமும் நடுக்கமும் இப்போது வந்துதொற்றிக்கொண்டது.

அதை வெளிக்காட்டிக்காது ஊருக்குள் நுழைந்தான்.

ரோஜா வீட்டுக் காம்பவுண்ட்குள்ளே கார் நுழைந்ததுமே யாரு காரு இது.நம்ம வீட்டு காம்பவுண்ட்குள்ள வநாது நிக்குது என்று உள்ளேயிருந்து மல்லிகா முதற்கொண்டு எல்லோரும் எட்டிப் பார்த்தனர்.

முதலில் சூர்யபிரகாஷ் இறங்கவும் அவனோடுக்கூட பின்னாடியே லலிதா இறங்கினார்.

ஓஓஓ இதுதான் டாக்டரோட அம்மாவோ.அழகா இருக்காங்க.இவங்கக் கலர்தான் டாக்டருக்கு ஒட்டியிருக்கும்போல என்று சொல்லவும் அவரது மருமகள் மீனா சிரித்தாள்.

“எதுக்குச் சிரிக்கிற? என்ன செய்ய நம்ம வீட்டுல இரண்டுபேருக்கும் கருப்பசாமியோட நிறம் ஒட்டிக்கிட்டு.நல்லவேளை நம்ம பட்டு கொஞ்சம் என் கலருல பிறந்துட்டா”என்று சிரித்தவாறே மீனாக்கிட்ட சொன்னார்.

அதுக்கும் அவள் மென்மையாகச் சிரித்துவிட்டு அடுத்து யார் இறங்குறாங்க என்று பார்த்தாள்.

சூர்யபிரகாஷ்தான் குனிந்து காருக்குள் தூங்கிக்கொண்டிருந்த தன் மகள் பூஜாவைத் தூக்கித் தோளில் போட்டவன் திரும்பி மல்லிகாவைப் பார்த்து புன்னகைத்தான்.

“இதுதான் உங்கம்மாவா டாக்டர்?”

“ஆமாங்க. இவங்க என் அம்மா,தோள்ல தூங்கிட்டிருக்கிறது என் பொண்ணு”

“ஓஓ வணக்கம்” என்று இயல்பான புன்னகையோடு வணக்கம் சொன்ன மல்லிகாவைப் பார்த்ததும் லலிதாவுக்குப் பிடித்துவிட்டது.

“வணக்கம் நல்லாயிருக்கீங்களா?”

“நல்லா இருக்கோம்.நீங்க எப்படி இருக்கீங்க.நீங்க மூணு பேரு மட்டும்தான் வந்திருக்கீங்களா?டாக்டர் பொண்டாட்டி வரலையா?”என்று காருக்குள் பார்த்தார்.

லலிதாவின் முகம் சுருங்கி பதில் சொல்லாது நின்றுவிட்டதை பார்த்தவுடனே சூர்யபிரகாஷ் “என் மனைவியா அவங்க வெளிநாட்டுல இருக்காங்க.வருஷத்துக்கு ஒருதடவைதான் லீவுக்கு வருவாங்க.அவளும் டாக்டருதான்.அதுதான் இப்போ வரல”

“ஓஓ வெளிநாட்டுலயா இருக்காங்க?” என்று ஆச்சர்யமாகக் கேட்டவர் “சரி டாக்டர் நீங்க போங்க பிள்ளையை எவ்வளவு நேரம்தான் தோளில்போட்டிருப்பீங்க போங்க.உங்களுக்கு சாப்பிட நான் எங்க வீட்டுலிருந்துக் குடுத்துவிடுறேன்.இனி எப்போ சமைப்பீங்க”

“ஐயோ அது வேண்டாம்ங்க நாங்க ஏதாவது பார்த்துக்கிறோம்”

“சும்மா இருங்க டாக்டர் எங்க வீட்டுல எவ்வளவோ பேருக்கும் சமைக்கிறோம் உங்களுக்குன்னா தனிய செய்யப்போறோம்”என்றுவிட்டு சிரித்தார்.

லலிதாவுக்கு ஆச்சர்யம் இவ்வளவு வெள்ளந்தி மனிதர்களா? என்னு கண்கள்விரித்துப் பார்த்தார்.

அதுக்குள்ள சூர்யபிரகாஷ் “சரிங்க”என்று தலையாட்டிவிப்டு மகளோடு வேகமாக படியேற லலிதாவும் ஒரு புன்னகையோடு மல்லிகாவிடம் தலையாட்டிவிட்டு அவன் பின்னாடியே போனார்.

“பரவாயில்லை டாக்டர் இங்க வரும்போது ஏதோ கல்யாணம் முடியாத பையனோன்னு கொஞ்சம் யோசிச்சேன்.இப்போ பரவாயில்லை கல்யாணமும் முடிஞ்சு குழந்தையும் இருக்கு அவங்கம்மாவும் கூட இருக்காங்க”என்றவாறே மருமகளோடு பேசிச்சிரித்தவாறே உள்ளேசென்றார்.

உடனே வேலைக்காரியைக் கூப்பிட்டு சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு”இங்கப்பாரு நீலா இதைமேல இருக்க டாக்டரு வீட்ல குடுத்துட்டு வந்திடு.பாவம் அங்கே இருந்து கார்லயே வந்திருக்காங்க.கொஞ்சம் அசதியா இருப்பாங்க.போய்குடுத்துட்டு வந்திடு.ஸ்டவ்வு கிவ்வு எல்லாம் எடுத்து வைச்சிருக்கமாட்டாங்க.

இராத்திருக்கும் நம்மளே குடுத்துவிட்டுறுதோம்னு சொல்லிட்டு வா”

“சரிங்கம்மா”என்று சாப்பாட்டை எடுத்துக்கொண்டு மேல போனாள்.

அவளைப் பார்த்ததும் லலிதா”யாரும்மா நீ?”என்று கொஞ்சம் சந்தேகமாகவேக் கேட்டார்.

அதைக்கேட்டதும் “நீலா இது கீழே மல்லிகாம்மா உங்களுக்குக் குடுத்துட்டு வரச்சொன்னாங்க.அடுப்புக்கிடுப்பு எடுத்து வைச்சு சமைச்சிருக்கமாட்டாங்க அதனால இராத்திரிக்கும் சாப்பாடு குடுத்துவிட்றுதேன்னு சொல்லிட்டு வரச்சொன்னாங்க”

“ஓஓஓ அங்க வைச்சிடு”என்று ஒரு தோரணையாகச் சொன்னார்.

அதைக்கேட்ட நீலா முகம் சுழித்துவிட்டு”எங்க மல்லிகாம்மா கொண்டு வரச்சொன்னதாலதான் கொண்டுவந்தேன்.அவங்களுக்குத்தான் வேலைக்காரி உங்களுக்கு இல்லை.யாருன்னாலும் மனுஷங்களை மதிக்கணும்.அதிகாரத்தோரணையில நடந்துக்கக்கூடாது”என்றுவிட்டு அப்போது அங்கு வந்து டாக்டரையும் கொஞ்சம் கோபத்தில் பார்த்துவிட்டு வந்துவிட்டாள்.

“என்னாச்சுமா?”

“சாப்பாடு குடுத்துவிட்டிருக்காங்க அங்க வைச்சிட்டுப்போன்னு சொன்னேன்.அதுக்கு இப்படி பேசிட்டுப்போகுது”

“அம்மாஆஆஆ உங்க டாக்டர் பொண்டாட்டி டாக்டர் அம்மா அப்படிங்கிற தோரணை பேச்சு எல்லாம் இங்க செல்லாது.இங்க அன்பும் மரியாதையும் குடுத்தா மட்டும்தான் திருப்பிக்கிடைக்கும்.

வேலைதானே செய்யுறாங்கன்னு மரியாதைக்குறைவூ யாரும் இங்க நடத்தாமாட்டாங்க.

முருகேசனும்அப்படித்தான் இங்க வேலைப்பார்க்கிறவங்களும் அப்படித்தான்.அதனால் உங்க தோரணையான பேச்சை முதல்ல நிறுத்துங்கம்மா”என்றான்.

“சூர்யா நான் நார்மலாத்தான் பேசினேன்”

“அம்மாஆஆ”

“சரிடா என்னை ஆளை விடு.சாப்பிட்டுக் கிளம்பு.பூஜாவுக்கு நம்ம நர்சரி ஸ்கூலுக்கு கேட்கப்போகணும்ல.போயிட்டு வந்திடுவோம்.இதுக்குமேலயும் அவளைத் தனியாவிட்டா சரியாகாது.நர்சரி போனால் கொஞ்சம் ஆக்டிவா இருப்பா”

“சரிம்மா குளிச்சிட்டு வந்திடுறேன்.நாளையிலிருந்து சமைக்க ஆரம்பிச்சிடலாமா?இல்லை யாரையாவது வேலைக்கு ஆட்களைப் பார்க்கட்டுமா?”

“பூஜா நர்சரி போயிட்டா நானே சமைச்சிடுவேன்.இங்க வேலைக்கு ஆளுன்னா அவங்க சமையல் எப்படின்னு தெரியலையே?”

“அதெல்லாம் நல்லாதான் செய்வாங்க.எனக்கே கீழே ரோஜா வீட்டுல இருந்துதான் சாப்பாடு இரண்டுமூணு நாளா வந்துச்சு நல்லாஇருந்துச்சு.இன்பேக்ட் அது உங்க சமையலைவிடவும் செமையா இருந்துச்சு”என்றுவிட்டுபோய்விட்டான்.

லலிதாவுக்கு அவன் அப்படிச் சொன்னதும் சுருக்கென்று குத்துச்சு.அப்படியென்ன இந்த ரோஜா வீட்டுல இருக்குன்னு இவன் இப்படிச் சொல்லுறான்.அதையும்தான் பார்த்திடுவோம் என்று குளிக்கப்போனவர் வெளியே வரும்போது சூர்யா தனது மகள் பூஜாவை எழுப்பி முகம் துடைத்து சாப்பாடு ஊட்டிக்கொண்டிருந்தான்.

அவரும் அவர்களோடு வந்து உட்கார்ந்து சாப்பாட்டினை எடுத்து வைத்து சாப்பிடத் தொடங்கினார்.

ருசி நல்லா இருக்கவும் பசியில் வேகமாகச் சாப்பிட்டார்.சூர்யா அவரை நக்கலாகப் பார்த்து சிரிக்கவும் க்கும் என்று கோபத்தில் சொல்லிவிட்டு சாப்பிட்டு முடித்தார்.

பூஜா அமைதியாக சோபாவில் போய் உட்கார்ந்தவள் மெதுவாக எழுந்துப்போய் பால்கனிக்கு வந்து,அந்த சுவரின் ஓட்டை வழியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

அங்கு நிற்கும் மாடுகளும் வேலையாட்களும் அவளுக்கு வித்தியாசமாகத்தெரிந்ததால் அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்படியே பின்னாடி வந்துப்பார்த்த சூர்யா அவளைத் தூக்கி கையில் வைத்தவன்”இனி நம்ம இங்கதான் இருக்கப்போறோம்.பூஜா குட்டி இங்கதான் படிக்கப்போறாளாம்.நம்ம இன்னைக்கு நம்ம பூஜாக்குட்டிக்கு ஸ்கூலைப் பார்க்கபோறோமாம்.போவாமா?”என்று அவளைப் பார்த்துக்கேட்டான்.

அவளோ சரியென்று தலையைமட்டும்தான் ஆட்டினாள்.அவனுக்கே அவளைப் பார்த்து ஒருமாதிரி மனது வலித்துக் கண்கள் கலங்கியது.அதை அவளிடம் வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதற்காக அப்படியே மறைத்து உதட்டில் புன்னகையைக் கொண்டுவந்தான்.

அடுத்த ஒரு மணி நேரத்தில் டாக்டரும் லலிதாவும் பூஜாவோடு பக்கத்து டவுணில் இருக்கும் ஸ்கூலுக்கு வந்தனர்.

அங்குதான் ரோஜா வேலை செய்கிறாள் என்று சூர்யாவுக்குத் தெரியாது.அவனும் பிரின்சிபாலிடம் எல்லாம் சொல்லி அட்மிஷன் போட்டுவிட்டனர்.

அதன்பின்தான் பூஜாவின் கிளாஸ் டீச்சரை வரச்சொல்லிட்டு பேசிக்கொண்டிருந்தனர்.ரோஜா வத்ததும் பிரின்சிபால் பூஜாவை சூர்யபகயகாஷின் மகள் என்று சொன்னதும் அவ்வளவுதான் அதிர்ச்சியாகி பார்த்தவள் சட்டென்று மயங்கி விழுந்திருந்தாள்.

அவள் கண்கள் சொருகவும் மயங்கிடுவாள் என்று உணர்ந்த சூர்யாவும் சட்டென்று அவளைத் தாங்கிப்பிடித்திருந்தான்.

அதைப் பார்த்த பிரின்சிபால் பயந்துவிட்டார்.

ஐயோ ரோஜா என்னாச்சு?என்று அருகில் வந்தார்.

அதற்குள் அவளை அப்படியே தூக்கிட்டுப்போய் டேபிளில் படுக்கவைத்தவன் லலிதாவிடம் திரும்பி “அம்மா கார்ல என்னோட கிட் இருக்கும் எடுத்துட்டு வாங்க” என்று சொன்னவன் ரோஜாவின் கைப்பிடித்து துடிப்பைப் பார்த்தான்.

அவ்வளவு பயமொன்றுமில்லை என்றதும் அவளது கன்னத்தைத் தட்டி “ரோஜா! ரோஜா!” என்று சத்தமாக அழைத்தான்.

அதற்குள் லலிதா மெடிக்கல் கிட்டினை கொண்டுவந்ததும் ஸ்டெதஸ்ஸை எடுத்து அவளது ஹார்ப்பீட் பார்த்தவன் ஒன்னும் பிரச்சனையிஸ்லை என்று உறுதிப்படுத்திக்கொண்டான்.

அதிர்ச்சியில் வந்த மயக்கம்தான் என்று புரிந்து கொஞ்சமாகத் தண்ணீரை எடுத்து அவளது முகத்தில் லேசாகத் தெளித்தான்.

அதில் லேசாகக் கண்ணைத் திறந்து எங்கிருக்கிறோம் என்றுபார்த்தாள்.அவ்வளவுதான் சூர்யாவைப் பார்த்ததும் வேகமாக எழுந்து உட்கார்ந்து சுற்றிப்பார்த்துவிட்டு டேபிளில் இருந்து இறங்க முற்பட்டாள்.

உடனே சூர்யா அவளது கையைப்பிடித்து கீழே இறக்கவும் அவனது கையை விலக்கிவிட்டு தானாக நிற்க முயன்றாள்.

ஆனால் அது அவளால் முடியாது போனது.அவளது கைகால்கள் எல்லாமே நடுங்கவும் அவளருகில் போனவன் அவளை இழுத்து அருகில் இருந்த சேரில் உட்காரவைத்தான்.

டாக்டர் என்பதால் அவனை யாரும் ஒன்னும் சொல்லவுமில்லை.

“குடிக்கத்தண்ணி குடுங்க” என்று வாங்கி அவளது கையில் குடுத்தான்.

அதை அவளால் வாங்கிக் குடிக்கமுடியாது கைகள் நடுங்கவும் அதை வாங்கி அவனாக அவளது வாயருகே கொண்டுபோனான்.

ஆனால் அவளோ குடிக்காது அவனது கண்களையே கூர்ந்துப் பார்த்துவிட்டு அப்படியே கண்ணைச் சுழற்றி பூஜாவைப் பார்த்தாள்.அதை அவன்மட்டுமே புரிந்துக்கொண்டான்.

“இந்தத் தண்ணியை முதல்ல குடிங்க மிஸ்.எதுனாலும் அப்புறமா பேசிக்கலாம்.அவனை மீண்டும் பார்த்தவளின் கண்களில் பரிதவிப்பு இருந்தது.இப்படி ஏமாத்திட்டியே அப்படிங்கிற உணர்வுதான் அது என்று அவனுக்கும் புரிந்தது.ஆனாலும் நடந்துமுடிந்ததை இல்லையென்று சொல்லமுடியாதே!

அதனால் “தண்ணிக்குடிங்க மிஸ்” என்று அழுத்திச் சொல்லவும் தண்ணியைக் குடித்தாள்.

இரண்டு மடக்குக் குடித்துவிட்டு போதும் என்று விலக்கியவள் பிரின்சிபாலிடம் பேசினாள்.

“மேம் எங்க அண்ணனுக்குப் போன் பண்ணி வரச்சொல்லுங்களேன்.நான் வீட்டுக்குப்போறேன்”என்று உதடுகள் நடுங்கச்சொன்னவளை கண்கள் இடுங்கப்பார்த்தான்.

“மேம் ரோஜா மிஸ்ஸை நாங்களே கூட்டிட்டுப்போறோம்.அவங்க வீட்டுக்கு மேலதான் வாடகைக்கு இருக்கேன்.ஒரே இடத்துக்குத்தானே போகணும்.அவங்க அண்ணனைக் கூப்பிடவேண்டாம்”என்று சொல்லிமுடித்தவன் அம்மா பூஜாவைக் கூட்டிட்டுப்போய் கார்ல உட்காருங்கம்மா.நான் ரோஜா மிஸ்ஸை கூட்டிட்டு வர்றேன் என்றுவிட்டு அவள் பக்கமாகத் திரும்பினான்.

“அவளோ நான் அண்ணன்கூடவே போறேன்.என் போனை எடுத்துத்தாங்க ப்யூன் அண்ணே.நானே போன் பண்ணிக்கிறேன்”என்று கைகள் நடுங்கக் கேட்டாள்.

இது வேலைக்காகாது என்று பிரின்சிபால் மேடம் உடனே டாக்டரைப் பார்க்க”ஒன்னும் பயப்படவேண்டாம்.அவங்க நல்லாதான் இருக்காங்க.பயத்துல அப்படித்தான் இருப்பாங்க.நான் பார்த்துக்கிறேன்”என்றவன் அவளை அப்படியே கைகளில் தூக்கியவன் வெளியே நடந்தான்.

பிரின்சிபால் மேடமே அதிர்ந்து “என்னடா இந்த டாக்டர்.ரோஜாவை அலேக்காத் தூக்கிட்டுப்போறாரு?ஐயோ இதெல்லாம் கரஸ்க்கும் இவங்க அண்ணனுங்களுக்கும் தெரிஞ்சா என்னை கொன்னுடுவாங்களே!” என்று பின்னாடியே ஓடினார்.

அதற்குள் சூர்யாவின் கையில் இருந்து இறங்க முயன்ற ரோஜாவை “ஷ்ஷ்ஷ் கையில அடங்கி இரு.இல்லைன்னா இப்போவே கடத்திட்டுப்போயிடுவேன்.உன்னை ஒன்னும் கடிச்சித் திங்கத் தூக்கிட்டுப்போகலை புரியுதா?பேசாமடி இருடி”என்று பல்லைக்கடித்துக் கொண்டு பேசியவனை வித்தியாசமாகப் பார்த்தாள்.

அவள் அப்படி பார்த்துக்கொண்டிருக்கும்போதே காருக்குள் முன் சீட்டில் அவளை உட்காரவைத்தவன்டோரை அடைத்துவிட்டான்.

‘இவன் பண்றது எதுவும் சரியில்லையே.இதுதான் அந்த கருப்பசாமி அவரோட பொண்ணோ?’ என்று லலிதா வேறு அவர்களையே பார்த்திருந்தார்.

பூஜாவும் அவளை பாவமாகத்தான் பார்த்தாள்.

சூர்யா அந்தப்பக்கமாக வந்து காரை எடுத்தவன்”பூஜா இதுதான் உங்க மிஸ்.பார்த்தியா உன்னை மாதிரியே எல்லாத்துக்கும் பயப்படுறாங்க பாரு.ஆனா உன்னை மாதிரி அழகா இருக்காங்கள்ல?”

ஆமா என்று தலையாட்டி சிரித்தவளை ரோஜா திரும்பிப்பார்த்தள்.அவ்வளவு அழகா ரோஜாப்பூ மாதிரி பூஜா இருந்தாள்.

அவளைப் பார்த்து லேசாகச் சிரித்தவள் “உங்கப்பொண்ணு அழகா இருக்கா.அவங்கம்மா ரொம்ப அழகா இருப்பாங்க போல?”என்று நக்கலாகக் கேட்டாள்.

அதைக்கேட்டதும் சூர்யாவுக்கு அவள் எதற்கு இந்தக் கேள்வியை நக்கலாகக் கேட்கிறாள் என்று புரிந்தது.

உடனே அவளைத் திரும்பிப் பார்த்து “நான் அழகா இருக்கிறதாலதான் என்பொண்ணும் அழகா இருக்கா”என்று கண்ணடித்தான்.

அவ்வளவுதான் அவளுக்குக் கோபம் பத்திக்கிட்டு வந்தது.இந்த நிலையிலயும் இவன் என்னைப் பார்த்துக் கண்ணடிக்கான்.வெட்கமில்லாதவன் என்று கோபத்தில் முறைத்தவள்.

“அதுசரி அந்த அழகை வைச்சிக்கிட்டுத்தான் கல்யாணம்முடிஞ்சு ஒரு குழந்தை இருக்கிறதை மறந்துட்டு என்னென்னமோ வேலைப் பண்ணிட்டிருக்கீங்கபோல.அதுலயே தெரிது உங்க அழகின் இலட்சணம்”என்று வார்த்தைகளால் அவனை வதைக்க நினைத்துப் பேசினாள்.அவனோ அதைக்கேட்டு சத்தமாகச் சிரித்தான்.

அதைப்பார்த்து அவளுக்குத்தான் பத்திக்கொண்டு வந்தது.இவனை நம்பி நான் என்னென்னவோ கனவுக் கண்டுக்கொண்டிருக்க இவனோ குழந்தை மனைவின்னு என் முன்னாடியே வந்து நிக்கிறான்.அப்போ இவனை ஒரு ஏமாத்துக்காரன்.இவனை எப்படி நான் நம்பினேன் என்று தனக்குள்ளாகவே அப்படியே வேதனையில் ஒருமாதிரி ஒடுங்கிப்போனாள்.

அதன்பிறகு அவள் அவனைத் திரும்பியே பார்க்காது கண்களை மூடிக்கொண்டாள்.கார் நிற்கவும் கண்ணைத் திறந்துப்பார்த்தாள்.

லலிதாவுக்கு அவர்கள் பேசுவது ஓரளவு என்னவாக இருக்கமென்று பிடிபட்டதால் “ பூஜா வா நம்ம இறங்குவோம்.அப்பா மெதுவாக இறங்குவாங்க”என்று சொல்லிவிட்டு வேகமாக பூஜாவைத் தூக்கிக்கொண்டு இறங்கி விலகிப்போனார்.

ரோஜாவும் டோரைத் திறந்து இறங்கப்போக அது அடைத்திருந்தது.உடனே திரும்பி சூர்யாவை கோபத்தில் எரித்துவிடுவதுபோல பார்த்தாள்.

“இருடி நான்கொஞ்சம் பேசணும்”

“என்ன பேசணும்?உங்களுக்கும் எனக்கும் நடுவுல என்ன பேச இருக்கு.ஒரு மண்ணாங்கட்டியும் பேச இல்லை.இதுக்குமேல என் பக்கத்துல நெருங்குனீங்க?அவ்வளவுதான் சொல்லிட்டேன்”

ஆள்காட்டி விரலால் எச்சரித்தாள்.

அவளது விரலை தனது சட்டென்று பிடித்தவன் அப்படியே அருகில் நெருங்கினான்.

“இங்கப்பாரு நம்ம பார்க்கிற முகத்துக்கும் உள்ள இருக்கிற முகத்துக்கும் வேறே வேற பரிமாணம் உணடு.நீயா ஏதாவது உளறாத புரியுதா?”

“நான் என்ன உளறினேன்?உண்மையைத்தானே சொன்னேன்.உங்களுக்குக் கல்யாணமாகி குழந்தை இருக்கிறதை ஏன் மறைச்சீங்க?”

“அதுல உனக்கென்ன பிரச்சனை இப்போ?”

அந்தக்கேள்வியில் தடுமாறிப்போனவள் “ஆமா எனக்கென்ன பிரச்சனை?எனக்கொரு பிரச்சனையும் இல்லை.எவனுக்கும் கல்யாணமாகுது குழந்தையிருக்கு.அதைப்பத்தி நான் ஏன் கவலைப்படணும்?கதவைத் திறங்க நான் போகணும்.எவனைப் பத்தியும் நினைக்க எனக்கு நேரமில்லை”

“என்னைப் பத்தி நினைக்க நேரமில்லையா உனக்கு?”

“அந்தக் கேள்வியில் இவ்வளவு விசயம் எனக்குத் தெரிஞ்சபிறகும் இப்படி பேச வெட்கமாயில்லை”

“இல்லை”

“ச்ச்சீ”

அவளது கையோடு சேர்த்து அவளையும் இழுத்து ஏதோ பேசப்போகவும் கருணாகரன் தனது வண்டியில் உள்ளே வந்தவன் சரியாகக் காருக்கு அருகே வந்து நின்றான்.

இவனுங்களுக்கு எப்படித்தான் இவக்கூட பேசுறது தெரியுமோ தெரியலை கரக்ட்டா வந்துட்டான்.கரடி என்று நினைத்தவன் விலகி அந்தப்பக்கமாக இறங்கிவிட்டான்.

உடனே இந்தப்பக்கம் வந்து அவளுக்கு டோரை திறந்துவிட்டான்.

அதற்குள் கருணாகரன் வேகமாக அவனை இடித்துத் தள்ளிக்கொண்டு வந்து “பட்டு என்னாச்சுமா?மேடம் போன் பண்ணிருந்தாங்க?”என்றவாறே அவளை உடனடியாகத் தூக்கிக்கொண்டு வீட்டிற்குள்ளே போய்விட்டான்.

அதைப்பார்த்த டாக்டருதான் நான் ஒருத்தன் இங்கதானடா நிக்கிறேன்.என்னன்னு என்கிட்ட கேட்டானா பாரு.இந்த ஹிப்போபொட்டமஸுக்கு முதல்ல கல்யாணத்தைப் பண்ணி வைங்கய்யா என் வாழ்க்கையிலயே தலையிடுறானுங்க’என்று கடுப்பில் திட்டிக்கொண்டு நின்றிருந்தான்.