ரணம்13
Ra13

13 ரண ரணமாய்!!
"என்ன டாக்டர் சார் கல்யாணம் முடிஞ்ச கையோட ஊரை காலி பண்றீங்க என்ன கூட்டிட்டு போக மாட்டீங்களா?
எங்கே தனியாக விட்டுவிட்டு போய்விடுவானோ என்று பயந்த பார்வையோடு அவன் பெட்டி கட்டுவதை காவ்யா கையை பிசைந்து கொண்டே பார்த்தாள்
இந்த தாலி எல்லாம் தனக்கு கிடைக்குமா என்று யோசித்தவளுக்கு ஏதோ பெரும் பாக்கியம் கொடுத்து விட்டான்.. அவனோடு ஒரு வாழ்க்கை ஏங்க வைத்துவிட்டு ... தாலி கட்டிய கையோடு வேலையை மாற்றிவிட்டு ஊரை விட்டு போக தயாராக இருக்கும் மாதவனிடம் என்ன பேசுவது என்று புரியாது அவள் நிற்க ..
"காவ்யா இங்க வா என்றதும் நாய்க்குட்டி போல குடுகுடுவென்று எஜமான் குரலுக்கு ஓடிப்போய் அவன் அருகே நின்றாள்...
"உன்கிட்ட ஒரே ஒரு அப்ளிகேஷன், பண்றியா?
"என்ன சார் எதா இருந்தாலும் பண்றேன், உங்கள விட்டுட்டு மட்டும் இருக்க சொல்லாதீங்க" பயத்தில் படபடத்தாள்...
"இனிமே இந்த ஊர் உனக்கும் எனக்கும் வேண்டாம் சரியா?
"தெரியும் ஏன் சார் இங்க உள்ள ஆம்பள பாதி பேர்" என்ற அவள் உதட்டை தன் விரல் கொண்டு அடைத்தவன்
"நீ இப்போ காவியா இல்ல.. இந்த மாதவனோட காவ்யா .. இனி நீ சாகும்வரை, நான் சாகும் வரை இந்த மாதவனோட காவியக்காதலி ...
எனக்கு இந்த உலகத்தை பற்றியோ அவங்க பார்வையை பற்றியோ , அவர்களுடைய பேச்ச பத்தியோ எப்பவும் கவலையில்லை.. கவலப்பட்டிருந்தா இப்போ நானும் நீயும் இந்த இடத்தில் நின்னு இருக்க மாட்டோம்..
"ம்ம் தெரியும் சார்
"ஆனா, என் மனைவி என் குழந்தைகளோட அம்மா, என்னோட சரிபாதி இனி எதுக்காகவும் கலங்கி நின்னிடக்கூடாது யார் பேசுறது கேட்டும் வருந்தி நின்னுட கூடாது .. ஒரு நாள் கூட உன் கண்ணுல கண்ணீர் வந்துரக்கூடாது... அதுக்கு நீ இங்கே இருக்க வேண்டாம்னு நினைக்கிறேன் அவ்வளவுதான்.. நீ என்ன நினைக்கிற, இல்ல பரவாயில்ல , இங்க இருக்கலாம்னு சொன்னா அதுக்கும் சரிதான் காவ்யா? என்ற அவன் நெஞ்சு கூட்டுக்குள் நசுங்கி , இறுக கட்டிக் கொண்டு நின்றாள் காவ்யா ..
இதை சொல்ல அவளுக்கும் ஆசைதான்.. ஆனால் முடிவுகளை எடுக்கும் அளவிற்கு அவளுக்கு உரிமை உண்டா என்று தெரியவில்லையே.. உனக்கு வாழ்க்கை தந்ததே பெருசு, எங்க இருக்கணும் இருக்கக்கூடாதுன்னு எனக்கு தெரியும்னு அவன் சொல்ல மாட்டான் .. ஆனால் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விடக்கூடாது என்று யோசித்தவளுக்கு அவன் வாயால் இதைக் கேட்கும் பொழுது தன்னையும் மறந்து அவனை கட்டிக் கொண்டு அவனை அண்ணாந்து பார்த்தவள்
சத்தமா அழுதுக்கவா சார் .
"ஏன் என்னாச்சு ?
"கடைசியா ஒரு தடவ அழுதுக்கிறேன் சார் .. இனிமே என் கண்ணில கண்ணீர் வராதுன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு ... ஆனா இப்போ அழ போற அழுகை சந்தோஷத்துல ... அட போங்கடா நான் எவ்வளவு பாடுபட்டா என்ன.. என் புருஷன் வந்துட்டாருடா அப்படின்னு கத்தி கத்தி அழனும்.."
"சந்தோஷம் வந்தா அழணும்னு அவசியமில்லை.. அதை முத்தத்துல கூட சொல்லலாம் "என்று மாதவன் தன் உதட்டை பிதுக்கி காட்ட ..
சார்இஇஇ என்று மாதவன் கணவன் அவதாரத்தில் அவள் நெளிய ...
எங்கடி போக பார்க்கிற என்று அவள் இடையை பிடித்து தன்னோடு ஒட்ட வைத்தவன்...
"அன்னைக்கு கேட்ட இல்ல.. ஒருவேளை இந்த இடத்துல என் புருஷனா இருந்தா என்ன பண்ணுவீங்கன்னு ..
"ம்ம்
" இப்போ சொல்லவா ,செய்யவா என்றான் புருவத்தை மேலும் கீழும் வளைத்து..
உலகத்திலேயே ஒரு ஆணழகன் உண்டென்றால் அவளுக்கு அவன் கணவன் மட்டும்தான்..
மனதால் மட்டும் அல்ல , அழகாலும் அவளை மயக்க இவனையின்றி யாராலும் முடியாது ..
அவன் இறுகியப்பிடியில் நெளிந்நு கொண்டே குனிந்தவளுக்கு முகம் எல்லாம் குங்குமம் நிறம் பூசிக் கொண்டது
ஓஹோ!! இதுதான் வெட்கமா?
அவள் உடலெல்லாம் மெல்லிய நடுக்கம்
ஓஹோ!! இதுதான் தாம்பத்திய தயக்கமா?
அவள் முதுகில் சில் என்ற உணர்வு
ஓஹோ!! இதுதான் ஒரு ஆண் தொடுகை தரும் சிலர்ப்பா?? ...
இதுவரை இதையெல்லாம் அவள் அறிந்தது இல்லை அல்லவா .. தயக்கமாக அவனை விட்டு விலக பார்க்க இன்னும் அவன் பிடி கூடியது..
"என் பொண்டாட்டிய இப்படி இறுக்கி கட்டி புடிச்சுகிட்டு அவ பேசுற ஒவ்வொரு பேச்சுக்கும் அவ குட்டி உதட்டில முத்தம் கொடுத்துக்கிட்டே இருப்பேன்"
"விடுங்க "இச் முதல் முத்தம் அவள் இதழ் வாங்க
"அய்யோ விடுங்க என்று அவள் இன்னும் சுருங்க இச் என்று அவள் மூக்கு முத்தம் வாங்க
"அய்ய போங்க சார்" என்று அவள் உருவி ஓட போக இச் என்று அவள் முதுகு இச் வாங்க ..முகத்தை மூடி கொண்டு சுவரோடு முன் மேனி அழுந்த அவள் நிற்க ..
"இச் இச் இப்ப பேசு "
"மாட்டேன் என்று அவள் கையை எடுக்காது முகத்தை மூட ... அவள் இரண்டு கையிலும் மாறி மாறி மாதவன் முத்தம் வைக்க, அதில் துடித்து போய் கையை அவள் எடுத்துவிட அதற்க்காக காத்திருந்தானோ காதல் கள்ளன் அவள் இதழில் கள் உண்ண லபெக்கென்று அவள் இதழை அவன் இதழ் மெல்ல கவ்வி கொண்டது...
ஹக் இஇஇஇஇஇஇஇஇஇ துடித்து போன அவள் கைகள் இறுகிட அவள் கையை தன் கையோடு இறுக்கி பிடித்து அவள் கன்னத்தை வருடி மெல்லிய முத்தத்தை அவளுக்கு பழக்கம் செய்ய ஏதோ ஏதோ எரிமலை வெடித்து சிதறுவது போல உணர்வு ..
அவன் மீசை முடி பட்டு முந்தானை உள்ளே பதுங்கி இருந்த இடங்கள் எல்லாம் வெட வெடத்தது
இச்சை கண்ட உடல் இன்பம் காண தொடங்கியது அவள் பூனை முடி கூச்செரிய நிற்க இதழை விலக்கியவன்
அப்பறம் இந்த கழுத்துல சின்னதா ஒரு கடி கடிப்பேன்" என்றவன் உதடு அவள் கழுத்தை நோக்கி ஊர்ந்து போக
ஸ்ஆஆஆஆஆஆ இடை சுருங்கிட தன் நாபி நோக்கி போகும் அவனை தள்ளவும் முடியாது கட்டி அணைக்கவும் முடியாது கண்களை மூடி நின்றாள் ...
அய்யய்யோ இது எல்லாம் என்ன உணர்வுடா சாமி!! இப்படி பாடாய் படுத்துகிறது என்றவளுக்கு படபடவென வந்தது..
சார் ஊருக்கு போகணும்னு சொன்னிங்களே பஸ் விட போறோம் முடியவில்லை அவஸ்தை ஓடிவிடும் நோக்கில் அவள் சாக்கு சொல்ல
" இந்த பஸ் போனா அடுத்த பஸ்ல போய்க்கலாம்
"அது பஸ்
இப்படி வகையா சிக்கி இருக்க, பொண்டாட்டி மறுபடியும் இதே போல சிக்குவாளா தெரியாது இல்ல என்றவன் கைகள் அவள் இடையை உதடு கொண்டு வருட பச்சக் பச்சக் என்று மாதவன் உதடு அவள் நாபி சுழியம் உள்ளே இச் இச் வைக்க.. அவன் உச்சந்தலையை அழுத்தி கொண்டவள் கால்கள் கிடுகிடுவென நடுங்கியது..
அம்மம்மா புதுப் பெண் சிலிர்த்து சிலிர்த்து அடங்கினாள்..
என்ன சார் விளையாட்டு விளையாடுறீங்க... எழும்புங்க "
ம்ஹூம் என்றவன் நாவு அவள் நாபிக்குள் புகுந்து கொள்ள
ஸ்ஆஆஆஆஆ விம்மி வெடித்தது இதயக்கனி.. உதட்டை கடித்து கொண்டு முதல் முறை கூடல் அனுபவத்தை அவள் உடல் காண ஆரம்பித்தது
இத்தனை நாள் இவ்வுடல் கண்டது அத்தனையும் ரணம் தானே
மனதில் முழுக்க அவனை சுமந்த காதலி இன்று அவன் தொடும் ஒவ்வொரு தொடுகைக்கும் கூசி சுகத்தில் நெளிந்து தானாக உதடு கடித்து கண்ணை மூடி நிற்க அவன் இதழ் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி மேல் ஏறிட , தவித்து போய் உடலை உந்தி தள்ளிட அவள் அழகு இளமை அவன் முகத்தில் வந்து இடித்து நின்றது
இதோ அவன் உதடு பட்டு பச்சை தாமரை மலர போகிறது அதுவும் சுகம் காண போகிறது என்று அவன் அணைப்புக்கு அவள் ஆசையில் நிற்க மாதவன் பெட்டி உருட்டும் ஒலியில் கண்ணை திறக்க மாதவன் கதவு பக்கம் போய்விட்டான் ..
என்ன போயிட்டார்? என்று சிலிர்த்து அடங்கிய இடையை சேலை கொண்டு அவள் மூட
மேடம் சீக்கரம் வாங்க பஸ் போயிட போகுது என்று உதட்டுக்குள் சிரிப்பை அடக்கினான் ..
அவன் தொடுகை மற்ற ஓநாய் வேட்டையில் இருந்து வேறுபட வேண்டும் ... அவளுக்கும் எங்கேயும் வலி இருக்க கூடாது பூரணமாக அவனோடு வாழ அவனும் சிலதை தியாகம் செய்யத்தான் வேண்டும் ... மெல்ல மெல்ல சாவி கொண்டு தாம்பத்திய கதவை திறந்தான்...
ப்ச் அவ்வளவு தானா?? என்று அவனுக்கு கேட்காது அவள் முனங்கி கொண்டே, காவ்யா பின்னால் நடக்க வாசலில் புது கார் ஒன்று மாலையோடு நின்றது அதன் முகப்பில் காவ்யாமாதவன் என்று பெயரும் மினுங்கியது....
என்ன சார் புது கார் வாங்கிட்டீங்களா. என்று அவள் ஆசையாக அதை தடவி பார்க்க
"நாம வாங்கிட்டோம் "
"ஆமால்ல, ஏன் சார் அந்த கார் நல்லா தான இருந்துச்சு அதுவே நமக்கு போதுமே"
"ஆனா சிலதுக்கு கம்பர்டபுளா இருக்காது அதான் புதுசு வாங்கியாச்சு.. "
"ஓஓஓ எதுக்கு கம்பர்டபுளா இருக்காது என்று யோசனையாக நின்ற அவள் காதில் உதடு உரச சாய்ந்த மாதவன்
பஸ்ட் நைட் கார்லதான் என்று அவன் அவள் காதை கடித்து விட
அச்சச்சோ , என்று வெட்கத்தில் சிரித்த மனைவியை பார்க்க பார்க்க ஆசை வர வைத்தாள்..
"டேய் இப்போ என்ன அவசரம்னு, இந்த ஊரை காலி பண்ணிட்டு கொடைக்கானல்ல போய் வேலை பார்க்க போற" என்று ராகவ் வர ... இருவரும் விலகி நின்று கொண்டனர்..
"என் தங்கச்சியை எவனாவது ஏதாவது சொல்ல முடியுமா, நான் சொல்ல விட்டுடுவேனா என்றவன் சில நாட்கள் பழக்கம்தான்.. ஆனால் கூட பிறக்காத சகோதரி போல அவளை ஏற்றுக்கொண்டான் ..
உலகத்தில் நல்ல ஆண்களும் உண்டு ஏனோ இத்தனை நாள்கள் அவள் கண்ணில் படவில்லை... இப்போது ஒவ்வொருவராக அவள் கண்ணில் தென்பட்டனர்..
"எல்லாருக்கும் பதில் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது ராகவ், அதோட எங்களோட வாழ்க்கையை நாங்க வாழ ஆசைப்படுறோம் இதுல..
"நீ யாருடா பிளடி பிஸ்கட், வெளியே போடாங்குறியா
"நல்ல வேளை, நீயே புரிஞ்சுகிட்டியே..
"என்ன சார் நீங்க ,அண்ணனை போய் இப்படி பேசுறீங்க ..காவ்யா கணவனை கடிய
"இதெல்லாம் எங்களுக்கு பழகினதுதான் தங்கச்சி நான் அவன கழுவி ஊத்துவேன்.. அவன் என்ன ரொம்ப மட்டமா கழுவி ஊத்துவான்.. அப்படி ஒருத்தர ஒருத்தர் வாரி விட்டுக்கிட்டாதான் அந்த நாளே எங்களுக்கு சிறப்பா அமையும்...
சரிதான்
விடியறதுக்கு முன்னாடி கொடைக்கானல் போய் சேருங்க பார்த்துப் போங்க ...நான் ஒரு வாரம் கழிச்சு மதன அங்க கூட்டிட்டு வரேன் என்று ராகவ் கூறவும் இருவரும் ஆமோதிப்பதாக தலையாட்டி காரில் ஏறி தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கினர்..
ரணம் மாறியது வாழ்க்கையும் அழகாக மாறியது..