மீளா 2

Mila2

மீளா 2


2 மீளா காதல் தீவிரவாதி!!

குழலி அவன் விட்டு போன இடத்திலேயே நின்றாள் வாய் இருந்தும் ஊமையவள் என்றுதான் கூற வேண்டும் .. தெரிந்த ஐந்து வார்த்தைகள் அப்பா, பசிக்குது, வலிக்குது , சரி, இல்ல..இதுதான் அவள் பேச்சு ... படையோடு போனவன் ஒத்தையாக உள்ளே வந்தான் .. திருமண விருந்து வைத்திருப்பான் போலும் புரோட்டோ வாசமும் , குவாட்டர் வாடையும் குப்பென்று காற்றில் வந்தது .. இருட்டில் மனைவி சிலை நிற்கவும் .. கண்களை கசக்கி அவளை பார்த்த மருது..

"இந்தா, இங்கன என்ன பண்ணிக்கிட்டு இருக்க" என்று மனைவி நிற்கும் இடம் நோக்கி மருது வர... பதில் சொல்லாது அவளோ கண்ணை கண்ணை மலர்த்தி படபடத்தாள்..

"கிளி போல இருப்பன்னு சொன்னானுவ,  உனக்கு பேச வராதுன்னு சொல்லவே இல்ல,   சவம் அதுவும் சரிதேன் ,புளுபுளுன்னு பேசினா ,காது வாக்குல இழுத்துபுடுவேன்..   நீ இப்படியே இருக்கிறது நல்லத்துக்குத்தேன் , அடி குறைச்சி வாங்குவ .. மழையில குளிக்கிறியா குளி குளி,  குளிச்சி நல்லா மணமா உள்ளாற வா" என மணிக்கட்டில் கட்டியிருந்த பூச்சரத்தை முகர்ந்து பார்த்தவன்,  அதே கிறக்க கண்ணோடு குழலி அருகே காலெடுத்து வைக்க .. அவள் கால்கள் தன்னால் அவன் பார்த்த பார்வையில் சில்லிட்டு பின்னால் வைத்தது ...அவள் தோளை பிடித்து உலுக்கி நிறுத்திய மருது , அவளை நோக்கி குனிந்து..

"இப்படி சோவியை உருட்டி வுட்ட கணக்கா முழிச்சா என்ற மூளைக்கு ஒன்னும் எட்டாது .. கேட்டா ம் ,ம்ஹூம் னு பதில் வரணும் புரியுதா?"

"ம்ம் சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளை அவள்" என்று இன்னும் மருது அறியவில்லை ..

"அடடே !!உன் குரலு கூட தேனாத்தேன் இருக்கு .அப்போ ஊமை இல்லையா கண்ணு ...

"ம்ஹூம் " தலையும் சேர்ந்து ஜிமிக்கி கம்மல் தலையோடு சேர்ந்து ஆடியது ... ஜிமிக்கையை விரலில் சுண்டி விட்டவன் ..

"உனக்காகதான் கண்ணு நான் கன்னி கழியாம  38 வருசம் காத்து கிடக்கேன்' ,சாதனை போலவே சொன்னான்...

"ம்ம் .."அதுக்கும் ம்ம் தான் போனது, இந்த காட்டான் அருகே நிற்கவே உதறுகிறது, வேற என்னத்த பேச சோ ம்ம் சேப் என அதை பிடித்து கொண்டாள்..

'என்ன ம்ம், வா கன்னி கழிய வை "என்று குனிந்து அவளை தொடையோடு கைவிட்டு தூக்கி கொண்டு வீடு நோக்கி நடந்தான் .. அவன்தான் சொல்லிட்டானே .. நான் சொன்னது செய்யல அடி விழும்னு அப்படியே கிடந்தாள்.. கன்னி எப்படி கழிக்கணும் சொல்லும் மன்னா!! சிறப்பா கழிச்சிடுறேன்..  அவள் அறிந்தது கண்திருஷ்டி கழிப்பு மட்டும்தான் , அதுல ஏதாவது ஒரு வகையாதான் இதுவும்  இருக்கும்..  சட்டு புட்டுன்னு கழிச்சு போட்டுட்டு தூங்கிடணும் என்பது போல குழலி பார்வை அவன் கண்கள் மீதுதான்...

உலகம் அறியா அறிவிலி , உறவு நிலை எது என தெரியா ஈனப்பிறவி, வாயிருந்தும் பேசா மடந்தை , சொன்னது கேட்கும் கிள்ளை , வலித்தாலும் அழத்தெரியா ஆறறிவு ஜீவி.. வாழ்க்கை என்னவென்று புள்ளி கூட அறியா அவளும்..  

பெண் பார்த்து பழக்கம் இல்லை,  இல்லறம் பற்றி யாமரியேன் பராபரமே,கொண்ட கொள்கைக்கு திருமணம் , யார் மனம் பற்றியும் அறியும் அவா இல்லை , விருப்பம் பற்றி விளக்கம் இல்லை , கணவன் மனைவி நிலை எது கேட்டு தெளிவு பெறவில்லை .. கொண்டவள் அவன் இதயம் என தாம்பத்திய அடிப்படை தெரியாது அவனும் இணைந்தது யார் செய்த குற்றமோ?? (வேற யாரு நாங்க செஞ்ச குத்தம்தேன், உன்னைய நம்பி கதை படிக்கோம்ல )

ஒரு பக்கம் தெளிவு இருந்தாலே நாம தெளிய விட்டு தெளிய விட்டு அடிப்போம்,  இங்க இரண்டு பக்கமும் குறை அறிவு வசமா வச்சி செஞ்சிட மாட்டோம்...இப்படிக்கு, இந்த மாதிரி முட்டா பீஸ் காம்போ எப்பவும் கிடைக்காது ,கிடைக்கும் போது திருப்தியா கொளுத்தி போட்டு திருப்தி அடையும் சங்கம் ..

குருடி கையில் ஓவியமும் ,
முடவன் காலில் சலங்கையும் எதற்கும் பயன்படாது?

இங்கனதான இருக்கும் என குழுலியை கையில் வைத்து கொண்டே மருது எதையோ தேடி எடுத்து...

"இந்தா இருக்குல்ல "என்று குனிந்து கைவிட்டு ஒன்றை உருவ , அஃது பாம்பு...

ஆஆஆஆஆஆ என்று அவள் பயந்து மருதுவின் தோளில் முகத்தை புதைத்து கொண்டாள்..

"பயந்திட்டியா கண்ணு,   நம்ம சிநேகித பயதான் போன வாரம்தேன் குட்டி போட்டிச்சு, சடவு போல அதேன் நம்ம வீட்டுக்குள்ளாற  வந்து நிதமும் படுத்து ஓய்வெடுத்துட்டு டான்னு  காலமற வெளியே போயிடும் ..." என்று அதை தூக்கி கொண்டு வெளியே பத்திரமாக விட்டுவிட்டு வந்தவனை விட்டு அவளை பிரிக்க முடியவில்லை ..அவன் அர்னால்ட்  பேபி ,இவள் தயிர்வடை பேபி செட் ஆகுமா?குழலி கண்களை சிக்கென்று மூடி கொண்டே உதடோ கடவுளை தேடி முணுமுணுக்க ..

"காப்பாத்து காப்பாத்து" என்று அவன் தங்கச்சங்கலியை பிடித்து கொண்டு குழலி உளற.. அவன் கருவெளி காட்டு ரோம நெஞ்சில் சில்லென்று தீணடியது, இளஞ்சிவப்பு நிற நாகம்..  அதன் குளுமை விஷம் சட்டென்று அவன் உடல் முழுவதும் பரவ , ஏறிய விஷம் என்னவென்று காண மருது குனிந்து அவளை பார்த்தான் ...

எதற்கும் வியக்கா மருது விழிகள் வியந்ததுவே , அவள் விழி நயனம் கண்டு ஆசை மண்டியிடும் முன்,  அவன் மீசை மண்டியிட்டதுவோ? முறுக்கிய மீசை நீர் பட்டது போல அவள் நோக்கி தாழ குனிந்தது ...

வண்ணம் தெளிக்காத கருப்பு வெள்ளை ஓவியம் அவள்.. வென் உருவம் ,அதில் கருப்பு நிற கண்களில் மையல் கொண்டு மரணம் அடைய தோன்றும் சிவந்த சிற்பி இதழ் இரண்டும் காமத்துப்பால் வடிக்க தோன்றும் .. நீள் கழுத்து அதில் அவன் தாலி விமோச்சனம் பெற்று, அவள் மேட்டு குவியலில் பதுங்கி கிடந்த புது பொன் தாலிச்சரடு அவன் தொடும் முதல் உரிமையை அது வாங்கி கொண்டதுவோ .. கோவம் கொண்டு முரடன் அதை விரலில் தட்டிவிட அவள் விரலே படா இடத்தில் ஆண் விரல் தொடவும் பதறி அவனை பார்க்க...

"நல்லா கண்ண கண்ண உருட்டு, அழகாத்தேன் இருக்க.. என்ன ஆளுதேன் கட்டையா இருக்க இன்னும் அவளை இறக்கி விட்ட பாடில்லை..  வேட்டியில் போட்டு தொட்டில் கட்டி விடுவான்போல அவன் ஓங்கி உயர்ந்த உருவத்துக்கு அவள் சுண்டெலி சைஸில் கிடக்க இவனுக்கு  குறைக்கண்டு பிடிக்க ஏதுவாக இருந்தாள்..

"உடம்பு இல்லை , ஓவர் கலரு , முடி நீளம் இல்லை சவத்தை போ, என்னவோ உனக்கு லக்கு அடிச்சி கிடந்திருக்கு , மருது கிடைக்கணும்னு..  குளிச்சிட்டியா என்ன?  "என்று மாடி படியில் ஏற ஆரம்பித்தான்...

டேய் எடுபட்டவனே கேள்வி கேட்டா அதுக்கு பதில் வருதா பாருடா,  நீ பாட்டுக்கு போயிட்டே இருக்க அவன்தான்  பேச்சை குத்தகைக்கு எடுத்திருந்தான் குழலி எல்லாத்துக்கும் கண்ணை உருட்டினாள், இல்லை தலையை டங்கு டங்கு என தலையை  ஆட்டினாள்...

குளிச்சிட்டியா என்றான்  மொட்டை மாடியில் அய்யோ பாவம் என அவளை இறக்கி தரையில் விட்டபடி .. சிலு சிலு காற்று அவள் கட்டிய புடவை மீது பட்டு குளிரில் ஓண்டினாள்... ஈரம் வடிந்த புடவையும் கலைந்த முடியும், இதழ் கூட அந்த இருளில் அவன் மூடி வைத்திருந்த மோகப்பந்தலுக்கு நீர் ஊற்றியது...

இந்தா உன்னைத்தான் கேட்டேன் குளிச்சிபுட்டியா...

ம்ம்.. என்றவளிடம் ஒரு நாத்தம் பிடிச்ச போர்வையை தூக்கி அவள் அருகே வீசினான் ..  கடைசியா எப்படா துவைச்ச ? முதல்ல வாங்கியதிலிருந்து துவைச்சிருக்கியா..  அவள் அப்படி கேட்க முடியுமா என்ன? போர்வையை வைத்து கொண்டு அதை போர்த்தவும்  முடியாது வீசவும் முடியாது  மருதுவை நோக்கிட..

"எப்போ குளிச்ச ? என்று அவனே வாங்கி போர்த்தி விட்டாச்சு .. 

"காலையில"  என்றாள் அவன் தந்த போர்வையை  அணைவாக பிடித்து மூடியபடி.. அவளுக்கு ,தான் பேசுவது புரியவில்லை என,லேட்டாக அறிந்தவன்

"ப்ச் அதை கேட்கலடி ... கடைசியா எப்ப குளிச்ச? விரைந்து குரல் வர இவள் உடல் குலுங்கி நின்றது ...

மருதுவோ அடுத்த வேலைக்கு போயாச்சி இன்னைக்கு முதலிரவு கொண்டாடியே ஆகணும் .. பாயை விரித்து போட்டு, பாடாதி தலையணையை தேடி தூசி தட்டி அதில் வீசி.. தன் பட்டன் போடா சட்டையை கழட்டி போட்டுவிட்டு அக்கடா என காலை கையை விரித்து படுத்து கொண்டு,  குழலி கையை பிடித்திழுக்க அவன் இழுத்த வேகத்தில் நஞ்ச் என்று போய் அவன் மார்பில் விழுந்தாள் ..அவனுக்குமே இது எல்லாம் புதுசாதான்    பெண் வாசம் இதுவரை நுகர்ந்து பார்த்த நியாபகமே இல்லை,  அவ்வளவு ஏன் பெண்ணின் அமைப்பு இது என யாரையும் நோக்கியது கூட இல்லை..  குழலிதான் தன் மனைவி என்று மனதில் ஆழமாக பதிந்து போக மாற்றுப்பெண் முகம் கூட கண்டது இல்லை காணப்போவதும் இல்லை,  எதில் எப்படியோ பெண்கள் விஷயத்தில் மருதுபாண்டியன் நெருப்பு ...

"அப்படின்னா? "இது பற்றி இன்னும் யாரும் அவ்வளவாக விளங்கவில்லையே?இந்த சுடுகாட்டில் எவனை தேடி அர்த்தம் கேட்க, பேயை எழும்பிதான் ஹாய் போடணும் .. வழியில்லாது மருதுவிடமே கேட்டு விட்டாள்.. அவன் முகம்  பார்க்கும் முதல் பெண் அவள் ..  தன் மேல் கிடக்க சங்கடமாக நெளிந்த புள்ளப்பூச்சி மனைவியை இழுத்து அணைத்து கொண்ட மருது ...

"அப்படின்னா??" என்று அவள் காதில் கிசுகிசுவென கூறிட... இன்னும் அவளின் விழியில் செயல்பாடு கூடி போனது .. இதை ஏன் தன்னிடம் கேட்கிறான்.. வயிற்றில் மெட்ரோ ரெயில் ஓடியது ... 

இப்ப புரிஞ்சுதா?...

"ம்ம் ... இது இரண்டாம் முறை ," முடிச்சிட்டா திக்கி திணறி  பதில் போக சட்டென்று அவளை  விட்டு தள்ளி படுத்தவன்...

"இந்தா நான் தொடுறதுக்கு முன்ன இதெல்லாம் சொல்றது இல்லையா" ... அவளுக்கே இப்போதுதான் தெரியும் பல ஷாக் நிகழ்ச்சியில்  அதுவும்  சோதிக்க வந்து விட்டது .. 

"நீங்க என்ன கேட்டீங்கன்னு புரியல ", வார்த்தை ஒவ்வொன்றாக கோரத்து பேச பழகினாள்..

"என்னத்த புரியல, புருஷன் எதுக்கு கூப்பிடுவான்னு தெரியாது... "

"அவளுக்கு எதுக்கு கூப்பிடுவான் ?"என கேட்க தோணல் உண்டு..  பட் கேட்டு கீட்டு வச்சி தூக்கி கிடாசிபுட்டா பாசமாக இருந்த தந்தை இப்போதுவரை எட்டி பார்க்க வரவில்லை,  இவனிடம் வந்தது வந்ததுதான் குழலிக்கு புரிந்தது .. அதுவரை சாலச்சிறந்தது ... அவள் முழி கண்ட மருதுவுக்கு எரிச்சல் மண்டி போனது ..

"உன்னைய தூக்கிட்டு வந்து பூப்போட்டு பொன்னா பார்க்கவா ?பொஞ்சாதின்னா  என்ன தெரியுமா ?காலையில இந்த வீட்டை பாரத்த்துக்கணும்,  ராவு என்ன பார்த்துக்கணும் மனம் கோணாம கேட்டது தரணும் குறிப்பா , என்ற முன்ன தலை தூக்கிப் பார்க்க புடாது , இந்த வீட்ட   விட்டு வெளிய போவ கூடாது .. அத்தனை வேலையும் நீ ஒருத்திதான் செய்யணும்..  நகை பட்டுச்சீலை இல்லாம நடமாட கூடாது ,  என்ற பொணடாட்டி எப்பவும் தங்கமும் பட்டிலேயும்தானா அலையோணும் ஆனா நான் வாங்கிட்டு வந்த அடிமை நீ புரியுதா?

ம்ம்...

"ப்ச் ஏற்கனவே எத்தனை ஆசை வந்தாலும்,  உன்ன கூட மட்டும்தான் படுக்கணும்னு காவி வேட்டி கட்டி ஈரத்தூணி போட்டு படுத்தா,   இப்பவும் முடியாதுன்னு முழிக்கிற .. போய் தொல "என்றான ஆசையை தீர்க்க இடம் இல்லாது ... இயற்கை பிரச்சனைக்கு அந்த புள்ள என்ன செய்யும் மிரள மிரள பார்த்து வைத்தாள்...

இனி இந்த மாதிரி நேரம் என்ற முன்னாடி வரபுடாது போ தனியா போய் படு,  நாலு நாள் கண்ணுல படாதே என்று தலையணையை தூக்கி அவள் மீது வீச , தூக்கி கொண்டு எங்கு போக என தெரியாது குழலி நிற்க..

"கீழே புறக்கடையில போய் கிட "என்று குப்புற படுத்து கொண்டான்...

இன்னும் அறிவொளி வெளிச்சம் படா கிராமத்தான்.. அவன் கண்ட பெண்குலம் இப்படித்தான் ஆண்களால் ஓடுக்கப்பட்டு இருட்டறையில் அடைக்கப்பட்டது, அவனுக்கு தவறாக தெரியவில்லை ... எல்லா புருஷனும் எப்படியோ அப்படியே மருதுவும்... லவ் பண்ற வயசு போயாச்சு, அதனால் அந்த சேப்டர்  பக்கம் போக போறது இல்லை,  எல்லா பொஞ்சாதியும் இந்த டைம்ல எப்படி ஒதுங்கி இருக்கணுமோ அப்படியே இவளும் சிம்பிள் முடித்து விட்டான்.. 

ஆசைக்கும் அணைப்புக்கும் மட்டும் மனைவி என்று பண்பாட்டில் ஊறி போனவன் அவனிடம் எதை எதிர்பார்க்க,

நாலு நாள் பார்க்க கூடாது என்பதை கவனமாக காதில் வாங்கி கொண்டாள் ...இறங்கி கீழே போய் மருது சொன்ன  இடத்தில் சுருண்டு கொண்டாள்...

அவளுக்காக எதற்காக ஆண்விரதம் காத்தோம் என்பதை அவனுக்கு நினைக்க தோன்றவில்லை..

பெண் இனம் எப்போதும் அன்புக்கு அடிமை அன்றோ? அவளுக்கு எஜமான் வேண்டுமாயின் மருதுவால் ஆக முடியும்..  மனதை ஆளும் அரசன் ஆவது கூடாத காரியம் ..