மீளா 1
Mila1

1மீளா காதல் தீவிரவாதி!!
அமேசானில் முழு கதையக படிக்க கீழ் உள்ள லிங்கை தொட்டு படிக்கவும்
உசிலம்பட்டி ஊராட்சி!!
ஊர் கல்யாண மண்டபம் நிரம்பி வழிந்தது.. கறியும் சோறும் என அண்டா அண்டாவாக நெஞ்சுக்கறியில் மிதந்தது ...
டூப் டூபுவென புல்லட் சத்தம் கேட்டு ஒருவர் முகத்திலும் ஈ ஆடவில்லை..வந்தவன் ரத்தம் குடிக்கும் கோத்திரமே, தூரத்தில் பைக்கில் வந்த அவனை கண்டு இதயம் குலுங்கி நின்றது மெய்...
எல்லாரும் விலகி நில்லுங்கலே, சாமி வண்டி வருது என்று ஒருவர் ஓடிவந்து கூட்டத்தை விலக்கி வருபவனுக்கு வழி அமைத்து கொடுக்க ,நாலு பேர் புல்லட்டின் முன்னால் ஓடி வந்தனர்...
அச்சோ இவனா?
இவரா?
இவன் வந்த இடம் உருப்படாதே, கடவுளே என்ன நடக்க போகுதோ? என்று கூட்டம் சிதறி நகர்ந்து வழி கொடுக்க.. அவர்கள் முகத்தில் தெரிந்த பீதியில் திருப்தியாக கண்களை சுருக்கி பார்த்து கொண்டே வண்டியை நிறுத்தி, கருந்தேக்கு தொடை தெரிய காலை எடுத்து நிலத்தில் வைத்தான்.. தன் முட்டு வரை நீண்டு கிடந்த கையை நீட்டி நிமிர்ந்து, நெட்டி முறித்து, கழுத்தில் கிடந்த பொத்தை செயினை இழுத்து விட்டுகொண்டு, மறதியாக போட்டுவிட்ட சட்டை பட்டனை கழட்டிவிட்டபடி மார்கண்டேயன் போல தரை குலுங்க நேர் வழியில் நடக்க..அவனை நோக்கி ஒரு நடுத்தர வயது உடையவர் ஓடி வந்து...
அய்யா குலசாமி !!என் குலத்தை கெடுத்துப்புடாதீக என்று அந்த அசுரனின் காலை பிடித்து தொங்க .. அவன் தொங்கிய காலை அசால்டாக நகட்டி கொண்டே நடக்க ஆரம்பித்தான்.. அவனுடைய பார்வை, இலக்கு எல்லாம் மணமேடையில் அமர்ந்திருந்த அந்த வென்தாமரை மேனகை மீதுதான் .. வெட்டி பிளந்தது போல அதரம் கீழே வடிவாக இருந்த ரெட்டை நாடி அவன் கொண்ட இகழ்ச்சி சுளிப்பில் குழிந்து நிமிர்ந்தது ... கருத்த இதழ் எதையோ முணுமுணுக்க அப்பெண்ணை பார்த்தான்..
மணப்பெண்ணா? என்று கேட்டால் ,ஆயா மேல சத்தியமா இல்ல, இன்னைக்கு அந்த புள்ளைக்கு சடங்கு கழிக்கிறாங்க .. எப்போ எப்போன்னு ஏங்க வைத்து 20 வயதில் அப்பாடா குத்த வச்சிட்டா என பெருமூச்சு விட்டு ஊரையே திரட்டி முனியன் மகளுக்கு சடங்கு எடுக்கிறார் ... அந்த வளர்ந்து கெட்டவனஂ காலில் இப்போது ஆணியில் மாட்டிய காலெண்டராக தொங்குவதும் அதே மூக்கையன் தான்...
அய்யா!! சொன்னா கேளுங்கய்யா என்ன வேணும்னா வெட்டி ,இதே இடத்தில போடுங்க.. அது வாயில்லா புள்ள என்று கண்ணீரை வடிக்க.. அந்த வாயில்லா பூச்சி மாலை நடுவே நசுங்கி, ஆள் எங்க? மாலைதான் இருக்கு என மைக்ரோஸ்கோப் வைத்து தேடும் அளவிற்கு உண்மையாகவே பட்டுப்பூச்சி சைஸில்தான் மாலைக்கு உள்ளே கிடந்தாள்.. கண்கள் மட்டும் பயம், மிரட்சி, தவிப்பு என மாறி மாறி காட்டியது .... மேடை அருகே போனவன் காலை தூக்க அப்போது தான் பாரம் உணர்ந்து கீழ் குனிந்து பார்த்தவன்..
தூ தேரிக்க!! மருது காலை தொட உனக்கு என்னலே யோக்கியத இருக்கு _பயலே என்று செருப்பு காலால் அவரை எட்டி உதைக்க..
அப்பா ஆஆஆஆ என்று அலறி கொண்டு அந்த பெண் பாரம் தாங்காது மாலையை கழட்டி போட்டு விட்டு வெள்ளி கொலுசு சினுங்க மேடையை விட்டு இறங்க போக.. வானம் பார்த்து முறுக்கி விட்டிருந்த மீசையை தடவி முறுக்கியவன் மேடையில் தாவியேறி அவளை ஒற்றை கையில் தூக்கியவன்...
அப்பா இல்லை கண்ணு , மாமேன் சொல்லு என்றவன் குரல் கூட அவள் ஈரக்கொலையை நடுங்க வைத்தது ..
அப்பாவுக்கு டாட்டா சொல்லு கண்ணு ,நாம நம்ம வீட்டுக்கு போவோம் .. மாமா இத்தனை நாள் நீ சமையதான் காத்து கிடந்தேன், வா போவோம் என்று பட்டுசேலையில் நதியில் மிதக்கும் படகாக சலம்பி நின்றவளை தூக்கி தோளில் போட...
அய்யாஆஆஆஆஆ விட்டிருங்க என்று மறுபடியும் முனியன் வந்து, அவன் காலை பிடிக்க போக அவன் பார்த்த பார்வையில் கையெடுத்து கும்பிட்டு...
விட்டுருங்கய்யா...
விடவா இம்புட்டு வருஷம் ,கருப்பு வேட்டி கெட்டி காத்திருந்தேன்.. இவ இந்த மருது பாண்டியன் பொஞ்சாதின்னு இங்க எழுதி போட்டு, நாளாவுது யாருலே அங்க , எவனாவது ஆட்டம் காட்ட நினைச்சானுவ கைவேற ,காலை வேறையா வகுந்து போடுங்கலே என்றவன் திமிரி ஓட தயாராக அவன் தோளில் புழுவாக துடித்தவள், முதுகில் சுள்ளென்று ஒரு அடி போடட மருது..
பொட்டக்குமரி, புருஷன் பேசிட்டு இருக்கேன் துள்ளிக்கிட்டு கிடக்க, மூச் சத்தம் வர கூடாது, படு ... என்று அவன் போட்ட ஒற்றை அடியில் மூக்காலமும் மறந்து போய் அப்படியே தலை தொங்கி விழுந்தாள்...
உன்ன மக பேர் என்னவோ சொன்னியே, என்னலே அது ..
பொன்குழலி ....
ஹான், ஏலேய் கல்யாண பத்திரிக்கையில் திருவாளர் மருதுபாண்டியன் அவர்களுக்கும், செல்வி பொன்னிக்கும், வரும் ராவு காலத்தில் திருமணம் மருதுவால் நிச்சயிக்கப்படுகிறதுன்னு பத்திரிக்கை அச்சு போட்டு ஊர்க்காரன் வீட்டு வாசல்ல போடு , ஒரு பய கல்யாணத்துக்கு வர புடாது.. வந்தீய , அத்தனை பொம்ள கழுத்திலையும் தாலி தொங்காது என்று துள்ளி வேட்டியை கட்டிவிட்டு வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தான்...
மருது பாண்டியன்..வயது 32
இந்த ஊருக்கே நரகாசுரன், அவன் அழியும் நாளே அவர்களுக்கு தீபாவளி... பதினெட்டு வருடம் கழித்து இந்த ஊருக்குள் வருகிறான் .. ஆனால் ஒவ்வொரு நாளும் அவன் முகம் பார்த்தே ஊர் விடியும், அடையும்.. சர்வாதிகாரி ஹிட்லர் எப்படியோ அப்படியே இந்த மருது பாண்டியனும் , ஊருக்கு வெளியே இருந்து கொண்டே அலற வைப்பான், ஓட வைப்பான்.. இதோ இன்றும் வந்தவன் முகாந்திரம் இல்லாமல் வரவில்லையே... அன்று பொன்னி பிறக்கும் போது வருவேன் காத்திரு என கூறி போனவன் இன்று அவளை கொள்ளையிட்டு போகத்தான் வருகிறான்..
அவன் கொள்ளையிட்டு போனது பொன் அல்லவே பொன்னி நதி!! ஈரம் சுரக்கா கற்பாறை மனமதில் காதல் ஊற்று ஊறச்செய்வாள் பொற்கொடியாள்..
புல்லட் அந்த குண்டும் குழியான ரோட்டில் டூபுடூபுவென சத்தத்தோடு போக அவன் தோளில் துண்டாக இன்னும் பொன்னி கிடந்தாள், மருது இரண்டு கையையும் ஹேண்ஃபரில் பிடித்திருக்க .. அவள் வெளவால் தொங்குவது போல மருதுவின் தோளில் கிடந்தாள்.. குலுங்கிய குலுங்கலில் மெல்ல கண்களை திறந்தாள் ..
நாலு அறை மட்டுமே பார்த்து வளர்ந்து, இன்றுதான் ஊரை பார்க்கிறாள் பத்து வயதில் ஊர்திருவிழாவுக்கு பல்லகக்கில் வைத்து இளவரசி போல வெளியே அழைத்து வர பட்டாள் ..என்ன நடந்தது ?தெரியாது.. ஆனால் அதன் பிறகு அவள் பாதம் கூட வெயில் பட்டது கிடையாது ...
இதுவா என் ஊர் என்று பார்த்தவளுக்கு பரிதாபம்தான் மிஞ்சியது, பல வருடங்களுக்கு முன் செல்வம் கொழித்த பூமி , நீரோடைகள், விவசாயம் வயல்வெளி என வளங்கள் செழித்து கிடந்த சொர்ண பூமியா இஃது...
ஊரெங்கும் எங்கு காணினும் வறட்சி, மழைக்கு வானம் பார்த்து வெடித்து கிடந்த விவசாய நிலங்கள் , சாபநிலமாக உவர் மணலாக வாழ்க்கை ஆதாரம் இன்றி கையறு நிலையில் நிற்கும் ஊர் மக்கள் .... இடிந்து கிடக்கும் வீடுகள் என்று ஊரே சுடுகாடு போல் அல்லவா காட்சி தந்தது...
இத்தனைக்கும் யார் காரணம்?என்று பெருமூச்சு விட்டவள் நாசியில் ஜவ்வாது மணம் நுழைய அப்போதுதான் தனக்கு நடந்தவை உணர்ந்து தலையை உருட்டி மணம் வந்த திசைப் பார்க்க ,மருதுவின் மீசையும், அடந்த கேசமும் அவள் கன்னத்தில் உரசி போனது ... அவன் கவனம் காதில் இடுக்கிய மூன்றாம் கரத்தில்..
ஜோசியர் என்ன சொன்னாருலே..எப்ப ராகுகாலம் தொடங்குதாம்..
ராவு அண்ணன்...
அப்போ அப்பவே வச்சிபுடுவோம்ல...சமைஞ்ச அன்னைக்கே தூக்கி இருக்கணும், சரி அதுக்கு என்னலே அன்னைக்கு தூக்கிட்டு வந்திருந்தாலும் இவள வச்சி ஒன்னும் செஞ்சிருக்கீங்க முடியாதுல நாற்பது நாள் கெதி ஆக்கி ,அப்பறம் ____லி பார்க்க முடியும் அதுக்கு இதுவும் சரிதேன் என்று கூறி மீசையை திருக ....குழலி தன் அருகே தெரிந்த அவன் முகம் பார்த்தே சாகும் நிலைக்கு போய்விட்டாள்...
ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் சாமி படம் இருக்கிறதா? தெரியாது!! ஆனால் மருது பாண்டியன் படம் இருக்கும் .. பூஜை அவனுக்குதான் பண்ண வேண்டும், பண்ணி ஆக வேண்டும் , நல்லது கெட்டது அத்தனையும் அவன் நினைத்தால் மட்டுமே சாத்தியம் இந்த ஊர் மொத்தமும் மருதுவின் சுண்டு விரலில் ,அவன் தலையாட்டினால் மட்டுமே ஊர் எல்லைவாசல் திறக்கும் ... அவனை தாண்டி ஊரை விட்டு ஒருவர் கூட வெளியே போக கூடாது ,வரவும் முடியாது வந்தால் அவன் உயிரோடு போகவும் விட மாட்டான் .... சத்தமில்லாது அவன் தோளில் கிடந்தாள்... உயிர் பயம் இல்லாமல் இருக்குமா? ஏன் எதற்கு என்னை ஏன் இவன் தூக்கி கொண்டு வருகிறான்... எதற்காக என்னை பொத்தி பொத்தி வைத்தார்கள் .. உலகம் ஏன் எனக்கு மறுக்கப்பட்டது , ஒன்றும் புரியவில்லை ... சிலுசிலுவென தென்றல் காற்று அவள் கார்குழலை தொட்டு போக கண்களை ஆச்சரியமாக திறந்தாள் ... என்னே அழகு!!, சற்று நேரத்திற்கு முன் பார்த்த இடம் எங்கே போனது என்பது போல ஒரு அழகான ஊரை அவன் வண்டி அடைந்தது ...
மருதூர் !!
அவனுக்காக அவன் ஒருவனுக்காக, அவனே உருவாக்கி கொண்டே ஊர் மருதூர்....
அழகிய மலையடிவாரம்...நெல் நாற்றும், சூரிய காந்தி மலர் தோட்டமும், தென்னை மரங்களும் அதன் நடுவே கீரை பாத்திகளும், மா, கொய்யா பலா என பழ ரகமும் என்று பார்க்கவே அத்துனை ரம்மியமாக இருந்தது .... வெள்ளி ஓடைகள் அதில் குதித்து ஓடும் தங்க மீன்கள் .. புல்வெளியில் குதித்து தாவும் முயலினங்கள், தானியத்தை கொத்தி தின்னும் மயிலும் ,புறாவும் நந்தவனம் போல அழகோ அழகு....மருது இடம் வந்ததும் பிரேக் போட்டு புல்லட்டை நிறுத்த அழகை ரசித்தவள் தடுமாறி அவன் தோளை பற்றினாள்...
அடேடே!! என்ன கண்ணு முடிச்சிட்ட போல , இதுதான் நீ வாழ போற வூடு என்று அவளை அலேக்காக தூக்கி தரையில் விட்டான்...
பொன்பாதம் வைத்து அவன் அசுர உலகத்தின் உள்ளே காலை வைத்தாள்..
அவன் மனம் போலவே கல்லில் கட்டிய உறுதியான வீடு ... பொன்னி போக துணியாது நின்ற இடத்திலேயே நிற்க, மருது பின்னால் அவள் வராது போகவும் தலையை திருப்பி பார்த்தவன்...
பாரு கழுதை , எனக்கு பேசி எல்லாம் பழக்கம் கிடையாது ... என்ற கண்ண பார்த்து என்ன சொல்லுதேன், என்ன செய்ய சொல்லுதேன்னு புரிஞ்சுகோணும், இப்படி மசிஞ்சு மசிஞ்சு அங்கிட்டு இங்கிட்டு பறக்க பார்க்க புடாது, புருஷன் நான் முன்னாற போனா என்ற கால் போற பாதை சுடுகாடா இருந்தாலும் பின்னால வரோணும் புரியுதா..ம்ம் எட்டி நட என்று மருது பொன்னியை கூர்ந்து பார்த்த பார்வையில் வயிற்றில் கூடுதல் வலி எடுத்தது....
ம்ம் உடனே அழகு பொம்மையாக தலையாட்டினாள் அவளுக்கு அந்த தலையாட்டல் ஒன்றும் புதிது இல்லையே... அவளுக்கு தெரிந்த வார்த்தைகள் சில, உணர்வுகள் சில.. பூமியில் வாழும் ஒரு ஏலியன் குட்டி அவள்...
ஆனால் குழலிக்கு ஒன்று மட்டும் தெளிவு இல்லை , நான் என்னடா செஞ்சேன்..சுஜா கதையில ஆயா கேட்டகிரி கூட ஜம்முன்னு இருக்கு ,ஆனா இந்த ஹீரோயின்ஸ் படுற பாடு சொல்லி மாளாது ( முதல்ல அப்படி தான் இருக்கும் அதுக்கு பிறகு ஹீரோ சார் புலம்புவார்)
அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கும் அவன் எங்கே? தரையில் பாய் விரித்து படுத்து கிடக்கும் அவள் எங்கே , எதற்கு தன்னை மனைவியாக்க நினைக்கிறான், இன்னுமா இவனுக்கு கல்யாணம் ஆகல என்று யோசனைகள் எதுவும் அவளுக்கு வரலயே மக்கா, மூளைக்கு பாத்தி கட்டி வச்சிட்டா போல , இப்போதைக்கு அது வேலை செய்யாது எனவே ஆதியும் புரியாது அத்தமும் தெரியாது பேக்க பேக்கத்தான் முழித்தாள் ... அங்கு ஒரு சுரங்க அறையில் கிடந்தாள், இங்கே ஒரு பாதாள அறையில் கிடக்க போகிறாள்.. அவ்வளவுதான் வித்யாசம் ... பட்டு பட்டு பழகி போச்சு சொம்பைகளா என்றுதான் நின்றாள்போல .... மருது கால் தடம் பார்த்து தன் கால் வைத்து நடக்க ஆரம்பித்தாள்.. சொன்னது செய்து பழக்கப்பட்டவள் உடனே பழகி கொண்டாள்.. அவன் பாதம் வைத்த இடத்தில் கவனமாக தன் பாதம் வைத்தாள், யானை பாதம் உள்ளே எறும்பு தடம் போல இருந்தது ...
சிங்காரத்துக்கு புல்லு போட்டாச்சா முனியா , கத்துது என்னன்னு பார்லே, என்று வழியில் நின்ற பசுவை வயிற்றை தடவி கொடுத்தவன்..
அரிசியை தின்னுபுட்டு போலலே, வந்து மருந்தை கரைச்சி ஊத்தி புடுங்க, அந்த கிடாவை தூக்கி பட்டியில போடு என்று வீட்டை சுற்றி நின்ற அவன் உறவுகளை ஒவ்வொன்றாக தடவி கொடுத்து கொண்டே மருது வீட்டை நோக்கி போனான்...
மனிதர்களை மனிதர்களாக மதிக்காத மருது, விலங்குக்கும், குருவிகளுக்கும் கூட தன் கூடாரத்தில் இடம் கொடுத்தான்.. அதுகளும் மருது தலை கண்டவுடன் மாஆஆஆஆ, கீகீ என்று அவனை தேடி ஓடிவந்தது ..
பூசாத கல் வைத்து கட்டிய வீடு பெரிய பெரிய இருட்டு அறைகள் வீட்டுக்குள் வேறு எதுவும் விசேஷமாக இருந்தது போல தெரியவில்லை , அங்கு இங்கு கொடியில் தொங்கிய மருது வேட்டி சட்டை , அண்டர்வேர் இனங்கள், கண்ணாடி மீது கழட்டி போட்டிருந்த தங்கச்சங்கிலி,சோத்துக்கு என்னடா பண்ணுவீங்க என்பது போல துடைச்சு வச்ச மண் அடுப்பு கொத்தனார் வச்சி கட்டிபுட்டார் இல்லை அதுவும் இருந்திருக்காது , வீட்டைச்சுற்றி தொழுவம் , வயல் ,வரப்பு என்று முற்றிலும் ஒரு கிராமத்தான் வீடு ... மருது பின்னால் அந்த வீட்டுக்குள் காலை வைத்து உள்ளே போனாள் .. அதன் பிறகு யாரும் அவளை கண்டுகொள்ளவில்லை ...உட்கார்ந்த இடத்திலேயே பயந்து அமர்ந்திருந்தாள்... போனவன் போனவன்தான்.. பசி வேறு வயிற்றை கிள்ள வயிற்றை தடவி கொண்டு, வழக்கம் போல வாசல் பார்த்து அமர்ந்திருந்தாள் .. மூன்று நேரமும் அறை தேடி உணவு வருமே இன்றும் அதே நேரத்தில் பசி எடுத்தது ஆனால் உணவு கொடுக்க தகப்பன் இல்லையே ... என பெருமூச்சு விட்டு சுவற்றில் தலை சாய்த்தாள்..
யாருக்கு என்ன பாவம் பண்ணினோம் ஏன் என் சிறகுகள் உடைக்கப்பட்டு போனது சுதந்திர காற்று எப்போதும் எனக்கு சொந்தம் இல்லையோ என அவள் பிஞ்சு மணம் ரணம் பட்டு கிடந்தது யார் அறிவார்??
கேட்டை திறந்து கொண்டு ஒருவர் உள்ளே வர .. சட்டென்று குழலி எழும்பி நின்று கொண்டாள்..வயதானவர் கைநிறைய பழங்கள், கிழங்குகள் கொண்டு வந்து அவள் அருகே வந்தவர்
அடி ஆத்தி , மருது சம்சாரம் வந்தாச்சு போல, உட்காரு உட்காரு என்று அவள் தலையில் ஆசிர்வாதம் பண்ணி சம்மணம் போட்டு அமர்ந்தவர்...
இந்தா பொன்னி சாப்பிடு..
ம்ம் உடனே வாங்கி பசியில் திங்க ஆரம்பித்து விட்டாள் அவருக்கு பாவமாகத்தான் போனது ...
லேய் ரெங்கா இவ ஜாதகம் கேட்டேனே , வந்ததா என்று வெளியே குரல் கொடுக்க , உடனே ஒருவன் ஓடி வந்து அவர் கையில் கொடுத்தான்...
ம்ம் என்று அதை திறந்து பார்த்து ஏதோ கணித்தவர்...
ஆண்டவா!! விதியை என்னவென்று சொல்ல?இருவரையும் காப்பாத்து ..
அவன் விதி இவளில்
இவள் விதி அவனில்..
என்று எழுதி முடித்திருக்க யாம் என்ன செய்ய இயலும்.. நடப்பது அவன் செயல் நடத்துவது இவன் செயல், என பெருமூச்சு விட ... டப்பிங் படம் பார்ப்பது போல அரண்டு போய் குழலி பார்த்து கொண்டிருந்தாள்... அவர் வெளியேறி போகவும்
குழலி உண்ட மயக்கத்தில் தரையில் படர்ந்து தூங்கி விட..
லேய் அந்த குத்தகை பணம் இன்னும் வரல என்று அரை கீலோமீட்டர் அந்த பக்கம் மருது குரல் தூக்கத்தில் கிடந்தவள் காதை அடைய அடித்து பிடித்து எழும்பி அமர்ந்தாள்... சற்று ஜன்னல் வழியே வெளியே எட்டிப்பார்க்க...
இரவு நிலவொளி வெளிச்சம் துணையாக, பயில்வான்கள் போல , பல ஆண்கள் புடைசூழ மீசையை தடவி சுருட்டி விட்டு கொண்டே மருது வந்து வீட்டு வாசலில் நின்று அவன் வருங்கால மனைவியை அழைத்தான்..
கண்ணு ஊஊஊஊ , அவன் சத்தத்தில் அரண்டு எழுப்பினாள்...
இங்கன வா என்ற மருதுவின் அழைப்பில்,உடனே வெளியே வந்தவள் மாலையும் கழுத்தாக நின்றவனை கண்டு கண்கள் சுழண்டு கொண்டு வந்தது ...
இந்தா இதை மாட்டிபுட்டு பின்னாடியே வா என ஒரு மாலையை எடுத்து அவள் மீது ஏறிய, அது சரியாக போய் அவள் கழுத்தில் விழுந்தது ..மாலை போட்டவன் நாலு எட்டு நடந்து போயாச்சி, இவள் மாலையின் கனத்தில் தடுமாறி தூணை பிடிக்க, இன்னும் அவள் வராது போகவும் மாலை கழுத்தோடு மருது திரும்பி பார்க்க ... குடுகுடுவென ஓடி போய் அவன் அருகே போய் குனிந்து நின்று கொண்டாள்... அவனை கண்கொண்டு பார்க்கவே உள்ளம் உதறியது ...
மருது நீ சொன்ன ராவு காலம் வந்துடுச்சிய்யா என்று ஜாதகம் கணித்த நபர் வயோதிபர் கூறவும்...
ம்ம் என்று உறுமி ,குழலியை இழுத்து கொண்டு போய் கல்லறை ஒன்றின் முன் அவளை கொண்டு நிறுத்திய மருது .. பாக்கெட்டில் தடவி தாலியை எடுத்து, ஏதோ முணுமுணுவென கூறி அவள் புறமாக திரும்பி தாலியை கட்டி நாலாவது ஒரு முடிச்சையும் போட்டவன்...
ஒழுங்கா இருந்தா வாழ்வ , இல்லன்னு வை இதுக்கு பக்கத்து எடம் உனக்குதேன் என்று நாக்கை மடித்து கடித்து விரலால் எச்சரிக்கை செய்தவன் .. தூக்கத்தில் முழிச்சி வச்சி புரோட்டோ தினுனு என கொடுத்தது போல மாலையை கழட்டி அவள் கையில் போட்டுவிட்டு .. காலால் வேட்டியை ஏத்தி கட்டிகொண்டு போக, அவன் பின்னாடியே அனைவரும் சென்று விட்டனர்...
கழுத்தில் மருது கட்டிய தாலியோடு, மழை சொட்டு சொட்டாக விழ எங்கே போகணும்? என்ன செய்யணும் எதுவும் தெரியாது ஒத்தையாக அந்த இருட்டாவது தனக்கு துணை வராதா என்று பார்த்து கொண்டிருந்தாள் பொன்குழலி...
அவன் தரிசு நிலம், அவள் தங்க நிலம் ... தரிசு நிலத்தில் தங்கம் விளையுமா??
விளைஞ்சா நாம எல்லாரும் பங்கு போட்டுக்கலாம் மக்காஸ் !!