மெய் பேசும் மித்தியமே-10

மெய் பேசும் மித்தியமே-10
சூர்யா தூங்கி எழுந்ததுமா அம்மாவையும் பூஜாவையும்தான் தேடினான்.
இரண்டுபேரும் இன்னைக்குத்தான் இந்த ஊருக்கே வந்திருக்காங்க எங்கப்போயிட்டாங்க என்று தேடித்தான் அழைத்துப்பார்த்தான்.
அவன் கூப்பிட்டதும் அப்படியே உடனே வெளியே வந்த லலிதாவைப் பார்த்ததும்தான் நிம்மதியானான்.
“பூஜா எங்கம்மா?”என்று கேட்டவாறே இறங்கி வந்தான்.
“பூஜா கீழ வீட்டுப் பொண்ணுக்கிட்ட இருக்காடா.அவளை இன்னைக்குத்தான் பார்த்திருக்கூ அவக்கிட்ட உடனே ஒட்டிக்கிட்டா.நான் கூப்பிட்டுப் பார்த்தும் வரல.அவக் கழுத்தைக் கட்டிக்கிட்டு வரமாட்டேன்னு அழிச்சாட்டியம் பண்றா”
“யாரு ரோஜாகிட்டயா இருக்கா?”
“ஆமா மயங்கி விழுந்துச்சே.நீ கூட்டிட்டுவந்துவிட்டியே அந்தப்பொண்ணுக்கிட்ட இருக்கா.அவக்கிட்ட இருந்து வரமாட்டுக்கா அழறா?”
“அவளுமா?”
“என்னடா?”
“ஒன்னுமில்லம்மா அவா பார்த்துப்பா அப்புறம் கொண்டுவந்துவிடுவா நீங்க வாங்க”என்று அம்மாவை கூப்பிட்டாலும் ரோஜா வெளியவர்றாளா என்றுதான் அவனது கண்கள்தேடினது.
அவ இப்போதைக்கு இந்தப்பக்கம் வர்றமாதிரி இல்லைன்னதும் உள்ளே போய்விட்டான்.ஏற்கனவே முருகேசனைக் கூப்பிட்டு வந்து டீவி எல்லாம் மாட்டிவிட்டான்.அதனால் லலிதா டீவி பார்த்துக்கொண்டிருந்தார்.
கேஸ் கனெக்க்ஷன் எப்படி என்ன ஏதென்று விசாரித்தான்.எப்படியும் ஒரு வாரம் ஆகிடும்.அதுவரைக்கும் என்ன செய்யவென்று கேட்டுவிட்டுகீழே வீட்டுல இருந்து வாங்கிக்கலாம்.ஆனால் எல்லா உதலியையும் அவங்ககிட்டயே வாங்கணுமா? என்று யோசித்து முருகேசன் வீட்டிலிருந்தே எடுத்துக்கொண்டு வந்துவிட்டான்.
ஆக எல்லாம் முடிந்து வீடு வந்தபிறகும் பூஜா வரவில்லை என்றதும் அவனே இறங்கிப்போனான்.
உள்ளே போகவிருப்பமில்லாது “பூஜா! பூஜா!” என்று வெளியே நின்றே அழைத்தான்.
அவனது சத்தம் கேட்டதும் சோபாவில் இருந்த கருப்பசாமி”தினேஷு டாக்டரை உள்ள வரச்சொல்லு”என்று பேரனை அனுப்பினார்.
அவன் ஓடிவந்து “டாக்டரு மாமா தாத்தா உங்களை உள்ள வரச்சொன்னாங்க”
“என்னையவா?எதுக்குக் கூப்பிடுறாருன்னு தெரியலையே”என்று யோசித்தவாறே உள்ளே போனான்.
“வாங்க டாக்டரு.உங்க குடும்பம் வந்திருக்கதை இப்போதான் வீட்டம்மா சொன்னா.நல்லாயிருக்காங்களா எல்லோரும்.உங்க மகா அந்தா நம்ம பட்டுமாகிட்டதான் இருக்கா.அவள் மடியிலிருந்து இறக்கமாட்டுக்கா.வாங்க உட்காருங்க சாப்ட்டீங்களா?”என்று யதார்த்தமாக கேட்டார்.
“இல்லை இனிமேல்தான்.பூஜாவைத் தேடித்தான் வந்தேன்”
“பட்டுமா அந்த பாப்பாவை இங்கக் கொண்டுவா டாக்டரு தேடி வந்துட்டாரு”
அந்தச் சத்தத்தைக் கேட்டதும் ரோஜா மெதுவாக எட்டிப்பார்க்க அவளது தோளில் அரைத் தூக்கத்தில் பூஜா படுத்திருந்தாள்.
“அப்பா அவா இன்னும் தூங்கல.கீழேயே இறங்கமாட்டுக்கா அழுதா.அவ தூங்குனதும் நான் பிள்ளையைக் கொண்டுவர்றேன்னு சொல்லுங்க”என்றவள் உள்ளே போய்விட்டாள்
க்கும் என் மகளை என்கிட்ட தர்றதுக்கு இவ்வளவு பிரச்சனையா?என்று யோசித்தவன் பூஜா அவளது தோளில் படுத்திருப்பதைப் பார்த்து மனம் அப்படியே இளகிப்போய்விட்டது.
மல்லிகா வந்தவர்”டாக்டரு நான்தான் சாப்பாடு குடுத்துவிடுறேன்னு சொல்லிருந்தனே.பிறகு எதுக்கு கேஸ்லா முருகேசன்கிட்ட வாங்குனீங்க?”
“அது இல்லம்மா ஆத்திர அவசரத்துக்கு வேணும்னுதான்”
“என்ன ஆத்திர அவசரத்துக்குன்னு பேசுறீங்க டாக்டர்.எங்க ஊருக்கு வந்துட்டு உங்களை அப்படியாதவிக்க விட்றுவோம்.இருங்க நான் சாப்பாடு குடுத்துவிடுறேன்”
“சரிம்மா என்று தலையாட்டிவிட்டான்.அதுக்குமேல என்னத்தை சொல்லன்னு அமைதியானவன் நான் வீட்டுக்குப்போறேன்.பாப்பா தூங்கிட்டா சொல்லி விடுங்க நானே வந்துத் தூக்கிட்டுப் போறேன்”
“நீங்க பயப்படாம போங்க.நம்ம வீட்டுலதான பாப்பா இருக்கா.இங்கயும் சின்னைபிள்ளைங்க இருக்கத்தானே செய்றாங்க”
“சரிங்கய்யா” என்று அங்கிருந்துக் கிளம்பிவிட்டான்.
பூஜா இப்போது நல்லத் தூங்கினதும் அவளைமெதுவாகத் தோளில் இருந்து இறக்க அவ்வளவுதான் கண் முழிச்சு ஒரே அழுகை.மீண்டும் தோளில் எடுத்துப்போட்டுக்கொண்டாள்.
அவளது அழுகையைப் பார்த்து மொத்த வீட்டினரும் ‘இது என்னடா வம்பா போச்சு?’ என்று முழித்தனர்.
குணசேகரன்தான்”பட்டு இது வேலைக்காகாது.போய் அவன் பிள்ளையை அவன்கிட்டயே குடுத்துட்டு வா”என்று சத்தம் போட்டான்.
அவளோ பாவமாக சரிண்ணே என்று வெளியே வரவும் மல்லிகா ஒரு கூடையில் சாப்பாடு எல்லாம் எடுத்து வைத்து தினேஷிடம் குடுத்து”அத்தைக்கூடயே போ டாக்டரு பாட்டி இருக்காங்கள்ல அவங்கக்கிட்டக் குடுத்துட்டு அத்தைக்கூடவே வா”என்று சொல்லி அனுப்பினார்.
அங்கே லலிதா இருக்கிறார் என்கின்ற தைரியத்தில்தான் குணசேகரன் தங்கச்சியை டாக்டரு வீட்டுக்கே அனுப்பினான்.
ஆனா டாக்டரு யாரு இருந்தாலும் இல்லைன்னாலும் கிடைக்கிற கேப்புல கிடாவெட்டி பொங்கவைச்சிருவான்னு தெரியாம போச்சே குணசேகரா?
ரோஜாவுக்கு டாக்டரை பார்க்கவும் பிடிக்கலை பேசவும் பிடிக்கலை.பூஜா இப்படி ஒட்டிக்கிட்டு போகமாட்டேன்னு அடம்பிடிப்பான்னு யாரும் எதிர்பார்க்கவில்லை.
அவள் அழும்போது பாவமாக இருந்ததால் அவளோட வைத்திருந்து இப்போது தூங்கியும்விட்டாள்.அதனால் குழந்தையைக் குடுத்துட்டுப் போகலாம் என்று வந்தாள்.
இப்போதும் பூஜாவைக் குடுக்கும்போது முழித்து அழுவாளோ?என்று பயந்தவாறேதான் மேல போனாள்.
தினேஷ் அவளோடு உள்ளே போனவன் சாப்பாட்டை சூர்யாவின் கையில் குடுத்துவிட்டு கேழே குடுகுடுவோன்று ஓடிவந்துவிட்டான்.
ரோஜாவோ வாசலிலே நின்றிருக்க அவளைப் பார்த்த சூர்யா”ஏன் உள்ள வரமாட்டீங்களோ மகராணி?எங்க வீட்டுக்குள்ள வரக்கூடாதுன்னு ஏதும் சங்கல்பம் பண்ணிருக்கியா என்ன?”
“உங்க மகளைப் பிடிங்க.அவ அழுததுனாலதான் தூங்க வைச்சுத் தூக்கிட்டு வந்திருக்கேன்.இல்லைன்னா இந்தப்பக்கமே காலெடுத்து வைச்சிருக்கமாட்டேன்”என்று சொல்லித்தான் முடித்திருந்தாள் அவளது கையைப்பிடித்து உள்ளே இழுத்திருந்தான்.
அதற்குள் லலிதாவும் எட்டிப்பார்க்க”பாப்பாவை எங்கத்தை படுக்கவைக்கணும்” என்று யதாராத்தமாக அத்தையென்று கூப்பிட்டுவிட்டாள்.
அதைக்கேட்டவன் புருவம் உயர்த்தி வாரே வா என்று மெதுவாகச் சொல்லிவிட்டுச் சிரித்தான்.
எதுக்கு கிறுக்கு மாதிரி இளிக்க என்று அவளும் பல்லைக் கடித்தவாறே கேட்டாள்.
“அதுவா எங்கம்மாவ அத்தைன்னு சொன்னல்ல அதுக்குத்தான்”
“மயிரு”என்று வெடுக்கென்று சொன்னவள் பூஜாவை அவனிடம் கொடுக்க தோளில் இருந்துதான் எடுத்தாள்.
“ஹ்ஹ்ஆஆஆஆஆஆஆ” என்று மீண்டும்உச்சஸ்தாயில் பூஜா அழ ஆரம்பிக்க மறுபடியும் தோளிலயே படுக்கவைத்துக்கொண்டாள் ரோஜா.
“இதென்னடா நமக்கு வந்தச் சோதனை? என்று ரோஜா பயந்தாள்.
“அவளை கட்டில்ல படுக்க வைச்சிடுமா.நான் பார்த்துக்கிறேன்”என்று லலிதா சொல்லவும் அவர் பின்னாடியே போனாள்.
“அம்மா சாப்பாடு ரோஜாம்மா குடுத்துவிட்டிருக்காங்க.இதை அங்க வைச்சிடுங்க.நான் பாப்பாவைப் பார்த்துக்கிறேன்” என்று சூர்யா ரோஜா பின்னாடியே ஹட்ச் டாக் மாதிரியே போனான்.
ரோஜா குழந்தையைக் கட்டிலில் படுக்க வைக்கவும் மீண்டும் அழ அப்படியே முதுகில் தட்டிக்கொடுத்தாள்.அவளோ ஒருதையால் அவள் கழுத்தையும் மறுகையால் அவளது செயினையும் கெட்டியாகப் பிடித்து வைத்திருந்தாள்.
“ம்ம்ம் என் மகளுக்கு உன்னை எப்படி பிடிச்சு வைக்கணும்னு தெரியுது.எனக்கு அந்த சூட்சுமம் தெரியலையே”
அதைக்கேட்டதும் கோபத்தில் அவனை முறைத்தவள் “கொன்றுவேன்” என்று பத்திரம் காட்டினாள்.
“கொல்லேன்”என்று மயக்கும் குரலில் கிறக்கமாகச் சொன்னான்.
அவன் மயக்கத்தை தெளிவிக்க லலிதா “சூர்யா இங்க வாயேன்என்றழைத்தார்.
அவன்”என்னம்மா?”கிட்சனுக்குள்ள போனான்.
“என்னடா முருங்கைக்காய் சாம்பாரு.முருங்கக்காய் பொறியல்,கூட்டுன்னு நிறைய இருக்கு.இதுல கோழிக்குழம்பும் இருக்கு”
“அம்மா அது அவங்க நார்மலாகவே அப்படித்தான் சமைப்பாங்க.எடுத்துவைச்சுட்டு தாங்க”என்றவன் ரோஜா இருக்கும் அறைக்குள் போனான்.
பூஜாவை மெதுவாகத் தட்டிக்குடுத்து அவளை சாமாளித்துவிட்டு எழுந்து அவளைப் பார்த்தவாறே வந்தவள் அப்படியே சூர்யா மீது மோதி நின்றாள்.
அவளைப் பிடித்து தனது கை வளைவிற்குள் வைத்தவன்”என்கிட்ட இருந்து எதுக்கு ஓடுற?”
“நான் எதுக்கு ஓடணும்?”
“என் கண்ணைப் பார்த்து பேசு”
“நான் எதுக்கு உன் கண்ணைப் பார்த்துப் பேசணும்”
“பேசணும்”
“முடியாது”
“எனக்குப் பேசணும்”
“முடியாது.எனக்குப் பேசபிடிக்கல”
“பேசப்பிடிக்கலையா?இல்லை என்னைப் பிடிக்கலையா?”
“இரண்டும்”
“ஏன்?”
“கல்யாணம் முடிஞ்சும் என்னை பிராக்கட் போட நினைக்கிற ஒருத்தனை எப்படி பிடிக்கும்?”
“அப்போ எதுக்கு முருங்கக்காய் சாம்பார் கொண்டு வந்த?நாட்டுக்கோழிக்கும்பு ஆசையா எடுத்துட்டு வந்திருக்க.என்னைப் பிடிக்காமலா எடுத்துட்டு வந்த?நீ பேசலைன்னா எனக்கு உன் சாப்பாடு வேண்டாம் சாப்பிடமாட்டேன்”என்று நக்கலாகப் பேச்சை மாற்றினான்.இதுக்குமேல அவக்கிட்ட வேறெதுவும் பேசவேண்டாம் என்று முடிவெடுத்திருந்தான்.அதுதான் பேச்சை மாற்றினான்.
“யோவ் டாக்டரு முருங்கைக்காய் குழம்பு வைச்சுக் குடுத்து உன்னை கவுக்க நினைக்கிறதுக்கு நான் ஒன்னும் ஊர்வசியுமில்லை.நீயும் பாக்யராஜிம் இல்லை.எங்க வீட்டுல ஓஸியா கிடைச்சது இது ஒன்னுதான்.அதுதான் போட்டு குழம்பு வைச்சுக் கொண்டு வந்தேன்.வேணும்னா தின்னு.இல்லைன்னா போ.பெரிய இவரு”என்ற ரோஜா தனது சேலையை தூக்கி இடுப்பில் சொருகிக்கொண்டு வேகமாக சமையற்கட்டுப்போய் பாத்திரத்தை எடுத்துட்டுப்போக நின்றாள்.
“ஏய் ஏய் ரோஜா இரு.நான் இன்னும் சாப்பிடலை.சாப்பிட்டது அப்புறம் எடுத்துட்டுப் போ”
“இப்போதான் உன் சாப்பாடும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம்னு சொன்னீங்க டாக்டரே.அதுக்குள்ள வைச்சுட்டுப்போன்னு சொல்லுறீங்க.ஒரு மனசோட நில்லுங்க நினைச்ச நேரத்துக்கு மனசை மாத்திக்காதிங்க”
“என்ன குத்திக் காட்டுறியா”
“குத்திக் காட்டிட்டாலும்.க்கும்” என்று தனது பின்னலை பின்னாடி இழுத்துப்போட்டவள் சாப்பாட்டை நங்கென்று மேஜையில் வைத்தாள்.
“இப்படித்தான் சாப்பாட்டை வைப்பாங்களா?”
“எனக்கு இப்படித்தான் வைக்கத் தெரியும்.உங்கள மாதிரி பதவீசாலாம் வைக்கத் தெரியாது”
“எதுலயுமே பதவீசு இல்லை”
“அப்படி எதுல பார்த்தீங்க?” என்று அவனருகில் போய் கண்ணோடு கண் பார்த்தவாறே கேட்டாள்.
அவளது கண்ணைப் பார்த்தவன் கொஞ்சம் தடுமாறவும் “ஏய் நீ போ கீழே உங்க வீட்டுல உங்க அண்ணனுங்க தேடுவானுங்க.அப்புறம் என் தங்கச்சியை ஏதோ கையைப்பிடிச்சு இழுத்தமாதிரியே முறைப்பானுங்க”
“ஆளைப்பார்த்தா அப்படித்தான இருக்கு”
“நான் டாக்டருடி”
“டாக்டருன்னாலும் ஆம்பளதானே.பார்க்கிற பார்வையே தூக்கிட்டுப் போறமாதிரி பார்த்தா அப்படித்தான் இருக்கு”
“இப்படியே பேசிட்டிரு ஒரு நாள் இல்லைன்னா ஒருநாள் நீங்க பண்ற அலப்பறைக்குத் தூக்கிட்டுப் போகமாட்டேன் மொத்தமா முடிச்சிட்டே போயிருவேன்டி”
“அதுசரி இதுதான் டாக்டரு மண்டைக்குள்ள இருந்துச்சோ.ஓரு பொம்பள பிள்ளைக்கு அப்பன் மாதிரியா பேசுறீங்க?”
“நீ மட்டும் ஒரு கல்யாணமாகத பொண்ணு மாதிரியா பேசுற.ஏதோ என் பொண்டாட்டி மாதிரில அதிகாரம் பண்ற”
“ஏதே பொண்டாட்டியா.டாக்டரே வார்த்தைவேற மாதிரி போகுது”
“ஒரு மாதிரியும் போகல போடி இங்கிருந்து”
“யோவ் இது என் வீடுய்யா”
“வாடகை நான் குடுக்கிறேன்டி”
“சரிதான் பேருதான் டாக்டரு.நடந்துக்கிறதுலாம் ரவுடி மாதிரி”
“அதற்குள் கீழே இருந்து பட்டு என்று அவளது அப்பா அழைக்கவும் இதோடு விட்டுட்டுப்போறேன்.இதுக்குமேல ஏதாவது பேசுனீங்க”
“என்னடி பண்ணுவ?” என்று அவளை இடித்துக்கொண்டு வந்து நின்று கேட்டான்.
உங்களுக்கு ஏன் இப்படி புத்திப்போகுது.உங்களுக்கு கல்யாணமாகிருக்குன்னு சொல்லாமலயே என்னை ஏதோ உங்கக் காதலி ரேஞ்சிக்குப் பார்த்தீங்க.நானும் அதை நம்பினேன்.ஆனா ஆனா உங்கப்பொண்டாட்டி வெளிநாட்டுல இருக்காங்கன்னும் உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கிறதும் இன்னைக்கு நீங்க பூஜாவைக் கூட்டிட்டு வந்ததும்தான் தெரியுது.அப்போ நீங்க எவ்வளவு கேவலமான ஆளு.உங்க பொண்டாட்டி இல்லாத இடத்தை என்னு வைச்சு நிரப்பப் பார்க்கிறீங்க.டபுளா ஓட்டப்பார்த்திருக்கீங்க?”
அதைக்கேட்டதும் சப்புன்னு ரோஜாவை அறைஞ்சிட்டான்.அவனுக்குக் கோபம் வந்துவிட்டது.அந்தக் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியாது அடித்துவிட்டான்.
அவன் அடித்ததும் ஒரு நொடி அதிர்ந்தவள் அவனது சப்டையைப்பிடித்து வேகமாக தன் பக்கம் இழுத்தவள் “ஒருத்தியோட மனசுல என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துறோம்னு தெரியாமலயே நீங்க என் மனசோட விளையாடிட்டீங்க.ஒருத்தி உயிர்போகும்போது தேவைப்படும் தண்ணீர் போல என் மனசுல ஒரு ஆசையை விதைச்சிட்டீங்க.இப்போ அதற்கு என்ன பதில் சொல்லுவீங்க?இரண்டாந்தாரமா வா வைச்சிக்கிடுறேன்னா.ச்ச்சீ.உன்னை எனக்குப் பிடிக்கலடா. பிடிக்கலன்னா பிடிக்கலதான்.பொறுக்கி போ”என்று கன்னத்தைத் தடவியவாறே வேகமாக கீழே இறங்கியவள் வீட்டுக்குத் தெரியக்கூடாது என்று முகத்தைத் தனது புடவை முந்தானையால் துடைத்துவிட்டுப்போவதை மேலிருந்துப் பார்த்தவனுக்கு நெஞ்சில் இரத்தம் வடிந்தது.
ஏன் இவக்கிட்ட நெருங்கினோம் என்று அவனே அவனை வெறுத்தான்.
ரோஜோவோ ‘போயும் போயுமா எனக்கு ஏன் இவனைப் பிடித்தது’ என்று வேதனையில் தன்னைத்தானே திட்டிக்கொண்டிருந்தாள்.
ஆக இரண்டு முத்தினக்கேஸா இருக்கு அவ்வளவுதான்.
ஒருத்தரை ஒருத்தர் நேசத்தால் பைத்தியமாக்கிக்கிறாங்க!