மெய் பேசும் மித்தியமே-2

மெய் பேசும் மித்தியமே-2

மெய் பேசும் மித்தியமே-2

சூர்யபிரகாஷுக்குக் கோபமாக வந்தது’ச்சைக் காலையில ஒரு பொண்ணு முன்னாடி நீச்சல் தெரியாமல் அசிங்கப்பட்டுட்டனே!நாளைக்கே நீச்சல் கத்துக்கணும்’ என்று யோசித்தவாறே ட்ரஸ் மாத்திவிட்டு தனது ட்யூட்டியைப் பார்க்க வந்து உட்கார்ந்தான்.

அவனது வேலை மத்தியானம் வரைக்கும் இழுத்தது.அதற்குள் அவனது அம்மா மூன்று முறை அழைத்தவிட்டார்.அவன் போனை எடுக்காது சைலண்டில் போட்டுவிட்டான்.

‘இப்போதைக்கு எடுத்தாலும் ஏதாவது பேசிடுவாங்க. அப்புறம் அதுவே மண்டைக்குள்ள ஓடிட்டிருக்கும் பேஷன்ட்ஸ்ஸை பார்க்கமுடியாது’ என்றுதான் போனை எடுக்கவில்லை.

இப்போது சாப்பிட்டு முடித்தவன் முருகேசனைப் பார்த்தான்.அவனிடம் திரும்பவும் வீடு பத்திக் கேட்கலாமா? என்றுதான் யோசித்தான்.அம்மா போன் பண்ணி முதல்ல இதைத்தான் கேட்பாங்க.வேற எந்த பதிலும் சொல்லமுடியாது.வீடுப் பார்த்துட்டுத்தான் போன் பண்ணவே செய்யணும்’என்று யோசனையில் இருந்தான்.

வேற வழியில்லையே கேட்டுத்தானே ஆகணும்.”முருகேசா!” என் அவனை அழைத்தான்

அவனோ “என்ன டாக்டர்?” என்று வேகமாக வந்து நின்றான்.

அவன் கிட்ட எப்படி மறுபடியும் வீட்ட பத்தி பேசுறது என்று தயங்கியவரே முழித்தவனைப் பார்த்த முருகேசன்” என்ன டாக்டர் ஏதாவது சொல்லனுமா? அந்த வீட்டை பார்க்க போகணுமோ?”என்று நேரடியாகவே கேட்டு விட்டான்.

“ஆமா”

“என்ன டாக்டர் நீங்க இந்த கிராமத்திலேயே வீடு வாடகைக்கு கிடைக்காது. அப்படியே நமக்கு வாடகைக்கு தர்றதா இருந்தாலும் ஆளு அது இதுன்னு பார்த்துதான் தருவாங்க.நம்ம ஊரு நாட்டாமையாச்சே கேட்டு பாப்போமேன்னுதான் கேட்டேன்.

அவரோ நம்ம டாக்டருக்கா அப்போ உடனே வீடு தர்றேன்னு சொன்னாரு. நீங்கதான் காலைல அவங்க பொண்ணா சப்புன்னு அறைஞ்சு அனுப்பிட்டீங்களே.! அது இந்நேரத்துக்குள்ள அவங்க வீட்டுல சொல்லிருக்கும்.அவங்க அண்ணனுங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் இனி எப்படி உங்களுக்கு வீடு தருவாங்க?”

“இப்போ என்ன பண்றது முருகேசா?”

“எனக்கெனவோ அந்தபுள்ள வீட்ல நீங்க அடிச்சது சொல்லி இருக்காதுன்னு ஒரு தோணல் இருக்கு. ஏம்னா அது சொல்லியிருந்தா இவ்வளவு நேரத்துக்குலாம் அவங்க அண்ணனுங்க உங்களை இப்படி உயிரோட விட்டு வைச்சிருக்கமாட்டாங்க.

அப்பவே அருவாளோடு வந்திருக்கணும்.அதுதான் யோசிக்கிறேன்”

“ஏன் முருகேசா உனக்கு அவங்க அருவாளோடு வரலைன்னு வருத்தமோ?”

“ச்ச்ச ச்ச்ச அப்படிலாம் ஒன்னும் வருத்தமில்ல டாக்டர்”

“ஆனா எதிர்பார்த்திருக்க அப்படித்தானே”

“இல்ல ரோஜோவோட அண்ணனுங்க அப்படி அதுதான்”

“அவனுங்க வரலைன்னாலும் அருவாளை எடுத்துட்டு வாங்கன்னு நீயே போய் சொல்லிட்டு வருவ போல”

“போங்க டாக்டர் உங்களுக்கு விளையாட்டு ரொம்ப”

“ஏது என்னை வெட்ட வர்றவனுங்களைப் பத்தி பேசுறது உனக்கு விளையாட்டா முருகேசா?”

“அப்படில்லிங்க டாக்டர்”

“பின்ன எப்படி?”

“என்ன டாக்டரே நீங்க இப்படி இடக்குமடக்கா கேட்டா நான் என்ன பதில்சொல்லுவேன்?உங்களுக்கு வீடுதான வேணும் வாங்க ரோஜாவோட அப்பாக்கிட்ட நான் பேசி வாங்கித் தர்றேன்”

“ஆமா அந்தப்பொண்ணே குளத்துக்கு குளிக்க வந்துச்சு அவங்க வீடு எப்படி நமக்கு வசதிப்படும்?அதுதான் யோசிக்கிறேன்?”

“காலையிலே ஏதோ இந்த இராட்சஷி வீடுன்னா வேண்டாம்னு சொன்னீங்க?” 

“அது அப்போ இது இப்போ”

“அதுசரி அது வேற வாய் இது வேற வாய் அப்படித்தானே”

“ஆமா”

“சரி கிளம்பியிருங்க போவோம்”என்றவன் சிறிது நேரத்தில் தனது சைக்கிளோடு வந்தான்.

“டாக்டர் டாக்டர்”என்று வெளியே நின்று அழைத்தான்.

“என்னடா முருகேசா?”

“வாங்க கருப்பசமி ஐயா வீட்டுலதான் இருக்காரு.போய் ஒரு எட்டுப் பார்த்துப் பேசிட்டு வந்திடுவோம்”

“சரி”

“வாங்க நம்ம வண்டியில ஏறுங்க போவோம்”

“நம்ம வண்டியா?ஏது இந்த ஓட்ட சைக்கிளா?”

“டாக்டரே இதெல்லாம் நல்லாயில்லக் கேட்டுங்கங்க.இதுதான் என் வண்டி.உங்களுக்கு கார் இருக்கு பைக் இருக்குன்னு அந்தப் பவுச என்கிட்டக் காண்பிக்கக்கூடாது.கருப்பசாமி ஐயா வீட்டுக்கு உங்களுக்கு வழி தெரியுமா?

“தெரியாது?”

“எங்க இருக்குன்னு தெரியுமா?”

“டேய் என்ன நக்கலா பண்ற?”என்று கோபத்தில் கேட்டான்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை.வண்டியில் ஏறி உட்காருங்க.நான் கூட்டிட்டுப்போறேன்”

“இந்த ஊருல வந்து இந்தக் கேனைப் பயலுங்ககிட்ட மாட்டிக்கணும்னு நமக்குத் தலையில எழுதிருக்குப்போல.ச்சை” என்று எரிச்சலில் திட்டிக்கொண்டே முருகேசனின் சைக்கிளில் பின்னாடி ஏறி உட்கார்ந்தான்.

அவன் உட்காரவும் அவனால் ஓட்ட முடியாது சைக்கிள் தள்ளாடியது.

டாகடரு உடனே குதித்து இறங்கியவன்”ஏன்டா என்னைக் கொலைக்குக் குடுக்கத்தான் ப்ளான் பண்றீங்களோ.காலையில என்னடான்னா அந்தப்பொண்ணு தண்ணிக்குள்ள தள்ளிவிட்டு கொல்லப்பார்த்துச்சு.இப்போ நீ என்னடான்னா சைக்கிள்ல இருந்து தள்ளிவிட்டுச் சாகடிக்க பார்க்கிற.இறங்குடா கீழ நானே ஓட்டுறேன்.நீ பின்னாடி உட்காரு” என்று சொன்னவன் அவனது கையைப்பிடித்து இறக்கிவிட்டு அவன் ஏறி உட்கார்ந்து ஓட்டினான்.

“வழியை சொல்லுடா.வழி தெரியாம எப்படி போறதாம்?”என்றும் அதற்கும் அவனைத்தான் திட்டினான்.

“டாக்டருன்னா படிச்சவங்க நல்ல தன்மையா பேசுவாங்கன்னு எங்க ஊருக்காரங்க நினைச்சிட்டிருக்காங்க.ஆனா நீங்க டாக்டருல ஒரு ரவுடி டாக்டரு போல.உண்மையிலயே டாக்டருக்குத்தான் படிச்சீங்களா?”

“இல்லை இன்ஞ்சினியருக்குப் படிச்சுட்டு டாக்கராகிட்டேன்”

“பொய் சொல்லாதிங்க டாக்டர்”

“ஐயோ கடவுளே இந்திக் கேனைங்க ஊருக்கு என்னை எதுக்கு மாத்திவிட்டீங்க? முடியல” என்று நொந்துபோய் சைக்கிளை ஓட்டினான்.

பின்னாடி இருந்து முருகேசன் சொன்ன வழியில் சைக்கிளை ஓட்டிவந்த சூர்யபிரகாஷ் அவன் சொன்ன வீட்டுக்கு முன்பு சைக்கிளை நிறுத்திவிட்டுப் பார்த்தான்.

அவ்வளவுபெரிய வீடு அதுக்கு முன்னாடி பெரிய கேட்டுன்னு இருந்தது.மேலயும் கீழயும்னு இருபது ரூம் இருக்கும்போல என்று யோசித்தவாறே பார்த்து நின்றான்.

“டாக்டர் வாங்க உள்ள போவோம்.இதுதான் காலையில நீங்க அடிச்சீங்களே அந்த பட்டுரோஜாவோட வீடு”

“இதை இன்னும் சத்தமா அவங்க வீட்டுக்குள்ள போய் நின்னு சொல்லு.மொத்தமா என்னை முடிச்சுவிட்றுவாங்க.காலையில இருந்து அதுதானே உன் ஆசையா இருக்கு”

“அதுக்காக இல்லை டாக்டர் அடையாளத்துக்கு சொன்னேன்”

“நீ ஒன்னுத்தையும் புடுங்க வேண்டாம்.உள்ளே வா போவேம்”என்று மெதுவாகக் கேட்டைத் திறந்துக்கொண்டு உள்ளே போனார்கள்.

“என்ன முருகேசா சந்திரமுகில வர்ற வீடு மாதிரியே கேட்டுல ஆள் இல்லாம இருக்கு?”

“அதையெல்லாம்விட பெரிய ஆளுங்க இருக்க வீடுதான் இந்த வீடு.உள்ள வாங்க தானாகவே புரியும்”

இருவரும் உள்ளே நுழைந்து வாசல் அருகே தான் போயிருப்பார்கள்.அங்கிருந்து ஒருத்தன் வேகமாக ஓடிவந்து அவர்களை இடித்துக்கொண்டு விழுந்தான்.

“டேய் முத்து எதுக்குடா ஓடிவந்து விழுந்த என்று முருகேசன் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து ஒரு காளை அவர்களை முட்டுவதற்கு ஓடி வந்தது.

முத்து வேகமாக எழுத்து அவர்களுக்கு முன்பாக ஓடினான். அதைப் பார்த்த முருகேசனும் அவனுக்குப் பின்னாடி ஓடினான்.

இது எதுவும் புரியாத சூரியபிரகாஷோ நேராக வீட்டுக்குள் ஓடினான்.

“கடவுளே என்னதிது எனக்குமட்டும் ஏன் இத்தனை சோதனை காலையில இருந்து.எமதர்மராஜா எனக்கு இன்னைக்கு ஸ்கெட்ச் போட்டுட்டாரோ?”என்று பயத்தில் ஓடினான்.

அப்படியே வேகமாக வீட்டிற்க்குள் ஓடியவன் நேராக யார் மீதோ மோதி நின்றான்.

அது யாருன்னுபார்த்தான்.அவனை மாதிரியே வளர்ந்து ஆஜானுபாகுவாக ஒருத்தன் அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான்.

அவனைப் பார்த்ததும் நல்லவேளை மனுஷன்தான்.ஹாப்பாடா மாடு இல்லை என்றவாறே நிம்மதியாக மூச்சு விட்டவனின் சட்டையை அடுத்த நொடியே அவன் பிடித்து இழுத்தவன்”யாருல நீ திருடன் மாதிரி வீட்டுக்குள்ள ஓடிவந்து ஒளியிற?யாரு வீட்டுல திருடிட்டு வந்த? கருணாகரா அந்த பாளையம் அருவாளை எடுத்துட்டு இங்கவா”என்று சத்தம்போட்டான்.

அவ்வளவுதான் சூர்யபிரகாஷுக்கோ இப்போ ‘இவனக்கு அந்த மாடுக்கிட்டயே குத்து வாங்கியிருக்கலாம்போல.ஐயோ! இன்னைக்கு காலையிலிருந்து எனக்கு உயிருக்குக் கண்டம்போல என்று நொந்துப்போனான்

உடனே “ஐயோ நான் டாக்டருங்க புதுசா வந்திருக்க டாக்டருங்க”என்று சத்தம்போட்டுக் கத்தினான்.

“என்னவே சொல்லுத டாக்டரா?”என்றவன் அவனது சட்டையைவிட்டுவிட்டு தோளில் கைவைத்தவன் மேலும் கீழும் அவனைப் பார்த்து ஆராய்ந்தான்.

‘நான் என்ன உன் பொண்டாட்டியாடா?இப்படி பார்க்ககற எருமைக்குப் பொறந்த கரடி” என்று கடுப்பில் அவனைப் பார்த்தான்.

“வீடு பார்க்க வந்தேன் சார்.இங்க யாரோ கருப்பசாமியாம்.அவரைப் பார்க்க முருகேசன் கூட்டிட்டு வந்தான்.அதுக்குள்ள மாடு துரத்திட்டு வந்திட்டு.

அதுதான் பயந்து வீட்டுக்குள்ள வந்துட்டேன்.திருடன்லா இல்லை.என்னைப் பார்த்த திருடன் மாதிரியா இருக்கு.நான் டாக்டருங்க”

“என்னது மாடு துரத்திட்டு வந்துச்சா.எந்த மாடுன்னு தெரியலையே?இந்த முத்து பைய எங்கப்போனான்”என்று கேட்டவாறே அவனைத் தள்ளிவிட்டுட்டு வெளியே போனான்.

அவன் அப்படியே கதவில் மோதி நின்றவன்”ஸ்ஸோப்பா மாட்டுக்கு பயந்து ஓடிவந்த எனக்கு என்னாச்சுன்னு பார்க்காம மாட்டைப் பார்க்கப்போறானே.ஐயோ இந்தக்குடும்பத்துல எல்லாமே இப்படித்தான் இருக்குமா?இவன் வேற வெளிய போயிட்டானே.இவன் கருணாகரான்னு ஒருத்தனைக் கூப்பிட்டானே அவன் வேற அருவாளோடு வந்திருவானோ?யப்பா சாமிகளா என்ன பிறவிங்கடா நீங்க?”என்றவாறே வாசல் பக்கம் போக திரும்பினான்.

“ஹோலோ டாக்டரு என்ன என் வீட்டுக்குள்ள நிக்கிற?இங்க யாரு மண்டையவாது உடைக்கலாம்னு வந்தியா என்ன?”

“ஆமா உன் மண்டையை உடைக்கத்தான் வீடு தேடி வந்திருக்கேன்டி.காலையில நீ தொடங்கி வைச்சதுதான் இப்போவரைக்கும் தொடருது.ஜஸ்ட்டு மிஸ்ஸு உன் வீட்டு மாடு என்னை முட்டிருக்கும்.உங்க வீட்டு மாடு முதற்கொண்டு என்னைத்தான்டி கொல்ல வருது.உன்னைப் பார்த்த நேரம் எனக்குக் கெட்ட நேரம் ஆரம்பிச்சிடுச்சு”

அவ்வளவுதான் அதைக்கேட்டதும் பட்டுரோஜா வனரோஜாவாக மாறிவிட்டாள்.

“என்ன சொன்ன என் கெட்டநேரமா நீயெல்லாம் ஒரு டாக்டரா?படிச்சவன்தான இப்படி பேச வெட்கமாயில்லை.உன்னையெல்லாம் எவன் டாக்டருக்குப் படிக்கவைச்சான்?முட்டாபைய டாக்டரே”என்று அவனது முகத்துக்கு நேராக கையை நீட்டிக்கோபத்தில் திட்டினாள்.

அவள் சத்தம் கேட்டு ஓடிவந்த இரண்டாவது அண்ணன் கருணாகரன்”என்னாச்சு பட்டு?எதுக்கு இவன்கூட சண்டைப்போடுற?வீட்டுக்குள்ள வந்து பொம்பளை பிள்ளைக்கிட்ட வம்பிழுக்கானா?”என்று கையில் வைத்திருந்த அருவாளை ஓங்கினான்.

“அண்ணே அவரு நம்ம ஊரு டாக்டரு.கொன்றுராத”என்று தடுத்து அவனது கையில் இருந்த அருவாளை வெடுக்கென்று வாங்கினாள்.

“என்னது கொன்றாதவா?வெட்டிராதன்னுதானே சொல்லணும்.இவ என்ன இப்படிச் சொல்லுறா?” முழித்துக்கொண்டிருந்த சூர்யபிரகாஷைப் பார்த்த ரோஜா முறைத்தாள்.

“டாக்டரா?ஏது நம்ம ஊருக்குப் புதுசா வந்திருக்க அந்த திருட்டு முழி டாக்டர் இவருதானா?இவரு எதுக்கு நம்ம வீட்டுக்கு வந்தாரு?”என்று அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

அதற்குள் டாக்டரைக் காணலையே எங்க ஓடிப்போனாரோ? என்றுதேடிவந்த முருகேசன் ஐயோ டாக்டர் நீங்க இங்க இருக்கீங்களா?உங்களை எங்கெல்லாம் தேடுறேன்.நீங்க வீட்டுக்குள்ளவே வந்துட்டீங்களா?”என்று கேட்டதும்தான் அவன் உண்மையிலயே டாக்டர்தான் என்று கருணாகரன் நம்பினான்.

அவனை உடனே கூட்டிட்டுப்போய் கருப்பசாமி முன்னாடி உட்கார வைத்தனர்.

‘அறுக்கப்போற ஆட்டைக்கொண்டு வந்து நிக்க வைச்ச மாதிரியே உட்கார வைச்சிருக்கானுங்க.இதுல இவனுங்களுக்கு அப்பன்னு முன்னாடி உட்கார்ந்திருக்கவன் மீசையாலயே ஒருத்தனை வெட்டிக்கொன்றுவான் போல எவ்வளவு பெரிய கடாமீசையோட இருக்காரு.ஐயோ இவனுங்க வீட்டுலயா வாடகைக்கு வரணும்.எப்படியாவது ஓடி தப்பிச்சிடு சூர்யபிரகாஷா?’என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தான்.

கருப்பசாமியோ அவனைப் பார்த்து புன்னகைத்தவர்”அப்புறம் டாக்டர் எங்க ஊரு எப்படி இருக்கு பிடிச்சிருக்கா?நம்ம மக்கள்தான்.ரொம்ப பாசக்கராவுங்க.நல்லா வைத்தியம் பாருங்க.உங்களுக்கு புண்ணியம் கிடைக்கும்.அப்புறம் நம்ம மேல் வீட்டுலயே தங்கிங்க வாடகையெல்லாம் தரவேண்டாம்.நீங்க வியாதியை குணமாக்குங்க அதுபோதும்”என்றார்.

“அதுதான் சார் என்னோட வேலையே.அத நான் ஒழுங்க பார்த்துப்பேன்.ஆனால் வாடகைத் தராமலாம் குடிவரமுடியாது.டவுண்ல எவ்வளவோ அதைவிட கொஞ்சம் குறைச்சுத் தர்றேன் வாங்கிக்கோங்க.வாடைகை குடுக்காம சும்மா தங்கினா எனக்கும் அது மரியாதை இல்லல.நான் வேணும்னா மேல வீட்டைப் போய் பார்த்துட்டு வந்துடட்டுமா?” என்று அந்தக் கும்பலிடம் இருந்து தப்பிக்க நினைச்சுக் கேட்டான்.

“அது எதுக்கு டாக்டர் வீட்டை பார்த்துட்டு நீங்க எப்போ வர்றேன்னு சொல்லு மொத்தமா சுத்தப்படுத்தி வைக்கச்சொல்லிடுறேன்.ஒன்னுக்குப் பத்து தடிமாடுங்க தின்னுட்டு சுத்திட்டுத்தானே இருக்கானுங்க வேலை செய்வானுங்க”

“சரிசார் நான் நாளைக்கே வந்திடுறேன்.அப்புறம் அம்மாவும் குடும்பம் பொருட்கள் எல்லாம் ஒரு இரண்டு மூணு நாள்ல வந்திடுவாங்க”

“அதுசரிவராது.நீங்கமட்டும் தனியான்னா வேண்டாம்.உங்கம்மா குடும்பமெல்லாம் வந்ததும் அவங்கக்கூடவே நீங்களும் வாங்க” என்றவாறே வந்துநின்றான் ரோஜாவின் மூத்த அண்ணன்.அதாவது மாடுதான் முக்கியம்னு சூர்யபிரகாஷைத் தள்ளவிட்டுட்டுப்போன மகராசன் குணசேகரன்!

அப்போ இன்னும் ஒருவாரத்துக்கு ஹாஸ்பிட்டல்லதான் அந்த மாட்டுக்கொசுக்கடிமில தூங்கணுமா?என்று பாவமாகப் பார்த்தான்.

“அதெல்லாம் வேண்டாம் குணசேகரா.எப்படியும் அவருதானே குடிவரப்போறாரு.அப்போ நாளைக்கு வந்தா என்ன அடுத்தவாரம் வந்தா என்ன எல்லாம் ஒன்னுதான்.நம்ம ஊருக்காக வந்திருக்க டாக்டருக்கு உதவிசெய்யலன்னா எப்படி?நீங்க போங்க டாக்டர்.நான் நம்ம பயலுங்களை விட்டுச் சுத்தப்படுத்தி வைக்கேன் நாளைக்குக் குடிவந்திருங்க”என்று பேச்சை முடித்தவர் வணக்கம் சொல்லிவிட்டு எழுந்துப்போய்விட்டார்.

அப்பா போனதும் ரோஜாவின் இரண்டு அண்ணனுங்களும் அவனை மேலும் கீழும் பார்த்து ஆராய்ந்தனர்!

சூர்யபிராகஷை அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் பார்வையே சொன்னது!