ரணம் 3

Suja

ரணம் 3

3 ரண ரணமாய் !!

"அட காவ்யா பரவாயில்லையே , கார்க்காரன் நிப்பாட்டிட்டான்.. இன்னைக்கு உனக்கு அட மழை தான் போல இருக்கு" என்று சக தோழி கூறவும் 

கண்ணாடி பார்த்து உதட்டில் உள்ள சாயத்தை ஒழுங்காக பூசி கொண்டு நின்ற காவ்யா 

"அட போ அக்கா, பொண்டாட்டிய பூ போல ஹேண்டில் பண்ணுவாங்க... நாம கிடைச்சா ஆடி கார்ல வர்றவன் கூட கசக்கி தூக்கி தூரப்போடுறான் .. நேத்து வந்தவன் பிஎம்டபிள்யூ கார்ல வந்தான்.. நம்பி ஏறிட்டேன், லாரி உருண்டு பிரண்ட மாதிரி, நாய் கண்ட மேனிக்கு உழுது வச்சுட்டான் .."

ம்ம் அது என்னவோ உண்மை தான் போல , காதலுக்கு கண்ணில்ல அப்படிங்கிற பழமொழியை காமத்துக்கும் கண்ணில்லன்னு மாத்திட்டா நல்லா இருக்கும் ... உடம்ப தேடுறவன் எதிர்ல இருக்குற பொண்ணோட வலி வேதனை எதையுமே பார்க்க மாட்டேங்கிறான்.. கண்ணில்லாதவன் போல குருட்டாம் போக்குல மேஞ்சு தள்ளிட்டு போயிடுறான் நம்ம வாழ்க்கை ஏன் தான் இப்படி மாறி போச்சோ?அப்பெண் பெருமூச்சு விட்டது .. 

உடல் தேவைக்காக இந்த தொழிலுக்கு வருபவர்கள் பாதி என்றால், வழி தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில் மாட்டிக் கொண்டது போல் மாட்டிக் கொள்ளும் பெண்களும் சிலர் உண்டுதான்... 

"இவங்களுக்கு எல்லாம் பொண்ணுங்க உடம்பை பார்த்தா என்ன எழவுதான் தோணுமோ, தெரியல என்று மல்லிகை பூவை முன்னால் அழகாக தொங்கப் போட்டுக்கொண்ட காவ்யா மீண்டும் கண்ணாடியில் தன் அழகிய உருவத்தை முகம் சுருங்க பார்த்துக் கொண்டாள்.. 

இந்த அழகும் நிறமும் இருப்பதினால் தானே இங்கே விலை போகிறாள் பெருமூச்சு விட்டுக் கொண்டாள்

"என்ன நடக்கப் போகிறதோ ஏற்கனவே இருக்கும் வலியே இன்னும் போகவில்லை, அதற்குள் இன்றைய இரவு விற்பனை செய்ய வேண்டிய உடல் என்ன நிலைக்கு ஆளாக போகிறதோ என்று சிறு பயத்தோடவே தான் நின்ற காரை நோக்கி காவ்யா நடக்க ஆரம்பித்தாள்

டொக் டொக் என்று குனிந்து அந்த கார் ஜன்னல் கண்ணாடியை அவள் தட்ட ....கண்ணாடி மெல்ல மெல்ல கீழிறங்கியது. திறந்த ஜன்னல் கண்ணாடி வழியாக தலையை உள்ளே விட்ட காவ்யா.. அவன் முகத்தை கூட பார்க்கவில்லை.. ஹேண்ட் பேக்குக்குள் இருந்த பாதுகாப்பு கவசத்தை எடுத்துக் கொண்டே 

"ஆயிரம் ரூபாய் பணம் வச்சிருக்கியா, 500 ரூபாய் இப்ப கொடுத்துடு , மீதி 500 ரூபாய் வேலை முடிஞ்சதும் கொடுத்துடு... எவனையும் நம்ப முடியாதுல்ல வேலை முடிஞ்சதும், துண்ட போட்டுட்டு போயிட்டா நாங்க என்ன செய்றது என்று காசுக்காக அவள் கை நீட்ட.. மாதவன் அவளை பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் காவ்யா யோசனையாக கண்ணைச் சுருக்கியவள் 

"அட நம்ம டாக்டர் சாரு , நீங்களா? நீங்களுமா?? என்றவள் புன்னகை சுருங்கி போனது ..

"பாக்குறதுக்கு நல்லவர் போல இருந்தீங்க நீங்களும் பொண்ணு தேடி வந்துட்டீங்க போல இருக்கு.. அது சரிதான் இந்த காலத்துல யாரையும் நம்ப முடிகிறது இல்லை என்று கார் கதவை திறந்து உள்ளே உட்கார்ந்தவள் 

"காசா ஜிபேயா சார், ஏதா இருந்தாலும் முன்னாடி அட்வான்ஸ் வாங்கிடுறதுதான் பழக்கம் என்றதும் மாதவன் அமைதியாக பர்சை திறந்து 500 ரூபாய் பணத்தை எடுத்து அவள் பக்கத்தில் நீட்டினான்... 

" உண்மையாகவே அப்போ என் கூட வர்றதுக்காக தான் வண்டி நிறுத்துனீங்களா ..

"ஏன் நான் தப்பெல்லாம் பண்ண கூடாதா என்றான் காரை மூவ் செய்து கொண்டே

"அப்படி இல்ல உங்க முகத்தைப் பார்த்தா அப்படி ஆள் மாதிரி இல்ல அதான் கேட்டேன் என்ற பணத்தை வாங்கி ஜாக்கெட்டுக்குள் திணிக்க போனவள்

"ச்சே சே எங்கனையாவது விழுந்திடக் கூடாது என்று கண்களில் காசை ஒத்திக்கொண்டு, தன் ஹேண்ட் பேக் உள்ளே வைத்துக் கொண்டாள்..

"அப்புறம் கார்ல வச்சேவா, இல்ல ஏதாவது ஒதுக்குப்புறமா வீட்டுக்கு கூட்டிட்டு போக போறீங்களா? எதுவும் இல்லைன்னா புதர் மறைவில போகணுமா என்று தன் தொழில் செய்யும் முறைக்கு காவ்யா தாவிவிட.. 

 கார்லேயேதான் என்றான்,. காரை சற்று வேகமாக ஓட்டிக்கொண்டு போனபடி ..

ம்ம் ஓகே சார்

இடம் வர்ற வரைக்கும் கொஞ்சம் பேசிட்டு போகலாமா... 

பேசணுமா ?? 

ஏன் பேச கூடாதா ?

"அப்படின்னு இல்ல யாரும் எங்கள பேச விடுறதே இல்லையே அதான் கேட்டேன் ..ஆயிரம் ரூபாய் தந்துட்டு பத்தாயிரம் ரூபாய்க்கு வேலை வாங்குவாங்க அதான் 

"நான் வேற மாதிரி , நீ பேசு கேட்கிறேன்.. ஆமா, உன் பேர் என்ன சொன்ன மறந்துடுச்சு.. என்றான் புருவத்தை தடவி அவளை பார்த்தபடி 

அவனுக்கு அவள் பெயர் கல்வெட்டில் வெட்டிய பெயர் போல பதிந்து விட்டது .. அது எப்படி அந்த காவ்யா என்ற பெயரை மறப்பான்... அந்தப் பெயர் உள்ளதால் தானே இவள் முகம் மறக்காமல் அவனுக்குள் இருக்கிறது... 

காவ்யா சார், காவியமாக வேண்டியவ, குப்பையில காகிதமாக கிடக்கிறேன்... வியர்வையை முந்தானை கொண்டு அவள் துடைக்க.. 

அவள் பக்கத்து ஜன்னல் கண்ணாடியை திறந்து விட்டான்... சிலு சிலுவென்று காற்று அவள் தேசத்தை கலைக்க வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் மனதில் குட்டி வெறுமை 

இவனும் வெறும் சதை தேடும் ஆண்தானா?

நல்லவன் போல் தெரியும் அத்தனை ஆண்களும் இப்படித்தானோ?

நேற்று ஆஹா ஓஹோ இந்த மாதவன் சார், ரொம்ப நல்லவர் என்று புகழாரம் சூட்டினார்கள்.. இவளும் நம்பி விட்டாள்.. ஆனால் இன்று அவனும் ஒரு விலை மாதுவை தேடி வர..

ஐயடா என்ன உலகம்?? என்று வெறுத்துப் போனது அவள் பக்கத்தில் ஜூஸ் ஒன்று நீட்டப்பட.. ஏதோ யோசனையில் இருந்தவள் அதிலிருந்து கலைந்து அவன் பக்கத்தில் திரும்பினான்..

என்ன சார் பண்ணனும், மேல ஊத்திக்கணுமா சேலை எல்லாம் கசகசன்னு ஆயிடுமே, ஆண்களின் வக்கிர புத்தி அத்தனைக்கும் வடிகாலாய் இருக்கிறவள்... இவனையும் சாதாரண ஆணைப் போலவே நினைத்து ஜூசை வாங்கிக் கொள்ள

" உனக்கு குடிக்கறதுக்கு தந்தேன், அடிக்கடி எச்சில் விழுங்குறியே தொண்ட வறண்டு போய் இருக்கும் போல இருக்க என்றவனை சற்று பிரமிப்பாக பார்த்துக் கொண்டே , அந்த ஜூசை வாங்கி கடகடவென்று குடித்தாள்

உண்மைதான் தொண்டை எல்லாம் வரண்டு போய் இருந்தது.. அவள் வரும் வேலைக்கு ஜூஸ் பாட்டில் தண்ணீர் பாட்டில் எல்லாம் கொண்டா வர முடியும்.. 

"ரொம்ப நன்றி சார், போய்கிட்டே இருக்கீங்களே எங்க வச்சு தொடங்க போறீங்க??

"எங்கையும் வச்சு தொடங்கல, படுத்து தூங்கு, காலையில மீதி பேமென்ட் தந்து வீட்டுக்கு அனுப்பிடுறேன் என்றவனை அவள் அதிர்வாக பார்த்து 

"அய்ய, என்ன சார் நீங்க உங்களோட பெரிய பேஜாரா போச்சு , வண்டியை நிறுத்துங்க .. நானும் ஏதோ கஷ்டமர்னு நினைச்சு வண்டியில ஏறிட்டேன்.. சும்மா படுக்க சொல்றீங்க .. தொழில்ல கைய வைக்காதீங்க சார்.. நாளைக்கு காலையில 2000 ரூபாயோட போகலன்னா.. வீட்டுல என்ன நிலவரம் ஆகும்னு எனக்கு தான் தெரியும்... வண்டி நிறுத்துங்க சார் ... வேற ஏதாவது கஸ்டமர் பாத்துக்குறேன் .... நானே ஒருத்தருக்கு ரெண்டு பேர் பாத்தா தான், இன்னைக்கு ராத்திரி 2000 ரூபா பார்க்க முடியும்ன்னு பதபதப்பா உட்கார்ந்துகிட்டு இருக்கேன்... நீங்க வேற ஏன் சார் ரோதனையை கூட்டுறீங்க என்று அவள் கத்த கத்த.. மாதவன் வண்டியை ஓட்டிக்கொண்டே , தன் பர்ஸிலிருந்து 1500 ரூபாயை எடுத்து அவள் கையில் கொடுத்தவன் 

உனக்கு பணம் வேணும் எனக்கு ஒத்தையா போறதுக்கு தூக்கம் வருது, பேசிக்கிட்டே இருக்க ஒரு ஆள் வேணும்... இதையும் உன்னோட தொழில்ல ஒரு பாகமா நினைச்சுக்கோயேன் .. கொஞ்சம் நேரம் தூங்கி ரெஸ்ட் எடுத்துட்டு பேச ஆரம்பி "

"ஹான் பேசணுமா கண்களை உருட்டி அவனை பார்த்தாள் 

"ம்ம், என்கூட பேச்சு கொடுத்துட்டே வா, தூங்காம ஊர் வரைக்கும் போய் சேர்ந்திடுவேன்

இல்ல தயக்கமாக அந்த பணத்தை வாங்கவா வேண்டாமா என்று அவள் யோசித்தபடி இருக்க.. மாதவன் அவள் கையைப் பிடித்து உள்ளங்கையை திறந்து பணத்தை வைத்தவன்..

"ஒரு நாள் வலியில்லாம இந்த பணத்தை கொண்டுட்டு போகலாமே , எனக்கு இந்த பணம் சின்ன விஷயம் ஆனா உனக்கு இது பெரிய விஷயம் .. 

"அது உழைக்காம வாங்குற காசு என்று அவள் நெளிந்தபடி அவனை பார்க்க 

"ஏன் உன் வாய் உழைக்கதான போகுது .. மூடாம பேசிக்கிட்டே வா, நான் கேட்டுக்கிட்டே வர்றேன் டீல் ஓகேவா? என்று அவன் கண்ணைச் சிமிட்ட

முதல் முறை ஒரு இரவு கசக்கப்படாமல், களங்கப்படாமல் வலி இல்லாமல், ரணம் இல்லாமல் இதமாய் , காற்றோட்டமாய் மது வாடை இல்லாமல், மரண அவஸ்தை இல்லாமல் , பணமும் தந்து அந்த சுகமான இரவை தருகிறேன் என்றால் மறுக்கவா தோன்றும்.. 

"ம்ம் என்று காவ்யா பணத்தை வாங்கி ஜாக்கெட் கொள் திணித்துக் கொண்டவள்... அவனை திரும்பிப் பார்த்து உட்கார்ந்து கொண்டாள்

"பேசலாம் சார், அதுக்கு முன்னாடி மன்னிச்சிடுங்க நீங்க எப்படிப்பட்ட ஆளுன்னு தெரியாம உங்களையும் தப்பா நினைச்சு..கண்டபடி பேசிட்டேன் உண்மையா நீங்க ரொம்ப நல்லவர் தான் சார் ... முதல் முதல்ல நான் கெஸ் பண்ணினேன் அது சரியா அமைஞ்சிருக்கு.." 

"என்ன கெஸ் பண்ணின?

நேத்து உங்களை பார்க்கும் போதே நீங்க நல்லவரா தான் இருக்கணும்னு நினைச்சேன்.. அதே போல நீங்க இருக்கீங்க 

"ஹாஹா , அப்படியெல்லாம் சொல்ல முடியாது, நானும் கெட்டவன் தான் , அதற்கான நேரமும் காலமும் வரலைன்னு நினைக்கிறேன் என்றவன் சிரிப்பை ஒரு நிமிடம் ரசித்துப் பார்த்தவள்..

தலையில் தட்டிக் கொண்டு..

அப்புறம் சார் எங்க போறீங்க ?

"வீட்டுக்கு, அத விடு , எப்படி இந்த தொழிலுக்கு வந்த?

"அதுவா சார் அது பெரிய கதை, கொஞ்சம் வயிறு பசிக்கிற மாதிரி இருக்கு... ஏதாவது தள்ளுவண்டி கடை இருந்தா நிப்பாட்டுறிங்களா? ஒரு ரெண்டு இட்லி சாப்பிட்டுக்குறேன் , நேத்து ராத்திரி சாப்பிட்டது சார் பசிக்கு "என்றவள் பசியில் கண்களில் தெரிய ..

ம்ம் என்று மாதவன் கார் தள்ளுவண்டி கடையில் நின்றது அவள் காரை திறக்க போக 

"நானே போய் வாங்கிட்டு வரேன், நீ ரெஸ்ட் எடு... என்ன வேணும் காவ்யா 

"சார் என் பேரையா கூப்பிட்டீங்க??" 

"ஏன் என்னாச்சி

இல்ல என்ன இப்படி கூப்பிட்டு பல வருசம் ஆகுது அதான் .. ரெண்டு இட்லி போதும் சார் ..

"வாங்கிட்டு வர்றேன் "என்று கூறிவிட்டு போகும் மாதவனை தாண்டி அவள் கண்கள் எங்கேயும் போகவில்லை 

"எங்கு போனாலும் விபச்சாரி,அவுசாரி, விலைமாது என்று அவளை அருகில் கூட சேர்க்க மாட்டார்கள்.. இரவெல்லாம் இனிக்கும் அவள் உடல் பகலில் அத்தனை பேருக்கும் கசக்கத்தான் செய்யும் அவளிடம் பேசினாலே அருவருப்பு என்று விலகிப் போகும் மாந்தர்கள் மத்தியில் , அவள் பசியை உணர்ந்து அவள் உணர்வுகளை உணர்ந்து ஒருவன் பக்கத்தில் வந்திருக்கிறான் என்றால் அது இவனாகத்தான் இருக்கும் ..

ரணமாய் போகும் அவள் பயணத்தில் ஒரே ஒருவன் அந்த ரணத்தை அறிந்து அருகே வருகிறான் அவள் ரணம் மாறுமா??

ரணம் மாறும் என்றால் , அவள் வாழ்க்கையும் மாறும்!!