ரணம் 2

ரணம்2

ரணம் 2

2 ரண ரணமாய்!! 

"சார் காஃபி கொண்டு வந்து இருக்கேன்" என்று கம்பவுணடர்டர் மாதவன் அறைக்குள் வர . ஏதோ யோசனையில் உட்கார்ந்திருந்தவன் காஃபியை கையில் வாங்கி , அதை மிடறு மிடறாக விழுங்க ஆரம்பிக்க 

இன்னும் கம்பவுண்டர் தலையை சொரிந்து கொண்டே அங்கே நிற்க

"என்ன கதை அளக்கணுமா.... வேலை இருக்கு"

"சார் இந்த பொண்ணு இங்க ஏன் வந்துட்டு போகுது?"

"ஹாஸ்பிட்டலுக்கு யார் வேணாலும் வருவாங்க இது என்ன கேள்வி ?"

"இல்ல சார் இந்த பொண்ணு ஒரு மாதிரி ஆளு ...

"ஒரு மாதிரியான்னா? அதையும் சொல்லு 

"அதான் சார் , பக்கத்துல அந்த மாதிரி இடங்கள் எல்லாம் இருக்குன்னு சொன்னேன்ல 

"ம்ம் 

"அப்படி பொண்ணு ,அதான் விபச்சாரி சார்"

"ஓஹோ இந்த பொண்ணு விபச்சாரின்னா, இவங்க வீட்டுக்கு போயிட்டு வர்ற ஆம்பளைங்கள என்ன சொல்லுவீங்க...

அது" என்று அவன் தலையை சொரிய

"வாய் இருக்கு , நாக்கு இருக்குறதுக்காக ஒருத்தர ஈசியா குறை சொல்லக்கூடாது ... அவங்க என்ன சிட்டுவேஷன்ல இந்த வேலைக்கு வந்து இருப்பாங்க.. எவ்வளவு கஷ்டத்தோட அதைக் கடந்து வருவாங்கன்னு .. ஒரு நாள் அவங்க கூட இருந்து பார்த்தாதான் உங்களுக்கு தெரியும்" ..

"வேற என்ன பணம் தான் இல்ல சுகம்" என்ற பதிலில் அமைதியா பார்த்த மாதவன்...

"ஒருத்தரை ஈசியா நியாயம் தீர்த்துடலாம், ஆனா அவங்களோட வேதனை அது அவங்க சொன்னா தான் புரியும் இனி இப்படி பேசாதீங்க "

"என்ன சார் என்னமோ பல நாள் இந்த மாதிரி ஆட்கள் கூட இருந்த மாதிரி பீல் பண்ணி சொல்றீங்க "என்றவரை தலையை தூக்கி பார்த்து புன்னகையை கொடுத்தவன் 

"பாத்துருக்கேன் பல வருஷம் பார்த்திருக்கேன் என் மனைவி இப்படி ஒரு இடத்தில் இருந்து வந்தவதான்" என்று கூறிவிட்டு பைலை புரட்ட ஆரம்பிக்க ... அந்த மனிதருக்கு அதற்கு மேல் பேச ஒன்றுமில்லை கிளம்பிவிட்டார்... 

இங்கே எளிதாக கிடைக்கும் ஒன்று அட்வைஸ் , மறமொன்று.. அடுத்தவனுக்கு தீர்ப்பு வழங்குவது... ஆனால் யாரும் அவர்களுக்கு உறுதுணையாக, உதவியாக இருக்க நினைப்பது இல்லை .. பின்ன என்ன டேஸூக்கு அறிவுரை போயிட்டே இரு என்று நினைக்கும் ஒரு சிலரில் மாதவன் ஒருவன்...

முதலில் சிட்டிக்குள் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் ... புறநகர் பகுதியில் வேலை செய்ய யாரும் சம்மதிக்கவில்லை என்றதும், மாதவன் விரும்பியே இங்கே வந்துவிட்டான்..

காயத்ரியும் ராகவும் 

"டேய் அங்க போய் இருந்தா எப்படி நாங்க வந்துட்டு போறது , புள்ளைங்க படிப்பு வசதி எல்லாம் பார்க்க வேண்டியது இருக்குல்ல" என்று கூற 

"புள்ளைங்க படிக்கிற ஸ்கூல்லே படிக்கட்டும் ராகவ், வாரத்தில் ஒரு நாள் நானே வந்து பார்த்துட்டு போறேன்"

"ஏண்டா இந்த ஹாஸ்பிட்டல், நல்லாத்தான இருக்கு இத விட்டுட்டு ஏன் வசதியே இல்லாம இருக்கிற அந்த ஹாஸ்பிடல்ல போய் கிடக்கணும்னு நினைக்கிற... "

எதுவும் இல்லாத இடத்தில தான், நம்ம உதவி தேவைப்படும் ராகவ்.. நான் இங்க இருக்கிறதை விட அங்க இருக்கிறதுதான் நல்லது ... நிறைய பேருக்கு நல்லது..

"அப்பா டேய் நான் வாயே திறக்கல , உன் பிள்ளைங்க சம்மதம் சொன்னா, எங்க வேணாலும் போ.. "குழந்தைகளிடம் இரவோடு இரவாக என்ன சொல்லி கொஞ்சினானோ காலையில் அவனுக்கு வழி அனுப்பி விட்டு விட்டனர்... வாரம் ஒரு முறை பிள்ளைகளை வந்து பார்த்துவிட்டு போவான்., அமைதியாக போன அவன் வாழ்க்கையில் காவ்யா என்ற பெயர் அமைதியை கலைக்க போவது அறியாது, படுக்கையில் வந்து ஏன் ஏன்று தெரியாது உருண்டு புரண்டு தூங்க முடியாது கிடந்தான் மாதவன்...

காவ்யா அவன் மனைவி , அவளை தாய்லாந்து சிவப்பு விளக்கு பகுதியில் இருந்து காப்பாற்றி திருமணமும் செய்து கொண்டான்.. பாவம் வாழவே முடியாது அவன் வாழ்க்கையும் கெடுக்க முடியாது மகவை அவன் கையில் கொடுத்து விட்டு ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டு , தீரா வலியை இவனுக்கு பரிசாக கொடுத்து விட்டு போனவள்...

அதே பெயரில் அதே நிலையில் இன்னொருத்தியை மறுபடியும் கண்ட மாதவன் நிலை சொல்லவா வேண்டும் ... 

உடல் எல்லாம் வலி எடுக்க.. வீட்டின் கதவை திறந்து கொண்டு காவ்யா போக ... எதிர்பட்டு வந்த அவள் தங்கை கவிதா அவளை முறைத்து கொண்டே எரிச்சலாக பார்த்தவள் ...

"காலையிலேயே உன் மூஞ்சில முழிச்சிட்டேனா, இன்னைக்கு நாள் விளங்கின மாதிரிதான்... அதான் வேசித்தனம் பண்றல்ல , அங்கேயே எங்கேயாவது ஒரு இடத்துல தங்கிக்க வேண்டியது தானே .. தினம் இந்த வீட்டுக்கு வந்து ஏன் என்ன டார்ச்சர் பண்ற , இந்த உலகத்துல எத்தனையோ தொழில் இருக்கு உடம்ப வித்துதான் சம்பாதிச்சு திங்கனுமா என்ன? என்று கவிதா முனங்கிக் கொண்டே ஷூவை மாட்ட ஆரம்பிக்க ... 

எப்போதும் கேட்கும் அவச்சொல்லும், திட்டும்தான் இது காவ்யாவை போய் அடைந்தது போல் தெரியவில்லை ... அவள் பாட்டிற்கு தன் ஹேண்ட் பேக்கை அதன் இடத்தில் தொங்க போட்டுவிட்டு, முகத்தை அலம்பி கொண்டு நிற்க ..

"சீவி சிங்காரிச்சு தினம் ரோட்ல போய் நின்னு வா வான்னு கூப்பிடுறியே, உனக்கு எல்லாம் உடமபு கூசவே செய்யாது..தூதூஊஊஊ உடம்பு சுகத்துக்கு இப்படியா அலைவாங்க ... இந்தப் பணம் உன் உடம்புல ஒட்டுமா கேவலம் புடிச்சவ, என்ன சொன்னாலும் காதுல வாங்குறது இல்ல.. நம்ம மானத்தையும் சேர்த்துல்ல வாங்குறா.. செத்தும் தொலைய மாட்டேங்குறா" என்று கத்தியே சொல்லிவிட்டு ஸ்கூல் யூனிஃபார்மில் போகும் தங்கையை பார்த்து வரண்ட சிரிப்பை கொடுத்தபடி காவ்யா உள்ளே போக..அவள் முகத்தில் வந்து பானை ஒன்று தாக்கியது..

"நாயே நேத்து ராத்திரி கஸ்டமருக்கு ஈடு கொடுக்கலைன்னு , அவன் துட்டு தராம போயிட்டானாம், காசு கொண்டு வந்தியா இல்லையா என்ற தாய் இடையில் கையை வைத்துக்கொண்டு அவளை தீயாக முறைத்தார்... 

"என்னது துட்டு கொண்டு வரலையா , அப்போ இன்னிக்கு எனக்கு கஞ்சாவுக்கு காசு இல்லையா என்று தகப்பன் ஒரு பக்கம் போதையில் சலம்பிக் கொண்டு நிற்க... 

"ப்ச் அவன் கடிச்சு கொதறி வச்சான் , நாலு மிதி போட்டு அனுப்பிட்டேன், உதட்டில் கழுத்தில் கிடந்த காயத்திற்கு காவ்யா மறந்து போட ஆரம்பிக்க... தாய் ஓடிவந்து அந்த மருந்தை எடுத்து தூக்கி வீசியவர்

"ஏன்டி இது என்ன உனக்கு புதுசா, வலிச்சா பல்ல கடிச்சுக்கிட்டு கிடக்க வேண்டியதுதானே... எனக்கு தெரியாது நேத்து உள்ள காசு இன்னைக்கு வந்து ஆகணும்.. இல்லன்னு வச்சுக்கோ, இதோ ஸ்கூலுக்கு போறாளே சீவி சிங்காரிச்சுக்கிட்டு உன் தங்கச்சி... அவளையும் இந்த தொழில்ல என்ற தாயை எரிச்சலாக பார்த்த காவ்யா 

"இந்தாரு நான் இந்த தொழிலுக்கு போனது நீ மிரட்டுற , அடிக்கிறங்கிறதாலையோ, இல்ல இந்த ஆளு தறுதலையா, அலையறாங்கிற காரணத்துக்காக எல்லாம் இல்ல ... என் தங்கச்சியும் கஷ்டப்படுற கூடாது , அவளுக்கும் இந்த நிலைமை வந்துடக்கூடாதுங்கிற ஒரே காரணம்தான், நான் பத்து பேர் கூட படுத்து , நீ கேட்கிற பணத்தை கொண்டு வந்து கொட்டிக்கிட்டு இருக்கேன்.. என் தங்கச்சி மேல உங்க ரெண்டு பேரும் நிழல் பட்டுச்சு இன்னைக்கு விபச்சாரியா இருக்கேன்... நாளைக்கு கொலைகாரி ஆகிடுவேன் சொல்லிட்டேன்...

ஹான் 

"என் தங்கச்சி பக்கம் உங்க ரெண்டு பேர் தலை திரும்பிச்சி அருவாளை எடுத்து தலையை கரகரன்னு அறுத்துடுவேன் ஜாக்கிரதை...

"நாங்க ஏன் அவளை திரும்பி பார்க்க போறோம்.. நீ எங்களுக்கு தேவையான பணத்தை கொடுத்தா உன் தங்கச்சி கவுரவமா பள்ளிக்கூடத்தில போயி மேல்படிப்பு படிப்பா, இல்லன்னா என்றவர் முன்பு கையை நீட்டி தடுத்த காவ்யா

" அவளை இந்த இடத்தில் இருந்து கூட்டிட்டு போய் தனியா வைக்கிறதுக்கு எனக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது.. ஆனா அவ என்ன நம்ப மாட்டா... நீங்க ரெண்டு பேரும் நல்லவங்கன்னு நம்பிகிட்டு இருக்கா.. அதனால தான் நான் பல்ல கடிச்சுக்கிட்டு சும்மா இருக்கேன்.. இப்ப என்ன? பணந்தான வேணும் ... நேத்து உள்ளதுக்கும் சேர்த்து இன்னைக்கு சம்பாதித்து கொண்டு வரேன்..

"இப்படியே கால் காசுக்கு படுத்தா எப்படி , எவனாவது ஒரு கோடீஸ்வரனை பார்த்து உருவிட்டு வர சொல்லுடி ... என்ன மகளை வளர்த்து வச்சிருக்க என்று சொன்ன தகப்பனையும் 

"அவளுக்கு அந்த அளவுக்கு விவரம் பத்தி இருந்தா இன்னைக்கு நாம ஏன் இப்படி சின்ன வீட்டில கிடந்து கஷ்டப்படுகிறோம், என்ற தாயையும் எரிச்சலாக பார்த்தாள் 

எத்தனையோ தாய் தகப்பன் குழந்தைகள் இல்லை என்று தினம் அழுகிறார்கள், ஏன் இவர்களுக்கு குழந்தை செல்வத்தை ஒன்றுக்கு இரண்டாக கொடுத்து விட்டாய் ,இந்த பூமியில் வந்து உதித்த பாவத்திற்கு வருந்தி கொண்டிருந்தாள்..

தாயும் தகப்பனும் தெய்வத்திற்கு சமானம் என்று சொல்வார்கள் ... ஆனால் அவளுக்கு தாயும் தகப்பனும் தெய்வமாக இல்லை , பேயும் பிசாசுமாக அல்லவா இருந்தார்கள்

இன்று அவள் விபச்சாரியாக இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் இவர்களின் பேராசையும், நீ எப்படியும் போ, நாங்க வாழனும் என்ற சுயநலமும் தானே காரணம் ... தங்கை மட்டும் இல்லை என்றால் என்றோ இவள் உடல் தூக்கில் தொங்கி இருக்கும்.. எப்படியாவது அவள் மீது கறை படாமல் கரை சேர்த்து விட வேண்டும் என்பதற்காக இந்த உடல் தினம் இரவில் வதைபடுவதை யாருமே அறிந்து கொள்ளவில்லையே...

ஒரு பெண்ணை குறை கூறுவது எளிது, ஆனால் அவள் ஏன் அந்த நிலைமையில் இருக்கிறாள் என்று ஆராய்ந்து பார்ப்பவர் மிக சொற்ப பேரே.

அவளைப் பொறுத்தவரை செத்த பிறகு தான் சொர்க்கம் நரகம் என்று இல்லை .. அவளுக்கு வாழும் ஒவ்வொரு நாட்களும் நரகம்தான் , இனி செத்த பிறகு அவளை நரகத்தில் கொண்டு போய் போட்டாலும்..

அட இது என்னடா இவ்வளவு ஜாலியா இருக்கு, இதைவிட படு பயங்கரமான நரகத்தை எல்லாம் நான் உலகத்துல பார்த்ததுட்டேன்டா என்று நரகத்தில் கூட உல்லாசமாக இருக்கும் மனநிலை தான்... சொல்லப்போனால் நரகத்தில் அவள் தூங்குவாளாக இருக்கும், நரகத்தில் அவள் வேதனை அனுபவிக்காது இருப்பாளாக இருக்கும்... நரகத்தில் அவள் உடல் தனித்து விடப்பட்டிருக்கும் போலும்... கழுகுகளுக்கு இரையாகி இரையாகி மனம் ஊடலும் சோர்ந்து போய் இருந்தவள், சிறிது நேரம் கண்ணை அசந்து தூங்கிவிட்டாள்..

தங்கை வருவதற்கு முன் தொழிலுக்கு கிளம்பியாக வேண்டும் .காவ்யா , குளித்து கிளம்பி ஒப்பனைகளை பூசிக்கொண்டு மணக்க மணக்க மல்லிகை பூவோடு தன் இரவு நேர பணிக்கு கிளம்பிவிட்டாள்....

இதே போல பாவப்பட்ட ஜென்மங்கள் கண்ணீரை கண்மை கொண்டு திருத்தி மறைக்க வேண்டிய மாராப்பை திறந்து விட்டு கொண்டு, அந்த காட்டு வழி பாதையில் கால் வயிறு வயித்தை நிறைக்க வழியில் வரும் வண்டிகளை ஆர்வமாக பார்த்து கொண்டு நிற்க அவர்களோடு இவளும் போய் நின்று கொண்டாள் ... 

எப்போதும் போல் புறநகர் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள மரங்களுக்கு பின்னால் இந்த மாதிரி பெண்கள் ஒதுங்கி நின்று கொண்டு வரும் வண்டிகளுக்கு கையாட்டி அழைப்பு விடுப்பார்கள், தேவைப்படுகிறவர்கள் இறங்கி பேரம் பேசுவார்கள் தேவையில்லாதவர்கள் போய்க் கொண்டே இருப்பார்கள் .. பேரம் கட்டினால் அங்கேயே எங்கேயாவது ஒதுங்கி விட்டு அவர்கள் உல்லாச ஆசையை தீர்த்து விட்டு பணத்தை கொடுத்துவிட்டுப் போவார்கள் ... ஏமாற்றிவிட்டும் போவார்கள்..

ஐந்து வருட தொழில் இது !!

கத்தி , மிளகாய் பொடி பாதுகாப்பு அணிகலன்கள் எல்லாம் அவள் ஹேண்ட் பேக்கில் அடக்கம்.. அத்தோடு வலியை தீர்க்க மதுவின் போதையும் சில நேரங்களில் தேவைப்படலாம் ...என்ன செய்ய கெட்டு அழிந்த உடல், எல்லாவற்றிற்கும் பழகிக் கொண்டது.. அதையும் கடையில் வாங்கி உள்ளே திணித்துக் கொண்டு இருட்டு வந்ததும் ஒரு மரத்தின் பின்னால் போய் நின்று கொண்டு வரும் கார்களுக்கு கையைசைத்து அழைப்பு விடுக்க ஆரம்பித்து விட்டாள்... 

யார் சொன்னது கடவுள் பாரபட்சம் இல்லாது உதவி செய்பவன் என்று , இதோ இப்படி அடிபாடு படும் கூட்டம் சொல்லும் கடவுளே பொய்யடா இந்த உலகமே காற்றடைத்த பையடா, உழைத்தாதான் சோறு போ போ வேலையை பாரு என்று விரக்தியோடு ரணங்களோடு கடக்கும் கூட்டமும் உண்டு ... 

இன்று வெள்ளிக்கிழமை மாதவன் வேலைகளை முடித்து விட்டு குழந்தைகளை பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டல் முடித்துவிட்டு புறநகர் பகுதி வழியாக காரை செலுத்தி கொண்டு இருந்தான்

மதன் அவன் மனைவி பெற்று கொடுத்து விட்டு போன பொக்கிஷம்... ரத்தம் வேறாக இருக்கலாம் ஆனால் அவன் பெறாத மகன் தான் அவன் அத்தோடு ராகவ் பிள்ளைகளும் இவனை அப்பா என்று அழைக்கும் இவர்கள்தான் குடும்பம் என்று வாழ பழகி கொண்டவன்... காரில் வந்து கொண்டிருந்த அவன் கண்ணில் வந்து டார்ச்லைட் வெளிச்சம் மின்ன 

எதிரே டார்ச் லைட் வெளிச்சத்தோடு யாரோ காரை மறைக்க ... சட்டென்று பிரேக் போட்டு மாதவன் காரை நிறுத்தினான்.. எப்போதும் இந்த வழியை வருவது இல்லை, இன்று வேலை முடிக்க தாமதம் ஆகி போனது சிட்டி வழியாக போனால் நடு இரவு ஆகி போகும் எனவே பைபாஸ் ரோட்டில் போனவன் எதிரே வந்து நின்ற உருவத்தை கண்டு காரை நிறுத்தி விட்டான்...

காரணம் அங்கே நின்றது காவ்யா..

ஒருவரை மீண்டும் மீண்டும் இந்த உலகம் கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது என்றால், ஒன்று பந்தமாக இருக்கலாம், இல்லை பந்தமாக கூடிய உறவாக மாறலாம் 

இவளோடு இதுவரை எந்த பந்தமும் இல்லை ஆனால் இனி இவளை எந்த பந்தத்தில் அவன் செய்து கொள்ளப் போகிறான் என்பது அவனுக்கே தெரியும் ...