மெய் பேசும் மித்தியமே -1

மெய் பேசும் மித்தியமே -1

மெய் பேசும் மித்தியமே-1

டாக்டர் சூர்யபிரகாஷ் தனது கையில் சோப்பு பிரஷ்ஷு அது இதுன்னு எடுத்து வைக்கிறதைப் பார்த்ததும் அவனது அசிஸ்டண்ட் முருகேசன்

“என்ன டாக்டர் குளத்துக்கு குளிக்கப்போறதுக்கு எதுக்கு இவ்வளவு எடுத்து வைக்கிறீங்க.ஒரு சோப்பு டப்பா ஒரு டவல் போதும் வாங்க”என்று அழைத்தான்.

“அது எனக்கும் தெரியும்.நம்ம ஊருன்னா எப்படி வேணும்னாலும் போய் குளிக்கலாம்.இங்க டாக்டரா வந்திருக்கேன்.நம்மளைப் பார்த்து நாலுபேரு மதிக்காட்டாலும் மிதிக்காதளவுக்கு இருக்கணும்ல அதுதான் எல்லாம் எடுத்து வைச்சிருக்கேன்”

‘க்கும் இதெல்லாம் சரியா பேசி நம்மளை வாயடைக்க வைச்சிருவாரே.இங்க ஜாயிண்ட் பண்ணி இரண்டு நாளுதான் ஆகுது.அதுக்குள்ள இரண்டு வருஷத்துக்குச் சேர்த்து பேசிட்டாரு.டாக்டருங்கன்னா அமைதியா இருப்பாங்கன்னு பார்த்திருக்கேன் இவரென்ன இப்படி பேசுறாரு?’ என்று யோசனையோடு முன்னாடி பெகும் சூரயபிரகாஷைப் பார்த்தவாறே பின்னாடியே போனான்.

அதற்குள் திரும்பிப் பார்த்து “குளத்துக்கு நீதான் குகா வழிக்காட்டணும்.நீ எனக்குப் பின்னாடி வந்தா எப்படி வழி காட்டுவ?என் கண்ணு என்ன பொடனிலயா இருக்கு?”என்று திரும்பிப் பார்த்த முருகேசனிடம் பிரகாஷ் கேட்டான்.

உடனே முருகேசன் குடுகுடுவென்று ஓடிப்போய் அவனுக்கு முன்னாடியே நடந்தான்.

இருவரும் குளத்துக்கு போகிற வழியிலயே நிறைய ஆண்கள் குளிச்சிட்டு வரவும் அவனைப் பார்த்து வணக்கம் வைத்துவிட்டுச் சென்றனர்.

அவனும் வணக்கம் வைக்குற ஊர்காரங்களைப் பார்த்து தலையாட்டிக்கொண்டே” டேய் முருகேசா இங்க வந்து இரண்டு நாளாச்சு இன்னும் நீ வீடு பிடிச்சுத்தர்றன்னு ஏமாத்திட்டிருக்க.ஒருவாரமா டவுண் லாட்ஜ்ல தங்கியச்சு,இரண்டு நாளா ஹாஸ்பிட்டலுக்குள்ளயே படுத்துத்தூங்குறேன்.அதுக்கு இன்னைக்கு ஒரு வழி பண்ற.இல்லை உன்னை தூக்கி வேற இடத்துக்குப்போடுறதுக்கு ரெகமெண்ட் பண்ணிடுவேன்”

“ம்ம்ம் நான் என்ன வீடை வைச்சிக்கிட்டா உங்களுக்குத் தரமாட்டேன்னு சொன்னேன்?இது கிராமம் சார்.இங்கெல்லாம் யாரும் வீட்டை வாடகைக்குக் குடுக்கமாட்டாங்க.சும்மா பூட்டி வைச்சிருந்தாலும் குடுக்கமாட்டாங்க.யாருகிட்டப்போய் கேட்கிறது?இருங்க சார் பக்கத்து டவுண்ல வீடு இருக்கான்னு பார்க்க சொல்லுறேன்”

“பக்கத்துடவுணுன்னா எத்தனை கிலோ மீட்டர் போகணும்?”

“அதுவா அது ஒரு பத்துபதினஞ்சு கிலோ மீட்டர் போகணும்”

“அது சரி.ஏன் பக்கத்து டிஸ்ட்ரிக்ட்ல பாரேன்.அங்கிருந்து தினமும் வரணும்னா எப்படி வருவேன்!என் வண்டியையும் எடுத்துட்டு வரல.காரையும் இங்கக் கொண்டுவந்து நிப்பாட்டா முடியாது குடும்பத்தையும் கூட்டிட்டு வந்துட்டா அங்க இங்கன்னு அலையமுடியாதுடா.இந்த ஊர்லயே பாரு.இருக்கிற வரைக்கும் இங்கயே இருந்துக்கிறேன்.எப்படியும் ஒரு இரண்டு வருஷத்துக்கு இங்கதான் இருக்கணும்”

“என்னது இரண்டு வருஷத்துக்குத் தாக்குபிடிச்சிடுவீங்களா டாக்டர்?ஏன்னா இப்படி கிராமத்துக்கு வர்றவங்க எல்லாம் உடனே ட்ரான்ஸ்பர் கேட்டு ஓடிருவாங்களே.டவுண்ல இருந்து இங்க வந்துட்டுப் போறமாதிரிதான் இருப்பாங்க.ஆனா நீங்க ஒருத்தர்தான் இந்த கிராமத்துக்குள்ளயே வீடு பார்க்கிறீங்க.வித்தியாசமா இருக்கீங்க சார்”

அதற்கு அவனைப் பார்த்து லேசாகச் சிரித்தவன் பதிலேதும் சொல்லாது நடந்தான்.

இருவரும் குளத்துப் பாக்கம் வந்ததும் “நீங்க குளிச்சிட்டு வாங்க நான் கரையில நிக்கிறேன்” 

“ஏன் நீ குளிக்கலையா?”

“நான் காலையிலயே குளிச்சிட்டு சாமிக்கும்பிட்டு வந்துட்டேன்.நீங்க போங்க”

“இருடா துணியெல்லாம் துவைக்க குடுத்தியா?அது எப்போ வரும்?”

“யாருக்குத் தெரியும்?”

“என்னது?என்று முறைத்தான்

“சார் டவுணுக்கு போற ஒருத்தருக்கிட்ட குடுத்து விட்றுக்கேன்.நாளைக்கு லாண்டரிக்காரன் திருப்பிக் குடுத்துவிடுவான்”

“இதுக்குத்தான் சீக்கிரம் வீடு பாருன்னு சொன்னேன்.நானே துவைச்சிருப்பேன்”

“இப்பவும் நீங்களே துவைக்கலாமே.இந்த குளத்துலதான் எல்லோரும் துவைக்கிறாங்க.நீங்களும் துவைக்க வேண்டியுதுதானே”

“நீ ரொம்ப பேசுற முருகேசா?”

“யாரு நானா?சரிதான் என் வாழ்க்கையிலே இப்படி ஒரு வாயாடி டாக்டரை இப்போதான் பார்க்குறேன்.இப்படியொரு வித்தியாசமா கேரக்டர்ல”என்றவன் நக்கலாகப் பார்த்துவிட்டுப் போய்விட்டான்.

“இருடா ஊசிய வைச்சு உன் வாயைத் தைச்சி வைக்கிறேன்”என்றவாறே டவலை எடுத்துக் கட்டிக்கொண்டு போட்டிருந்த ட்ரஸ்ஸைக் கழட்டி 

துவைத்தான்.

அதை அலசி வைச்சிட்டு குளத்துக்குள்ள இறங்கி மூழ்கித்தான் எழும்பினான்.

அவன் முன்பு மாநிறத்தில் ஒரு பெண் கை நிறைய தாமரை மொட்டுக்களை பறித்து குவியலாக வைத்திருந்தவள் வந்து நின்றாள்.

”இந்தாடா வைச்சுக்க.இன்னும் உள்ள போய் பறிச்சிட்டு வர்றேன்”என்று கையை நீட்டிக்கொண்டு நின்றிருந்தாள்.

ஐயோ மோகினி பிசாசு என்று சத்தம்போட்ட சூர்யபிரகாஷ் தண்ணிக்குள்ளயே சரிந்து விழுந்தான்.

ஏய்ய்ய் என்று அவனது கையைப்பிடித்து அநதப்பெண் இழுத்தாள்.அதற்குள் அவனது மூக்கிற்குள் எல்லாம் தண்ணீர் போய் திணறிவிட்டான்.

உடனே அவளது தோளைப்பிடித்துக்கொண்டு தன்னை நிலைப்படுத்தியவனை தன்னிடமிருந்து பிரித்துவிட்டாள்.  

அவன் மீண்டும் தண்ணிக்குள் விழவும் அவள்தான் அவனது கையைப்பிடித்து இழுத்து நிறுத்தினாள்.

உடனே அவளது கையை தட்டிவிட்டு தண்ணிக்குள்ளிருந்து எழுந்து கரைக்கு வந்து நின்றான்.

அவனது மூக்கிற்குள் தண்ணி சென்றதால் தும்மியபடியே அவளை முறைத்துப்பார்த்தான்.அவள் கையைப்பிடிக்கும்போதே அது மனுஷிதான் என்று தெரிந்தது.அதனால்தான் முறைத்தான்.

“ஏய்ய்ய் அறிவில்ல இப்படித்தான் தண்ணிக்குள்ள இருந்து வந்து பயமுறுத்துவாங்களா?ஆம்பளைங்க குளிக்கிறாங்கன்னு தெரியாது?”

அவளோ தனது கையிவைத்திருந்த பூக்களைப் பார்த்துவிட்டு “எங்கப்போனான் என்று யாரையோ?” தேடிக்கொண்டிருந்தாள்.

“ஏய்ய்ய் நான் பேசுறது காதுல விழலையா?இப்படித்தான் வந்து அடுத்தவங்களை பயமுறுத்துவியா?மண்டைக்குள்ள மசாலா ஏதாவது இருக்கா?”என்று மீண்டும் சத்தம்போட்டவாறே அவன் மீண்டும் தண்ணிக்குள் இறங்கினான்.

அதற்குள் “அத்தை நான் ஒளிஞ்சிருந்தனே நீ கண்டுப்பிடிக்கலையே” என்று எட்டு வயது பையன் வந்து அங்கிருந்து செடிகளுக்குள்ளிருந்து அந்தப்பெண்ணின் அருகில் வந்தான்.

“ஏன்டா உன்னை இங்கதான இருக்கச் சொன்னேன்.இங்கப்பாரு இந்தாளு இங்கனக் குளிச்சிட்டிருந்திருக்காரு.என்னைப் பார்த்து பயந்திட்டாருல்ல” என்றவாறே தண்ணிக்குள்ளிருந்து எழுந்து வந்தவளைப் பார்த்த அப்படியே கண்கள் விரிய பார்த்து நின்றான்.

பாவடையை நெஞ்சிற்கு மேல் குளிப்பதற்காக கட்டிவிட்டு அதற்குமேல் தாவணியை வைத்து மேலகப்போட்டு இடைக்கட்டுக் கட்டிருந்தாள்.அவளது முடியோ தொடையையும் தாண்டி வளர்ந்திருந்நதால் உண்மையான மோகினி மாதிரியே இருந்தாள்.

அவளைப் பார்த்து அப்படியே பேஸ்த்து அடித்தமாதிரி நின்றிருந்த சூர்யபிராகஷைப் பார்த்தவள்”யோவ் யாருய்யா நீ? இப்படி மலங்க மலங்க திருட்டுப்பய மாதிரி முழிச்சிட்டு நிக்க.குளத்துக்கு வந்தோமா குளிச்சமான்னு போகாம பொம்பளைங்க குளிக்கிற இடத்துல வந்து இப்படி நிக்கிற?”

“ஏதே திருட்டுப்பயலா என்று கோபம்வந்து அவளைப் பார்த்தவன்”தண்ணிக்குள்ள இருந்து பேய் மாதிரி வந்துட்டு என்னை திருட்டுப்பயன்னு சொல்லுறியா?வார்த்தையை அளந்துப்போசு.பொம்பளைன்னை பார்க்கிறேன் இல்லன்னா?”

“இல்லன்னா என்ன பண்ணுவ? ஒருத்தி தண்ணிக்குள்ள இருந்து எழுந்து வந்ததுக்கு அம்மாஆஆ மோகினின்ரு பயந்து முங்குனவன்தானே நீ.பேச்சைப்பாரு பேச்சை.எந்த ஊருக்காரம்ல நீ?”என்று இடுப்பில் கைவைத்து அவனை நெருங்கி வந்துக் கண்ணைப் பார்த்து நேருக்கு நேராக நின்று தைரியமாகக் கேட்டாள்.

அவனது கண்கள் சிவந்து தும்மிக்கொண்டே இருந்தவனுக்குக் கோபம் வந்தது.உடனே அவளைப் பிடித்துத் தண்ணிக்குள் தள்ளிவிட்டுவிட்டான்.

அவள் தொப்பென்று தண்ணிக்குள் விழுந்தவள்.ஆனால் பயப்படாது நீச்சல் அடித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு கரைசேர்ந்து அவனருகில் வந்தாள்.

தண்ணீர் சொட்ட சொட்ட அப்படியே அவனருகில் வந்தவள் அவனது கையைப்பிடித்து இழுத்து வேகமாகத் தண்ணிக்குள் தள்ளிவிட்டுவிட்டு”யாருக்கிட்ட இந்த ரோஜாகிட்டயேவா?”என்று சிரித்தவள் தனது அண்ணன் மகன் தினேஷைப் பார்த்து “வாடா நம்ம போகலாம்.தாமரைமொட்டை எடுத்துக்கிட்டியா”என்று கேட்டவாறே திரும்பிப் பார்த்தாள்.

சூர்யபிரகாஷ் தண்ணிக்குள் மூழ்கிக்கொண்டிருந்தான்.அதைப் பார்த்தவள்”இந்தாளு எப்படி ஏமாத்துறான் பாரு.முங்கியே சாவுடா”என்று கையை நம்பியார் போல வைத்துக்கொண்டு சொல்லிக்கொண்டிருந்தாள்.

“அத்தை அந்த ஆளு உண்மையாலுமே முங்குறான் பாரு.போய் காப்பாத்து இல்லன்னா செத்திரப்போறான்” 

“அதெல்லாம் சாகமாட்டாம்ல அவன் சும்ம பம்மாத்துக் காமிக்கான்”

இல்லத்த அவனைப் பாரு முங்கி முங்கி எழும்புறான்.கை மேல போயிட்டு.அவன் செத்தா நம்மமேலதான் பழிவரும்.போய் காப்பாத்திடு”என்று பயந்தான்.

அவன் சொன்னபிறகுதான் ரோஜாவும் அவனை உற்றுப்பார்த்து “ஆமாடா அவன் உண்மைக்குமே முங்குறான்டா.அச்சோ இவனுக்கு நீச்சல் தெரியாதுபோல இருக்குடா.ஐய்யையோ”என்றவள் உடனே தண்ணிருக்குள் குதித்தாள்.

அவளுக்கு அந்த குளமும் நீச்சலும் அத்துபடி என்பதால் மூழ்கிக்கொட்டிருந்த டாக்டரின் பிடிச்சு தலை முடியைப் பிடித்து இழுத்து கரைக்குக்கொண்டு வரமுயன்றாள்.

அவனோ மூச்சை அடக்கமுடியாது தத்தளித்தவன் அவளது தோள்களைப் பற்ற அந்தோ அவளது மொத்த துணியையும் கையோடு உருவிவிட்டான்.

அச்சோ என்று அவனை தள்ளிவிட்டவள் பாவடையை மட்டும் மேலேவர மீண்டும் கட்டியவள் மேலிருந்த தாவணியை இழுத்து அவனது கையைக் கட்டி கரைக்குஇழத்து வந்தாள்.

அவனுக்குமே அச்சோ இந்தப்பெண்ணோட ட்ரஸ்ஸ அவித்துட்டமே என்று அந்த நேரத்திலும் பீலிங்க்ஸ் ஆப் இண்டியா வந்தாலும் என்னை இவதானே தள்ளிவிட்ட இவளுக்கு வேணும் என்று கோபமும் வந்தது.

ஒருவழியாக அவனை கரைக்கு இழுத்துவந்தவளுக்கு போதும் போதும்னு ஆகிட்டு.எதுக்குடா இவனைத் தள்ளிவிட்டோம் என்று நினைக்கவே செய்துவிட்டாள்.

இப்படி ஒருத்தன் நீச்சல் தெரியாம குளத்துக்குக் குளிக்க வருவான் என்றுதான் திட்டினாள்.

அதற்குள் அங்கே வந்த முருகேசன் டாக்டர் தண்ணிக்குடிச்சு மூச்சுவாங்க படுத்திருப்பதைப் பார்த்து ஐயோ டாக்டருக்கு என்னாச்சு என்று ஓடிவந்து முதுகில் தட்டியவாறே”ஏன் டாக்டரே நீச்சல் தெரியாம உள்ளப் போகாதிங்கன்னு வந்த அன்னைக்கே சொன்னனே.கரையில நின்னு முங்கிக்குளிக்க வேண்டியதானே”என்று பதறியவாறே சத்தம்போட்டான்

அதற்குள் சுவாசம் இழுத்து இருமி தண்ணியை துப்பியவன் தன்னருகில் உட்கார்ந்துக் கைகளைப் பிடித்திருந்த பட்டுரோஜா என்கின்ற ரோஜாவை சள்ளென்று வேகமாக அறைந்துவிட்டான்.

சப்பென்று அறையும் சத்தம் கேட்டுத்தான் முருகேசன் நிமிர்ந்துப் பார்த்தான்.பட்டுரோஜா கன்னத்தில் கைவைத்துப் பிடித்தவாறே அவனை முறைத்தாள்.

“ஐயோ டாக்டரே யாரைப்போய் அடிச்சிட்டீங்க?எதுக்கு அடிச்சீங்க?”என்று பயந்து கேட்டாவன் ரோஜாவைத் திரும்பிப் பார்தது.

“ யம்மா ரோசா.உன்னை டாக்டருக்கு யாருன்னு தெரியாது. தண்ணிக்குள்ள போயிட்டு வந்ததுல டாக்டருக்கு ஏதோ ஆகிட்டுப்போல.” என்றவனுக்கு அடுத்து என்னாகுமோ என பயந்து அவளைப் பாவமாக பார்த்தான்.

“யோவ் எதுக்குய்யா என்னை அடிச்ச?உனக்கு நீச்சல் தெரியுமா தெரியாதான்னு எனக்கெப்படி தெரியும்.எங்க ஊருல குளத்துக்கு குளிக்க வர்வங்க எல்லாருக்கும் நீச்சல் தெரியும்.இந்த நிக்கிறானே என் அண்ணன் மகன் இந்த நண்டு சிண்டுக்குக்கூட நீச்சல் நல்லாதெரியும்.இவ்வளவு பெரிய எருமைக்கடா கணக்கா வளர்ந்திருக்க உனக்கு நீச்சல் தெரியலன்னா என் தப்பா?இப்படி அடிச்சுட்ட.உன்னை இந்த ஊரைவிட்டு ஒட ஓட விரட்டலா நான் கருப்பசாமி மக இல்ல”

“போடி வந்துட்டா.கருப்பசாமிக்கிட்டயே போய் சொல்லு.புதுசா வந்திருக்க டாக்டருதான் அடிச்சாருன்னு.ஓடிப்போயிரு இல்லை கல்லை எடுத்த அடிச்சிருவேன்.கொலைகாரி”என்று திட்டினவன் முருகேசனைத் திரும்பிப் பார்த்தான்.

“யாருடா இந்த இராட்சஷி,கொலைகாரி என்று அவனிடற்கேட்டான்.

அது டாக்டரே என்று ஏதோ சொல்ல வந்தான்.

அதற்குள் சூர்யபிரகாஷ்”நீ வரலன்னா இன்னைக்கு எனக்கு சங்குஊதிருப்பா மொத்தமா.தண்ணிக்குள்ளப் பிடிச்சு தள்ளினதும் இல்லாம நான் சாகப்போறதைப் பார்த்து ரசிச்சிட்டிருக்கா.இராட்சஷி மனுஷியாடி நீ?”

“அடிங்க வாடிபோடின்ன பல்லை உடைச்சிடுவேன்.ஐயோ பாவம்னு நான்தான் முடிய பிடிச்சு கரைக்கு இழுத்துட்டு வந்தேன்.வந்துட்டான் பெருசா பேசுறதுக்கு.யாருய்யா நீ?ஆளையும் மூஞ்சியையும் பாரு கேனை மாதிரியே இருக்க”என்று திட்டிவிட்டு எழுந்தாள்.

தன்னை கேனையன் என்று சொன்னதும் “என்னடி சொன்ன?” என்று சிங்கம் வீறு கொண்டு எழுந்திருக்க அவளோ “போல” என்றுவிட்டு கிளம்பிவிட்டாள்.

அவள் டாக்டரை கேனை என்று சொன்னதைக் கேட்டு முருகேசன் சத்தமாகச் சிரித்துவிட்டான்.

அவளை அடிக்கப் பின்னாடியே போன டாக்டரைப் பிடித்து நிறுத்தியவன்”டாக்டர் நம்ம இந்த ஊர்ல இருக்கணுமா வேண்டாமா?ஊரு பெரிய வீட்டுப் பிள்ளையவே அடிச்சிட்டீங்க.அவ இன்னைக்கு என்னவோ நல்ல குணத்துல போறா.இல்லைன்னா இதுக்குள்ள உங்க மண்டையை கல்லால உடைச்சிருப்பா.ஏன் டாக்டரு உங்களுக்கு இந்த வேண்டாத வேலை?”

“அவனது கையை விலக்கிவிட்டவன் “டேய் மரமண்டை அந்தபொண்ணுதான்டா என்னை தண்ணிக்குள்ள தள்ளிவிட்டுக் கொல்லப்பார்த்தா கொலைகாரி.அவளை என்ன செய்யகறேன் பாரு”என்று கோபத்தில் அவன் கத்தினான்.

அவன் கத்துறதை கேட்டுத் திரும்பிப் பார்த்த பட்டுரோஜா “லே கம்பவுண்டாரு அந்தாளு டாக்டர இன்னைக்கு பொட்டிய கட்டிட்டு போகச்சொல்லு.இல்லைன்னா அவரு உயிருக்கு நான் உத்ரவாதம் தரமுடியாது”

அவள் சொன்னதைக் கேட்ட சூர்யபிரகாஷோ “போடி இராட்சஷி.உன் உயிரை நான்தான் எடுக்கப்போறேன் பாரு.எவன் வந்து என்னைக் கேட்பான்னு பார்க்கிறேன்?வரச்சொல்லு யாரைன்னாலும்”என்று சத்தம்போட்டவனின் டவல் லூசாகவும் அதை இறுக்கிப்பிடித்துக் கட்டிக்கொண்டான்.

அதைப்பார்த்து வேண்டுமென்றே ரோஜா சத்தமாகச் சிரித்தாள்.இன்னைக்கு நாளே சரியில்லை என்றவாறே ட்ரெஸ்ஸ எடுத்துப்போட்டவன் முருகேசனைக்கூட திரும்பிப் பார்க்காது ஹாஸ்பிட்டல் நோக்கி நடந்தான்.

‘ச்சை போயும் போயும் ஒரு பட்டிக்காட்டிடும் கேவலப்பட்டுட்டமே’என்றுதான் எரிச்சல் வந்தது.

முருகேசன் ஓடிவந்து “என்ன டாக்டரே இப்படி அவசரப்படுட்டீங்க.ரோஜாவை எதுக்கு அடிச்சீங்க?இப்போதான் அவங்கப்பாக்கிட்ட உங்களுக்காக வீடு கேட்டுட்டு வர்றேனு.நீங்க என்னடான்னா இப்படி அவளை அடிச்சிட்டீங்க.இனி என்ன பிரச்சனையெல்லாம் நடக்கப்போகுதோ?அவள் அண்ணனுங்க வேற முரட்டு பீசுங்க.அடி தாங்கிடுவீங்களா டாக்டரே”என்று பாவமாகக் கேட்டான்.

“என்னது அவங்க வீட்டைய வாடகைக்கு கேட்ட.அப்படி ஒரு வீடே எனக்கு வேண்டாம்டா.அவ அண்ணனுங்க என்ன டானா.எந்த டானையும் நான் சமாளிச்சிடுவேன்.எனக்கு நீச்சல் மட்டும்தான் தெரியாது.சிட்டியிலிருந்து வந்தா பயந்தாகோழியா இருப்பாங்களா என்ன?நானும் ஜிம்லாம் போனவன்தான்.எவன் வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்.நீ உன் வாயை மூடு.பொண்ணா அது இராட்சஷி இதுவே இப்படி இருக்கு.இதை பெத்தவங்க எப்படி இருப்பாங்க. எனக்கு இவனுங்க வீடே வேண்டாம்”என்று முருகேசனைத்தள்ளிவிட்டுவிட்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்துச் சேர்ந்தான்.

இவ்வளவு தெனாவெட்டா பேசிய டாக்டர் இப்போது பட்டுரோஜவின் அப்பா கருப்பசாமியின் முன்னாடி பவ்யமாக இந்த பூனையும் பால் குடிக்குமா? என்ற ரீதியில் பால்வடியும் குழந்தைப்புள்ளை மூஞ்சோடு உட்கார்ந்திருந்தான்!