மீளா3
Milla3

3
மீளா காதல் தீவிரவாதி!!
குழலி அதிகாலை எழும்பி விட்டாள் புது இடம் இன்னும் பழக்கம் இல்லை , அதோடு எதுவுமே புரியாத மனநிலை தூக்கத்தில் இருந்தவளை எழுப்பி விட்டது போல், மருதுவின் புது உலகம் மிரட்டியது உண்மை ..
மருது விட்ட குறட்டை கீழே கடைகோடியில் நின்ற பொன்குழலி காதுவரை , அச்சு பிசகாமல் வந்து கேட்டது .. அந்தக் குறட்டை சத்தமே அவளுக்கு அல்லுவிட்டது ..
"பாக்குறது , பேசுறது , அவ்வளவு ஏன் சிரிக்கிறது கூட பயமா இருக்கு .. ஏன் என்னை யாருமே வந்து காப்பாத்தல, இனிமே அப்பாவ பார்க்கவே முடியாதா.. இவர் கூடவேதான் இருக்கணுமா இவரை பார்த்தாலே எனக்கு பயமா இருக்கே" தன்போல யோசித்துக் கொண்டே பின்னால் போய் கதவை திறக்க ... சலசலவென்று வீட்டிற்கு பின்புறம் ஓடை ஓடியது ...
அது எப்படி 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் ஊர் பாலைவனமாக இருக்கிறது .. இவர் ஊர் மட்டும் சோலைவனமாக இருக்கிறது, அதிசயமாகத்தான் இருந்தது , பத்து வயதிற்கு மேல் இதை எல்லாம் அவளுக்கு பார்க்க கொடுப்பினை இருந்ததே இல்லை இன்று புதிதாக ஓடையை பார்த்தவுடன்.. அந்த அதிகாலை குளிர் கூட அவளுக்கு ஆனந்தமாக இருந்தது ..
எவ்வளவோ விடை இல்லாத கேள்விகள் இருந்தாலும் அதையெல்லாம் அப்படியே உடை போல கழற்றி கரையில் வைத்து விட்டு அந்த நீரோடையில் தங்க மீனாக பொன்னி நதி கலக்க ஆரம்பித்தது ... புதிதாக வானம் பார்த்த குழந்தை போல ... ஹோஓஓஓஓஓஓஓ!! என சத்தம் கொடுக்க அது அந்த கானகம் நடுவே எதிரொலிக்க ஒற்றே குஜால் அவளுக்கு ...
"ஐஐ நான் பேசுறது கேட்குதே நான் பொன்னி, உன் பேர் என்ன ? "என்று கத்த அதுவும் பலவாறு எதிரொலிக்க...
"நான் பேசுறது கேட்குதா உங்களுக்கு" என்று சில்லறையை சிதற விட்டது போல சிரித்தாள்... அவள் சிரிப்பு சத்தம் ஆழ் நித்திரையில் இருந்த மருதுவின் இதழிலும் சிரிப்பை, சாந்தத்தை கொண்டு வந்தது ...
போதும் போதும் எனும் அளவு குளித்து வெளிய வந்த பொன்னி ஏற்கனவே உடுத்திருந்த சேலையை நீரில் அலசி இளம் வெயிலில் காயவைத்து அதையே கட்டிக் கொண்டவள்.. அடுத்து அவன் சொன்ன பிறகு தான் ஏதாவது செய்ய வேண்டும் என்று மருது சொன்ன இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள்.. சாவகாசமாக ஒன்பது மணிக்கு மேல் சட்டை போடாத உடலோடு கீழே இறங்கி வந்த மருது தன் உடலை வளைத்து நெளித்து ..
"இந்தா நீச்ச தண்ணீ எடுத்துட்டு வா"என்ற சத்தத்தில் கண் அசந்து விட்ட குழலி சட்டென்று எழும்பி ஓடி வந்தவள் பின்வாசல்லேயே நின்று கொண்டாள்.. அவள் ஒன்றும் இல்லாது வெறுங்கையோடு வர மருதுவுக்கு காலையிலேயே மீசை துடிக்க ஆரம்பித்து விட்டது ...
"நீச்ச தண்ணி எங்கடி? (அதுக்கு சோறு வடிக்கணும் சோதனை பிடிச்சவனே)
"ஹான்... மையிடாத கண் நாட்டியத் தாரகை ஆகிட மருது சட்டென்று கையை உயர்த்தி அடிக்க போனவன் ..
"போட்டேன்னு வை தரையோட தரையா போயிடுவ , புருஷன் முழிச்சி வரும் முன்ன வேலையெல்லாம் முடிச்சு வச்சிருக்கணும்னு தெரியாதா, தொழுவம் அப்படியே கிடக்கு , வீடு பெருக்காம குப்பையா இருக்கு .. உன்ன சீவி சிங்காரிச்சி கொஞ்சதான் கூட வச்சிருக்கேனா, அதுக்கு எவள வேணும்னாலும் நான் வச்சிக்கலாம்.. பொஞ்சாதி வேலை என்னன்னு நேத்தே சொல்லியும் இப்படி நின்னா என்னடி அர்த்தம் ... ஹாங்..."புருவத்தை உயர்த்த புருஷன் நெஞ்சின் உரம் அவள் இதழ் பக்கம் இருக்க.. எங்கு பேச ..
த தே ப ம க ப்பா வார்த்தை பழகினாள், கால் ஆடியது அது புடவை மீதே மருதுவுக்கு தெரிய..
"சரி குளிச்சிட்டியாடி??" பன்னீரில் நனைந்த ரோஜா சென்டாக நின்ற மனைவியை மீசையை திருகி மேலே விட்டு கொண்டே, அவள் வதனம் நோக்கினான்..
"இன்னும் இல்லைங்க மூணு நாள் ஆவும்"... பல குளியல் கிளாஸ் எடுத்ததில் இது எந்த குளியல்னு தெரியலயே என ஏதோ ஒரு விடை சொல்லியாச்சு ..
ப்ச் அது இல்லடி இன்னைக்கு குளிச்சி முடிச்சிட்டியான்னு கேட்டேன்"..மருது அவள் சாய்ந்து நின்ற சுவற்றில் இருபுறமும் கைவைத்து அவள் மேல் தன் மேனி இடிக்காது, ஆனால் அவள் ஸ்வாசம் தன் மேல் படுவது போல நின்றான்..
அவன் கண்கள் களவாடியதுவோ,காரிகை இல்லாத துடி இடையை .. குழலி சேலையை இடுப்பில் சொருகி இஞ் அளவு இடை வெளுப்பாக வெளியே தெரிய அவள் நாவு நாகமாக புஸ் புஸ் என சத்தம் கொடுத்தது ... இன்னும் உற்றவன் பார்வை தன்னை விழுங்க .. அவன் உடல் விரகத்தீயில் வெந்து போக எதுவாக தயார் ஆனது.. மிரளும் தொட்டாச்சிணுங்கி பெண் மாயம் செய்தாள் ...
ஓஓஓ அந்த குளிச்சியாவா ?என்றாள் தலையை ஆட்டி...
ம்ம் என்றவன் குரல் ஏற்கனவே கருண கொடூரமாக இருக்கும் புது மனைவி அருகில் இன்னும் கரகரத்தது ... அவளிடம் போக கூடாது என கட்டு தெரியும் ஆனால் கட்டுடல் கேளாது, அவன் இளமைக்கு சொந்தக்காரி நோக்கி சென்றது ..
அதே குளியல்தான் என்றான் அவள் கன்னத்து வாசனையை அருகே கூட போகாது நுகர்ந்து இழுத்து கொண்டு ..
"காலமே பின்னாடி ஓடையில குளிச்சேன்" .. நெளிய வைத்தான் மனைவியை , இப்படி பார்வையை யாரிடமும் பார்த்திராதவளுக்கு தானாக நெளிச்சல் வந்தது ...
தொடாதே தொடாதே என்றவன் கரம், கண்ணில் தெரிந்த இடை இடையா? இல்லை தங்க நதியா என்று காண அவா கொண்டு தானாக அவள் இடை மறைத்த சேலையை சற்று கீழிறக்கி ,விரலால் அழுத்தி பிடிக்க .. குழலி பதறி நகர முற்பட சட்டென்று அவளை திருப்பி சுவற்றில் பின்புறமாக சாய்த்த மருது, அவள் மேனி மீது, தன் மேனி தழுவ சாய குழலி மூச்சடைத்து மர்கைய்யா ஆகி போனாள் .... அவளே இப்பதான் பெண்ணாக பூத்திருக்கிறாள் அதற்குள் அடுத்த நிலை மாறு என்றால் எவ்வகையில் நியாயம் ?திணறி அவன் பாரத்தை தாங்க...
"இன்னும் மூணு நாள் ஆவுமாடி "என்றான் மருது அவளை இடையை நன்றாக அழுத்தி தடவி கொண்டே ...
"ம்ம்" மட்டும் தான் இப்போதைக்கு ஸ்டாக் இருந்தது ...
"ப்ச் வேற ஒன்னும் பண்ண முடியாதா? "அவனும் பச்சை புள்ளதான் ஆள்தான் தடி தாண்டவராயன் க்ரீன் நாலேஜ் நில் ... அவளுக்கு என்னவோ கனமா தெரிஞ்சது போல அவகிட்ட ஐடியா கேட்டான்... அவள் தலையை உயர்த்தி மருதுவை பார்க்க...
"ஓஓஓ முத்தம் கொடுத்தா தப்பு இல்லைங்கிறியா? பாரு உனக்கு தெரிஞ்சது கூட எனக்கு தெரியல" ஒத்து கொண்டு அவளை பின் மேனியில் கைகொடுத்து குழலியை தலை மேல் தூக்கி, கொஞ்சம் கொஞ்சமாக கீழ் இறக்க.. பெண்ணுடல் அவன் உதடு பட்டு ஒவ்வொரு அங்கமாக மலர ஆரம்பித்தது ... தன் முகம் முன்னால் வந்த அழகிய மேனகை இடை மறைத்த சேலையை, முகம் கொண்டு நகர்த்தி.. வெள்ளி நிலவாக தெரிந்த இடையில் ... தாம்பத்திய உலகுக்கு அவளை வரவேற்று நாபி சுழியில் இச் என்று மீசை முடி குத்த முத்தமிட.. அவன் தூக்கியதிலேயே தள்ளாடி அவனை பிடிக்கவா வேண்டாமா? என ஒத்தையா இரட்டையா போட்டு கொண்டிருந்த குழலி, இடையில் சூடாக பட்ட இதழ் பதியத்தில்.. பயந்து அவன் தோளை பற்ற .. அங்கேயே முகம் புதைத்து முகத்தை புரட்டி மருது ஒரு அறப்போராட்டம் இச் இச் என்ற சத்தத்தோடு நடத்தினான்.. அவள் கூச்சம் , பயம் , எல்லாம் சேர்ந்து அவனை வலுவாக பிடிக்க அது போதாது என்று அவன் நினைத்தான் போலும், இன்னும் அவளை கீழறிக்கி சிங்கார மலர் தேடி உதடு மகரந்த சேர்க்கை செய்ய நகர்ந்து , சந்தன மலர் பூத்த இடத்தில் முகத்தை புதைத்து கூர் மூக்கினால் நிரடி அவளை அண்ணாந்து பார்த்தான்.. அவள் தலை உயரவும் இவள் தலை குனிந்து அவனை பார்க்க...
"மூணு நாளுக்கு பிறகு இது எல்லாம் எனக்குதானடி என்றான் இன்னும் கன்றாக முட்டி மோதி...
ம்ம் ...
"
"தரமா போயிடுவியா என்ன, நான்தான் விட்டிருவேனா?"
"அண்ணன் ஊர்காரவிய வந்திருக்காவோ" என்ற சத்தம் வெளியே கேட்டு மருது பொத்தென்று அவளை விட .. நழுவிய குழலி எப்படியோ மண்டை உடையாமல் தப்பித்து எழும்ப.. மருது அவளை தாண்டி சட்டையை எடுத்து மாட்டி கொண்டு , ஒரு அருவாளையும் தீட்டி கையில் வைத்து கொண்டவன்...
"இந்தாரு, வெளிய வந்த முதல் வெட்டு உனக்குதேன் போய் தொழுவத்தை கூட்டி மொழுகு" என்று வெளியே போய்விட... தன் தந்தை சத்தம் கேட்டு வெளியே போகவா உள்ளே போகவா என்று புரியாது கையை பிசைந்து கொண்டே ஜன்னல் வழியே நடப்பதை பார்க்க ஆரம்பித்தாள்...
ஊர் கூடி நிற்க அதன் நடுவே ஊர் பண்ணையார் மலைச்சாமி ,குழலி தந்தையும் இன்னும் ஊர் பெரிய தலைகளும் நின்றனர்..
ஏலே மருது ஒழுங்கு மருவாதையா என்ற ஊர் பொண்ண வெளிய விடுலே... என்று மலைச்சாமி அருவாளை வைத்து பூச்சி காட்ட
உம்ம வீட்டு பொண்ணு இங்கன இருந்தா இழுத்துட்டு போவே , இங்க இருக்கிறது என்ற பொஞ்சாதி பொன்னி மட்டும்தேன்.. என்று மருது அருவாளை பல்லில் கவ்வி வேட்டியை இறுக்கி கட்ட.. வந்த கேஸில் பாதி அப்பிட் ஆகி விட்டது.. எங்கடா கூட்டத்தை காணல என மலைச்சாமி மலைத்து போனார்..
மருது நீ பெரிய தப்பு பண்ணுற, உன் சொநத பகைக்காக அந்த புள்ளையை தூக்கி வச்சிட்டு ஊருக்கு எதித்து நிற்காத, என்ற ஜால்ராசாமி வாயில் ரத்தம் வடிந்தது ...
என்ற வூட்டுக்குள்ளார வந்து , என்னையே குறை சொல்ல எம்புட்டு தெனாவெட்டு இருக்கோணும் வகுந்து புடுவேன் ஜாக்கிரதை, என்றவன் முனியன் சட்டை பிடித்து தன் பக்கம் இழுத்து..
இவ உன் பொண்ணா? என்றான் எனக்கு எல்லாம் தெரியும் என்பது போல...
அய்யா....
ஆள வர சொல் , இவள விடுறேன் இல்லை இந்த மருது பாண்டிகிட்ட மாட்டி சீரழிஞ்சிடுவா.. போய் சொல் உனக்காக காத்திருக்கான்னு, வந்தா மட்டும்தேன் உங்களுக்கு விடிவுகாலம் என்று எட்டி மிதித்து தள்ளியவன், கண்கள் கல்லறையை மீண்டு வந்தது ...
இவன் பகை அவள் இல்லை, துருப்புச்சீட்டு மட்டுமே அவள், எங்கோ அறுக்க வேண்டிய வினையை தன்னவளிடம் அறுக்க போகிறான்...
குற்றமில்லாத ஒரு ஆட்டுகுட்டியை தன் பழிக்கு பலி கொடுக்க போகிறான்...
வீரத்தில் ஜெயித்து ,காதலில் தோற்று நிற்பான்...
யார் அவள்?யார் அவன் ?விரைவில்....